Thursday, March 31, 2016

நடிகர் கமலஹாசனுக்கு பிரான்சின் ஹென்றி லாங்லாயிஸ் விருது!நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட நடிகர் கமலஹாசன் தனது நடிப்பின் மூலம் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனத்தை ஈர்த்தவர். திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பில் தனக்கென்னு தனி முத்திரை பதித்து வருபவர் ஆவர். சிறந்த நடிப்பிற்காக  4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட  பல இந்திய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளார். குறிப்பாக சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருபவர். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009 ல் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் குறிப்பிடத்தக்க இந்திய நடிகர்களில் நடிகர் கமலஹாசனும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பிறமொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமலஹாசனுக்கு ஹென்றி லாங் லாட்ஸ் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது இந்திய திரை உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் ஆற்றிய சேவைக்காக பிரான்ஸ் நாட்டிலுள்ள சினிமா அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவித்திருக்கிறது.  இது குறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததிருப்பதாவது : இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.எனது  குருநாதர் அனந்த் மூலமாக  ஹென்றி லாங் லாட்ஸ்-ஐ அறிந்திருக்கிறேன். அவருடைய சினிமா பணிகள்  அளப்பரியது.  அவர் பெயரில் இந்த விருது கிடைத்தது பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-- தீக்கதிர்

கல்வி காசு பணம் வியாபாரம்!ரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்...! -பள்ளிக் கல்வித் துறை
'மெகா' ஊழலும், கொள்ளையும் !
பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபலமான தனியார் பள்ளி அது. தனது மகன்
சுரேந்திரனை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்காகச்சென்றார் விவசாயி தியாகராஜன்.
பத்தாயிரம் கட்டணம், ட்யூஷன் பீஸ் தனி என பள்ளி நிர்வாகம்
சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினார். அவர் கொடுத்த பணத்திற்கு எந்த ரசீதும்
கொடுக்கவில்லை. ஒருநாள் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்று
சொல்லி, பள்ளி நிர்வாகம் கையெழுத்து கேட்டபோதுதான் தெரிந்துகொண்டார்,
தனது மகனைக் கல்வி உரிமைச் சட்டக் (RTE) கணக்கின்கீழ் கொண்டு
வந்துவிட்டார்கள் என்று. எவ்வளவோ போராடியும் பலனில்லை.
இதேபோல், வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர் ஒருவரின்
பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைத்தது. 'எதற்கோ கூப்பிடுகிறார்கள்' என
நம்பிச் சென்ற அவரிடம், ஒரு தாளில் கையெழுத்துப் போடச் சொல்லியுள்ளது
நிர்வாகம். எதற்கு என விசாரித்தபோதுதான், கல்வி உரிமைச் சட்டக் கதை
வெளியே வந்திருக்கிறது.மாணவரைச் சேர்ப்பதற்காக இருபதாயிரம் ரூபாய்
கட்டணத்தை கட்டியிருந்தார்மாணவரின் தந்தை. பெரிய போராட்டத்திற்குப் பிறகே
பணத்தைத் திருப்பித் தந்தது பள்ளி நிர்வாகம். இது எங்கோ பொள்ளாச்சியில்
நடக்கும் விவகாரம் அல்ல. தமிழகம் முழுவதுமே கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
என்ற பெயரில் தனியார் பள்ளிகள் போடும் தகிடுதத்த ஆட்டம் இது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆர்.டி.இ எனப்படும் கல்வி உரிமைச்
சட்டத்தின்கீழ் விண்ணப்பம் வேண்டும் என்று கேட்ட ஒரு பெற்றோருக்குக்கூட,
விண்ணப்பத்தையே கண்ணில் காட்டுவதில்லை. இந்தச் சட்டம் பற்றிப் பேசும்
பெற்றோரின் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்க மறுப்பதை வாடிக்கையாக
வைத்திருக்கிறார்கள். ஆனால், ஆர்.டி.இ படி 25 சதவீத இடத்தை
ஒதுக்கினார்கள் என்று இந்தப் பள்ளிகளுக்கு அரசு ஒதுக்கிய தொகை 97 கோடி
ரூபாய். இந்தப் பணம் முழுமையாகச் செலவிடப்பட்டுவிட்டது. இந்த மோசடியின்
பின்னணியில் கல்வி அதிகாரிகள் பலர் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
என்கின்றனர் கல்வியாளர்கள்.
" மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு
12(1)(சி)யின் படி நலிவுற்ற, பொருளாதாரத்தில்பின்தங்கிய மாணவர்களுக்கு 25
சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை
காலாவதியாக்குவதில் கல்வி அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள்.இதனால் ஒரு
மாணவருக்குக்கூடஇதன் பலன் சென்று சேரவில்லை" எனவும் கொந்தளிக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் ஒருவர், " சிறுபான்மை கல்வி
நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடத்தை
ஒதுக்க வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 முதல் சட்டம்
செயல்பட்டாலும்,2013-ம் ஆண்டு முதல் கட்டாயம் நடைமுறைப்படுத்தவேண்டும் என
தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இதன்பேரில் ஒரு இடம்கூட
நிரப்பப்படுவதில்லை என ஒரு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை
பேசினார். அந்தளவுக்குத்தான் ஆர்.டி.இ செயல்படுகிறது. மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் நிதி தருவதில்லை என்று சொல்லித்தான் இவ்வளவு
நாட்கள் காலம் கடத்தினார்கள். இதிலும், கொள்ளை அடிக்கலாம் என்பதைத்
தெரிந்து கொண்டு, மாநில அரசே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து
நிதி ஒதுக்கீடு செய்வோம் எனச் சொல்லி, 97 கோடி ரூபாயை
ஒதுக்கினார்கள்.இந்தப் பணத்தை கல்வி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட தனியார்
பள்ளிகளுக்குக் கொடுத்துவிட்டார்கள். மாணவர்களைப் போலியாகக் கணக்குக்
காட்டி பள்ளி நிர்வாகமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களிடம்
நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன.
'இத்திட்டத்தில்மோசடி செய்கிறார்கள்' என தொடர்ச்சியாக புகார் எழுந்ததும்,
ஆர்.டி.இ திட்டத்திற்காக தனியாக குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக்
குழு பள்ளியில் விசிட் செய்யும்போதெல்லாம், பெற்றோரை கூட்டி வந்து
கணக்குக் காட்டுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் பெற்றோரிடம், மாணவரின்
எதிர்காலத்தைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கும் மேல் மெட்ரிக் பள்ளி
இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் என எங்கு புகாரை
தூக்கிச் சென்றாலும், கண்டுகொள்வதில்லை. சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த
கட்டணத்தைவிட அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஆர்.டி.இ படி ஒரு
மாணவருக்கு 9,900 ரூபாய் கட்டணத்தை அரசு வழங்குகிறது. முப்பதாயிரம்
கட்டணம் வாங்கும் பள்ளிக்கு இதனால் இருபதாயிரம் இழப்பு ஏற்படுகிறது. சீட்
வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும்போது, பள்ளி நிர்வாகம் சொல்லும்
இடங்களில் பெற்றோர் கையெழுத்து போடுகிறார்கள். ஆர்.டி.இ கமிட்டி
ஆய்வுக்கு வரும்போதுதான் எதற்காக கையெழுத்து வாங்கினார்கள் என்ற விவரமே
தெரிய வருகிறது. நூதனமான முறையில் நடக்கும் இந்த மோசடிகளை பள்ளிக்
கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரணம். இந்த மோசடியில்
பெரும் பங்கு அவர்களுக்குப் போகிறது என்பதுதான்" என அதிர வைத்தார் அவர்.
ஆறு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பொறுப்பில் இருக்கிறார் சபீதா
ஐ.ஏ.எஸ். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதில் முதல் இடத்தில் இருக்கும்
சபீதா, மக்கள் மன்றத்தை அவமதிக்கும் செயல்களுக்கு குற்றாவாளிக் கூண்டில்
ஏற்றப்பட வேண்டும்.
-விகடன்

ஐரோம் சர்மிளா தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து விடுதலை!

மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் ஐரோம் சர்மிளா ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 16 ஆண்டுகளாக காந்திய முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த கோரிக்கைக்காக கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அப்போது தற்கொலை செய்ய முயன்றதாக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

உலக மகளிர் தினம் ஐரோம் ஷர்மிலாவுக்கு உதவாத நிலையில்,,,


பின்னர் மருத்துவமனையிலும் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்விந்தர் சிங், ஐரோம் சர்மிளாவை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தபோது நேரில் ஆஜரான ஐரோம் சர்மிளா, மணிப்பூரில் ஆயுதப்படையினருக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்தால், தனது உண்ணாவிரதத்தை கைவிட தயாராக இருப்பதாக கூறினார். தனது நோக்கம் நிறைவேறுவதற்காகவே தற்கொலை முயற்சியை ஆயுதமாக பயன்படுத்தியதாகவும், தனது உயிரை மிகவும் நேசிப்பதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Monday, March 28, 2016

தேசிய விருதுகள், விசாரணைக்கு மூன்று விருதுகள்

63வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த
நடிகருக்கான விருதினை பிகு படத்திற்காக "அமிதாப்பச்சனும்",
சிறந்த நடிகைக்கான விருதினை தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக
"கங்கனா ரனாவத்தும்" சிறந்த இயக்குநருக்கான விருதினை பஜிராவோ பன்சாலி
படத்திற்காக "சஞ்சய் லீலா பன்சாலியும்" சிறந்த திரைப்படமாக "பாகுபலி"
திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் "விசாரணை"
படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றது, தமிழில் வெளிவந்த விசாரணை
படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது
தமிழ் திரை உலகில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்திரகுமார் அவர்கள் எழுதிய நாவல்
லாக்கப். இந்த நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன்
விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். நடிகர் தனுஷின் வொண்டர்பார்
நிறுவனமும் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இந்த படத்திற்கு தமிழக
காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் பல
தரப்பினரும் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த திரைப்படம்
வெளியிடப்படுவதற்கு முன்னரே வெனிஸ் திரைப்பட விருதுக்கு அனுப்பப்பட்டு
வெனிஸ் விருதுக்கு தேர்வானது. இந்நிலையில் திங்களன்று விசாரணை படத்திற்கு
3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படத் தொகுப்பிற்கான தேசிய விருது விசாரணை படத்திற்கு மறைந்த
"கிஷோருக்கு" வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது
விசாரணை படத்தில் நடித்த "சமுத்திரக்கனிக்கு" வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
இசைஞானி "இளையராஜாவுக்கு" வழங்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா ஐந்தாவது
முறையாக தேசிய விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,

தனியார் துறையில் இடஒதுக்கீடு? மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி?

