Sunday, January 13, 2019

உன் நினைவுகளில் ...





மார்கழி பனியில்
எங்கும் நிறைந்திருக்கும்
பச்சையிலை நரம்புகளில் பதிந்துவிட்ட மச்சங்கள் போல ஒட்டியிருக்கும் பனித்துளிகளை
பார்த்துகொண்டே ...
தினம் கடந்து போகிறேன்...

ஏனோ ...
அன்றொரு நாள்
நீயும் நானும்
சந்தித்த வேளையில்
பேசி பல பகிர்ந்து ...
அரை மனதோடு கடைசியாக
விடைபெறுதலின் பொழுது
உன் கண்களில் ஏந்திய
கண்ணீர்த் துளிகளை
இந்த பனிச்சாலைகள் நினைவுபடுத்தியே கொண்டிருக்கிறது ...

உன் நினைவுகளில்
வாழ்ந்திடும் சுமைகளை இறக்கிட நானும் பனித்துளிகளாய் மாறிட வேண்டுகிறேன்  ....

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...