Tuesday, March 31, 2015

பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

இது என்னுடைய பழைய முகநூல்(facebook)பதிவு. 4Nov2014 அன்று எழுதியது.
குமுதம் இதழில் கமல்ஹாசன் அவர்களின் பேட்டியொன்றை அப்போது படிக்க
நேர்ந்தது அதன் விளைவாக பதிவிட்டிருந்தேன். பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நல்ல (சிறந்த)நடிகர் நல்ல இயக்குநர்
சமூகசேவையில் அக்கரையுள்ளவர் அவ்வளவே அதையே காரணங்காட்டி நடிகர்
கமல்ஹாசன் பகுத்தறிவாதியென மதிப்பிடுவதென்பது
ஆகாதொன்றாக தெரிகிறது. சுய சிந்தனையில் அவர் ஒரு பகுத்தறிவாளரா என்கிற
கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் தொடர்ந்து தன் படங்களில் "சைவ
,வைஷ்ணவ மோதல்களை காட்டியே அவர்களுக்குண்டான இணக்கத்தை ஏற்படுத்தும்
முயற்சியில் தான் கமல் அவர்களின் சுயமாக இருக்கிறது . "எட்டில் ஐந்துஎண்
கழியுமென்றால் ஐந்திலெட்டு எண் கழியாது" "எல்லாமுடைய சிவனே போற்றி"
என்பதை வில்லத்தனமாகவும்,இதுபோன்று பல நுனுக்கமான எல்லா குறியீடுகளும்
இன்னும் அவரின் படங்களில் வரிசை கட்டிநிற்கும் இந்த இந்துத்துவ சைவ
வைஷ்ணவ சமாச்சாரங்களை திரையில் மிளிரச்செய்வதுதான் பகுத்தறிவுபோலும்
இதற்கிடையில் "கடவுள் இல்லையென்றுச் சொல்லவில்லை இருந்தால் நல்லதெனத்தான்
சொல்கிறேனென்ற வசனங்களை காட்டியவரல்வா அவர் இன்னும் அனைத்து படங்களையும்
குறிப்பிடலாம். அவரிடம் சில கேள்விகளை அதே துறையிலிருப்பவர்கள் கேட்பதாக
குமுதம் ஒரு கேள்விபதில் பேட்டியினை வெளியிட்டது. அதில் நடிகர் சத்யராஜ்
அவர்கள் ஒரு கேள்வியினை எழுப்புகிறார், "பெரியாரிசம் மார்க்ஸியம் ஒற்றுமை
வேற்றுமை என்ன சார்?

கமல்ஹாசன் பதில் :

"ஒன்று இனம் சார்ந்தது மற்றொன்று வர்க்கம் சார்ந்தது" எல்லா இசங்களுமே
மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்கானகருவிகளே! மனித இன்னல்களுக்கான நிரந்தர
தீர்வு அல்ல அவை, அப்படி ஆக்க முற்பட்டால் பெரியார் பைபிளும், மார்க்ஸிய
திருமறையும் தோன்றி அவை மதங்களாகி விடும் .
இது தான் அவரளித்த பதில்.
இப்போது பதிலை அலசிவிடலாம்
" மார்க்ஸியம் பெரியாரிசம் முழுக்க முழுக்கு கடவுள் மறுப்பினை ஆணித்தரமாக
அறிவுறுத்தும் இஸங்கள்.

புத்தக எழுத்துக்களில் வேண்டுமானால் கம்யூனிசம் வர்க்கமாகவும்
பெரியாரிசம் இனமாகவும் அலங்கரிக்கப்பட்டிருக்காலாம், ஆனால் இரண்டுமே
இனம், வர்க்கம் ஆகிய இரண்டினையும் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது.
ஒன்று ஒன்றை மட்டுமே பேசுவதாக ஏற்றுக்கொள்ளமுடியாது அனைத்து தளங்களிலும்
தன்பங்களிப்பினை அங்காங்கே செதுக்கி வைப்பதில் பெரியாரிசமும்,
மார்க்ஸியமும் இனைந்தே செல்கிறது. அவை மனித மேம்பாட்டிற்கான நெறியினையும்
கற்றுக்கொடுக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கான வழிகாட்டியாகவும்
விளங்குகிறது.மதமொரு அபின் என்கிற மார்க்ஸியமும் மதத்தை கற்பித்தவன்
முட்டாளென்கிற பெரியாரிஸமும், மனித மூளையை விலைபேசும் அனைத்து
மனிதர்களின் திமிரையடக்கி மன்னிப்பினை கோரச்செய்துவிடுகிறது . பெரியார்
பைபிளும் மார்க்ஸிய திருமறையும் எப்படி உறுவாகுமென்று இவர் நினைக்கிறாரோ
என்று தெரியவில்லை. ஒருவேளை தம்மதப்பற்று அவ்வாறு கமல்ஹாசனுக்கு
கற்பித்துத்திருக்கலாம்.

மார்க்ஸிய சித்தாந்தம் ரஷ்யாவில் பரப்புரை செய்கின்ற காலத்தில் அதன்
வளர்ச்சியை தடுக்க முடியாமல் திணறிய நிலபிரபுக்கள் ஒன்றிணைந்து
மார்க்ஸியம் ஒர் "புது மதத்தினை பரப்புகிறது" மக்கள் அம்மதத்தினை
போற்றிப் புகழ்பாட வேண்டுமென்பதே அதன் நோக்கமென பரப்புரை செய்தது. ஆனால்
கம்யூனிசத்தை ஏற்றவர்கள் அதற்கு செவிசாய்க்காமல் அப்பொய்புரட்டினை
அடியோடு கலைத்தெறிந்தார்கள். கம்யூனிசம் எப்போதும் மதமாகாது
மதத்திணிப்பின் அவசியமும் கம்யூனிசத்திற்கில்லை. என்பது தான்
கம்யூனிஸத்தின் நூற்றாண்டு வெற்றி இதுபோலத்தான் பெரியாரிசமும்
தமிழ்நாட்டில் பெரியாரின் எழுத்துக்களை மதமாக்கப்படுமென்ற எண்ணமிருந்தால்
அதற்கான சூழ்ச்சிகளை களைத்தெறிவதில் தான் பெரியாரிஸத்தை ஏற்றவர்களின்
முதல் பணியாக இருக்கும். இன்றும் இடைவிடாது அப்பணியும் நடந்து
கொண்டிருக்கிறது. எப்படித்தான் தமிழை திருப்பிப்போட்டு இருக்கு? இல்லை?
என்கிறமாதிரியே பேசினாலும் இவ்விரு இஸங்களை ஏற்றவர்கள் எங்களை நாங்களே
ஒருபோதும் பகுத்தறிவாளனென சொல்வதில்லை கமல்ஹாசன் சார், இன்று வரையில்
கருத்தியலாளராகத் தான் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் நாங்களாவே
இருக்கின்றோம். நீங்கள் நீங்களாவே இருங்கள் இதற்கிடையில் பகுத்தறிவென்பதை
அடகு வைக்காதீர்கள். நினைவுபடுத்த வேண்டிய நிகழ்வொன்றும் இதில் உள்ளது.
இட்லியில் கம்யூனிசத்தை சுட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விலைபோன
குளிர்பான நடிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் ஒன்றும் அதற்கு இணையானவரில்லை
என்பதே குறிப்பிட்டே ஆக வேண்டும் ஏனெனில் அன்பே சிவம் என்றொரு படத்தில்
அழகான கம்யூனிஸத்தை புறக்கணித்தவர்கள்தானே நாம். கம்யூனஸ எழுச்சியில்
முக்கிய பங்காற்றிய வீதி நாடகம் வீழ்ந்து விடவில்லை என்பதை
எடுத்துரைக்கும் 910 என்கிற வீதிநாடகத்தை அவ்வளவு சிறப்பாக
காட்டியிருப்பார் கமல்ஹாசன் அப்படத்தில். அதன் இயக்குநர் சுந்தர். சி
அவர்கள் அன்பே சிவம் படம் போல இனியும் எடுக்கப்போவதில்லை என மனம்
வருந்திச் சொன்ன வார்த்தைகளில் அப்படத்தின் படுதோல்வியடையச் செய்த
நம்மவர்களுக்கு ஏனோ வருத்தமொன்றே வருவதில்லை காரணம் சினிமாவில் சமூகம்
காட்டினால் நமக்கு சலிப்புதானே வருகிறது. எது எப்படியோ தற்போது
அடுத்தடுத்து வெளியாகப்போகும் "உத்தமவில்லன்,பாபநாசம்,விஷ்வரூபம்2, ஆகிய
படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் . அப்படத்திலேயும் சைவ வைஷ்ணவ
குறியீடுகளை கான ஆழ்ந்த எதிர்பார்ப்புடன் கருத்தியலாளன்.

நுங்கு வண்டி

மாற்றமில்லை
மாற்றமென்றே
மனதேற்றமில்லை
வற்றிய நீரில்
வழிந்தோடும்
கழிவுகளைபோலே
மனிதனை
நுகர்கிறது
சாலைகள்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

இவனொரு
கிராமத்துவாசிதான்
தொலைந்து
போனதே
கிராமத்தோடு
கிழக்கு வாசலும்

கோடையில்
எரியும் உடம்புக்கு
எதற்கிந்த உடை

தேவையில்லை
நுங்கு வண்டியோடு
நாங்களும்
கருத்திருப்பது
அழகுதான்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

சிறைபட்டு
பெற்றோரால்
அடிபட்டு
அவர்களெழுதும்
அதிகாரத்தில்
அடைபட்டு
வளரும்
தளிர்களை விட

ஆலமர விழுதுகளில்
ஊஞ்சல் கட்டி
ஊமைக் கனவுகளை
சாக்கில் மூட்டைகட்டி
கூட்டாஞ்சோருக்கு
கூடி நிற்கும்
எம் இளம்பிஞ்சு
குஞ்சுகளுக்கோர்
கூடு கட்டி
வாழும் பருவமேண்டும்
வழிமறித்தல்
நியாயம் தானோ

பனையோரும்
பொழுதுகளில்
பசியறியாத
வயிற்றினையும்
வந்துதைப்பது
நியாயம் தானோ
எம் பால்யத்தை
பறிப்பதில்
தானா பட்டாசு
வெடித்து
கொண்டாடுகிறீர்

வேண்டாம்
விட்டுவிடுங்கள்
இன்றைய
நுங்குவண்டி
நாளைய விமானமாகலாம்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

Friday, March 27, 2015

டாஸ்மாக்கெனும் சாக்கடையில்

விரலில் மையிட்டு
விழுந்து கிடக்கிறான்
டாஸ்மாக்கெனும்
சாக்கடையில்,,,

தூக்கி தோள் கொடுக்க
கூச்சமெடுக்கிறது
அவன் வாயில்
வந்துவிழும்
வாந்தியிலும்
விழுந்த சாக்கடையின்
நாற்றம்
தெறிக்கத்தான்
செய்கிறது,,,

குடித்திருக்கிறானவன்
தன்னை மறந்து
தன்னுற்றத்தாரை
மறந்து
தன் சமூகத்தையே
மறந்து
தவழ்ந்து தவழ்ந்து
சாலையையும்
சாக்கடையாக்கி விடுகிறானவன்
ஒவ்வாத மதுவின்
வேலையிதுவென
அறிந்தும்
அவ்வப்போது அவனும்
குடிப்பெருமையும்
பேசிவிடுகிறான்,,,

இவனும் இவ்வாழ்வை
புசிக்க விடாமல்
அடுத்தவரின் வாழ்வையும்
அழித்துவிட்டு
வேகமெடுக்கிறான்
வண்டியில்,,,

விழும் மரணச்சத்தங்கள்
இவன் காதுக்கு
மட்டும்
விழவில்லையே
எப்படி?

அவன் மட்டுமா
குடிபெருமை
பேசுகிறான்
இல்லவேயில்லை
டாஸ்மாக்கில்
தன்னை விற்று
போலி மகிழ்சியில்
போதை வேண்டும்
போலி கவலையிலும்
போதை வேண்டுமாம்
இவர்களுக்கு,,,

எதுவும் நிரந்தரமில்லை
மரணம் தவிரவென தெரியாமல்,,,

மரணவேதனையானும்
மன்றாடி வாங்கிய
மதுபாட்டில் முத்தமிட்டு
மனதை இளகுவாக்குகிறதாம்
இளிச்சவாய
சமூகம்,,,

அரசும் ஆதரவாய்
நிற்கையில்
அவர்களும்
என்ன செய்வார்கள்
பாவம்,,,

வாக்குச் சேகரிக்க
வேண்டுமெனில்
மதியாயுதத்தை
மதுவால்தானே
வீழ்த்திட முடியும்
விவரமறிந்த
அரசுதான்,,,

வீழ்ந்து கிடப்போரே
குடிபெருமை
பேசுவோரே
கொஞ்சமேனும்
செவி சாய்த்து விடுங்கள்,,,

குடிப்பது நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடென
எழுதி வைத்தவன்தான்
பணக்காரனாகிறான்
இங்கே,,,

படித்தபிறகும்
வாங்கிப்பருகுகிறீர்
பரவாயில்லை,,,
நீங்கள் ஏழையென
பணக்காரனுக்கு
தெரிந்த விஷயம்
தானே,,,

மதுவில் மதியிழந்து
மரணத்தை நீங்கள்
தழுவும் போதேனும்
வளரும் டாஸ்மாக்கையும்
வளர்த்தெடுக்கும்
அரசையும்
வாழ்த்தி விடாதீர்கள்
வருங்கால சந்ததிகள்
பாவம்
வயிற்றில்
அடிக்காதீர்கள்
குடித்துடலை
அழிக்காதீர்கள்
குடிபெருமையும்
பேசாதீர்கள்
பிறப்பெடுப்பதே
நாம்
வாழ்வதற்குத்தானே,,,

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .4 (பொருளாதார நிலை மற்றும் ஊடகப்பொறுப்புநிலை)

குடும்ப உறவுநிலைச் சிதறல்களுக்கு முக்கிய பங்காக மேற்கண்ட இரண்டையும்
குறிப்பிடலாம் பொருளாதார நிலை இதில் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
விடுகிறது என்று கூடச் சொல்லலாம் என்னதான் கடும் உழைப்பினை செலவிட்டாலும்
அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையையே மக்கள் பெற்றுள்ளனர் ஒரு
மனிதனுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவன்தன்
குடும்பச் சுமையை பிரித்தாளும் சக்தியாக மாற்றியக்கொள்ள இயலாதென்பது
இன்றையச் சூழலில் வெட்டவெளிச்சமாக்கப்ப­ட்டுள்ளது ஒரு மனிதன் தன்
குடும்பச் சுமையை இலகுவாக்க உழைக்கின்ற போது ஊதியத் தட்டுபாட்டால்
தன்குடும்ப உறுப்பினர்களை வெகுவாக தளர்த்திவிட நினைக்கிறான் அதன் பின்
தன்னுடல் தன்வாரிசு தன்மனைவி என்ற சூழலில் அவன் வாழமுற்படுகிறான் இதன்
விளைவாகத்தான் இன்று முதியோரில்லங்கள் பெருகிக்கொண்டிருக்க காரணமாக
அமைகின்றது இது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் நடவடிக்கையாக
இருக்கின்றது இதுவே ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்கள் தனக்கே
வருமானமில்லாச் சூழலில் அல்லாது உழைப்பிற்கான ஊதியப்படி தனக்கான
குடும்பச் சூழலை தாங்கிப்பிடிக்க போதுமானதாக இல்லாநிலையில் குடும்ப
உறுப்பினர்களை தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது உறவுகளை புறந்தள்ளும்
நடவடிக்கைகளுக்காக வன்முறை மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுவது போன்ற
செயலில் ஈடுபடுகிறார்கள் இதில் நடுத்தர மற்றம் மேல்தட்டு மக்களும்
மறைமுகமாக செய்கின்றனர் ஆனால் அது வெளிவருவதில்லை காரணம் தனக்கான
அந்தஸ்த்து சமூகத்தில் பாதிக்கப்பட்டுவிடுமெ­ன்ற சூழலில் மறைமுகமாக அந்த
சமூகத்திற்கே தெரியாமல் குடும்பச் சிதைவு நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றார்கள் மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் செயலும்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களின் செயலும் ஏறக்குறைய ஒன்றாகவே
கருதப்பட வேண்டும் இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்ப உறவுநிலைச்
சிதறல் வெளிப்படையாக நிகழ்வதால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை அது
நிகழ்த்திவிடுகிறது இதனை நியாயப்படுத்தும் நோக்குடனே சமூகம் நகர்ந்து
கொண்டிருக்கின்றதென்ப­தை நம் கண்முன்னே கானுகின்றோம்
இதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இன்றையச் சமூகம் நகர்கிறது அல்லது
நியாயப்படுத்துகிறது ஒரு குடும்பச் சிதறலினால் ஒட்டுமொத்த சமூகமும்
பாதிப்படைகின்றது இதனை ஒரு விதத்தில் தூண்டிவிட்டு தனது ஓட்டினை
தக்கவைத்துக் கொள்ளும் அரசியலும் அரசியல்வாதிகளும் கூட ஓர்
சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்த மறுக்கிறார்கள் காரணம் அதில் ஆதாயம்
இருப்பதனால் அன்றாட நிகழ்வுகள் நாம் உற்று நோக்கினால் ஒரு புறம் விலைவாசி
உயர்வு தொழில்முனைவோருக்கான வேலைவாய்ப்பின்மை அப்படி பணிகிடைத்தாலும்
உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை என பல பொருளாதார தடைகளால் வெகுசன மக்கள்
தங்கள் குடும்பச் சிதைவினை நியாயப்படுத்தியே நகர்வதை நாம் கானலாம் சமூக
கட்டமைப்பில் இவ்வாறான உறவுநிலைச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் பொருளாதார
பகுப்பாய்வு, உழைப்பிற்கான உண்மை ஊதியம், அரசியல்நிலை, வறுமைக்கான
காரணங்கள் அக்காரணத்திற்கான தீர்வுகள் என்று அலசி ஆராய வேண்டிய அவசியம்
மக்களுக்கும் மக்களை வழிநடத்தும் அரசிற்கும் அவசியத் தேவையை உணரும்
தருவாயில் நாம் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை என்பதே சமூக இழிவிற்கு
தானாகவே வழிவகுத்துவிடுகிறது இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த
சமூககட்டமைப்பை உடைத்தெரிய முற்படும் ஊடகமும் இதற்கு நேர்மாறாய் தனது
பணியை தொடர்கிறது அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் பத்திரிக்கைகளும்
ஊடகங்களும் தங்களுக்கான இன்றை விளம்பரச் செய்தி கிடைத்திருக்கிறது என்று
எண்ணி தினமும் கொலை கொள்ளை வன்முறை வண்கொடுமையென படிப்படியாக
கட்டவிழ்க்கப்படும் சமூகசீர்கேட்டு நிகழ்வுகளை மட்டும் படம்பிடித்துக்
காட்டி தனது கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறது அந்நிகழ்வுகளுக்கான
காரணவகைகள் தீர்வுகள் அவற்றை நிறுத்த அரசு என்னென்ன நடவடிக்கைககள் எடுக்க
வேண்டுமென்று எடுத்துக் கூறும் தனது கடமையிலும்
தவறவிட்டுக்கொண்டிருக­்கிறது இதில் அரசியல் சாதிமத பாரபட்சம்
பார்க்கப்படுகிறது என்ற உண்மையும் ஊடகத்தின் மீதான அவநம்பிக்கையை
வளர்த்தெடுக்கிறது இன்று பெருமக்களால் பார்க்கப்படும் விவாதங்கள் மற்றும்
குற்றங்களுக்காக சுமூகத் தீர்வு காணுவாதாக பொய்ப்பிம்பம் கொண்டுள்ள
தொலைக்காட்சி பஞ்சாயத்துக்களில் வெகுசன மக்கள் வறுமையிலும் சமூகத்தால்
ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட மக்களே கலந்துகொள்கிறார்கள் அவர்களை
தேடிப்பிடித்து தங்களது விளம்பர யுக்தியை ஊடகங்கள் கையாளுகின்றன என்பது
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளலாம் இது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் நடவடிக்கை என்பதை ஊடகங்களுக்கு தெரிந்தும் தங்களது இலாப
நொக்கிற்காக மக்களை பலியாக்குகிறார்கள் இதிலிருந்து ஊடகங்கள் வெளியேற
முற்பட வேண்டும் அரசு அனாதை இல்லங்களையும் முதியோர் இல்லங்களையும்
நியாயப்படுத்துவதிலிர­ுந்து வெளியேறி மக்களுக்கான உண்மைத் தீர்வுகளை
கண்டறிய முற்படவேண்டும் அரசியலாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும் ஒரு குடும்பம் சிதறினால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் இது ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச்
சிதறலென்ற தலைப்பினை தாங்கியிருந்தாலும் அனைத்து மக்களுக்குமான ஓர்
அரைகூவலாகத்தான் தீர்வுகளைத்தேடி இச்சமூகம் முன்னேற்றப்பாதையில்
சென்றுவிட வேண்டும் என்பதற்கான முழுப்பங்களிப்பையும் நாம் தந்துவிட
கடமைபட்டுள்ளோம்.


