Friday, August 29, 2014

-சிறைப்பறவை-

ஆடைக்கும்
உணவுக்கும்
அவசியப்
பணமாதலால்
ஆடையின்றி
படுத்திருந்தேன்!

கட்டில் முழுக்க
மல்லிகையும்
மணம் வீசும்
வாசனைத்
திரவியங்களும்
தெரியவில்லை
மூக்கிற்கு
அந்த மணம்!

மதுவும் சிகரெட் மணமும் கலந்த
கலவை மட்டுமே
கடித்துக்கொண்டே
கொன்றழிக்கிறது
என்னிதழை!

கால்களுக்கிடையில்
அவணுறுப்பு
அழுத்துகையில்!
பசியுடனும்!
வலியுடனும்!
சாகும்

என்வயிற்றுத்
தசையெழுப்பிய
அவ்வொலியை
முனகலென முடித்துவிட்டான்!

முடிவு அறியா
கண்ணீர்த்துளி
மட்டும்
கட்டிலை
நனைக்கிறது!

பசிக்கழுகும்
குழந்தை
இருக்கையில்
பால்குடித்து பதம்
பார்த்த மார்புகள்
அறியவில்லை
அமுக்கிப் பிடிப்பது
அரக்கனென்று!

வலிபொருத்தேன்!
வசைச் சொல்லை
ஏற்றேன்!
மணிதுளிகள்
கடந்தன!

மணிமுத்தான
சிகரெட் சூடுகளின்
மேலே!
விசிறியடித்தான்
பணத்தினை!

பொருக்க
எத்தணித்தேன்
பட்டென
உட்புகுந்தான்
மது பாட்டிலுடனே!
எனை
மணந்தவன்

அனைத்தையும் இழந்தேன்
அதிகாலை
விடிந்தது!
எத்தனை
இரவுகளோ!
எத்தனை
யுகங்களோ!

மணந்தவன்
மதுவால்
இறந்தான்!

மகிழ்ந்தவன் விட்டுச்சென்றான்
வாங்கினேன்
எயிட்செனும் நோயை!

விரையில் எமன்
அழைக்க நானும் போய்சேர்ந்தேன்!

பிள்ளைமட்டும்
பெற்றதற்காய்
பரிகாரம் தேடி! கரைதேர்த்தேன் கடைசிவரை
தாசியெனும்
தாயெனத்
தெரியாமல்!

என்றேனும் உண்மை
அறிந்தால்
உலகை துறப்பானோ!

ஐயோ!

இறந்த பின்னும்
இழிச்சொல்லை
சுமந்தேனே!

நானும் ஒர்
சிறைப்பறவை
தானோ!

-என்னிரவு நிலவுத்தோழி-

கருப்புடை அணிந்து
நட்சத்திரங்களின்
நாடக வெளிச்சத்தில்
வெட்கப்படும்
முகமணிந்தவளே!

நீயெனைக் கவர
கவசமிட்டாயோ!
ஐய்யோ!
உனது
இழுவிசையால்
இலைவிழும்
மரங்களுக்கிடையில்
சிக்கித்
தவிக்கிறேனோ
நான்!

காதலை உணர்ந்து
கண்ணீரில் நனைந்து
கரைந்து போகாத சுயவலியைச் சுமந்து

அதுவும் இனிதெனக் கண்டு இணைசேரா இம்சையுடனே!
எனைப்போலத் தவித்தவனும்
எத்தனை பேரோ!

தனிமையை தனதாக்கி
தனிமரமே சுகமெனக்
கிடந்த இச்சுகவாசிக்கு
சுமையாக வந்தாயா?
இல்லை!
சுவையாக வந்தாயா?

சட்டென கூறாமல்

சாரலில் நனைந்தபடியே
மேக மடியில்
தலை சாய்ந்துள்ள
நிலவிடம்

நீராடும் சாக்கில்
நிதர்சனமாய்
உரையாடி! உண்மை
இதுவென
உரைத்து விடு
அவளதை
ஏற்றால் உனைநான்
ஏற்பேன்!
இவ்வளவு இடமா? நிலவுக்கென
நீ! கேட்டால்
நிச்சயம் முதலிடம் நட்புக்கெண்பேன்
அது பெருமையோ!
பொருமையோ! பொறாமையோ!
நானறியேன்
அதோ! அத்தோழி
அந்நிலவுதான்
எந்தன் தனிமைக்கு
உறவாடி!
உற்ற நட்பாடியது! அந்நிலவுதான்
எனக்கான
தூதினையும் ஏற்கும்!
பிறர்
தூற்றுவதையும்
ஏற்கும்!

