Saturday, March 21, 2015

சங்கராச்சாரியார் வாய் திறக்கிறார் எடு சர்க்கரையை

இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று இதில்
ஆணுக்குப் பெண் சமம்
ஆணால் முடியுமென அனைத்தும் பெண்ணால் முடியுமென் பெண்ணினம் தற்போது தான்
மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா வல்லரசை
நோக்கி பயணித்துக்கொண்டிருக்­கிறது . ஆனால் இந்தியா எப்போதும்
பிற்போக்குச் சிந்தனையில்தான் பிழைப்பை ஓட்ட வேண்டும் . அதற்கு மாறாக
முற்போக்குச் சிந்தனையில் பெண்ணினிம் போகக்கூடாது அவ்வாறு பெண்ணினம்
செயல்படுதவதென்பது இந்துத்துவ மதத்திற்கு எதிரானது என்று வாய்கிழிய
கத்தும் இந்துத்துவ வாதிகள் தான் "இந்து மதம் பெண்ணினத்தை போற்றிக்
காக்கிறது" என்று வாய் கூசாமல் புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறது .
பெண்ணினத்தை அடிமைபடுத்துவதில் உலக மதங்கள் அனைத்தும் ஒரேச்
செயல்பாட்டினை கொண்டிருந்தாலும்"இந்­துத்துவம்" அதற்கும் மேலாக ஒருபடி
பிற்போக்குத்தனங்களில­் முன்னேறியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.
"விதவை பெண்கள் "தரிசு நிலம்"
வேலைக்கு போகும் பெண்கள் "விபச்சாரிகள்"
-சங்கராச்சாரியார்-"
இது இந்துத்துவத்தை கட்டிக்காத்திடும் பிற்போக்குவாத மதத்தலைவரின்
வாயிலெழும் என்பதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை ஆனால் இக்கருத்தானது இன்றைய
காலச்சூழலுக்கு பொருந்துமா? என்கிற கேள்வியை இந்துத்துவம் போற்றும்
பெண்ணினம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் இப்போது
முளைத்திருக்கின்ற #RSS #BJP தீடீர் காளான்களை களையெடுக்க
பெண்ணினம் முயற்சி எடுக்குமா? என்கிற கேள்வி நம்மிடையே ஏற்படுகிறது.
இந்தியத்து இச்சூழலை முறியடிக்கவும் ஆணாதிக்க அடக்குமுறைகளுக்கெதிர­ாக
களமிறங்கவும் பெண்ணினம் இனி தயாராய் இருக்க வேண்டும் . "சமூக மாற்றத்தின்
மூலமாக இங்கே சமத்துவம் ஏற்படவேண்டுமெனில் பெண்ணடிமைத்தனத்தினை
ஒழிக்கவேண்டும் அப்பெண்ணடிமையை ஊக்குவிக்கும் இந்துத்துவ பார்ப்பானியத்தை
வேரறுக்க வேண்டுமென அம்பேத்கர் உரைத்திருப்பார் . எக்காலமும் பெண்களை
பூட்டியே வைத்திருப்பதுதான் இந்தியச் சமூகத்தின் பண்பாடெனில் அப்படியான
பண்பாடு இச்சமூகத்திற்குத் தேவையேயில்லை . படிப்பில் சிறந்து அதிகார
தொனியில் வலம் வந்த கிரண்பேடி அவர்களே இந்துத்துவ பார்ப்பானிய #RSS #BJP
யிடம் மண்டியிட்டு ஒரு பெண்ணாக அவரே இருந்து பெண்ணினத்திற்கெதிரான­
பாலியல் வன்புணர்ச்சியில் "சிறிய கற்பழிப்பு ,பெரிய கற்பழிப்பென புதிதாய்
கண்டுபிடித்திருக்கிற­ென்றால் எப்பேர்பட்ட அடிமைதனத்திலும் கல்வியானது
மக்கும் குப்பையாகிவிடும் என்பதை மெய்பிக்கிறார் அல்லவா,
பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது விதவைகள் தரிசு நிலமாகத்தான் இருக்க
வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கும் இந்துத்துவ
சங்கராச்சாரியார்(பெர­ியவா) கொலை ஆட்கடத்தல் கற்பிழிப்பென அனைத்து விதமான
சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு பார்ப்பன புத்தியால் நீதியை ஏமாற்றி
விடுதலையானவர் என்பதை இங்கே பெண்ணினத்திற்கு சுட்டி காட்டுவது காலச்
சிறந்தது (பார்ப்பன புத்தியென்பது நீதித்துறையை முழுமையாய்
ஆக்ரமித்துக்கொண்டவரு­ம் பார்ப்பனர்கள் என்பதை உணர்த்தவே)
இன்னும் பெண்கள் வேலிதாண்டக் கூடாதென இந்துமதம் சொல்கிறது பெண்களும்
இந்துமதக் காலடியில் விழுந்து கிடந்து ஆமாம் போடுகிறது. பரவாயில்லை
சீதையை சந்தேகித்த ராமனிங்கே
புராணத்தில் ,ராமனை ஏன் சீதையை சந்தேகித்தாய் மனைவியை விட சமூகத்தின்
பொய்ப்புரட்டுக்கு சவாலாய் ராமனாகிய நீயே தீயில் இறங்கியிருக்கலாமல்லா­
ஆணுக்கும் கற்புண்டுதானே எனக் கேட்கும் பெண்ணினத்தைதான் இன்னமும்
கானவில்லை.

6 comments:

  1. So much anti Brahmin sentiment. Also, please understand that jegathguru is a highly respected religious leader for majority people. Some regard him as God too. Request you to remove this post

    ReplyDelete
  2. மன்னிக்கவும் தோழரே பதிவை நீக்கிவிட முடியாது உங்களின் பார்வையில் உயரத்தில் இருக்கும் மதக்குருமார்கள் மதத்தின் பெயரால் பிற்போக்குத்தனங்களை ஆதிரிப்பார்களெனில் அதுபற்றி எழுதுவதைத் தவிற வேறுவழியில்லை .

    ReplyDelete
  3. உங்கள் திண்மைக்கு என் பாராட்டும், வாழ்த்தும், நன்றியும்.........

    ReplyDelete
  4. தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்
    நன்றி தோழர்!

    ReplyDelete
  5. நண்பரே! எல்லோருக்கும் மறதி வியாதி முற்றியதால்
    சங்கராச்சாரிய லீலைகளை மறந்துவிட்டார்கள்அப்பப்போ
    ஞாபகப்படுத்துவதற்கு நன்றி!

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...