முற்றும்.

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .3 (கல்வி மற்றும் சுய அறிவின்மை)

ஒரு குடும்பம் எந்தச் சூழலிலும் சிதறாமல்
இருப்பதற்கு அவர்களின் சுயபுத்தியும்
அறிவுத்திறனும் வளர்த்தெடுக்கப்பட
வேண்டும் அதற்கு முதன்மையாக அவர்கள்
கல்வியறிவு பெறுதல் வேண்டும் ஆனால்
அக்கல்வி பெறுவதிலும்
முரண்பாடுகளை வைத்துள்ள நாம்
எப்படி சுயசிந்தனையுடன் நடந்துகொள்ள
முடியும் இதுதான் குடும்பம் இப்படித்தான்
குடும்பம் இருக்க வேண்டுமென்ற
சூழலை கல்வியறிவில்லாமல் அவர்களால்
பிரித்தெடுத்து பகுத்தாய்வு படுத்த
முடியாது இதற்கு ஆதிகாலம் முதல்
அண்மைக்காலம் வரை கல்வியில் உள்ள
ஏற்றத்தாழ்வுகளும் காரணமாக
அமைகின்றது ஒரு சாரருக்கு கல்வி கற்கும்
உரிமையும் மறுசாரருக்கு அதற்கான
உரிமை மறுப்பும்
அன்றிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது கலை இலக்கியம்
தமிழ்க்கலாச்சாரம் பேணிகாத்த ராஜராஜ
சோழகாலத்தில் தான்
தமிழ்க்கல்வி புறந்தள்ளப்பட்டு சமஸ்கிருதம்
வளர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் தான்
குருகுலக்கல்வியில் வருணபேதம்
அதிகமாக அமல்படுத்தப்பட்டதென்றும்
வரலாறு குறிப்பிடுகின்றது இது தமிழ்மொழிச்
சிதைவு என்றும் சொல்லிவிட
முடியாது தமிழுக்கும் முக்கியதும்
கொடுக்கப்பட்டது ஆனால்
சமஸ்கிரதமொழியின்
சார்பினை தமிழ்மொழி என்ற போக்கில்
உறுவாகிய ஓர் காலக்கட்டம்
அவ்வாறு ஆரியர்கள்
தமிழர்களை நம்பவைத்த காலகட்டத்தில்
கல்வி மறுக்கப்படும்
போது வியப்பேதுமில்லை
இதே சூழல் இன்றளவும்
நடைபெறுகின்றது ஆனால்
அது கண்ணுக்கு புலப்படா மறைமுகமாக
நடைமுறைபடுத்தப்படுகிறது ஆக
கல்வியில் புறந்தள்ளிய மக்கள் குடும்ப
உணர்வுகளை எப்படிச் சரியாக பார்க்க
முடியும் ஒருபுறம் கட்டாய கல்விமறுப்பும்
இன்னொரு புறம் வறுமையும்
சேர்ந்து வாழ்வதெப்படி என்ற மன
உலைச்சலில் தான் பெரும்பாலான
குடும்பங்கள் சிதறிக்கொண்டிருக்கிற­
து ஒருவனுக்கு தேவையான
மூன்று வேளை உணவிலேயே அவனுக்கு இருவேளை அல்லது ஒருவேளை உணவுக்கே அவன்
கஷ்ட்டப்படும் வேளையில் குடும்ப
உறுப்பினர்களை வெளியேற்றுவது அல்லது துரத்துவதைத்
தவிற அவனுக்கு வேறுவழித்
தெரியல்லை நம்மால்
முடியாததை அவனே பெற்றுக்கொள்ளட்டும்
என்ற மனநிலையில் கூட இச்சூழல்
அவனை தள்ளப்பட்டிருக்கலாம்
ஆது விலங்கின
யுக்தி என்று சொல்வார்கள் எவ்வாறெனில்
எந்த ஒரு விலங்கினும் தன் இறுதிக்காலம்
வரை தன்னால் பெற்றெடுத்த சேயுடன்
காலம்
கழிப்பதில்லை கருவிலிருந்து வெளிவந்த
சேயானாது தனது உதவிநாடும் வரையில்
தான் தாய் தன்னுடனே வைத்திருக்கும்
பின்பு சிறிது வளர்ந்தவுடன் தனியாக
உணவுதேடிச் சென்றிவிடுமாறு தாய்
துறத்திவிடும் அல்லது விரட்டிவிடும்
அதற்குப் பின்பு தாய் சேய் என்பதற்கான
உறவு விரட்டிவிடப்பட்ட
நாளிலிருந்தே முடிவுக்கு வந்துவிடும்
தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்
இதே போலத்தான் மனிதச்சமூகமும்
நடைமுறைப்படுத்துறது இதில்
எது நல்லது எது கெட்டதென்று தெரியாமல்
இயற்கையுடன் போரிடத்
துணிவில்லா விலங்கின
அறிவை கல்வி மற்றும் சுய
அறிவின்மையால் மனிதன்
பெற்றுவிடுகிறான்.
அவனுக்கான அந்த
சுயபுத்தியை வளர்த்தெடுக்க
முற்படவேண்டுமானால்
மனிதனை புறந்தள்ளி அவனுக்கான
அடிப்படி உரிமைகளை மறுக்கும்
சமூகத்திலிருந்து அவனை மீட்டெடுக்க
வேண்டும். மனித
ஆசைகளை நிர்ணயிப்பதில்
பெரும்பங்காற்றிவருவது பசியும்
பசிசார்ந்த தீர்வுகளும் தான் அளவான
பசிக்கு அவன் தேடிக்கொள்ளும்
உணவுத்தீர்வானது சரிபட நிலையில்
இல்லாதபோது அவன்
தன்குடும்பத்தையே வெறுக்கும்
சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறான்
என்னதான்
அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திய
போதும் கல்வியும் அத்திட்ட தீர்வுகளும்
அவனிடம் சரியாக
போய்ச்சேரவில்லை என்பது மறுக்க
முடியாத உண்மை தன்னுடைய
தேவைக்கு அதிகமாக அவன்
வைத்திருக்கின்ற போது அவன்
உறவு சார்ந்தவர்கள் தானாக கூடுவதும்
இந்த அடிப்படையிலான
மூலகாரணமாகத்தான் இருக்கும்
"பணம்பெற்றவனுக்கு பாச உறவுக்கள்
தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
என்று வழக்க மொழிகளில் சொல்வார்கள்
அதாவது ஒட்டுண்ணி உயிரினத்திற்கு இணையாக
இதை பயன்படுத்துவார்கள் ஆக
இங்கே உறவுநிலைச்
சிதறல்களுக்கு பணமின்மை வறுமை கல்வியறிவின்மை ஆகிய
காரணிகள்
மேலோங்கி நிற்கிறது (இவை அதிகப்படியாக
கிடைக்கின்ற போதும் ஆபத்தாக
அமைகின்றது) தேவையின்
அளவு பசிக்கான தீர்வு கல்விக்கான
அடிப்படை கட்டமைப்பு ஆகியவை ஒரு சமூகத்திற்கும்
சமூக உறுவக மூலக்கூறான
குடும்பத்திற்கும் நிச்சயம் பரந்த அளவில்
அளிக்கப்பட வேண்டும்
ஒரு குடுபத்தலைவன் தனக்கான
தேவைக்கும் அவன் குடும்பத்திற்கான
தேவைக்கும் இரண்டிற்கும்
சேர்த்து உழைக்கின்றான் இதில்
ஒன்று நிறைவேறாவிட்டாலும்
அல்லது இரண்டுமே நிறைவேறாவிட்டாலும்
அவன் சிந்திக்கும்
சக்தியை இழந்துவிட்டு மிருக
வாழ்வை மேற்கொள்கிறான் இதற்கான
தீர்வுகள் என்னென்ன எவ்வாறு இதைச்
சரிச்செய்வதென்று சிந்திக்கும்
ஆற்றலை அவனுக்கும் அளிக்கும்
முதன்காரணி கல்வியானது அவன்
பெறவில்லை அல்லது பெறப்படுவதற்கான
வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனும்
போது இக்குடும்ப உறவுநிலைச்சிதறல்
என்பது தொடர்ந்து நடைபெற்றே கொண்டிருக்கிறது எந்த
குடும்பமும் சிதறிக்கொண்டிருக்கும்
சூழலை பெற்ற
ஒரு குடும்பத்தை அப்படியே உள்வாங்கி அதையே நடைமுறையில்
நியாயப்படுத்தி செயல்முறைபடுத்தும்
சமூகச்சூழலில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த
மனநிலை ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்துவிடுகின்றது இதற்கான
அளவுகோளொ நமக்கு நாமே தீர்மானித்துக்கொள்ள
வேண்டும்.


தொடரும்.....
--

Thursday, March 26, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .2 (சமூக கட்டமைப்பின் சாரம்) :

உறவுகள் சிதறிக்கொண்டிருக்கும்
இன்றையச் சூழலில் அதற்கான
காரணங்களைத் தேடி புலப்படுத்த
வேண்டியது அவசியமாகிறது இதன்
மூலக்காரணி அல்லது கரு என்னவென்று பார்த்தோமானால்
முதல்தொடக்கமாக "சமூக கட்டமைப்பு" தான்
மேலோங்கி நிற்கிறது ஒரு சமூகம்
எவ்வாறு உறுவாக்கப்பட்டது அதன்
சாரம்ஸம் என்ன அது எந்தநிலையில்
உறவுச்சிதறல்களுக்கு உருதுணையாக
இருக்கிறது என்பதை நாம் அறிய
வேண்டும் அந்த நிலையில் ஒரு சமூகம்
எந்த அடிப்படையில்
உறுவாகிறது என்று பார்த்தோமானால்
பெரும்பாலும் அது நகரமாக இருந்தாலும்
சரி கிராமமாக இருந்தாலும்
சரி வளர்ச்சிபெற்ற ஒர் நவநாகரீக நகரமாக
இருந்தாலும் அவை கட்டமைக்கப்படும்
விதம் வருணாசிரம சாதியப்
படிநிலை எவ்வாறு படிப்படியாக
பட்டியலிடுகின்றதோ அவ்வாறே சமூக
கட்டமைப்பும் படிப்படியான
படிநிலைகளுடனே தான்
கட்டமைக்கப்படுகிறது உதாரணமாக ஓர்
கிராமத்தை எடுத்துக்கொண்டோமானால்
அங்கே முதலாவதாக குடியிருப்பவர்கள்
பிராமிணர்கள் இரண்டாவதாக அந்த
கிராமத்தில் எந்த ஆதிக்க சாதியினர்
(வருணாசிரம அடுத்த படிநிலையாளர்கள்)
எவரோ அவர்கள் இருப்பார்கள் இது "ஊர்"
என்று அழைக்கப்படும்
மூன்றாவது இவர்கள் இருவருக்குமான
அடிமைச்சமூகமான தலித்துகள் தனியாக
ஒதுக்குப்புறமாக (ஊருக்கு வெளியே)
"சேரி" அல்லது "காலனி" என்ற
அடையாளத்துடன் வசித்து வருவார்கள்
இதுவே கிராமம் என்று அழைக்கப்படும்
இதைப்போலவேதான் நகரம் மாநகரமும்
அமைந்திருக்கும் ஒரு வித்யாசம்
என்னவெனில் நகரமும் மாநகரமும்
நவநாகரீகப் போர்வையில் மறைமுகமாக
இக்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆக
இந்தச் சமூக கட்டமைப்பில் ஒருவருக்கும்
இன்னொருவருக்குமான
தொடர்பு என்பது அடிமையை விடுத்து வெறெந்த
உறவுநிலையும் இருக்காது ஊர் மக்களின்
பிரச்சனைக்கு சேரியும் சேரி மக்களின்
பிரச்சனைக்கு ஊரும்
ஒன்றுகூடுவதில்லை ஒரு பரஸ்பரத்தை உருவாக்குவதில்லை மாறாக
இவர்களுக்கிடையேயான மோதல்கள்
கலவரங்கள் உயிருழப்புகள் தான்
அதிகமாக இருக்கும் இதில் பெரும்பாலும்
பாதிப்புக்குள்ளாவது சேரி மக்களாகத்தான்
இரூக்கிறார்கள் இது தான்
சாதியக்கலவரமாக வெடிக்கிறது ஆக சமூக
கட்டமைப்பில்
ஒருவருக்கு இன்னொருவருக்குமான
உதவுதல் பாசம் காட்டுதல்
அறிவுறை வழங்கள் அரவணைத்தல்
ஆகியவை இல்லாமல்
போகின்றது பொது வெளியான
சமூகத்திலேயே இவைகள் அனைத்தும்
புரந்தள்ளப்படும் போது குடும்கங்களில்
புரந்தள்ளப்படுவது என்பது வியப்படைய
வேண்டிய விஷயமாக இல்லை இதனால்
எந்த தலையீடுகளும் இல்லாமல்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைகள்
எளிதாக
முறிந்துவிடுகிறது அங்கே எவ்வித
ஒத்துழைப்பும் நடைபெறம்
சாத்தியக்கூறுகள்
இல்லாதநிலையாகிறது இன்னும்
சற்று ஆழமாக பார்த்தோமானால் ஓர் குடும்ப
உறவுநிலைகள் பாசத்திற்காகவும்
ஆதரவிற்காகவும்
அங்கே யாருமில்லை என்றச்சூழலை அறிந்த
பின் தான் உறவுச்சிதறல்
உறுவாகிறது இவைக்கள் பெரும்பாலும்
தனக்கான ஆதரவுக் களமாக இருந்த
கிராமம் தங்களை ஒதுக்கிவைத்திருக்கிற
து இனி எந்த காலத்திலும் எந்த
பிரச்சனையிலும்
அவை பரிந்து வந்து தீர்வு கானும்
நடவடிக்கைகளில் ஈடுபாடாது என்ற
ஆணித்தரமான நம்பிக்கையில் தன்
குடும்ப உறவுகளை சிதறடிக்கின்றது ஒர்
எளிமையான வழக்கச் சொல்
ஒன்று சொல்வார்கள் 'தனியாக
புலம்பி தெருவுக்க
வந்துட்டா அது சபைக்கு வந்த சேதிதான்'
என்று சொல்வார்கள் குடும்பத்திற்கள்
ஒரு வீட்டினுள் நடைபெற்ற
உறவுச்சிதறலுக்கான
சண்டை தெரிவிற்கு வந்துவிட்டால்
அது சமூகப்பிரச்சனையாகிறது அச்சமூகப்பிரச்சனையை எட்டி கூட
பார்க்காத வேடிக்கை பார்த்தால் கூட
தீட்டு என்ற வழக்கத்தில் சமூத்தீர்வு கான
ஊரார்கள் வரமாட்டார்கள் என்ற
தைரியத்துடனேதான் பல
குடும்பச்சிதறல்கள்
நடைபெறுகிறது இதற்கு சட்டமும்
பஞ்சாயத்துகளும் துணைபோகிறது
பல குடும்பங்கள் ஒன்றினையும்
கட்டமைப்பு முறையில்தான் சமூகம்
அல்லது சமுதாயம் உறுவாகும்
என்பது விதி
ஆனால் இங்கே அந்த குடும்பங்கள்
சிதையுண்டு சிதறிக்கிடக்கின்ற
வேளையில் சமூகம் அல்லது சமுதாயம்
எப்படிச்சாத்தியமாகும்
இன்று பெரும்பாலும் சமுகம்
அல்லது சமுதாயம் என்ற
வார்த்தையே சாதித்சமூகம் சாதிச்சமுதாயம்
என்றாகிவிட்ட
சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது ஆண்டான்
ஆளுமையாளன் ஆதிக்கன் என்ற ஒருவன்
இருப்பானெனில் அடிமையாளன்
அடிமைக்காரன் என்ற
ஒரு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்
ஆண்டச்சமூகம் இருக்கையில்
அடிமைச்சமூகம்
ஒன்று இருக்கத்தானே செய்யும் சமுகம்
என்ற காந்தத்தில் வடதுருவம் தென்துருவம்
என்ற ஆண்டான் அடிமைச்
சாதியத்துருவங்கள்
இருக்கச்செய்துவிட்டது நாம்தான்
அதை இணைக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருப்பவர்களும் நாம்தான்
இதில் அடிமைச்சமூகத்தின்
வாழ்வுச்சிதறல்களை பெரும்பாலும்
நிர்ணயிக்கும் சக்தியாக
ஆண்டச்சமூகமென சொல்லிக்கொள்பவர்கள்
நிர்ணயிக்கிறார்கள் ஆக
ஒரு குடும்பச்சிதறலில் ஆதிக்கர்களின்
மறைமுகச் சாதியத் தலையீடுகள்
இல்லாமல்
பிரிந்து போய்விடமுடியாது என்று சொல்லலாம்
இங்கே மறைமுகச் சாதியத்தலையீடுகள்
என்பது சமூககட்டமைப்பை குறிக்கும்
அவர்கள் குடும்பச்சிதறலில்
நடைமுறைப்படுத்தும்
தலையீடாக்கொள்கையே இங்கு மறைமுகத்
தலையீடாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்
ஒரு குடும்பத்தில் இயல்பாக
ஒரு உறவுநிலைச் சண்டை வருகிறதென
எடுத்துக்கொள்வோம்
அவை அக்குடும்பத்தை வெகுவாக
பாதித்தி கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேறி வீதி வரை வந்துவிட்டதென
வைத்துக்கொள்வோம்
வீதிவரை வந்து விட்டாலே அப்பிரச்சனை சமூகத்தை பாதிக்கும்
அல்லது வேறேதும் அதே போல்
பிரச்சனை உருவாகினால்
முன்னதாகவே நடைபெற்றுவிட்டதாக
மேற்கோள் காட்டி நியாயப்படுத்தும்
முயற்சிச் சமூக சீர்கேடாக உருவெடுக்கும்
சூழலுக்கு காரணமான
அப்பிரச்சனையை ஒட்டு மொத்த சமூகமும்
தீர்வைத்தேடி ஒத்துழைப்புத்தராமல்
ஒதுங்கி நின்று அடிமைச்சமூகம்
அழிகிறது இப்படித்தான் என்றும் அந்த
சமூகத்தைப் போல
இருக்காதே என்று தன்சொந்தங்களின்
தவறுகளுக்கு எடுத்துக்காட்டு உரைப்பதுமாக
(உதாரணமாக ,சண்டாளா
பறப்பயபுத்தி, சக்கிளிசவகாசம்,என்று
திட்டுவது ஆதிக்கர்களின் வழக்கம் )
சமூகம்
வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருக்
கிறது அதேபோல் அவர்கள் குடும்பத்தில்
நடந்தாலும் அதையே நியாயப்படுத்த
மறுக்கிறது மாறாக அப்போது தான் அது ஓர்
சமூகச் சீர்கேடாக முன்வைக்ப்படுகிறது ஆக
ஒரே முறையான குடும்பச் சிதறலுக்கான
மூலச்சண்டையானது இருவேறு பார்வையாகவும்
இருவேறு பின்புலத்தோடும் சுற்றி வரும்
சூழலில் சமூகத்தில் அக்குடும்பச்
சிறதலுக்கான
மூலச்சண்டையினை தீர்த்து வைக்கும்
சக்தியாக உருவெடுக்க
மறுக்கிறது இது மிகவும் விபரீத
அழிவை நோக்கி இன்று வேகமாக
வளர்ந்துவருகிறது இந்தியாவில்
தற்போது அதிவேகமாக தனித்து வாழும்
முறை வளர்ந்து கொண்டு வருகிறதென்றும்
குடும்பங்கள் பிளவுபட்டுக்கொண்டிரு
க்கிறது என்றும் அதில் பெரும்பாலும்
ஒடுக்கப்பட்ட
சிறுபான்மை மக்களே இடம்பெருகின்றனர்
என்றும் இந்திய சமூகக்
கூட்டமைப்பு (2011)ஆய்வறிக்கையில்
தெரிவிக்கின்றது இதன் சாரம்சம் சமூக
கட்டமைப்புதான் என்பது இப்போது நன்றாக
புலப்படும் ஓர் குடும்ப
உறவுநிலை சிதறலின்
பாதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்து பின் நடைமுறையில்
அதனை நியாயப்படுத்தும் செயலில்
அதேச்சமூகம் நகர்ந்து கொண்டு போகும்
பாதை அழிவுப்பாதையாக அமையும் ஓர்
குடும்பத்தின்
தாய்தந்தையரை விரட்டுவது குற்றம் சமூக
சீர்கேடு ஆனால் முதியோரில்லம்
அமைத்து அக்குற்றத்தினை நீயாயப்படுத்துவது போலத்தான்
இச்சமூககட்டமைப்பும் ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச்சிதறில் மூலப் பொருளாக
அமைகின்றது.


