Monday, February 29, 2016

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அறிவுலகப் பணிகள்

தீவிர அரசியல் செயல்பாட்டாளராக
அறியப்படும் தாத்தா இரட்டைமலை
சீனிவாசனின் அறிவு ரீதியான
நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டோர்
வரலாற்றிலும் , தமிழ்ச்சமூக
வரலாற்றிலும் என்றும் நினைவு
கூறத் தக்கதாகும். இரட்டைமலை
சீனிவாசனின் இதழியல் பணி பலரும்
அறிந்த ஒன்றேதான். பிற சாதியினரை
போல பறையர் (தலித்) சமூகத்தை
முன்னேற்றும் பொருட்டு பறையன்
என்னும் மகுடத்தோடு 1893
அக்டோபரில் பறையன் இதழை
தொடங்கியபோது அவருக்கு வயது 32
தான், பறையர் என்ற தலித்திய சமூக
அங்கத்தினர்களுக்காக பரிந்து
பேசுவதும், தலித்தியர்களுக்கான
அரசு அதிகாரம் மற்றும் உரிமைகளை
நாடியும், நல்லொழுக்க ஆதாரங்களை
பற்றியும் பத்திரிக்கை
வெளியிட்டுக்கொண்டிருந்தது என்கிறார்
இரட்டைமலை சீனிவாசன். நான்கு
பக்கத்தோடு மாத இதழாக
தொடங்கப்பட்டபோது அதன் விலை
இரண்டணா, இதழ் விளம்பரத்திற்கும்
முதல் இதழ் அச்சடிக்கவுமாக 10
ரூபாய் செலவானது. தொடங்கப்பட்ட
மூன்று மாதங்களுக்குப் பிறகு வார
இதழாக சனிக்கிழமைதோறும்
வெளியான இவ்விதழுக்கென்றே தனிய
அச்சு இயந்திரம் இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக
வாங்கப்பட்டது. பறையர்
சமூகத்தவர்களால் வெகுவாக
ஆதரிக்கப்பட்ட இவ்விதழ் பிற ஆதிக்க
சமூகத்தினரின் வெறுப்புக்கே
இலக்காகியிருக்கும் என்பதை அதன்
பெயர் மூலமும் அறிய முடிகிறது.
தலித் பறையர் சமூகத்தார்
கல்வியிலும், அறிவு தளத்திலும்
தீவிரமாக இயங்கவந்த காலமும்கூட
அது,,, பறையன் இதழுக்குப் பிறகு
தொடங்கப்பட்ட "தீவிர வலதுசாரியம்"
கொண்ட வ.வே . சுப்பிரமணியரின் "பால
பாரதி" இதழுக்கு 300
சந்தாதாரர்களுக்கு மேல் சேரவில்லை.
அ . மாதவனின் "பஞ்சாமிர்தம்"
இதழுக்குக் கூட 400
சந்தாதாரர்களுக்கு மேல் சேரவில்லை
என்று அறியப்பட்டபோது பறையன்
இதழ் அதிக சந்தாதாரர்களை
பெற்றிருந்ததோடு அதன் முதல் இதழ்
400 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு
இரண்டே நாட்களில்
விற்றுத்தீர்ந்தன,மேலும் 1893 முதல்
1900 வரை இரட்டை மலை
சீனிவாசன் மேலை நாடு
சென்றும்கூட தொடர்ந்து 7 ஆண்டுகள்
அவ்விதழ் வெளியானது. 1920 களின்
இறுதியில் மதுவிலக்கு
பிரச்சாரத்திற்காக வெளியான
"இராஜாஜியின் விமோச்சனம்" எனும்
மாத இதழ்கூட மொத்தம் பத்து
இதழ்களே வெளியாகி நின்று போனது
குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த தேசிய
நோக்கங்கொண்ட இதழ்களை