"டாக்டர் அம்பேத்கர் மீது உண்மையான மரியாதை இருக்குமானால் அவர் கண்ட
சமத்துவக் கனவு நிறைவேற தனியார்துறையில் இடஒதுக்கீட்டை பிரதமர்மோடி
அறிவிக்கட்டும்," என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்."அம்பேத்கர் 125வது
பிறந்தநாள்விழாவை பெரிதாகக் கொண்டாடப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது.
அவர் பிறந்த மாவூ கிராமத்திற்கு ஏப்ரல் 14 அன்று செல்லப்போவதாக பிரதமர்
அறிவித்திருக்கிறார். அம்பேத்கரின் லட்சியங்களை பாஜக நிறைவேற்றுகிறது
என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.
அம்பேத்கர் விழாவை உடலில் அணியும் பகட்டான ஆபரணமாகப் பயன்படுத்தாமல்,
தனியார்துறையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவீர்" என்றார்
யெச்சூரி.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமையன்று
(மார்ச்26) சென்னையில், அம்பேத்கர் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி "உயர்
கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளை ஒழித்திட…" என்ற தலைப்பில்
சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நிறைவுரையாற்றிய யெச்சூரி
இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையின் சில பகுதிகள் வருமாறு:கடந்த
ஓராண்டில், தங்களது உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள்மீதான
தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குபோடப்படுகிறது. கல்வி வளாகக் கொலையாக
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை நடக்கிறது.
இந்த ஓராண்டில் நாட்டின் பல பகுதிகளிலும் சாதி ஆணவக்கொலைகள் ஒரு
பாய்ச்சலாக அதிகரித்திருக்கின்றன.பாஜக, அதனை இயக்கும் ஆர்எஸ்எஸ் இரண்டுமே
அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேரெதிராகவே செயல்படுகின்றன. நாட்டின் அனைத்து
மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தர் குடியரசுத்தலைவர்தான். அவருடைய
தலைமையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத்
பல்கலைக்கழகத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறது'எச்ஆர்டீ' என்பது 'ஹியூமன்
ரிசோர்சஸ் டெவலப்மென்ட்' – அதாவது மனித வள மேம்பாட்டு அமைச்சகம், இப்போது
'ஹிந்து ராஷ்ட்ரா டெவலப்மென்ட்' அமைச்சகமாக மாறியிருக்கிறது.பாஜக
ஆட்சியில் நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறிவிடவில்லை. பளபளப்பான
நிகழ்ச்சிகள்தான் நடந்திருக்கின்றன. இவர்கள் பெரிதாகச் சொன்னது
போல்அந்நிய முதலீடுகள் வந்து குவிந்துவிடவில்லை. அதை மறைக்க இப்படி
தேசியவாதம் கிளப்பப்படுகிறது.
உண்மையான தேசியம் என்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
வளர்ப்பதுதான். சமத்துவம் இல்லாமல், சகோதரத்துவம் இல்லாமல் சுதந்திரம்
இல்லை என்றார் அம்பேத்கர். கம்யூனிஸ்ட்டுகளும் அம்பேத்கரும் சந்திக்கிற
இடம் இதுதான்.இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள இருப்பதை அறிந்து
ஒருவர் வேண்டுமென்றே எனது கைப்பேசிக்கு "பாரத் மாதா கீ ஜே" என்று
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த முழக்கத்தில் எனக்கொன்றும்
சங்கடம் இல்லை. அவருக்கு நான், "இன்குலாப் ஜிந்தாபாத்"என்று பதில்
குறுஞ்செய்தி அனுப்பினேன்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்போது இந்திய
மாணவர் சங்கம் வெற்றிபெற்றிருக்கிறது. இப்போது அந்த வளாகத்தில் 'லால்
சலாம்' (செவ்வணக்கம்) என்றமுழக்கம் ஒலிக்கிறது. 'ஜெய் பீம்' என்ற
முழக்கமும் எழுகிறது. இந்த இரண்டு முழக்கங்களோடும் இணைந்ததே பகத்சிங்
எழுப்பிய 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சிஓங்குக) முழக்கம். இவையும்
தேசப்பற்று முழக்கங்கள்தான். இந்த முழக்கங்கள்தான் அம்பேத்கர் முன்வைத்த
சமத்துவ லட்சியத்தை அடைய உதவும். பொது எதிரியை வீழ்த்த இந்த முழக்கங்கள்
தேவை.மதவெறி சார்ந்த இந்துராஷ்டிர நோக்கம்தான் அந்தப் பொது
எதிரி.ஒருவருக்கு ஒரு வாக்குரிமை என்பதுஉறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அம்பானிகள் முதல் எளியோர் வரையில் யாரானாலும் ஒரு வாக்குதான்.
ஆனால் இதன் மூலம்ஒரே மனிதருக்கு ஒரே மதிப்பு என்ற லட்சியத்தை எட்டிவிட
முடியுமா? இந்தியாவில் இன்று அமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியனர்கள் 100
பேர் இருக்கிறார்கள். பில்லியனர் என்றால் இந்தியப் பண மதிப்பில் ஒரு
லட்சம் கோடி ரூபாய். இந்த100 பேரின் சொத்து மதிப்பு, இந்தியாவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவு. இதே நாட்டில்தான்,
அன்றாடம் தங்கள் குடும்பத்திற்காக உழைத்தாக வேண்டியவர்களில் 90
சதவீதத்தினருக்கு, மாதம் 10,000 ரூபாய் கூட வருவாய் இல்லை என்ற நிலைமை.
இதுதான் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மதிப்பா?மோடி அரசின் கொள்கைகளால்
விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. தொழில்கள் முடங்கிப்போயிருக்கின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறுகின்றன. சென்னை அருகில் நோக்கியா
நிறுவனம் மூடப்பட்டது இப்படித்தான். இப்படிப்பட்ட கொள்கைகள்தான் தேச
நலனுக்கு எதிரானவை; மாணவர்களின் முழக்கங்கள் அல்ல.அரசமைப்பு சாசனத்தை
அறிமுகப்படுத்தியபோது அம்பேத்கர், "வரலாறு மறுபடி பழைய நிலைக்குத்
திரும்புமா, நாம்சுதந்திரத்தை இழப்போமா" என்ற கேள்விகளை முன்வைத்தார்.
"இந்திய மக்கள் தங்களுடைய மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து
அதற்கெல்லாம் மேலானதாக நாட்டை வைப்பார்களானால் நாட்டைப்
பாதுகாப்பார்கள்," என்று அவரே பதிலளித்தார்.பாஜக-வும் அதன் சகோதர
அமைப்புகளும் ஒரு மதம், ஒரு கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவற்றை விட மேலானதாக
முன்வைக்கின்றன.
இதை விமர்சிக்கிறவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள்
சுமத்தப்படுகின்றன. இரண்டு இளைஞர்கள் பசுக்களைக் கடத்துகிறார்கள் என்று
அடித்துக்கொல்லப்பட்டு தூக்கில்தொங்கவிடப்பட்டார்கள். பசுக்களைப்
பாதுகாக்கட்டும். ஆனால் மனிதர்களைக் கொன்றுதான் பசுக்களைக்
காப்பாற்றுவீர்களா?இந்த நிலைமைகள் தொடரும் என்றால், அம்பேத்கர் கனவுகள்
புத்தகங்களில் மட்டுமே இருக்கும். உண்மையான இந்தியாவில் சமத்துவமற்ற
நிலைமைகள்தான் நிலைபெறும். அம்பேத்கர் 125வது பிறந்தநாள் விழாவில் இதுவே
மையமான செய்தி.மகாத்மா ஜோதிபா புலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய
தலைவர்கள் மனிதர்களின் சம மதிப்புக்காக லட்சக்கணக்கான மக்களைத்
திரட்டினார்கள். ஆனால்இன்றும் மனிதர்களே கையால் துப்புரவுப் பணியில்
ஈடுபடுவது உள்ளிட்ட
பாகுபாடுகள் சாபக்கேடு போல் தொடர்வது ஏன்? இட ஒதுக்கீடு ஆட்சியாளர்களின்
பிச்சையோ, கருணையோ அல்ல.
அது நெடும்போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட உரிமை. ஆனால், தலித் மக்கள்,
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோரின் சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகப்
போராடாமல், சமூக நீதியை நிலைநாட்டிவிட முடியாது. இந்த மக்களின் பொருளாதார
வலிமையை உறுதிப்படுத்துவதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த
முடியும்.பொருளாதார ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவது, சமூக
ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்ற இரண்டு கால்களில் நாம்
நின்றாக வேண்டும்.
"நீலவானத்தில் சிவப்பு நட்சத்திரம்" என்று குறிப்பிட்டார்கள்.
'விப்ஜியார்' எனப்படும் வானவில்லின் ஏழு வண்ணங்களில், நீல வண்ணக்
குடும்பத்தைச் சேர்ந்தவயலட் (ஊதா) ஒரு பக்கமும், ரெட் (சிவப்பு) இன்னொரு
பக்கமும் இருக்கின்றன. ஆம், சிவப்பு, நீலம் ஆகிய இரண்டிற்கும் இடையேதான்
இதர அனைத்து வண்ணங்களும்!இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது
ஆங்கில உரையை பாரதி புத்தகாலயத்தின் ப.கு. ராஜன் தமிழாக்கம் செய்தார்.

Sunday, March 27, 2016

பேசும் இதயம் 6

உயிரெழுதும்
கவிதையில்
உறக்கம்
தொலைத்து
நிற்கிறேன்
யாரிடமோ
எனது
புன்னகை,,,
___________

உணவு , உறக்கம்
அமைதி,
ஆத்மார்த்தமென
அனைத்தையும்
துறந்து
ஒற்றைத் தாமரையில்
என் நிழலாடுகிறது
கேட்டு விடு
தாராளமாய் தருகிறேன்
நானென்பதை தவிர,,,
என்கது வேண்டும்
நம் காதல்
நினைவுகளை
சுமக்க,,,
___________

நீண்ட நேரமாய்
அழுது அழுது
வற்றிய என்
உப்பற்ற கண்ணீரை
கேட்கிறது
நதியிலாடும் நாணல்
நீ
வருவாயென
நாணலுக்கு
சொல்லியிருந்தேன்,, ___________

என் வலது
தோளில்
சாய்கிறாய் நீ
இடது தோளில்
நம் காதல்
இளைப்பாருகிறது,,,
___________

நான்!
ஏற்றுக்கொள்ளாத
வரையில்
உன் காத்திருப்புகள்
இருக்குமாயின்
நீயென்றோ
தொலைத்திருக்க கூடும்
என்னை,,,
தெரியுமா உனக்கு?
நிராகரிப்பு என்பதில்
இருந்து என்றோ
உனக்கு மட்டும்
விடுதலை
அளித்திருக்கிறேன்
நிராகரிப்பின்
வலி உணர்ந்தவள்
நானென்பதால்
___________

விழுதுகள்
முத்தமிடுகையில்
வேர்களுக்கும்
வியர்க்கத்தான்
செய்கிறது
ஆலமரம் இப்போது
ஆனந்தமாய்
பூத்து விடுகிறது,,,
___________

அதிக பட்சமாக
உன்னை வதைக்கும்
வார்த்தைகளை
வேண்டாமென்றே
தள்ளி வைத்து
விடுகிறேன் நீயழுதால்
நானும் அழக்கூடும்
என்பதாலோ என்னவோ!
___________

உன்னுடனான
எந்த சமாதான
உடன்படிக்கையும்
என்னிடமில்லை
சிலதுளிகள்
நீ மௌனமாய்
இருந்தாலும்
என் கோபம்
பொசுக்கி விடும்
உன்னை
அறிந்தும் அதுதான்
வேண்டுமென்கிறாய்
ஓரக்கண்ணால்
என் கோபத்தை
ரசிக்க பிடிக்கிறதோ
உனக்கு
___________

அச்சு பிசகாமல்
என்னை வார்த்தெடுத்த
உனது உயிரணுவிற்கு
ஒருபோதும் நான்
வலியை தந்துவிட
மாட்டேன் இருவுயிரில்
என்
இருதய துடிப்புகளை
பகிர்ந்தளிப்பதே
கடமையென
கருதுகிறேன்
தந்தையாகிய வரம்
வார்ப்புகளின்
வண்ணங்கள் தானே
என்னவளே!
___________

இதுவரை
வாழ்ந்தேன்
எனும்
இறந்த காலங்களில்
என்றுமே
முதியோரில்லங்கள்,,,
___________

யாருக்கும் புரியாத
உன் கயல்விழிக்
கண்ணசைவு
அர்த்தங்களை
அழகாய் மனதிலேற்றும்
நானே உனக்கானவன்
மட்டும்,,,
___________

உயிர்க் காற்றாய்
எனை
சுற்றி வந்து
உணர்வுகளை
பிடுங்கி வார்த்தைகளில்
பேசும் என் கவிதையே
நீயற்ற பொழுதுகளில்
என் மனம்
இறந்து விடுகிறது
உன்னோடு நானிருந்த
பொழுதுகளை
உயிரோடு
ஏந்திக் கொள்கிறேன்
புது வசந்தங்களை
தேடிப் பிடித்துவிட
___________

உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் கவிதை
மலர்களால்
அலங்கரிக்கப்படுகிறது­,,,
___________

நீ சுமக்கும்
சிலுவையில்
எனது பெயரும்
எழுதியிருக்கிறது
ஏசய்யா,,,
லாவகமாக நானும்
மன்னிப்பு கேட்கிறேன்
திரும்ப திரும்ப
பாவங்களை
செய்துக் கொண்டு,,,
___________

தோழனாய் இருந்து
என் ஆத்மாவின்
அசைவுகளை உணர்ந்து
அதற்கேற்றது போல்
ஆறுதல் சொல்கிறாய்
சேவகனல்லாடா
நீயெனக்கு
செங்காந்தள் மலரடா
சீக்கிரம் வா!
நாம் காதல் செய்வோம்,,,

___________***__________

Saturday, March 26, 2016

மலம் தின்ன ஆசையா!

ஐந்தாண்டுகள்
கசாப்புக் காரன்
சந்தையில்
விலைபோகும்
வெட்டப்பட்ட ஆடுகளின்
உயிரற்ற தலைகளா
உங்களுடையது

ஐந்தாண்டுகள்
வட்டியும் குட்டிபோட
மீட்கவும் வக்கற்ற
அடகுத் தலைகளா
உங்களுடையது

அதோ!
நாங்கள்தான் விடியலை
தரும் தேவதூதர்களென
கொஞ்சமும் கசங்காத
வெண்ணிற ஆடைகளின்
பின்னால்
ஒளிந்திருக்கும்
அழுக்கு பிண்டங்கள்
ஒவ்வொரு வீடுகளாய்
முற்றுகையிடுகின்றன

ஆம்!
அவைகளேதான்
அரசியல் போர்வையில்
வியாபார கடைவிரிக்கும்
முதலைகள் கூட்டங்கள்

மதுவூற்றி
பணம் திணித்து
மாய வாக்குறுதிகளை
நெய்யொழுக
வாயில்
ஊட்ட வருகின்றன
அவைகள்

தலைக்கொருவிதமாய்
விலையும்
நிர்ணயித்தாகிவிட்டது
உங்களின் ஓட்டுகள்
விலையேற்றம்
அவைகள் பெருமையாக
பேசும்

தன் வயிறு
பெருத்தாக வேண்டுமே
பொய்களை மூட்டையாக
கட்டுகின்றன அவைகள்

நில்! கவனி!
பின்னால்
பெருங்கோடரிகளை
மறைத்து வைத்திருக்கும்
அவைகள் உங்களை

மலம் தின்ன வைக்கும்
ஓட்டுகளை காசாக்கி
ஒழுகும் வீடுகளை
எட்டி உதைக்கும்

அவைகளை
நம்பி! நம்பி!
ஏமாந்தது போதும்

ஓட்டுரிமையாளனே
உழைக்கும் கரங்கள்
உங்களுடையது

உற்றுப்பார்!
உனது கைவிரல்
ரேகைகளில்
காய்த்திருக்கும்
அத்தனை வடுக்களும்
உழைப்பில்
விளைந்தவையே

கிள்ளிப்பார்!
வலிக்காது உனக்கு
ரத்தம் சுண்டிப்போன
தேகமுனக்கு

பார்வையை
அவைகளிடம் திருப்பு
கைகளை ஆராய்ந்துவிடு
ரேகைகளில் ரத்தம்
ஜொலிக்கும்
அவைகளுக்கு

வேற்றுமை
புரிந்ததா உனக்கு?
உழைப்பை சுரண்டும்
கரங்கள்
அவைகளுடையதென
அடுத்த வினாடியே
தெரியவரும்

உணர்ந்து உனது
உழைப்பிடம் பேசு
உனக்கு உணவளிக்கும்
ஆயுதங்களிடம்
ஆலோசனை கேள்

தெளிவாக
எழுதி வை
உன் வீட்டுக் கதவுகளில்
தினமும் கோலமிடு
உன் வீட்டு வாசலில்

"என் ஓட்டு
விற்பனைக்கு இல்லை"
எனும் ஆழமான
வாசகத்தை

அவைகள் படித்துவிட்டு
புத்தி மாறட்டும்
உனது சாக்கடையை
நீயே சுத்தப்படுத்து
அரசியல் ஒரு சாக்கடை
என்போரை செருப்பாலடி

எல்லாம் மறதியாகி
மலம் தின்னத்தான்
ஆசை உங்களுடையது
எனில் துர்நாற்றம்
அவைகளிடத்தில்
இல்லை
விரும்பி வாயில்
விழுங்கி அசைபோடும்
உங்களிடம்தானே
வீசும் விசமாய்,,,

Thursday, March 24, 2016

சுடு(ம்)காடுகள்,

தேகமது
செல்லரிக்கும்
எலும்புகளோ
கதை பேசும்
கல்லறைகள்
முகம் சுளிக்கும்
சுமக்கும் மண்ணோ
பதற்றமாகும்
தன் வெளியில்
காற்றோ
துர்நாற்றம் தெளிக்கும்
மிருகமாக
இவன் ஆனானென
மரணமே
சொல்லிவிட்டதே
வாழ்தலில் மனிதனாக
உயிர் வாழ்தலும்
சிறந்ததே
சிந்திக்க மறந்தாயோ
சிரிக்கிறதே
சுடு(ம்)காடுகள்,,,

Wednesday, March 23, 2016

"பேபி" கையால் ரொட்டி வேண்டும் - பகத்சிங்

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள்.
"பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார்.
காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர்
தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து
வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக்
கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில்
சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால்,
ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று
சொன்னார் பகத்சிங். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது லாலா
லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான பிரிட்டிஷ் காவலதிகாரியைச்
சுட்டுக் கொன்ற காரணத்துக்காகவும், பாராளுமன்ற வெடிகுண்டு
தாக்குதலுக்காகவும், பொய்வழக்கான கொள்ளை, திருட்டு என வெள்ளை ஆட்சி
புனைந்த வழக்குகளால் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரும்
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் 1931, மார்ச் 23-ஆம் தேதி
தூக்கிலிடப்பட்டனர். இதில் பாராளுமன்ற வெடிகுண்டு தாக்குதலை இன்குலாப்
ஜின்தாபாத் முழக்கத்தோடும் ,தார்மீக பொறுப்போடும் ஏற்றுக்கொண்டு
குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். போலவே தூக்கிலிடும் முன்பு இறுதியாக அவரது
நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக "மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து
விடு 23 வயதிலேயே சாகவேண்டுமா, இனி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள அரசு
உத்திரவாதம் அளித்துள்ளது" என்று சொல்லவைத்தது வெள்ளைக்கார அரசு
அதற்கு பகத்சிங் ஒரு பார்வையத் தான் பதிலாகத் தந்தார். அந்தப் பார்வையின்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு. இன்று (23.3.2016) அம்மூவரின் நினைவு நாள்.

