Monday, July 11, 2016

என் மௌனங்கள்

என் மௌனங்கள்
மென்று தின்னுகிறது
வார்த்தைகளை

அதற்கு
பெயரிடுகிறாய்
சம்மதமென்று

அமைதியாய்
இருந்துவிட்ட
காரணத்தால்
எனது ஆசாபாசங்களை
தொலைத்துவிட்டு
தவிக்கிறேன்

எவ்வாறாயினும்
காகிதமொன்றில்
மௌனம் தின்று
போட்ட எச்சங்களை
எழுத்தாக்கி
கடிதமொன்றை
வரைகிறேன்

எனது கைகளுக்காவது
தெம்பிருக்குமா
அதை உன்னிடத்தில்
தருவிக்கவென்று
தெரியாதெனக்கு

வலிக்கத்தான்
செய்கிறதென்
இயலாமையும்
தயக்கங்களும்

இறுதியில்
கோழைத்தனமாய்
உன்னை
மணமுடிக்கிறேன்
மனதை கல்லாக்கி

கசக்கத்தானே
செய்யும் இந்த
வாழ்வெனக்கு
விருப்பமில்லாதது
எனும் பொழுது

அழுத்தமாய்
உணர்த்துகிறது
சில மௌனங்கள்
சம்மதங்களாகாதெனும்
உண்மை

அதை உணரத்தான்
யாருமில்லை
இங்கே என்னையும்
சேர்த்து ,,,

Monday, July 04, 2016

புத்தனுக்கு

அமைதியாக
புத்தன்
அமர்ந்திருக்கிறான்

ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது

அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்

ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது

என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று

வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்

மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது

இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,

Sunday, July 03, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை
உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.
*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,
பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பது
எப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி
இப்போது காண்போம்…
மனுவை எப்படி எழுத வேண்டும்?
*`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக
இல்லாமல்,நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும்
கேட்க வேண்டும்.உதாரணமாக, நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு
விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக்
கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என்
விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர்
அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்ய வேண்டிய அலுவல் எதுவும்
இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி,தாசில்தார் அலுவலகத்தில் `ஆர்டிஐ’ மனுவை
அளிக்க வேண்டும்(இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு
விண்ணப்பித்துக் கிடைக்க வில்லை என்றாலும் பொருந்தும்).நினைவில் கொள்க:…
போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுவை யாருக்கு
அனுப்ப வேண்டும்? எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த
அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.‘பெறுநர்’
முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு,எந்த அலுவலகமோ,
அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்ததபாலில் 10 ரூபாய்க்கான
நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.தமிழ்நாட்டில்
இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே
பதில் தரச்சொல்லிக் கோரலாம். மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்? பொதுத்
தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு
மேலே உள்ளமேல்முறையீட்டு அதிகாரிக்கு மனு அனுப்பலாம். அந்த மனுவில்
‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன்
காரணமாக,“ஆர்டிஐ” சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக
குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து
அனுப்பவும்.
அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தரவேண்டும்?
பொதுத் தகவல் அதிகாரி,30 முழு வேலைநாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அதேபோல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க
வேண்டும்.
இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் இல்லை என்றால்? அடுத்ததாக,
`ஆர்டிஐ’யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு,`மாநிலத் தகவல் ஆணையம்,
எண் 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி. நகர், சென்னை-18’என்ற முகவரிக்கு மனு
அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில்
கிடைத்துவிடும். மனுவுக்கு பதில் வரும்போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?
தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு
வாங்கும்பட்சத்தில், ‘உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல்
பெற்றுக்கொள்கிறேன்’ என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்.
போதிய தகவல்கள் இல்லை என்று மேல்முறையீடு செய்யும்போது, அது உதவும்.
பெண்களுக்கு எப்படி பயன்படும்? ஒருபெண் தன் குடும்ப சொத்தில் தனக்கு
உரிமை இருக்கிறதாஎன்பதை அறிந்துகொள்ள, தன் குடும்பத்தின் விவரிக்கக்கூடிய
அனைத்துத் தகவல்களையும் மனுவில் எழுதலாம்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் தந்தையின் சுயசம்பாத்தியமா, பரம்பரைச்
சொத்தா என்பதைக் குறிப்பிட்டு, ‘இதில் என்னுடன் பிறந்தவர்கள் போக, எனக்கு
எவ்வளவு சதவிகித பங்கு இருக்கிறது? நானும் சம்மதித்தால்தான் இதனை விற்க
முடியுமா?’ என கேட்கவிரும்பும் கேள்விகளை அடுக்கலாம். மனுவை மாவட்ட
நீதிமன்றத்துக்கு தபாலில் அனுப்பலாம் (முகத்துக்கு நேராகவோ, தொலைபேசி
மூலமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது).ஒருவேளை கோரிய மூன்று கேள்விகளில், ஒரு
கேள்விக்கு மட்டுமே தகவல்கள் பதிலாகக் கிடைத்தால், அந்த இரண்டு கேள்விகளை
மீண்டும் மேல்முறையீட்டு அதிகாரிக்கு மனுவாக அனுப்பலாம். தினமும் இரவு
யாரோ வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, காலையில் எடுத்துச்
செல்கிறார்கள். அது அச்சம் தருவதாக இருக்கிறது எனில், போக்குவரத்துத்
துறை அதிகாரிக்கு வண்டியின் பதிவெண்ணைக் குறிப்பிட்டு, விவரத்தைக் கூறி,
அது யாருடைய வண்டி என்ற தகவலைக் கோரிப் பெறலாம். அவர் மேல் நடவடிக்கை
எடுக்கச் சொல்லலாம். அல்லது 101 என்கிற அவசர எண்ணுக்கு அழைத்தும்
புகாரைப் பதிவு செய்யலாம். விதவைப் பெண் ஓய்கூதியம் பெறுவோர், கணவனால்
கைவிடப்பட்டவர்கள் (குழந்தையுடன் வசிக்கும் பெண்கள்) உள்ளிட்ட பெண்கள்,
‘எனக்கு வேலை கிடைக்குமா?’ என்பதையும், ‘கணவர் கைவிட்டுப்போய் 7 ஆண்டுகள்
ஆகிவிட்டபோதிலும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவருக்கு ‘இறப்பு
சான்றிதழ்’ வழங்கப்படுமா’ என்பது போன்ற விவரங்களையும் கேட்கலாம். வேலை
வாய்ப்பு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வேண்டும். கணவர் காணாமல் அல்லது
கைவிட்டுப் போனால், அவர் காணவில்லை என்கிற புகாரை உடனே அருகில் இருக்கும்
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில்(எஃப்.ஐ.ஆர்)பதிவு செய்ய
வேண்டும். அப்போதுதான், ஒருவேளை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தத்
தகவலும் இல்லை என்றால், `எஃப்.ஐ.ஆர்’ நகலைக்கொண்டு அணுக முடியும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிந்தவர்கள், ‘சீனியாரிட்டி அடிப்படையில்
முன்னுரிமை வழங்கப்பட்டு எனக்கு எப்போது வேலை கிடைக்கும்’ என்ற தகவலை,
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு மனு அனுப்பிப் பெறலாம்.மகளிர்
குழுக்களுக்கான சுயதொழிலுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்படும், எதன்
அடிப்படையில் கொடுக்கப்படும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது போன்ற தகவல்களை, மாநில அரசாங்கத்துக்கு
மனு அளித்துப் பெறலாம்.அரசாங்கம் சார்ந்த தகவல் பெற தலைமைச்
செயலகத்துக்கே அனுப்பலாம். ஆனால், அந்தந்த துறை சார்ந்த தகவலுக்கு,
அதற்கேற்ற துறையைத்தான் அணுக வேண்டும்.முகவரி தெரியவில்லை என்றால் உடனே
அவர்களுக்கு அனுப்பிவிடக் கூடாது. அதுமட்டுமின்றி, மகளிர் சுயதொழில்
குழுக்களுக்கு தரப்படும் தொகை, ஆட்சிக்கு ஏற்றவாறு மாறுபடும்.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்குபி.எஃப்தகுதியுடைமை
இருந்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்தே பள்ளி நிர்வாகம் ஒரு தொகையைப்
பிடித்து வைத்திருக்கும்.வேறு வேலைக்குச் செல்லும்போது, அதனை பள்ளி,
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அளித்துவிட வேண்டும். அது தொடர்பான தகவல்களை
அறிய, பி.எஃப் அலுவலகத்துக்கு `ஆர்டிஐ’ மனு அனுப்பலாம். அரசாங்கத்திடம்
இருந்து ஊக்கத்தொகையோ, மானியமோ பெறும் எந்த நிறுவனமும் இதற்குக் கீழே
வரும்.
- தீக்கதிர்

