Saturday, May 30, 2015

சென்னை ஐஐடி (IIT) யின் காவிமயத்தால் "அம்பேத்கர்பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பிற்கு"தடை விதிப்பு
ஒரு போலியான போராட்ட நிகழ்வுகளுக்கு உலகை உலுக்கிய போராட்டமென சப்பைகட்டு கட்டும்
ஊடகங்களுக்கு தீணி போடும் அதேபானியிலான இந்துத்துவ பார்ப்பானியத்தின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூகம்தான்
நம்முடையது."சென்னை ஐஐடி" இந்தப்பெயரை கேட்டாலே அவலங்கள் நிறைந்த அதுவொரு தனிவுலகமான பார்வையை அவர்களாகவே
உறுவாக்கி வைத்துள்ளார்கள் என்பது நிதர்சன உண்மை, இந்துத்துவ பார்ப்பானியத்தின் பிடியில் என்றோ சிக்கிக்கொண்ட சென்னை
ஐஐடியை பிறகெந்த கண்ணோட்டத்தில் பார்க்கவியலும்.அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்களும் சமூகநல்லிணக்கத்திற்காக முத்த போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்களே என்று
வக்காளத்து வாங்கும் பிற்போக்காளர்களுக்கு ஐஐடியில் பெரும்பான்மையாக
பார்ப்பனர்களும்,பெரும் முதலாளித்துவர்களும்
மட்டுமே படிக்கும் மத்திய அரசின் பெயரிலான கார்ப்பரேட் நிறுவனமென்பதை உணர்த்தியாக வேண்டியிருக்கிறது.சென்ற ஆண்டு (2014) நவம்பரில் நிகழ்த்தப்பட்ட கலாச்சார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும்
செயற்பாடுகளை கண்டிக்கும் விதமாக இந்தியா முழுதும் நடைபெற்ற முத்த போராட்ட நிகழ்வினை தமிழகத்தில் தொடங்கிவைத்திருந்தது சென்னை
ஐஐடி நிறுவனம் .இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட இப்போராட்டத்திற்கு அவர்களை
போன்றே ஆதிக்கத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு
தரப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க உடனே இதுவொரு மிகப்பெரும் புரட்சிப்போராட்டென ஊடகங்களும் சப்பை கட்டு கட்டியிருந்தது.
இதில் வேடிக்கை என்னவெனில் கலாச்சார கண்காணிப்பும் இவர்களே நிகழ்த்துவார்களாம் அதற்கெதிரான போராட்டத்தையும் இவர்களே
முன்னெடுப்பார்களாம் (அதாவது இந்துத்துவ பார்ப்பானியம்,மற்றும் பெருமுதலாளித்துவம்) இது புதிதான செயல்பாடில்லை ஆண்டாண்டு காலத்தில் அவர்களின் ஆதிக்க யுக்தி அதுவாகத்தான் இருக்கிறது.தற்போது எழுந்துள்ள ஓர் உரிமை மீறல் அல்லது உரிமையை பறித்தலுக்காக மேற்கண்ட ஒரு போலி புரட்சிக்காக வக்காளத்து வாங்கிய அவ்வெகுசன
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தயாரா? என்றால் உடனே தமக்கே உரித்தான
பின்வாங்குதலையையே பயன்படுத்துகிறார்களே ஏன்? அச்சமா? தம்மாலே வழிநடத்தப்படும் காலாச்சார கண்காணிப்பில் தடை
ஏற்பட்டுவிடப்போகிறது ! என்கிற அச்சத்தினால் மட்டுமே அவர்கள் பின்வாங்குகிறார்கள் என்பது
தெளிவு."அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர் வட்டம்" என்ற ஐஐடி மாணவரமைப்பை தடைசெய்து
அவ்வமைப்பு மாணவர்கள் மீது பல்வேறு போலிகுற்றச்சாட்டுகளையும்,கல்விபறித்தலையு­ம் ஐஐடி நிர்வாகம் செய்துள்ளது. இந்நிகழ்வு உரிமை மீறலென்றும், சமூகநீதி
அத்துமீறலென்றும் மேற்கண்ட இந்துத்துவ
பார்ப்பானிய பெருமுதலாத்துவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருந்தாலும் மவுனத்தோடும், ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதுவொரு சரியான
நடவடிக்கையென்றும் வாதிடுவதுதான் அவர்களின் பணியாக இருக்கும். காரணம் அவர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்த
பெருந்தலைவர்களாயிற்றே அம்பேத்கரும், பெரியாரும்,,,இன்று நேற்றல்ல அதற்கு முந்திய
காலத்திருந்தே இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ மயமாகி கிடந்த ஐஐடியின் முகமூடி வெட்டவெளிச்சத்திற்கு
வந்துள்ளதென்றே "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பை" தடைசெய்தன் மூலம் நமக்கு உணர்த்துகிறது. மாணவர் அமைப்புத் தடைக்காக இவர்கள் ஜோடித்த நாடகத்தையும்
தெரியபடுத்திவிட வேண்டும்.மாட்டிறைச்சி உண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவர்
அமைப்பு" மாணவர்கள் விமர்சித்து பேசியும்,துண்டறிக்கைகளை கொடுத்தும்
அச்சட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்கிறார்களென்று அனாமத்தானவர்கள் கடிதம் எழுதி நிர்வாகத்திற்கு அனுப்பினார்களாம்
அதனை குற்றமென கருத்தில் கொண்டு ஐஐடி நிர்வாகம் மாணவர் அமைப்பை
தடைசெய்திருக்கிறது.குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்கள். இந்துத்துவ பார்ப்பானிய ஆர் எஸ் எஸ்ஸை அப்படியே
உள்வாங்கிக்கொண்டிருக்கிறது ஐஐடி, இதில் எதிர்ப்பார்ப்புகள் ஏதுமில்லை,முற்றிலும் காவி மயமானவர்களுக்கு நிச்சயம் அண்ணலையும்
ஐயா பெரியாரையும் அறவே பிடிக்காதென்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஏற்கனவே காவிகளோடு கைகோர்த்துக்கொண்டு
அரசமைப்பிற்கு எதிரான பல்வேறு செயல்பாட்டு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது சென்னை ஐஐடி, உயர்கல்வி நிறுவனங்களில் எப்போதுமே பிற்போக்குச் சிந்தனைகள் மலிந்திருக்கும் என்பது அறிந்த ஒன்றே,,, இன்றுவரையில் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தாத உயர் கல்வி நிறுவனமாக இந்த இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவ ஐஐடி நிறுவனங்கள்
செயல்படுகிறது.மேலும் தலித்தின விரோத போக்கு , சிறுபான்மையின மக்கள் விரோத போக்கென்று செயல்படுகிறது.முற்றிலும் காவிகளின்
கைகளில் நமது கல்விநிறுவனங்கள் சிக்கிக்கொண்டிருப்பதால்தான் இன்றைக்கு இவர்கள் தைரியாக அண்ணலுக்கும்,பெரியாருக்கும் மாணவச்சமூகத்துக்கும் தடைபோடுகிறார்கள். பெரியாரின் பெரும் உழைப்பும் அண்ணலின் பெரும் சிந்தனையால் விளைந்த அரசியலைப்புச் சட்டமும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஐஐடி நிறுவனங்கள்தான்
உலகளவில் கால்பதிந்திருக்க முடியுமா? அவ்வாறிருக்க இன்றைக்கு வளர்ந்து
விட்டோமென்கிற பாசிசத்தின் படியிலான அசட்டுத் தைரியத்தால் சென்னை ஐஐடி அண்ணலையும் பெரியாரையும் புறக்கணிக்கிறதென்றால் அத்தைரியத்தை அவர்களுக்கு ஊட்டியது காவிகளல்லாமல்
வேறுயாரால் நிகழ்த்தியிருக்க முடியும். பெரியாரின் பகுத்தறிவுக்கும் அண்ணலின் பகுத்தறிவுக்கும் முன்னால் இவர்களின் தடை ஒன்றுமே செய்துவிட முடியாதென்று அண்ணலையும் பெரியாரையும் ஏற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களாகிய நமக்கு
அதுவொரு உரிமை மீட்பாகவே களமிறங்க வேண்டும். சென்னை ஐஐடி யை பொறுத்தமட்டில் உயர்நிலை தலைமை நிர்வாகத்தில் தொடங்கி அந்நிறுவனத்தில் பாடம் பயிலும் மாணவர்கள்
வரையில் பெரும்பாலும் இந்துத்துவ பார்ப்பானர்களாகவே இருக்கிறார்கள்.சொற்ப எண்ணிக்கையிலான பார்ப்பனரல்லாத
முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்கள் , அவர்களை எதிர்த்துநின்று
அண்ணலையும்,பெரியாரையும் ஏற்று பார்ப்பன
ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அண்ணல் மற்றும் பெரியாரின் முற்போக்கு கருத்துக்களை இத்தமிழ்
மண்ணில் துளிர்க்கச் செய்து தங்களின் கல்வியறவு மேம்பாட்டினை மீட்டெடுக்கிறார்கள் . அதனொரு நடவடிக்கையாக "அம்பேத்கர் பெரியார்
வாசிப்பு மாணவர் அமைப்பு" என்றவொன்றை
கட்டமைத்து இத்தமிழ் மண்ணை சாதியற்ற
சமூகமாக மாற்றப் போராடும் மாணவச் சமூகமாக
தங்களை உறுவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நடவடிக்கையானது "அடிமைச் சமூகத்தின் எழுச்சி" என்றே குறிப்பிடலாம். மாணவர் அமைப்பு மீது வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி
தடை குறித்தான குற்றச்சாட்டிலேயே வெளிப்படையகத் தெரிகிறது காவிமய சென்னை ஐஐடியின் கோரமுகம். ஏன் மாட்டிறைச்சித் தடைச்
சட்டத்தை விமர்ச்சிக்க கூடாது? இந்தியாவில் மட்டுந்தானே உணவில் கூட சாதியம் முளைக்கிறது,அதனை எதிர்த்துக் களமாடுவது
அண்ணலையும்,பெரியாரையும் ஏற்ற
மாணவச்சமூகத்திற்கு கடமையாக அல்லவா இருக்கிறது. பிளவுபட்டிருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களாகிய நாம் ஒன்றுபட்டு சென்னை ஐஐடியின் இந்துத்துவ பார்ப்பானிய பெருமுதலாளித்துவத்திற்கெதிரான
வர்க்கப்போராட்டத்தினை முன்னெடுச்சென்று நம்
சமூகத்து உயர்நிலை கல்வியையும்,அக்கல்வி­­ பயிலும் மாணவச் சமூகத்தையும் , அண்ணலையும்,பெரியாரையும் மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி நமக்கொரு வாய்ப்பாக வாய்திருக்கிறது. "இந்துத்துவத்தை வேரறுப்போம் சமத்துவத்தை வென்றெடுப்போம்" அதிவிரைவில் வர்க்கப்போராட்டத்தை நாமும் இம்மண்ணில் நிகழ்த்திவிடுவோம் . நமக்கான சமூகக் கடமைகள் இன்னும் நிறைய இருக்கிறது இனியும் தாமதிக்காமல் "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பிற்கு ஆதரவாய் நின்று பார்ப்பானிய சென்னை ஐஐடியை மீட்டெடுப்போம்.
கல்வி நமக்கான உரிமை அதனை யாராலாலும் சுரண்டிவிட முடியாதென்று சூளுரைப்போம்.

Thursday, May 28, 2015

பழைய சினிமா பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்களேன்

பழைய பாடல்களை பார்க்கத் தொடங்குங்களேன் அதுவும் பெற்றோர்களுடன்
பார்க்கையில் நிச்சயம் நீங்கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை அவர்களின்
அனுபவத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் உங்களுக்கு
பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கின்ற பொழுது அதனோடு கூடவே அப்பாடல்
எங்கே எப்போது கேட்கப்பட்டது? எதனால் அப்பாடல் கவனத்தை ஈர்த்தது? அன்றைய
நிகழ்வுகள் என்னென்ன? என்று பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவுகளில்
அப்பாடல் வரிகளோடும் , இசையோடும் அனுபவமும் கலந்து ஓர் இன்பத்தில் அல்லது
அதற்கெதிரான துன்பத்தில் உங்கள் மனது மூழ்கி கிடப்பதை உணர்ந்து
அவ்வுணர்வினை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மனம் துடிக்கையில் பகிர்தலை
தடை செய்யாமல் நீங்களும் உடனடியாக பகிர்ந்து கொள்கிறீர்கள் . எனக்கு
பிடித்தமான இப்பாடலை எங்கே கேட்டேன் தெரியுமா? அப்போது எனக்குள்ளும்
என்னை சுற்றியுள்ள சமூகத்துக்குள்ளும் என்ன நிகழ்வுகள் நடந்தது தெரியுமா?
என்று உறுக்கமாகவோ அல்லது உற்சாகத்துடனோ மற்றவரோடு பகிர்ந்து கொள்ள
துடிக்கையில் நீங்கள் தனிமைபடுத்தப் பட்டுள்ளீர்கள் என்றுணர்ந்தால் தன்
உணர்வுகள் தடை செய்யப்பட்டிருக்கிறத­ெனும் வலியிலிருந்து உங்களால் விடுபட
முடியாதுதானே,அவ்வாறிருக்க பெற்றோர்களின் உணர்வுகளுக்கு தடையாக
நீங்களிருப்பது நியாயமற்றதென்று ஏன் உணர மறுக்கிறீர்கள்.ஒருமுறையேனும்
இதைச் செய்து பாருங்களேன் . உங்கள் பெற்றோருக்கு பிடித்தமான பழைய பாடலை
அவர்களோடு சேர்ந்து நீங்களும் பாருங்கள் பாடலோடு சேர்த்து பெற்றோர்களின்
முகபாவனைகளை கவனியுங்கள், முன்னெப்போதுமில்லாத மாற்று முகபாவனைகளை
பெற்றிருப்பார்கள் பெற்றோர்களென அறிவீர்கள் . அதோடு நில்லாமல் பாடலையும்
குலைத்து விடாமல் மிதமான பேச்சு கொடுங்கள் , அம்மா,அப்பா,தாத்தா,ப­ாட்டி
யாரிருந்தாலும் . திரையிலோடும் பாடலுக்கான பின்னனி நிலவரம்தான் என்ன
உங்களுக்கு ஏன் அந்த பாடல் பிடித்திருக்கிறதென்ற­ு பேச்சுவாக்கில்
கேட்டுப்பாருங்கள் பல உண்மையான வரலாற்று நிகழ்வுகளோடு பெற்றோர்களின்
காதலும்,கண்ணீரும் பேச ஆரம்பிக்கும் . அதன் பிறகு நீங்கள் உணவீர்கள் இந்த
உணர்களையா இத்தனைநாள் நாம் தடைசெய்து வைத்திருந்தோமென்று,,­ கூடவே
அப்பாடலும் உங்களுக்கு பிடித்து போகும்.இதன் மூலமாகவே பழைய பாடல்களையும்
மீட்டெடுக்கும் பணியில் நாமிறங்கி விட்டோமென்று ஒரு மகிழ்சியும்
உங்களுக்கு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக எனக்கான ஒரு நிகழ்வினை
முன்வைக்கலாமென்று தோன்றுவதனால்,,,
எனக்கு பழைய பாடல்களின் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை நடிகர் திலகம்
சிவாஜி வாங்கிய பணத்திற்கு மேல் நடிக்கிறார் என்கிற புத்தியாகவும்
இருக்கலாம் , (சம காலத்து அனேகரின் புரிதலாகவும் இது இருக்கிறது) ஆனால்
ஒரு நாடகக் கலைஞனுக்கு வசனமட்டுமல்லாது அவன் உடலில் வளைவு நெளிவு அதனோடு
கூடிய முகபாவனைகளை கொண்டிருந்தால் மட்டுமே கடைசி பார்வையாளனையும்
கவர்ந்திழுக்க முடியுமென்றும், கலைஞனின் கருத்துகளை கடைசி பார்வையாளன்
உள்வாங்கிக் கொள்ளமுடியுமென்றும் உணர தவறவிட்டதை உணர்த்தினார்கள்
எம்பெற்றோர்கள் .அன்றைய நடிகச் சிகாமணிகள் அனைவரும் தெருவீதி நாடகத்தில்
நடித்தவர்களென்றும்,அ­தன் மூலம் சமூகத்திற்கு செய்தி சொன்னவர்களென்றும்
பழைய பாடலை எம்பெற்றோர்கள் முன் பார்த்தமையால் அறிந்த வரலாற்று
தகவலாகும். ஆகவேதான் உணர்வுகளையும்,உறவுகள­ையும் சிதைத்து விடாமல்
சீர்படுத்த பழைய பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்கள் ,பழைய
பாடல்களோடு நம் வாழ்வும் இனிக்கும்.

