Sunday, March 06, 2016

நேபாளி கூர்க்காவின் விசில்

ஒரு விசில் சத்தம்
இறந்து கிடக்கிறது
அனாதையாக

அதன் மீது பூசப்பட்ட
நேபாளி எனும்
அடையாளத்தை
யாரும் முன்வந்து
அழிக்கப்போவதில்லை

ஆனாலும் தடித்த
வார்த்தைகளில்
புதைத்துவிடுகிறார்கள்
வந்தேறியென்று

கூடி நின்று
வேடிக்கை பார்த்த
தெருக்களின் வீடுகளில்
புகுந்திருக்கும்
கொள்ளையர்களில்
யாரோதான் அவனை
கொன்றிருக்க வேண்டும்

களவுபோன
பொருட்களின் மதிப்பு
காலையில்
செய்தித்தாள்களில்
முடிந்தவரை போராடி
பார்த்துவிட்டு
மூச்சை விட்ட
கூர்க்காவின் குரல்களோ
நசுக்கப்பட்டிருக்கிற­து

உதடு குவித்து
முதன் முதலாக
ஊதப்பட்ட விசிலுக்கு
பின்னால்
அதுதொழிலென
கண்டவன் நாதியற்று
கிடக்கையில்

ஏனோ அமைதி
ஆட்கொள்ள மறுக்கிறது
எப்படியும்
அழவேண்டியதென
ஆழ்மனம் துடிக்கிறதே

ஏமாற்றத்தை விடவும்
அந்த வந்தேறி நேபாளி
கூர்க்கா சடலத்திற்கு
வெறெதுவும்
விசுவாசமாய்
இருந்திருக்க முடியாது,,,

2 comments:

  1. எல்லாரும் வந்தேறிகள்தான்..
    அற்புதமான கவிதை .வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...