Monday, January 26, 2015

அடுத்த முகம்

செய்தித்தாள்
சுமந்து வந்த
தினசரி
பெண் பால்
வன்புணர்வை
சேர்ந்தே
வாசித்தோம்!

சேற்றில் கிடக்கிறது
சமூகமென்றேன்!

அவ்வப்போது
பேனாவும்
அறிக்கை
எழுதித் தள்ளியது!

ஆங்காங்கே
மேடைபேச்சும்
அவிழ்த்து விட்டது
ஆத்திரத்தை!

குறிப்பெழுதினேன்
பெண்ணின
வாழ்வுதனை!

கணவன்
நெறியுடன்
வாழ்பவன்
நம்பினாயல்லவா
நீ!

காற்றில் தவழ்ந்து
நதியில்
விளையாடி
நடிகனானேன்
நான்!

"பேயாட்டமிடும்
பெண்ணடிமை"
தலைப்பினை
நீயே! தயாரித்து
தந்தாய்,,,

அணிந்துரையும்
அழகாய்
அமைந்து விட,,

விற்றது புத்தகம்
சேர்ந்தது
புகழோடு
பணமும்!

ராமனென
நீயும் நம்பினாய்
நல்லது,,,

அதுவொரு
அமாவாசை
தினம்
நடுநிசியில்
அலறியது
தொலைபேசி!

பிரசவ வலி,
பிரசவ வலி,,,
பிரசவ வலி,,,,,

கழுத்தில் தாலியற்று
தகப்பன் இவனென
வினவ நாதியற்று
அடுத்த நாள்
தாயாகப் போகும்!

உம் தங்கைதான்
உனக்கு
சக்காளத்தி!

இவ்வுண்மை
உனக்குத்
தெரியவாப் போகிறது!

ஊருக்கும் இது புரியவாப்போகிறது!

இனி உரக்கச் சொல்வேன்
உண்மை நடிகன் நானென்று,,,,

லிமரைக்கூ " இன்று குடியரசுதினம்"

சட்டத்தை
வளைத்த
அரசியல்வாதி
வறுமை
அளக்கிறது
விட்டத்தை

___


பதுங்கி
விற்றார்கள்
சாராயத்தை
இன்று குடியரசு
தினம்
குடிகாரன் விழி பிதுங்கியது

____


சமாதான
புறாக்கள்
விதவையாகின
பூக்களால்
குவிந்த
சமாதிகள்

____


குடியரசு தினம் காந்தியின்
சிலையருகிலேயே சிரிக்கிறான்
கோட்சே
குடிமகனாக

_____


வியர்வைகள்
இனிக்குமா!
இந்தியா பெற்ற
குடியரசால்
உலகநாடுகள்
வியப்பில்,,,

____


பெண்ணே
படு
ஆணாதிக்க
குரல்
ஆசிட் உடலை
கிழித்தது
பேனா,,

____

குழந்தைகள்
வெய்யிலில்
கருகினார்கள் இனிக்கவில்லை
மிட்டாய்
முடிந்ததா?
குடியரசு தினம்

_____


தொலைக்காட்சியில்
நடிகை
மறந்துபோன
தியாகிகள்
தொலைந்து போன
குடியரசு தினம்

____

குழிபறித்த
நரிகள்
வீழ்ந்து விடாத புரட்சிகள்
இந்தியா
பெற்றுவிட்டது
குடியரசு

_______

எது சனநாயக
ஆட்சி?
குருடாகவில்லை
இந்திய
புரட்சி
இது சட்டத்தின்
ஆட்சி,,,

_____


அடிமையை
உடைத்தது
சுதந்திர பசி
இன்று குடியரசு தினம்
ஆனது
ஆண்டுகள்
அருபத்தாறு

Sunday, January 25, 2015

குடியரசுதினம்

வசந்த கால
செடியொன்று
துளிர் விட
துடிக்கையில்!

தடுத்த
துப்பாக்கிகளோ
தரையில் விழ!