Wednesday, May 27, 2015

பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது "மனிதம்" இது இனப் படுகொலையில்லாமல் வேறென்ன?

மனம் இளகியவர்கள் இப்படங்களை
பார்க்கலாம் உங்கள் மனங்களில் மதம்
குடிகொண்டிருந்தால் நீங்கள்
அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்
மாறாக உங்கள் மனங்களில் "மனிதம்"
குடிகொண்டிருந்தால் போராடும்
குணங்கொண்டு எழுச்சியடைவீர்கள்.
தைரியத்தை வளர்க்க நமக்கான தேவை
முற்போக்குச் சிந்தனைகள் மட்டுமே,,
பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின்
யுக்தியால் அழிகிறது "மனிதம்" இது
இனப்படு கொலையில்லாம் வேறென்ன?

பௌத்தம்   பாசிஸத்தின் பிடியில்
இருப்பதனால் பற்றி எரிகிறது
பர்மாவும் , இலங்கையும் மதம் மாற்றான்
கைகளிலே விளையாடுகையில்
புத்தனுக்கு புதைகுழி வெட்டுவதில்
எவ்வித ஆச்சர்யமுமில்லை காரணம் மதத்தை போதிக்காதவனே மரணித்து
கிடக்கின்ற பொழுது கடவுளாக்கியவன்
ஒன்டிப் பிழைக்கிறான். புத்தன் தான்தான்
கடவுளென்றும் தன்னைத்தான் வணங்க வேண்டுமென்றும் ஒருபோதும்
கற்பித்ததில்லை . பிறகேன் பௌத்தம் மதமாக்கப்பட்டது? அதற்கான தேவையை
எவ்விதத்திலும் உறுவாக்கம்
கொடுத்தவர்கள் மதவாதிகளாகவே
இருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு
மிகப்பெரிய போருக்குப் பிறகு
(கலிங்கம்) மனிதகொலைகள் மண்ணில் வீழ்ந்தமையால் மனம்மாறி புத்தமத
நெறிகளை ஏற்றுக்கொண்டார் அசோகர் என்பது வரலாறு. காலம் மாற்றத்தில் பௌத்தமும் மதத்துக்கான வெறித்தன போக்கினை ஆங்காங்கே விட்டுச்
சென்றிருக்கிறது. மதம் எதன் மீது
ஆதிக்கம் செலுத்துகிறதோ அல்லது
அடிமைத் தனத்தை புகுத்துகிறதோ அதன் முக்கிய காரணமாக மனிதனே இருக்கிறான். இதிலிருந்து அம்மனிதனும் எளிதாக தப்பித்துக் கொள்கிறான் பழிபோடத்தான் மதமிருக்கிறதே என்கிற தைரியத்தை
மதப்போதகர்கள் கற்பிதம் செய்கிறார்கள்
அவ்வளவே,,   இலங்கையில் நடத்தப்பட்ட தமிழீழ
இனப்படுகொலைகளின் பின்னால்
பெரும்பாலும் ஆட்சியதிகாரம் அரசியல் கைப்பற்றுதலே காரணமாக இருந்தது.
சிங்களம் இனப்படுகொலையை
நிகழ்த்திவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பௌத்த உதவியை நாடிச் சென்றது பௌத்தமும் அவர்களுக்கு
உதவியது உதவிய சில பௌத்த
பாசிசவாதிகளினால் ஒட்டுமொத்த
பௌத்தமும் இரத்தக்கரை படிந்து
காணப்பட்டது என்பதே உண்மையாக
இருக்கிறது. பரமாவில் இஸ்லாமியர் மீதான தாக்குதலும் இனத்தோடு கலந்த மதவெறித் தாக்குதலகாவே
எடுத்துக்கொள்ளலாம். பர்மாவைப்
பொறுத்தவரையில் எப்படி
இந்தியத்தியத்திலும் ,இலங்கையிலும் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்களோ அதே போலத்தான் பர்மாவிலும் இருக்கிறார்கள் . மதத்தின்
பெயரால் பெரும்பான்மையினம்
சிறுபான்மையினத்தை ஒடுக்குகிறது. கிட்டத்தட்ட தமிழீழப்படுகொலையின்
ஒப்பீடாகவே இதனை நோக்கினால் உண்மை விளங்கும். ஒப்பீடுக்கான தேவையும் இங்கே ஏற்படுகிறது. காரணம் பர்மாவிலுள்ள இஸ்லாமியச் சமூகத்தின் மீதான. தாக்குதலென்பது பல ஆண்டுகளாகவே தொடர்ந்திருந்தது. தற்போது எழுந்துள்ள அதிதீவிர
தாக்குதல் என்பது இலங்கை சிங்களத்தை பின்பற்றியே நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு ( ஜூன் 2014 ) சிங்களம்
நிகழ்த்திய இஸ்லாமியர் மீதான தாக்குதல் வன்முறையத் தொடர்ந்து இன்று பர்மாவில்
அது மீண்டும் கட்டவிழ்க்கப்படும் நிலையில் இனப்பேரின வாதத்திற்கு இருமதங்களும்
பலியாகின்றது என சுட்டிக்காட்டலாம் .
இந்தியத்தில் இந்துத்துவம்
செயல்படுத்தும் ஆண்டாண்டு கால
செயல்பாடுகளை அப்படியே
உள்வாங்கியுள்ளது தொடர்பு
நாடுகளான இலங்கையும்,பர்மாவும்,,இங்கே மதத்தின்
பெயரால் கொன்று வீழ்த்துவது புனிதம் எனவும் , மதநெறியெனவும் கற்பிதம் செய்தவர்களை தண்டிக்க இயலாத நிலையையாக காலமும்
மூடநம்பிக்கையும் நம்மை
கட்டிப்போட்டுள்ளதென்றேச் சொல்லலாம்.ஒரு மதம் இன்னொரு மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்த. அவர்களை
கொன்றொழிக்குமானால்
மற்ற மதங்கள் கைகொட்டிச் சிரித்து
ஆதிக்கம் செலுத்தும் மதத்தோடு
இணைந்து கொண்டு கூட்டாக மனிதம் என்கிற வார்த்தையினை
கொன்றொழிப்பதனால்தான் மதத்தை ஏற்காத இடது சித்தாந்த்தில் எங்களை இணைத்துக் கொள்கிறோம் என்பது
இப்போது தெளிவாக புரிந்திருக்கும். அந்த மதத்துக்காரன் மட்டும் எங்கள்
மதத்துக்காரனை அழிக்க வில்லையா ?
அதனால் நாங்கள் அழித்தவனை
பழிவாங்குகிறோம் . என்பதே இன்றை
மதப்பற்றாக இருக்கையில் மனிதம்
என்றுமே நிமிர்ந்து நிக்காது. இன்று
பர்மாவில்,இலங்கையில்,காஸாவில்,பாகிஸ்தானி­
ல்,ஆப்கானிஸ்தானில் என்று
தொங்கியிருக்கும் இனப்படுகொலைகள்
நாளை உங்கள் வீடுகளிலும்
குடிபுகலாம் என்பதே எங்களின்
கவலையாக இருக்கிறது. சிந்தித்துப்
பாருங்கள். அம்மா கிருஸ்த்து,அப்பா
இந்து, பிள்ளைகள் பௌத்தம், உற்றார் உறவினர்கள் இஸ்லாம், என்று இருக்கையில்
நாட்டிற்குள் நடக்கும் மதவெறித்
தாக்குதல் வீட்டிற்குள் நுழைந்தால் உலக மனிதயினமே உயிரை மாய்த்துக் கொண்டு அழிந்து போகும். இந்நிகழ்வுகள் நமக்கு வெகுதொலைவில்
இல்லை, ஏற்கனவே குடும்பங்களில் சிற்சில சண்டைகள் ஏற்படுவதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். பர்மாவில் தொடங்கிய இன்றைய இனப்படுகொலையை எதிர்க்க வேண்டுமெனில் மதத்தை விட்டொழித்து மனிதத்தை கையிலெடுப்பதே மிகச்சிறந்த ஆயுதமாகும்

ஒரு உயிர் கருவிலேயே
சிதைக்கப்படுவதை நாம்
கொலையென்கிறோம். அவ்வாறிருக்க பர்மாவிலும்,இலங்கையிலும் அதனைத்
தொடர்ந்துவரும் பல்வேறு நாடுகளில் கட்டவிழ்த்து விடப்படும் இனத்தின்
பெயரிலான மற்றும் மதத்தின் பெயரிலான
இனப்படுகொலையை மட்டும் நம்மால் நியாயப்படுத்த முடியுமெனில் ஒவ்வொருவருக்குள்ளும் மனிதாபிமானம்
வற்றி மிருகத்தன்மை
குடிகொண்டிருப்பதாகவே பார்க்கப்படும்.உலக வரலாற்றில் எந்த சர்வாதிகாரமும்
வென்றாக சரித்திரமே இல்லை,
அச்சர்வாதிகார வீழ்ச்சியால்
விடுதலையும் மனிதமும் மட்டுமே
வென்றெடுக்க முடியுமென
கோரூரக்காரர்களுக்கு
எச்சரிக்கையினை நாம் எப்போது
விடுக்கப் போகிறோம். நமக்கான
பிரிவினையினை போதிக்கும்
மதமிருக்கின்றவரையில் நாம் மரத்தின் உரத்திற்குக்கூட பயன்படப்போவதில்லை
என்பதை பர்மா இஸ்லாமியப்
படுகொலையும், இலங்கைய இனவழிப்பு படுகொலையும் உணர்த்துவதோடல்லமால்
தொடர்ந்தும் செல்கிறது . எப்போதும்
நிறுத்தப்போகிறோம் இந்த கோரூரத்தை , இனியும் வேடிக்கை மட்டுமா நமது
வாடிக்கையான நிகழ்வாய்
இருக்கப்போகிறது. மனிதம் இம்மண்ணில்
முளைக்கவே முளைக்காதா? இப்படியே தொடர்தலால் மனித இனம் அழியாதா?
இப்படியான கேள்விகளோடு கூடவே நம் நெஞ்சை குத்திக் கிழிக்கிறது.
கொலையுண்ட மனித உயிர்களும்
மண்ணில் ஒடும் ரத்த வெள்ளாறுகளும் ஓடும்.
இலங்கையை இழந்து நிற்கிறோம்
ஒன்றுகூடுங்கள் மனிதச் சமூகமே
பர்மாவையாவது காப்பாற்றுவோம்.
இங்கே தேவை "மனிதம்" மட்டுமே "மதமல்ல"

Tuesday, May 26, 2015

மனிதமே செய்வாயா!

என் மதம் இதுவென்று
ஊட்டி வளர்த்திட்டார்கள்
ஊமையாகிப் போனேன்
நான்
வெடித்தது மதக்கலவரம்

என் சாதி இதுவென்று
சமைத்து போட்டார்கள்
காரம் தூக்கலாகி
கைகளில்
ஆயுதமேந்தினேன்
நான்
அழிந்தது மனிதயினம்

நீ ஆளப்பிறந்தவன்
என்றார்கள் ஆயுதம்
என் கைகளை இன்னும்
கெட்டியாக பிடித்திருக்க வெறியின்னும் அடங்கவில்லை
எனக்கு

பெண்ணடிமை போற்று
அதுவே உன் ஆண்மைக்கு இலக்கணமென்று
புத்தகமெனக்கு
கல்வி புகட்ட புறப்பட்டேன்
நான்

விந்தணுக்கள் ஊரெங்கும் பரவ
வீட்டிற்கொரு மரம்
போன்று கண்பார்க்கும்
பெண்களையெல்லாம்
புணர்தலில் பூரிப்படைந்தேன்
நான்

நாடு முழுக்கும்
நானாகி நின்றேன்
என் காலில் விழுந்து கிடக்கிறார்கள் வயதான பெண்களும்

அரசும் நானாகி
அரசனும் நானாகி நாட்டை
ஆள்கிறேன்
அரியணை போதவில்லை என் ராணிகளுக்கு

எனக்கெதிரியாக
எதிரில் நிற்பது
"மனிதம்" ஒன்றே

வீழ்த்தி விடுவேனென
சபதமிடுகிறேன்
நான்

எனக்கு சவக்குழி
என்றோ தோண்டிவிட்டது
"மனிதம்"
எனத்தெரியாமல்

மனிதமே என்
இந்தச் செயலுக்கு
நீயும் ஒருதலைபட்ச
தீர்ப்பு வழங்குதல்
தகுமோ!

மக்களும் நானும்தானே
சேர்ந்தழிக்க
தொடங்கினோம்
உன்னை
எனக்கு மட்டுமேன்
தண்டனை

அவர்களையும்
புதைத்துவிடு என்னோடு

இன்றே
வீழ்ந்துவிடுகிறேன்
மரணக் கைதியின்
கடைசியாசையாக
கேட்கிறேன் மனிதமே
செய்வாயா!
நீ
செய்வாயா!

"எமனை வரவேற்க கற்றுக்கொள்"

வட்டிக் கடை
டாஸ்மாக்
மருத்துவமனை
தொங்கும் பலகையில்
நன்றி மீண்டும் வருக!

காவல்துறை
அரசுகட்டிடம்
அரசியல் வாதிகள்
தொங்கும் பலகையில்
திருடர்கள் ஜாக்கிரதை!

மளிகைகடை
துணிக்கடை
குடிதண்ணீர்
பால்
காய்கறி
உணவுவிடுதி
தொங்கும் பலகையில்
எச்சரிக்கை! , அபாயம்!

சட்டப்பேரவை
பாராளுமன்றம்
தேர்தல் வாக்குறுதிகள்
தொங்கும் பலகையில்
அரசியல் பேசாதே!

கல்வி
வங்கிக்கடன்
உழைப்புக்கூலி
பிச்சைக்காரன்
தொங்கும் பலகையில்
இன்றுபோய் நாளை வா!

மதம்
மூடநம்பிக்கை
சாதியம்
பெண்ணடிமை
தொங்கும் பலகையில்
வாழ்க வளமுடன்!