அப்படியே அந்தமானுக்குப் பயணமாவோம்,,,

சிறைவார்டன் பொதுவாக ஒரு அறிக்கை ஒன்றை சிறையில்
பொதுமண்டபத்தில்ஒட்டுகிறார், அதில் ":இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடமாட்டேன், மனப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி எனது
குடும்பத்தார் ஒரு சாட்சிக்கடிதத்துடன் வழங்குகிறேன் என்று
எழுதித்தரவேண்டும், அப்படித் தந்தவர்களுக்கு உடனடியாக சிறையிலிருந்து
விடுதலை செய்ய பிரிட்டீஷ் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று அந்த
அறிக்கையில் உள்ளது,
460 சிறைக்கைதிகளில்வெறும் 7 பேர் மட்டுமே எழுதிக்கொடுத்து அந்தமான்
சிறையிலிருந்து விடுதலையானார்கள். அதில் சாவர்கரும் (RSS) ஒருவர். "பாரத் மாதா
கி ஜெய்" என்பதற்கும்
"இன்குலாப் ஜின்தாபாத்"
என்பதற்குமான புரிதலை இனி அவரவர் பார்வைக்கே விட்டுவிடுதல் நல்லது.

சாதி ஏன் ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்

"பிறர் உங்களை பள்ளர், பறையர் என்று சொல்லி நீங்கள் கேவலமானவர்கள் என்று
கருதப்பட்டால் அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்று நான் சொல்வேன்.
அவ்வாறு உங்களை கேவலமாகக் கருதுபவர்களுக்குள்ள­ பெயரை விட உங்கள் பெயர்
கேவலமானதல்ல... யாரேனும் என்னை பள்ளர் பறையர் என்று அழைப்பது மேலா -
சூத்திரன் என்று அழைப்பது மேலா என்று கேட்டால் சூத்திரன் என்று அழைக்கக்
கூடாது என்று சொல்வேன்
ஏனென்றால் சூத்திரன் என்ற பெயர்தான் இழிவானதாகும். பள்ளர் பறையர்
என்பவராகிலும் சொந்தத் தாய் தகப்பன்களுக்குப் பிறந்த வர்களாகிறார்கள்...
ஆனால் சூத்திரர் என்பவர்களோ பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்று
அமைக்கப்பட்டு போய்விட்டது... இப்போது உள்ள ராஜாங்கத் துறையின்
வித்தியாசத்தால்வேண்ட­ுமானால் அப்படி இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம்
சாதியை மதத்திலிருந்து பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு
முடியாதவரையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுக பின்னிக்
கொண்டிருக்குமேயானால்­ அந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும்.
முன்னிருந்த அந்த உயர் சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றைஒன்று
பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைத்துப் பின்னிக்
கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள்
அதனால் சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப் படுகிறதே என்று
பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து
சாம்பலாக்க வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம்
இருக்கிறது. அதாவது மதமானது வேதம் புராணம் என்பவைகளுடன் கட்டிப்
பிணைக்கப்பட்டிருக்கி­றது. அதனால் இந்த வேதம் புராணங்களை மதத்திலிருந்து
பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால்
இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியததுதான்...
ஆனால் இந்த வேதம் புராணம் கடவுளுடன் சேர்த்துக் கட்டி
வைக்கப்பட்டிருக்கிறத­ு. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதால்
அந்தக் கடவுள் தலையிலும் கை வைக்கத்தான் வேண்டியிருக்கிறது...­ வேதத்தை
அசைத்தால் கடவுளுக்கு ஆட்டம் கொடுக்கும்..பெருத்த சங்கடம் ஏற்படும்.
கடவுளை அசைப்பதா என்று பயப்படக் கூடாது. எனவே சாதி மதம் வேதம் கடவுள்
எல்லாவற்றையும் ஒழித்துதான் ஆக வேண்டும்..."
( 29.09.1929 ல் திருச்சியில் சாதி ஏன் ஒழிய வேண்டும் என்று பேசியது)
-பெரியார் பரப்புரை
Viruthagiri A

பகத்சிங் நினைவு நாளில் எங்களின் முழக்கமும்,சபதமும்,

இன்று தோழர் பகத்சிங் அவர்களின் நினைவுநாள்
(மார்ச் 23, 1931) ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சிக்கு எதிராகவும் இந்திய
சூழலியல் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் "நான் ஏன் நாத்திகனேன்" எனும்
மிகப்பெரிய பொக்கிஷ நூலை தன் தண்டனை காலத்திலேயே எழுதி, தூக்குமேடையை
முத்தமிட்டு முழங்கிய அந்த "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கத்திற்கு
மத்தியில் முதலாளிய ஏகாதிபத்தியம் மிரண்டடித்து ஓடித்தான்போனது, காலங்கள்
மாறினாலும் காட்சிகள் அப்படியே உயிர்த்திருப்பது இந்தியாவின் சாபக்கேடே
அன்றி வேறில்லை, தோழர் பகத்சிங் வெள்ளை ஆட்சிக்கு எதிராக மட்டும் கலகம்
செய்யவில்லை, ஆண்டாண்டு காலமாக இந்தியத்தில் புரையோடிருக்கின்ற
பார்ப்பானிய சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கலகம் செய்தார்
என்பதில் இருக்கிறது அவரின் உண்மையான தேசபக்தி ஆகவேதான் "பாரத் மாதா கி
ஜெய் " என பார்ப்பானிய ஆர்எஸ்எஸ், பிஜெபி, முழக்கமிடுகின்றபோதெல­்லாம்
தோழர் பகத்சிங்கின் "இன்குலாப் ஜிந்தாபாத்" நேரடியாக மோதி
பார்ப்பானியத்தை ஓடவிடுகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய
இந்துத்துவத்தின் பார்ப்பானிய ஆட்சிகால
மனித உரிமை மீறல்களையும், சாதி இந்துக்களின் வெறிச்செயல்களையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம், ரோகித் வெமுலாவை கொலை செய்து தூக்கில்
மாட்டி நாடகமாடிய கும்பல்கள்,கன்னையா குமாரை தேச விரோதியென முத்திரை
குத்தும் கும்பல்கள், அட்லக்கை கொலை செய்த கும்பல்கள் என இந்த சாதி
இந்துக்களான பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்,பிஜெபி கும்பல்களின் வன்முறை மற்றும்
மனிதக்கொலைகள் இரண்டாண்டு ஆட்சி கால லட்சனத்தை வெளிச்சமிடுகிறது.
சமத்துவம்,சகோதரத்துவ­ம் விரும்பும் இந்தியத்தில் இன்று எங்கு காணினும்
சாதிவெறி,மதவெறி,பெண்­ணடிமை,பாட்டாளி விவசாய தொழிலாளிகள் தற்கொலை,கடன்
வாங்கிய தொழிலதிபர்கள் தலைமறைவு,சாதி ஆவணக்
கொலைகள்,தீண்டாமைகள்,­வன்புணர்வு,மனித உரிமை மீறல்,தனியார் மயக் கொள்கை,
கல்வி வியாபாரம், தாராளமயக் கொள்கை, உலகமயமாதல், நில அபகரிப்பு, அணுவுலை
ஆதரவு, இத்யாதி இத்யாதி என நீளும் அன்றை வெள்ளை ஆட்சிக்கு சற்றும்
குறைவில்லாமல் கட்டவிழ்த்து சுதந்திரமாக சுரண்டலை
ஈடுபட்டுக்கொண்டிருக்­கும் இந்தியத்தை ஆளும் பிஜெபி, மற்றும் ஆர்எஸ்எஸ்
பிறகு அவர்களுக்கு ஒத்தூதி உழைக்கும் அரசு அதிகாரிகளான ஆட்சியர்கள்
மற்றும் காவல்துறைகளுக்கு எச்சரிக்கையை பகிரங்கமாக தெரிவித்துக்
கொள்கிறோம் . ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தூண்டுதலின்
மத்திய அரசு ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித்வெமுலா மீது ஒருதலைப்பட்சமான
நடவடிக்கை எடுத்து. கல்வி பயிலும் வாய்ப்பு மற்றும் நீதி நெறிகளுக்கு
மாறாக ரோகித்வெமுலாவிற்கு முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் . இந்துத்துவ
சாதி ஆதிக்க கொடுமைகளால் ரோகித்விமுலா தற்கொலை செய்து கொண்டார்.
ரோகித்வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும்
துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் அப்பா ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் எங்கள் பகத்சிங்கின் மாணவர்களை நேற்று (மார்ச்22.2016)
கண்மூடித்தனமாக தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளீர்கள்­. ஒன்றை தெளிவாக
புரிந்துகொள்ளுங்கள் அரசப் பயங்கரவாதிகளே, உங்களின் "பாரத் மாதாகி ஜெய்"
முழக்கத்திற்கு முன்னால் எங்களின் "இன்குலாப் ஜிந்தாபாத்" "ஜெய்பீம்"
முழக்கங்கள் ஒருபோதும் மண்டியிடாது. நாங்கள் மார்க்ஸின் பேரக்குழந்தைகள்,
லெனினின் வளர்புகள், அம்பேத்கரின் பிள்ளைகள், பெரியாரின் பரப்புனர்கள்,
பகத்சிங்கின் மாணவர்கள் என்பதை நீங்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை,
அன்றைய நாள் வரும்போது எங்களின் கைகளில் கல்வி ஆயுதமாகும், உங்களின்
கரங்களில் விலக்கிடப்படும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். தமிழக
ஆளும் திராவிட கட்சிகளே இப்போதும் சொல்ல கடமைபட்டிருக்கிறோம் நினைவில்
கொள்ளுங்கள் "பெரியாருக்கு பின்னால் திராவிடம் திருடப்பட்டு விட்டது"
என்பதை உரக்கச் சொல்வோம் உரிமைகளை மீட்டெடுப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
ஜெய்பீம்!
திராவிடத்தால் எழுந்தோம்!

Tuesday, March 22, 2016

தேசியப் பஞ்சாலை கழகத்தில் கோடிக்கணக்கில் ஊழல்

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான தேசியமயமாக்கப்பட்ட என்டிசி பஞ்சாலைகளில்
கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில்
ஈடுபட்ட அதிகாரிகள் மீது தேசிய ஊழல் கண்காணிப்பு குழு விசாரணை மேற்கொண்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சி.ஐ.டி.யு கோவை மாவட்டப் பஞ்சாலை தொழிலாளர் சங்க
அலுவலகத்தில் சிஐடியு மாவட்டத் தலைவரும் பஞ்சாலை சங்கப்
பொதுச்செயலாளருமான சி.பத்மநாபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது
அவர் கூறுகையில்,
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்பட்ட கோவை மாவட்டத்தில் 1966,
67 ஆம் ஆண்டுகளில் 27 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டது­. இதில்
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில்
ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒருபகுதி
பஞ்சாலைகள் இழுத்து மூடப்பட்டது. மற்றொரு பகுதி பஞ்சாலைகள் அதிகாரிகளின்
சுயநலத்தால் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் முறைகேட்டினால் தொடர்ந்து
நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கோவையில் இயங்கும் ரங்கவிலாஸ் பஞ்சாலையில் ஒரு
கோடியே 75 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது அம்பலமாகி உள்ளது.
இதில் குறிப்பாகக் கழிவுப்பஞ்சு விற்பதில் ஏறத்தாழ ஐம்பது லட்சம் மோசடி
நடைபெற்றுள்ளதாகவும்,­ அதேபோலப் பேக்கிங் வேலைகளுக்கு ஒரே பெயர் உள்ள
இரண்டு நபர்களுக்குத் தனித்தனியாக 10 லட்சம் ரூபாய் காசோலைகள்
வழங்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாகவும்,­ கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக
இந்த மோசடி தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின்
அடிப்படையில் தற்போது அலுவலகத் தற்காலிகப் பணியாளர் நந்தகோபால் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவு­ம், மேலும், கண்காணிப்பாளர்
தமிழ்ச்செல்வன், கணக்கு அதிகாரி இராமகிருஷ்ணன் ஆகியோர் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். இதேபோல அலுவலர் வடிவேல், காசாளர் நாகராஜ் ஆகியோர்
மீது போலிஸ் விசாரணை, மற்றும், ஆலைமேலாளர் கார்த்திகேயன் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளார். மேலும், ரங்கவிலாஸ் பஞ்சாலையின் பொதுமேலாளர் சந்திர
மௌலி சஸ்பென்ஸ் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றும்
எந்தத் தகவலும் வெளியே வராமல் அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை கமிசன்
அமைத்து விசாரித்து வருகிறார்கள். நடைபெற்ற ஊழல் முறைகேடு என்பது
மேலதிகாரிகளின் துணை இல்லாமல் நடைபெற்று இருப்பதற்கான வாய்ப்பில்லை எனச்
சி.ஐ.டி.யு. கருதுகிறது. ஆகவே தென்மண்டல அதிகாரிகள் இந்த ஊழல் குறித்த
விசாரணையை மேற்கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. மேலும், பல ஆண்டுகள்
இதுபோன்ற முறைகேடுகள் செய்துவருவதும் அம்பலமாகி உள்ளது என்றும், இது
குறித்த புகார் அளித்தால் புகாரைப் பெருவது திட்டமிட்டுக்
காலதாமதப்படுத்துவதாக­வும் சி.பத்மநாபன் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வந்த 27 பஞ்சாலைகளில் நஷ்டம் ஏற்பட்டு
இருபது பஞ்சாலைகள் மூடப்பட்டுத் தற்போது ஏழு பஞ்சாலைகள் மட்டும் இயங்கி
வருகிற நிலையில், மேலும், இதுபோன்ற நஷ்டக் கணக்கு காட்டி இருக்கும்
பஞ்சாலைகளும் மூடப்பட்டால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை
இழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். மத்திய ஊழல் கண்காணிப்புக்குழு
இதனை விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி
அனைத்து ஆலைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மற்றத்
தொழிற்சங்கங்களோடு இணைந்து பேசி வேலை நிறுத்தம் உள்ளிட் நடவடிக்கைகளில்
ஈடுபட உள்ளதாகச் சி.பத்மநாபன் தெரிவித்தார். இந்தப் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் சி.ஐ.டி.யு கோவை மாவட்ட பஞ்சாலை சங்க தொழிலாளர் சங்க மாவட்ட
தலைவர் மனோகரன், பொருளாளர் இராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-தீக்கதிர்

Monday, March 21, 2016

என் அன்புக் காதலனே!