தொடரும்......

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல்.1

சிதறும் உறவுகளால்
நிகழ்காலத்து காலவோட்டத்தினை நினைக்கையில் எங்கேயோ விழும் இடியானது மனித
தலைகளின் மீது விழுவதுபோல் பல்வேறு சம்பவங்களை இச்சமூகம்
சந்தித்துக்கொண்டிருக­்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு, ஆசிரியர்கள்
மாணவர்களுக்கான உறவு , இளைஞர்கள் சமூகத்துக்கான உறவு ,கணவன் மனைவிக்கான
உறவு , என்று அனைத்தும் கேள்விக்குறியாகி இறுதியில் சமூகத்திற்கும்
மனிதனுக்குமான உறவு, என்ற முடிவில் புவியுலகு நம்மைநோக்கி கேலிப்பார்வை
வீசுவதை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது . ஒரு குழந்தையின் அழுகுரலை
அடக்கும் தாயைபோல் அல்லாமல் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இருந்த தொடர்பு
நிலை முழுவதுமாக அறுந்துபோகிறது. சிதறும் உறவுகளின் காரணகாரியம் எது?
எதனால் உறவுகள் சிதைவடைகிறது ? அதற்கான தீர்வுகள் என்ன ? என்பதை
எள்ளளவும் கவனியாமல் இயந்திர வாழ்க்கையை யாரோ இயக்க பொம்மைபோல நாமும்
கடந்து போகின்றோம் அவ்வாறான மனநிலையினை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை.
ஒருநூற்றாண்டுக்கு முன்னால் பிற்போக்கான சூழல்கள் பல இருந்தாலும் அடுத்த
தலைமுறையினரை வளர்த்தெடுப்பதில் முற்போக்கு சூழலுடனே வளர்த்தெடுத்தார்கள்
, ஆசான்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த தொடர்புநிலையை பாட்டி
தாத்தாக்கள் சொல்ல கேட்டிருப்போம் அவ்வளவு நெருடலாகவும்
உணர்வுப்பூர்வமாகவும்­ இருக்கும். ஆனால் இன்று ஆசான்களுக்கும்
மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்பினை யாரிடம் கேட்டுத் தெரிந்து
கொள்வார்களோ தெரியவில்லை. திருமணம் முடிந்த அடுத்த நாளே முதிரோரில்லச்
சாலைகளின் முகவரிகளைத் தேடும் பணியை செய்துகொண்டிருக்கிறத­ு இந்த வளரும்
சமூகம்.இதற்கிடையில் பெற்றோர் பிள்ளை, பேரப்பிள்ளை உறவுகளை பிள்ளைகளிடம்
பறிக்க மும்முயற்சியாக இம் முதியோரில்ல தேடுதல் தொடக்கமாக அமைந்து
விடுகிறது. இவ்வாறு நகரும் இச்சமூகத்தில் ஆசிரியர் மாணவர் மோதல் ஆசிரியர்
மீது தாக்குதல் , மாணவர்கள் ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து வருதல்,
திருமணமான அடுத்தநாளே விவகாரத்துநோட்டீஸ், மாணவிகள் மற்றும் பெண்கள்
மீதான பாலியல் வன்கொடுமைகள், என அடுக்கிக்கொண்டே போன அடுத்த தலைமுறை
குற்றங்களின் ஆணிவேரை களையாமலும் களைய முற்படாமலும் பயணிக்கையில் நேரம்
போதவில்லை என்ற சப்பைக்கட்டு காரணங்களாலும் வாழ்க்கையை தொலைத்து
நிற்கிறது இந்தச் சமூகம். ஒவ்வொரு சாதியக் கலவரங்களிலும் சாதியம்
தவிர்த்து உயிர்கள் பலியாவதையும் நாம் கண்கூடாக
பார்த்துக்கொண்டிருக்கிறோம் இதற்கான சாத்தியக்கூறுனை உறுவாக்கிவிடும்
உறவுநிலைச் சிதறல்களை கண்டறியாமல் சமூக சமத்துவம் அமைவதென்பது
சாத்தியமாகிவிடாது . ஆகவே சமூகத்தின் உறவுகளை தக்கவைப்பதன் மூலமாக மனித
வாழ்வியலை வளமாக்கிவிடலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்கான உறவுநிலைச் சிதறலை
குறிப்பிடாமல் ஏன் ஒடுக்கப்பட்ட உறவுநிலைச் சிதறலை குறிப்பிட்டெழுத
வேண்டுமென எண்ணலாம் . சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்வினில்தான் அதிகப்படியான உறவுநிலைச் சிதறல்களை காணலாம் . ஏன் உயர்
பணக்கார அல்லது ஆதிக்கத்தில் உறவுகள் சிதைவடைவது இல்லையா எனவும்
ஒதுக்கிவிட முடியாது முதல்படிநிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய
ஒடுக்கப்பட்டோர்களின் வாழ்வியலில் ஏற்படும் உறவுச் சிதறல்களை களைய
முற்பட்டால் தானாக ஆதிக்கம் அதன் ஆதிக்கத் தன்மையிலிருந்து விடுபட்டு
சமூகத்தின் உறவுகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்பதே நிதர்சனம் .
மேலும் இட ஒதுக்கீடுக்கான சர்ச்சைகள் எழும்போதெல்லாம் கிரிமிலேயர்கள்
எனப்படும் இட ஒதுக்கீட்டால் பயனுற்று தன் பொருளாதார வலிமையினால் மீண்டும்
அதே இட ஒதுக்கீடு கோருவோர்களை புறக்கணிக்கும் ஒதுக்கப்பட்டவர்கள் ஏன்
புறக்கணிக்கிறார்கள் என்கிற காரணத்தையும் அறிந்து விட வேண்டுமதனால்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறலாக இதற்கு தலைப்பெழுதுவதில் தவறில்லை
எனத் தோன்றுகிறது. எந்தச் சமூகம் முதலில் சிதைவடைகிறதோ அச்சமூகத்தை
எழுதுவதில் என்ன தவறு இருக்கப்போகிறது. அம்பேத்கரும், பெரியாரும்,
மார்க்ஸியமும் வர்க்கச்சுரண்டலுக்கெதிராக ஒன்றானர்வர்களே என்றாலும்
தங்களுக்கான பொருளுக்தியில் மாறுபட்டவர்களாக இருக்கத்தானே செய்கிறார்கள்
அதன் பொருட்டே ஒட்டுமொத்தச் சமூகத்தையும் எழுச்சியடையச் செய்தவர்கள்
அவர்களாகத்தானே இருக்கிறார்கள் ஆகவே ஒரு குறிப்பிட்டச் சமூகத்தில்
மாற்றம் நிகழாமல் ஒட்டுமொத்த சமூகத்திலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை
என்பதனால் தான் இதற்கான தேவையினை கருத்தில்கொண்டு ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச் சிதறலாக எழுதப்படுகிறது.

தொடரும்........

Wednesday, March 25, 2015

ஹைக்கூ "அவளே வரைகிறாள்"

நிழலில்
இலைச்
சருகுகள்
நிர்வாண
கோலத்தில்
மரம்
____

அஞ்சும்
கரும்புனல்
எங்கே
வடித்தோம்
சிற்பத்தை
தேடுகிறது
மரங்கொத்தி
____

அவளை
அவளே
வரைகிறாள்
வாசலில்
கோலமாக
____

சிசுக்கள்
சுவாசிக்குமுன்
வெடித்து
விட்டன
வன்முறைகள்
___

பேருந்துக்கு காத்திருக்கவில்லை நடைபாதை
எறும்புகள்
___


கருப்பு ரோஜாவே நிகரானவளும் மனமொடிந்ததால் முதிர்கன்னி
ஆனாயோ
___

அதிகாரத்தோடு
கேட்கிறான்
பிச்சைக்காரன்
வரதட்சணையை

___*___

Tuesday, March 24, 2015

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஐடி 66ஏ?

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 எ செல்லாது அரசியல் அமைப்பு
சட்டத்திற்கு முரண்பாடாக உள்ளது - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ... !
இப்படியான நற்செய்தியினை கேட்டு இச்சட்டத்திற்கெதிராக­
முகபுத்தகத்திலும்,ட்­விட்டரிலும் எழுதிவந்தமையால் ஒரு வாழ்த்துப்
பதிவினை போடலாமென்று இரண்டு சமுக வலைதளங்களையும் திறந்தேன் . என்னைப்போலே
பலரும் கருத்துரிமை வென்றதென உச்சநீதிமன்றத்திற்கு­ நன்றி
தெரிவித்திருந்தார்கள­். அந்நன்றியின் விதம் தான் மிகவும் ஆபத்தாக
அமைந்திருக்கிறது.
பெரும்பான்மையான சமூக வலைதள பதிவர்கள் இனி சுதந்திரமாகச் செயல்படலாம் ,
யாரையும் எப்போது வேண்டுமானாலும் வம்பிழுக்கலாம், அவர்களின் மீது
ஆணித்தரமான அவதூறுகளை பரப்பிவிடலாம் என்கிற பானியிலேயே
எழுதியிருக்கிறார்கள்­. வேதனையிலும் ஆச்சர்யமானதொன்று என்னவெனில் அவர்களை
அவர்களே பழித்துக்கொள்ளுதல் எப்படி இவர்களால் செய்யமுடிகிறது என்பதுதான்.

யானை தன்தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளுமாம் அது ஆணவத்தாலோ
கிருக்குத்தனத்தாலோ அல்ல அதன் உடம்பில் வாழ முற்படும் ஒட்டுண்ணிகளை
அழித்திடவே அப்படிச் செய்கிறது . ஆனால் மனிதன் தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போடுதல் அவனுக்கு அவனே அழிவைத்தேடிக் கொள்கிறான் என்பதாக
பொருள்படும்.

கொஞ்சம் இந்த ஐடி 66ஏ சட்டப்பிரிவானது இந்தியத்திலும்,தமிழக­த்திலும்
ஆட்சியாளர்களால் அவர்களின் கைவசமிருக்கும் காவல்துறைகளால் இரண்டையும்
கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மதக்குருமார்களால் எவ்வாறு
பயன்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் . ஒரேயோரு எடுத்துக்காட்டு
இந்தியத்தில் "பால்தாக்கரே காலமானால் ஏன் கடையடைப்பு நடத்துகிறீர்கள் இது
பொதுமக்களுக்கு இடைஞ்சலாகத்தானே இருக்கிறது என்று முகபுத்தகத்தில்
பதிவிட்ட பெண்ணையும் பதிவிற்கு விருப்பம் தெரிவித்த அப்பெண்ணின்
நண்பர்களையும் கைதுசெய்து இந்துத்துவ சர்வாதிகார போக்கிற்காக நாங்களும்
துணைநிற்போமென நிரூபித்துக்காட்டியி­ருந்தார்கள் முதலாளித்துவ
ஏகாதிபத்தியர்கள்.
தமிழகத்தில் இந்தியத்தை போலவே அதிதீவிரிமாக அல்லாமல் ஆங்காங்கே சில
நிகழ்வுகள் நடக்கத்தான் செய்திருந்தது . ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக்
சிதம்பரம் தொடுத்த வழக்கு, பாடகி சின்மயி தொடுத்த வழக்கு ,சில
மாதங்களுக்கு முன்பு தேமுதிக கட்சி தொடுத்த வழக்கென சில வழக்குகளை
குறிப்பிடலாம் . ஆக ஒட்டுமொத்த இந்தியத்திலும் ஐடி 66 ஏ தவறாகவே
பயன்படுத்தப்பட்டிருக­்கிறது என்பது தெளிவு ,
இப்போது முந்தைய ஏகபோக கேலிக்கிண்டலடித்தும்­ இந்தியத்து பெருந்
தலைவர்களுக்கும், அரசியளார்களுக்கும் இவர்களாகவே இழிவானப் பெயர்களைச்
சூடி எழுத வாய்ப்பளிக்கும் நல்ல சமூக வலைதளங்களை
நாறடித்துக்கொண்டிருக­்கும் பதிவர்களுக்கும்,
பிறகான இந்தியத்தில் சர்வாதிகார போக்கினை கையாண்டு தவறாக சட்டத்தை
பயன்படுத்தியவர்களுக்­கும் ஒருதுளிகூட வித்தியாசமில்லை இரண்டுச்
சூழலாளர்களும் ஒரைவரையோருவர் விட்டுக்கொடுக்காத வண்ணம் பிணைந்தே
இருக்கிறார்கள்.