தொழிற்சாலை
அரசு வேலை
விவசாயம்
தொங்கும் பலகையில்
சம்பள ஆளில்லை!

தொங்கும் பலகையெல்லாம்
பலசெய்திகள் சுமந்துநிற்க
சுற்றும் உலகத்தில்
தலைசுற்றி நிற்கிறேன்
தகவலை எழுதுங்கள்
பலகையிலில்லை
என் கல்லறையில்

எமனை வரவேற்க
கற்றுக் கொள்!
என்று,,,,

உன் மௌனம் போதுமெனக்கு

மலரினும் இனிய
மௌனங்களால்
எனை வருடுகிறாய்

வியர்வைத் துளிகளால்
புருவம் நனைந்திட
வழிந்தோடும்
மையினை எடுத்து மயிலிறகால்
உம்முக பாவனைகளை
எழுத வரம் வேண்டுமெனக்கு

மௌனமும் பேசும்மொழியென்று
இதுவரையில் நானுணர்ந்ததில்லை

இன்றதை நுகர்கிறேன்
விழிபேசும் வார்த்தைகள்
வின்னதிற
என் செவிகளுக்கு மட்டும்
விருந்தாகிறதே
என்ன விந்தையிது

செவிபுலன் வாங்கிய
வார்த்தைகளை எனதிதயம் சேகரிக்க
உன்னைத்தான் நான்
காதலிக்கிறேனென்று
கத்திவிட தோன்றுகிறதெனக்கு

காதலியே காற்றலை
வீச்சத்தில் கரைந்துபோகாத
உன்மௌனம்
என் கனல்காற்றில்
கலந்தின்பம் காணுகிறதிங்கே

தொலைதூரத்தில் நீயிருந்தாலும் எனதருகிலேயே
எனக்காகவே அமர்ந்திருக்கிறாயென்று
உன் முகபாவனைகள்
திரண்டுவந்து தித்திக்கத் தித்திக்க காதலை சொல்கிறதே

கவிதைகளால் என் காகிதங்கள் நனைய
நிரப்பிய பக்கங்களோ
பசி தீரவில்லையென
திட்டித் தீர்க்கிறது
எனதிடத்தில்

மீண்டும் உணர்ந்தேன்
உன் முகபாவனை
வலிமையை

வாழத்தான் வேண்டுமென்றால்
உன் மௌனத்தோடும்
வாழ்ந்துவிடுவேன்
கடைசி வரை உம்முக
பாவனைகளை
கண்டுரசிக்கும் காதலனாக இருப்பதே
போதுமெனக்கு,,,

Monday, May 25, 2015

கம்யூனிஸ்ட்டுகளின் தீண்டாமை எதிர்ப்புக் களம்


தீண்டாமை எதிர்ப்பு மற்றும் சாதி ஒழிப்பு என்று வருகின்றபோது கம்யூனிஸ்டுகள் மீதான விமர்சனம் மேலெழும்பிச் செல்கிறது . காரணம் முதலாளித்துவம்,
நிலபிரபுக்களின் ஆதிக்கம்.
கார்ப்பரேட்டுகளின் ஏகாதிபத்தியமென்று
மார்க்ஸிய லெனினியத்தின் மூலமாக அவற்றையெல்லாம் எதிர்த்து புரட்சி
போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள்
முன்னெடுக்கிறதேயன்றி அதனையும் தாண்டி இந்தியத்திற்குத் தேவையான சாதி எதிர்ப்பு, அல்லது பார்ப்பன எதிர்ப்பினை முன்னிருத்தாத
கம்யூனிஸ்ட்டுகள் என்று பரவலாக
கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம் இங்கே முன்வைக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட்டுகளின் மீதான இவ்விமர்சனம் உண்மையானதா ? என்றால் முற்றிலும் உண்மையென புறக்கணித்துவிடவும்
முடியாது. காரணம் இந்தியத்தில்
நிகழ்த்தப்படும் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களை கண்டித்தும் அதனை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்துச் சென்று தங்கள் கடமையை சிறப்பாக
ஆற்றுகின்றது.இருந்தும் ஏன்
பாதியளவுக்கு மட்டும்
எடுத்துக்கொள்ளப்படுகிறதென்றால் அதற்கும் காரணமுண்டு. ஒரு கம்யூனிஸ
தொழிற்சங்கத்தின் நடவடிக்கைளையும் அதன்
செயல்பாடுகளையும் கவனித்தால்
விளங்கும் .அது அரசு,பொதுமற்றும்
தனியாரென்ற அனைத்து துறைகளிலும்
மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிரு­­
க்கும் இரட்டை மாறுவேட முகங்கொண்ட
கம்யூனிட்ஸ்டுகள் ஆகும். ஒரு
கம்யூனிஸ்ட் த
உறுப்பினர்கள் வெறும் கம்யூனிஸ்ட்களாக
மட்டுமே இருப்பதில்லை மாறாக
அத்தொழிற்சாலைகளில் நிலவும்
ஆதிக்கச் சாதிய சங்களிலும் அல்லது
இயக்கங்களிலும் தங்களை
உறுப்பினர்களாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.இதன் காரணமாக
கம்யூனிஸ்ட்டுகள் எடுக்கும் எவ்வித
போராட்ட நடவடிக்கைகளுக்கும் சக
கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்குதலையே
கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளின் அழுத்தங்களை விட
ஆதிக்கச் சாதி இயக்கங்களின்
அழுத்தங்களை அவர்களை பின்னோக்கித்
தள்ளுகிறது. இவ்வகையான இரட்டை
மாறுவேட நடவடிக்கையானது வெறும்
தொழிற்சங்களில் மட்டுமே இருப்பதில்லை
மாறாக அடித்தட்டு கிராம தொழிலாள
வர்க்கத்தில் தொடங்கி அதிநவீன
தொழிற்துறை வரையில் எங்கும்
பரவிகிடக்கிறது . இம்மாதிரியான
இரட்டை மாறுவேட தோற்றத்தை எவ்வாறு
எடுத்தாளப்பட வேண்டும் அதற்கான
நடவடிக்கைகள் என்னென்ன என்பது
போன்றான தீர்வுகளை தேடியே
இத்தனையாண்டு கால கம்யூனிஸ்ட்டுகள்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும்
இன்றுவரையில் அதற்கான
தீர்வெட்டப்படவில்லை என்றேச்
சொல்லலாம்.தங்களுக்குள்ளேயான
நடவடிக்கைகளிலே இன்னமும் தீர்வெட்டாத
நிலையில் சாதி எதிர்ப்பை
முன்வைத்தால் இருக்கின்ற
கம்யூனிஸ்ட்டுகளும் முரண்பட்டு விலகிச்
சென்றுவிடுமென்று கம்யூனிஸ்ட்டுகள்
அச்சமுறுகின்றது. மேலும்
மார்க்ஸியத்தை பொருத்தமட்டில்
இந்தியாவில் சாதிகளும் மேலோட்டுப்
பார்வை கொண்டதாகவே இருக்கிறது.
இவ்வாறு இருக்க கம்யூனிஸ்ட்டுகள் சாதி
ஒழிப்பையும் தீண்டாமை எதிர்ப்பையும்
முன்னெடுத்தேயாக வேண்டும் என்கிற
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால்
அதன்தேவை கருதியும் உண்மை
சோஷயலிசம் இம்மண்ணில் விதைக்க
வேண்டுமென்கிற முற்போக்குச்
சிந்தனையினாலும் கம்யூனிஸ்ட்டுகள்
இன்று தீண்டாமை எதிர்ப்பினையும்,
சாதி எதிர்ப்பினையும் முன்னெடுத்துச்
செல்வதற்கான பாதையை வகுத்துத்
தந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்.
இனி கம்யூனிஸ்ட்டுகளின் மீதான
பார்வை அகலமாக்கப்படும் .
கம்யூனிஸ்ட்டுகளை மேற்கண்ட சாதிய
எதிர்ப்பு,மற்றும் தீண்டாமை எதிர்பின்
மீதான விமர்சனங்கள் இனி
உடைத்தெறியப்படும் எனக்கிற
நம்பிக்கையும் மாறாப்பற்றும் துளிர்விடத்
தொடங்கியிருக்கிறது என்றேச்
சொன்னால் அது மிகையாகாது. 18 மே 2015 அன்று விருதுநகரில்
நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் மாநில மாநாட்டில்
கம்யூனிஸ்ட்டுகள் தலைமையேற்று
இதற்கான போராட்டக் களங்களை
முன்னெடுக்க முனைப்புடன் செயல்பட
தங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது.
இன்றைய தேவையில் தீண்டாமை எதிர்பே
அவசியமென்று கம்யூனிஸ்ட்
உணர்ந்திருக்கிறது. இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தில்
தீண்டாமையின் பார்வை அவ்வளவாக அலசி
ஆராயப்படவில்லையென்றாலும் .தீண்டாமை குறித்து விரிவாகக் காண http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_35.html?m=0
மனிதனின் காலணியில் தொடங்கி
உச்சந்தலை வரையில் திணிக்கப்படும்
அல்லது செயல்படுத்தப்படும் அனைத்தும்
தீண்டாமைதான் என்கிற முடிவிற்கு
கம்யூனிஸ்ட்டுகள் வந்திருப்பது
வரவேற்க்கத்தக்க ஒன்றாக இருக்கிறது .
ஆனால் இம்மாநில மாநாட்டில் சாதிய
எதிர்பினை முன்னிருத்தவில்லை என்கிற
குறைபாடு இருந்தாலும். தீண்டாமை
எதிர்ப்பினை முன்னெடுப்பதன் மூலம்
சிறிதளவேனும் சாதிய எதிர்ப்பை
முன்னெடுத்துச் செல்லலாமென்ற
தீர்வுக்கு எதிராக நாம் செயல்பட
முடியாது. கம்யூனிஸ்ட்டுகள்
இந்நாட்டிற்கு தேவையானவர்களென்று
விரைவில் நம்சமூகம் உணரும்,உணர
வேண்டும் " கம்யூனிஸ்ட்டுகளின்
இந்நடவடிக்கைகளை பாராட்டவேண்டுமேத்
தவிர அதன்மீதும் காழ்ப்புணர்ச்சியை
கொட்டுவது வேண்டாத செயலென்றே
நாம் உணரவேண்டும்.

