Friday, January 18, 2019

எது சமத்துவப் பொங்கல் ?




சாதி இந்துக்களோடு வேறு மதம் பின்பற்றுகின்ற தமிழர்கள் கலந்து  கொண்டு சிறப்பிப்பது "சமத்துவப் பொங்கல் " இல்லவே இல்லை... ஏனெனில் மதங்கள் பல  இருந்தாலும்  அம்மக்கள் அனைவருமே திராவிட தமிழர்கள் . தமிழை அதன் உயிரை நேசிப்பவர்கள் , தமிழ் நிலத்தில் வசிக்கக்கூடியவர்கள். எனவே தமிழர்கள் என்று வருகின்றபோது ஹிந்துக்கள் அல்லாத வேறு மதத்தினர் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்..

இது தமிழரின் பண்டிகை , தமிழரின் கலாச்சாரம் , தமிழரின் நன்றி மறவாத பண்பாடு என்றேதான் தை திருநாளாம் பொங்கல் திருவிழா அழுத்தமாக பதிவுசெய்கிறது...      அந்த விதத்தில்  சமத்துவப் பொங்கல் இதிலடங்காது ...

அவ்வாறு இருக்கையில்  சமத்துவப் பொங்கலில் ஏன் ஹிந்துக்கள் அல்லாத வேறு மதத்த்தினர் மட்டும் கலந்துகொள்கிறார்கள் ? அதுவே பார்பனியம்தானே....  திராவிடம் வகுத்த "சமத்துவப் பொங்கல் " என்பது வேறு மதத்தினருக்காக அல்ல , அதற்கு மாறாக  சாதி இந்துக்கள் தங்களின்  இந்து மத அடையாளத்தையும் , அந்த இந்து மதம் கற்பிதம் செய்த மனுதர்ம சாதிய வர்ணாசிரமத்தையும் மொத்தமாய் தூரே கிடாசிவிட்டு சமத்துவத்தோடும் , சகோதரத்துவத்தோடும் சக மனிதனை மதிக்கும் சமூக நீதியோடும் திராவிட தமிழராய் ஒன்றிணைந்து  தை திருநாளை கொண்டாடுவதே "சமத்துவப் பொங்கல் " ஆகும்... இசுலாயர்கள் கிருஸ்தவர்கள் , பௌத்தர்கள் , இன்னும் என்னென்ன மதங்கள் இருக்கின்றனவோ அவையாவும் தை திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட வேண்டியவர்கள் .



இந்த தமிழ் மண்ணை , மக்களை சேரி (காலனி) - ஊர் என இரட்டைக்குடில் முறையில் பிரித்து வைத்து , சாதிய உணர்வோடு கட்டமைத்திருக்கும் ஆரியத்திற்கான எதிர்ப்பே " சமத்துவப் பொங்கல் " ஊர்க்கார தெருவில் சேரிக்காரன் பொங்கல் திருவிழாவை கொண்டாட முடியாதெனில் அது எப்படி இந்து பண்டிகையாகும் ? ஊர்க்காரனும் சேரிக்காரனும் இந்துக்கள்தானே? இதில் பிரிவினை சூழ்ச்சியை நிகழ்த்துவது பார்ப்பனியம் என நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் , ஆக தமிழர்களின் தொல்குடி பண்டிகையான பொங்கல் திருவிழாவை தமிழர்கள்... சாதியயற்றவர்களாக , மதமற்றவர்களாக கொண்டாட வேண்டும் என முயல்வதே " சமத்துவப்  பொங்கல் ... நீங்கள் எவ்வளவுதான் படித்து , பட்டம்பெற்று உயர் பதவிகளில் அங்கம் வகித்தாலும் பார்ப்பனியத்தை பொருத்தவரையில் நீங்கள் சூத்திரர்கள் அவன் உங்களைவிட உயர்ந்தவன் என அடிமைத் தனத்தை அதிகாரத்தை , ஆண்டை தனத்தை திணிக்கும் செயல்தான் இந்த "சங்கர மடங்களின் சமத்துவப் பொங்கல் " அதேவேளையில் அவ்வளவு படித்து மக்களுக்கான நீதியை வழங்கும் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி  வெறும் பூணூல் ஒன்றிற்கு மண்டியிட்டு அமர்ந்து கிடக்கும்இசூழல்  இருக்கிறதெனில் இங்கு பார்ப்பனியம் நீதிபதியான சாதி இந்து அவரை  அடிமையென மூவாயிரம் ஆண்டுகளாக  பழக்கப்படுத்தி வைத்த சாதிய திணிப்பு முறையே காரணம் என்றால் அது மிகையாகாது.

இனிவரும் காலங்களாவது " எது சமத்துவப் பொங்கல் " என்றறிந்து அதனை இம்மாதிரியான பார்ப்பனிய இந்துத்துவத்திடமிருந்து மீட்டு , அதே இந்துத்துவ பிடியில் சாதியாக பிளவு பட்டிருக்கும் திராவிட தமிழர்களை சாதியற்றவர்களாக முன்வைத்து " சமத்துவப் பொங்கல் " தன் அடுத்த கட்டத்திற்கு நகர்தல் அவசியமாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...