காதலித்தேன்
அவளை என்பதற்காக
என்
ரத்தம் குடித்து
சதையை
ரசித்துண்ணும்
மிருகங்கள்
உடனே துப்பியதாம்
சதையை
என் கண்ணீர்
உப்பற்று போனதாம்
சாதியுப்பு என்
சதைமுழுவதும்
தடவி
கடல் மணலில்
காய வைத்தார்கள்
உப்புக் கருவாடாக
நான் மாறுகின்ற
வரையில்
தணலென் சதையை
உருக்கிக் கொண்டிருக்க
ஒருவழியாய்
தயாராகிவிட்டது
என் சதை
கருவாட்டுக்
குழம்புக்காக
எப்படியும்
நாளைய விருந்தில்
வாழையிலைகள்
எனக்காக அழலாம்
வாழைக் கறை
ஆடைகளில் பட்டால்
போகாதாம்
அவ்வளவான
கெட்டித்தன்மை
ஏன் மனிதர்களின்
கண்ணீரில்
இருப்பதில்லையென
கருவாடாகிப் போன
என்னிடம்
கடல் மணல்
கேட்கிறது
என்ன பதில் சொல்ல?
இனி நன்றாக
சமைத்துண்ணுங்கள்
என் கருவாட்டு சதையை
இல்லையெனில்
என் எலும்பாகிய
முட்கள் உங்களின்
தொண்டைகளை
கிழித்து விடலாம்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...
No comments:
Post a Comment