பூமித்தாய் வயிற்றில்
பிரசவித்த குழந்தை செடி துளிர்விட தொடங்கியது!

தோழமைகளை அனைத்தபடி
அடைந்தது சுதந்திரம்!

அன்றுதான் ஆனந்தம்
ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியதாயின்
இயலாத நிலையோ!
முடமானது முழுச்சுதந்திரம்!

ஆண்டது அப்போதும் ஏட்டிலும் இல்லாத
இங்கிலாந்து
அரசியல் சாசனம்!

எழுத வழிதேடி
இந்தியத்தாயின்
விழிகளில் இமைதேடி!

அமைத்தார்கள்
அரசியல் நிர்ணய
சாசன சபையொன்றை!

கடமை தவறாமல்
தடைகள் பல கடந்து
நாடுகள் பல ஆராய்ந்து
மூன்றாண்டு முயற்சியாக
முடித்தார்கள் பணியை!

அன்றுதான் அரைச்சுதந்திரம்
நவம்பர் இருபத்தாறு!

சிதறிக் கிடந்த
இந்தியாவில்
சீறிவந்தது மூவண்ணம்!

சிறைபடுமா சுதந்திர பறவைகள்
செழிப்பான
அம்மரத்தில்
ஒற்றுமையோடு
நாடமைக்க!

கொஞ்சும் எழிலோசையில்
அகமகிழ்ந்தாள்
இந்தியத்தாய்!

அன்றுதான் முழுச்சுதந்திரம்
ஜனவரி இருத்தாறு

கூவும்
குயிலோசையில்
குடியரசு அமைந்தது!

குனிந்த முதுகும்
நிமிர்ந்து இங்கே
நடக்குது!

இந்திய அரசியல்
சாசனம் வானுயர்ந்து
வாழுது!

இந்தியத் தாய்
பெற்றெடுத்த
குழந்தை செடி!
குடியரசெனும் வரம்பெற்று
அகிலம் போற்றும் ஆளுயர மரமாகி!

இன்றோடு
ஆண்டுகள்
அறுபத்தாறானது,,,

Friday, January 23, 2015

சிறுகதை "மதுவின் பரிசு"

அமைதி அழகியலில் என்றுமே தனித்துவிடப்படும் அசுத்தமான அரசு மருத்துவனை
அது , அரசின் செயல்பாடற்றது என்று மக்களும் , மக்களின் செயல்பாடற்றது
என்று அரசும் கைவிரித்த கனவுகளை சுமந்துக்கொண்டு ஒரேயடியில் ஓங்கி
நிற்கும் ஆலமரத்தடியில் தன் கடைசிநாளை குறித்துவிட்டு தொட்டால்
தொற்றென்று தனித்து துரத்திவிடப்பட்ட நிலையை கூட உணராத ஒரு ஜீவன் தான்
சங்கரன் . எவளிடம் சென்றுவந்தானோ தொற்றிக்கொண்டே தொடர்ந்த வார்த்தைகளில்
உதறிவிட்ட உறவுகளையும் , இவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும்
திருந்தவே இல்லை திருட்டுத்தனமாக தெவிடியாளிடம் சென்றிருக்கிறான் என்று
குறை கூறி கடந்து போன நட்புவட்டங்களையும் இந்நேரத்தில் நினைப்பதை கூட
மறந்துபோனான் சங்கரன் . அவனுக்கு மட்டுமே அந்த கடந்தகால நிகழ்வுகள்
அச்சுறுத்திக்கொண்டே இருந்தது . மனதின் ஓரத்தில் ஒரேயொரு சந்தோஷம் காதலி
கழன்றுவிட்டாள் என்று,
சங்கரன் தற்போது எய்ட்ஸ் நோயாளி அனைவராலும் அனாதையாக தெருவில் எறிந்த
அவனுடலை யாரோ ஒருவன் எடுத்து வந்து அரசுமருத்துவனையில்
போட்டிருக்கிறார்கள் . மருத்துவர்களும் பிழைக்க வழியில்லை என்று
ஆலமரத்தடியில் எறிந்துவிட்டார்கள் அங்கிருந்து தான் கடைசிநாளை எண்ணி
கடந்த காலத்தை அசைபோட்டுக்கொண்டிருக­்கிறான் சங்கரன்.