அவ்வாறு இருக்கையில் உச்ச நீதிமன்ற இத்தீர்ப்பானது எப்படி கருத்துச்
சுதந்திரத்திற்கான வெற்றியென நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் உச்ச
நீதி மன்றம் சமூக வலைதளங்களை பதிவர்கள் எவ்வாறு எந்தெந்த முறையில்
பயன்படுத்த வேண்டுமெனும் அறிவுரைகளை வழங்கியிருக்கலாம் . ஒவ்வொருநாளும்
ஆண்பதிவர்களை விட பெண்பதிவர்கள் எவ்வாறான சிக்கல்களுக்கும்
வன்முறைகளுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்­ எனும்
கொடுமையை விவரிக்க முடியாது அவ்வளவான கொடுமைகளை
அனுபவத்துக்கொண்டிருக­்கிறார்கள். பெண் என்பதால் நிறைய நட்புசேர்ந்து
பிரபலமாகி விடுகிறார் அதிலென்ன தவறிருக்கிறது என்போருக்காக "அவர் பெண்
என்பதால் நல்ல பதிவெனும் நோக்கம் அழிந்து வேறொரு கண்ணோட்டத்தின்
அடிப்படையிலேயே அவர்களுக்கு நட்பழைப்பும்,பின்தொட­ர்தலும்
கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு முற்போக்குச் சிந்தனையாளரான சமூக வலைதள
பதிவர் "தமிழச்சி" அவர்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை நேரமிருந்தால்
படித்துப்பாருங்கள். நிச்சயம் அந்த உலகம் நரக வேதனையாக இருக்கும்
உங்களுக்கு . ஆகவே இச்சட்டத்தை செல்லாதென உச்சநீதிமன்றம் அறிவித்தவுடனேயே
தலைகனத்தில் முழுக்கருத்துச் சுதந்திரம் வென்றுவிட்டோன பூரிப்படையாமல் .
மேற்கண்ட சர்வாதிகார போக்கினை கண்டித்தும் இந்தியத்து வளர்ச்சிக்கான
வழிகளை சிந்தித்தும் ,அவதூறு வசைச்சொற்களை பதிவிடாமலும் செயல்படுதல்
என்பதே முழுக்கருத்துச் சுதந்திரமாகும் இதையேதான் நம் அரசமைப்புச்
சட்டமும் வலியுறுத்துகிறது. பல சிந்தைகளின் தகவல்களை பதிவிடுதல் மூலம்
இனியும் இந்தியத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்பிவிடுதல் நமக்கான அவசியமாக
இருக்கிறது.

ஹைக்கூ "ஒரே குடையில்"

துரத்துகிறேன்
தூங்க மறுக்கிறது
காதல்
விடியற்காலை
கனவுகள்
___

விழித்தெழுந்த
கண்
வாசலில் கோலம்
உணர்ந்த
நிமிடங்கள்
உறங்காத
பெண்ணினம்
____

இரவு
நட்சத்திரங்கள்
அப்படியே
அம்மாவின்
மடியில்
____

எழுந்திரு
வயல்வெளி
அழைக்கிறது
அடுத்தநாள்
விலைநிலமாக
____

புலம்புதை
நிறுத்தவில்லை
நிலா
அவளை மட்டுமே காதலிப்பதால்
____

கண்கசங்கி
பனிதுளிகள்
இன்னும்
பூமிறங்காமல்
கதிரவன்
___

குடை
மிளகாய்
இனிக்கிறது
வாழ்ந்துதான்
பாருங்களேன்
___

மகிழ்சியில்
மரத்து
வேர்கள்
ஒரே குடையில்
நனைகிறது
பூக்களும்
இலைகளும்
____

கானாதொன்றை
கண்டது
சாலைகள்
எங்கும்
மரணத்தில்
தூவிய
மலர்கள்

____***_____

Monday, March 23, 2015

அவளின் சொல் வீச்சம்பு

சொல் வீச்சம்புகளை
என்மீது வீசிவிடுகிறாள்
அவள்
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
எனக்கு

எங்கேயோ எழுதிவைத்த
ஏகாந்த வசனங்களை
என்னுள்ளே புதைக்கிறேன்

எங்கே கோபமிருக்கிறதோ
அங்கேதான்
வாழுமாம் அதீத அன்பு

மனதை தேற்றுவதில்
மயக்கமென்ன
வரவாப்போகிறது

சொல்லம்பை திசைதிருப்ப தென்றதலைத்தான்
துணைக்கழைக்கவா

சொல்லடி எனை சூரியனைபோல
சுட்டவளே

அடுத்த வாசகம்
படித்த பொழுதுகளில்
விடிவதே நரக
வேதனையடி
எனக்கு

யாதொருவரிடமும்
அளவோடு அன்பை
செலுத்தி விலகுதலில்
விடியலை தேடிடலாமாம்
திருத்தம் செய்துவிட
திண்டாடிக் கொண்டிருக்கிறேன்

உன்மீதான அதீத
அன்பினில்
அளவையை எப்படி
என்னால்
செலுத்திவிட முடியும்

சிறகொடிந்த பறவைகள்
சிங்காரித்து அழகுபார்த்திடவே
அனைத்துள்ளமும்
துடிக்கிறதே அன்றி

அதன் சிறகினில்
ஓரலகை எடுத்து
காயமுற்றதில்
இதமாய் தடவிடத்தானோ
யாருமில்லை
இங்கே

உன்னைக்கண்டேன்
உலகின் ஒளியாய்
கூண்டில் அடைக்கவில்லை
நீ

சிறகுகளை சேகரிக்கிறாய் அம்மியில்
மருந்தையும் நீயே அரைத்தெடுத்து
அழகான சிறகின் வலியையும்
தூரெறிகிறாய்
துடிக்கிறதென்
மனது

கருணையினை
நீ சுமந்து
காய்ச்சிய கம்பியினால்
எனை மட்டும்
சூடிடுவது ஏனோ

இவன் துடிக்கமழகை
தூரத்திலிருந்து
நீயும் ரசிக்கிறாயோ

வலிக்கத்தான் செய்கிறது
இருந்தும் வலிதாங்குவேன்
சொல்லம்பு வீசி
பெற்சலங்கையிடும்
உந்தன் பாதங்களில்
தொடங்குகிறது
என் காதலோசை

உள்ளத்தில் ஒருதீங்குமில்லா
உனையா
உதறித்
தள்ளிவிடுவேன்
ஒருபோதும்
நினைத்துவிடாதே
துளிகோபமேதும்
என்னிடமில்லை

என்னில் கலந்தவளே
நீ வீசிய சொல்லம்பை
மட்டுமே சுமக்கும்
இதயம் என்னில் இருந்தால் உயிரோடு
வீழ்ந்து விட்டிருப்பேன்

இல்லை உயிரை விடுவதாக இல்லை
தெரிந்து கொள்ளடி
என்னவளே
சொல்லம்பை மட்டுமே
சூரியனில் சுட்டெரித்து
உனக்காவே இன்னும்
உயிரோடிருக்கிறேன்
நான்,,,

பெற்றோர்களே உயர்வாக தங்களை காட்டிக்கொள்ள பிள்ளைகளை பலியிடாதீர்கள்

எனது குடும்பம் அப்போது நடுத்தர
வர்க்க குடும்பம்தான்,அ ரசுடன்
இணைந்த தன்னாட்சி கிருஸ்த்துவ
பள்ளியில் நான் படித்தேன் . சிறு
வயதில் சைக்கிளை ஓட்டும்
பயிற்சிக்காக பக்கத்தில் இருக்கும் ஒரு
பாய் கடைக்குச்சென்று பள்ளி
வேளைநாளில் பெற்றோர் கொடுக்கும்
கைச்செலவு காசினை அப்படியே
சேமித்துவைத்து எப்போது சனிக்கிழமை
வருமென காத்திருந்து விடிந்தவுடனே
ஒரு மணிநேரத்திற்கு பத்துரூபாயென
பாயிடம் சைக்களை வாடகைக்கு
எடுத்துக்கொண்டு படாத
அடிகளெல்லாம் பட்டு அந்நாளை
கழிப்பது என்பதே அலாதி பிரியம் தான்
(வாடகை சைக்கிளுக்கு வெள்ளி இரவே
பலபேர் முன்பதிவு செய்துவிடுவார்க
ள்) அப்படியாக சைக்கிள் ஓட்டக்
கற்றுக்கொண்டு வீட்டில் சைக்கிள்
வாங்கிக்கொடுவென அடம்பிடித்தால்
அடிவிழும் . அடிவிழாத நேரம் அது
தேர்வு நேரமாகத்தான் இருக்கும்
நிபந்தனைகளுடன் சிரித்துச் சினுங்கி
கொஞ்சிபடியே அப்பாவும் அம்மாவும்
சொல்வார்கள் ."செல்லம் படிச்சி நல்லா
மார்க்கெடுத்து பத்தாவது பாஸாகி
ஏரியாவுல முதலாளா வருவியாம்
அப்பா உனக்கு சைக்கிள்
வாங்கித்தருவாரு ம்"இப்படியாக ஓடும்
பாஸாகியும் சைக்கிள் வராது
மதிப்பெண் குறைவு அதுயிதுவென
அவ்வப்போது திட்டும் விழும்.
ஒருவழியாக பன்னிரெண்டாம் வகுப்பு
சேரும்போதுதான் சைக்கிள் கையில்
கிடைத்தது.(உளவி யல் பையனோ
பொண்ணே பன்னிரண்டாம் வகுப்பு
போகையில்தான் சரியான வளர்ச்சி
பிள்ளைகள் பெற்றுவிட்டார்க ள்
என்பது என்போன்ற மகனை,மகளை
பெற்ற பெற்றோர்களின் எண்ணவோட்டம்)
பிறகு அந்த சைக்கிளை ஒருவாரம்
கண்ணுங் கருத்துமாக துடைத்துக்
கழுவி புத்தம் புதிதாக பாதுகாத்து
பின் கவனிக்கப்படாமல் அந்த
சைக்கிளுக்கு வாயிருந்தால் கத்திக்
கதறியழும் என்கிற நிலையில் ஒரு
ஓரமாக கிடத்திப் போட்டுட
வேண்டியதுதான். அதன்பின்னான
அடுத்த இலக்கு மோட்டார் சைக்கிள்.
சைக்கிளாவது கிடைத்தது மோட்டார்
சைக்கிள் வெறும் கனவுதான் "அது
அன்றையப் பேராசை"ஆனால்
உண்மையை விளக்கிப்
புரியவைப்பதில் பெற்றோர்கள்
சிறந்தவர்களாக தோன்றியது
அப்போதுதான்,, மோட்டார் சைக்கிள்
ஓட்ட உனக்கு பதினெட்டு வயசு
முடிஞ்சிருக்கனு ம்டா ,லைசென்ஸ்
வாங்கனும். சைக்கிளை விட
அதுக்கான செலவும்
பாதுகாப்புமுறைய ும் அதிகமாக
இருக்கும் . முக்கியமா சாலை விதியை
கடைபிடிச்சு ஓட்டனும் . இதெல்லாம்
கத்துகினு அப்புரமா மோட்டர்சைக்கள்
வாங்கனும் என்பார்கள். நியாயமான
கருத்துக்களின் மூலமாக
அடம்பிடித்தல் நின்றது. கல்லூரியில்
கால்பதிந்த நேரம் .இடமோ சென்னை
தங்கவில்லை தினமும் ரயில்
பயணம்தான் .ஒருநாளைக்கு சராசரியா
6மணிநேர ரயில் பயணம். இன்ப
அதிர்ச்சியை வழங்குவதில்
பெற்றோருக்கு நிகர் பெற்றோர்களே ஒரு
நாள் திடீரென மோட்டார் சைக்கிள்
வீட்டில். பல கட்டளைகள் போட்டுதான்
கையில் கொடுத்தார்கள். முக்கிய
கட்டளையாக சாலைவிதி
இருந்தது.இப்போத ு இக்காலச்சூழலுக்
கு வருவோம் ஒன்றரை வயதில்
சைக்கள் . தவறில்லை குழந்தை
வளர்ப்புக்கான அக்கரையாக
அதுவிருக்கிறது. பதினோருவயதில்
பெரிய சைக்கிள் அதுவும் மேற்சொன்ன
பதத்திலியே வந்துவிடுகிறது
தவறேதுமில்லை . ஆனால் பதினாங்கு
அல்லது பதினைந்து வயதில் மோட்டார்
சைக்கிள் இங்கேதான் பெற்றோர்கள்
மீதான தவறிருக்கிறது. "இதிலென்ன
தவறிருக்கிறது காசிருக்கிறது
வாங்கித்தருக்கி றோம் அதுவும் உங்கள்
காலகட்டம் வேறு இன்றைய
காலகாட்டம் வேறு காலங்கள்
எல்லாவற்றையும் புரட்டிப்
போட்டுவிடவில்லை யா என்ன ஐயா
குற்றஞ்சொல்ல வந்துவிட்டீர்கள ே என
கேட்கும் பெற்றோர்களின் மனநிலையை
கவனித்ததன்பால் கருத்துக்களை
முன்வைக்க வேண்டுமே.
சரியாகச் சொன்னீர்கள் பெற்றோர்களே
உங்களிடம் காசிருக்கிறது வாங்கிக்
கொடுக்கிறீர்கள் அதில் உள்ளேபுக
விரும்பவில்லை ஆனால்
காலக்கட்டத்தை நினைவுபடுத்தினீ
ர்களே அதிலேயே உங்களின் குறை
வெளிபடுகிறது.
காலங்கள் மாறினாலும் அன்று
நமக்கிருந்த அதே சட்டம்தானே
இன்னும் செயல்பட்டுக்கொண ்டிரு­
க்கிறது அதிலிருந்து நீங்கள்
தப்பித்துவிட முடியாது தானே.
அன்றிருந்த அதே மோட்டார் வாகனச்
சட்ட விதிகள் தானே இன்றும்
கடைபிடிக்கப்படு கிறது.
*பதினெட்டு வயதிற்குற்பட்ட எவரும்
சாலையில் இருசக்கரம் அதற்கும்
மேலான கனரக வாகனம் ஓட்டுதல்
தடை
*பதினெட்டு வயதிற்குற்பட்டோ ருக்கு
ஓட்டுநர் உரிமம் வழங்கத்தடை
*சாலை விதிகளை அனைத்து
மக்களும் பின்பற்றப்பட வேண்டும்
போன்றான சட்டவிதிகள் அன்றைய
காலத்திலிருந்து இன்றைய
காலத்திற்கு மாறவில்லைதானே
அப்படியேதான் இருக்கிரதல்லவா.
இதில் பல்வேறு சட்டவிதிகள்
இருப்பினும் பதிவிற்கு இதுவே
போதுமானதாக இருக்கிறது.இவ்வ ாறு
இருக்கையில் சமூகத்தில் அந்தஸ்தாக
இருக்கும் நீங்களே சட்டத்தை மீறி
உங்கள் குழந்தைகளுக்கு மோட்டார்
சைக்கிள் வாங்கிக்கொடுத்த ு பள்ளிக்கு
அனுப்பலாமா? உண்மையான
மனசாட்சியுடனே பதில்சொல்லுங்கள ்
பெற்றோர்களே,,, அதுவும் சாதாரண
மோட்டார் சைக்களிலில்லை
பெரியவர்களே ஓட்டத் திண்டாடும்
150 தொடங்க220 வரையிலான
குதிரைத்திறன்
கொண்ட மோட்டார் வண்டிகளையே
வாங்கித் தருகிறார்கள் இதன் விளைவு
பள்ளி மாணவர்களின் மூலமாக
சாலைவிபத்து மற்றும் பள்ளி
மாணவர்களுக்கே நிகழும் சாலை
விபத்துக்களால் பெற்ற பிள்ளைகளை
பறிகொடுத்துவிட் டு தேவையில்லாம்
மற்றவரின் மீது பழிபோட்டுவிட்டு
பெற்றோர்கள் தப்பித்துக்கொள் கிறார­
்கள்.சிந்தித்து ப் பாருங்களேன சாதாரண
விஷயம் தான் பெரியவர்கள் போல்
அல்லாமல் துள்ளி குதிக்கின்ற பருவ
வயதில் மோட்டார் சைக்கிளை
பாய்ச்சலோடுதான்
செயல்படுத்துவார ்கள் பிள்ளைகள்
இளங்குருதி பயமறியாது என்பார்கள்
அதன் படியே பணயம்
வைக்கப்படுகின்ற உயிர்
பலியாவதற்கு
பெற்றோர்களே காரணமாய் இருக்கலாமா
. உங்களால் நீங்கள் மட்டுமே இதனால்
நிம்மதியை தொலைத்துவிட வில்லை
ஒட்டுமொத்தச் சமூகத்தையும்
நிம்மதியற்ற வாழ்வுக்கு அழைத்துச்
செல்கிறோம் . விளையாட்டுப்
பிள்ளைகளின் குரும்பான ஆசைகளின்
விளைவுகளை நன்முறையில்
எடுத்துக்கூறி கொஞ்சநஞ்சமேனும்
நடக்கின்ற விபத்துக்குளை
தடுத்திடுதல் வேண்டாமா அது நம்
கடமையல்லவா,,, மீண்டும் மீண்டும்
சிந்தித்துப்பார ுங்கள் சின்ன
விஷயமிதுவல்ல என்று பெற்றோர்களே
உங்களுக்குத் தெரிய வரும்.
தற்போதைய தமிழகத்தில் சாலை
விபத்துக்களில் குறிப்பாக இருசக்கர
வாகன விபத்துக்களை ஏற்படுத்தும்
பள்ளி மாணவர்கள மற்றும் ஏற்பட்ட
விபத்துக்களில் பலியாகும் பள்ளி
மாணவர்கள் பெரும்பான்மையாக
இருக்கிறார்கள் இதில் இன்னும்
அதிர்ச்சியூட்டு ம்
விஷயமென்னவெனில்
பள்ளிமாணவர்களும ் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டுவது தான்.
ஒட்டுமொத்த சமூகத்தையும்
அதிர்ச்சிக்குள் ளாக்கும் இத்தகைய
செயல்களுக்கு நாமே இடம்
கொடுத்துவிடலாமா !
தற்போது 250 முதல் 550
வரையிலான குதிரைத்திறன் கொண்ட
மோட்டார் வண்டிகள் விற்பனைக்கு
வேறு வரப்போகிறதாம் இது
வளர்ச்சியின் குறியீடென்றாலும ்
பிள்ளைகளின் நலனில் அக்கரை கொண்ட
பெற்றோர்கள் நிச்சயமாக சில
விஷயங்களை பிள்ளைகளை புரிய
வைத்திட வேண்டிய பொருப்பு
நம்மிடையே இருக்கின்றது என்பதை
மறவாதீர்கள் . இந்த பதிவு அனைத்து
விதமான பொருளாதரத்திலுள ்ள
பெற்றோர்களுக்கு ம் பொருந்தும்
என்பதையும் குறிப்பிட
வேண்டியுள்ளது . பிள்ளைகளை
வளர்ப்போம் ,பிள்ளைகளை காப்போம்,
பிள்ளைகளை
வாழவைப்போம்,வார ுங்கள்
பெற்றோர்களே!,,
ி