Saturday, July 02, 2016

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?
அவர்கள் யார்?
அவர்களின் பணி என்ன?
1.ஆர் எஸ் எஸ் என்பது –
ராசிடிரிய சேவை சங்கம் –
இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,
2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி
வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது
.
3,இதுதான் கோட்சே மூலம் காந்தியை
சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்புதான் ..
5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள்  தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள் .
6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.
7.இந்த அமைப்பில் ராணுவ தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினார்கள் இருப்பார்கள்
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்
8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க  சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராக ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்
9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட  “கதாபாத்திரங்களை , உணமையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-
ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் -அதை
உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று
பொய் சொல்லி , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி ,
பாபர் மசூதியை குண்டு வைத்து
இடித்து , இந்த நாட்டில் “பயங்கரவதத்தை
‘விதைத்தனர்
11. விநாயகர் ஊர்வலம் ஒன்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு
வந்து மத நல்லிணக்கத்தை சிதைத்தனர் –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கபடுகிறது ..
12, இவர்கள் அரை டவுசர் போட்டு
,கையில் தடியுடன் , பொது
சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக
முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள் ..
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்
13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்ச்சிகளை
கொடுப்பார்கள்
14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்
15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தம்
16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதை கண்டு கொள்ளாது .
17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்
.பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்
18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்
19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்துக்களை எதிர்க்கும் –
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யூனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வார்கள்
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களை கொலை செய்திருக்கின்றனர்
20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
” விஷ்வ ஹிந்து பரிசாத்,
பஜ்ரங் தல் ,
ஹிந்து முன்னணி,
ஹிந்துஸ்தான் விராத் ,
நிர்மான் சபா ,
ஹிந்து சபா ,
அகில பாரத் வித்யார்த்தி
பவன் எனற மாணவர் அமைப்பு , சேவாதல் மாநில
சுயாட்சிகொண்ட “சிவா சேனா ,
ரன்பீர் சேனா ( பிகாரில் நிலபிரபுக்கள் படை )
-அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி .
21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்று
கொள்ளாது மரியாதையையும் செய்யாது
22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்ற படவே இல்லை
23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது .
24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு
25- உரிமை — ஜனநாயகம் அதற்க்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .
26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி உள்ளது
26. உயர் சாதி – கிழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை
27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைபற்றி கொண்டனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
“யுவராஜ் கூட ஆர் எஸ் எஸ் அமைப்பின்
முக்கிய பிரமுகர் என்பது
குறிபிடத்தக்கது
28. இந்தியாவில் உள்ள அச்சு மற்றும்
தொலைகாட்சி ஊடங்கங்கள்,
ஆர் எஸ் எஸ்
ஆதரவாலர்கலால்தான் நடத்தபடுகிறது
29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . பாஜக கட்சியின்
மோடி – அமீத்சா எல்லோரும்
ஆர் எஸ் எஸ் அடிப்படை கோர் உறுப்பினர்கள்
30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>
31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்க கூடாது
-வேலைக்கு போக கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –
32.வெள்ளையர்களுக்கு எதிராக போரட திராணி இல்லாமல்
இந்த தேசத்தின் தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS
33.கோவில்களில் “பார்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பணர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால்
தீட்டு என்ற கொள்கையை அமுல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்
34.பாரத் மாதா கி ஜே! என முழக்கமிடுவார்கள்
வீதியெங்கும் பெண்களை
போகப்பொருளாகவே
பயன்படுத்துவார்கள் ஆர் எஸ் எஸ்

இந்த தேசத்துரோகிகளை பற்றி இன்னும் நிறைய இருக்கிறது,,,

கபாலியும் கொலையும்

நான்
கபாலி
திரைக் காவியம்
பற்றியும்

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும்
ஓயாது
மந்திரங்களோதும்
பலகோணத்து
புது படங்களை
பற்றியும்
பேசிக்கொண்டிருந்தேன்

இடையிடையே
அரட்டையும்
அங்கலாய்ப்புகளும்
அடுத்த சூப்பர் ஸ்டார்
தலயா தளபதியா?
என்கிற ஆராய்ச்சி
விவாதங்களுடனும்
அந்த பயணங்களில்