எட்டு வருடங்களுக்கு முன்னால் இளங்கன்று பயமறியாது என்கிற துள்ளலுடனே
கல்லூரியில் கால்வைக்கும் போதே மதுவிற்கு அடிமையான சங்கரன் இளமையை
கடக்கலானான். மதுமட்டுமே மாது இவனிடம் நெருங்குவதில்லை அவனும் மாதுவிடம்
நெருங்கியதில்லை , பிறகெப்படி எய்ட்ஸ் நோய்?
எப்போதும் சங்கரன் தனியாக மது அருந்துவதில்லை தன் நட்புவட்டத்தை ஒன்றாக
இணைத்து கும்மாளம் அடிப்பதில் அவனுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷமாய்
இருந்தது . அதிலொருவன்தான் பாண்டி என்கிற பாண்டியன் , பாண்டியன்
அழுக்கடைந்த சேற்றில் முளைத்த காளான் மிகவும் செல்வந்தன் பெண்மோகத்தில்
பைத்தியமானவன், குடிக்க ஆரம்பித்து விட்டால் தன் கூடவே வைத்திருக்கும்
போதையூசியும் அவனுக்கு ஊருகாயாகும் . அப்படி ஒருநாள் சங்கரன் தன்
காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற மனவருத்தின் பால் மதுவருந்த
முடிவெடுத்தான் . உண்மையில் தன் காதலனின் நட்பு வட்டங்களை உற்று
நோக்கியதில் புலப்பட்ட உண்மைகளின் காரணமாக நட்பினை கைவிடும் படி
கேட்டுக்கொண்ட காதல் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட ஓர் உண்மைக்காதல் இறந்த
தினத்தின் துக்க அனுசரிப்பிற்காக பாண்டியும் சங்கரனும் மற்றும்பல
நண்பர்களும் மது அருந்த திட்டமிட்டு அதுவும் கைகூடுகையில் இணைந்தார்கள்
நட்பு வட்டங்கள் அது தான் சங்கரனின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து
விட்டது. பாண்டி மது அருந்தி விட்டு பற்றாக்குறைக்கு போதையூசி ஏற்ற
தயாரானான் ஊசியை வலதுகையில் எடுத்து இடது கைநரம்பில் ஏற்றத் தயாரான
நேரத்தில் , பணமில்லா ஏழையை உதறித்தள்ளிவிட்டு பின்பு அவ்வேழை
செல்வந்தனாகும் தருணத்தில் கூடிவரும் சொந்தங்கள் காட்டுமே அந்த அதீத
அக்கரைபோல் , மூளை முழுதாய் மதுவில் நனைந்தபின் உதவிக்கு வரும்
மதுக்கரங்களின் பற்றுதலாய் திடீரென பொங்கியெழும் அக்கரைப் பாசத்தில்
சங்கரன் பாண்டியின் கரங்களை பற்றிக்கொண்டு ஊசி போட்டுக்காதடா! இதுக்கு
மேல உம்முடம்பு தாங்காதுடா , ஏற்கனவே நமக்கு குடிச்சி குடிச்சி குடலு
கெட்டுப்போச்சி இந்த ஊசியும் ஒடம்பில போன ஒடம்பு என்னத்துக்காவரது ,,,,,
பாண்டி இப்போது போதையில் விட்ரா கைய எல்லாத்தையும் அனுபவிச்சாச்சி
அப்புரம் எதுக்கு இந்த மசிரு ஒடம்பு ,,,,
இப்போது இருவருக்கான மதுகாட்டிய அன்பான அக்கரையின் காரணமாக பாதி
உடம்பிலேறிய ஊசி இடறிவிழுந்து சங்கரனின் இடது கால் முட்டியை பதம்
பார்த்தது. ஒருவழியாக குடியுடன் இரவை கழித்த சங்கரன் இந்நிகழ்வை
ஒருபொருட்டாக மதிக்கவில்லை.

