
இரவுகளை கடந்து இன்பத்தினை பகிர்ந்து துயில் கொள்ளும் தீராத வேட்கையில் வீண்மீன்கள் பவ்யமாய் விளக்கேற்ற,,, வந்தனைக்கும் தீபவொளியாய் திகட்டாத தேனமுதாய் சிந்திவிடும் நிலவொளியை,,, சுமந்தவாரே சுவைக்கிறது நம் படுக்கையறை,,, காலை முகத்தை கவ்விய முழுமதியாய் முதலில் கண்விழித்தாய் நீ! மூர்ச்சையாகி போனது புல்வெளிகள்தான் என்பதை நானறிவேன்,,, உனக்கு முன்பே உலகை ரசிக்க வழியில்லா புல்வெளிகள் கதிரவன் கண்விழிக்க மாட்டானா என்று புலம்புவதை செவிகொடுத்து கேளடி என்னவளே,,,...