புறந்தள்ளிவிட்டு சமூக தளத்தில்
எழுச்சிக்கான முன்னுதாரனமாக
இரட்டைமலை சீனிவாசன்
இதழியல்பணி சிறப்பு பெற்றிருந்தது.
அயோத்திதாச பண்டிதரின் " தமிழன்"
இதழ்கூட அவரால் ஏழு
ஆண்டுகள்தாம் நடத்தப்பட்டது. இந்த
ஏழு ஆண்டுகால தமிழன் இதழின்
மறுஉயிர்ப்புதான் தாழ்த்தப்பட்டோரின்
வரலாற்றினை புதியதடத்தில்
நகர்த்தியுள்ளது. பிறகான சூழலில்
அயோத்திதாச பண்டிதர் அவர்கள்
"தமிழன்" என்கிற அடையாளத்தை
உடைத்துக்கொண்டு தம்மையும்
தலித்தின மக்களையும் "திராவிடன்"
எனக்கிற அடையாளத்துடன் இருக்க
விரும்பியதோடு அல்லாமல்
செயல்வடிவிலும் கொடுக்கிறார்.
இன்றை திராவிடத்திற்கு
முன்னொடியானவர் அயோத்திதாச
பண்டிதரே ஆவார்.
இரட்டைமலை சீனிவாசன் பறையன்
இதழை நடத்தியபோதே நூல்கள்
பலவற்றையும் சிறிதும்,பெரிதுமாக
வெளியிட்டுள்ளார். அந்நூல்கள் சாதி
இந்துக்களான ஆதிக்கர்களால்
அடையாளமற்ற நிலையை
பெற்றுவிட்டன. இன்றைக்கு அவரை
பற்றி அறியப்படுகிற வரலாறும்கூட
அவரே எழுதி வெளிமிட்ட "ஜீவிய
சரித்திர சுருக்கம்" என்னும்
சுருக்கமான சுயசரிதை நூலால்தான்
அறிய முடிகிறது. 1897 அக்டோடபர் 9
இல் வெளியான பறையன் இதழில்
"சாம்பான் குல விளக்கம்" எனும் நூல்
பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போலவே "பறையன்"பத்திரிக்கை
ஆபிஸில் நூல்கள் வெளியிடப்படும்
விருப்பமுள்ளோர் பெற்றுக்கொள்ளலாம் ,
என்கிற அறிவிப்பும்
வெளியாகியுள்ளது . இதன் மூலம்
நூல்களையும் இரட்டைமலை
சீனிவாசன் வெளியிட்டுள்ளார் என்பது
புலனாகிறது. 1900 ஆண்டு
மேலைநாடு பயணமான சீனிவாசன்
1921 இல் திரும்பி வருகிறார். 1923
இல் சென்னை மாகாண சட்டசபை
உறுப்பினராக நியமிக்கப்பட்டது முதல்
அவரின் பணி பெரும்பாலும் அரசியல்
தளத்தையே மையமாக கொண்டிருந்தது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக
நிற்கும் தீண்டாமையை ஒழிக்க
பல்வேறு சட்டமுறை தீர்வுகளை
உறுவாக்குவதில் அவர் ஈடுபட்டு
வெற்றியும் பெறத்துவங்கினார்.
சென்னை சட்டசபையில் ஞாயிற்று
கிழமைகளிலும், அரசு விடுமுறை
நாட்களிலும் சாராயக்கடைகள்
மூடப்படவேண்டும் என்று அவர்
தீர்மாணம் ஏற்கப்பட்டு
நடைமுறையில் இருந்தது. கிணறு,
குளங்கள், தெருக்களை எல்லா
மக்களும் சமமாய் பயன்படுத்த வகை
செய்யும் சட்டப்பிரிவுகளை, விளக்கி
சிறுநூல் ஒன்றை அவர்
வெளியிட்டார். அந்நூலில், பொது
நீர்திலைகளை அனைவரும்
பயன்படுத்தும் பொருட்டு
இரட்டைமலையார் கொணர்ந்த
தீர்மானமும், உறுவான சட்ட
பாதுகாப்பும் அம்பேத்கர்,
இரட்டைமலை சீனிவாசன் இணைப்பு