Sunday, May 24, 2015

செல்போன் ஏன் வெடித்துச் சிதறுகிறது? தீர்வுகள் என்ன?
தகவல் தொழில்நுட்பத்தின் அதீத
வளர்ச்சியின் காரணமாக இன்றைய
காலத்தில் அனேகர்கள் செல்போன்
பயன்படுத்துபவர்களாக
இருக்கிறார்கள் . செல்போன்
இல்லையெனில் வாழ்க்கையையோ
தொலைந்து விட்டதெனும்
சூழலுக்குக் கேற்றவாரு நம்மை
நாமே வடிவமைத்துக்
கொண்டுள்ளோம் என்றேச்
சொல்லலாம் . செல்போனெனும்
தகவல் தொழில்நுட்ப உதவியினால்
ஒரு காலத்தில் நமக்கு பெரியதாய்
தோன்றிய உலகம் இன்று நமக்கு
சிறியதாய் தெரிகிறது காரணம்
உலக உருண்டை நமது கைகளில்
செல்போனாக உருமாற்றம்பெற்று
நம்மிடையே
புழங்குகிறது.தொழில்நு
ட்பங்களில் எந்த அளவிற்கு நன்மைகள்
இருக்கின்றனவோ அதைவிடவும்
மேலாக தீமைகள் இருப்பதை நாம்
மறுத்துவிட முடியாது காரணம்
செல்போனால் ஏற்படும்
ஆபத்துகளை நாம் தினமும்
வாசித்திக்கொண்டேதான்
இருக்கிறோம். அதில் மிக
முக்கியமானதாக "செல்போன்
வெடித்துச் சிதறல்" எனும் ஆபத்து
இன்றளவும் நம்மை
அச்சுறுத்துகிறது.இந்தியாவை
பொருத்தமட்டில் ஒரு நாளைக்கு
சராசரியாக 15 நபர்கள்
இம்மாதிரியான செல்போன்
வெடிப்பு விபத்தில்
பலியாகிறாகிறார்கள் என்று
ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
இப்படியானவர்கள் செல்போனை
சார்ஜ் செய்யும் போதே
பேசியதற்காக விபத்தில் சிக்கிக்
கொள்கிறார்கள் என்றாலும்
அதுமட்டுமே விபத்தை
ஏற்படுத்துகிறது என்றுச்
சொல்லிவிட முடியாது. சார்ஜர்
போடாமல் நமது கைகளிலே
இருக்கும் போதும் செல்போன்
வெடிக்கும். இந்நிகழ்வு
பெரும்பாலும் ஆன்ட்ராய் மற்றும்
ஆப்பில் போன்ற ஸ்மார்ட் போன்களால்
ஏற்படுத்தப்படுகிறது. உங்கள்
கைகளிலே வைத்திருக்கும்
ஸ்மார்ட் போனானது எப்போது
வேண்டுமானாலும் வெடித்து
உங்களை மரணத்திற்கு இட்டுச்
செல்லுமென்றால் அதுவும்
"வெடிகுண்டு" ரகம்தானே! இதற்கு
தீர்வுதான் என்ன? ஏனிப்படி ஸ்மார்ட்
போன் வெடிக்கிறது என்பதை நாம்
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள
வேண்டியது அவசியமாகப்
படுகிறது. சார்ஜரில் போட்டு
பேசப்படும் செல்போன் வெடித்துச்
சிதறும் ஆகவே அம்முறையை
பயன்படுத்தாதீர்கள் என்றுமட்டுமேச்
சொல்கிறோமேத் தவிர எதன்
உந்துதலால் ஸ்மார்ட் போன்
வெடிக்கிறது என்பதை தெரிந்து
கொள்ளுதலும் அவசியம்.
செல்போன் வெடிப்பிற்கான
பெரும்பகுதியை தீர்மானிப்பது
செல்போன் பேட்டரிகளே! ஒரு
ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
வெடிப்பிற்கு பேட்டரியின் அதிக
வெப்பநிலையேற்றலே காரணமாக
அமைகின்றது. நீங்கள் பயன்படுத்தும்
ஸ்மார்ட் போனில் முக்கியமாக
பார்க்கப்பட வேண்டியது
பேட்டரியின் சார்ஜ் கொள்ளலவு
எவ்வளவு என்பதேயாகும். ஸ்மார்ட்
போனின் பேட்டரியில் அந்த ஸ்மார்ட்
போனின் கம்பெனிக்கு பிறகு
பேட்டரியின் கொள்ளலளவு
குறிக்கப்பட்டிருக்கும் . அதாவது
வோல்டேஜ் அடிப்படையில் 3.7V
,அல்லது அதற்கும் மேலான 4.5V,5.0V,
என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனை நன்றாக கவனத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும் .
இப்போது உங்களின் செல்போன்
பேட்டரியில் குறிப்பிட்டப்படுள்ள
வோல்டேஜ் அளவுக்கு மட்டுமே
செல்போனில் மின்சாரம் செலுத்த
வேண்டும் என்பது
விளங்கியிருக்கும் . பேட்டரியின்
வோல்டேஜ் அளவை கவனத்தில்
கொண்டு அப்படியே செல்போன்
சார்ஜ்ஜரை எடுத்துப் பாருங்கள்
.செல்போன் ஜார்ஜரில் ஒட்டப்பட்டுள்ள
லேபிளிலோ அல்லது அதனோடு
ஒட்டிய பிளாஸ்ட்டிக்கிலோ சில
குறிப்புகளை தாங்கிய பக்கத்தில்
கவனத்தை திருப்புங்கள். ஜார்ஜரில்
மாடலும், அதற்கடுத்து INPUT உம்
அதற்கடுத்து OUTPUT உம் இடம்
பெற்றிருக்கும் அதில் OUTPUT ஐ
கவனியுங்கள் அதில் 4.75V,
(வோல்டேஜ்) என்றோ அதற்கும்
மேலாக 5.1V,5.75V என்றோ
குறிப்பிடப்பட்டிருக்கும்
இங்கேதான் கவனமாக இருக்க
வேண்டும் உதாரணமாக உங்கள்
செல்போன் பேட்டரியில் 3.7V
என்றிருந்தால் அதற்கும் மேலாக 1.0V
ஐ தாண்டிப் போகாத ஜார்ஜரையே
நீங்கள் பயன்படுத்த வேண்டும்
அதாவது ஜார்ஜரின் OUTPUT ஆனது
4.7V இல் இருக்க வேண்டும் 4.7V
வோல்டேஜூக்கு மேல் நீங்கள்
செல்போனில் ஜார்ஜ் போட்டால்
பேட்டரி சூடாகி அது வெடித்து
விடும் . ஆகவே இவ்விரண்டையும்
கவனத்தில் கொண்டு உங்கள்
செல்போனுக்கு ஜார்ஜ் செய்திடல்
வேண்டும். ஜார்ஜ் செய்கையில்
செல்போனில் பேசுகின்ற போது
அளவுக்கதிமான சிக்னலை
இழுத்துக்கொடுக்க வேண்டியச்
சூழலால் செல்போனானது தன்
வரம்பைமீறி 4.7V ஐத்தாண்டி தனக்கு
ஜார்ஜ் கொடுக்குமாறு
செல்போனின் ஜார்ஜரை
தூண்டுகையில் ஜார்ஜரின்
ட்ரான்பர்மரை வேகமாக
இழுக்கிறது இதன் காரணமாக
ஜார்ஜரின் சூடும் செல்போனின்
சூடும் ஒன்றினைந்து
அளவுக்கதிகமான சூட்டினால்
செல்போனும் வெடித்து
விடுகிறது.இதே முறையைத்தான்
ஜார்ஜரும் வீட்டு மின்சாரமும்
மோதிக் கொள்கின்றன இதனை
கவனிக்க ஜார்ஜரின் INPUTல் எவ்வளவு
வோல்டெஜ் என்பதை
குறிப்பிட்டிருப்பார்கள்.இதனை
கருத்தில் கொண்டு ஏதோவொரு
ஜார்ஜர் நமக்கு கிடைத்து விட்டது
செல்போனுக்கென்று இல்லாமல்
அனைத்தையும் கவனத்தில்
கொள்ளவேண்டும். கூடுமானவரை போலி
ஜார்ஜர்களின் மூலம் செல்போனை
ஜார்ஜ் ஏற்றாமல் கம்பெனி ஜார்ஜ்ர்கள்
மூலம் செல்போனுக்கு ஜார்ஜ்
ஏற்றுங்கள். அடுத்ததாக கையில்
உபயோகித்துக் கொண்டிருக்கும்
செல்போன் வெடிப்பானது
அளவுக்கதிகமாக இன்டர்நெட்டுன்
சேர்த்து செல்போனையும் அதன்
செயல்பாடுகளையும்
இயக்குவதனால் பேட்டரி அதிகச்
சூடேறி வெடித்து விடுகிறது.
இதனை தவிர்க்க கூடுமானவரை
உங்கள் ஸ்மார்ட் போனில் அதிக
மினிமைஸ் செய்வதையும்
தேவையில்லாத அப்ளிகேஷன்களை
தானாக இயக்குவதையும்
தவிருங்கள். தேவைப்படும்போது
மட்டும் ப்ளூடூத் மற்றும்
இன்டர்நெட்டுகளை
பயன்படுத்துங்கள் . முக்கியமாக
செல்போன் இன்டர்நெட்
பயன்படுத்துகின்ற போதே
அழைப்பு வருகின்ற போது
உடனடியாக எடுத்துப் பேசாமல்
ஐந்து வினாடிகள் கால அவகாசம்
கொடுங்கள். ஏனெனில் அந்த ஐந்து
வினாடிகளில் தானாக உங்கள்
இன்டர்நெட் தடைபட்டு அழைப்பு
மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்
இதன்காரணமாக பேட்டரி
சூடாவதை தவிர்க்கலாம். மேலும்
கூடுமானவரை வெருங் கைகளில்
செல்போனை பயன்படுத்தாமல்
காட்டன் கர்ச்சிப்பில் லேசான ஈரப்பதம்
செலுத்தி அதன்மேல் செல்போன்
வைத்து பயன்படுத்தப்
பழகிக்கொள்ளுங்கள் இதனால்
பின்னாலிருக்கும் பேட்டரியின்
வெப்பநிலை குறைந்து
வெடிப்பதை தவிர்க்கலாம். இரண்டு
வாரத்திற்கொருமுறை உங்கள்
செல்போனை ரீசெட்டோ அல்லது
ரீஸ்ட்டார்டோ செய்து விடுங்கள் .
செல்போன் பேட்டரியின்
பின்களையும் செல்போன்
பின்களையும் காட்டன் பட்ஸ் வைத்து
அழுத்தம் கொடுக்காமல்
இருவாரத்திற்கொருமுறை
துடைத்து விடுங்கள். இதன் மூலம்
செல்போன் வெடித்துச் சிதறி நம்
உயிரை காவு
வாங்குவதிலிருந்து நாம்
தப்பித்துக் கொள்ளலாம். எதையும்
பாதுகாப்பு அனுமுறைகளோடு
கையாள்வதன் மூலம் நம்மை
ஆபத்திலிருந்து எப்போதுமே
விடுபெற்றுக் கொள்ளலாம்.

கல்கியின் மூன்று வரலாற்று நூல்களை எவ்வாறு வரிசைபடுத்தி வாசிப்பது?


இலக்கிய உலகில் "கல்கி" என்கிற
இரா. கிருஷ்ணமூர்த்தி என்றதும்
எல்லோர் மனதிலும் கடலலைபோல
அடித்தெழுந்து ஓய்ந்து நிற்குமந்த
"பொன்னியின் செல்வன்" எனும்
வரலாற்றுப் புதினம். நாம் வாழும்
நிகழ்கால உலகினை
உதறித்தள்ளிவிட்டு கடந்தகால
வாழ்வுக்கு திரும்ப முடியுமா?
என்றால் திரைப்படங்களில்
காட்டப்படும் மாயாஜாலங்கள்
தேவையில்லை புத்தகங்களை
வாசித்து விடுங்கள் நீங்கள் நிச்சயம்
முந்தைய கால சமூதாயத்தோடு
ஒன்றிணைந்து வாழ்வீர்களென்று
உணரச்செய்தவர் கல்கி.
வார்த்தை ஜாலங்கள்,இயற்கை வர்ணிப்புகள்,காதல்
ரசனைகள்,இல்லற இனிப்புகள்
இவையனைத்தையும் ஒரு பேனா
எழுதுகிறதே! அது பேனாவா?
இல்லை மாயக்கோலா? எனும்
சந்தேகம் வந்தால் சந்தோஷத்தோடு
கல்கியின் படைப்புகளை நீங்கள்
நுகர்ந்துள்ளீர்கள் எனச்சொல்லலாம்.
பூவிதழை மீறி வழியும் பூக்களில்
வழியும் தேனமுதை கண்டதும்
தேனீக்கள் கொண்ட இன்பத்தேன்
மகிழ்வினை கண்டு இருதேனமுது
ஒரே கிண்ணத்தாலா!  . எனும்
ஆச்சர்யத்தின் அறிகுறிகளை
அப்படியே உள்வாங்கி வரலாற்றுப்
புதினமெனம் புத்தக பூக்களில்
வழியும் தேனெழுத்துக்களை
நுகரும் வாசகனும்
தேனமுதாகிவிடும் விந்தையைச்
செய்துகாட்டியதால் தானோ
என்னவோ கல்கி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
அனேகர்களால் வாசிக்கப்பட்ட "பொன்னியின் செல்வன்" உண்மையில் வாசகனை
கட்டிப்போடும் கயிறுதான்.
அதேவேளையில் இவ்வொற்றை
நாவலை படித்துவிட்டு கல்கியை
வாசித்துவிட்டேன்   என்று
சொல்வது இன்று பரவலாக
பார்க்கலாம். அப்படி பொன்னியின்
செல்வனை மட்டும் படித்துவிட்டு
நகர்ந்து போகிறவர்கள் உண்மையில் அந்நாவலையே முழுமையாக வாசிக்கவில்லை என்றேத் தோன்றினால் அது மனதிற்கு கொஞ்சம் வேதனையாகத்தானிருக்கும்.
பொன்னியின் செல்வன் நாவலானது முற்றுபெற்ற
நாவலா? என்றால் இல்லையென்றேச் சொல்லிவிடலாம் காரணம் அந்நாவல்
மேலும் இரு நாவலுக்குத்
தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.
அப்புள்ளியானது எங்கேயுள்ளது
என்பதை வாசகன் அறிந்தால்
மட்டுமே அவ்வாசகன் முழுமையாக
பொன்னியின் செல்வனை நுகர்ந்து
விட்டானென்று எடுத்துக்
கொள்ளலாம். பொன்னியின் செல்வன் நாவலை
வாசித்தோருக்கு"கோடியக்கரையை" அவ்வளவு
எளிதாக மறந்துவிட முடியாது.
அவ்விடத்தில்தான் மூன்று நாவல்களுக்கா
புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரலாம் . நாவலின்
கதாநாயகனான பொன்னியின் செல்வனான
அருள்மொழிவர்மனுக்கு ஏற்பட்ட
விஷக்காய்ச்சலை குணமாக்கும்
புத்த பிக்ஷ்க்கள் இறுதியாக
காட்டாற்று பேரலைகளால்
அடித்துச் செல்லப்பட்டு அழிந்து
போவார்களே அந்நிகழ்வில் தான்
அடுத்த நாவலுக்கான
புள்ளியிருக்கிறதென்று
உணர்ந்தால் வாசிப்பானது
முழுமை கொண்டதாக
எடுத்துக்கொள்ளலாம்.அந்த அடுத்த நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட
முடியாது . பல்லவர்களின் கலைவண்ணத்தை
எடுத்துச் சொல்லும் "சிவகாமி
சபதம்" என்கிற வரலாற்று நாவல்தான்
அது, விளங்கவில்லையா?
மீண்டுமொருமுறை வாசித்து விடுங்கள்
பொன்னியின் செல்வன் எனும்
நாவல் முடிவில்லை அது ஆரம்பமென்று
விளங்கும். சிவகாமி சபதம் என்கிற நாவலை
வாசித்தோருக்கு சளுக்க வீர்களையும் அச்சளுக்க
வீர்களின் தளபதியான நீலகேசி எனும் நாகநந்தி புத்த பிக்ஷ்ஷூவை மறந்திருக்க
மாட்டார்கள். சிவகாமியின் மீதான
அதீத காதலால் அவரை அடைய நாடுகடத்தி
தன்னுடைய சளுக்க நாட்டில் குடியமர்த்தும்
நாகநந்தி எனும் புத்த பிக்ஷ்ஷு சிவாகாமி
சபதமெனும் நாவலின்படி
எதிராளியாகவும் , துரோகியாகவும் ,
வில்லனாகவும் சித்தரிக்கப்படுகிறார் .
இறுதியில் பரஞ்சோதியால் கைகளை இழந்து
கொல்லப்பட்டாரா? இல்லையா?
என்கிற எதிர்பார்ப்பு எழுப்பப்பட்டிருக்கிறதே
அங்கேதான் மூன்றாவது நாவலுக்கான
புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதென்று
வாசிப்பாளர்கள் உணர்ந்தால் சிவகாமி
சபதம் நாவலை அவர்கள் முழுதாய்
நுகர்ந்துவிட்டார்களென்று எடுத்துக்
கொள்ளலாம்.அந்த மூன்றாம் நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக
கடந்துவிட முடியாது . மேற்கண்ட
சிவகாமி சபதமெனும் நாவலால்
அறியப்பட்ட பல்லவர்களின் காலத்திய வரலாற்றுப் புதினமான "
பார்த்திபன் கனவு" எனும்
நாவல்தான் அம்மூன்றாவது
புள்ளியென உணரலாம்.
பார்த்திபன் கனவு நாவலை
வாசித்தவர்களுக்கு கபால
பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷுவை அவ்வளவு எளிதாக
மறந்து விட முடியாது. நரசிம்ம
பல்லவரின் ஆட்சியினை கவிழ்க்க
கபால பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷு மேற்கண்ட சிவகாமி சபதம்
எனும் நாவலில் சிவகாமியை
கடத்திச் சென்று அதனால்
கையிழந்து பரஞ்சோதியிடம்
உயிர்பிச்சை பெற்று மூன்றாவது
நாவலுக்கு முக்கியமானதொரு
இடத்தில் அங்கம் வகித்த
நீலகேசியோடு பார்த்திபன் கனவு
நாவலை முடித்திருப்பார் கல்கி .
இதன் மூலம் பொன்னியின்
செல்வனோடு நாவல் முடிவுபெறவில்லை என்பதை
உணரலாம் .ஆகவே வாசிப்பாளர்கள்
பொன்னியின் செல்வனோடு
முடித்துக் கொள்ளாமல் அதன்
தொடர்சியான சிவகாமி
சபதம்,பார்த்திபன் கனவு, நாவல்களை வாசித்தால் தான் நாவலின் தேனமுது ருசியை சுவைக்க முடியும் . முதலில் பொன்னியின்
செல்வன், இரண்டாவதாக சிவகாமி
சபதம் ,மூன்றாவதாக பார்த்திபன்
கனவு என்று வரிசைபடித்தி
வாசிக்கப்பட வேண்டும் .
அவ்வாறில்லாம் இதன் வரிசைகளை
வேறுபடுத்தி வாசித்தால்
முழுமையாக நாவலை
ருசித்துண்ண முடியாது .
வாசிக்கத் தொடங்குங்கள்
வரிசைபடியே
ருசித்துப் பருகுங்கள்
நாவலெனும்
தேனையே,,, புத்தக வாசிப்புதான்
நம்மை புதுவுலகை படைக்கும்
வழிகளை காட்டும்.