காலம் கடந்தோடியது கல்லூரி காலமும் முடிந்து போனது. சங்கரன் ஒரு
அலுவலகத்தில் உதவியாளனாய் சேர்ந்த சமயத்தில் தகவலொன்று காதுகளுக்கு
எட்டியது இதற்கிடையில் சங்கரன் உடல்நிலையும் மாற்றமடைந்தது.
தகவல் இதுதான் பாண்டி எய்ட்ஸ் நோயால் இறந்தான் கல்லூரி படிக்கும்போதே
அந்நோய் அவனை பிடித்திருந்திருந்தத­ாம் ,,,
தகவலை வாங்கிய செவியோ சும்மாயிருக்க வில்லை எழுந்தது சங்கரனுக்கு
சந்தேகம். இனியும் தாமதிப்பது வீணென அருகில் இருக்கும் மருத்துவமனையை
நாடியிருக்கிறான் .
டாக்டர் எனக்கு செக்கப் செய்யனும்,,,,
எம்மாதிரியான செக்கப்
மலேரியா? டெங்கு? இரத்தகொதிப்பு?
அதுயில்ல டாக்டர் அதுவந்து!!! அதுவந்து!!!
என்ன எய்ட்ஸ் செக்கப்பா அதுக்கேன்பா தயக்குர! இதெல்லாம் சகஜம் எல்லாரும்
செய்து கொள்ள வேண்டியது தாராளமா செக்கப் செய்துகலாம்,, இறுதியாக தோள்மேல்
கைபோட்டு செக்கப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.
இரண்டுமணிநேரம் முடிந்தது இருவரும் வெளிவந்தனர் .

இப்போது மருத்துவர்,,,
ரிசல்ட் நாளைக்குத்தான் தெரியும் மிஸ்டர் சங்கரன் காலையில் வந்து வாங்கிக்கோங்க,,
என்று அனுப்பிவைத்தார் .
மருநாள் காலை சுடுநீர் காலைப் பற்றிய கணக்காய் பதற்றத்துடன்
அமர்ந்திருந்த சங்கரனுக்கு மருத்துவர் அளித்த ரிசல்ட் "ஆம் உனக்கு
எய்ட்ஸ் வளர்ந்துவிட்ட நிலையில் எய்ட்ஸ்"
இம்மருத்துவ முடிவை ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் எழுந்தது தான் என்று
தன்னத்தானே சபித்துக்கொண்டான் சங்கரன் .
அன்று ஆரம்பித்த அதிர்ச்சித் தகவலானது அவனது வாழ்நாளை
துரத்திக்கொண்டேயிருந­்தது. இதில் பலியானது அதனது வாழக்கை மட்டுமல்ல ,
பெற்றோர்,காதலி,சொந்த­ங்கள், நட்பு வட்டங்கள் ,சமூகமென அனைத்தையும்
பலிகொடுத்த உயிர் இதோ ஆலமரத்தடியில் அமர்ந்தவாரே பலியானது.
-______முற்றும்_____­_

