Saturday, January 12, 2019

பிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை




இந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் உணர முடியாது , ஏனெனில் அந்த இரட்டை வேடத்தை அலங்கரிப்பதே ஏகாதிபத்தியத்தின் முதல் வேலையாகும். அப்படித்தான் இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவும், இதில் இந்திய ஏகாதியத்திற்குள் ஓன்றியமாக செயல்படும் தமிழக முதலாளித்துவ அரசு ஒன்றும் விதிவிலக்கல்ல, ஓரளவிற்கு இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவை தமிழக மக்கள் ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே வரவேற்றிருப்பது நல்லதுதான் , ஆனால் அதுவே தீர்வாகது என்று மக்கள் உணரும் காலம் வரும்பொழுது அரசிடமிருந்து அதற்கான பதில்கள் வராது என்பதே உண்மை.  உலக வெப்படைதல் , பூமி  மழை நீரை உறுஞ்சுவதில் சிக்கல் ,  காற்றில் மாசு ஏற்படுத்ததுதல்  , புதிய நோய்களை உறுவாக்குதல் , கடல்நீரில் மக்காத குப்பைகள் கலத்தல் , என பல்வேறு இடர்களை ஏற்படுத்தும் "பிளாஸ்டி" பொருட்களை தடை செய்தது நல்லது என்றாலும்கூட இதிலிருக்கும் கார்ப்பரேட் மூளை அரசியலை நாம் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம், இந்த உத்தரவில் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் முளைதான் அரசு என்பதை இயக்குகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதனை விவரிப்பதற்கு முன்னால் கார்ப்பரேட் மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கிவிடுதல் நல்லதாக இருக்கும் . உலக தாரளமயமாதல் , மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என   இந்த மண்ணை வெறும் சந்தை பொருளாகவும் , மக்களை அதில் வெறும் நுகர்வு பொருளாகவும் வைத்திருப்பதே கார்ப்பரேட்டுகளின் பணியாக இருக்கிறது , இதற்கான திட்டங்கள் பல தீட்டி அதனை "அரசு " என்கிற இயந்திரம் மூலம் மக்களை அடிமைபடுத்துதல் கார்ப்பரேட் மூளை என கொள்ளலாம் , ஒரு "அரசு இயந்திரம் " மக்களுக்கான நலனை எந்தளவிற்கு செயல்படுத்த துடிக்கின்றதோ அதே அளவிற்கு அந்த அரசானது கார்ப்பரேட் நிறுவனங்களை தங்கள் ஆட்சியதிகாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் , இதனை அறிவதற்கு தற்போதைய மோடி அரசின் பொருளாதார மேல்மட்ட திட்டங்களை சான்றாக கொள்ளலாம் , பணமதிப்பிழப்பு , GST  , சேலம் எட்டு வழிச் சாலை என அனைத்து திட்டங்களிலும் பெரும் பணமுதலைகளான கார்ப்பரேட் நிறுவனங்களே பின்னாலிருந்து அரசை இயக்கியது என்றுச் சொல்லலாம் , பணமதிப்பிழப்பு என்கிற பெயரில் இந்தியா முழுமைக்கும் சுமார் 300 க்கும் மேல் (தோராயமாக) மக்களை கொன்றழித்தது மோடி அரசு , அதேவேளையில் கார்ப்பரேட் நிறுவனங்களை பெரும் பணக்காரர்களாகவும் , பொருளாதார சுரண்டல் செய்ய அவர்களுக்கு துணையாகவும் நின்றது நீரவ் மோடிக்களை , விஜய் மல்லையாக்களை நாம் இதன் மூலம் குறிப்பிடலாம் , போலவே GST  வரி விதிப்பு என்று மன்னராட்சி கால பெரும் வரிவிதிப்பு போன்றே செயல்படுத்தியது அதாவது குறு வணிக நிறுவனங்களை , நசுக்குவதே GST யின் முதன்மை பணியாக இருந்தது , இந்த GST திட்டத்தால் அழிக்கப்பட்ட குறு வணிக நிறுவனங்களை அடையாளம் காணுவீர்களேயானால் நிச்சயம் இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவு சட்டத்தையும் அடையாளம் காணலாம்.  