திக அறிவித்த தாலியறுப்பு மாட்டிறைச்சி போராட்ட அறிவிப்பு காது கொடுப்பார்களா கருத்துக்களுக்கு

வருகின்ற ஏப்ரல் 14 அண்ணல்
அம்பேத்கர் பிறந்தநாளன்று
மாட்டிறைச்சி மற்றும் தாலியறுப்பு
போராட்டத்தை நடத்தப்போவதாக திக
தலைவர் தோழர் பேரா. வீரமணி
அவர்கள் அறிவித்திருக்கி றார் .
அதன்பொருட்டு திக வின் அனைத்துத்
தோழர்களுக்கும் மற்றும்
முற்போக்காளர்கள ுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டு போராட்ட களத்தில்
ஒன்றினைந்து செயல்பட புறப்பட
தயாராகிறார்கள். இங்கு தமிழகத்தில்
இப்போராட்டத்தின ் அவசியக்
காரணங்கள் நாம் அனைவரும்
அறிந்ததே,,மகாரா ஷ்ட்ர மாநில
மாட்டிறைச்சி தடையினை
நீக்கக்கோரியும் , அத்தடையினை
உடனே தமிழகத்தில் செயல்படுத்த
துடிக்கும் இந்துத்துவ
பாசிஸ்ட்டுகளை எதிர்த்தும்,மார ்ச் 8
ம் தேதி உலக மகளீர் தினத்தன்று
மகளீர் "தாலி"குறித்தான புதிய
தலைமுறை தொலைகாட்சி விவாத
நிகழ்சிக்கெதிரா க ஊடகவியளாளர்
தாக்குதலும், அதனைத் தொடர்ந்து
அத்தொலைக்காட்சி அலுவலக டிபன்
பாக்ஸ் வெடிகுண்டுச் சம்பவத்தை
நிகழ்த்திய இந்துத்துவ ஆர்எஸ்எஸின்
பாசிசப்போக்கினை கண்டித்தும்
இப்போராட்டம் அறிவிக்கப்பட்டத
ு."தாலியறுப்பு"
திகவின் தாலியறுப்பு போராட்டத்தை
ஆதரிப்பதற்கு முன் அதன் மீதான
விமர்சனங்களை கருத்தியல் மூலமாக
வைப்பதையும் திராவிடம் கவனத்தில்
எடுத்துக்கொள்ளு ம் என்பதே பெரியார்
மேடைகளில் வழங்கப்பட்ட
கருத்துச்சுதந்த ிரம் சான்றாக
அமைகிறது அதனடிப்படையில்,
,,"தாலியறுப்பு" எனும் பதத்திலேயே
ஓர் வன்முறை இருப்பதாக
தோன்றுகிறது. காரணம் கணவனை
இழந்த கடைசிகாலத்தை எண்ணி
கண்ணீர் விடும் பெண்களுக்கு
அடிமைச் சடங்காக இந்துத்துவம்
வடிவமைத்த "தாலியறுப்பு"சட
ங்கினை கண்டு கலங்காதவர்கள்
இம்மண்ணில் மனிதர்களாக இருக்க
முடியாது அப்படியானதொரு கொடூரச்
சடங்கினை வடிவமைத்த
இந்துத்துத்தின் விஷமங்களை
காலங்காலமாக நாமும்
பார்த்துக்கொண்ட ும் செயல்படுத்திக்க
ொண்டுதான் இருக்கிறோம் இதிலிருந்தே
இந்துத்துவ ம் அதன் தன்மையில்
பெண்ணடிமையை போற்றிப் புகழ்பாடி
வளர்த்தெடுக்கிற து என்பதை யாரும்
அறிந்துவிடவில்ல ை அதேவேளையில்
அதே தாலியறுப்பெனும் சொல்பதத்தில்
திராவிடம் முற்போக்குச் சிந்தனையில்
செயல்படுத்துவதா க சொன்னாலும்
அதிலும் பெண்ணடிமை
பொருந்துவதாகவே தோன்றுகிறது.சுய
மரியாதை திருமணமெனும்
மதச்சடங்குகள், புரோகிதர்கள்,
இல்லாமல் மூத்தப் பெரியோர்கள்
முன்னிலையில் செய்து கொள்ளும்
இருமன கலப்புச் சீர்திருத்த
திருமணமாகும்.சு யமரியாதை
திருமணத்தை செல்லுபடி
ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம்
7ஏல் திருத்தம் செய்யப்பட்டு, 1967ல்
பெரியாரின் போர்வாளான அண்ணாவால்
கொண்டுவரப்பட்டத ு இச்சட்டத்திற்கா
ன சில வரைவுகளை அறிஞர் அண்ணா
தந்தை பெரியாரிடம் கேட்டதற்கு "தாலி
குறித்தான வரைவுகளை தளர்த்தியே
எழுதினார் பெரியார் "தாலி
கட்டாயமில்லை மேலும் கட்டாயத்
தாலியும் திணிக்கக்கூடாது
விருப்பத்தின் பேரிலேயே தாலி எனும்
பதம் இருக்கட்டும் " என பெரியார்
வரைவு செய்ய அண்ணா
செயல்படுத்தினார ்.
இங்கே தாலி குறித்தான முழுச்
சுதந்திரத்தையும ் பெண்ணினத்திடமே
விட்டுவிடுகிறார ் பெரியார்.பெரியா
ரின் பெண்ணடிமைச் சிந்தனையும்
ஆணாதிக்கத்திற்க ெதிராக அவர் விடும்
சவாலையும் இதிலிருந்தே
கற்பிக்கப்படுகி றது "எதையும் தன்
சுயச் சிந்தனைக்கு எடுத்துச்சென்று
விடு நான் கூறினாலும் முழுதாய்
ஏற்காதே" என்கிறார் பெரியார். அவர்
செய்த சுயமாரியாதை திருமண
புரட்சிக்கு தாலி குறித்தான தளர்வில்
பெண்னினம் அவர்களாகவே சிந்தித்து
இந்துத்துவ பார்ப்பானியம் கட்டமைத்த
தாலியறுப்பெனும் பெரும்
கொடுமையிலிருந்த ு அவர்களாகவே
விடுவித்துக் கொண்டால் மட்டுமே
இந்துத்துவ பார்ப்பானிய வீழ்ச்சி
தொடங்கும் . என்பதை
தெளிவுபடுத்துகி றார் பெரியார் .இதன்
மூலம் இந்துத்துவம் செய்யும் அதே
பெண்ணடிமைத்தனத் திற்கு எதிராக
பெண்களுக்கு சுய கற்பித்தலை
புகுத்தாமலும் மதப்பூசலில் இருந்து
பெண்ணினத்தை விடுவிக்காமலும்
இந்துத்துவம் செய்வது போலொரு
தாலியறுப்பு நிகழ்வினை திராவிடச்
சிந்தனை செய்கிறது என்றே
தோன்றுகிறது.
பெரியார் குறிப்பிட்டது போல தாலி
அணிவது அவரவர் விருப்பம் அதை
விடுவித்துக் கொள்வதெனில்
பெண்ணினத்தில் முதலில் பகுத்தறிவு
புகுத்தப்பட வேண்டும் .ஏற்கனவே
தாலி கட்டாமல் திருமணம்
செய்தவர்கள் என்ன மாதிரியான
சுதந்திரத்தை இந்தச் சமூகத்தில்
அனுபவித்துத் விட்டார்கள்? கொஞ்சம்
சமூகத்தின் பார்வையில் சிந்தனையை
செலுத்திவிட்டுப ் பார்த்தால்
"தாலியணியும்" பெண்களை விட
தாலியணியாமல் வாழ்க்கையை
கடந்துக் கொண்டிருக்கும் பெண்களின்
நிலை மிகமோசமாக பார்க்கப்படுகிற து.
ஆணாதிக்கப்பார்வ ையில் அவள்
இன்னும் திருமணமாகதவளாகவ
ே கணக்கெடுப்படுகி றது . இதற்குச்
சவாலியை தாலியை பொதுவாக்கி
விடுவதில் தயக்கத்தை காட்டுகிறது
இந்தச்சமூகம் .இதுவும்
ஆணாதிகத்தில் ஒன்றே மேலும்
பல்வேறு விதமான வசைச்சொற்களும்
,வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதும
்,திருமணமாகியு ம் அவளொரு
"முண்டச்சி" என்கிற கேவலமான
சொல்லாடலையும், திருமணமாகியும்
தாலியணியாவிட்டா ல் அவளொரு
விபச்சாரி எனும் கண்ணோடத்தையும்
இன்னமும் நாம் ஒழித்து விடவில்லை
அதற்கெதிரான எவ்வித
நடவடிக்கைகளையும ் முற்போக்குச்
சிந்தனையாளராக நாம்
கையாளவில்லை என்பதே நிதர்சன
உண்மை, அப்படி இருக்கையில்
வெறும் தாலியறுப்பு போராட்ட
நிகழ்வு மட்டுமே சமூக மாற்றத்தை
ஏற்படுத்திவிடும ் என்பதில் நம்பிக்கை
தளர்ந்தே இருக்கிறது. நாம் பகுத்தறிவு
கருத்தியலையும் கடவுள் மறுப்பு
கொள்கையையும் ஏற்றிருக்கிறோம்
என்பதற்காக "கற்பிக்காமல்" தங்களின்
பெண்ணின மற்றும் அடுத்த
பெண்களின் தாலியை அறுத்துவிட
முடியாது அவ்வாறு அறுத்தலும்
அவமானத்தின் குறியீடே"
அண்ணல் அம்பேத்கரின்
பிறந்தநாளன்று (ஏப்ரல் 14)
இப்போராட்டம் நடத்தப்போவதாக
அறிவிக்கப்பட்டு ள்ளது நன்று!
பெண்ணடிமைக்கெதி ராக ஒன்றாக
பயணித்தவர்கள் தான் அண்ணலும்
பெரியாரும், ஆனால் அவர்களின்
கொள்கை கோட்பாடுகளை
புறக்கணித்துவிட ்டு இங்கே எவ்விதப்
புரட்சியையும் வென்றுவிடவும்
முடியாது செயல்படுத்திடவு ம்
முடியாது.முற்போ க்குச் சிந்தனையில்
நமை
செலுத்திய அண்ணலின் அதே
விதையெனும் வரிகளை எப்போதும்
நினைவுபடுத்துவத ில் சோர்வென்பதை
ஏற்படாது நமக்கு "கற்பி! ஒன்றுசேர்!
புரட்சிசெய்!" இக்கோட்பாட்டுக்
கருத்தியலில் அண்ணல் முதலில்
முன்மொழிவது "கற்பித்தல்"ஆகு ம்.
கற்பித்தலை புகுத்தாமல் சமத்துவம்
,சகோதரத்துவம் ,விடுதலை புரட்சி
அமைந்து விடாது என்பதை
அண்ணலும் பெரியாரும் ஒருசேர
வலியுறுத்துகிறா ர்கள் . என்னும்
மனதில் பதிந்து
பெண்ணடிமைக்கெதி கார போர்க்களம்
கண்ட அண்ணலையும் பெரியாரையும்
முன்னிறுத்தி "கற்பித்தல்" மூலமாக
மட்டுமே இந்துத்துவத்தின ்
கொடுங்கோலாட்சிய ான
பெண்ணடிமையை வீழ்த்திவிட
முடியும் என்பதை போராட்டம்
அறிவித்த திராவிடத் தோழர்கள் ஏற்று
செயல்வீரர்களாக தங்களை
மெருகேற்றி கொள்ள
கடமைபட்டவர்களாக ிறார்கள்.இது
திராவிடத்திற்கெ திரான பதிவென்று
திராவிடர்கள் கோபங்கொண்டாலோ
இந்துத்துவர்கள் மகிழ்ச்சி கொண்டாலோ
இரண்டுமே நீடித்திருக்காத ு
என்பதையும் தெரியபடுத்த வேண்டிய
கடமை எமக்குண்டு.
மேலும் மாட்டிறிச்சை குறித்தான
கருத்தும் இந்துத்துவ ஊடக தாக்குதல்
குறித்தான பதிவும் ஏற்கனவே
பதிவிட்டபடியால் அதுபற்றி மீண்டும்
பதிவிடவில்லை. பார்க்க!

Sunday, March 22, 2015

மாட்டிறைச்சியும் மனித மனங்களும்

இங்கே மகாராஷ்ட்ர மாட்டிறைச்சித் தடை குறித்து எழுதப்போவதில்லை அது
குறித்து பல்வேறு பதிவர்கள் மாட்டிறைச்சி தடையினை ஆதரித்தும் எதிர்த்தும்
பதிவிட்டிருக்கிறார் . ஒவ்வொரு மனங்களும் ஒரே மாதிரியான சிந்தனையில்
இருப்பதில்லை அதனால் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவதில் எதை அதிகப்படியான
வருகையாளர்கள் வாசிக்கத்தொடங்குகிறா­ர்களோ அதுவே சமூகமாற்றத்திற்கான வழி
. இன்றைய தினத்தின் தகவலின் படி மாட்டிறைச்சி தடைக்கெதிகராக பொதுநல
வழக்குகளும் போடப்பட்டுள்ளது என்பதை தெரியபடுத்தியிருக்கி­றார்கள்
விரைவில் ஏதேனும் தீர்வு எட்டப்படுமோ அல்லது வெட்டப்படுமோ சட்டமியற்றிய
மகாராஷ்ட்ர மாநில அரசிடமே விட்டுவிட்டு வந்து விடலாம் .
"எனக்கு மாட்டிறைச்சி மிக பிடிக்கும் வாரத்தில் ஒரு நாளேனும் மகிழ்சியாக
சமைத்து சாப்பிட்டு விடுவேன்"
பொறுங்கள் இன்னும் சில நொடிகளில் மனித மனங்கள் பேசத்தொடங்கும்,
மேற்குறிப்பிட்ட விருப்பத்தகவலை கண்டதும் விரைவாக உங்களின் மூளை
செயல்பட்டு "இவன் இன்னகுலம்,இன்னகோத்தி­ரம், இன்னசாதி, இன்னபிரிவென்று
உடனே வகுத்து பல கணக்குகள் மனதில் போட்டு உடனே தீர்வை எட்டிவிடுகிறது
பார்த்தீர்களா, இது தான் மனித மனங்களின் எண்ணச்சிதறல் எனப்படுகிறது.
உலகிலேயே உணவில் சாதியம் பார்க்கும் நாடு இந்தியாவாகத்தான்
இருக்கமுடியும் . அந்தளவிற்கு மனித மனங்களில் சாதியத்தை பரப்பி
விட்டிருக்கிறது அதே மனிதர்களை கொண்டச் சமூகம் . மனிதர்கள் மீது எவ்விதத்
தவறுமில்லை அதைச் செய், இதைச்செய்யாதே, அவனை அடிமைபடுத்து அவனுக்கு
மேலாதான் நீயிருக்கிறாய் என போதிக்கும் சமயக் குருமார்களின் சூழ்சியில்
சிக்கிய மனிதர்கள் மீது நாமெப்படி பழி போட்டுவிட்டு தப்பித்து
விடமுடியும். கற்பித்தவன் நெறியுடன் கற்பித்தால் உணவிலெப்படி சாதியம்
தெரியும் .உணவில் அசைவம்,சைவம் எனும் பதம் முந்தைய காலங்களில்
இல்லையென்பது நாமறிந்ததே அது பழங்காலம் மனிதன் கிடைத்ததை உண்டு எங்கோ
தூங்கி வாழ்ந்த காலம் அதைப்பற்றி பேசுதல் பழங்கால புனைவாகிவிடும் இடையில்
மனித நாகரிகம் தலையெடுக்க முற்படுகையில் கூட சைவம் அசைவமென எழுந்ததில்லை
வேத உபநிடத நூல்களின் அடிப்படையில் பார்ப்பனர்களும் அசைவப் பிரியர்களே
என்கிறது அப்பேத்கரின் நூல் . அசுவமேத யாகங்களின் மூலமாக குதிரைகளை ஆளும்
அரசர்களால் பலியிடப்பட்டு படையல் உணவாக்கப்பட்டது என்கிறார்கள் ,
பிற்காலத்தில் எப்படி அசைவ உணவான மாட்டிறைச்சி ஒரு குறிப்பிட்ட தலித்தின
ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே உணவாக கொண்டிருக்கும் பார்வை ஏற்பட்டதென்பதை
பார்ப்பனர்கள் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் . பௌத்தம் இந்தியாவில்
தலைத்தோங்கிய காலக்கட்டத்தில்தான் இந்துத்துவத்தை மீட்டெடுத்து மீண்டும்
வளர்ச்சியடையும் நோக்கங்களின் காரணமாக பார்ப்பனர்கள் சைவ உணவு பழக்கத்தை
மேற்கொண்டனர் இதறக்கு அன்றைய காலக்கட்ட பக்தி இயக்கங்கள் பெரும்பரப்புரை
செய்திருந்தார்கள். அப்படியானச் சூழலில் பசு வதையினை பக்தி இயக்கங்கள்
கையிலெடுக்கிறார்கள் . ஏற்கனவே பசுக்கள் தெய்வங்களாக ஆக்கப்பட்டு
பசுக்களை கொள்ளுதலும் உணவாகப்படுதலையும் அன்றைய பக்தி இயக்கங்கள்
கடுமையாக விமர்சித்து தடைசெய்ய நாடெங்கும் புறப்பட்டார்கள் . பசுக்கள்
மிக சொற்பமாகவே இருந்தமையாலும் இதனால் பால் உற்பத்தி பின்னடைவைச்
சந்தித்ததெனும் அன்றைய வரலாறுகள் குறிப்பிடுகிறது. அவ்வாறான இந்தியச்
சூழலில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய
மக்களுக்கு பசுவதை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதற்காக
அவர்களுக்கு ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான உணவையும்
தடைசெய்திருந்தது பக்தி இயக்கங்கள் . (இதனை எழுத்தாளர் ஜெயமோகன் பக்தி
இயக்கங்களை குறிப்பிடாமல் மேலோட்டமாக ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு
பதிலுரை அளித்திருப்பார்) இவ்வாறானச் சூழலில் பசுக்களின் இறைச்சியை
வேறுவழியின்றி தலித்தின ஒடுக்கப்பட்ட மக்கள் உணவாக மேற்கொண்டனர்.
பிறகு 19ம் நூற்றாண்டுகளில் திணிக்கப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கு
தடைகோரிய இந்து இயக்கங்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன . இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் "பசு வதை"குறித்து குறிப்பிடப்பட வேண்டுமென
அன்றைய காங்ரஸ் அரசானது அம்பேத்கருக்கு நெருக்கடி
கொடுத்தது.வேறுவழியின்றி அம்பேத்கரும் அரசமைப்புச் சட்டத்தில் பசுவதை
குறித்த ஷரத்துகளை சேர்த்தார் . இந்நிகழ்வின் அடிப்படையிலான அம்பேத்கர்
கூறுகையில் "நான் சில நேரங்களில் என் மனசாட்சியை கொன்றுவிட்டுத்தான்
அரசமைப்பு சட்டத்தை உறுவாக்கினேன் என்னை சுதந்திரமாக செயல்படுத்த எந்த
அரசுகளும் விட்டதில்லை" என்கிறார் . ஒரு குறிப்பிட தலித்தின மக்கள்
மட்டுமே மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்கிற பிம்பம் தற்போது உடையத்தான்
செய்கிறது. தமிழ்நாட்டில் பொருத்தவரையில் கோழி, ஆடு ,போன்ற இறைச்சிகளின்
விலையை விட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வருமானமற்று
வாழ்வாதாரமில்லா தலித்தின மக்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்கிறார்கள்
எனக்கொண்டால் எப்படி அந்த ஒரு இனத்திற்காக அதிக விலையில் மாட்டிறைச்சி
விற்கப்பட முடியும். இது பொருளாதார "தேவைவிதி"க்கு சவால்விடுவதாகத்தானே
இருக்கிறது.
அசைவப் பிரியர்களும் மாட்டிறைச்சி உண்போரை மிகக் கேவலாமாக பார்க்கும்
மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். ஏதோ வேற்றுகிரக வாசியைப்போலத்தான்
அம்மனிதர்களின் மீதான பார்வை இவர்களுக்கு இருக்கிறது. இம்மாதிரியான
கேவலச் சிந்தனையில் விடுபட்டு உணவில் சாதியத்தை புகுத்தும்
பொதுபுத்தியிலிருந்து­ தங்களை விடுவித்துக்கொண்டு பிறகு எந்தவிதமான
சட்டங்களையும் நீங்கள் இயற்றிக்கொள்ளுங்கள் அதைவிடுத்து இன்னமும்
பார்ப்பனர்களின் சாதியப் பார்வையில் அகப்பட்டு நீங்களே அடிமையாக
இருந்துக்கொண்டு உங்களுக்கு கீழே ஓர் அடிமைச்சமூகம் இருப்பதாக போலி
கர்வம் கொண்டு மென்மேலும் அடக்குமுறைகளை கையாள்வதென்பது மனித
நாகரீகத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பழங்கால மனித மிருகங்களாக
மாறிக்கொள்ளாமல் மனிதனை மனிதனே மதிக்கும் உன்னதத்தன்மைக்கு உயிர்கொடுக்க
தயாராகிவிடுங்கள்.

