Monday, January 14, 2019

யாசகனின் மிச்சங்கள்




ஆதி நிறத்தில் அழுக்குகள் பூசி
இந்த உலகம் எதிலும் வாழுமென்கிற கனவுகளுக்கு அப்பால்
கிழிந்த ஆடையோடும்
தேய்ந்த உடம்போடும்
ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தி நிற்கும் யாசகனின் திருவாய்மொழியில் மலரும் ... மவராச(சி)ன் , எசமான் , என்றருளி ...
நீடூழி வாழ வேணுமென்று பிச்சையிட்டவனை(ளை)
ஆசிர்வதிக்க எத்தனிக்கும் பொழுதெல்லாம் ...

அந்த யாசகனின் கரங்களை பற்றி கடவுளர்கள் முத்தமிடுகிறார்கள் என்பதை நீ... அறிவாயெனில்...

யாசகனையும் சக மனிதனாய் நீயும் மதிக்கிறாய் என்றே உணர்க...

யாசகனவன் தனக்கென பசியென்ற ஒன்றை மட்டுமே பொது எதிரியாக கண்டிருப்பான் என்பதை நீயும் அறிவாய்தானே...

தெரியுமா...
யாசகனின் மிச்சங்களில்தான்
உயிர் வாழ்கிறது
உலக ஜீவராசிகள்...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...