ஒரு விசில் சத்தம்
இறந்து கிடக்கிறது
அனாதையாக
அதன் மீது பூசப்பட்ட
நேபாளி எனும்
அடையாளத்தை
யாரும் முன்வந்து
அழிக்கப்போவதில்லை
ஆனாலும் தடித்த
வார்த்தைகளில்
புதைத்துவிடுகிறார்கள்
வந்தேறியென்று
கூடி நின்று
வேடிக்கை பார்த்த
தெருக்களின் வீடுகளில்
புகுந்திருக்கும்
கொள்ளையர்களில்
யாரோதான் அவனை
கொன்றிருக்க வேண்டும்
களவுபோன
பொருட்களின் மதிப்பு
காலையில்
செய்தித்தாள்களில்
முடிந்தவரை போராடி
பார்த்துவிட்டு
மூச்சை விட்ட
கூர்க்காவின் குரல்களோ
நசுக்கப்பட்டிருக்கிறது
உதடு குவித்து
முதன் முதலாக
ஊதப்பட்ட விசிலுக்கு
பின்னால்
அதுதொழிலென
கண்டவன் நாதியற்று
கிடக்கையில்
ஏனோ அமைதி
ஆட்கொள்ள மறுக்கிறது
எப்படியும்
அழவேண்டியதென
ஆழ்மனம் துடிக்கிறதே
ஏமாற்றத்தை விடவும்
அந்த வந்தேறி நேபாளி
கூர்க்கா சடலத்திற்கு
வெறெதுவும்
விசுவாசமாய்
இருந்திருக்க முடியாது,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

எல்லாரும் வந்தேறிகள்தான்..
ReplyDeleteஅற்புதமான கவிதை .வாழ்த்துகள்..
தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!
ReplyDelete