Tuesday, April 26, 2016

அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது - லெனின்

1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும். தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியே 'அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன் வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார்....

நான் அனாதையாக்கப்பட்டுள்ளேன்

என் உயிர்வலி மரணத்தால் இருந்திருந்தால் வேதனைகளை வாடைக் காற்றோடு உலவ விட்டிருப்பேன் ஏன் ஏமாற்றப்பட்டேன் நான் நட்பெனும் ஆக்ஸிஜனில் நயவஞ்சகமாய் விஷமேற்றி கொல்லத்துடிக்கும் நண்பன் அவனென தெரிந்த நாளொன்றில் இறந்துவிட்ட என்னை நோக்கி வீசப்பட்ட ஆயுதங்களில் உயிரற்ற உடம்புச் சதைகளை உண்டு வாழ்கிறது அந்த ஆயுதமேந்திய கைகள் பகலிலும் இருள்சூழ்ந்து பதற்றமாகி நீலக்கடலும் கறுப்பென காணும் எனது கண்களுக்கு நட்பென்பது நஞ்சு விஷமென மூளைக்கு தகவலனுப்ப என்னை நானே சந்தையில்...

Friday, April 22, 2016

மெழுகுவர்த்தியும் நானும்

தீ சுடும் தொடாதே! என தூண்டிவிடும் மனத் துரோகத்தின் இடையில் தொடு! சுகமாய் இருப்பேன் என் அனல் உனக்காகவே தவம் கிடக்கிறதென அரவணைப்புக்கு அழைப்பு கொடுத்து தன்னில் ஆரத்தழுவ இடம் கொடுத்து இரவை கழுவிலேற்றி இதழோரம் சிரித்தழைக்கிறது மெழுகுவர்த்தி ஒன்று என்னை நான் மறந்து நானே ஏற்றிவைத்த ஒற்றை மெழுகுவர்த்தியில் என் ஆள்காட்டி விரலை கொண்டு விளையாடத் தொடங்கினேன் கவலைகள் மறந்து காதல் மலர்ந்தது எனக்குள் இனி இரவுகள் இப்படியே கடப்பதை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என்...

Thursday, April 21, 2016

நான் அடையாளமற்று இருக்கலாம்

அவள் உடலசைவிலும் புதுமொழி பேசும் பார்வையிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தும் விடையேதும் தேட முடியாமல் விக்கித்து நிற்கிறேன் நான் தேன் சிந்தும் நிலவிடம் நான் மாணவனாய் அவளின் அசைவு மொழிகளின் புதிர்களை கற்க சேர்ந்து விடுகிறேன் யாருக்கும் தெரியாமல் மனம் கவர்ந்தவர்களை தன் மோகன மௌனமொழியால் விதைகளை முளைக்க வைப்பதுதான் பெண்களின் இயல்பாம் முதல் பாடம் நிலவெனக்கு கற்றுக்கொடுக்க படிப்படியாய் பாடம் படித்தாலும் பரிச்சையில் மட்டும் தேறுவதில்லை நான் இரவு பகலாக எத்தனையோ...

Friday, April 08, 2016

இரண்டே வர்க்கங்கள் மட்டுமே என்பது வறட்டுத் தத்துவமே - அம்பேத்கர்

பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட...

இந்திய தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும் - அம்பேத்கர்

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில்...

முதலாளித்துவ அமைப்புகளில் கம்யூனிச தொழிற்சங்கங்கள் ? - அம்பேத்கர்

அடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே – தம்மைச் செயலாளர்கள், தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத் தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல் நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச் சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை! இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியை...

தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? - அம்பேத்கர்

பார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் வரை – ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் – பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித் திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார்...

வர்க்கத் திரட்சிக்கு தடையாக இருப்பது எது? – அம்பேத்கர்

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக் கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும் கருத்து நிலையிலேயே – அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்றுதான் – அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக...

தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது - அம்பேத்கர்

சில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள் திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...