
தீவிர அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படும் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் அறிவு ரீதியான நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றிலும் , தமிழ்ச்சமூக வரலாற்றிலும் என்றும் நினைவு கூறத் தக்கதாகும். இரட்டைமலை சீனிவாசனின் இதழியல் பணி பலரும் அறிந்த ஒன்றேதான். பிற சாதியினரை போல பறையர் (தலித்) சமூகத்தை முன்னேற்றும் பொருட்டு பறையன் என்னும் மகுடத்தோடு 1893 அக்டோபரில் பறையன் இதழை தொடங்கியபோது அவருக்கு வயது 32 தான், பறையர் என்ற தலித்திய சமூக அங்கத்தினர்களுக்காக பரிந்து...