Thursday, January 22, 2015

மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு

மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு


கொஞ்சம் இடைவெளியைத் தொடர்ந்தே இந்நாவலுடன் நான் பயணித்ததை பற்றி
எழுதுகிறேன் காலவோட்டத்தில் சர்ச்சைகளின் சூழிடமாக அமைந்துவிட்டபடியால்
அல்ல , அச்சர்ச்சைகளின் அவசத் தேவையை உணர்ந்தபடியால் எழுதும்
கட்டாயத்தில் உந்தப்பட்ட ஓர் ஊதுகுழலாகிப் போனதால் தேவை
அதிகரித்துவிடுகிறது . 2011 ஐந்தாண்டு கல்லூரியின் கடைசி நாட்களை
எண்ணிக்கொண்டிருந்த தருணம் அவ்வப்போது தலைபடும் தமிழுணர்வுப் பசியினைத்
தீர்க்க நூலகத் தஞ்சத்தில்
உட்புகுவது வழக்கம் . அந்தச்சூழலில் நூலக அலுவலரின் மேசையில்
அமர்ந்திருந்தது எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் .
வாசகனுக்கு உரித்தான சிந்தனையில் ஏதோவொரு யானைப்பாகனின் வாழ்வியலை
சித்தரிக்கும் நாவலாக இருக்கும் என்றென்னி அலுவலரிடம் அந்நாவலைப்
பெற்றுக்கொண்டு படிக்கலானேன் சரியாக மூன்று மணிநேரத்தில் வாசிப்பினை
முடித்த தருணத்தில் தான் உணர்ந்தேன் சிவனுக்கான பெயர் மாதொருபானென்று ,
நாவலை படிக்கும் போதே தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பானால்
குழந்தைகள் எழுந்து கேள்விகள் கேட்டுவிடுமோ! என்ற ஐயத்தில் அலறும்
தகப்பனைப் போலவே மாதொருபானையும் உணர்ந்தேன் . வேறொன்றுமில்லை படித்து
முடித்தவுடன் எழுந்த கேள்வியும் அதுவாகத்தான் அமைந்தது , ஏற்கனவே
இந்துமதக் கடவுளர்கள் எவ்வாறு பிறந்தார்கள் அவர்களை இந்துத்துவ மத
குருமார்கள் எவ்வாறு மக்களிடையே கற்பித்தார்கள் என்ற கேள்விகளுக்கே
விடைகானாத சூழலில் திருச்சங்கோட்டு மக்களின் மூன்று தலைமுறைக்கு முன்னால்
நம் முன்னோர்கள் யார்? முன்னோர்களின் தகப்பன் யார்? அத்தகப்பனோ தாயோ
முறையற்றோர் பிள்ளைகளெனில் நாமும் முறைதவறி பிறந்தவர்கள் தானா? என்ற
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாவலின் தன்மை உணர்த்திற்று , சக
வாசிப்பாளர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இதுதானோ என்ற எண்ணம் கூட
அவ்வப்போது தலைபட்டது . வேறொன்றும் குறிப்பிட இயலவில்லை ,
முற்போக்கினையையும் நான் அறியவில்லை , ஓர் இந்து எழுத்தாளரின் இந்து
நாவலை இந்துமதத்தினர் எதிர்த்திருக்கிறார்க­ள் . வேறொன்றும் இந்நாவலின்
பிரச்சனைகளை அலசி ஆராயும் அளவிற்கு அனுபவ மார்க்ஸியமோ , திராவிடமோ, மற்ற
முற்போக்கு சிந்தனைகளோ தலைபடவில்லை, கடைசியாக காளியின் உயிரிலும்
பொன்னாவின் பண்பிலும் அழிந்து அடிபட்டதென்னவோ பெண்மைதான் . இதைவிட
வேறொன்றும் சொல்லும் அளவிற்கு சர்ச்சைக்குரிய நாவலகாக அதை பார்க்க
முடியவில்லை.

ஹைக்கூ "தொலைந்து விடாதே"

ஏற்றாத
நெருப்பு
வற்றாத
வறுமை
அடுப்பில்
வாழ்கிறது
-பூனை

___

காமத்தில்
மறந்த
கேள்விகள்
திருப்தியற்ற
மணமகள்

___

மலரே
முகம்
காட்டாதே
வீதியில்
என்னவள்

___

தடுத்தும்
துளிர்விடுகிறது
குடைக்குள்
-மழை

___

கவிதை
எழுதிய
பேனா
தனிமையை
மறந்தது
காகிதங்கள்

___

நிலவுக்கு
பதிலாய்
கொக்கு
குளத்தங்கரையில்
கூரை வீடு

___

நிகழ்காலத்து
வறுமை
செங்கல்
சூலையில்
வெந்தது
வாழ்க்கை

___

யாரோ
வரைந்த
ஓவியம்
தலையெழுத்து

___


தொலைந்து
விடாதே
அருகிலேயே
இரு
அழைக்கிறது
-கைபேசி

______

Wednesday, January 21, 2015

"மௌனம்"