எனக்கான தனிமைப் புலம்பலையும், பூரிப்பினையும்
ஏற்றதும்
அந்நிலவுதான்!

சித்ரவதை செய்யாமல்
சீக்கிரம் நிலவிடம் சென்றுவிடு!

பேசா அந்நிலவின்
மவுனமொழி
நானறிவேன்!
சுயம்வரமா? இல்லை
தனிமைச் சுகவாசியா? எம்முடிவும்

சுயநலமில்லா
என்னிரவு
நிலவுத்தோழி தான்
முடிவு செய்வாள்!

Sunday, August 24, 2014

பைசாவில் பணமுதலைகள்

பைசாவில் பணம் பறிக்கும் பணமுதலைகள்:
பொதுவாக நம்முடைய அத்யாவசிய
நுகர்விலிருந்து ஆடம்பர பொருட்கள்
வரையிலும் வாங்கப்படும் பொருட்களின்
விலை நிர்ணய பட்டயலை பார்த்தோமானால்
வரி நீங்களாக மற்றும் உள்வரியுடன்
நிர்ணயிக்கப்படும்
தொகுப்பு விலையானது பைசாவில்
முடியும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக­
்கும் சிறு உதாரணமாக நாம்
காலணி வாங்கச்சென்றால்
அக்காலணி விலைப்பட்டியலை பார்த்தோமானால்
Rs.99.99 என்று இருக்கும் நாம் நூறு ரூபாய்
கொடுத்து வாங்கினால்
1பைசா சில்லரையை வாங்கமுடியாது அல்லது கொடுக்க
முடியாது இது காலணியில
ஆரம்பித்து தலைக்கு இடும் எண்ணெய்
வரையில் இன்று பரவியிருப்பதை நம்மால்
மறுக்கமுடியாது இதில் தான் நம்
பணமுதலைகளின் சூழ்ச்சமம்
அடங்கியிருக்கின்றது உதாரணத்திற்கு திரும்பவும்
காலணியையே எடுத்துக்கொள்ளலாம்
சராசரியாக ஒரு காலணிசந்தையில்
ஒரு நாளைக்கு 1000 காலணிகள்
விற்கப்படுவதாக வைத்துக்கொண்டால் 100
காசுகள் 1ரூபாய் என்ற கணக்கில்
நமக்கு தெரிந்தே அவன் 10 ரூபாய்
பார்த்துவிடுகிறான் இது உதாரணம்
மட்டுமே உண்மைநிலையில்லை ஏனெனில்
1பைசா கணக்கில்
இப்போது நிர்ணயிக்கப்படுவதில்லை காலம்
மாறியது போல் அதுவும்
விலையேறி 1பைசா என்று பட்டியிலிட்டு 99பைசாவாக
நுகர்வோரிடம்
பிடுங்கப்படுகிறது பணமுதலாளிகளின்
இந்த சூழ்ச்சமத்தால் சராசரியாக
ஒரு குறிப்பிட்ட தொகையினை அவர்கள்
இலாப கணக்கில்லா தனி கணக்காக
கொள்ளையடிக்கின்றார்கள் இதில்
ஒரு வேடிக்கை என்னவென்றால் Rs.99.01
என்ற விலையிருந்து நாம் சரியாக ரூ99 ஐ
செலுத்தினால் அந்த 1பைசாதான்
தனக்கு இலாபமென
சொல்லி 1ரூபாயை இலாவகமாக
பிடுங்குவான் பாருங்கள் அதில் தான்
அவன் தொழில் யுக்தி அதீதமாக
வெளிப்படுகிறது ஆக நுகர்வொர் என்பவன்
எப்போதும் எங்கு பார்த்தாலும்
ஏமாந்து கொண்டே தான் இருக்கின்றான்
என்பது வெளிப்படையாக
தெரிகிறது பைசாவினை நீங்கள்
மதிப்பதில்லை ஆனால்
பணமுதலைகளுக்க் அந்த பைசாக்கள் தான்
மூலதனம் வெளிப்படையாக கைபேசிக் கட்ணங்களின் சூழ்ச்சமமும் இதுவாகத்தான்
இருக்கின்றது.

ஒரு தாயின் அழுகை

நான் பெத்த மகளே!
காலையில்
பூத்த மலர் கூட
இன்னும்
வாடலியே!

நீ!

வாடிவிட்டாயே என் மகளே!