உன் விழிகளில்
தடம் பதித்து
மார்புக்குள்
முகம் புதைத்து
தேடுகிறேன் காதலை

சொட்டச் சொட்ட
தேனொழுகும்
இதழ்களை மெல்லக்
கவ்வி பிடித்து
காதோரத்து
முடிகளையும்
கோதிவிட்டு
நெருங்க நெருங்க
தேடுகிறேன் காமத்தை

மீசை முடியில்
ஓராயிரம்
வார்த்தைகளை
சுமந்தவன் நீ!

வெட்டிய குறுந்தாடியில்
குடிகொள்கிறதென்
அமைதியற்ற
திருவிளையாடல்

முகத்தை திருப்பாதே
முடிந்தவரை
என்னை பார்த்து ரசி!

எதையும் மறைத்து
விடாத எனது
நிர்வாணத்தில்
எப்போதும் தூய்மை
படிந்திருப்பதாய்
அடிக்கடி
வர்ணித்தெழுதுவாய்
வாய் ஜாலங்களால்

பிடிக்காது எனதுடலை
தூய்மையென
நீயுரைக்கையில்
இருந்தும் பிடிக்கும்
தீவிரமாய்
காமம் தேடாமல்
இச்சைக்கு மட்டுமே
பிச்சையெடுக்கும்
வேட்கைகள் எதுவுமற்று

என் கண்களையே
அதிகம் பார்த்து
பேசிகிறாய் நீ!

அதனாலேயே
பிடிக்கும்
பிடிக்கும்
மிகபிடிக்கும் உன்னை
போதுமா!

இந்த உயிரானது
உனக்காகவே
சமைக்கப்பட்டிருக்கிற­து,
உரிமையோடு
விருந்துண்ணு
என் அன்புக் காதலனே!
எனக்காக பிறந்தவனே!

Sunday, March 20, 2016

இறக்காத கவிதைகளை!

அன்றெனக்கு
என்ன தோன்றியதோ
அதை எழுத்தில்
வடித்து
என் கவிதையென
எடுத்து வருவேன்
ஆவலாய் உன்னிடத்தில்

அலட்சியமாய்
வாசித்து
இன்னும் ஆழமாய்
எழுதச் சொல்கிறாய்
சிந்தனைகள்
சிதறிவிட்டதாய்
கடிந்தும் கொள்கிறாய்
கவிதையில்
உயிர்ப்பில்லையென
உதடுகளை குவிக்கிறாய்

மூளையை கசக்கி
யோசித்து யோசித்து
எழுதிய கவிதைகள்
மொத்தத்தையும்
குப்பை மேடுகளாய்
மூலையில்
கூட்டிவிடுகிறேன்

கடைசியாய் மீந்துபோன
ஒரு காகிதத்தை
நீயாவது கடந்து போ!
இந்த கைதியின்
அறைகளை விட்டு
வெளியே!

ஒதுக்கப்பட்ட
குப்பைகளின்
அறைகூவல்
என் காதுகளிலும்
விழத்தான் செய்கிறது

ஒருவழியாய்
கையிலேந்தி
காட்ட வருகிறேன் உன்னிடத்தில்
கடைசி காகிதத்தை

ஆர்வமாய்
வாங்கி பார்த்து
பதிலாய்
நீயெழுதுகிறாய்
மௌனப்
புன்னகையோடு
கவிதை அழகென்றும்
காதல் சுகமென்றும்

எழுதப்படாத
வெள்ளை காகிதத்தில் என்மனத் தூய்மையை
சோதிக்கவா
இத்தனை சோதனைகள்

சிரித்து விடுகிறேன்
சந்தம் தேடுகிறேன்
சத்தமிடாமல்
உனை
கட்டியணைக்கிறேன்

எழுதுகிறோம்
இருவருமே சேர்ந்து
இரவின் மடியில்
இறக்காத கவிதைகளை
இன்னமும்,,,

பேசும் இதயம் 5

என்றேனுமொரு
நாள்
எனைத்தேடி
நீ வருவாய்
அன்றெனதுடல்
பொசுக்கப்பட்டிருக்கு­ம்
உனக்கது
இலையுதிர்
காலமாகலாம்
என் நினைவுகளை
சுமந்தபடியால்,,,

__________


ஒரு
மரக்கிளைக்கு
வலிதெரியாமல்
தன்னை துறந்துவிட்டு
காற்றோடு
துயில்கொள்ளும்
சருகுகளை போலே
நமது பிரிவு
இருந்திடல் நியாயம்,,,

__________

உன்னையே
உற்று உற்று
பார்க்கிறது
பூக்கள்
கண்ணாடி முன்நிற்பது
போன்றதொரு
உணர்வு அதற்கு,,,

__________


நதியில்
விழுந்த என்
கண்ணீர்த் துளிகளை
விடுகதைகளாக
நீ கேட்கிறாய்
கையெழுத்திடுகிறேன்
விடுதலை பத்திரத்தில்,,,
கடலைத் தேடி
சங்கமிக்கிறதென்
காதலும்,கண்ணீரும்,

__________


உயிரெழுதும்
கவிதையில்
உறக்கம்
தொலைத்து
நிற்கிறேன்
யாரிடமோ தஞ்சம்
புகுந்திருக்கலாம்
எனது புன்னகை,,,

__________


நான் செய்த
தவறென்ன
அநியாயமாய்
எனை பொசுக்குகிறாயே
கண்களில்
தழலேற்றி,,,

__________

உனது ஒவ்வொரு
அசைவுகளிலும்
ஏதோவொரு
அழகு இருக்கத்தான்
செய்கிறது
வர்ணிக்கத்தான்
வார்த்தைகளை
தேடுகிறேன்

__________

அந்தப் பக்கம்
நீயும்
இந்தப் பக்கம்
நானும்
உடைந்த
இதங்களால்
உறவின்னும்
சேராமல்,,,

__________

என் அறைகள்
முழுக்க
காகிதக் குப்பைகள்
நீ நிராகத்த
கவிதையும்
காதலும்,,,

__________


உனது தாவணியில்
மட்டும்
எப்படி பூத்துவிடுகிறது
இந்த நிலவு
முறையிடுவேன்
மேகத்திடம்
ஒழுங்காய் நிலவை
இருக்கச் சொல்லென்று,,,

__________***__________

Saturday, March 19, 2016

ஹோசிமின் - இறுதி ஆவணம்

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மிட்சிக்குப் போர் நடத்திய தமது
மக்களின் சமாதானம்,தேசிய சுதந்திரம், சனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு
ஆதரவாகவும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளை காட்டிலும் உலகத்தின்
சமாதான மீட்பு சக்திகள் தம் பலத்தை நிரூபித்துக் காட்டுமேயானால்
"அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் தோல்வியடைந்து நம்மிடம் மண்டியிட்டு
உயிர்பிச்சை கேட்பார்கள்"-ஹோசிமின்.
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடைபெற்ற மிகப்பெருந்திரளான
மக்களின் எழுச்சியை அமைதியாக பின்னாலிருந்து இயக்கிய புரட்சி ஒளி
ஹோசிமின்.
ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டுமேயானால் உறுதியான ஒரு மார்க்சிய லெனினிய
கம்யூனிஸத்தால் மட்டுமே சோசியலிசம், தேசிய விடுதலை, தொழிலாளார் வர்க்க
ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட உண்மை புரட்சியை தரமுடியுமென
நிரூபித்துக் காட்டினார் அவர்தம் வாழ்க்கையை கம்யூனிஸத்திற்காகவே
அற்பணித்தார் . ஹோசிமின் வியத்நாம் மக்களின் மீட்சிக்கு செய்த சேவையை
இவ்வாறு குறிப்பிடலாம் "பல நூற்றாண்டு காலம் அடிமைகளாக இருந்த தமது
மக்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை அகற்றியது வெறும் 79 வயதடைந்த கிழவன்.
அவருடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகள் முதுமையும், உடல்நலக் குறைவும்
இருந்தாலும் அவர் அதிகமாக தெளிவுடனே இருந்தார். அமெரிக்க ஏகாதிபத்திய
ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லாவித போரிலும் , கம்யூனிஸ சோஷியலிஸ்ட்
நிர்மாணத்திலும், அவர் கட்சியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து
மக்களுக்குத் தலைமை தாங்கினார். தன்னுடைய உடல் சக்தியிழந்து
கொண்டிருப்பதை அறிந்த ஹோசிமின் 10.05.1969 ஆம் நாளன்று தன்னுடைய "இறுதி
ஆவணம்" வரைகிறார் .
மக்களுக்கும் , நண்பர்களுக்கும், எதிர்காலத் தலைமுறை
குழந்தைகளுக்கும் அந்த ஆவணத்தில் சில செய்திகளை அவர் விட்டுச்
செல்கிறார். " உலக மக்களுக்காக நான் (ஹோசிமின்) எழுதும் ஆவணம்"
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மீட்சிக்கு நமது மக்கள்
நடத்துகின்ற போராட்டம் இன்னும் பல பேரிடர்களையும் தியாகங்களையும் கடந்து
வர வேண்டும் என்றாலுப் நாம் முழுவெற்றி அடைவோம் இது உறுதியானது. அந்த
வெற்றிக்குப் பிறகு நமது சகோதரர்கள் , அரசு ஊழியர்கள், போராளிகள் ,
பெண்கள்,மாணவர்கள், ஆகியோரைப் பாராட்டுவதற்கும், முதியவர்களையும்
அன்புக்குரிய இளைஞர்களையும் குழந்தைகளையும் பார்ப்பதற்கு தெற்கு
பகுதியிலும் வடக்கு பகுதியிலும் சுற்றுப் பயணம் செய்ய
உத்தேசித்திருக்கிறேன­­். பிறகு நமது மக்கள் சார்பில் சோசியலிஸ்ட் முகாமை
சேர்ந்த சகோதர நாடுகளுக்கும் சென்று அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து
நமது மக்களின் தேசபக்தி போராட்டத்தை முழுமையாக ஆதரித்த அனைவருக்கும்
நன்றியை தெரிவிப்பேன்.
சீனாவில் டுபூ என்ற புகழ்மிக்க கவிஞர் கூறுவார் " எல்லாக் காலங்களிலும்
எழுபதை தொடுபவர் மிகச் சிலரே"
இந்த ஆண்டில் எனக்கு எழுபத்தொன்பது வயதாகிவிட்ட காரணத்தால் அந்த "மிகச்
சிலரில்" நானும் ஒருவன் என்று கூற முடியும். கடந்த சில ஆண்டுகளுடன்
ஒப்பிடும்போது எனக்கு உடல்நலம் சற்று பாதிக்கப் பட்டிருந்தாலும் என்
சிந்தனை முற்றிலும் தெளிவாக உள்ளது.ஒருவர் எழுபது வசந்த காலங்களுக்கும்
அதிகமாக பார்த்தபிறகு அவருடைய முதுமைக்கு தக்கவாறு உடல்நலம் கெடுகின்றது
இதில் வியப்பில்லை. இன்னும் எவ்வளவு காலம் நான் புரட்சிக்கும் பிறந்த
நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வேன் என்பதை யாராலும் சொல்ல முடியாது
தானே!
நான் கார்ல்மார்க்ஸ், லெனின் மற்றும் இதர மூத்ண புரட்சியாளர்களுடன் சேரப்
போகும் கடைசி நாளை எதிர்நோக்கி இந்தச் சில வரிகளை எழுதுகிறேன்.
அப்போதுதான் நாட்டு மக்களுக்கும் கட்சித்தோழர்களுக்கும­­் உலகத்திலுள்ள
நண்பர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படாது.