இங்க 100% பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அரசு இயந்திரத்திற்கு நன்றாகவே தெரியும் , ஆனால் முழுக்க முழுக்க சிறு வணிக பாமரர்களை நோக்கி " நீங்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதை நிறுத்துங்கள்" என்று முதலாளித்துவ அரசு மிரட்டுகிறது என்றால் இது நன்மை பயக்கும் திட்டம் இல்லையென்றுதானே பொருளாகிறது  , போலவே   நேற்றுவரை பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ஒரு நல்ல நடவடிக்கை கேரிபேக்குகளை ஒழிப்பது இயற்கையை பாதுகாக்கும் என்று ஆதரித்தவர்கள இது வெறும் கேரிபெக்கை ஒழிக்கும் நடவடிக்கை இல்லை.. மாறாக கேரிபேக் என்ற பெயரில் வீட்டில் தின்பண்டங்களை தயாரித்து கடைகளில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை ஒழிக்க எடுக்கப்படும் மறைமுக தடையாணை என்பதை ஓரளவிற்கு மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள் என்றாலும் கார்ப்பரேட்டுகளை எதிர்க்க முடியவில்லை காரணம் மக்களை இயக்குவதும் கார்ப்பரேட்டுகள் என நாம் அறிய மறுக்கின்றோம் ... டாஸ்மார்க் என்னும் நஞ்சை ஆறாக ஓடவிடும்  ஆளும் அதிமுக ஏகாதிபத்திய அரசு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பல ஆயிரம் அரசு அதிகாரிகளை களத்திற்கு அனுப்புகிறது என்றால் இந்த இடத்தில் அரசின் செயல்பாட்டின் மீது சந்தேகம் எழுவது இயல்புதானே....எது எப்படியோ இந்தியாவில் சிறு வியாபாரிகள் அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் மேலும்  அந்த முதுகெலும்பை  ஏற்கெனவே GST என்கிற விஷ வரியை வைத்து சுரண்டியதை போன்றே 
இன்றும் இந்த அரசு சிறு குறு வணிகர்களை குறிவைத்து தாக்கிக்கொண்டே இருக்கிறது.... இந்தியாவில் பிளாஸ்டிக்கை அதிகம் தயாரிக்கும் குஜராத்தையும் , மகாராஷ்டிராவையும் விட்டுவிட்டு தமிழக சிறு வியாபாரிகளின் கழுத்தில் கையிற்றை நெருக்கிறது என்றால் இவர்களின் பிளாஸ்டிக் இயற்கைக்கு பேராபத்து என்ற வாதம் உண்மை என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட இவர்களின் உண்மையான நோக்கம் பிளாஸ்டிக்கை தடை செய்து இயற்கையை காப்பாற்றுவது இல்லை .. அப்படி இயற்கையை காப்பாற்றுவது நோக்கம் என்றால் முதலில் இவர்கள் தடை செய்திருக்க வேண்டியது  அனைத்து வித பொருட்களையும் மக்களிடத்தில் நுகர்வு பண்டமாக எல்லா உற்பத்தி பொருட்களையும்  (Shampoo ஷாம்பு , பிஸ்கட் ) பிளாஸ்டிக் பைகளில் , அடைப்பானில்  தந்து கொண்டிருக்கும் கார்பரேட் முதலைகளின் பிளாஸ்டிக் பைகளை  முதலில் தடை செய்திருக்க வேண்டும்... ஆனால் கார்பரேட் முதலாளிகளை மட்டும் வாழ வைக்க தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகளின் கழுத்தில் சுருக்கு கையிற்றை மாட்ட திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம் தான் பிளாஸ்டிக் தடை என்கிற உண்மை உணரும் காலம் வெகுதொலைவில்லை.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...