நான் வளர்த்த
கன்றுக்குட்டி துள்ளிகுதிக்குதடி!

துக்கத்தை நீ தந்து சென்றாயே என் மகளே!

அடி மனசு கலங்குதடி!
அக்கினி பிழம்பாய் எரியுதடி!

விறகு பொறுக்கச் சென்றவளை
விரட்டிப்
பிடித்தான் எமனென்று!

நீ செத்த
சேதி கேட்டு!
பத்து மாசம் சுமந்த
வயிறு பத்தி எரியுதடி!

இன்றோடு பத்து ஆண்டுகளாய்!

கண்ணீரில்
கலங்கியபடி காலம் சென்றதடி!

கண்ணாடி பக்கத்தில் கண்ணே உன்
பிம்பமடி!

நான் பெத்த மகளே மண்ணிற்
கிரையானாயே!

Thursday, August 21, 2014

--ஹைக்கூ--மேனகைகள்

சத்தான தழைகளை
தேடியது
ஆடு
கத்தியுடன் கசாப்பு
-கடைக்காரர்


*****+***+***+****


பலநாளாய் தேடிய
பறவை
இறந்து கிடந்தது
-விமானம்


*****+***+***+****


அம்மி
எங்கென
தேடியது குழவி
பிறந்தது
-ஆடி


*****+***+***+****


பசியில் குழந்தை
குடிகார தந்தை
-எழுந்தான் எமன்


*****+***+***+****


இம்சையில்
பஞ்சுமெத்தை
அனல் பரப்பியது
-காமம்


*****+***+***+****


ஏவாளுக்கு
திகட்டியது
நியூட்டனின்
கரங்களில்
-ஆப்பிள்


*****+***+***+****


மலரை தழுவி
தரையில்
அழுக்கானது
-மழைநீர்


*****+***+***+****


மஞ்சள் வாசத்துடனே
மேனகைகள்
ஊர்வலம்
காலை முகம்
காட்டியது மலர்


*****+***+***+****


குங்குமம் தூவி
கண்ணயர்ந்தது
-இளங்கதிர்


*****+***+***+****

புன்னகையை பூக்கவிடு!

உனக்காக ஓர்
குடிலை அமைத்து
ஊசி முனையில்
ஒற்றைக் காலுடனே
நான்!

ஓராயிரம்
ஓவியங்களை
ஒரு நொடியில் சிதைத்தால் ஒடிந்து போவானே அக்கலைஞன்!

அவ்வலியை ஒருபோதும்
கொடுத்து விடாதே!

நம் குடிலை
எக்கணமும்
சிதைத்து விடாதே!

சரியெனச் சம்மதம் சொல்லிவிடு!
உன் முகத்திலே புன்னகை
பூக்கவிடு!
நம் குடில்
ஒளிரட்டும்
அன்பே கழுத்தில்
மாலையிடு!

--ஹைக்கூ--தேசிய குப்பைத்தொட்டி

ஏணிக்கு
தெரியவில்லை
எட்டி உதைப்பது
நம்பி வீழ்ந்தான்
-அவன்

***************

மழலையும்
கணவனும்
மேடையில்
மங்கையின்
கையில்
தாய்மை விருது

***************

காட்சியில்
பசிக்கான
உணவு
விடிந்ததும்
விடியாத
ஏழையின்
கனவு

***************

ஊனமான
உடற்பயிற்சி
சாதகமாக்கியது
-சிசேரியன்

***************

அரைகூவலிட்ட
பிச்சைக்காரன்
தேசியமயமானது
-குப்பைத்தொட்டி

***************

***************

அம்மாவின் "முத்தம்"

தத்தி நடக்கையில்
தவறிய காலுக்கொரு
முத்தம்!

அடம்பிடிக்கையில்
அழுகைக்கொரு
முத்தம்!

அம்மா! என்றழைக்கையில்
இதழுக்கொரு
முத்தம்!

குறும்பு செய்கையில்
கைகளுக்கொரு
முத்தம்!

பொம்மை உடைக்கையில்
பொய்யழுகைக்கொரு
முத்தம்!

உறங்கும் வேளையில்
சிறு புன்னகைக்கொரு
முத்தம்!

பாலுக்கு அழுகையில்
பசிவயிற்றுக்கொரு
முத்தம்!

அப்பாவை விரல் காட்டியதில்
உடலெடுங்கும் முழு
முத்தம்!

முழுதாய் நானும்
வளர்ந்தேன் முடியவில்லை
முத்தமழை!