முதலாவதாக , கட்சியை பற்றி :-

அதன் நெருக்கமான ஒற்றுமையினாலும்,
தொழிலாளர் வர்க்கம் , மக்கள் மற்றும் தந்தையர் நாட்டிற்கு முழுமையான
அர்ப்பணிப்பாலும் நம் கட்சி நிறுவப்பட்ட நாள் முதலாக நம் மக்களை
ஒற்றுமைபடுத்தி அமைப்பு ரீதியாக திரட்டி உறுதியான போராட்டத்தில்
வெற்றிமேல் வெற்றி அடைகின்ற வகையில் மக்களுக்குத் தலைமை தாங்க
முடிந்திருக்கிறது. "ஒற்றுமை" நம் கட்சிக்கும் மக்களுக்கும் சொந்தமான
மிகவும் உயர்ந்த மரபு, மத்திய கமிட்டியிலிருந்து கீழ் மட்டத்தில் செல்
அமைப்பு வரை எல்லாத் தோழர்களும் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒரே சிந்தனையை
கண்ணின் கடுமணி போலப் பாதுகாக்க வேண்டும். கட்சிக்குள் பரந்த ஜனநாயகத்தை
அமைத்து விமர்சனம் மற்றும் சுய விமர்சனத்திற்கு முறைப்படியாகவும்
உறுதியோடும் கடைபிடிப்பதே ஒருமைபாட்டையும், ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு
சிறந்த வழி! நம் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது.கட்சியின் ஒவ்வொரு
உறுப்பினர்களும், ஊழியர்களும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக கடைபிடிக்க
வேண்டும். உழைப்பு,சிக்கனம், நேர்மை,நேர்கண்ணோட்டப­­்பார்வை பொதுமக்கள்
நலனுக்கு அக்கறை என முழுமையான அர்ப்பணிப்பு,தன்னலமி­­ன்மை ஆகியவற்றை
கொண்டிருக்க வேண்டும். நம் கட்சிகள் முற்றாக தூய்மையாக இருக்க வேண்டும்.
கட்சி மக்களின் தலைவன் விசுவாசமுள்ள ஊழியன் என்ற தகுதியை பெற வேண்டும்.
உழைக்கும் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களும் நமது இளைஞர்களும்
மொத்தத்தின் திடகாத்திரமாக இருக்கிறார்கள். கஷ்டங்கள் பற்றி
கவலைபடுவதில்லை, நாட்டு முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களாக அவர்களுடைய
புரட்சிகர நற்பண்புகளை கட்சி பேணி வளர்க்க வேண்டும். சோஷியலிஸத்தை
கட்டுவதில் அவர்கள் நமது வாரிசுகளாக வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்கால
புரட்சித் தலைமுறையுடைய பயிற்சிகளையும்,கல்வி­­யும், மிக
முக்கியமானது,இன்றியம­­ையாதது. சமவெளிகளிலும்,மலைகளி­­லும்,வாழ்கின்ற
நமது உழைக்கும் பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக துன்பங்களை மட்டுமே
நிலபிரபுத்துவ, மற்றும் காலனிய ஒடுக்குமுறை சுரண்டலை தாங்கிக்
கொண்டிருக்கிறார்கள் , இவற்றுடன் பல ஆண்டுகளாக நடைபெற்ற போர்களிலும்
வஞ்சிக்கப்பட்டிருக்க­­ிறார்கள்.எனினும் அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு
மகத்தான வீரம்,துணிவு,உற்சாகம­­், சுறுசுறுப்பு ஆகியவற்றை
காட்டியிருக்கிறார்கள­­். நம்மக்கள் என்றுமே என்மக்கள் , இவர்களை கட்சி
நிறுவப்பட்டதிலிருந்த­­ு நிபந்தனையற்ற விசுவாசத்துடன் கட்சிக்குப்
பாடுபடுகிறார்கள். நமது மக்களுடைய கலாச்சார வளர்ச்சித் திட்டங்களை கட்சி
தயாரிக்க வேண்டும். அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்ற போரும்
புரட்சியும் நீடிக்கலாம்,அப்படியா­­னால் நமது மக்கள் தமது உயிரையும்
உடைமைகளையும் இன்னும் அதிகமாக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். என்ன
நடைபெற்றாலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முழுமையாஃ முறியடிக்கின்றவரை
போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

நம் மலைகள்
எப்பொழுதும்
நம்முடையவை,

நம் ஆறுகள்
எப்பொழுதும்
நம்முடையவை,

நம் மக்கள்
எப்பொழுதும்
நம்முடன்
இருப்பார்கள்

துணைகொண்டு
அமெரிக்க
ஆக்கிரமிப்புகளை முறியடிப்போம்
நம் நாட்டை
மீண்டும் அமைப்போம் இன்னும் பத்து
மடங்கு அழகுடன்,,,

எத்தகைய துன்பங்கள், இடர்கள் வழிமறித்து நின்றாலும் இறுதி வெற்றி நமதே
என்றும் நம் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
ஒன்றைத் தெளிவாக உங்களுக்கு உரைக்கிறேன் தோழர்களே! அமெரிக்க
ஏகாதிபத்தியர்கள் வெளியேற்றப்படுவதிலும­­் நமக்கான விடுதலையில்
தாமதமாகுவதிலும், வடக்கு , தெற்கு உள்ள சகோதரர்கள் இணைவதில் ஏதேனும்
முரண்கள் ஏற்பட்டுவிட்டாலும் கவலை கொள்ளாதீர்கள் இந்த எழுபத்தொன்பது வயது
கிழவனின் "பிணத்தை" வைத்து புரட்சிசெய்ய உங்களுக்கு முழு
அதிகாரமளிக்கிறேன். என் பிணம் புரட்சிக்கு மட்டுமே பயன்படுவதையே நான்
விரும்புகிறேன்.
நமதுநாடு சின்னஞ்சிறிய நாடுதான் பிரான்ஸ், அமெரிக்கா என்னும் இரண்டு
பெரிய ஏகாதிபத்தியங்களை நமது வீரமிக்க போராட்டங்கள் மூலம் தோற்கடித்த
பெருமை நமக்குண்டு. உலகத்தின் தேசிய விடுதலை இயக்கத்திற்கு சிறந்த
பங்களிப்பு செய்த பெருமையும்கூட நமக்கு உண்டு.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி :-

என் மொத்த வாழ்க்கையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தவன் நான்.
உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை யும்
வளர்ச்சியையும் பற்றி நான் பெருமைபடுத்துகின்ற அதே அளவுக்கு சகோதர
கட்சிகளிடையே தற்போது எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை பற்றி
வேதனைபடுகின்றேன். மார்க்சிய,லெனினியம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வ
தேசியத்தின் அடிப்படையில் பகுத்தறிவுக்கும்,உணர­­்ச்சிக்கும்
பொருந்துகின்ற முறையில் சகோதர கட்சிகளுக்கு இடையில் மறுபடியும் ஒற்றுமை
ஏற்படுத்துவதற்கு நமது கட்சி தீவிரமான முயற்சிகளை செய்யும் என்று
நம்புகிறேன்.சகோதர கட்சிகளுக்கும் நாடுகளுக்கும் இடையில் மறுபடியும்
ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறேன்,எனது இறப்பின் பின்னாலும் அது
நிகழலாம் நிகழ வேண்டும்.

என்னைப் பற்றி :-

என் பலம் எதுவென்று எனக்குத் தெரியும் நான் கடைசி நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கிற­­ேன் என்பதும் அறிந்ததே! என் வாழ்க்கை
கம்யூனிஸத்தால் நிறைந்தது, பாட்டாளி மக்களின் வியர்வைத் துளிகளை
புரட்சியாக்குவதற்கு நான் தயங்கியதில்லை, இந்த உடலில் ஒட்டிக்கொண்டுள்ள
உயிருக்கு விலையேற்றப்பட்டவனில்­­லை நான். இப்போது நான் உலகத்தை விட்டு
பிறந்தாலும் "இன்னும் சில ஆண்டுகள் சேவை செய்ய முடியவில்லையை என்பதை தவிர
வேறு வருத்தம் எனக்கு இல்லை, நான் என்பதும் ஒருவிதத்தில் நீங்கள்தான்,
நான் மரணமடைந்த பிறகு பெரிய அளவில் எனக்கு இறுதிச் சடங்குகள் செய்வதை
தவிர்க்க வேண்டும் . அதற்காக மக்களுடைய நேரத்தையும் , பணத்தையும் வீணாக்க
வேண்டாம். முடிந்தளவு என் "பிணத்தை" வேறுபட்டுள்ள கம்யூனிஸட் கட்சிகளின்
ஒற்றுமைக்கான ஆயுதமாக்குங்கள். கடைசியாக மக்கள் எல்லோருக்கும்,மொத்த
கம்யூனிஸ்ட் கட்சிக்கும், என் நாட்டு பேரக்குழந்தைகளுக்கும­­் அளவற்ற
"அன்பை" தெரிவித்துக் கொள்கிறேன் . நம் கட்சி முழுமையும்,மக்களும்,­­நமது
முயற்சிகளை ஒன்றிணைத்து சமாதான,ஒன்றுபட்ட,சுத­­ந்திரமான, சனநாயக,வளமான
வியத்நாமை நிர்மாணித்து உலக புரட்சிக்குத் தகுதியான பங்களிப்பை செய்ய
வேண்டும் இது என் கடைசி விருப்பம்.
-ஹோசிமின்
19.5.1969

கடைசியாக வியத்நாமின் விடிவெள்ளி ஹோசிமின் 3.9.1969 காலை 9.47 மணியளவில்
தனது 79 வது வயதில் இந்த உலகத்தை விட்டுப் பிறிந்தார். 9.9.1969 அன்று
தோழர் லெதுவான் தலைமையிலான உறுதியேற்பு மற்றும் இரங்கல் கூட்டத்தில்
"ஹோசிமின் இறுதி ஆவணம்" வாசிக்கப்பட்டு உலகத்திற்கு
பிரகடனப்படுத்தப்பட்டது.

Friday, March 18, 2016

நான் உயர் சாதி - இப்போது டாட் காமிற்கு

நன்றி! இப்போது டாட் காமிற்கு ஏனென்றால் அவர்கள் "நான் உயர்சாதி"
தரப்பினர்கள் என்று என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறதெனும­்
நினைப்பை உடைத்து இல்லையில்லை எங்களுக்கும் தெரியுமென அருமையாக
காட்டியிருக்கிறது. நான் உயர் சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன்
எனும் காணொளி "ஆதிக்க சாதி" எனும் அடையாளத்துடன் இதனை கையாளும் போது
ஆணவக்கொலைக்கு எதிராக கருத்தை ஆதிக்க சாதியினரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்ற விளக்கத்திற்கு பின்னால் எப்படியும் இங்கே சாதி
ஆதிக்கம்தான் இருந்திருக்கிறது. அதுவும் சரியான நபர்களைதான்
தேர்ந்தெடுத்திருக்கி­றது இப்போது டாட் காம். தேவர் ஜெயந்தி பூஜை
விழாவின் போது பெருமையோடு நாங்கள் தேவர் என விளித்து அது சம்மந்தமான
அனைத்து விதமான புகைப்படம் மற்றும் காணொளிகளை விரும்பி பகிர்வு
செய்தவர்கள். அதற்கும் ஒருபடி மேலேபோய் ஏதோ முத்துராமலிங்க தேவர் கேள்வி
கேட்டாராம் அதற்கு பெரியார் பேந்த பேந்தென முழித்தாராம் . பதிவுகளை
இடைவிடாமல் ஒருவார காலமாக விழுந்து விழுந்து பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள். தலதளபதி போரடிக்கையில் பொழுதுபோக்கிற்காக "ஆணாதிக்கம்"
பேசுவோர்கள், ஒரு மாதம் திடீரென நல்லவனாக முகமூடி போட்டுக்கொண்ட கிஷோரு
கே ச்சாமி ஜெயாவை விமர்ச்சித்தான் என்பதற்காக , எவ்வளவு எடுத்துகூறியும்
அவனை நம்பி அவன் பதிவுகளை ஏதோ சமூக பதிவாக ஏற்றுக்கொண்டு பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள், அவனை ச்சமூக ஆர்வலராக ஊடகங்களில் பேச வைத்தவர்களும்
இவர்களே,,, என இருந்தவர்கள் , ஜெயாவை செல்லமாய் "அம்மா " வென அழைத்துக்கொண்டும் கலைஞரை கொரூரமாக கட்டுமரமென விளிப்பவர்களின் ஆணவக் கொலை எதிர்ப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள
முடியும். சரி அப்படியும் ஏற்றுக்கொள்கிறோம். எனில் ஆணவக் கொலைகளால்
மிகவும் அச்சமுற்று எப்போது நாம் கொல்லப்படுவோமெனும் பதற்றத்திலேயே
வாழ்க்கையை நகர்த்தும் ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களை
ஓரணியில் இணைக்கும் "தலித்" என்பது சாதியல்ல அது சமத்துவம்" எனும்
தார்மீக பொருட்பாட்டை அவ்வகையினர் ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்
கொள்வதற்கான செயல் வடிவாக "தலித் என்பது சாதியல்ல அது சமத்துவம்" என்பதை
பரப்பும் நடவடிக்கைகளை ஈடுபடுவார்களா? தலித் எனும் சொல்லே இவர்களுக்கு
கசக்குகின்ற போது எவ்வாறு இவர்களால் ஆணவக்கொலைகளை எதிர்க்க முடிகிறது.
உடனே உயிர் பலிகளுக்கு சாதிப்பூசம் தடவ வேண்டாமென விளிக்கலாம் "அய்யா
ஜோதிராவ் பூலே அவர்களின் தலித் சாதியல்ல சமத்துவம் என்பதை
ஏற்றுக்கொண்டவன் நான். இதற்கு ஏன் tag செய்ய வேண்டும்? நட்பு பட்டியலில்
இருக்கிறார்கள் . விவாதிக்க நான் தயார்.
என்னில் இதிலிருந்து குட்டி ரேவதி, கொற்றவை, தமிழச்சி தங்கபாண்டியன்
மூவரை மட்டும் விலக்கி வைக்கிறேன். மூவரும் உணர்வுப் பூர்வமாக "தலித்
சாதியல்ல சமத்துவம்" என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். கம்யூனிஸத்தை
நேசிப்பவர்கள்,திராவி­டத்தை ஏற்றவர்கள், தலித்தியத்திற்கான பங்களிப்பை
தருகிறவர்கள். நான் உயர்சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன் , எனக்கு "ஆனால்" என்பதே வேண்டாம் இன்குலாப் போதும் "மனசங்கடா நாங்க மனுசங்கடா"

Thursday, March 17, 2016

வலியும் கூட சுகமே,

என் பாதங்களை
நோகடிக்க
பாதையெங்கும்
முட்களை தூவு

மலரின் மணத்தை
மனதிற்குள்
பூட்டிவை

பக்கத்தில் சிரிக்கும்
தோழி மலரிடம்
உன்னை மட்டுமே
பிடிக்குமென
பொய்யுரை

பார்த்துகூட
பேசாதே
புதர்களில்
பதுங்கிவிடு

நீண்ட நேரம்
ரசிக்க இதழ்களில்
ரசமில்லையென
கிண்டலடி

காம்பிற்குள்
சுடுநீரேற்று

இலைகளை
தொட்டு
நசுக்கி தூரே எறி

சுரக்கும் தேனில்
விஷமேற்று

மனசெல்லாம்
வலிக்க வலிக்க
காதல் செய்ய
மட்டுமே
தெரிந்த எனக்கு
வலியும் கூட சுகமே

மிச்ச விதைகளையும்
தருகிறேன்
எங்கேனும்
நட்டுவிடு

என் வேரழுத்தி
வலிகளை மட்டும்
வாங்கிக்கொள்
இப்போதைக்கு மட்டும்

முடியவில்லை
என்னால்
மேலோங்கி வளரவும்
பூத்துக் குலுங்கவும்
நம் காதலை
சுமக்கவும்,,,