Saturday, May 23, 2015

புகைப்பட கலைஞர்களை கேலிசெய்யும் இணையம்


ஒரு புகைப்படமெடுக்க உயிரை
பணயம் வைத்தால்தான்
முடியுமென்றால் அதைச்
செய்பவர்களை பாராட்டும்
மனமின்றி கேலிகளுக்கு
இரையாக்குவதை காணுகின்ற
பொழுது இந்த மனிதர்கள்
படைப்பின் மீதுள்ள பற்றினை
என்றோ கழட்டி
எரிந்துவிட்டார்களென்றேத்
தோன்றுகிறது. மேற்கண்ட
புகைப்படம் அந்த வகையறாக்களின்
கைகளில் சிக்கியதுதான்
காலத்தின் கொடுமை.
இயற்கையையும்,இயற்கையின்
பரிணாம வளர்ச்சியையும்
அதனூடாக வெளியுலகைக்
காணும் உயிர்களையும்
பெரும்பாலும் புகைப்படங்களே
நமக்கு எடுத்துச்சொல்கிறது. அந்த
வகையில் அப்புகைப்பட
கலைஞர்களை பாராட்டக்கூட
தேவையில்லை
கேலிகிண்டலுக்கு
உட்படுத்தாதீர்கள் என்பதே
வேண்டுகோளாய் இருக்கிறது.
மேற்காணும் புகைப்படமானது
இணைய வெளியில் "சாவுடா
மவனே" "எதுக்கிந்த வேல"
இதுபோன்று பல்வேறு கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு வலம்
வந்துக் கொண்டிருக்கிறது.
எனக்கே அவ்வகையான கேலிக்
கிண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு
வாட்ச் அப் எனும் இணைய
வெளியில்தான் கிடைத்தது.
பார்த்தவுடன் பதறிப்போய்
அரைமணி நேர விவாதத்தால்
அனுப்பிய நபரை மனம்மாற்றிய
தருணம்,ஒரு புகைப்பட
கலைஞனின்
வலிகளையும்,வேதனைகளையும்
ஒருவருக்கேனும்
உணரச்செய்தோமே என்கிற ஆத்ம
திருப்தியடைந்தேன். கையில் ஒரு
கேமரா எடுத்தவனெல்லாம்
கலைஞனா? எனப்
பெரும்பான்மையானோர்
கேட்கிறார்கள். ஆமாம் அவன்
கலைஞன்தான்! தன் கையுள்ள கேமராவினால் தன்
கண்களை
தூய்மைபடுத்துகிறானே அவன்
கலைஞனில்லாமல் வேறென்னவாக
இருக்க முடியும் . அதற்காக
தன்னுயிரை கூட துட்சமென
எண்ணி உலகிற்கு புகைப்படம்
மூலம் புலப்படாத பல விஷயங்களை
தகவல்களாக நமக்குத் தருகிறானே
அவன் கலைஞனில்லாமல்
வெறன்னவாக இருக்க முடியும்.
இதல் கையில் கிடைத்த கேமராவை
கவலையின்றி குற்றச்
செயல்களுக்கு கொண்டுசெல்லும்
மூடர்களை இணைத்துக்
காட்டிவிடாதீர்கள். உண்மையையும்
,பொய்மையையும்
நேர்மையும்,நெறிதவறுதலையும்
எதிரெதிரேதானே நாம் வைத்துப்
பார்க்கிறோம் அந்த வகையில்
உண்மை உழைப்புகளை நாமேன்
கேலிக்குள்ளாக்குகிறோம்,
சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புகைப்பட கலைஞனிடம்
உனக்கு உயிர் முக்கியமா?
புகைப்படக் கலை முக்கியமா?
எனக்கேட்டால் புகைப்படக் கலையே
முக்கியமென்பான் ஏனென்றால்
அவன் புகைப்படக் கலையைத்தான்
உயிராக நேசிப்பவனாக
இருக்கிறான்.
"என் கற்பனையில் முளைத்தெழும்
கவிதைகளை யாரோ ஒருவன்
எடுத்த புகைப்படம்
காட்சிபடுத்துகிறது
கவிதைக்காரனை
காட்சிக்காரனே
வெளிபடுத்துகிறான்" என்பதை
நானெப்போதும் என்மனதினில்
ஏற்றிவிட்டேன். உணர்ந்து நீங்கள்
செயல்பட்டால் உதவாத
கேலிப்பேச்சுகள் ஒழிந்து
போகுமென்பது உண்மை.

என்னை சமூகத்தின் மீது
பார்வையை திருப்பு!
அவர்களுக்காவே நீ வாழ்ந்திட
வேண்டுமென்று! உணர்த்தியது
ஒரு புகைப்படம் என்றுச்
சொன்னால் அப்புகைப்படமெடுத்த
படைப்பாளியை எப்படி என்னால்
கேலிசெய்ய முடியும்.
முதன்முதலாக இதுதான்
உன்சமூகம் இவர்கள் படும்
வேதனை,வலிகள் இதுதானென்று
எனக்கு உணர்த்தியது 1984ல் நடந்த
போபால் விஷவாயு விபத்தில்
உயிரிழந்து மண்ணில்
புதையுண்டு கிடந்த அந்தக்
குழந்தையின் புகைப்படம்தான்.
உயிரின் வலியை உணர்த்திய
அப்பச்சிளம் குழந்தையை
புகைப்படமெடுத்து போபாலின்
அவலநிலையையும்,இந்தியாவின்
அடிமை நிலையையும்,உலக
ஏகாதிபத்தியத்தின் கோர
முகத்தையும் வெளியுலகிற்குக்
காட்டிய அந்த ரகு ராய் (Raghu Rai)
எனும் புகைப்படக் கலைஞனை
கலாய்த்துவிட்டு
மிகச்சாதாரணமாய் கடந்து
போனால் நானுமொரு
குற்றவாளி தானே! புரிந்து
கொள்ளுங்கள் என் சமூகமே
உணர்வுகளுக்கும்
அவ்வுணர்வுகளை வெளிபடுத்தும்
புகைப்படத்தையும்,புகைப்பட
கலைஞர்களையும் இணைய
வெளியிலோ அல்லது
பொதுவெளியிலோ
கூடுமானவரை கேலிக்
கிண்டலுக்கு உட்படுத்தாமல்
மதிப்பு கொடுங்கள். மனமிருந்தால்
பாராட்டி விடுங்கள்.

ஊரில் நல்லவர்கள் யார்?


நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு
தற்செயலாக அவனை பார்க்க
நேர்ந்தது காலச்சூழல் நட்பெனும்
உறவை பலகாலமாக பிரித்தே
வைத்திருந்திருந்தது . எங்கள்
சந்திப்பு சாலையோரத்தில் நிகழ
பேசினோம் போசினோம் பிரிந்த
காலத்தை நினைவு கூறுதலில்
தொடங்கி நிகழ்காலத்து பரிணாமம்
வரையில் பேசினோம். இறுதியாக
விடைபெற்றுப் போகுதலை
ஒருதலை வருத்தமாக
ஏற்றுக்கொண்டோம். அவனது
கிராமத்திற்கு என்னை
அழைத்திருந்தான். சிறுவயதில்
அவனோடு சேர்ந்துக்கொண்டு
ஓடியாடிய மண்ணில் மீண்டும்
கால்பதிக்க ஒரு வாய்ப்பு
கிடைக்கப்பெற்றது . மனதிற்குள்
மகிழ்ச்சி பொங்கியது. நிச்சயம்
வருகிறேன் நண்பா என்றுச்
சொல்லிவிட்டு இருவருமே
பிரிந்து சென்றோம். ஒரு
விடுமுறை தினத்தை தேர்வு
செய்து அதற்கு முந்தைய மாலை
பொழுதில் அவனை கைபேசி
மூலமாக அழைத்தேன். மச்சி!
ஊர்லயா இருக்க நாளைக்க
வீட்டுக்கு(கிராமத்தி­­
ற்கு)வரலாம்னு இருக்கேண்டா!
வரவா? நான் கேட்டேன்.
இன்னைக்கே வீட்லதான் இருக்கேன்
மாமா,,, நாளைக்கு சொந்த வேல
எதுவுமில்ல அதனால இங்கயே
தானிருப்பேன், கண்டிப்பா வா!!!
கூட யாரையாவது கூட்டிக்கிட்டு
வரியா? இல்ல தனியா வரியா மச்சி?
அதுகேத்தமாதிரி ஏற்பாடு
செய்திடுவேன்,,இது அவனது
உரையாடல்.நம்ம கூட படிச்ச
"கிலோமீட்டர்"(வாய் கொஞ்சம் நீளம்
அதிகம் பேசுவான்) எங்கூட வரான்
மச்சி நாங்க ரெண்டுபேரும்
காலைலேயே வந்துடரோம்,என்றேன்
நான். சரி மாமா கொஞ்சம் சீக்கிரமே
வந்துடு,, முடிந்தது
உரையாடல்.மறுநாள்
விடியற்காலையிலேயே நானும்
கிலோமீட்டரும் இருசக்கர
வாகனத்தில் நண்பனது கிராமத்தை
நோக்கி பயணித்தோம்.
ஒருமணிநேர பயணத்திற்கு பிறகு
கிராமத்தைச் சென்றடைந்தோம்.
வழியிலேயே எங்களுக்குத்
தெரிந்து விட்டது கிராமம்
களவாடப்பட்டுவிட்டதென­­
்று,,,ஒருவழியாக நண்பனின்
வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம்.
நாங்கள் கிளம்பும்போதே தகவலைச்
சொன்னதால் அவனும் எங்களின்
வரவிற்காக வாசலிலேயே
காத்திருந்தான். அவன் வீடு வெகல்
வேய்ந்த கூரைவீடு,மூவருமே
உள்ளே சென்றோம் அம்மா , அப்பா ,
தம்பிகள் சகோதரிகள் அனைவருமே
நலம் விசாரித்து வரவேற்றார்கள்.
காலை சிற்றுண்டியை முடித்து
விட்டு கிராமத்தை சுற்றிப்பார்க்க
வேளையோடு கிளம்பினோம். ஒரே
அதிர்ச்சியும்,ஆச்சர்யங்களும்
எங்களை ஆட்கொண்டு விட்டது.
மனிதனின் மறதி எங்கிருந்து
தொடங்குகிறதென்று எனக்கு
புலப்பட ஆரம்பித்தது. குளித்த
கிணறுகளை
காணவில்லை,விளையாடிய
வயல்வெளிகளைக் காணவில்லை,
அனைத்தையும் புதைத்துவிட்டு
அங்கே "நிலம் விற்பனைக்கு" என்கிற
பலகை தொடங்கவிடப்பட்டிருந்தது.
ஒரு வழியாக உச்சி வெயிலின்
போது வீடுதிரும்பினோம். அவன்
வீட்டிற்கு எதிரேயுள்ள வேப்பமர
நிழலில் போடப்பட்ட நாற்காலிகளில
அமர்ந்து மீண்டும்
பேசத்தொடங்கினோம். வீட்டில்
கோழியடித்து குழம்பு
கொதிக்கும் வாசனை கமகமத்தது.
பேசத் தொடங்கினோம் நாங்கள்
கிசுகிசுக்களோடு வயது வந்தோர்
பட்டியலை முழுக்க (வயசுப்பசங்க
பேசினாலே அது இருக்கத்தானே
செய்யும்) இப்படி
பேசிக்கொண்டிருக்கும்
வேளையில் அதே வீதியோரத்தில்
எங்களைப் போன்றே இருவர்
பேசிக்கொண்டிருப்பது எங்களின்
கவனத்தை ஈர்த்தது. ஒருவர் மிக
அமைதியானவரைப் போலவும் அதீத
பக்தியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டவர் போலவும்,
சாந்தமுகத்தோடும்
காட்சியளித்தார். மற்றொருவர்
அவருக்கு நேர்மறையான
கோணங்களை கொண்டிருப்பவராக
காட்சியாளித்தார் உடையில்
எளிமை தெரிந்தது. நான்
நண்பனிடம் கேட்டேன்,யாரு மச்சி
அவங்க ரெண்டு பேரும் ரொம்ப
நேரமா நம்மள போல
பேசிக்கொண்டிருக்கிறார்களே!
அவங்களா மச்சி அதோ அமைதியா
நெத்தியில பொட்டு வச்சிகனு
பேசிட்டிருக்காரே அந்த அண்ணன்
நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடுதான்
மச்சி ரொம்ப நல்லவர். எதிலேயும்
மூக்க நொழைக்க மாட்டார்,
தானுண்டு தன்வேல உண்டுனு
இருப்பார்,யார் கூடவும் அதிகமா
பேச மாட்டார்,PWD ல
வேலபார்க்கரார்,வீடு ஆபீஸூ
இரண்டுந்தான் அவருக்கு,,,
பக்கத்துல இருக்காரே அவர பாரு
மச்சி ரொம்ப மோசமானவர்
எப்பபார்த்தாலும் கோர்ட்டு, கேசு,
போலிஸ்டேஷனு,
தாலுகாபிஸு,பஞ்சாயத்து
போர்டுனு சுத்திகிட்டே இருப்பார்
அவரு பூமியில ஒக்காரதே
அபூர்வம். அந்தாளு ஏதோ தனியா
நெலம் வச்சிகிட்ட வெவசாயம்
பாக்குராரு,பாரேன் நம்ம
பார்த்தோமே "இந்த நிலம்
விற்பனைக்கு இல்லைனு" போர்டு
வச்சி சேட ஓட்டிட்டு இருந்துச்சே
அது அந்தாள இடந்தான். இவுக
ரெண்டுபேரம் ரொம்ப நேரமா
பேசராங்கனா ஏதாவது
விஷயமிருக்கும் அந்தண்ணன்
எப்படியும் நம்மள தாண்டிதான்
போகனும் என்னானு கேட்ருவோம் .
என்று அந்த இருவரையும்
அறிமுகப்படுத்தினான் நண்பன்.
எனக்கு ஏனோ அந்த மோசமான
நபரிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஒரு வழியாக தூரத்தில்
பேசிக்கொண்டிருந்த இருவரும்
விடைபெற்றுக்கொண்டார்கள்
நல்லவராக சொல்லப்பட்டவர் அவர்
வீட்டுக்குச் செல்ல எங்களை நோக்கி
வந்துக்கொண்டிருந்தார். எங்களை
நெருங்கிவிட்டார் நண்பன்
எழுந்திருக்கச் சொன்னான்
மரியாதைக்காக,,வண்கம்னே இவங்க
ரெண்டுபேரும் என்னோட பிரண்ட்ஸ்
என்று எங்களை
அறிமுகப்படுத்தினான். வணக்கம்பா!
சொல்லிவிட்டு எதுவும் பேசாமல்
புன்சிரிப்பினை மட்டும்
விதைத்துவிட்டு நகரத்
தொடங்கனார் அந்த நல்லவர். நண்பன்
கொஞ்சம் தயக்கமாக அண்ணே
எதாவது தகவலா ரொம்ப நேரமா
அந்த அண்ணன்ட்ட பேசிட்டு
இருந்தீங்களே ஊர்ல ஏதாவது
விஷேஷமா என்று பவ்யமாக
இடைமறித்தான் நண்பன்.அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி
வீட்ல ரெண்டு நாளா கரண்ட்டு வந்து
வந்து போகுது கம்பத்துல ஒயர்
லூசாயிருக்கு போல EBக்கு போன்
போட்டேன் இதோ! அதோனு
இழுத்தடிக்காரங்க அப்புரம் பேங்க்ல
லோன் வாங்கியிருந்தேன்
இந்தமாசம் அதிகப்படியா தப்பா
சேலரில பணம் புடிச்சிட்டானுவ
அதையுஞ் சொல்லி என்னானு
பாருங்கனு அண்ணன்ட்ட
சொல்லிட்டிருந்தேன்.ஓ
அப்படியாண்ணே நா வேற ஏதோனு
நெனச்சி கேட்டேண்னே சரிண்ணே!
என்று விடைபெறுதலுக்கான
குழைதலை நண்பன் தன்
பாவனைகளால் செய்து
கொண்டிருந்த வேளையில்,
நம்மளால் தான் சும்மாயிருக்க
முடியாதே எதையாது
யாரையாவது எங்கேயாவது
வம்பிழுத்து குறும்புத்தனம்
பன்னுவதில் பெயர்
போனவர்களாயிற்றே,,இதை நன்கு
உணர்ந்ததன் காரணமாகத்தான் நண்பன்
அந்த அண்ணனை விடைபெற்று
அனுப்புவதிலேயே குறியாக
இருந்தான். உடனே நான்
குறிக்கிட்டு "அண்ணே அப்போ
எல்லாத்துக்கும்
இன்னொருத்தரைத்தான் தேடரிங்க
நீங்களே எதுக்கும்
போகமாட்டீங்களா,,, என்றுதான்
கேட்டேன் அதற்கேற்றார்போல்
கிலோமீட்டரும் கொள்ளென்று!!!
சிரித்து விட்டான். வந்ததே
அண்ணனுக்கு கோபம் சாந்தமுகம்
இப்போது கோரமுகமாக
மாறியிருந்தது. நண்பன் வேர்த்து
வெலவலத்துப் போயிருந்தான்.
போச்சிடா வம்பை
விலைகொடுத்து
வாங்கிவிட்டான்களே! என்று
நிச்சயம் அவன் நினைத்திருப்பான் .
அவனுக்குள்ளும் சிரிப்பு
இருந்தது ஆனால்
வெளிபடுத்தமுடியாத இக்கட்டான
சூழலை அவன் பெற்றிருந்தான்.
அதே கோபத்தோடு முகம்
திருப்பிக்கொண்டு
வேகநடைபோட்டு வீட்டிற்குள்
சென்று கதவடைத்துக் கொண்டார்
அந்த நல்லவர் அண்ணன். மச்சி!
மன்னிச்சிடுடானு சிரித்தபடியே
நாங்களிருவரும் நண்பனிடம்
சொன்னோம். விடு மாமு
இதெல்லாம் விஷயமேயில்ல
நாளைக்கே சரியாகிடும் பாரேன்,,
இது நண்பனின் பதில். நான்
சொன்னேன் அதுக்கில்ல மச்சி
எல்லாத்துக்கும் முன்னாடி போய்
குரல்கொடுத்து பிரச்சனைக்கு
தீர்வு காண்கிற ஒரு மனுஷன போய்
மோசமானவரு, அந்தாளு
இந்தாளுனு நீ பேசனதுதான்
எனக்கு பிடிக்காம போச்சி,பாரு!!
இப்ப போன நல்ல அண்ணனே அவரோட
வூட்டு பிரச்சனைன்னாலே அந்த
மோசமானவரைத் தான்
தேடிப்போராரு அவரு எப்படி
மோசமானவரா இருக்க முடியும்?
தானுண்டு தன் வேல உண்டுனு
இருக்கிறங்க எல்லாருமே நல்லவங்க
இல்ல மச்சி , ஒவ்வொரு வூட்டையும்
தன் சொந்தமா மதிச்சி பொதுப்
பிரச்சனைகளை சந்திக்கிரானே
அந்த சிலரை நீ நல்லவன்னு கூட
சர்ட்டிபிகேட் கொடுக்கத்தேவல
கூடுமானவர
மோசமானவன்,அந்தாளு,இந­
்தாளுனு பேசாதடா மச்சி!!
என்றேன்.
ஒரு வழியாக கிராமத்திலிருந்து
விடைபெற்றுக்கொண்டு வீடு
சேர்ந்தோம் நாங்கள்
இருவரும்,வீட்டிற்கு வந்ததும்
கைபேசியில் நண்பன் அழைத்தான்
"மச்சி ஜாக்ரதையா வீட்டுக்கு
வந்துட்டியா? அப்புரம் மச்சி ஒரு
விஷயம் நீ சொன்ன அந்த அண்ணனும்
நானும் ப்ரண்ட்ஸாகிட்டோம். சரி
மச்சி எப்பவாவது ஃப்ரியா இருந்தா
மறுபடியும் வீட்டுக்கு
வந்துட்டுபோ!! அவன்
பேசியதிலிருந்து மகிழ்ச்சி
எனக்குள் ஆட்கொண்டுவிட்டது.
வேறென்ன சொல்ல மீண்டுமொரு
விடுமுறை நாளுக்கான
காத்திருப்பும் நல்லர்கள் யாரென
கண்டுபிடிப்பும் எதிர்நோக்கிய
பயணத்தை விரைவில் தொடங்க
துடித்துக்கொண்டிருந்து
என்மனது என்றேச் சொல்லலாம்.