Saturday, March 21, 2015

சங்கராச்சாரியார் வாய் திறக்கிறார் எடு சர்க்கரையை

இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று இதில்
ஆணுக்குப் பெண் சமம்
ஆணால் முடியுமென அனைத்தும் பெண்ணால் முடியுமென் பெண்ணினம் தற்போது தான்
மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா வல்லரசை
நோக்கி பயணித்துக்கொண்டிருக்­கிறது . ஆனால் இந்தியா எப்போதும்
பிற்போக்குச் சிந்தனையில்தான் பிழைப்பை ஓட்ட வேண்டும் . அதற்கு மாறாக
முற்போக்குச் சிந்தனையில் பெண்ணினிம் போகக்கூடாது அவ்வாறு பெண்ணினம்
செயல்படுதவதென்பது இந்துத்துவ மதத்திற்கு எதிரானது என்று வாய்கிழிய
கத்தும் இந்துத்துவ வாதிகள் தான் "இந்து மதம் பெண்ணினத்தை போற்றிக்
காக்கிறது" என்று வாய் கூசாமல் புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறது .
பெண்ணினத்தை அடிமைபடுத்துவதில் உலக மதங்கள் அனைத்தும் ஒரேச்
செயல்பாட்டினை கொண்டிருந்தாலும்"இந்­துத்துவம்" அதற்கும் மேலாக ஒருபடி
பிற்போக்குத்தனங்களில­் முன்னேறியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.
"விதவை பெண்கள் "தரிசு நிலம்"
வேலைக்கு போகும் பெண்கள் "விபச்சாரிகள்"
-சங்கராச்சாரியார்-"
இது இந்துத்துவத்தை கட்டிக்காத்திடும் பிற்போக்குவாத மதத்தலைவரின்
வாயிலெழும் என்பதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை ஆனால் இக்கருத்தானது இன்றைய
காலச்சூழலுக்கு பொருந்துமா? என்கிற கேள்வியை இந்துத்துவம் போற்றும்
பெண்ணினம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் இப்போது
முளைத்திருக்கின்ற #RSS #BJP தீடீர் காளான்களை களையெடுக்க
பெண்ணினம் முயற்சி எடுக்குமா? என்கிற கேள்வி நம்மிடையே ஏற்படுகிறது.
இந்தியத்து இச்சூழலை முறியடிக்கவும் ஆணாதிக்க அடக்குமுறைகளுக்கெதிர­ாக
களமிறங்கவும் பெண்ணினம் இனி தயாராய் இருக்க வேண்டும் . "சமூக மாற்றத்தின்
மூலமாக இங்கே சமத்துவம் ஏற்படவேண்டுமெனில் பெண்ணடிமைத்தனத்தினை
ஒழிக்கவேண்டும் அப்பெண்ணடிமையை ஊக்குவிக்கும் இந்துத்துவ பார்ப்பானியத்தை
வேரறுக்க வேண்டுமென அம்பேத்கர் உரைத்திருப்பார் . எக்காலமும் பெண்களை
பூட்டியே வைத்திருப்பதுதான் இந்தியச் சமூகத்தின் பண்பாடெனில் அப்படியான
பண்பாடு இச்சமூகத்திற்குத் தேவையேயில்லை . படிப்பில் சிறந்து அதிகார
தொனியில் வலம் வந்த கிரண்பேடி அவர்களே இந்துத்துவ பார்ப்பானிய #RSS #BJP
யிடம் மண்டியிட்டு ஒரு பெண்ணாக அவரே இருந்து பெண்ணினத்திற்கெதிரான­
பாலியல் வன்புணர்ச்சியில் "சிறிய கற்பழிப்பு ,பெரிய கற்பழிப்பென புதிதாய்
கண்டுபிடித்திருக்கிற­ென்றால் எப்பேர்பட்ட அடிமைதனத்திலும் கல்வியானது
மக்கும் குப்பையாகிவிடும் என்பதை மெய்பிக்கிறார் அல்லவா,
பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது விதவைகள் தரிசு நிலமாகத்தான் இருக்க
வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கும் இந்துத்துவ
சங்கராச்சாரியார்(பெர­ியவா) கொலை ஆட்கடத்தல் கற்பிழிப்பென அனைத்து விதமான
சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு பார்ப்பன புத்தியால் நீதியை ஏமாற்றி
விடுதலையானவர் என்பதை இங்கே பெண்ணினத்திற்கு சுட்டி காட்டுவது காலச்
சிறந்தது (பார்ப்பன புத்தியென்பது நீதித்துறையை முழுமையாய்
ஆக்ரமித்துக்கொண்டவரு­ம் பார்ப்பனர்கள் என்பதை உணர்த்தவே)
இன்னும் பெண்கள் வேலிதாண்டக் கூடாதென இந்துமதம் சொல்கிறது பெண்களும்
இந்துமதக் காலடியில் விழுந்து கிடந்து ஆமாம் போடுகிறது. பரவாயில்லை
சீதையை சந்தேகித்த ராமனிங்கே
புராணத்தில் ,ராமனை ஏன் சீதையை சந்தேகித்தாய் மனைவியை விட சமூகத்தின்
பொய்ப்புரட்டுக்கு சவாலாய் ராமனாகிய நீயே தீயில் இறங்கியிருக்கலாமல்லா­
ஆணுக்கும் கற்புண்டுதானே எனக் கேட்கும் பெண்ணினத்தைதான் இன்னமும்
கானவில்லை.

வேர் முளைத்த விழுதுகள்

மரங்கள் தவமிருக்கின்றன
மனிதன் வெட்டாமல்
இருப்பதற்கு,,,

இப்பிரபஞ்சத்தில்
பாலூட்ட தாயேதும்
கிடைக்கவில்லை
என்பதால்தானோ
கிழக்கில் உதிக்க
சோம்பல்படுகிறான்
இளஞ்சூரியன்,,,

எத்தனை எத்தனை
மலர்கள் தாய்மரம்
முன்னே தரையோடு
மடிந்து கிடக்கிறது
தயவுசாட்சனை
பார்ப்பதிலென்ன
தன்மானமா போய்விடப்போகிறது
மனிதா,,,

பிரளய பிம்பங்களை பிய்த்துப் பார்த்துப்
பேசாத சிற்பமாய்
போலி முகங்கொண்டு
பிரகாசிக்கிறாயே
மனிதா,,,

தேவதைகளான
மரங்கள்
உனக்கு மட்டும்
பேயாக தெரிவது
ஏனோ,,,

நாடு வளம்பெற வேண்டுமெனில்
மரத்தின்
வேர்களில் பூஜையிடாதே
அது புரட்டுக்கதைகள்,,,

மஞ்சளாடை மரத்திற்கு
அணிவிக்காதே
அது மூடத்தனத்தின்
உச்சமென எண்ணிவிடு,,,

ஒருவன் உழைக்க
மறுத்து உருவத்தை
சிதைக்கிறான்
வேரின் விழுதுகளில்
கோடரி கொண்டு
சாமி இங்குண்டென
சாம பொழுதில்
புளுகுகிறான்,,,

திருந்த மாட்டாயோ
மனிதா
என்னைய அழிக்கிறாய்
இதோ நாங்கள்
ஒன்றுகூடி உங்களை
அழிக்கப் போகிறோம்
ஆக்ரோஷ வார்த்தைகளோடு
மரங்கள் புரப்பட்டால்
மனிதா ஆயிரமென்ன
பல்லாயிரம் யுகங்கடந்தாலும்
இத்தாய் மண்ணில்
கானாமல் போய்விடுவாய்,,,

கண்களைத் திற
மயிலாடுவது போலே
மரங்களாடுவதை
பார்,,,

இனியும் மரங்களை
வெட்டாதே மனிதா,,,

Friday, March 20, 2015

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்?

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்? தொடர் சாதிய வன்கொடுமைகளுக்கு பலியாவதை விட இம்மண்ணை விட்டு மரணத்தைத்தேடி செல்வதே காலச்சிறந்தது . எத்தனை வலிகள் சுமந்தாலும் இவர்கள் அடிமைகள் இவர்களை அடிமைபடுத்துவதே முறையென்று தங்களின் ஆதிக்க அடக்குமுறையை மென்மேலும் செய்துகொண்டே இருக்கிறார்கள் இவர்கள்தான் இம்மண்ணின் மைந்தர்களென வலம் வரும் தமிழர்கள். தங்களின் இந்துத்துவம் கண்டெடுத்த மனுசாஸ்த்திர வருண சாதியத்தை அழியாமல் காத்துக்கொள்வதில் அப்படியென்ன தேவை இருக்கின்றதோ தெரியவில்லை. சாதியத்தை எதிர்த்து இங்கே எவ்விதமான எழுத்துகளும் இல்லை அவ்வாறு எழுதாதவர்களுக்கு அச்சாதியிலேயே அடக்குமுறை ஏதேனும் வந்தால் மட்டும் உடனை "இது பெரியார் பிறந்த பூமிடா" என்று போலிப்புரட்சி மொழி பேசுவார்கள் . உண்மையில் இவர்கள் பெரியாரையும் , மார்க்ஸியத்தையும், அம்பேத்கரியத்தையும் எழுத மறுப்பவர்கள். இந்நிலைதான் இன்றை தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. சாதியத்தை எதிர்த்த எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்களை மறைத்தே வைத்திருக்கிறது இந்தச் சமூகம் . மார்க்ஸியத்தை பேசுவோர் மாவோ வை பேசுவதில்லை ,பெரியாரியத்தை பேசுவோர் அம்பேத்கரை பேசுவதில்லை என்கிற நடைமுறையை பின்பற்றுவதில் எவ்வித பலனும் இல்லை. 90களில் ஒட்டுமொத்த தமிழகமும் தமிழகத்தில் வாழும் தலித்தின மக்களும் பெரும் கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்பதற்கான சாட்சியம் தான் "திண்ணியம்" ஆதிக்க வெறியர்களால் அடிமைபட்ட மக்களை விரட்டி விரட்டி பலி கொண்டது "திண்ணியம்" மனித உடம்பில் ஒரு முள் குத்தினாலும் உடனே வலியை உணரச்செய்யும் மூளை இந்த வலிகளை எங்கேச் சொல்லி அழும் எனத் தெரியவில்லை. தலித்தின மக்களை அடித்து ஒடுக்கி சித்ரவதைசெய்து அவர்களின் வாயில் புனலை வைத்து மனித மலத்தையோ அல்லது சிருநீர்க்கழிவையோ ஊற்றிக் கொலை செய்யும் "திண்ணியம்" தமிழகத்தில் பெரும்பகுதியில் நடைபெற்ற கொடுமை நிகழ்வாகும். அதன் பிறகு சாதியத்தை எதிர்த்துக் களமாடும் பல முற்போக்கச் சிந்தனையாளர்களின் களப்போராட்டங்களால் "திண்ணியம்" தடுத்து நிறுத்தப்பட்டது, முழுதாய் தடுக்க முடியா விட்டாலும் இப்புரட்சிப் போராட்டங்களின் மூலமாக கொஞ்சமேனும் தலித்தின மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் . அந்நிம்மதி பெருமூச்சு நீடிக்க விட்டுவிடுவோமா ,அடிமைச் சமூகமே உங்களைத் தான் வாழவிடுவோமா என்று ஆதிக்க வெறிகொண்டு மீண்டும் திண்ணியத்தை கையிலெடுத்திருக்கிறத­ு இந்த ஆதிக்கவெறிச் சமூகம் . அதற்கு சாட்சியாகவும் இன்னொரு திண்ணிய நிகழ்வை இவர்களும் திணித்து விட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்­. தமிழகத்தில் குடிநீருக்குப் பஞ்சம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான் ஆனால் ஆதிக்க வெறிக்கும் அவ்வாதிக்க வெறிக்கு பலியாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பஞ்சத்தில் சேர்த்துவிட முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் துன்பங்கள் தாங்குவார்களோ தெரியவில்லை, பெரியார் சூளுரைத்து போல் "சாதி மனிதனை மிருகமாக்கும்" என்பதற்கான பொருளுரையை தேடி அலைய வேண்டியதில்லை ,தினந்தினம் மிருகமாகும் மக்களுடனேதான் நாமும் வாழ்கின்றோம்.இக்கொடூரங்களுக்கு ஆதரவாய்ச் செயல்படும் ஆளும் அரசும் ஆளும் அரசிற்கு அடிமையாகிப்போன காவல்துறையெனும் பெரும் மதில்சுவரில் முட்டியதில் ரத்தம் தான் வழிந்தோடுகிறது . சமூகமே சிந்திய ரத்தங்களில் இவன் இன்ன சாதியென்று எவராலும் கண்டுபிடுக்க முடியாதென்பதை மறந்துவிடாதீர்கள்.

வளர்ந்து விட்டேன்

வளர்ந்து விட்டேன்
வானுயரத்தில்
விமானம் பறந்தால்
இன்னமும் எட்டிபார்த்துவிட
ஏங்குகிறது மனது

வளர்ந்து விட்டேன் செடிகளின்
அடர்த்தியில்
மறைந்துள்ள ஓணானை இன்னமும்
தூரோகக்
கண்ணோடு
பார்க்கத் தூண்டுகிறது மனது
அணில்தான் கருணையின் பிறப்பிடமாம்

வளர்ந்து விட்டேன்
திரண்ட கூட்டத்தின்
நடுவே
திருவிழாவை
மறந்துவிட்டு
சின்னச் சின்ன திருட்டுகளை
இன்னமும்
செய்யச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் வாழ்க்கையே விளையாட்டாகிவிட விளையாடும்
தருவாயில்
இன்னமும் போங்காட்டம்
ஆடச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் இன்னமும்
ஆணோடு பெண்ணும்
பெண்ணோடு ஆணும்
பழகுவதை சந்தேகத்துடனே பார்வையை திருப்பச் சொல்கிறது மனது

நான்
வளர்ந்துவிட்டேனா
எனும் கேள்வியை
மனதிடம் வைக்கையில்

இளம்பருவம் எதை வியப்பில் ஏற்றியதோ அதுவாகவே நீயிருக்கிறாய் அதுதவறில்லை

நில்!