எனதருகில்
ஒரு தற்கொலை
ஒரு படுகொலை

கண்டும்
காணாமல்
நகர்ந்து விட்டேன்

உடனே
விமரிசனம் எழுதியாக
வேண்டுமே

அதுபற்றியல்லாமல்
திரைக் காவியங்களை
பற்றி
தல தளபதிகளை
பற்றி,,,

சுவா(தீ)க்களோ
வினுபிரியாக்களோ
ஜிஷாவோ
நிர்பயாக்களோ
நிர்வாணமாய்
பிணமாய்
கிடந்தாலும்

என் பக்கங்களை
நிரப்பியாக
வேண்டும்
என் விமரிசன
காணொளிகளை
ஏற்றியாக
வேண்டும்

சமூக நீதிகள்
செத்துக் கிடப்பதாய்
பேச
எனக்கொன்று
வாய்த்திருக்கிறது
சென்சார் போர்டு
என்கிற பெயரில்
அதுமட்டுமே
போதுமெனக்கு
பெண்ணியம்
பேசிடவும்
போர்க் கொடி
தூக்கிடவும்,,,

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி
வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை
,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு
ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில்
ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து
புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு
செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின்
மீது அக்கறையோடு செயல்பட்ட கம்யூனிஸ சீன புரட்சியாளர்தான் தோழர் மாவோ
எனும் மாசேதுங் . "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என சோஷியலிஸ வேட்கையினை
கம்யூனிஸப் பாதையை கொண்டு சீனத்தை செதுக்கினார் மாவோ, வெறும் சிற்பங்களாக
அல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்குள்ளும் சமூகம், சகோதரத்துவம், பெண்ணியம்,
சோஷியலிஸம், கம்யூனிஸமென தொழிலாளர் வர்க்கத்தின் அத்துணை உரிமைகளையும்
அவர்களுக்குள் புகுத்தி புரட்சிகர கம்யூனிஸத்தை சீன தேசத்திற்கு
மட்டுமல்லாது மற்ற ஏனைய உலக தேசங்களுக்கெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தத்தின்
ஆகப் பெரும் முன்னுதாரணமாய் எடுத்துச் சென்றவர் மாவோ. ஏனைய கம்யூனிஸ்ட்
தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள்
மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும்
விளக்கினார். சீனாவில் ஒருசக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன்
தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு
கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது
எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி
ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகுமுதலாளித்துவத்தையும்
இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும்,
தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில்
நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை
ஏற்படுத்தியதுமற்றுமொரு சாதனையாகும். அதனடிப்படையிலேயே மாவோயிஸத்தின்
பாதை கிராமங்களை நோக்கியதான பாதை என்பார்கள்.
அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத
சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ்
ஐக்கியப்படுத்தி ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான
சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை, விடுதலைக்காக போராடும் அனைத்துலக
மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.
சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை
எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில்
உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை
என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர
இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு
வழிகாட்டியாக மாவோ விளங்கினார். மாவோ சாதனையாளனல்ல உலக சரித்திரத்தை
புரட்டிப்போட்ட ஒரு சாதாரண கம்யூனிஸ பற்றாளன். அவரின் சாதனைகளை வெறும்
சாதகமாகவே பயன்படுத்துவது என்றுமே அபத்தமாக இருக்கும். புரட்சிகர
சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு ஒரு பகுத்தறிவாளனாய், புரட்சியாளனாய் மாவோவை
பின்பற்றுதலே உலகின் ஆகச் சிறந்த பல சாதனை புரட்சிகளுக்கு வழிகாட்டுதலாக
அமையும்.

- 26 December 2011 அன்று எனது பேஸ்புக் (facebook) பதிவிலிருந்து,,,

Friday, July 01, 2016

மிக சமீபத்தில்

மிக சமீபத்தில்தான்
நான் செத்திருக்க
வேண்டும்

ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று

யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன

அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்

விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்

நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்

அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,

கடவுளாக்கப்பட்டவன்

நானாகி
நிற்கிறேன்
யாருமற்ற
அடர் வனத்தில்

கனத்திருக்கும்
சிலுவையின்
சுமையினை
இறக்கி வைத்து
இயேசுவை போல

என் தேவனே
என் தேவனே
ஏன் என்னை
கைவிட்டீரென

கதறி அழுகிறேன்
கடவுளாக்கப்பட்டவனின்
கடைசி அலறலும்
கதறலும்
காதுகளில் விழாதென
கைகளால்
மூடிக்கொண்டது
அந்த அடர்ந்த வனம்

அதுவும் நல்லதுதான்
கடவுளை மறுப்பதற்கு
போதுமானதாய்
பொதுவானதாய்,,,

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...