உணர்ந்தேன்!
உயிர்துடித்தேன்!
உலகை ரசித்தேன்!
உறவில் கலந்தேன்!
உண்மை உணர்ந்தேன்!

அரியணை அவசியமில்லை
அன்னைமடியே
ஆருதலென்று!

உயிர்கொடுத்த
உள்ளத்திற்கு
உயிர்மூச்சாய்
இனி காலம் முழுக்க உடனிருப்பேன்!

இறைவா! மன்னியும்
இனி இரு கை முதலில் அன்னையை வணங்கும்!
அதன் பிறகே உன்னை வணங்கும்!

"கைநாட்டு"

நீங்கதான் எங்களை எல்லாரையும் படிக்க வச்சுட்டீங்க நாங்களும் படிச்சிட்டு
நல்ல உத்யோகத்தில தான் இருக்கோம் அப்புறம் ஏம்மா எங்கள அசிங்கப்படுத்துர,
நாங்க தான் கையெழுத்து போடவும் கத்துக்கொடுத்துட்டோம்
படிச்ச புள்ளைங்களோட அம்மானு சொல்ரதுக்கே வெட்கமா இருக்கும்மா எப்போ
பார்த்தாலும் யார் நீட்டினாலும் "கைநாட்டு" தானா? பேனாவ புடுச்சி அப்டி
ஸ்டைலா போட்ரது நல்லா இருக்கா அந்த மையை அப்படியே கட்டவிரல்ல அப்பி
அழுக்கா அங்கங்க பூசி அந்த மையை தலைல வேற தேச்சி போம்ம்மா அசிங்கமா
இருக்கு எப்போதாம்மா நீ திருந்த போற , உனக்கு மேல நைனாவும் இப்படித்தான்
கடிதாசிலேருந்து தாலுக்காபீஸ் வரைக்கும் "கைநாட்டே" வைக்குறாரு,
கேட்டவன்
கேட்பாரற்று கிடந்த அதுவும் அனாதையாகிபோன அரசு ஆஸ்பத்திரியில்
மூனாவதாக பிறந்தவன் மூத்தவனுக்கு முந்தி காலேஜுக்கு போனவன்,
பிரசவ வலி பொருத்து பிஞ்சு முகத்த பார்த்தவுடன் பட்ட அதே சிரிப்பில்
அழகாய் சொன்னாள் அம்மா!
அதுவொன்னுமில்லடா செல்லம் நீங்க எனக்கும் உங்கப்பாவுக்கும் கையெழுத்து
போட கத்துகொடுத்த மாதிரி உங்க ஆயாவுக்கும் தாத்தனுக்கும் அதுக்கும்மேல
பாட்டனுக்கும் நாங்க கத்துக்குடுக்குற அளவுக்கு பள்ளிக்கூடமும் இல்ல
இருந்த பள்ளிகூடத்திலும் அனுமதி இல்ல பால்வாடினு ஒன்னு இல்லவே இல்ல இப்ப
நீ படிச்சு போடுர கையெழுத்துக்கு பின்னாடி நானும் உங்கப்பனும் மட்டும்
காரணமில்ல நம்ம நாட்ல இதுக்குனே செத்தவனுகளாள தான் ஒன் அஞ்சு வெரலும்
கும்முட்டு பேனா புடிக்குது அத எப்பவுமே நீ மறக்க கூடாதுனு தான் இன்னக்கி
வரைக்கும் கத்துகொடுத்த கையெழுத்துல பெரும படாம நானும் உங்கப்பனும்
கைநாட்டே வைக்கரோம் அத நீயும் ஒணரனும்யா
இதுல யாரு திருந்தனும்னு சொல்லு நாம இதுலயெல்லம் கவுரவம் பாக்கலாமா போய்
பேனாவுல மையி இருக்கா பாருயா இல்லனா சொல்லு வாங்கிட்டுவந்துட்ரேன்
("கைநாட்டு" பற்றி மிகக்கேவலமாக அதை ஏதோ அசிங்க வார்த்தையாக ஆகாதவரை
திட்டுவதற்குத்தான் இன்று பலர் உபயோகிக்கின்றார்கள் அதையும்
அறிவுஜீவிகளாக காட்ட பகிர்ந்து கொள்கிறார்கள்
கைநாட்டு அவமானமல்ல பலகைகள் அடிமைக்கெதிராக அனுமதி கேட்டு அது எங்கள்
உரிமையென மேலோங்கியதால் தான் உங்கள் கைகள் "கையொப்பம்" இடுகின்றது .

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...