Monday, January 07, 2019

வடிவழகி கொலுசு




வடிவழகி காலில் ஒற்றை கொலுசு சத்தமிட்டு கொண்டிருக்கிறது...

தங்கமோ வெள்ளியோ இல்லையது
வெறும் கருவேலங்காய்...

மற்றொன்றை எடுத்து அணிவதற்குள்ளாக
காட்டு புழுதியில் தேய்ந்த தன்
பாதங்களை ஒருதடம் தடவி பார்க்கிறாள்....

அத்துணை வெடிப்புகளிலும் அவளின் கண்ணீர்
மிச்சம் தங்கி ஒரு முத்தத்திற்காக
ஏங்குவதாக அவளே உணர்கிறாள்...

எதுவந்து அவளை காயப்படுத்தியதோ...
அவள் மட்டுமே அறிவாள்...

சட்டென அணிந்திருந்த
ஒற்றை கொலுசை பிடுங்கி எறிந்து
சத்தமின்றி அழுகிறாள்...

இப்போது அவளுக்கு
அந்த கருவேலங்காடு
வெறுமையை
சுமந்திருப்பதாக
தன் உணர்வுளால்
பிதற்றுகிறாள்...

அவளை  காதலியாக
கட்டிப்பிடித்து
தோளில் சாய்த்து...
துணையாக்கி கொள்கிறது...
அவள்  விறகு ஒடிக்க எடுத்துவந்த
அதே கத்தி...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...