நெடுங்காலமாய்
மௌனமே
கசிந்த
மொழியாய்
விழிகளை
தேடியே
தொடர்கிறது
நம் காதல்
முடிவுதான்
என்ன?
நம் முன்னே
எப்போது
உடைபடும்
உறவினரின்
கண்காணிப்பு
கேமராக்கள்
விடுதலை
வேண்டியே
காத்திருப்பதில்
காதலும்
கசியும் மௌனம்
தானோ!
சுதந்திர
பறவைகளுக்கு
வேடனிட்ட
வலையொரு
உரிமைத்
தடையல்வா
அதுபோலவே
துப்பட்டாவில்
துடிக்கும்
முகத்தினில்
தெரிகிறது
அமாவாசை
முழுநிலவிற்கு
முகமூடியிட்ட
மூடர்களை
தேடியே
முழுநேரமும்
வீணானது
இதில் காதலும்
கரைந்தோடியது
ஏ! கழுகுகளே
பார்வையை
திருப்புங்கள்
எங்கள் காதல்
நிஜங்களின்
உயிர்வலி
என்றேனும்
ஒருநாள்
உயிர்த்தெழும்,,
உங்களின்
பார்வையில்
காதலொரு
கறைபடாத
காவியமாகும்!

ஹைக்கூ " ஈரிதல்சிட்டு "

ஆங்காங்கே
மணல் திட்டு
கானா தேசத்து
பறவைகள்

___

ஆண்பெண்
அதுவாகி
நின்ற
இயற்கை
வரம்
-ஈரிதல்சிட்டு

___

காந்திக்கு
கரைவேட்டி
முழுதாய்
நணைந்த
"குடி"மகன்கள்

___

தாலிக்கு
எத்தனை
அலங்காரம்
வரதட்சனை
வேண்டி
-விபச்சாரன்

___

வேரில்
பூத்த
மங்கை
விலகியது
-பனி

___

கைதியின்
கைகளில்
பொற்காப்பு
வெளியில்
தீக்கிரையான
-மனிதம்

___

நிலவின்
தோழிகள்
இரவில்
-மின்மினிப்பூச்சி

___

ஹைக்கூ "சுருக்கெழுத்து"

இறந்த உயிர்
அழகான
சிரிப்பு
செடியிழந்த
-ரோஜா

___

வறுத்த மீன்
எச்சியூரல்
உணவத்தில்
உதறிய
பூணூல்
-கயிறு

___

ஏற்றிய
கற்பூரம்
சுட்டது
எதிரே
-மீன்விழியாள்

___

பணத்தோடு
பிரியாணி
பெற்றது
வாக்குச்சாவடி
உனக்கேன்?
-படிப்பறிவு

___

வலிகளின்
சுருக்கெழுத்து
வாழ்க்கை

___

மக்களைத் தேடி
முதலமைச்சர்
வந்தது
இடைத்தேர்தல்

___

மிருக வதைச்
சட்டம்
போராடியவர்
பசியாறினார்
அசைவ
உணவகத்தில்

___

ஹைக்கூ "கொலுசொலி"

