
"சமூக ஜனநாயகவாதிகளின்(கம்யூனிஸ்டுகளின்) முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். "அரசியல் சுதந்திரம் வேண்டும்" என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:- அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம்கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடங்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின் லாபத்துக்காக...