கார்ல் மார்க்சின் கடைசி நாட்கள்

"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட
மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப்
போனது ஜென்னியின் மரணத்தில் தான்.
1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி
இறந்த போது மார்க்ஸீம் செத்துப்
போய்விட்டார் என்கிறார் எங்கெல்ஸ்.
மார்க்ஸீன் நெருங்கிய தோழன் மார்க்ஸ்
மரணத்தைப் பற்றி நம்முடன் பகிந்து
கொள்கிறார் மேலும்...
ஜென்னியை மிகவும் நேசித்தவன்
மார்க்ஸ். ஜென்னியின் மரணத்திற்கு
பின் 15- மாதங்கள் வரையில் மார்க்ஸ்
இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை
இறந்த வாழ்க்கை தான். இருந்த
வாழ்க்கையல்ல...
மனைவி இருந்த போதே மார்க்ஸ் பல
வியாதிகளால் துன்பப்பட்டான்.இருப்­
பினும் வியாதிக்காக மருந்துக்களை
சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளும்
சிந்தனை இருந்தது. ஆனால் ஜென்னி
இறந்த போது முற்றிலும் அந்நினைவு
அவனை விட்டு போய்விட்டது. தன்
வீட்டின் அறைக்குள் முடங்கிப்
போய்விட்டான். இன்னொரு அதிர்ச்சி
அவனுக்கு பெண்ணின் மரணத்தில்
காத்திருந்தது. ஆம்! மார்க்ஸீன் முதல்
மகள் ´ஜென்னி லொங்குவே´ 1883-
ஜனவரி 11- ஆம் தேதியில் பாரீசில்
இறந்து போனாள்.
தன் குழந்தைகளையும்
குடும்பத்தையும்மிகவும் நேசித்தவன்
மார்க்ஸ். தொடர்சியான மரணத்தில்
துடித்துப்போய்விட்டான்.
மற்றவர்களிடம் பேசுவது மிகக்
குறைந்து போய்விட்டது. வீட்டை
விட்டு வெளியே வருவதில்லை.
வாழும் ஆசையை உதறிவிட்டான் என்
மார்க்ஸ். வியாதிக்கு மருந்துக்களை
உட்கொள்வதை நிறுத்திவிட்டான். அதன்
பின் உடல் மிகவும் பலவீனமடைய
ஆரம்பித்திருந்தது. நண்பர்கள்
சிலருடன் மார்க்ஸை கவனித்துக்
கொண்டோம்.
1883- இல் மார்ச் 14- ஆம் தேதியின்
பிற்பகல் மார்க்ஸீடன் கடைசி மூச்சு
நிற்பதற்கு 2- நிமிடங்களுக்கு முன்பாக
அவனை தனியாக இருக்க விட்டோம்.
அவன் எப்போதும் அமர்ந்து படித்துக்
கொண்டிருக்கும் சாய்வு நாற்காலியில்
அவன் இருந்தான். மூச்சு விட
மார்க்ஸ் மிகவும் சிரமப்பட்டான்.
என்னால் சகிக்க முடியாத காட்சியாக
இருந்தது. மார்க்ஸ் சிறிது தனிமையாக
இருக்க ஆசைப்பட்டான். அதனால்
நாங்கள் வெளியில் இருந்தோம்.
திரும்பிச் சென்று பார்த்த போது
மார்க்ஸ் தனது நாற்காலியில்
அமைதியாகத் தூங்கிக்
கொண்டிருந்தான்.ஓயாமல் சிந்தித்துக்
கொண்டிருந்த மார்க்ஸ் சிந்திப்பதை
நிறுத்திவிட்டான். என் மார்க்ஸ்
நிரந்தரமாக தூங்கிப் போய்விட்டான்.
மார்ச் மாதம் 17- ஆம் தேதி லண்டனில்
ஹைகேட் என்னும் மயானத்தில்
மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டான்.
000
அதன் பின் எங்கெல்ஸ் சிறு உரை
நிகழ்த்தினார். அதன் சுருக்கம் :
மனிதன் எப்படி படிப்படியாக
வளர்ச்சியடைந்தான் என்பதை
டார்வின் கண்டுபிடித்தான். மானிட
ஜாதியின் சரித்திரம் எப்படி
படிப்படியாக வளர்ச்சியடைந்தது
என்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தான்.
மனிதர்கள், அரசியல், விஞ்ஞானம்,
கலை, மதம் முதலியவைகளில்
கவனஞ் செலுத்துவதற்கு முன்
உண்ண வேண்டும்; குடிக்க வேண்டும்;
நிழலில் இருக்க வேண்டும்; உடுக்க
வேண்டும். எனவே அன்றாடத்
தேவைகளுக்கான பொருள்களை
உற்பத்தி செய்துக் கொள்வது அவசியம்.
அதற்கு ஏற்றார் போல்தான்
அக்காலத்தினுடையபொருளாதார
அமைப்பு இருக்கும்.
அப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்
கொண்டே காலத்தினுடைய ராஜ்ய
ஸ்தாபனங்கள், சட்டக் கொள்கைகள்,
கலைகள், மதக் கோட்பாடுகள்
முதலியன அமைகின்றன.
இந்த அடிப்படையைக் கொண்டே ராஜ்ய
ஸ்தாபனங்கள்
முதலியவற்றிற்குவியாக்கியானம்
செய்ய வேண்டும். இந்த சரித்திர
உண்மையோ மார்க்ஸ் காலத்திற்கு முன்
லட்சிய உலகத்தில் மறைந்து
கொண்டிருந்தது. இந்த உண்மையை
அறிஞர்கள் விபரீதமாக வியாக்கியானம்
செய்து கொண்டு வந்தார்கள்.
இன்றைய முதலாளித்துவத்தின் கீழ்
உற்பத்தி முறை எப்படி
வளர்ச்சியடைந்திருக்கிறது.
இதிலிருந்து எப்படி பணக்காரக்
கூட்டத்தினர்
உற்பத்தியாயினர்என்பதையும்
மார்க்ஸ் கண்டுபிடித்திருக்கிறான்.
பொருளுற்பத்தி முறையில் மிஞ்சிய
மதிப்பு என்னும் புதிய அம்சத்தைக்
கண்டுப் பிடித்த பிறகு பொருளாதார
சாஸ்திரிகள் எந்த இருளில் சென்றுக்
கொண்டிருந்தார்களோ அதில் இருள் நீங்கி
வெளிச்சம் ஏற்படத் தொடங்கியது.
இப்படியான ஆராச்சிகளைச்
செய்தாலே வாழ்க்கை
பூர்த்தியடைந்துவிடும்.
ஆனால் மார்க்ஸ் பல துறைகளில்
ஆராய்ச்சி செய்திருக்கிறான்.
இவையெல்லாம் மேலோட்டமான
ஆராய்ச்சிகள் இல்லை. கணித
சாஸ்திரம் உட்பட பல புதிய
உண்மைகளைக்
கண்டுப்பிடித்துவெளியிட்டிருக்கிறான்
மார்க்ஸ்.
மார்க்ஸீக்கு விஞ்ஞான
சாஸ்திரமென்பது
சிருஷ்டித்தன்மைவாய்ந்த சரித்திர
ரீதியான ஒரு புரட்சி சக்தி. தத்துவ
அளவில் மார்க்ஸ் எந்த உண்மையை
கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி
அடைந்தான். அதையும் விட தொழில்
வளர்ச்சி, சரித்திர வளர்ச்சிகளில்
புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு
வந்த போதோ மிகுந்த
மகிழ்ச்சியடைந்தவன் மார்க்ஸ்.
முதலாளித்துவத்தின் கீழ்
ஏற்பட்டிருக்கும் சமூதாய அமைப்பு
அதனால் உண்டாக்கப்பட்ட ராஜ்ய
ஸ்தாபனங்கள் ஆகியவற்றை
வீழ்ச்சியடைய வைக்க எந்த
வகையிலாவது, யாருடனாவது
ஒத்துழைக்கவும் இன்றைய
தொழிலாளர் உலகத்திற்கு விடுதலை
தேடிக் கொடுக்க
வேண்டுமென்பதில்எந்த
வகையிலாவது ஒத்துழைக்க
வேண்டும் என்பதும் மார்க்ஸீன்
நோக்கமாக இருந்தது. சமூதாயத்தில்
தொழிலாளர்களுக்கும் ஓர் அந்தஸ்து
உண்டென்பதையும் அவர்கள்
விடுதலை பெறுவதற்கு
அவர்களுடைய நிலைமையை
அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதிலும் முதன்மையாக உலகுக்கு
எடுத்துக் காட்டியவன் மார்க்ஸ்.
போராடுவது மார்க்ஸீன்
சுபாவத்திலேயே
அமைந்திருந்தது.உற்சா­
கத்தோடும்,உறுதியோடும் போராடுபவன்
மார்க்ஸ். மார்க்ஸீக்கு அதில்
வெற்றியும் கிடைத்தது. மார்க்ஸ்
பத்திரிக்கைகளுக்குப் பல கட்டுரைகள்
எழுதி இருக்கிறான். தர்க்க ரீதியில் பல
வியாசங்கள் எழுதியிருக்கிறான்.
பாரிஸ், ப்ரெஸ்ஸெல்ஸ், லண்டன்
முதலிய இடங்களில் சங்கங்கள்
உருவாக்கி இருக்கிறான்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம்
வைத்தார் போல்
"சர்வதேச தொழிலாளர் சங்கத்தை"
உருவாக்கி இருக்கிறான். இதைக்
கொண்டு மார்க்ஸ்
பெருமையடைவதற்குநியாயம் உண்டு.
ஆனால் மார்க்ஸ்...
அதிகமாகத் துவேஷிக்கப்பட்டான்;
அதிகமாக அவமதிக்கப்பட்டான்;
சுயேச்சாதிகார
அரசாங்கங்களும்,குடியரசு
அரசாங்கங்களும் நாட்டை விட்டு
வெளியேற்றின. முதலாளிகளில்
மிதவாதிகளும், தீவிரவாதிகளும்
மார்க்ஸை கேவலமாக தூற்றினர்.
ஆனால் மார்க்ஸோ ஒட்டடைகளை
ஒதுக்கித் தள்ளுவது போல்
அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினான்
மார்க்ஸ். அவசியம் ஏற்பட்டால்
மட்டுமே எதிர்விணை ஆற்றுவான்
மார்க்ஸ்.
இன்று ஐரோப்பாவின் கிழக்குக் கோடியில்
இருக்கும் ஸைபீரியச்
சுரங்கங்களிலும், அமெரிக்காவின்
மேற்குக் கோடியில் இருக்கும்
கலிபோர்னியாவின்கடற்க­
ரையோரத்திலும் வேலை செய்துக்
கொண்டிருக்கும் லட்சக்கணக்கான
தொழிலாளர்களின் அன்பையும்,
மதிப்பையும் பெற்றுக் கொண்டு
அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டு
இறந்து போய்விட்டான் மார்க்ஸ்.
"மார்க்ஸீக்கு அநேக எதிரிகள்
இருந்திருக்கிறார்கள் என்பது
உண்மைதான். ஆனால், மனிதனுக்கு
மனிதன் என்ற முறையில் மார்க்ஸீக்கு
ஒரு விரோதி கூடக் கிடையாது" என்று
நான் திட்டவட்டமாக சொல்வேன்.
மார்க்ஸ் இறந்தாலும்
மார்க்ஸீனுடைய சித்தாந்தங்கள்
இன்னும் அநேக நூற்றாண்டுகள்
உயிரோடு இருக்கும்.
(எங்கெல்ஸீன் இரங்கல் உரையின்
சுருக்கம்)

Tuesday, March 15, 2016

உலகத் தொழிலாளர்களே!

அதிகார வர்க்கத்தின்
செயற்கை பேரிடரில்
சிக்கித் தவிக்கும்
பாமரன் நான்

பணமாளும் பூமியில்
பிணக்குவியலொன்றும்
பயமாக
இல்லையெனக்கு

பழகிப்போய்
எப்போதும் போல
உழன்று
என்னை நானே
சகித்துக்
கொள்கிறேன்
நானுமிங்கே
நடைபிணமாதலால்

சுரண்டி சுரண்டி
சூழ்ச்சிகள்
வலைவிரித்து
என் சுயநினைவை
திருடுகிறார்கள்

தியாகிகளெனும்
பெயர்களோ
அவர்களுக்கு
அடிமையாளன்
முத்திரைகளோ
எனக்கு

எழுந்து ஓரடி
எடுத்துவைக்கிறேன்
முற்போக்கின்
துணைகொண்டும்
தோள் சாய்த்தும்

இலேசாக ஆட்டம்
காண்கிறது அதிகாரம்

அடுத்த அடிகளை
எடுத்துவைப்பதற்குள்
என் கால்விலங்கு
உடைகிறது
கூடியிருந்தோர்
துணையோடு

ஓடத் தொடங்கினேன்
ஒவ்வொரு அதிர்வுகளும்
ஓராயிரம்
கால்விலங்கினை
உடைக்க

முட்டி மோதிட
வேண்டுமே
முதலாளித்துவ
சுவர்களை தகர்க்க

என் இருதயத்தில்
உட்புகுந்தார்கள்
எமக்கான
முற்போக்குத்
தலைவர்கள்

இனி வீழும்
மண்ணில்
முதலாளித்துவம்
முற்போக்குத்
தலைவர்களின் முன்னாலும்
வெகுண்டெழும்
என் முழக்கங்களுக்கு
முன்னாலும்

வாருங்கள்
உலகத்
தொழிலாளர்களே
படிப்போம்,படைப்போம்

மார்க்சிய வழியில்
லெனினிய வழியில்
மாவோ வழியில்
அம்பேத்கர் வழியில்
பெரியார் வழியில்
புதிய வரலாறுகளை வாருங்கள்
படைப்போம்,,,

காதலித்தேன் அவளை, என்பதற்காக!

