Saturday, March 21, 2015

வேர் முளைத்த விழுதுகள்

மரங்கள் தவமிருக்கின்றன
மனிதன் வெட்டாமல்
இருப்பதற்கு,,,

இப்பிரபஞ்சத்தில்
பாலூட்ட தாயேதும்
கிடைக்கவில்லை
என்பதால்தானோ
கிழக்கில் உதிக்க
சோம்பல்படுகிறான்
இளஞ்சூரியன்,,,

எத்தனை எத்தனை
மலர்கள் தாய்மரம்
முன்னே தரையோடு
மடிந்து கிடக்கிறது
தயவுசாட்சனை
பார்ப்பதிலென்ன
தன்மானமா போய்விடப்போகிறது
மனிதா,,,

பிரளய பிம்பங்களை பிய்த்துப் பார்த்துப்
பேசாத சிற்பமாய்
போலி முகங்கொண்டு
பிரகாசிக்கிறாயே
மனிதா,,,

தேவதைகளான
மரங்கள்
உனக்கு மட்டும்
பேயாக தெரிவது
ஏனோ,,,

நாடு வளம்பெற வேண்டுமெனில்
மரத்தின்
வேர்களில் பூஜையிடாதே
அது புரட்டுக்கதைகள்,,,

மஞ்சளாடை மரத்திற்கு
அணிவிக்காதே
அது மூடத்தனத்தின்
உச்சமென எண்ணிவிடு,,,

ஒருவன் உழைக்க
மறுத்து உருவத்தை
சிதைக்கிறான்
வேரின் விழுதுகளில்
கோடரி கொண்டு
சாமி இங்குண்டென
சாம பொழுதில்
புளுகுகிறான்,,,

திருந்த மாட்டாயோ
மனிதா
என்னைய அழிக்கிறாய்
இதோ நாங்கள்
ஒன்றுகூடி உங்களை
அழிக்கப் போகிறோம்
ஆக்ரோஷ வார்த்தைகளோடு
மரங்கள் புரப்பட்டால்
மனிதா ஆயிரமென்ன
பல்லாயிரம் யுகங்கடந்தாலும்
இத்தாய் மண்ணில்
கானாமல் போய்விடுவாய்,,,

கண்களைத் திற
மயிலாடுவது போலே
மரங்களாடுவதை
பார்,,,

இனியும் மரங்களை
வெட்டாதே மனிதா,,,

2 comments:

  1. மரத்தின் வேர்களில் பூஜையிடுவதும் அதுக்கு மஞ்சள் ஆடை அணிவிப்பதும் மரத்தில் ஆணி அடித்து மாாலை சூட்டுவதும் கேடு கெட்ட மனிதனின் தொட்டில் பழக்கம்.


    ReplyDelete
  2. கேடுகெட்ட மனித மனநிலையில் மாற்றம் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...