Thursday, February 12, 2015

கவிதை "காதல் செய்வீர்!"

புதுப் புதுப்
பறவைகள்
பூவுலகில்
உலா வரட்டும்
உதடுகளில்
நிலா வாழட்டும்
காதல் செய்வீர்!

இருமனம் கலந்து
இதயத்தில்
மணம் வீசட்டும்
மனதோடு
பட்டாம்பூச்சிகள்
பரிசாகட்டும்
காதல் செய்வீர்!

தானே தோண்டிய
சவக்குழியில்
சாதிமதங்கள்
புதைபடட்டும்
ஆசைகளில்
மனிதம் வாழட்டும்
காதல் செய்வீர்!

காற்றடைத்த
பலூன்கள்
வானமகளுக்கு
காதணி யாகட்டும்
மூச்சிக்காற்றில்
புல்லாங்குழல்
இசைபாடட்டும்
காதல் செய்வீர்!

காதலொரு
கசப்புக் காகிதம்
தூற்றும்
முகங்களில்
கார்மேகம் கரிகளை
பூசட்டும்
இணைந்த கரங்கள்
காகித கப்பலாகட்டும்
காதல் செய்வீர்!

நேர்மை காதலால்
நிறைய மரங்கள்
உதிக்கட்டும்
நெற்றிப்பொட்டில்
யுகங்கள்
சிறக்கட்டும்
காதல் செய்வீர்!

அணிதிரளும்
காதலர்கள்
வானை அளக்கட்டும்
அனைவரின்
கைகளும்
காதல் சிறகுகள்
முளைக்கட்டும்
காதலொரு பூமியின்
புலப்படாத உணர்வு
அனுபவித்துப் பார்
அனைத்துலகும்
அழகாய் தெரியும்
அதற்காகவேனும்
காதல் செய்வீர்!

1 comment:

  1. காதல் செய்யும் வயதைக் கடந்துவிட்டவன் நான்.

    இருந்தாலும், காதல் செய்வதால் விளையும் நன்மைகளைக் கவிதை வடிவில் நீங்கள் பட்டியலிட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தந்தது.

    காதல் வாழ்க!

    ReplyDelete

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...