காதலித்தேன்
அவளை என்பதற்காக
என்
ரத்தம் குடித்து
சதையை
ரசித்துண்ணும்
மிருகங்கள்
உடனே துப்பியதாம்
சதையை

என் கண்ணீர்
உப்பற்று போனதாம்

சாதியுப்பு என்
சதைமுழுவதும்
தடவி
கடல் மணலில்
காய வைத்தார்கள்

உப்புக் கருவாடாக
நான் மாறுகின்ற
வரையில்
தணலென் சதையை
உருக்கிக் கொண்டிருக்க

ஒருவழியாய்
தயாராகிவிட்டது
என் சதை
கருவாட்டுக்
குழம்புக்காக

எப்படியும்
நாளைய விருந்தில்
வாழையிலைகள்
எனக்காக அழலாம்

வாழைக் கறை
ஆடைகளில் பட்டால்
போகாதாம்

அவ்வளவான
கெட்டித்தன்மை
ஏன் மனிதர்களின்
கண்ணீரில்
இருப்பதில்லையென

கருவாடாகிப் போன
என்னிடம்
கடல் மணல்
கேட்கிறது

என்ன பதில் சொல்ல?

இனி நன்றாக
சமைத்துண்ணுங்கள்
என் கருவாட்டு சதையை
இல்லையெனில்
என் எலும்பாகிய
முட்கள் உங்களின்
தொண்டைகளை
கிழித்து விடலாம்,,,

சாதியால் செத்தாயே சங்கரா!

ஊழிக்காற்றில் உலர்ந்து
எங்கும் சிதறியோடும்
சருகுகளில்
படிந்து கிடக்கிறது
சங்கரா
உன்
உறைந்த ரத்தம்

சாதியால்
செத்துக்கிடக்கிறாயே
சங்கரா

நாடகக் காதல்
திருமணமே
உன்னை மண்ணில்
சாய்த்ததென்று
சாதி இந்துக்கள்
சாவகாசமாய்
பேசுகிறார்களே

தன்சாதிக்கு பெருமை
சேர்க்கும் ஆவல்
அவர்களிடத்தில்

உன் குருதி வாடையில்
கொஞ்சம் தேநீர்
கலந்து கொடு
சாதிமறுப்பு மணங்கள்
அருந்தட்டும்

சங்கரா நீ
இறந்து கிடக்கிறாய்
உன் காதலெனும்
ஆன்மாவை கத்தியால்
குத்திக் கிழித்த
சாதிவெறியர்களின்
கல்லறையில்
கொலையென்பது
கௌவரமென முதலில்
இடம்பிடித்துவிட
பொதுப்பெயராகிறதது
கௌரவக் கொலையென

மன்னித்துவிடு
சங்கரா

உன் காதல்
மனைவியையும்
எங்களால் காப்பாற்ற
முடியாது

நீ மரணம் தழுவிய
கணத்திலிருந்தே
அரசாயுதங்கள்
அவள்
கழுத்தில் கத்தியை
அழுத்திப்
பிடித்துவிடும்
அதிகாரத்தை
கொடுத்து விட்டோம்

பெயருக்கானதிங்கே
பெரியார் பூமியென்பதை
என்றோ நீ
உணர்ந்திருந்தால்
காதலை வெறும்
மயிறென்றுதானே
எழுதியிருப்பாய்

எனக்குத் தெரியும்
சங்கரா
காதலிக்க பிறந்தவர்கள்
சாதிக்கு பிறந்தவர்கள்
இல்லையென்பது

ஒன்று மட்டும் என்னை
குற்றத்தில் நிந்திக்கிறது
சங்கரா

இந்த பிணங்களின்
வரிசையில் நானுமோர்
பிணமாகி கிடக்கிறேன்

உனக்கும் எனக்குமோர்
வேற்றுமையுண்டு

உன் கண்கள் மூடியதும்
கல்லறை தானாக
திறந்து இருட்டுக்குள்
வலிக்கான
மருந்திடுகிறது

நான் கண்களை திறந்தே
வைத்திருக்கிறேன்
வெளிச்சத்தில்
காட்சிகளை
தொலைத்துவிட்டு
கல்லறையில்
உயிரோடு படுத்துறங்கி
கண்டும் கானாது
கடந்துபோகப்
பழகியிருக்கிறேன்

யார் குற்றவாளி
என்பதை காலத்திடம்
ஒப்புவித்து
கடைசியாக
சென்றடைகிறேன்
அடுத்த சூடான
செய்திகளைத் தேடி

நானுமிங்கே
நயவஞ்சகனாக
நடமாடுகின்றேன்
நடிக்கவும்
செய்கின்றேன்

என்றேனும் இளவரசன்
கோகுல்ராஜ் அடுத்து
நீயென
உங்களின்
புனிதக் காதலென்னை
கண்ணத்தில் அறையும்

அப்போதும் நான்
விழிப்பதென்பது
சந்தேகமே சங்கரா!

எங்களையும்
எங்களோடு புனிதக்
காதலையும்
கொலை செய்தான்
இவனென
கைகாட்டிவிடு

தண்டனைகளை
தாராளமாய் ஏற்கிறேன்

உனதுயிர் தியாகத்தை
புரட்சியாக்காத
நானும்
கொலைகாரன்தானே!

Monday, March 14, 2016

விசாரணை திரைக்காட்சிகளின் உண்மைகள் வெளிச்சத்திற்கு

விசாரணை படம் பார்த்து பதட்டமாவனவர்களின் கண்ணோட்டத்தில் இரண்டு விதமான
மனநிலைகளை காணலாம். ஒன்று அதுவரையில் விசாரணைக் கைதிகளை காவல்துறை
எவ்வாறு நடத்துகிறது என்று அறியாத மேட்டுக் குடியினர்களாகவும், இரண்டாவது
வாழ்நாளில் காவல் நிலையத்திலும்,நீதிமன­்றத்திலும் உள்நுழையவேக் கூடாது
என்கிற "நல்வர்கள்?" என சமூக அந்தஸ்தை பேணிக் காப்பவர்களாகவும்
அரியப்படுகிறார்கள், ஒருவேளை இவ்விரு வகையிலும் வராத உணர்வுப் பூர்வமான
பதற்றத்தை காட்டுபவர்கள், அதிகார வர்கத்திற்கு எதிரான போராடும்
மனநிலையில் இருந்தும் அவர்களை வழிநடத்த இங்கே "தலைமை" இல்லாமல் பூர்த்தி
செய்யப்படாத வெற்றிடத்தை புலம்பித் தள்ளியவர்களாக இருக்கலாம்,
அவர்களுக்காக சொல்ல வேண்டிய இரண்டு கடமைகள் இருக்குமேயானால் எதற்கும்
பயப்படாமல் அதிகார வர்க்கத்தையும் அவ்வர்க்கத்திற்காகவே­ பணி செய்யும்
காவல் துறையை நோக்கியும் "மனித உரிமை மீரல்களை புரிய உங்களுக்கு என்ன
அதிகாரம் இருக்கிறது? அரசமைப்பு சட்டம் உங்களுக்கு அதிகாரம்
வழங்கியிருக்கிறதா?
என்கிற இரண்டு கேள்விகளை துணிந்து கேளுங்கள் என்பதாகவே இருக்கிறது.
விசாரணை என்கிற படத்தில் திரையில் கண்ட காட்சிகள் இங்கே நம் தமிழகத்தில்
அதே அதிகார வர்க்கத்து காவல் துறையினரால் "தினக் காட்சிகளாக"
நிகழ்த்தப்படுவதற்கு நம்மால் ஆன எதிர்வினைகள் ஆற்ற கடமைபட்டுள்ளோம்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின்
3-வது மகன் முகேஷ் (17). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு
வீட்டில் முகேஷ் தூங்கிக்கொண்டிருந்த­ார். நள்ளிரவு 11 மணி அளவில் அங்கு
வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை
அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை
கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு
முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு, 'நாம் தேடிவந்தது இவன்
அல்ல' என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே
சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் கிடந்தவரை அருகே
இருந்தவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டில்
கொண்டுவந்து விட்டுள்ளனர்.
காயம் இருந்ததால் முகேஷை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்
அழைத்து வந்துள்ளனர். 'போலீஸ் அடித்த தால்தான் காயம் ஏற்பட்டது என்று
கூறக்கூடாது' என அங்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரும் அவர்களை
வற்புறுத்தியுள்ளனர்.­ மிரட்டல்
இதற்கிடையில் வின்சென்ட்டின் செல் போன் எண்ணுக்கு பேசிய ஒரு போலீஸ்
காரர், 'ஆள்மாறாட்டத்தால் தெரியாமல் நடந்து விட்டது. மேல் அதிகாரிகளிடம்
செல்ல வேண் டாம்' என்று கூறியிருக்கிறார். வேளச்சேரி காவல் நிலையத்தில்
இருந்து பேசிய ஒரு போலீஸ்காரர், 'சம்பவம் குறித்து பிரச்சினை
கிளப்பினால், முகேஷ் மீது பல வழக்குகள் தொடருவோம்' என்று
மிரட்டியிருக்கிறார்.­ இந்நிலையில், முகேஷை தாக்கிய போலீஸார் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர்
அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இங்கே வைக்கப்பட வேண்டிய முதல்
கோரிக்கை என்னவெனில் அதிகார வர்க்கத்தின் அடியாட்களான காவல்துறைமீது சட்ட
ரீதியான SC/ST வழக்கு பதியப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிரந்தர
பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே,,, எப்பொழுதும் அரசு
அதிகாரிகள் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இங்கே
கண்துடைப்புக்காக வெறும் "பணி இடை நீக்கம்" செய்யும் வழக்கத்தினை
பரிசீலனை செய்து அவ்வகையாக குற்றம் இழைப்போரை "நிரந்தர பணி நீக்கம்"
செய்வதே சமூக நீதியாகவும் , குற்றத் தடுப்பு முறையாகவும், மக்களுக்கும்
பாதுகாப்பாகவும் இருக்க முடியும்

Sunday, March 13, 2016

சாதிவெறித் தமிழகம் தொடரும் ஆணவக் கொலைகள்

இன்று காலையில்தான் ஒரு ஆட்டோவில் அந்த வாசகத்தை படித்தேன் அவ்வளவு
நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது "நீ சாதிக்கு பிறந்தவனில்லை சாதிக்க
பிறந்தவன்" என்று,,, உள்ளுக்குள் ஏற்பட்ட ஒரு ஆத்ம திருப்தியை
அனுபவத்துக் கொண்டிருந்த அடுத்த வினாடிகளில் தொலைத்துவிட்டேன் அந்த ஆட்டோ
திரும்புகையில்,,, அதிர்ச்சி அலைகள் என்னை ஆட்கொண்டுவிட்டிருந்த­து, அதே
ஆட்டோவின் பின்னால் வாளுடன் இருக்கும் கலசத்தை வரைந்து கீழே "ஷத்ரியன்டா"
என எழுதியிருந்ததை எப்படியும் ஜீரணிக்க முடியவில்லை என்னால்,,, ஆக இங்கே
சாதி இந்துக்கள் மட்டுமே சாதிக்க பிறந்தவர்கள் என்கிற புரிதலோடு இதனை
அனுகிப்பார்க்கிறேன்.­ சாதி இந்துக்களுக்கு இங்கே தன் சாதிக்காரன்
மட்டுமே சாதிக்க பிறந்தவன் என்கிற மனநிலையிலை ஆதிக்கம் எனும் தொனியில்
எடுத்துக்கொள்ளலாம், போலவே அவ்வாறு சாதிக்கப் பிறந்தவனான ஆதிக்கச் சாதி
இந்துக்கள் தன் சாதிப் பெண்களோ ஆண்களோ சாதி மறுப்பு திருமணம் செய்தால்
கொலைகூடச் செய்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த அவலச்
சம்பவமும் இதுபோன்ற தொடர் சம்பவங்களும், தாங்கள் மட்டுமே சாதிக்கப்
பிறந்தவர்கள் எனும் கண்ணோட்டத்தில் மட்டுமே இங்கே இளவரசன்களும்,
கோகுல்ராஜ்களும் கொலைசெய்யப்படுகிறார்­கள், காதலித்து சாதி மறுப்பு
திருமணம் செய்தால் கொலை செய்யும் சாதி இந்துக்களின் உண்மையான சாதனைப்
பட்டியலில் சேர்ந்திருப்பது எண்ணிலங்கா கொலைகளே! இனியும் இந்த தமிழ்
மண்ணில் "யார் சார் இப்பல்லாம் சாதி பார்க்கிறாங்க" என்று கேட்டால்
அவர்களிடத்தில் சாதி இந்துக்களால் நிகழ்த்தப்பட்ட "தொடர் கொலைகள்"
பட்டியலை நீட்டி "இதுவெல்லாம் சாதி இந்துக்கள் புரிந்த சாதனைகளென"
முகத்தில் சாணியறையலாம், கேடுகெட்ட தமிழ்ச் சமூகத்தில் நீதிகள்
வாழ்கிறதென்றும், பகுத்தறிவு வளர்கிறதென்றும்,சாதி­கள் அழிந்து
விட்டதென்றும்,கூறினா­ல் அவர்களை தயவு செய்து மனநல காப்பகத்தில்
சேர்த்துவிடுங்கள். சம்பவம் இங்கே சவுக்கடிகளாக அவர்கள் மீது பாயட்டும்
இதோ இன்னொரு கோரச் சம்பவமும் கொலை களமான தமிழகமும்,,,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மகேசுவரியும் சங்கரும் கடந்த 8
மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து
வந்துள்ளனர். இந்நிலையில் மகேசுவரியின் உறவினர்கள் பொள்ளாச்சி உடுமலைப்
பகுதியில் பட்டப்பகலில் இணையர் இருவர் மீது கத்தி அரிவாள் கொண்டு
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகேசுவரி காயங்களுடன் மிக
மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது
தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் சாதி ஆதிக்கத்தை ஆதரிப்பது
இந்நிகழ்வுகள் பெருக ஊக்குவிக்கின்றது.
நீ சாதிக்கு பிறந்தவனில்லை
சாதிக்க பிறந்தவனென
எழுதி வைத்துவிட்டு அடுத்த வரிகளிலே
ஷத்திரியன்டா,தேவன்டா, என போட்டுக்கொள்ளும் கேடுகெட்ட சமூகத்தில் கொலைகள் வெறும்
கடந்துபோதலாகவேதான் இருக்க முடியும்.

நடிகர்களின் தேர்தல் பிரச்சாரம், இப்போதே தலைசுற்றுகிறது!

