Wednesday, July 29, 2015

Dr.APJ.அப்துல்கலாம் மரணத்தின் போதெழும் விமர்சனம்

Dr.APJ.அப்துல் கலாம்
உலகம் முழுக்க இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள் ஓர் சாதனையாளனை பறிகொடுத்த
சோகத்தோடு,,, குறிப்பாக இளைய சமூகமும்,மாணவச் செல்வங்களும் தங்கள்
கண்ணீரால் அஞ்சலி செலுத்துவதென்பது அவர்களின் ஆழச்சிந்தனையில் கலாம்
அவர்களின் எதிர்காலம் பற்றிய வல்லரசு கனவு இன்னமும் உயிரோடிருப்பதை
நமக்கு எடுத்துரைக்கிறது. அவ்வளவு சாதாரணமாக அவரின் மறைவை எவராலும்
கடந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சிறுபான்மை சமூகத்தில்
பிறந்த ஒருவர் வானத்தில் பறந்து விஞ்ஞானி ஆகிறார் அதோடு இல்லாமல்
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகிறார் என்றால் அதன் பின்னணியில்
இருப்பது கல்வியின் மீதான அதீத காதலும் அறிவியலின் மீதான நம்பிக்கையும்,
சாதிமதம் கடந்த நன்னடத்தையுமே இயங்கியிருக்கிறது அவரின் உடம்பில்,,,

அதே வேளையில் கலாம் அவர்களின் மீதான விமர்சனம் எழுந்திருக்கிறது அதுவும்
மிகத்தீவிரமான விமர்சனங்களாக அவை இருக்கின்றன.
இரண்டு நாட்களாக முகபுத்தகத்தை மிக நோக்கமாக பார்வையிட்டதில் தெளிவாக
தெரிந்த விஷயங்கள் கலாம் அவர்களை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­்
நம்மவர்கள் அவர்களின் எழுத்துக்களால்,,,

உலகில் எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை அனைவருமே
விமர்சனத்துக்குள்ளாக­்கப்பட வேண்டியவர்கள் எனும் சித்தாந்தம்
அறிந்தவர்கள் எவருக்கும் அதன் மீதான நெகிழ்வுத் தன்மையை அறிந்தவர்களாக
இருக்கவில்லை என்பது கலாம் அவர்களின் மரணம் மூலம்
நமக்குணர்த்தப்படுகிற­து.

"விமர்சனம் யார் மீது வேண்டுமானாலும் வைக்கலாம் என்பதில் விமர்சனம்
எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம் எனும் தன்மை இருந்ததில்லை"

ஒருவரின் மீதான விமர்சனம் எழுதப்படும் பொழுதோ, பேசப்படும் பொழுதோ இடம்
பொருள் ஏவல் உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் இந்நேரத்தில் இம்மாதிரியான
விமர்சனம் அவசியம் தானா? அதன் தேவை நமக்கான தீர்வுகளைத் தருமா? என்று
எண்ணி விமர்சனமானது வைக்கப்பட வேண்டும் என்கிற தன்மை "எவர் மீது
வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம்" என்கிற தன்மையில் இணைப்பாக
இருக்கின்றது. முற்போக்காளர்களே இத்தன்மையை அறியாமல் தங்களின்
விமர்சனங்களை முன்னெடுக்கத்தான் செய்கிறார்கள்.

நம்மவர்களுக்கு ஒரு நெடுங்கால வழக்கமுண்டு என்னவென்றால் யாரேனும்
இறந்துவிட்டால் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்ட அதே கணத்தில்
பின்னாலிருந்து அந்த மனிதர் இறந்தமைக்காக சந்தோஷப்பட்டு சலசலப்பை
ஏற்படுத்துவார்கள் . அந்நேரத்தில் மட்டுமே இறந்த மனிதரின் பாதகங்களை
அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக எழும் சர்ச்சைகளோ,சண்டைகளோ
பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு வந்த வேலை நன்றாக
முடிந்துவிட்டது இனி அடிதடி நடந்தாலோ , அதனால் பெரும் கலவரம் வெடித்தாலோ
அவர்களுக்கு கவலையில்லை.

