எங்கெல்லாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கரங்கள் உயர்ந்து
நிற்கின்றனவோ, அங்கெல்லாம் சமூக நீதிக்கான தமது போராட்ட
முன்னெடுப்புகளுக்கு களம் அமைப்பவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பார்கள் .
சமூகத்தில் நிலவும் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து தமது வழக்காடுதல் ,
நீதிமன்ற செயல்பாடுகள் என தாண்டி மக்களோடு மக்களாக நின்று பல்வேறு
போராட்டங்களை சேவையாக அல்லாமல் கடமையாக ஆற்றுபவர்கள் வழக்கறிஞர்கள். ஈழ
போராட்டமாகட்டும், விலைவாசி உயர்வு, அரசப் பயங்கரவாதத்திற்கெதிரான
கலகம், மக்களை அச்சுறுத்தும் அதே அரசப் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்படும்
சட்டங்கள், போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தங்கள் பங்களிப்பை
எவ்வித பிரதிபலனுமின்றி செய்யக்கூடியவர்களாக வழக்கறிஞர்கள்
இருக்கிறார்கள். டாஸ்மாக் எனும் மதுக்கடைகளுக்கு எதிராக காந்திய வழியில்
தமது போராட்டங்களை முன்னெடுக்கும் தோழர் நந்தினி அவர்கள் சட்டக் கல்லூரி
மாணவியாகதான் அறியப்படுகிறார். இவ்வாறாக பரவலாக எங்கெல்லாம் சமூகம்
அடக்கி ஆளப்படுகிறதோ அங்கெல்லாம் வழக்கறிஞர்களின் குரல் தளர்வு அடையாமல்
என்றுமே ஓங்கியே இருக்கும். இதன் காரணமோ என்னவோ சமூகதள அரசியலில் பரவலாக
வழக்கறிஞர்களே தங்கள் ஆளுமையை மெய்பித்திருக்கிறார்கள். ஆனால்
சமீபத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்டத் திருத்தத்தினை
உயர்நீதிமன்றம் கொண்டு வந்திருக்கிறது. அச்சட்ட திருத்தம் அரசிதழிலும்
வெளியிடப்பட்டுள்ளது.
இது Advocates Act, 1961-ன், பிரிவு 34-ன் படி உயர்நீதிமன்றங்களுக்கு
வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தின் படி
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க
சம்பந்தப்பட்ட நீதிபதியே தடைவிதிக்கலாம்.
*நீதிபதிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை
விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
*நீதிமன்ற வளாகத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினால் வழக்கறிஞர் தொழில்
செய்ய தடை விதிக்கப்படும். நீதிமன்ற ஆவணங்களை திருத்தினாலோ, நீதிபதி
பெயருக்கு அவதூறு பரப்பினாலோ வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும்.
*நீதிபதியின் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் செயலில் ஈடுபட்டால்,
நீதிமன்றத்தில் மதுபானம் அருந்தி சென்றால் தடை விதிக்கப்படும்.
*உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்,
மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, முதன்மை நீதிபதிக்கு அறிக்கையளித்து
நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்குமுன், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள்மீது பார்
கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், இந்த சட்டத்
திருத்தத்தின்படி வழக்கறிஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அந்தந்த
"நீதிபதியே" வழக்கறிஞர்களின் தொழிலை தடைவிதிக்கும் அதிகாரம்
வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக வழக்கறிஞர்கள் அரசுக்கெதிராக மற்றும் அதிகார பலத்திற்கு எதிராக
நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், வளாகத்து
உள்ளிருப்பு போராட்டம் என தங்களின் போராட்ட களத்தை அமைப்பது வழக்கமாக
கொண்டிருப்பர், அதன் உரிமை மீறுகின்றபோது துரதிஷ்ட வசமாக கலவரமாக வெடித்த
நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. பிப்ரவரி 19 கருப்புநாள் அனுசரிப்பும்
அவ்வாறே நிகழ்ந்த ஒன்றுதான் , கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை
உயர்நீதிமன்ற வளாகத் தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால்
அதேவேளையில் சிற்சில நிகழ்வுகளைத் தாண்டி வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்
சங்கங்களும் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தலைமை
தாங்கியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஈழப்
போராட்டத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தோழர் முத்துக்குமாரின் இறுதி
வாக்குமூலத்தில் இதன் உண்மையான தன்மையை காணலாம். போலவே எல்லா துறைகளிலும்
சமூக விரோதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள், அது போல சட்டத்துறையை
கலங்கம் விளைவிக்கும் சில வழக்கறிஞர்களை கண்டிக்கத்தான் இச்சட்டமெனில்
அதற்காக கருத்துரிமை,பேச்சுரிமை, எழுத்துரிமையென அடிப்படை உரிமைகள் மீது
நீதிமன்றங்களே கை வைப்பது முறையானதல்ல, இதன்மூலம் தகுதியற்ற நீதிபதிகள்
தங்களை மிகச் சுலபமாக தற்காத்துக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
ஆகவே இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சங்கம் அவசர கூட்டத்தில் வழக்கறிஞர் சட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு
வந்ததற்கு எதிர்ப்பும், புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்ததத்தை
திரும்பப் பெற தலைமை நீதிபதிக்கு வலியுறித்தியும். வரும் ஜுன் 6ம் தேதி
வழக்கறிஞர்கள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள்
மட்டுமல்லாது முற்போக்காளர்கள் , அரசியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு
தந்து போராட்டத்தை முன்னெடுப்பது அவசியாக இருக்கிறது. இது அடிப்படை
உரிமைகளுக்கு சவால் விடும் சட்டமென்பதால் அனைத்து தரப்பினர்களும்
இச்சட்டத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது மிக அவசியம் என்பதை சமூகம்
உணர்ந்து செயல்பட வேண்டும்.

0 comments:
Post a Comment