தமிழகத் தேர்தல் நெருங்க நெருங்க மனதிற்குள் ஒருவித அச்சம்
தொற்றிக்கொள்கிறது. ஓரளவிற்கு ஐந்துமுனை போட்டிகள் என்கிற தேர்தல்
களத்திற்கு அரசியல் கட்சிகள் அடித்தளமிட்டாலும் இன்னமும் இழுபறியிலேயே
இருப்பதனால் கட்சி வேட்பாளர்களை தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சிகளான
திமுகவும், அதிமுகவும் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் எப்படியும்
தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறிதுகால இடைவெளி கிடைக்குமென்பது ஆகச்சிறந்த
மன நிறைவை அளிக்கிறது. காரணம் இருபெரிய கட்சிகளும் தங்களின் தேர்தல்
பிரச்சாரத்திற்கு முக்கியஸ்தர்களாக "திரைத்துறை" நடிகர் , நடிகைகளை
களத்தில் இறக்குவார்கள். அவர்களோ திரையில் கதாநாய(கி)கர்களாக நடித்து
மக்களை ஏமாற்றியது போதாதென்று அரசியல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன்
பேர்வழியென்று மற்றொரு வழியிலும் மக்களை ஏமாற்ற வருகை புரிவார்கள். இதில்
திமுக ஓரளவிற்கு கட்டுப்பாடுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட
நடிகர்,துணைநடிகர்,நா­டகஸ்தர்களை வைத்திருப்பதால் ஓரளவிற்கு பொதுசன
தலைவலி கட்டுக்குள் வந்துவிடுகிறது. இம்முறை தீவிர திமுக பற்றாளரும்,
நகைச்சுவை நடிகருமான குமரிமுத்து அவர்களின் மரணம் நிச்சயம் திமுக
தரப்பில் ஓர் பேரிழப்புதான் ,,, அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
திமுக தரப்பில் இம்முறை நடிகர் வடிவேலு, பரோட்டா புகழ் சூரி ஆகியோர்கள்
இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற­து.திமுகவின் பிரச்சாரம்
அவ்வளவாக தலைவலியை ஏற்படுத்தாது , ஆனால் மற்றொரு பெருங்கட்சியான அதிமுக
வின் தேர்தல் பிரச்சாரத்தை நினைக்கும்போதே தலை கணத்து விடுகிறது. ஏற்கனவே
அக்கட்சியின் கொ ப செ ஆன நடிகை சி. ஆர். சரஸ்வதி அவர்கள் அதிமுக சார்பாக
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு தனது பார்ப்பன புத்தியை
காட்டுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் கருத்துக்களுக்கு சம்மந்தமேயல்லாத
பேச்சை பேசி குழப்பும் ஜெயா அடிமையாக இருக்கிறார் இந்நிலையில் பிரச்சாரம்
வேறு செய்யப்போகிறார் என்றால் மனங்களின் அவஸ்தையை சொல்ல வேண்டுமா என்ன!!!
அதன் பிறகான அதிமுகவின் தேர்தல் பிரச்சார பீரங்கிகளின் பட்டியல்
நீள்கிறது. ராமராஜன்,விந்தியா,சி­ங்கமுத்து, மாளவிகா, இப்படியான தலைகளின்
தேர்தல் பிரச்சார வரவேற்புகளை நினைத்தால் நெஞ்சம் பதறி வெடித்தேவிடும்
போலிருக்கிறது.உதாரணம­ாக சமீபத்தில் நடிகர் ராமராஜன் அவர்களின் மாடுகள்
அம்மா என்றே அழைக்கும், 'அரசியலில் ஒரே சிங்கம் அம்மாதான்,
போன்ற பேச்சுகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பே உதித்தாகிவிட்டது.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது "ஓ பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி
பிச்சைக்காரனா? வெளங்கிடும்டா நாடு! என்கிற கவுண்ட்டர் மகான் காமெடியை
தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்கு பின்னால் அணிதிரளும் மக்களை ஒன்றும்
சொல்வதற்கில்லை பழக்கப்படுத்தப்பட்டி­ருக்கிறார்கள் நடிகர்களின் பின்னால்
செல்வதற்கு,,,
இது மிகமோசமான நடத்தை என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ
தெரியவில்லை.

என்னை நானாக!

நீண்ட இடைவெளிகள்
எனக்கும் அடுத்த
முகங்களுக்கும்

என்னை நானே
துறந்துவிட்டு
வாழ வேண்டுமந்த
அடுத்த
முகங்களுக்காகவென
ஏகபோக அறிவுரைகள்
என்னுள்
புகுத்தப்படுகிறது

எனக்கு மட்டுமா
முகங்களனைத்திலும்
அறிவுரைகளே
மிஞ்சியிருக்கின்றன

வெளிச்சத்திற்கு
வரும் முதல் கணிவும்
பணிவும் கலந்திருக்க
முதல் பணியதுவென
நிந்திக்கிறதென் காலம்

எப்படி முடியும்
என்னால்?

என்னை நான்
துறந்துவிட்டு
அடுத்தவருக்காக
வாழ்வதென்பதை
ஏற்க முதலில்
என் இருதயத்தில்
இடமிருக்க வேண்டுமே

அந்த அடுத்த
முகங்களின்
மனிதாபிமானத்தை
துலக்கி யெடுத்தால்
துரும்புகளே மிஞ்சுகிறதே

விட்டுத்தள்ளு
விவாதங்கள் வேண்டாம்
சரிபோகட்டும்
முதலில் சரிசெய்யென
கேட்கிறாய்
நியாயந்தான்

நானென்பதை
அதுவரையில்
தாராளமயமாக்கினால்

விளக்கெரிகிறதென்
விளக்கங்களில்
வந்து நுகர்ந்துவிடு
வலிகளப்போது
விளங்கும்

சில வேளைகளில்
தனிமையில்
யோசிக்கும்போதும்
தனியுலகில்
திரிகின்றபோதும்
என்னை சுற்றியே
என்
எண்ணங்கள் சுழலுகிறது

ஒருபடி மேலாய்போய்
நான் இறந்தாலும் கூட
என்னைப்பற்றியே
என்
நினைவுகள் இருக்கும்

ஆக முதலில்
என்னை நானே
சரி செய்துக்கொள்ள
வேண்டியது
தேவையாகவும்
முக்கியமாகவும்
இருக்கிறது

ஒருவேளை நானதை
செய்து முடிக்கையில்
அடுத்த முகங்கள்
என் முகத்தோடு
ஒட்டிக்கொள்ள
துடிக்கும்!

முகமூடிகள்
தேவையா எனக்கு?

என்னை நானே துறந்து
விடும் நாள் வருகையில்
என்
கல்லறை தோட்டத்தில்
பூப்பறிப்பார்கள் அந்த
அடுத்த முகங்கள்
இறந்த கிடப்பது
நானென அறியாமல்

எனக்கிது தேவையா?

எனில்
நான் நானாகவே இருக்க
விரும்புகிறேன்
என் தாகம் தணிக்க
தண்ணீர்க் குவளைகளை
நானே
எடுத்துக்கொள்கிறேன்

முதலில் என்னை
நானாக
இருக்க விடுங்கள்,,,

Saturday, March 12, 2016

ஆசிரியர்-மாணவக் குழந்தைகள் உறவு???

தமிழ்க் காட்சி ஊடகங்கள் "அந்த" செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்
கொண்டிருக்கையில் ஒருவித பயம்தான் ஏற்படுகிறது, இதன் மூலம் தங்களை
கலாச்சார சீர்தூக்கிகளாக காட்டிக்கொள்கின்றனவா­? என்கிற சந்தேகமும்
எழத்தான் செய்கிறது. "அந்த" நிகழ்வுக்கும் காட்சி
ஊடகங்களும்,திரைத்துற­ையுமே முக்கிய காரணமென்றால் அது மிகையாகாது.
பிறகென்ன இருக்கப்போகிறது இந்த சமூகத்தில்,,, பதில் சொல்ல எந்த காலாச்சார
சீர்தூக்கிகளாலும் முடியாது. காட்சி ஊடகம் பரப்பிக்கொண்டிருந்த "அந்த"
செய்தியை இயக்குநர் சாமி போன்றவர்கள் மட்டும் பார்க்கவே கூடாது என்பது
மட்டும் எண்ண அலைகளாக இருக்கிறது.
இதுபற்றி எழுதக்கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்க முடியவில்லை ,
ஏனெனில் என்னை சுற்றி என் சமூக வலைதளங்களை சுற்றி எங்கும்
நிறைந்திருப்பவர்கள் "ஆசிரியர்"களாகவே இருக்கிறார்கள். இன்றுவரையில்
நானொரு மாணவனாகவும், அவர்களின் பிள்ளையாகவுமே பல்வேறு சமூக முற்போக்கு
கருத்துக்களை கேட்டுக்கொண்டும்,கற்­றுக்கொண்டும்,கல்வியை­யும்,புத்தியையும்
வளர்த்துக்கொண்டிருக்­கிறேன். அந்த வகையில் சர்ச்சைக்குரிய ஆசிரியரின்
காதல் திருமணம் குறித்து தனிப்பட்ட கருத்தேதும் இல்லாமல்
அவர்களிடத்திலேயே பொதுவில் வைத்து விடுகிறேன். காட்சி ஊடகங்கள்
ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை கண்டதும் முதலில் பதற்றமானது, இதனை மட்டும்
இயக்குநர் சாமி போன்றவர்களின் கண்களுக்கு தெரியவேக்கூடாது என்பதாகத்தான்
இருந்தது, வண்மங்கள் நிறைந்த கலைத்துறையை பாவம் யாராலும் ஒழுங்குபடுத்த
முடியவில்லையே என்கிற ஆதங்கமும் உண்டு. தோழர் இரா எட்வின் அவர்கள் தனது
பதிவொன்றில் பதினெட்டு வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரையும் "குழந்தைகள்"
என்றே அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை ஒரு மேடையில் ஆசிரியை ஒருவர்
முன்வைத்தார் என்பதை குறிப்பிட்டுவிட்டு நமது உரிமையை அடையவே இங்கே
"கோரிக்கை" முன்வைக்கப்படுகிறது என்கிற தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.
அன்றுமுதல் பள்ளி மாணவர்களுக்கு எதிராக எழும் அனைத்து சமூக
அவலங்களுக்கும் அவர்களை குறிப்பிட "குழந்தைகள்" என்றே வலைப்பதிவிலும்
,சமூகவலைதளங்களிலும் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். அந்த வகையில்தான்
தற்போது நிகழ்ந்துள்ள இச்சம்பவம் பெரும் உறுத்தலையும் மன உளைச்சலையும்
கொடுக்கிறது. சமூக வலைதளங்களில் "அந்த" சம்பவத்திற்கு ஆதரவு கருத்துக்கள்
வேறு பரவலாக காணமுடிகிறது. இதனை எவ்வாறு கையாள்வதென்றும்
புரிந்துகொள்வதென்கிற­ குழப்ப நிலையில் சமூகத்தின் மீது அக்கரையுள்ள
ஆசிரியர்கள் தெளிபடுத்தியாக வேண்டிய சூழலுக்கு
தள்ளப்பட்டிருக்கிறார­்கள். இதுபோன்றதொரு நிலமை இனி சமூகத்தில் ஏற்பட்டு
விடவும் கூடாது, அதற்கான இடத்தையும் கொடுக்க கூடாது. 23 வயது
மதிக்கத்தக்க ஒரு ஆசிரியை 15 வயதுடைய ஒரு பள்ளிக் குழந்தையை காதலித்து
திருமணம் செய்து, அதுவொரு குழந்தைக்கு தாயாகிறதென்றால் இது பால்ய
திருமணத்திற்குட்பட்ட­தா இல்லையா? ஒரு பள்ளிக் குழந்தை இன்னொரு
குழந்தைக்கு தகப்பனாகப் போகிறது இதனை இச்சமூகம் எப்படியான மனநிலையில்
அணுகும்? கடந்த 2014–ம் ஆண்டு காணாமல் போன அந்த ஆசிரியையும் பள்ளிக்
குழந்தையும் ஓன்றரை ஆண்டு காலம் திருப்பூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில்
கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள­். அப்பெண் நான்கு மாத
கர்ப்பிணியாகவும் அறியப்படுகிறாள். இதனை திரும்பத் திரும்ப காட்டும்
காட்சி ஊடகங்களால் விமர்சனத்துக்குள்ளான­ ஆசான்-மாணவன் என்கிற உன்னதமான
மதிக்கத்தக்க மாண்பு சமூகத்தில் எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்
என்பதை தெளிபடுத்துவதில் ஏன் அக்கரையின்மை ஏற்படுகிறது. சமூக வலைதளங்களான
பேஸ்புக்,ட்விட்டர், வலைப்பூவுலகமென அனைத்து தளங்களிலும் தாங்கள் மாணவக்
குழந்தைகளை நல்லமுறையில் சமூகத்திற்கு அடையாளப்படுத்துகிறோம­் என்று
காணொளி, புகைப்படங்களும், பதிவு கருத்துக்களும் இடும் ஆசரியர் பெருமக்கள்
இம்மாதிரியான தருணங்களில் ஓடி ஒளிந்து கொள்வது நியாயமாகப் படுகிறது.
இவ்வுலகில் மிக உயர்ந்த பணி டாக்டரோ,வக்கீலோ, இன்சினியரோ அல்ல அவர்களை
அவ்வாறு வளர்த்து உறுவாக்கி கல்வியால் அழகுபடுத்தி "இவன்(ள்) என் மாணவன்"
என பெருமையோடு பேசும் ஆசிரியர் பணிதான் உலகின் தலைசிறந்த பணியாக
இருக்கிறது. ஆனால் அந்த ஆசிரியர் பணியில் ஏற்படும் சில சமூக மாற்றங்களை
விமர்சனப்படுத்துகையி­ல் மட்டும் கள்ள மௌனம் காட்டுவது சரியான
அணுகுமுறையா? இதைவிட மிக வேடிக்கையானது என்னவென்றால்
அந்தமாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும்,ஆசிரிய­ை தனியார்பள்ளிக்கூடம்
ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது நியாயமான முறையில் குடும்பத்தை
நடத்தியிருக்கிறார்கள­் இதுவல்லவோ காதலென சிலாகிக்கப்படுகிறது.­
உண்மையில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த பகுதியில் வசிக்கும்
அக்கம்பக்கத்தினர் தாய் மகனாகவும், சகோதரி சகோதரராகவுமே கண்ணொட்டம்
கொண்டிருந்திருப்பார்­கள் என்பது மட்டும் உண்மை, இதற்குமேல் எழுத
முடியவில்லை எழுதவும் விருப்பமில்லை.

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...