இதே நிலைப்பாட்டோடுதான் இன்னமும் நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதை கலாம்
அவர்களின் இறப்பை பயன்படுத்தி நம்மவர்கள் கடுமையான விமர்சனங்களை
முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

மேலும் மோடி இறந்தாலோ, ராஜபக்ஷே இறந்தாலோ வெறும் அஞ்சலிமட்டும்தான்
செலுத்த வேண்டுமா? அவர்களை விமர்சிக்கக் கூடாதா? என்று கலாம் அவர்களை
விமர்சனம் செய்யும் அனேகரின் முகபுத்தக பதிவாக காண நேரிட்டது.

என்னமாதிரியான ஒப்பீடு இது, மோடி,ராஜபக்ஷே பட்டியலில் கலாமை நிறுத்துவது
முற்போக்குச் சிந்தனை என இவர்களுக்கு கற்பிதம் அளித்தவர்கள் யார்?
அவ்வளவு பெரிய நாச காரியங்களை கலாம் முன்னெடுத்தாரா? இவை எவற்றுக்கும்
இப்போது தீர்வாக மாணவர்களின் கண்ணீரே சாட்சியாக அமைகின்றது.

ஒருவேளை மோடியோ ராஜபக்ஷேவோ இறந்தால் அந்த சமயத்தில் அவர்களின் மீதான
விமர்சனத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு
அமைதியாக கடந்து விடுதலே நல்லது. இந்த அமைதி "அஞ்சலி செலுத்துதல்" எனும்
பகுப்பினில் அடங்காது, காரணம் அனைத்து மௌனங்களும்,கண்ணீரும்­ "துக்க
அனுசரிப்பு" அல்லது "கண்ணீரஞ்சலி" ஆகிவிடாது. அது அவரவர் தக்கவைத்துள்ள
இருப்பைச் சார்ந்தே அமையும்.

போலவே கலாம் அவர்களை சாதனையாளர் என்கிற எல்லையைத் தாண்டி அளவுக்கதிகமான
உணர்ச்சியின் பால் தமிழகராதியில் இல்லாத சொற்களையெல்லாம்
உபயோகப்படுத்தும் துக்க அனுசரிப்பாளர்களின் உணர்ச்சி வசம் தவிர்க்கப்பட
வேண்டும். இதன் மூலம் எந்தவொரு இனவுணர்வோ,மொழியுணர்வ­ோ ஏற்பட்டு விடப்
போவதில்லை அதற்கு மாறாக கலாம் அவர்கள் மாணவர்களையும்,ஆசிரிய­ர்களையும்
எந்தளவுக்கு நேசித்து அவர்களுக்கான வழிகாட்டுதலை புரிந்தாரோ அதைவிட மேலாக
மாணவர்களையும்,ஆசிரிய­ர்களையும் நேசிக்கப் பழகுதலே அவருக்கான உண்மையான
அஞ்சலியாக அமையும், இன்றையச் சூழலில் மாணவ-ஆசிரியர்,
மாணவ-பெற்றோர்,பெற்றோ­ர்-ஆசிரியர் போன்ற நட்புறவு நிலைகள் எந்தளவுக்கு
மோசமாயிருக்கிறது என்பதை தினசரி செய்திகள் நமக்கு உணர்த்திவிட்டுத்தான்­
போயிருக்கிறது.

பல்வேறு நிகழ்வுகளில் கலாம் அவர்களின் செயல்பாட்டில் எனக்கும்
மாற்றுக்கருத்துண்டு , விமர்சனங்களை முன்வைத்தும் எழுதியிருக்கிறேன்
ஆனால் அவர் மரணத்தின் போது அதைச் செய்து நானும் ஒரு முற்போக்குவாதி என்று
காட்டிக்கொள்வதை விட மவுனமாய் கடந்துவிட்டு நான் மனிதன் என
காட்டிக்கொள்வதையே விரும்புகிறேன். ஒரு வேளை பிறகான சூழலில் அவரை வைத்து
அரசியல் அரங்கேருமானால் அப்போதெழும் சர்ச்சைகளுக்கு இந்நிலைப்பாடு
நிலைத்திருக்காது என்பதற்காகவே விமர்சன நெகிழ்வுத் தன்மை தேவைப்படுகிறது.

இறந்த உடலை அடக்கம் செய்ய மட்டுமே நமக்கு உரிமையுண்டு விமர்சனம் என்கிற
பெயரில் இறந்த உடலையே கிழித்து கூறுபோடுவதற்கு நமக்கு உரிமையில்லை .

இதைவிட வேறெதுவும் தோன்றவில்லை
விமர்சனங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு­ மௌனமாக கடந்து போகிறேன். அவ்வளவே,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...