இறுதியாக ஒன்றைச் சொன்னாயே உடன்படவில்லை
நான்

இன்னமும் வளராத
ஆறறிவு வெற்றுடம்புதான் நீ
வளரவேயில்லை
வளரவிடவும்
முயன்றதில்லை

முகத்தைப்பார்
ஆணுக்கு பெண்
பெண்ணுக்கு ஆண்
அப்படியே கண்ணாடித் திரையில் தெரியும்

விலகிப் போ
சந்தேகப் பார்வையை விட்டொழிந்தால்
நீயும்
வளர்ந்த மனதனே! சொல்லி முடித்தது
மனது,,,

கைபேசி அழைப்பொலியும் தொந்தரவும்

நாம் ஏதேனும் விஷயங்களை செயல்படுத்த யோசிக்கும் பொழுது நமக்கு முன்னரே
நமது கைகள் முதலில் தேடுவது கைபேசியைத்தான்
என்றாகிவிட்டது மனிதச் செயல்பாடு. எங்கும் எதிலும் மைல்கல்லாக அமைந்து
விட்ட கைபேசியானது மனிதனின் அறிவியல் படைப்பில் மகத்தானது . இன்னும்
சிறிது காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எதுவென மாணவர்களிடம்
மதிப்பெண் வினா? எழுப்பினால் . "ஸ்மார்ட் போன்" என்றெழுதி அதற்கு ஏன்
மதிப்பெண் வழங்கப்பட வில்லையென ஆசிரியரை மிரட்டினாலும் மிரட்டுவார்கள்
இல்லையெனில் கத்தியாலும் குத்துவார்கள். இது உலக நடப்பு .
சரி விஷயத்திற்கு வருவோம் . கைபேசியை எங்கெல்லாம் எப்படியெல்லாம்
பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சில வரைமுறைகள்
உள்ளது . உதாரணத்திற்கு எரிபொருள் வங்கிகளில் கைபேசி பேசத்தடை,
மருத்துவமனைகளில் கைபேசி பேசத்தடை, வங்கிகளில் கைபேசி பேசத்தடை , இன்னும்
இவ்வாறான பல வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக்கொள்கிறோம் அதன் அவசியம்
உணராதவர் பயன்படுத்திக்கொண்டேத­ான் இருக்கிறார்கள்
அவ்வாறுதான் "பொதுக்கூட்டங்களிலும­்
கலை இலக்கிய அவையிலும் கைபேசி பயன்படுத்தப்படுகிறது­"
இப்போது எதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது­ என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
உளவியல் ரீதியாக பொதுக்கூட்டத்திலோ இலக்கியமேடைகளிலோ
இன்னும் பல கூட்டங்களிலோ கைபேசி அழைப்பு யாருக்கேனும் வருகின்ற பொழுது
அவையில் பேசுபவர் எடுத்துரைக்கும் கருத்துக்களை பேச மறந்து விடுவார்
என்பது தெளிவு. அவ்வாறான அவை பேச்சாளரின் கருத்துக்களை செயலிழக்கும்
கைபேசி அழைப்பினை ஒலிக்க விடுதல் என்பது அவ்வவை கூட்டத்தில் கைபேசி
ஒலிக்கச் செய்தவர் பங்குபெறாமலே இருப்பதற்குச் சமம்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கைபேசி அழைப்பொலிகளை அவர்களுக்கு
பிடித்தமானதாக வைத்திருக்கிறார்கள் . அவ்வாறு தங்களுக்கு பிடித்தமான
அழைப்பொலி மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம்,அதை விட்டுத்தள்ளுங்கள் அது
அவரவர் விருப்பம் கேட்டால் "தனிமனித சுதந்திரம்" என்பார்கள். உண்மைதான்
தனிமனித சுதந்திரம்தான் அது ஆனால் நிதர்சன அமைதியாக நடைபெறும் ஒரு
கூட்டத்திலோ அல்லது அவையிலோ நீங்கள் ஏற்படுத்தும் தனிமனித சுதந்திர
கைபேசி அழைப்பானது அவையில் கூடியிருக்கும் ஒட்டுமொத்த சனகூட்டங்களையும்
தொந்தரவு செய்கின்ற போது அது தனிமனித சுதந்திரத்திலிருந்து­ விலகி பொது
மக்கள் தொந்தரவாக மாறி உங்களுக்கு பிடித்து போன அழைப்பொலியானது பெரும்
இறைச்சலாக மாறுகின்றது என்பதை ஏன் புரிந்துகொள்ள மறந்தீர்கள் அல்லது
மறுக்கிறீர்கள் . எப்படியான மெல்லிசை அழைப்பொலியை நீங்கள்
வைத்திருந்தாலும் அது அந்தச்சூழலில் "இறைச்சலாக"தான் பார்க்கப்படும்
அவ்வாறு இருக்கையில் அதனை விரும்பிச்செய்யும் உங்களின் மனதில் எந்த
கருத்திற்காக நீங்கள் அவை கூட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அக்கருத்தின்
முழு அளவையும் அக்கைபேசி அழைப்பொலி அழித்து விடும் என்பதனை மனதில் கொண்டு
ஆகச்சிறந்த நடைமுறைகளை நீங்களே வகுத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்
அனைவரின் விருப்பம்.
இன்றை ஸ்மார்ட் போன் தொடுதிரை வசதி கொண்ட யுகத்தில் பல உறவுகளை
தொலைதூரத்தில் துரத்திவிடுகிறோம் என்பதனை மனதில் கொண்டு நிகழும் அல்லது
நிகழ்ந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்டங்கள் மற்றும் இலக்கிய அவையிலேனும்
தலைகுனிந்து தொடுதிரை கைபேசியில் மூழ்கிவிடாதீர்கள் . பிறகு வாழ்நாள்
முழுக்க தலைநிமிரவே முடியாது நம்மால்,,,
ஆகவே வேண்டுகோளாகவும் ஓர் அரைகூவலாகவும் இதனை ஏற்று
முடிந்தளவு கைபேசி அழைப்பொலியை ஏற்க மறுத்து முக்கிய அழைப்பெனில்
சத்தமில்லாமல் இவ்வாறு இன்ன இடத்தில் இருக்கிறேன் என்று ஃஹெட்செட் மூலமாக
பேசுங்கள் . இல்லை அது அவசர அழைப்பில்லையென அறிந்தால் "குறுஞ்செய்தி
அனுப்புங்கள் முடிந்தளவு அக்கூட்டங்களில் கைபேசியை அணைத்து வையுங்கள்"
அவ்வாறு அணைத்து வைப்பது சரியல்லவென கருதினால் தயவு கூர்ந்து கைபேசியை
ஒலிக்க விடாமல் அதிர்வலையிலிலேயோஅல்ல­து அமைதி விருப்பத்தையோ
தேர்ந்தெடுத்து அச்சூழலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் . இதனால்
கருத்துக்களும் உறவுபிணைப்புகளும் நம்மிடையே பரவி புதியதொரு சிந்தனையில்
நமை இட்டுச்செல்ல நமக்கு நாமே தூன்றுகோலாய் இருப்போம்.

பூக்களின் மௌனம்

வண்டுக்குத் தேனாக
பூஜைக்கு மலராக மங்கையர்க்கு
மாலையாக

மறைந்துபோன
மனிதச் சொல்லாடல்
மறைந்து போய்
பிணமென பெயரிட்டதில் மலரஞ்சலியாக

பல கோண
காட்சிதரும்
பூக்களே
நீங்கள் மட்டும்
மௌனம் சூடிக்கொண்டதேனோ!

ஏதேனும் காரணமுண்டோ
மௌனம்
கலைத்துவிட
வழியேனுமுண்டோ

சூரியக் கருவறையிலே
கல்லறையாகாதோ
பூக்களே உங்களின்
மௌனம்
இதழ்களின்
மௌனம் கலைத்து இருண்டுலகில்
வெளிச்சம் பரப்பலாம்

இன்னும் சாதனைகள்
பலபுரிய
பாறையான மனதை
பக்குவமாய்
திறந்தெழுந்து
நீங்கள் சூடியுள்ள உங்களுக்கு
சூட்டிய
மௌன மாலையை
இப்போதேனும்
அவிழ்த்து வீசிவிடுங்களேன்

மௌனமாய்
மலர்ந்தது போதும்
மலர்களே
எழுந்திருங்கள்
பிறவி எடுத்ததே
பிழைக்க வழிதேடத்தானே
பரந்த பூமி
அழைக்கிறது

ஓய்வை விரும்பாதவர்கள் நீங்கள்
சிரித்து மகிழுங்களேன் மலர்களே கொஞ்சமேனும் மௌனம்
களையுங்களேன்!

Thursday, March 19, 2015

விழிகளின் வெளிச்சத்தில்

விழிகளின் வெளிச்சத்தில்

பிரியமானவளே
உனக்கொரு
இனிய
எச்சரிக்கை
இம்சையெனவும்
பாவித்துக்கொள்,,,

நடுநிசியில்
என் கனவினில்
உன்னதக்
கதவுகளின்
வெளிச்சத்தில்
உன் விழிகளை
திறந்து காட்டி
என்னிமைகளை
திறக்கும்
முயற்சியில்
மூழ்கிப்போகாதே,,,

உனது
விழிகளின் வெளிச்சத்தில்
விடிந்துவிட்டதென
என் வீட்டில்
உள்ளவர்கள்
எழுந்து விடப்
போகிறார்கள்!

உன் இமைகள் எப்போதும்
மூடியே இருக்கட்டும்
கனவிலும்
உனை விட்டு
விலகிடமாட்டேன்
நான்!

Wednesday, March 18, 2015

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

எப்பொழுதும் மக்களுக்கான அவசியப் பணிகளையும் அடிப்படைத் தேவைகளையும்
பூர்த்தி செய்திடவே "அரசு" என்கின்ற அதிகாரத்தை மக்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள­். ஆனால் தொடர் சர்வாதிகார போக்கில்
முதலாளித்துவமாக அரசு செயல்படும் போதுதான் போராட்டம் என்கிற ஒன்றை மக்கள்
கையிலெடுக்கிறார்கள் . அதன் அவசியத்தை ஆளும் அரசு நினைத்தால் தக்கத்தொரு
தீர்வினை மக்களுக்கு அளிக்கலாம் .ஆனால் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத
போக்கினை கைவிடுவதாகத் தெரியவில்லை.
தமிழகத்தை பொருத்தமட்டில் இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கெதிரான
போக்கினை கையாள்வதில் ஒன்றுக்கொன்று பிணைப்புடனே செயல்படுகிறது .
வெளியுலகத்தில் இத்திராவிட கட்சிகள் எலியும் பூனையுமாக தெரிந்தாலும்
உள்ளுக்குள் மக்களை அடக்கியாளும் முதலாளித்தவ யுக்தியினைத்தான்
கையாள்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் நமக்கு எழுந்திடவில்லை.
இவ்வுலகில் ஆரோக்கிய உடலமைப்பை கொண்டுள்ள மனிதர்களே வாழ்வாதாரத்திற்காக
தங்களின் வாழ்க்கையை தொலைத்து வறுமையில் வாடுகின்றச் சூழலில்,
உடற்கூறு குறைபாடுடைய கண்பார்வையற்றோரின் நிலமை எப்படியிருக்குமென்று­
யோசித்துப்பாருங்களேன­் . யோசிக்க நேரமில்லை என்கிறீர்களா? உண்மைதான்
நகர்புற சாலையில் ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் கையேந்தும்
குருடர்களைக்கூட விலங்கினைவிட கேவலமாகத்தானே நாம் பார்க்கிறோம்,இன்னும்
ஆட்சியர் அலுவலகங்களில் கையேந்தும் பல ஊனமுற்றோர்களையும் மிகச்
சாதாரனமாகத்தானே நாம் கடந்து செல்கிறோம். அவ்வாறு இச்சமூகம் இருக்கையில்
ஊனமுற்றோரை எண்ணிப்பார்த்திடலாகு­மா?
இதுதான் இன்றையச் சூழல் ,அந்த ஊனமுற்ற நம் உழைக்கும் வர்க்கங்கள்
தெருவில் நின்று போராடத் துணிந்து விட்டார்கள் . போராட்டக் களமாடும்
இடத்தின் பெயர் மட்டுமே அவர்களுக்குத் தெரியும்
அவ்விடத்தின் காட்சியை கூட அவர்களால் பார்க்க முடியாது . அவ்வாறு
இருக்கையில் அரசு மற்றும் அரசும் தனியார் துறையும் இணைந்த பொதுத்துறை
நிருவனங்களில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்
,தங்களின் திறமைகளுக்கு அரசானது மதிப்பளித்து ஊக்குவிக்கப்பட வேண்டும்,
இருக்கும் காலிப்பனியிடங்களை (ஊனமுற்றோருக்கான) நிரப்பட வேண்டுமென்கிற 9
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும்
அவர்களின் நியாயக் கோரிக்கைகளையும் ,திறமையை வளர்த்துக்கொண்டு
உடற்தகுதியுள்ள மனிதர்களுக்கு நிகராக நாங்களும் உடற்தகுதி
பெற்றிருக்கிறோம் உழைத்துச் சாப்பிட வாய்ப்புத் தாருங்கள் ,என்றும்
போராட்டக் களத்தில் இறங்கியிருக்கும் ஊனமுற்ற உழைக்கும் வர்க்கங்களின்
நியாயக் கோரிக்கையினை ஏற்க மறுக்கிறது ஆளும் அதிமுக அரசு, மாறாக
அவர்களின் மீதே காவல்துறையை ஏவிவிட்டு ஏகாதிபத்தியத்தை
கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கைபார்க்கிறது.­ இப்போராட்டம் இன்று தொடங்கிய
போராட்டமல்ல இரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை எப்போது
ஆளத்தொடங்கியதோ அப்போதிருந்தே தொடங்கிய போராட்டம் . ஊனமுற்றோரின் இந்த
அறநிலை போராட்டத்திற்கு இதுவரை எந்தவோரு அரசியல் கட்சிகளும்
,இயக்கங்களும்,மக்களு­ம் ஆதரவுக் குரல் கூட எழுப்பவில்லையென்பது
வருத்தமான விஷயத்தை விடவும் அவமானப்பட வேண்டிய விஷயம்.
ஓராண்டிற்கு சராசரியாக 3850 ஊனமுற்றவர்கள் தங்களுக்கான வாழ்வினைத் தேட
வழியற்று உரிமைகள் மறுக்கப்பட்டமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
என்று மத்திய மனித உரிமை ஆய்வக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களும் நம்மைப்போலவே மனிதர்கள் என்று மக்களும் ,ஊனமுற்றோருக்கும்
உழைப்பானது பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசும் உணர வேண்டும் . அவர்களின்
போராட்டத்தில் எழும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உழைக்கும் வர்க்கச்
சுரண்டலை கைவிட்டு சமூகத்தை சீர்படுத்த அரசு முன்வர வேண்டும்.
அடக்குமுறைகள் என்றுமே தீர்வாகாது என்பதுதான் நம் முன்னோர்களான
முற்போக்குச் சிந்தனையாளர்களின் சித்தாந்தம்.
இனியும் ஆளும் அதிமுக அரசும்,நாட்டுமக்களும­் தீர்வுபெற்றுத் தருவார்களா
என்கிற ஏக்கம் கலந்த எதிர்ப்பார்ப்புடன் எத்தனையோ ஊனமுற்றவர்களின்
எதிர்ப்பார்ப்புகளை ,நாமும் மனித உள்ளத்துடன் நிறைவேற்றிட
வேண்டும்,இல்லையேல் அனைத்தும் இருந்து நமக்குப் பயனில்லை நாமும்
குருடர்கள்தான்,,,
(மாற்றுத் திறனாளிகள் என்கிற சொல்லை இங்கு பயன்படுத்த விரும்பவில்லை
,அவர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் அதித்தீவிரமாக
இப்போதைக்கு"ஊனமுற்றோ­ர்" என்கிறச் சொல்லே அனைத்து மனங்களையும் திறக்கும்
சொல்லாக இருக்க வேண்டும் என்பதனால்தான் இந்த திருத்தம்)

Tuesday, March 17, 2015

உதடுகள் காமத்தை பேசட்டும்"உதடுகள்
காமத்தை பேசட்டும்"

சுவற்றில்
ஒட்டுண்ட
பல்லி போல
படுக்கையில்
உன்னோடு
ஒட்டிக் கொள்கிறேன்,,,

என் ஆடைகளை
அவசரபடாமல்
அவிழ்கிறதுன்
கைகள்,,,

ஆடை விலகிய
வெட்கத்தில்
கண்மூடுகிறது
வானம்,,,

கூச்சத்தின்
உடலசைவை
ஊமை விழிகளால் நோட்டமிடுகிறாய்
நீ,,,

உன்
விரல் கோதும்
என் கூந்தலில்
வானம்
உடுத்திய கார்மேக உடைகளின்
கூட்டங்கள்
விளையாடுகிறது,,,

உடைகள்
விளையாடுவதை
சொக்கிய
இன்ப
மயக்கத்துடனே
ஓரக்கண்ணால்
நானும்
ரசித்துவிடுகிறேன்,,,

உச்சந் தலையில்
தொடங்கிய
முத்தம்
மெட்டியொலியில் சங்கமிக்கிறது
மெதுவாக
என் உடலெங்கும் வெதுவெதுப்பாய்
பரவுகிறது
போதவில்லை
என்கிறது
புணர்தல்,,,

செவ்விதழ்களை
கவ்வியதில்
செங்காய்கள்
உடனே
கனிகின்றது
உதட்டில்
அதன் சுவையும்
என் உமிழ்நீரில்
கலந்து முக்கடலில்
சங்கமிக்கிறது
இதுதான்
இச்சையின்
உச்சமா?