Friday, May 22, 2015

"இன்றோடு இயற்கையோடு"

இயந்திர வாழ்வு
இரும்பான மனம்
இறுமாப்பு நடை
இல்லறக் கசப்பு
இழந்த ஆரோக்யம்
இனிமை துவர்ப்பு
இசை புறக்கணிப்பு
இல்லாத உயிர்துடிப்பு
இம்சையான உறவு
இமைகளை மூடா கனவு
இறுதி மரண காத்திருப்பு
இழவுக்குபின்
இதயமிருந்தென்ன பயன்
இவைகளை மறந்து
இன்றே பார்த்துவிடு
இயற்கையை
இன்னமும் வனப்புகளை
இழந்துவிடாத அதுவும்
இதழ்களை திறந்துன்னை
இச்சைக்கு அழைக்கிறது
இன்னுமேன்
இடைவெளி மனிதா
இணைந்துவிடு இன்றோடு
இயற்கையோடு,,,

அண்ணல் அம்பேத்கரை கைபேசியில் அழைத்தால் கொலைவிழும் இந்தியத்தில்,,,

அண்ணல் அம்பேத்கர் அப்படியென்னதான் பாவச்செயலை செய்துவிட்டார் . அவர்
பெயரை உச்சரிக்கையில் கொலைகூட செய்துவிடுகிறதே இந்தச் சமூகம். தலித்தின
மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக பாடுபட்டார்,பார்ப்பா­னிய
எதிர்ப்பை முன்மொழிந்து அதோடு நின்றுவிடாமல் அதையும் செயல்படுத்தினார் .
காந்தியின் மீது கடுமையான விமர்சனம் வைத்தார். இந்திய
அரசியலமைச்சட்டத்தில்­ தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை
மக்களுக்கு கல்வியுரிமை மற்றும் சமவுரிமை பெற்றுத் தந்தார் இந்தச்
செயல்களுக்காக இன்றுவரையில் பார்ப்பானிய இந்துத்துவ ஆதிக்கச் சாதிவெறி
அவரை தண்டித்துக் கொண்டிருக்கிறது எனும்போது எங்களின் கோபத்தைக் காட்டகூட
ஆயுதம் ஏந்துதல் தவறென்று அந்த அப்பாவி அம்பேத்கர் எங்களுக்கு
கற்பித்துவிட்டானே என்று நாங்களும் அவரின் மீது பழிபோட்டுவிட்டு
தப்பித்துச் சொல்கிறோம். அம்பேத்கர் காந்தியை கடுமையாக
விமர்சித்தாரென்றாலோ அல்லது எதிர்த்து களமாடினார் என்றாலோ அம்பேத்கர்தானே
காந்தியை கொன்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் காந்தி கடைசிவரை எந்த
இந்துத்துவத்தை ஆதரித்தாரோ அதே இந்துத்தவ பார்ப்பானிய ஆதிக்கத்தில்
முளைத்தெழுந்த கோட்சேவால்தானே கொல்லப்பட்டார். அவ்வாறிருக்க
ஒட்டுமொத்தமாக அம்பேத்கரை காந்திக்கு எதிராக திருப்பிவிடுதல் எப்படி
முறையாகும் என்கிற கேள்வி எழத்தானேச் செய்யும். இவற்றையெல்லாம்
நோக்கும்போது தலித்தின விரோதபோக்கினை வளர்த்தெடுத்து அதன் மூலம்
தம்மதத்தையும் மதவெறியையும் வளர்த்துவிடலாமென்கிற­ ஆதிக்கத்தில்
அடிபணிந்தே கிடக்கிறது நம் இந்தியச் சமூகம் . மாற்றமில்லை அதை
வெறியுடன்தான் நாங்களின்னும் அம்பேத்கர் எனும் தலித்பயலை எதிர்க்கிறோம்.
எதிர்ப்போம், எதிர்த்துக்கொண்டே இருப்போம் கடைசியில் எரித்தே விடுவோம்
என்கிறது இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கச் சாதிவெறி. இவர்களின்
சூருளைப்பின்படியே நிகழ்வுகளுமிங்கே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது
அதுவும் எந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அதே அளவிற்கு அதே
தொழில்நுட்பத்தில் தீண்டாமை திணிப்பென்றால் சமூகத்தின் வெட்கக்கேடாக
இதனையேன் பார்க்கக்கூடாது?
பார்வையில் படுகிறது சமூக நிகழ்வுகள்!

அம்பேத்கர் பாடலை ரிங்டோனாக வைத்ததற்காக தலித் மாணவர் அடித்துக் கொலை
ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்ததற்காக தலித்
வாலிபர் ஒருவரை எட்டு பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை
செய்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் திருமண
விழாவில் கலந்து கொள்ள கோவில் நகரமான ஷீரடிக்கு சென்றுள்ளார். கடந்த 16ம்
தேதி தனது உறவினர்கள் இரண்டு பேருடன் உள்ளூரில் உள்ள மதுபான கடைக்கு
அவர் சென்றுள்ளார். கடையில் இருக்கையில் சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.
தலித் பிரிவைச் சேர்ந்த சாகர் அம்பேத்கர் பற்றிய பாடலை ரிங்டோனாக
வைத்துள்ளார்.
அம்பேத்கர் பாடல் ஒலித்ததை பார்த்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை
பீர் பாட்டிலால் அடித்து பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு
இழுத்துச் சென்று அடித்தே கொன்றிருக்கிறார்கள். அன்று மாலை 6.30 மணிக்கு
ரூய் கிராமம் அருகே சாகரின் உடல் நிர்வாணமாக கிடப்பதை மக்கள் பார்த்து
போலீசாருக்கு தகவல் தெரித்துள்ளார்கள் . இதுதான் சம்பவம் இன்னும் தீர்வு
எட்டப்படவிலையென்றும் தகவல்கள் வருகின்றன. இதிலும் தலித்துவத்திற்கான
ஆதரவொலியினை எழுப்பியிருந்தாலும் விமர்சனம் வைக்கப்படும் போது அவர்களும்
உள்ளடக்கப்படுவார்கள்­ . தலித்துகளை விதிவிலக்கிற்கு உட்படுத்த வேண்டிய
கட்டாயத்தை அதே தலுத்துகள்தான் ஏற்படுத்தியிருக்கிறா­ர்கள். படுகொலைச்
சம்பவத்திற்கான சூழலை தீர்மானித்த இடம் எது ? மதுபான விடுதியாக
இருக்கிறதே? மதுவினை குடித்து மதியினை இழந்து நீயும் மிருகமாகிவிடு!
என்றா அம்பேத்கர் உங்களுக்கு கற்பித்தார். ஆசை துறந்து மதுவினை பாவமென்ற
பௌத்த சித்தாந்தத்தை புகுத்திய அண்ணல் அம்பேத்கரை இதைவிட இழிவுபடுத்த
முடியுமா? உலகில் மூவர் மட்டுமே கற்பி! என்பதனை முதலில் முன்வைத்தவர்கள்.
சாக்ரடீஸ்,கார்ல்மார்­க்ஸ்,அம்பேத்கர்,இதுவ­ாவது இந்த தலித்சமூகத்திற்கு
தெரியுமா என்றால் தெரியாதென்றே விழி பிதுக்குவார்கள் காரணம் அவர்களின்
விழிகளில் மதுபோதை வழிந்தோடுகிறது. அடிமைபட்ட ஒரு சமூகம் மதுவிற்கும்,
மாதுவிற்கும்,சூதுவிற­்கும் விலைபோகும் வரையில் இங்கே எவ்வித சமூக
முன்னேற்றமும் நிகழாது அம்பேத்கரும் ஆதிக்கச் சாதி வெறியர்களால்
அடிவாங்கிக்கொண்டேதான­ிருப்பார்.