வெளிச்சம் மறைத்த
இரவு
திங்களவனை
கூவி விற்கிறது
-சேவல்

___

ஏப்பத்தோடு
அசைபோடும்
மாடு
புல்லின்
மரணம்

___

வீட்டுக்கு வீடு
எலும்புறுக்கி
நோய்
அடைப்பானில்
சுத்திகரித்த
-தண்ணீர்

___

காந்தியம் பேசியவர்
வெட்டினார்
சாலையில் வீழ்ந்தது
-மரம்

___

திருமணம்
முடிந்து
மலடியானது
-ஞெகிழி

____

Saturday, January 17, 2015

நிலவோடு நடைபயணம்

என்னோடு நிலவும்
நிலவோடு நினைவும்
நதியோரம்
நடைபழகலானோம்
தினம் தொடரும் பயணமது
பக்குவமாய் தெரிந்தது
இவ்வுலகம்
தமிழை தவழச்செய்தது
முதலில் நிலவுதான்
நிழலாடும் நினைவுகளை
சுமந்தீரே நீரில் முத்தம்
பதிப்பதிலா பதில்முத்தம்
தேடுகிறாய்!
மனதின் மௌனத்தை
கலைத்தேன்
பதிலுரை தரவேண்டுமல்லவா!
நிலவே நீயும் பெண்தானே
உன்னோடு நானிருக்கும்
நேரத்தில் நரிகண்கள்
நதிவிழுங்கி அத்தோடு
ஊடுறுவி இணைந்தார்கள் இவர்களென
புதுக்காதல் பூகம்ப
பூமிச் சுமையாகுமென
புரளிதனை கட்டவிழ்த்து
புகழுக்காய் என்னவளிடம்
மண்டியிட
புன்சிரிப்பு உதிர்த்தபடி
புரிதலில் பூவாகிப்போன புவியரசியவள்
நரி கண்களுக்கு சொன்ன சேதி இதுதான்! செவிகொடுத்து கேளடி நிலவே!
காதலில் கரைபடிந்த
சிந்தையில் சிதறிகிடக்கும்
சிலந்திகள் நாங்களல்ல
என்னவன் மனதும்
ஏற்றிவைத்த சுடரும்
ஒன்றே!
தன்னையழித்து
தன்னுலகை காட்டும்
காதலின் நம்பிக்கை
குழந்தைகள் நாங்கள்!
சொல்லி முடித்ததும்
சினுங்கியது நிலவு
நீரின் பதில் முத்தம் உணர்ந்தேன் ஈரப்பதமது
இதமாய் இவ்வுடல் தழுவ இதுவே பதில் முத்தமென உணர்த்திய
மெய்க்காதலுக்கு
மேகமழை இனி பரிசாகும்
தொடர்வோம் பயணம்
தொலைக்காத நினைவுகளுடனே ! நிலவிடம் விடைபெற்ற சில நாழிகையில்
நதிகளில் நாணல் ஆடிற்று வான்மேகம்
மழை தூவிற்று!
மெய்க்காதல்
மண்வாசத்தோடு
இனி மணக்கட்டும்!
சந்தேகம் சவக்குழியில்
இனிவிழட்டும்!

கதிரவனே காதலை விரும்பு

இமைகளை மூடினேன்
இரவுகளை கனவுகளால்
பூட்டினாய்!
இளங்காலை இம்சையாகிறது!
பூட்டிய கனவுகளோ
பூவின் சுமையாகி
சுமைதாங்கா சூழ்ச்சி
நிழலாகி
நீயும் தொடர்கிறாய்!
கோபம் நிழல்மீது
விழ!
நீயோ என்மீது விழ!
இது கனவா,,
இல்லை நனவா,, கண்ணத்தை கிள்ளிப்பார்க்கும் சோதனையும்
நீயே செய்தாய்!
நனைந்த
உடலை சிலிர்த்து சிங்காரிக்கும் பறவையாக நானானேன்!
காதலியே
நீ மெய்தானோ!
காதல் நம் கையில்
கனிதானோ!
செங்கீற்றில் சிலை வடித்த
கதிரவனே!
கேள்!!!
காதல் புரிதலின் தருவாயில்
பிறைநிலா மூழ்கிடாது
பிறவியை மறைத்திடாது
மண்ணுலகு மகிழ்ந்திடும்
மழலை போலே
காதல்
கொஞ்சி குலாவிடும்!
குமரிக் காதலும்
குமரிவரை விரிந்துடும்
கொஞ்சமேனும்
கரையொதுங்கு!
கனவுகளை நனவாக்கும்
காதலையும்
நீ விரும்பு!
கதிரவனே
காதலையும்
நீ விரும்பு!

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில்...