Saturday, July 29, 2017

சாட்டை


தென்றலில் இசை மீள
ஒரு மூங்கிலை
துளையிட்டபோது
துடித்து திமிறி காற்றிடைவெளியில்
சிதறிவந்தது சீர்குலைந்த
இராகமாய் புல்லாங்குழலில்
இருந்து இடறிய சப்தங்கள்,

மாற்றொலித்த
வடுக்களினூடே
நாவின் நுனியில்
திரிந்த வார்த்தைகளில்
ஒளிந்துகொண்ட
வன்மமாய் தீண்டிச்சென்ற வெப்பமாய்
சொற்களின் கொடுமைகள்,

சில நேரங்களில் வீழ்ந்தும்
சில நேரங்களில் எழுந்தும் அழிச்சாட்டிய உணர்வுகளைத் தாண்டி இம்மண்ணில்
உயிர்த்தெழும் மிதமிஞ்சிய அதிகாரத்தில்
மீளமுடியாத துயரத்தில்
தென்பட்ட சிறு துவாரத்தில்
பிரகாசித்துப்போன ஒளியினூடே
திரும்பிய பொழுதில்
அறைந்துவிட்டுப்போனது இசைத்திட மறுத்த காற்று
தன் பலத்தோடு,

மீண்டும் மீண்டும்
திமிரி எழ
எத்தனித்தபோது
மீண்டும் அமிழ்த்திப்போனது
சர்வாதிகார நாற்காளிகள்,

திருப்பி அடிப்பேன்
என்கிற பலத்தோடு இம்முறை
சாட்டையின் துணைகொண்டு துளையிடுகிறேன்
அதே மூங்கிலில்,,,

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...