சுய "சாதி" பரிசோதனையை பிரயோகப்படுத்துதல்

சுய சிந்தனையின் மூலம் சாதனைகள் பல புரிவதெப்படி? என்பது காலத்தில் அழிந்துபோய்
அச்சுய சிந்தனையின் மூலம் தன் சாதியை வளர்ப்பதெப்படி? எனும் குறுகிய
வட்டத்தில் தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விட்டு நிற்கிறது நம் சமூகம்.
எதன்மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை . எனும்
முற்போக்குச் சிந்தனைகளிலே சில முரண்பாடுகளை இங்கே காண நேரிடுகிறது.
காரணம் தன் சுயசாதி பற்று இவர்களை ஆட்கொண்டு அடிமைபடுத்துகிறது என்றுச்
சொன்னால் அது மிகையாகாது. சோதனை ஓட்டத்தில் தன்சாதிப் பெருமையை
இன்னொருவரிடம் பரிசோதித்து விடலாமே என்கிற நப்பாசை வருகிறதே ஏன்? அதுவும்
அறிவியல் தொடங்கி ஆன்மீகம் வரையில் தனக்கு அவர்கள் என்றுமே அடிமையெனும்
பொது புத்தியில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் விளிம்புநிலை
ஒதுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே மீண்டும் மீண்டும்
சுயசாதிப் பரிசோதனைகளும் நிகழ்த்தப்படுகிறது.பெருமிதம், ஆக்கரமிப்பு,
அடிமைநோக்கம், அதனால் ஏற்படுகின்ற அர்ப்பமகிழ்ச்சி, இவையனைத்தும்
மனிதனுக்கு அப்(போதை)க்குத் தேவைப்படுவதால் தினமும் ஏதேனுமொரு வழியில்
விளிம்புநிலை மக்களிடம் சுயசாதி பரிசோதனையினை பிரயோகப்படுத்துகிறார­்கள்.
இதில் ஆண்,பெண் பேதமில்லை சமவுரிமை கேட்டு பெண்டீரும் போராடுவதற்கில்லை.
ஆணும் பெண்ணும் சுய சாதி பரிசோதனைகளை பிரயோகப்படுத்தும் போது மட்டும்
சமமாகவே ஒன்றிணைகிறார்கள்.சாதிய ரீதியலான அடிமைச் சமூகம் தான்
இன்னசாதியில் பிறந்தேன் என்று பிரயோகப்படுத்த தயங்கும். காரணம் இங்கே
ஆண்டான் அடிமையென்பது எதார்த்தமான ஒன்றாக இருக்கிறது. அந்த அடிமைச்
சமூகமானது நம்மை பார்த்து அச்சப்பட வேண்டும், பயந்து ஒதுங்க வேண்டும்,
பார்க்கும் போதே பக்தி ஏற்பட வேண்டும். என்பனவையாக சுயசாதி பரிசோதனையை
தன்வரலாற்று நிகழ்வுகள் மூலம் மேல்சாதியாக இருக்கும் எவரும் எளிதாக
பிரயோகப்படுத்தி விடுகிறார்கள். இன்று வரையில் சேரி அல்லது கலனி ,ஊர்
எனும் இரு வகுப்பு வாத பிரிவுகளாக உடைந்து காணப்படும் சமூகச் சூழலுக்கு
இதுவே காரணமாகும்.இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்! எனச்சொல்வோர்
அனைவருமே தன் சுயசாதி பெருமையை பிரயோகப்படுத்துபவர்க­ளாகவே
இருக்கிறார்கள் இல்லையெனில் சிற்சில தீண்டாமை ஒழிப்பை காரணங்காட்டினால்
பெருந்தீண்டாமைச் செயல்களை எளிதாய் மறைத்து விடலாமென்று இவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை இதனை கற்பிப்பது மட்டுமே மதமும், மதம்
விதைக்கும் மூட நம்பிக்கைகளும் முக்கியப் பணிகளாக கொண்டிருக்கிறது.
செயல்படுத்துவது மட்டும் இவ்விரண்டிற்கும் அடிமையாகப்பட்டவர்கள்­
செய்துவிடுகிறார்கள்.­ கவலையில்லை சாதி வளர்கிறது அதுபலரை நமக்குக் கீழான
அடிமைகளையும் வளர்த்தெடுக்கிறது எனக்கிற மனமகிழ்ச்சியின் மூலம் தன்னை
மேன்மையானவர்களென்று காட்டிக் கொள்ளவது இவ்வகையிலான மதப்போதகர்களுக்கு
மகிழ்சி வெள்ளம் பொங்கி வழிந்தோடுகிறது. ஒவ்வொருவரும் தங்களைச்
சுற்றியுள்ள எதார்த்த நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனிக்கத் தொடங்கினால்
இவ்வுண்மை புலப்படும் . புலப்படும் உண்மைகளில் பெரும்பான்மை,சிறுபான­்மை
எனும் விதிகளின் மூலம் கணக்கிட்டால் சுயசாதி பரிசோதனை பிரயோகத்தின் அளவு
மிகத்தெளிவாக நமக்குத் தெரிந்துவிடும்.இந்தியாவில் வாழும் ஒவ்வொரு
மனிதனும் சுயசாதி பரிசோதனைகளுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் .
ஆண்டான் அடிமை இரண்டுமே இதிலடங்கும். இவ்வாறு இருக்கும் இந்தியச் சூழலை
இனியும் காப்பாற்ற முடிமாயென்றால் அது சந்தேகமே,, அதேவேளையில் ஒருவர்
"தான் இன்ன சாதியில் பிறந்தேன் இது எனக்கு அவசியமற்றதென்று உணர்ந்தேன்"
என சூளுரைக்க எடுத்துக் கொள்ளும் சுயசாதி பிரயோகம் செல்லும்
தன்மையுடையதாக எடுத்தாளலாம் , இதில் சாதியே எனக்கு வேண்டாமென்கிற
உறுதிபெற்றபின்னரே அவ்வாக்கு உத்திரவாதம் பெற்று
செல்லுபடியாகும்.சிறுவயதில் அம்மாவிடமோ தந்தையிடமோ தன்சகோதரனைப் பற்றியோ
அல்லது தன்சகோதரியைப் பற்றியோ அல்லது அவர்கள் ஏதேனும் நம்மைச்
செய்துவிடும் முன்னரோ அல்லது பின்னரோ அவர்களைப் பற்றி மிகைபடுத்திக்
கூறுகின்ற சாடல்களை எதிர்த்து பெற்றோர்கள் வைக்கின்ற பெருங் கூச்சலின்
மூலமாக சக பிள்ளைகள் அடங்கிப்போவார்களே அதே போன்ற மனநிலையை
அப்படியேசுயசாதி பரிசோதனை பிரயோகப்படுத்துபவர்க­ளும் பெற்றிருப்பார்கள்
என்பதே இன்றைச் சூழலுக்கான எதார்த்த நிகழ்வு.ஒவ்வொருவரும் சமூகத்தின்
மீதான அக்கரை கொண்டு இச்சமூகம் சாதிக்க வேண்டும் என்கிற நற்சிந்தனையின்
காரணமாக தன் சுயசாதி பரிசோதனை பிரயோகத்தினை களைவதன் மூலம் சாதியத்தை
முற்றிலுமாக அழித்துவிட முடியாதென்றாலும் அது பிற்காலத்து பேருதவிக்கு
முக்கிய பங்காங்காற்றும் என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம்.

Wednesday, May 20, 2015

சிறுகதை : "ஒரு ரயில்பயணம் இரு கல்லறைகள்"

விடியலை வரவேற்று வியப்பில்ஆழ்த்திக்கொண்டிருந்த கானப்பறவைகளின் கூச்சலோடு தன்
முகத்தை மெல்ல மெல்லக் காட்டி
செங்காலை பொழுதினை பரப்பிக் கொண்டிருந்தது இளஞ்சூரியன் .
அவன் அப்போதுதான் சோம்பலை முறித்துக்கொண்டு
எழுந்திருந்தான் . எழுந்தவுடன் சூரிய வணக்கமொன்றையும்
வாசலுக்கு வெளியே நின்று சமர்பித்துக் கொண்டிருந்தான்.கடிகாரம் தன்கடமை தவறாத நகர்தலின் மூலம் மணி ஆறென்று
காட்டிக்கொண்டிருக்க செயலியில் பதிந்து வைத்த ஆறாவது
மணியோசையை கிழித்துக்கொண்டு கேட்டது அந்த குரல்.
ராஜியின் அம்மா அழைக்கிறாள் " ராஜி சீக்கிரம் குளிச்சிட்டு
கெளம்பு உனக்கு இன்னைக்கு இன்ட்டர்வியூடா,,, அவசரப்படவில்லை
ராஜி இதோ வந்துட்டேம்மா!! என்னு மட்டும் பதில்குரல் கொடுத்தான்.
ஒருவழியாக குளித்துவிட்டு காலைக்கடனையெல்லாம்
முடித்துவிட்டு புது அலுவலக இன்ட்டர்வியூவிற்கு கிளம்பத்
தயாராக ஓட்டை நாற்காலியொன்றின் மீதமர்ந்து
இன்ட்டர்வியூவிற்குத் தேவையான கேள்விகளுக்கு எவ்வாறு
பதிலுரைப்பதென தனக்குள்ளே மனப்பாடமும், மணகணக்கும்
போட்டுக்கொண்டிருந்தான். உன் அப்பா இருந்திருந்தா மத்த பசங்க
மாதிரி உன்னையும் கூட்டிட்டு போய் ஆபிஸ் வாசல்ல
விட்டுட்டுவருவாரு! சரி சாப்டியா? பசியோட போகாதே
அப்புரம் இன்ட்டர்வியூல செரமாமா போய்டும்,, இந்தா "பழையது"
குடிச்சிட்டு போ!! ராஜியின் தாயான குமரிவள்ளியின் மகன்
மீதான பற்றுதலை பறைசாற்றிக்கொண்டிருந­­்தது .இல்லம்மா! எனக்கு பசியில்ல ஒடம்பு மட்டும் ஏதோ செய்யுது,,
ஒரே பதட்டமா இருக்கும்மா,,,ராஜீ தன்
உடற்தன்மையை எடுத்துரைக்க , அப்படி சொல்லாத ராஜீ பசியால
வந்த மயக்கமும் இன்ட்டர்வியூ பயமும்
சேர்ந்து ஒடம்ப குலுக்கிப் போடுது, காலையிலே வெறும்
வயித்தோட போனா இப்படிதா ஆகும் . கொஞ்சம் பசியாறிட்டுபோ
ராஜீ. குமரிவள்ளி விடுவதாக இல்லை ஆருதலோடு பசிக்கான
உணவையும், பாசத்தையும் ஊட்டுபவள்தானே தாயாக இருக்க
முடியும் . அவள் கடமையிலிருந்து
ஒருபோதும் தவறியதில்லை,ராஜீ ஒரு அரசுக் கலை கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டாமண்டு படித்துக்கொண்டிருக்கையில்
ராஜீயின் அப்பா இறந்துபோனார். அவளுக்கு வேதனைகள்
ஒருபுறமிருந்தாலும் பிள்ளையின் எதிர்காலம் கருத்தில்
கொண்டு தன்துக்கத்தை தனக்குள்ளேயே புதைத்து
வைத்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு
வருஷம் தானேயா படிச்சிட்டு வந்துடு அதுக்கப்புரம் நீ வேலதேடி
எனக்கு கஞ்சி ஊத்தினா போதும் . அதுவர ஒனக்கு நாஞ்செய்யாம
வேறயாரு செய்வா? காலேஜுக்கு போடா ராஜீ,, என்று இயலாத
காரணத்தால் கல்லூரிக்குப் போக மறுத்த ராஜுக்கு
அப்போதப்போதைக்கு ஆறுதல் படுத்தி அவனை படிக்கவும்
வைத்துவிட்டாள் குமரிவள்ளி. வறுமை மாறாத அந்த கிராமத்தில்
ராஜீ மூன்றாவது பட்டதாரி. முதல் இரண்டு பட்டதாரிகளும் அக்கிராமத்
தலைவரின் பிள்ளைகள். படிப்பு முடித்து வேலைக்கு
எழுதிப்போடுவதில் கவனமாயிருந்தான் ராஜீ.ஒரே
பிள்ளைக்கு ஆன பணிவிடைகளையும் பாசப்பிணைப்பினையும் ஒருசேர
கொடுத்துக்கொண்டிருந்தாள் குமரிவள்ளி . உலகமுழுக்க தன்
அக்கினியால் மஞ்சள் மாலையிடாமல் மிதமானச் சூழலை தரும் வெயிலை தூற்றும் உதடுகளை அவ்வெய்யிலே கண்டு
கொள்ளாமல் தனக்கான கடமையைச் செய்துவிட்டு மாலையில்
மலைக்காட்டு மஞ்சளில் கரைந்து சிவப்புத் தாமரையாக தன்
வீடுதிரும்புதல் போல அவளும் அவனுக்காகவே உயிரைத் தன்வசம்
பிடித்து தேகத்துச் சோர்வினை கொஞ்சம் கூட மதியாமல்
உழைத்துக்கொண்டிருந்தாள். அப்படியான உழைப்பின் பலனாக
ராஜுயின் எதிர்ப்புக்களோடு வந்த நேர்முக அழைப்புக் கடிதமானது
இருவருக்குமே ஆறுதல் தந்ததென்றேச் சொல்லலாம்.ராஜீ
ட்ரெயின்ல போறியா இல்ல பஸ்ல போறியா? இன்ட்டர்வியூ மதியம்
இரண்டு மணிக்குத்தானே அரைமணிநேரத்துக்கு
முன்னாடியே போனாதா சரியா இருக்கும், அப்பதா
பதட்டப்படாத நம்மளால பதில் சொல்ல முடியும். அதனால் நீ
ட்ரெயின்லேயே போய்டு அதான் சரியா இருக்கும். அறிவுரை
வழங்குவதிலும் அவனுக்குத் துணையாக இருப்பதிலும் எழுந்தச்
சொல்லாடல்களில் பாசம் மிஞ்சி குமரிவள்ளியே கொஞ்சம்
பதட்டமாகத்தான் பேசினாள். சரிம்மா நா ட்ரெயின்லேயே போரேன்
நானும் ட்ரெயின்ல போவதுதான்
சரின்னு நெனச்சிட்டிருந்தேன் நீயே சொல்லிட்டே, நா கெளம்பரம்மா
என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க,, கீழே காலைத் தொட்டுக் கும்மிட்டவனை
கண்ணீரோடு தூக்கி கட்டியணைத்து வழியனுப்பி
வைத்தாள் குமரியம்மாள். அவன் தலை மறைந்தாலும் இவள்
தலைமட்டும் வாசலுக்கு வெளியே மகன் சென்றப் பாதையையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் பல்வேறு
எதிர்பார்ப்புகள் அவளுக்கு உள்ளதென அளவிட்டுச் சொல்லிவிடலாம்.எதிர்பார்ப்புகளை ஏற்காத  மனிதர்கள்தான் இம்மண்ணில்
இருக்கிறார்களா? ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகள் உறங்கிக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
வாழும் காலத்தில் ஏமாற்றமே மிஞ்சிய எத்தனையோ உயிர்களிடம்
உறவாடிக்கொண்டிருக்கிறதே இயற்கையின் செயல்திட்டம்
இதுதானென்று உணர்கையில் ஒரு சிலர் வென்றுவிடுகிறார்கள் ஒரு
சிலர் எதிர்பார்ப்புகளை சுமந்தபடியே வாழ்க்கையின்
ஓட்டத்தில் நகர்ந்தும் போகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது அப்படித்தானே
உறுவாகியது. என்றோச் செய்த உதவிக்கோ,உழைப்பிற்கோ, வேறு
ஏதேனும் செயல்பாட்டிலிருந்து இன்று நமக்கு கிடைக்கும்
எதிர்பார்த்து நிற்கும் ஒன்றை
பெற்றுவிட்டப்பின்னாலே அதற்கு அதிஷ்டமென்றால் அனைத்தும்
பொய்யாகத்தானே போய்விடுகிறது இப்படி அதிர்ஷ்டம்
மேல் எதிர்பார்ப்பினை குமரிவள்ளி
கொண்டிருக்க வில்லை என்பதற்கு அவள்விடும் கண்ணீரே சாட்சியாக
தெரிகிறது.இந்த இன்ட்டர்வியூ
இல்லையென்றால் வேறோரு இன்ட்டர்வியூ மகனின் மேலே முழு நம்பிக்கை இருக்கையில் அதிர்ஷடம்
தேவைபடாதொன்றாக குமரிவள்ளி
திடமாக நம்பிக்கை அவள் கொண்டிருந்தாள். மணி சரியாக எட்டென்று
ராஜுயின் கடிகாரம்
காட்டிக்கொண்டிருந்தது. குக்கிராமமான கொம்பூர் என்கிற அவனது ஊரிலிருந்து பத்து மைல்தூரம் விழுப்புரம் ரயில்
நிலையம் அங்கிருந்து செங்கல்பட்டுக்குச் செல்ல வேண்டும்
அவன் . நேரத்தைச் சரியாக கணித்து
இத்தனை மணிக்கெல்லாம் இன்ட்ர்வீயூவிற்குச்
சென்றுவிடலாமென்று கணக்குப் போட்டு வைத்திருந்தான்
ராஜு.அவன் ஊருக்கு இரண்டுமுறை மட்டுமே விஜயம்
செய்யும் பேருந்து காலைபொழுதில் ஆடியசைந்துக்
கொண்டு வந்து நின்றது அவனின்ற பேருந்து நிறுத்தத்தில்,,பேருந்தில்
ஏறிய ராஜு உடல் அலுப்பு
தெரியாமலிருக்க தன்கூடவே எடுத்துவந்த இன்ட்ர்வீயூவிற்குத்
தேவையான கேள்விபதில் புத்தகத்தை புரட்டியபடியே
பயணிக்கலானான். சரியாக ஒருமணிநேரம் உருண்டோடி
விழுப்புரம் ரயில்நிலையம் வந்தடைந்தது பேருந்து.
அவசரப்படாமல் நிதானமாகவே இறங்கி ரயில்நிலையம் நோக்கி
நடந்தான் ராஜு. அவன் வருவதற்கும் ரயில்நிலைய அறிவிப்புச்
செய்வதற்கும் சரியாக இருந்தது. தான் இந்த வண்டியில்தான் பயணப்பட
வேண்டுமென்று ராஜு ஏற்கனவே
முடிவுசெய்திருந்தது போல் நிகழ்வுகள்
நடந்துக்கொண்டிருந்தமையால் அவனுக்குள்ளே ஒரு ஆத்ம
திருப்தியும், நிம்மதியும் சூழ்ந்துக் கொண்டிருக்க . ஒரு
வழியாக ஒன்பதரை மணிக்கு ரயில்நிலையத்தில் தஞ்சம்
புகுந்தது பல்லவன் எக்ஸ்பிரஸ். ரயில் வந்தவுடன் யாரும்
இறங்குவதாகத் தெரியவில்லை,ஒருசிலர் மட்டும்
குடிநீருக்கும்,அப்போதைய நொறுக்குத் தீனிக்கும் இறங்கிய
வண்ணமிருந்தனர்.
பதிவுசெய்யப்படாத பெட்டியில் இவன் ஏற வேண்டும்.
அதற்கேற்றவாரே முதல்நிலையில் அவன் காத்திருந்ததால் அங்குகூட
அவனுக்கு அனுகூலமாகவே இருந்தது. ரயில்பெட்டியில்
ஏறியவுடன் நால்வர் அமரக்கூடிய இடத்தில் மூவர் அமர்ந்திருக்கும்
இருக்கையினருகே சென்றான் அங்கு அவனுக்கு இடமில்லை
என்றேத் தோன்றியது. அகங்காரமாய் இருநபர்கள் மூவர் இருக்கையினை
ஆட்கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தான் ராஜு எங்கும்
இடமில்லை என்கிற முடிவுக்கு வந்தான் தனதருகே இருக்கையில்
அமர்ந்திருக்கும் முகம்தெரியா நபரிடம், சார்! கொஞ்சம் நகர்ந்து
உட்காந்தீங்கனா நா ஓரமா உட்காந்துக்குவேன் சார்,, என்றான்.
எதோ சலிப்பாக அதே ஆணவத்தோடு
வெறும் உடலசைவினை மட்டும் செய்தார்கள் அவர்கள்.
ஒண்டிக்கொள்ள கொஞ்சம் இடம் கிடைத்தது அவனுக்கு,,
ரயில் வண்டியானது நான் பயணப்படுகிறேன் விரைவில்
எல்லோரும் ஏறிக்கொள்ளுங்கள்
என்று தனக்கே உரித்தான மிகப்பெரும் சத்தத்தை
எழுப்பிவிட்டு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு புறப்படத்
தயாரானது. மெதுவாக அது விழுப்புரம்
ரயில்நிலையத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புறப்பட்டு
சென்னையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.ராஜு
கிடைத்த இடத்தில் ஒட்டிக்கொண்டவுடன் மீண்டும்
பேருந்தில் பயணிக்கையில் வாசித்த புத்தகத்தின் விட்ட
இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கினான். ரயில் வண்டியும்
தன்பாதை விலகாமல்
வேகத்தையும் விடாமல் தொடர்ந்து அதிவேகத்தில் பயணித்துக்
கொண்டிருக்கையில் இருபது
கிலோமீட்டர் தாண்டியிருக்கும், அப்போதுதான் அந்தச் சம்பவம்
நிகழ்ந்தது.


