தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்? தொடர் சாதிய வன்கொடுமைகளுக்கு பலியாவதை விட இம்மண்ணை விட்டு மரணத்தைத்தேடி செல்வதே காலச்சிறந்தது . எத்தனை வலிகள் சுமந்தாலும் இவர்கள் அடிமைகள் இவர்களை அடிமைபடுத்துவதே முறையென்று தங்களின் ஆதிக்க அடக்குமுறையை மென்மேலும் செய்துகொண்டே இருக்கிறார்கள் இவர்கள்தான் இம்மண்ணின் மைந்தர்களென வலம் வரும் தமிழர்கள். தங்களின் இந்துத்துவம் கண்டெடுத்த மனுசாஸ்த்திர வருண சாதியத்தை அழியாமல் காத்துக்கொள்வதில் அப்படியென்ன தேவை இருக்கின்றதோ தெரியவில்லை. சாதியத்தை எதிர்த்து இங்கே எவ்விதமான எழுத்துகளும் இல்லை அவ்வாறு எழுதாதவர்களுக்கு அச்சாதியிலேயே அடக்குமுறை ஏதேனும் வந்தால் மட்டும் உடனை "இது பெரியார் பிறந்த பூமிடா" என்று போலிப்புரட்சி மொழி பேசுவார்கள் . உண்மையில் இவர்கள் பெரியாரையும் , மார்க்ஸியத்தையும், அம்பேத்கரியத்தையும் எழுத மறுப்பவர்கள். இந்நிலைதான் இன்றை தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. சாதியத்தை எதிர்த்த எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்களை மறைத்தே வைத்திருக்கிறது இந்தச் சமூகம் . மார்க்ஸியத்தை பேசுவோர் மாவோ வை பேசுவதில்லை ,பெரியாரியத்தை பேசுவோர் அம்பேத்கரை பேசுவதில்லை என்கிற நடைமுறையை பின்பற்றுவதில் எவ்வித பலனும் இல்லை. 90களில் ஒட்டுமொத்த தமிழகமும் தமிழகத்தில் வாழும் தலித்தின மக்களும் பெரும் கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்பதற்கான சாட்சியம் தான் "திண்ணியம்" ஆதிக்க வெறியர்களால் அடிமைபட்ட மக்களை விரட்டி விரட்டி பலி கொண்டது "திண்ணியம்" மனித உடம்பில் ஒரு முள் குத்தினாலும் உடனே வலியை உணரச்செய்யும் மூளை இந்த வலிகளை எங்கேச் சொல்லி அழும் எனத் தெரியவில்லை. தலித்தின மக்களை அடித்து ஒடுக்கி சித்ரவதைசெய்து அவர்களின் வாயில் புனலை வைத்து மனித மலத்தையோ அல்லது சிருநீர்க்கழிவையோ ஊற்றிக் கொலை செய்யும் "திண்ணியம்" தமிழகத்தில் பெரும்பகுதியில் நடைபெற்ற கொடுமை நிகழ்வாகும். அதன் பிறகு சாதியத்தை எதிர்த்துக் களமாடும் பல முற்போக்கச் சிந்தனையாளர்களின் களப்போராட்டங்களால் "திண்ணியம்" தடுத்து நிறுத்தப்பட்டது, முழுதாய் தடுக்க முடியா விட்டாலும் இப்புரட்சிப் போராட்டங்களின் மூலமாக கொஞ்சமேனும் தலித்தின மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் . அந்நிம்மதி பெருமூச்சு நீடிக்க விட்டுவிடுவோமா ,அடிமைச் சமூகமே உங்களைத் தான் வாழவிடுவோமா என்று ஆதிக்க வெறிகொண்டு மீண்டும் திண்ணியத்தை கையிலெடுத்திருக்கிறது இந்த ஆதிக்கவெறிச் சமூகம் . அதற்கு சாட்சியாகவும் இன்னொரு திண்ணிய நிகழ்வை இவர்களும் திணித்து விட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். தமிழகத்தில் குடிநீருக்குப் பஞ்சம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான் ஆனால் ஆதிக்க வெறிக்கும் அவ்வாதிக்க வெறிக்கு பலியாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பஞ்சத்தில் சேர்த்துவிட முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் துன்பங்கள் தாங்குவார்களோ தெரியவில்லை, பெரியார் சூளுரைத்து போல் "சாதி மனிதனை மிருகமாக்கும்" என்பதற்கான பொருளுரையை தேடி அலைய வேண்டியதில்லை ,தினந்தினம் மிருகமாகும் மக்களுடனேதான் நாமும் வாழ்கின்றோம்.இக்கொடூரங்களுக்கு ஆதரவாய்ச் செயல்படும் ஆளும் அரசும் ஆளும் அரசிற்கு அடிமையாகிப்போன காவல்துறையெனும் பெரும் மதில்சுவரில் முட்டியதில் ரத்தம் தான் வழிந்தோடுகிறது . சமூகமே சிந்திய ரத்தங்களில் இவன் இன்ன சாதியென்று எவராலும் கண்டுபிடுக்க முடியாதென்பதை மறந்துவிடாதீர்கள்.
\\\ பெரியாரியத்தை பேசுவோர் அம்பேத்கரை பேசுவதில்லை \\\
ReplyDeleteபுரிகிறது...
/// மார்க்ஸியத்தை பேசுவோர் மாவோ வை பேசுவதில்லை \\\
புரியவில்லை ???
சாதிய எதிர்ப்புச் சிந்தனையில் ஒரே கோட்பாட்டினை பெரியாரும் அம்பேத்கரும் விதைத்திருந்தாலும் பெரியாரை முன்னிலை படுத்துபவர்கள் அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட இனத்தலைவராக மட்டுமே பார்க்கும் மனோபாவம். அதேபோல மார்க்ஸியத்தின் வழியில் மாவோவின் புரட்சியிருந்தாலும் மாவோவின் கிராமப்புர புரட்சியை பற்றி மார்கஸியர்கள் பேசுவதில்லை.
ReplyDeleteமாவோவின் கிராமப்புர புரட்சியை கையிலெடுக்காமல் வெறும் கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்ப்பதில் எவ்விதப் பயனுமில்லை . கிராமங்களில் மார்க்ஸிய விதையை விதைக்க
ReplyDeleteதவறியவர்கள் மார்க்ஸியர்கள்.