எண்ணிப்பார்க்கிறேன்
என் எண்ண
ஓட்டத்தில்
நீ புணருமழகை
படுக்கையில்
கசங்கியிருந்த
மலர்களிடம்
சொல்லிச் சொல்லி
கர்வம் கொண்டேன்
காதலில் காமம்
கசிந்தோட
வேண்டாமா,,,

எத்தனை முறை
எண்ணிக்
கணக்கிட்டாய்
என் கள்வனே
எண்ண
ஓட்டத்தை,,,

உச்ச இன்பம்
அடைதலில்
பெண்ணினம்
எப்போதும்
போதாதென
எத்தனை முறை
கணக்கிட்டாய்
என் கள்வனே,,,

இன்பத் துளிர்விடும்
மலர் பறிக்கும்
உன்னழகில்
வியந்துதான்
போகிறேன்
விந்தையான
வித்தைகளை
எங்கே கற்றாய்
காதுமடல்
முத்தமிடுகையில்
கற்ற வித்தையின் ரகசியத்தையும்
சொல்லிவிடேன்
எனக்கு,,,

கடைசி பாய்ச்சலில் கண்சொக்கி
கிடக்கிறேன்
உடலில் இன்னும் உயிரோட்டம்
உள்ளதெனக்கு,,,

உன் உணர்ச்சி
மழையில்
உள்ளம் நனைய குளிரெடுக்கிறது
எனக்கு
குழந்தையொன்று
இப்போதே
என் கருவில்
உதிர்த்திடக்
கண்டேன்,,,

புணரும் வேகம்
புவியீர்ப்பு
விசையாகிறதே
இப்போது,,,

மூடு பனிகளெல்லாம்
எனை மூடேற்றும் வியர்வைத் துளிகளில்
கலக்கிறது
அவைகளும்
காமத்தீயில்
குளித்திருக்க வேண்டுமென
என் நெஞ்சம்
கணிக்கிறது,,,

கணிப்பில் பிழையில்லை
கண்சொக்கி
கிடக்கிறது
மூடுபனி கூட்டங்கள்,,,

புணர்ந்தது போதுமா?
உச்சு இன்பம்
உனக்குண்டா?
காமத்தில் உனக்குந்தான்
திருப்தியுண்டா?
இன்னும் விளையாடலாமா?

இப்படிப் பல
கேள்விகளடுக்கி
என் காதோரம்
கிசுகிசுக்கிறாய்,,,

இது போதுமெனக்கு
மது போதையில்
ஒருதலை திருப்தி
மட்டுமே
ஓங்கி நின்று
புணரும் பெண்ணை
புரட்டிப் போட்டு
அவள் ஆசை முடியுமுன்னே
தனதிச்சை
முடிந்ததென்று
கட்டிலில்
வாந்தியெடுத்து
கடைசியாய்
குரட்டைவிடும்,,,

பல காதலர்களுக்கு
நடுவே
கட்டழகு குணவழகு
காதலனாகத்
தெரிகிறாய்
நீ,,,

முழுதாய் எனை தந்துவிட்டேன் முழுமதியினை
ஏனழைக்கிறாய்
திரைமூடாதே
திகட்டாத
வேட்கையினை
திரண்டு வந்து பார்க்கட்டும்,,,

திராட்சை
தோட்டங்களில்
வீசும் காற்றோடு
பல காம சூத்திரங்கள்
கலந்துவரும்
ஒவ்வொன்றாய்
தேடிபிடித்து
நாமும் கற்றிடலாம்,,,

காதலை நாமும் கொன்று விடவில்லை
ஆதலால்தான்
காமம்
நமக்கொன்றும்
கசக்கும்
கனியாகிடவில்லை,,,

காமம் பேசாத
உதடுகளின்
ஊமைக் கதவுகளை
திறந்து விட
வேண்டுமென
துடிக்கிறதென்
மனது,,,

காமமில்லா
காதலை
பூட்டிவைத்து
காதலை மட்டுமே
திறக்கும்
பொருந்தாச்சாவி
தேவையில்லை
நமக்கு,,,

நாம் காதலிக்க பிறந்தவர்கள்
நமக்கும்
உணர்ச்சிகளுண்டு
உதடுகள்
காமத்தை பேசட்டும் அப்பேச்சுகள்
காற்றில் கரைந்து
வானமும்
கலவியில்
மூழ்கி திளகட்டும்,,,

உறவுகளால்
வலம் வரும்
உண்மை
காதலர்களுக்கு
மட்டுமே
காட்சியாகும்
காமமிது,,,

உள்ளத்தால்
சேராது
உடல் ஒன்றே
விரும்பும்
ஒவ்வாத காதலுக்கு இக்காம புணர்தல்
என்றுமே
காட்சியாகவும்
தெரியாது
சாட்சியாகவும்
நிற்காது,,,

Monday, March 16, 2015

காலி வயிறு

வயிற்றுக்கும்
வாழ்வுக்கும்
இணைப்புப்
பாலமான
இயற்கையே

இருப்பதை உண்டு
இல்லறம் பேண
எங்களுக்கும்
ஆசைதான்

என்ன செய்ய
உழைத்து
வியர்த்த உடம்பில்
உயிரை
வஞ்சிக்கிறது
உருண்டை
உலகத்தில் ஓரினம்

முதலாளி
என்றொரு பெயர்
இனத்திற்கு
பொருத்தம்தான்

துயரம் துடைக்கப்
புறப்படும் எம்மின
பெண்களின்
கற்பினை கேட்கிறது
முதலாளியினம்

அடங்காத பசிவேறு
அலைய வைக்கிறது
எம்மின குழந்தைகளை

அலைகடலில்
நுரை
ததும்புதல் போல
அரளி விதையால்
உயிர் துறக்கிறார்கள்
அவர்களும்

தற்கொலை என்கிறார்கள் பலர்
பட்டினிக் கொலையிதுவென்று
பார்வையை
திருப்புவார்களா
எனவும்
தெரியவில்லை

விவசாயம்
விட்டொழித்து
விழுமங்களை
சேகரித்து
நகர்புறம் தொலைய
எத்தனிக்க
எண்ணிடும்
போதெல்லாம்
எட்டி உதைக்கிறது
எங்களின்
வி(லை)ளைநிலம்

அனாதைக்கு
ஆதரவு தாராயோ
நகர் புறம் நோக்கி
நீங்களும்
போகலாமோ
எனை உழுவதை
தவிர வேறொன்றும்
தெரியாதே
உங்களுக்கென
புலம்பித் தள்ளுகிறது
பூர்வீக விளைநிலம்

பட்டம் பெற்ற
பலகோடி இளைஞர்களும்
அயல்நாடைத்
தேடி
அழிந்துபோனார்கள்
அணையா
விளக்காக எங்கும்
விரித்தோங்குகிறது
முட்புதற் காடுகள்

தவறில்லை
தாவிபறக்கத்
துடிக்கிறார்கள்
இளைஞர்கள்
பட்டம் பறந்தாலும்
பற்றியிழுப்பது
முதலாளியினம்
தடவிய
மாஞ்சா கயிறன்றோ

காசு பணமில்லா
காரணத்தால்
கோவனத் துணியும்
உடம்பில்
இல்லாம்
அம்மணமாக
அவமானப்படுகிறோம்
அண்ணாடங்காட்சியென
அதற்கும் பெயர்
வைத்து விட்டார்கள்
பாவி முதலாளியினங்கள்

அறியாமை பிணிபிடித்தமையால்
அதிகார
முதலைகளுக்கு
அன்றாடம்
உணவாகிறோம்


இறப்பென்பதே
இல்லையென்று
நீரில் இருக்கும்
மீன்களுக்கு
நிலத்தில்
துடிக்கும்போது
தெளிந்துவிடும்
அறியாமைதான்
கண்களை
கட்டிப்போட்டதென்று

எங்களுக்கும்
உருவம் உண்டு
அவசியம்
அறிந்தபின்னர்
மாண்ட பின்னரும்
மணப்பந்தலில்
வாழ்ந்து விடும்
வாழையை போலவே
எங்களின் ஏழையினம்
உழைப்பால் உயிர்பெற்று
உயரத்தில் ஒருநாள்
வாழ்ந்து காட்டிடுவொம்

அது வரையில்
காத்திடுங்கள்
காலி வயிற்றோடு
அலையும்
எம்மின ஏழை
வர்க்கங்களே!

தாய்த் தொடுதலின் தேடல்

தாய்த் தொடுதலின் தேடல்


மெய்யுடல்
மேம்பட்டிருந்தது
யார் முதலில்
தொடுவதென்பதில் தூரிகை
தாமதித்துதான்
போனது

புத்தம் புதிதாய்
பூமிபார்த்தவுடன்
அழுவதில்
ஆனந்தமே
அணைத்து கொள்ள
எனதருகே
நீயிருக்கையில்

நான் எதை முதலில்
தொட்டிருப்பேன்
தெரியவில்லை
இதய துடிப்பு
யூகித்துக் கூறிற்று

இவன் என் குழந்தையென
காட்டிய
ஆள்காட்டி விரலைத்தானே
முதலில் நான்
தொட்டிருப்பேன்

மொட்டவிழ்த்து
முகமலரும்
மலரை போல
என் முகமப்போது
மலர்ந்தது தானே

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

திங்களவனை
வணங்கி
வாழும் உயிர்களில்
அன்பு நிறைந்தோடும்
ஆகாச வெளி
உறவுகள்
ஒன்றோடொன்று
ஒட்டிக்கொள்வதுபோல்
உயிர் கொடுத்தாளே
இயற்கை அன்னை
அவளை விடவும்
அழகாய் நானும்
சிரித்தேனா?

இல்லை
ஏழைத்தாய்க்கு
பிறந்து விட்டோமென
எண்ணெயில்
வெடிக்கும்
கடுகுகளாக
வெடித்துக்
காரந்தள்ளும்
சினமுகத்தோடு
இருந்தேனா?

இல்லை
மழைவராத
மேகம் பார்த்த
மயில் சோக
முகத்தோடு
இருந்தேனா?

சொல் அம்மா
எப்படி உணர்ந்தேன்
உன் முதல்
தொடுதலை
நான்

வாய்வராதே
உனக்கு
எப்போதும்
நான் சிரித்திட
வேண்டும்
அதை நீயும்
ரசித்திட
வேண்டுமென
எண்ணமுனக்கு

இயற்கை அன்னையே
நீயும் எனக்காகிறாய்
இரண்டாம் தாயாக

இன்னுமும் என்
தாய்
சொல்கிறாள்
சிரித்தே பிறந்தேனாம்
நான்

இருதாய்க்கும்
இன்னொன்று
சொல்கிறேன்
தோல்வி காணாத
முதிய வயதிலும்
முடிந்து போகாது
தொடுதலின்
தேடல்
தொடர்ந்தே
செல்கிறது

எனை வளர்த்தது
இரு தாய்மார்கள்
என்பதாலோ
என்னவோ
பிரிவதாய்
எண்ணமில்லை
எப்போதும்
அவ்வெண்ணம்
எழுந்ததுமில்லை,,,

Sunday, March 15, 2015

மனதும் மலரிதழும்

மாற்றத்தை
மாலையாக
கோர்க்கிறது
மனது,,,

என்ன விந்தையிது!
மலர்களில்
கூடவா
வெட்கம்
கசியும்,,,

வியப்பில்
விழுந்த
மனதை
மலரிதழ்
மடியினில்
தாங்கியது,,,

மனதோடு
மலரிதழ்
இனிக்கும்
லீலைகளை
தொடங்கியது,,,

ஊரைசுற்றி
ஒரே இறைச்சல்
மனதில்
மட்டும் மௌன
அமைதி,,,

மனதை விட்டு
விலகிச் செல்கிறது
சுற்றியிருந்த
விழிகளின்
மௌனம்
இரண்டும்
மனம்விட்டுப்
பேசுவதனால்,,,

மெல்ல
அவிழ்க்க
தொடங்கியது
அதற்கான
மொழியை
மலரிதழ்
மனதிடம்,,,

என்
மலரிதழில்
வெட்கம்
கசிவதை
கண்டாயே
மனதே,,,

வேறொன்றுமில்லை
உன் மனதிற்கு
பிடித்தவளே
என் மலரிதழில்
முத்தமிட்டாள்,,,

அவளின்
கைகள் என்னை
பறிக்க
மறுத்துவிடுகிறது,,,

என்தாய்
செடிவேருக்கும்
எனக்குமிருந்த
உறவை
மீட்டெடுக்கவே
அவள்
கூந்தலுக்கு
என்மீதிருந்த
ஆசையை
அடக்கி பொய்க்கோபத்தை
கூந்தலின் மீது
தெளிக்கிறாள்,,,

ஈரக்கூந்தலின்
நீலிக்கண்ணீரில்
அவள்
முதுகும்
நனைந்திடக்
கண்டேன்,,,

அவள் முத்தமிட்ட
நொடி பொழுதில்
என் விரிந்த
இதழ்கள் தான்
இவைகளை
எல்லாம்
நோட்டமிட்டது,,,

மனது கசியும்
வெட்கத்தை
இப்போது
மலரிதழ் கண்டது,,,

இரண்டும்
இன்பத்தில் உறைந்து
உரக்கச் சொல்கிறது
இவள்
காதலுக்கு(க)
பிறந்தவளென்று,,,

எது தாய்மை

"எது தாய்மை"

விட்டில் பூச்சிகள்
வீடெங்கும்
நிறைந்திருக்க,,,

உள்ளே
நுழைந்தவளோ
விளக்கேற்ற
மறுக்கிறாள்,,,

முற்றிப்போன
வாசல் மரத்திலோ
முளைக்க
துடிக்கிறது
முதுமையின்
சித்தாந்தங்கள்,,,

அவளும் பெண்
இவளும் பெண்
இருவரும்
நின்றார்கள்
அமைதியை
தொலைத்து,,,

அடிக்கடி
வெடிக்கிறது
சமையலறை
அடுப்புகள்
இது அவளுக்கு,,,

உதவாத பொருளெல்லாம்
ஓரிடத்தில்
தஞ்சம் புகுவதுபோல
முடிவினில்
முதியோரில்லம்
இது இவளுக்கு,,,

கூட்டுக்
களவாணியவன்
இரண்டிற்கும்
இசைந்து
கொடுக்கிறான்,,,

குடும்பம் சிதையுண்ட
குப்பை மேட்டில்
குழந்தை,,,

தாய்ப்
பாலில்லை
தவிக்கிறது
குழந்தை
அழகை
மெழுகேற்றுகிறாளாம்
அவள்,,,

நோயுற்று
தாய்ப்பால்
தெம்பற்று
மெலிந்தே வளர்கிறது
குழந்தை,,,

முடிவென்ன
தெரியுமா?
முற்றத்து கொட்டகையில்
கூட
அவளுக்கு
இவளுக்கும்
அவனுக்கும்
இடமில்லை,,,

இப்படியே
தொடர்கிறதே
இரக்கமற்ற
ஈன
வாழ்க்கை,,,

இப்போது கூட
விடியலாம்
தாய்க்குலமே
தாய்மையை
கைவிடாதீர்கள்,,,

பெண்ணிற்கு
பெண்ணே
எதிரியாம்
எழுதியவனின்
பேனா
உடைய வேண்டாமா,,,

தாய்ப்பாலில் தானே
தாய்மை உணர்வு
சிறக்கிறது,,,

பெண்ணினமே
எது தாய்மை
என்பதை
இப்போதேனும்
புரிதலை தேடி
புறப்படுங்கள்,,,

Saturday, March 14, 2015

மார்க்ஸின் வறுமையில் காதல்

வறுமையில்
வாழாது
காதல்
என்போர்
பலரை கண்டேன்

பாவம்
அவர்கள்
பக்தியில்
மிதக்கிறார்கள்
என
பாவப்படுகிறதென்
மனது

பட்டினியில்
பாம்பாய்
நெளிவது
காதல்
என்போர்
பலரை
கண்டேன்

என் கருணை
அவர்கள் மீது
விழாதபடி
நானும்
பக்குவமடைந்தேன்

நமக்கென்று
நிரந்தரமாய்
தங்குமிடம்
இல்லையெனில்
தங்காது
காதல்
என்போர்
பலரை
கண்டேன்

நானுனர்ந்த
அரவணைப்பு
அவர்கள்
உணர
வாய்ப்பில்லை
உணர்த்தும்
உள்மனதை
இப்போது
திறக்கலானேன்

கேளுங்கள்
தோழர்களே

வறுமையிலும்
வாழ்ந்துவிடும்
காதல்
பசி
பட்டினியிலும்
சாகாது
காதல்
தங்க இடமில்லாதபோதும்
தங்க மகுடத்தில்
ஏறவைத்துவிடும்
காதல்

காதல் ஒன்றே
மனிதம் படைக்கும்
காதல் ஒன்றே
மானிடம் போற்றும்

எதையும்
நம்பிவிடாதீர்கள்
அறிவியலின்
தோல்வி
ஆராய மறுப்பதில்
இருக்கிறது

ஆதாரம்
தருகிறேன்
ஆகாரமாய்
பருகி
விடுங்களேன்

அவ்வாதாரத்தையும்
அலசி பார்த்துவிடல்
நன்று

ஹைகேட்
கல்லறையில்
அறிஞனொருவன்
உறங்குகிறானே
அவனே
காதலுக்கு
ஆதாரம்

அவன் ஒன்றும்
ஆடம்பர
மாளிகையில்
வசதியாய்
வாழ்ந்தவனில்லை

வறுமையில்
உழன்று
வாழ்க்கை
சுழற்சியில்
வாழ்ந்து
காட்டினான்
அம்மனிதன்
அவன் பெயர்
கார்ல் மார்க்ஸ்

வறுமையில்
பிறந்தது
"மூலதனம்"
நுகர்ந்து
பாருங்கள்
காதல் வாடை
வீசுமதில்
வசந்த மலர்களின்
வாசத்துடன்

வறுமையில்
வீழ்ந்தாலும்
கடைசி வரை
மார்க்ஸை
காதலித்தாள்
ஜென்னி

உண்மை காதலுக்கு
அவளே ஆதாரம்
அவளுக்கும்
பங்குண்டு
"மூலதனம்"
படைக்கவே
காதலை
மூலதனமாக
வைத்தவள்
ஜென்னி

ஆதாரம்
தந்துவிட்டேன்
அழகியல்
காதலை
அவர்களைபோல்
பெற்றெடுங்கள்

என்றும் நினைவுகளை
சுமந்தவாரே
கார்ல் மார்க்ஸின்
நினைவு நாளில்
மார்க்ஸியத்தை
மனதிலேற்றி
மாமனிதனின்
வறுமை காதலை
மனதார நானும்
புகழ்ந்திடுவேன்


14 March 1883 (வயது 64)

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...