Sunday, January 06, 2019

குஜராத் மாடல் இதுதானா மோடி அவர்களே ?





குஜராத்தில் தலித் ஒருவரை போலீசார் காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைத்த கொடூரச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

#குஜராத்
ஜனவரி 03, 2018, 04:56 PM

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அம்ராய்வாடியை சேர்ந்த 40-வயது தலித் ஹர்ஷத் ஜாதவ் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் டிசம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் 15 பேரை காலணியை (ஷூவை) நாவால் சுத்தம் செய்ய ஹர்ஷத் ஜாதவ் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹர்ஷத் ஜாதவ் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் பணியை செய்து வருபவர்.

 டிசம்பர் 29-ம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. என்ன காரணம் என தெரிந்துக் கொள்வதற்காக ஹர்ஷத் ஜாதவ் சென்று உள்ளார். அங்கு நடக்கும் விஷயம் என்ன என்று கேள்வியை எழுப்பி உள்ளார், ஆனால் அவர் கேள்வி எழுப்பிய நபர் கான்ஸ்டபிள் என்பது பின்னர்தான் தெரியவந்து உள்ளது.

போலீசார் வினோத்பாய் பாபுபாய் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். கான்ஸ்டபிள் எந்தஒரு காரணமும் இன்றி ஹர்ஷ்த் ஜாவதை திட்டிஉள்ளார், அடித்து உள்ளார். போலீஸ் அடியை தடுக்க முயன்ற ஹர்ஷ்த் ஜாதவின் கை விரல்களில் அடி விழுந்தது. அவருடைய மனைவி மற்றும் தாயார் ஓடி சென்று காப்பாற்ற முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. அங்கு அவருடைய ஜாதியை கேட்ட போலீசார், தங்கள் 15 பேருடைய காலணியையும் நாவால் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வினோத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் கட்டயப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. காவல் நிலையத்தில் மிகவும் மோசமான நிலையில் அவர் நடத்தப்பட்டு உள்ளார், இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் அவரை போலீஸ் மிரட்டிஉள்ளது. இப்போது இவ்விவகாரம் வெளியே தெரியவந்து சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது.
--

இதைத்தான் குஜராத் மாடலாக இந்தியாவை உறுவாக்குவோம் என்றாரா மோடி....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...