தன்பிள்ளையின் எதிர்காலத்தை நோக்கி
அவன் கால்படுமிடமெல்லாம் கற்பனைக்கெட்டாத வெற்றியை
மீட்டெடுப்பான் என்கிற எதிர்பார்ப்பினை மனதில்
சுமந்துகொண்டு அவன் வீடுதிரும்புகையில்
பசியெடுக்கிறது எனக்கம்மா,, என்று தோய்ந்த குரலில்
கேட்டுவிடக்கூடாதென்பதற்காக அவசர அவசரமாக வீட்டிலிருந்த
அன்றைய சிறு காய்கறிகளை சேர்த்து அன்றைக்கு மட்டும்
கடையரிசி வாங்கி வந்து
சோறுவடித்து தன்மகன் வந்தபின்னாலே அவனோடு
சேர்ந்துண்ண காத்துக்கொண்டிருந்தாள்
குமரிவள்ளி. தாய்ப்பாசத்தின் மெய்ப்பொருளை
கண்டுபிடிப்பதென்பது இயற்கையன்னைக்கு மட்டுமே
தெரிந்திருப்பதில்
வியப்பேதுமில்லையே! அரவணைப்பதில் இயற்கைக்கு
அடுத்தபடியாக அன்னையவள்தானே இடம்பிடித்திருக்கிறாள்.
அதனால்தான் தன்பிள்ளை ராஜுவின் வரவிற்காக அவளும்
பசியோடு காத்திருக்கிறாள்.இரு­
பது கிலோமீட்டரைத் தாண்டி
அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தீடீரென்று
ஒரு கோர விபத்தில்
சிக்கிக்கொண்டது. ஏதோவொரு கிராமத்தின் வயல்வெளி காட்டை
ரயில்வண்டியானது கடந்து
போக,யாரோ விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆறடி தண்டவாள
உடைப்பின் காரணமாக அதில் சிக்கி
தடம்புரண்டு முதல் மூன்று பெட்டிகளும் தடாலென தரையில்
விழுந்து வந்த வேகத்திற்கே இழுத்துக்கொண்டு போனது. எதிர்பாரா தாக்குதலை எப்படி சமாளிப்பது எதுவும் நன்மைக்கே
என்று இதனையும் கடந்துபோக முடியுமானால் மனிதகுலம்
மிருகமனம் கொண்டதாகத்தானே இருக்கும். முதல்பெட்டியில் ராஜு
இருந்தமையால் அவனுக்கேதும் நிகழாதென்றுச் சொல்ல
ஜோசிக்காரனாலும் முடியாதல்லவா,,தடம்புரண்ட முதல்
பெட்டியில் சிக்கிய ராஜு சம்பவ
இடத்திலேயே உயிரிழந்து கிடக்கிறான். உடல்பாகங்கள்
சிதறிக்கிடக்கின்றன. அவன்
உடலெங்கும் ரத்தம் வழிந்தோட ஒரு கை மட்டும் புத்தகப்பையை
இறுக்கமாக பிடித்திருக்கிறது.
மற்றொரு கையும் இரு கால்களும் துண்டுபட்டு துடிதுடித்துச்
செத்துக் கிடக்கிறான். அவன் மீதும் பயணிகளின் சிதறிய உடற்பாகங்கள்
விழுந்து கிடக்கின்றன.விபத்து
குறித்து தகவலறிந்த ஊடகங்களும் பெருகூட்ட மக்கள் திரளும்
மேயத்தொடங்கினார்கள்
அவ்விபத்துப் பகுதியை,,, பெருங்கூட்டத்தில் யாருடையது
உதவும் கரங்கள்,யாருடையது திருடும் கரங்களென கணக்குப்
போடமுடியவில்லை இருந்தும்
உதவுதலே அங்கே பெரும்பான்மை பெற்றிருந்தமையால் உலகில்
இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்போடு உள்ளதென ஒரு
கணிப்பிங்கே காணமுடிகிறது. நிச்சயம் மனிதர்களின் மனங்களிங்கே
பேசத்தொடங்கும் கடவுள் எதற்கென்றும் கற்பிக்காதே
கடவுளை என்றும்,,,இவற்றையும்
மீறி நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளே காப்பாற்றென்றும்,,,ஒலிக்கத்தான் செய்யும்
அழுகுரலோடு அனுதாபலைகளும் காதுகளை
ஊடுருவி வானத்தை நோக்கி மேலெழுவது முறைதானல்லவா,,,,
கோர விபத்துச் செய்தி வேகமாக பரவினாலும் கொம்பூர்
கிராமத்தையின்னும் எட்டிவிட
வில்லை . இரு பட்டதாரிகளின் தகப்பனான ஊர்த்தலைவரின் வீட்டில்
மட்டுமே தொலைக்காட்சி பெட்டியுள்ளது. விரையில் மகன் வருவானெனும் எதிர்பார்ப்பில் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்த குமரிவள்ளிக்கு
ஒரே ஆச்சர்யம் கூடவே பதற்றமும் ஒட்டிக்கொண்டது. ஊர்த்தலைவர்
குமரிவள்ளியின் வீட்டை நோக்கி நெருங்கி வந்துவிட்டார். அவர்
வாசலை நெருங்குவதற்கு
முன்னதாகவே ஓடோடிச் சென்று வரவேற்றாள் குமரிவள்ளி. சோகம் சூழ்ந்த முகத்தோடு வாசலின் திண்ணையில் வந்தமர்ந்த
ஊர்த்தலைவர் பேச முற்படுகையில் , ஐயா வீட்டு விருந்தாளி
வந்திருக்கிக இருங்கய்யா கொஞ்சம்
மோர் கொண்டாந்து தாரேன்,,,
நில்லுபுள்ள! இதநான் எப்படி
உங்கிட்ட சொல்ரதுனே தெரில மனச தெடப்படுத்திக்கோ ! இந்த பாவி
மனுச துக்கசேதி
கொண்டாந்திருக்கேன் புள்ள ,, டிவிபொட்டில போட்டானுவோ
விழுப்புத்த தாண்டி ரயில்வண்டி கவுந்துபுடுச்சான். ஒரே
அல்லோலகல்லோலமா இருக்காம் அந்த இடம் அப்புரம் கவுந்த ரயில்ல
மாட்டினவங்க பட்டிலு போட்டானுக வள்ளி அதுல ஒம்புள்ள,,,ஒம்புள்ள,,,,,
ஐயா!! எம்புள்ளைக்கு என்னாச்சி,, எம்புள்ளைக்கு என்னாச்சி,,,ஐயோ!
சொல்லுங்கவே எம்புள்ளைக்கு
என்னாச்சி,,,,, அதிர்ச்சியின் உச்சத்தில் பித்துபிடித்துபோய்
தலையிலும் மார்பிலும்
வயித்திலும் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து கத்திக்
கதறினாள் குமரிவள்ளி. ஊர்த்தலைவரின் இழுப்புலிருந்தே
தெரிந்துவிட்டது இழந்தோம் பிள்ளையை என்று,,, அவளது
கதறலையும் அழுகுரலையும்
கேட்டு கொம்பூர் கிராமமே ஒன்று கூடிவிட்டார்கள் அவளது வீட்டில்,,,
கூடி நின்றவர்களும்
அழத்தொடங்கினார்கள் இழந்துவிட்டோம் ஊரில் ஒரு
மனிதனையென்று,,, அதற்குள் இரண்டாவது அதிர்ச்சியையும்
வார்த்தைகளை மென்று விழுங்கி சொல்லத் தொடங்கினார்
ஊர்த்தலைவர். புள்ள! "பாடி"ய
தரமாட்டாங்களாம் மொத்தமா செதஞ்சி போனதால அங்கேய பக்கத்தில எங்கேயோ மொத்தமா பொதைச்சுடுவாங்களாம்,,,,, அவ்வளவுதான் அடிவயிற்று சிறுகுடல் வெளியில் வந்து
விழுவது நிச்சயமென்பதுபோல செய்தி கேட்ட அடுத்த நொடியே
கதறியழுதாள் குமரவள்ளி. தாங்கமுடியவில்லை அவளால்,,,
காலையில் பார்த்த முகத்தை காலமுழுக்க பார்க்காத படி செய்த
கும்மிட்ட கடவுளையெல்லாம் தன் அழுகுரலாளால் உடைத்துப்
போட்டாள். இரவு நகர்ந்துக்கொண்டிருந்து ஒருகையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் மூட்டையொன்றேந்தி
உருவமொன்று ஊர்ச்சுடுகாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
ஊரானது துக்கத்தில் கலந்து கொண்ட அசதியினால் சீக்கிரமே
தூங்கியும் போனது. சுடுகாட்டை நெருங்கியதும் அவ்வுருவம்
மண்ணைத்தோண்டி எடுத்துவந்த மூட்டையை குழியில் போட்டு மூடிவிட்டு அக்குழியருகிலேயே தீக்குளித்துக்கொண்டது.
விடிந்ததும் ஊர்மக்கள் ஒரு குழி தோண்டினார்கள். அதேயிடித்தில்
இப்போது இருகல்லறைகள். ரயில்விபத்து விசாரணையின்
இறுதி அறிவிப்பு அன்று மாலை வெளியானது. சம்பவம் நடந்த
இடத்திற்கு அருகிலிருக்கும் ஊரில் சாதிக் கலவரமாம், கலவரக்காரர்கள்தான் தண்டவாளத்தை உடைத்தார்களாம் ,,மாறாத மனிதர்களிடம் மாற்றத்தின் எதிர்பார்ப்பும் குமரிவள்ளியின் எதிர்பார்ப்பும் ஒன்றாகக் கலந்து கல்லறைகளாக காட்சியளிக்கிறது.

Tuesday, May 19, 2015

காதலில் விழுந்த பனிதுளிகள்

நதியில் நீராடிவிட்டு
நடைபழகுகிறாள்
அவள்

கையேந்தி வரம் கேட்டேன் வந்து தாகம் தீர்த்துவிட
நனைந்த உடலில்
வழியும் நீர்த்துளிகளிடம்

உனது தாகம் தீர்க்க
நானிங்கே தவம் கிடக்க
அவளிடம் கையேந்துகிறாயே
என்னிடமில்லாதது
அவளிடமேதும்
உண்டோ

கோபித்துக் கொண்ட
பனிதுளிகளிடம்

பூக்களையேன்
பிடித்திருக்கிறது
உனக்கு
புல்தரையேன்
நீ! காதலிக்கிறாய்?
ஆதலால்தான்
சொல்கிறேன் அனைவரிடமும் இதயமிருக்க சிலரிடமே
அன்பு குடிகொண்டிருக்கும்

பனிதுளிகளே
அழகாய் எனை வசீகரிப்பது
அவளின் அன்பு
மட்டுமே

நான் சொன்னதும்
நாவிதழை
பனிதுளிகள் கடித்துக்கொண்டதோ
நானறியேன்

நீயணிந்த வெண்கொலுசு
புல்வெளிப் பாதையில்
உரசிவிட
பொற்கொலுசாகிப் போனதை நிச்சயம் பனிதுளிகள் பார்த்திருக்கும்

பூமிதேவதை
மேனிநீரின்
மேன்மைதனையதுவும்
அறிந்திருக்கும்

என்னைக் கண்டவுடன்
உன்னுடம்புச் சூடேறி
உள்வாங்கித் தின்கிறதே
நீர்த்துளிகள்

பதற்றம் ஏனோ
பாதுகாவலன் நானிருக்க

காதலனே எனதருகில்
வா!! உனை என்றோ
நான் ஏற்றுக்கொண்டேனென
உதடுகள் முனுமுனுப்பதை
ஓரக்கண்ணால்
ரசித்து விடுகிறேன்
நானும்

விளைந்த பயிரை
விழி மூடும் வரையில்
இன்னோர் விழிபடாமல்
நானுமுனை
காத்திடுவேன்

அவசரப்படாதே
என்னவளே மெதுவாக
நட!

கனல் கொண்ட தேகத்தில் மேகம் இறங்கிவந்து
மழைகொண்டு
உன்மேனி குளிரச் செய்திடும்

அம்மேக மழையால்
என் கையேந்தல்
நிகழ்வானது
மீண்டும் தொடரும்

காதலும் வாழ்தலும் தொடர்கதைதானடி
நாம் கல்லறையில் கால்பதிக்காத
வரையில்,,,

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...