வாதங்களுக்கு கிடைத்த அரசமைப்பு
சட்ட உரிமையாகவே
பார்க்கப்படுகிறது. 1930 இல்
இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை
மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் தலித்தின
உரிமை மீட்புக்கு துணையாக
அம்பேத்கருடன் இரட்டைமலை
சீனிவாசன் அவர்களும் சேர்ந்து
பணியாற்றி உரையாற்றினார்கள்.
அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை
நூலாக எழுதி சொந்த செலவில்
வெளியிட்டார் இரட்டைமலை
சீனிவாசன். காந்தி இந்திய அரசியலில்
முக்கிய சக்தியாக மாறி தீண்டாமை
எதிர்ப்பு கிளர்ச்சி நடத்த தயாரானபோது
அதுபற்றி,,, அவருக்கு பகிரங்க கடிதம்
எழுதுகிறார். அந்த கடிதத்தையும்
சிறுபிரசுரமாகவும் அவர்
அச்சிடுகிறார். காந்தியின் இந்து துறவி
கோலத்தையும், தாழ்த்தப்பட்டோர்
தலித்தின மக்களை "அரிசன்" என
விளிப்பதையும் கடுமையாக
சாடுகிறார். 1933 இல் சென்னைக்கு
வந்த காந்தியை நேரில் சந்தித்து
காந்தியிடம் தன்னுடைய நீண்ட
அறிக்கையொன்றை சீனிவாசன்
அளித்தார். அந்த அறிக்கை முழுவதும்
தீண்டப்படாதோர் உரிமை தொடர்பான
வேண்டுகோள்களையும்,
கண்டனங்களையும் கொண்டிருந்தது.
மேலும் "அரஜன சேவா சங்கம்"
முற்றிலுமாக ஒழிக்கப்பட
வேண்டுமென்றும்,
தாழ்த்தப்பட்டவர்களை அரிஜனங்கள்
என்று அழைக்கத் தொடங்கியபோது
அம்மக்களை யாரும்
கலந்தாலோசிக்கவில்லை எனவும்
காந்தியை சாடுகிறார். இதனை
(அ.ராமசாமி "தமிழ்தாட்டின் காந்தி")
மறுநாள் இந்து நாளேட்டில் விரிவாக
செய்தி வெளியிடுகிறார்.
இரட்டைமலை சீனிவாசன் அளித்த
அறிக்கையை பற்றிம விவரங்களை
காந்தி மறுபரிசீலனைக்கு
எடுத்துக்கொண்டார் என
செய்தியையும் வெளியிட்டார்.
இச்செய்திகள் யாவும் இரட்டைமலை
சீனிவாசன் கருத்தியல் தளத்திலும்,
அரசியல் தளத்திலும் இணையான
ஈடுபாடு கொண்டவராக இருந்தார்
என்பதை புலப்படுத்துகிறது.

பூக்களை கூந்தலிலேற்று

உருகும் பனிமலையில்
என் உணர்வுகளை
புதைத்துவிட்டு
உன் உள்ளங்கை
வெப்பத்தில் உயிரையும்
உடலையும்
இணைத்துவிட்டேன்

என் இருதய துடிப்பில்
ஏதோ
மாற்றம் நிகழ்கிறது

நீயதை கனவு என்கிறாய்
நானதை காதல்
என்கிறேன்

உன் கூந்தலை
தொட்டுப்பார்க்கும்
பூக்கள் கடைசியாக
வந்திறங்கியது
உன் பாதம் தொட

அது தானாகவே
இறங்கியதாய் நினைக்க
எனக்கு மட்டுமே
தெரியும் எனக்காக
வேண்டுமென்றே
கழற்றியெறிந்தாய்
பூக்களையென்று

ஏமாற்றம் விரும்பவில்லை
நான் உண்மையை
சொல்லிவிட்டேன்
பூக்களிடத்தில்

வேண்டாம் வேண்டாம்
வலிவேண்டாம்
சூடிக்கொள் மீண்டும்
என்னை கூந்தலில்

கெஞ்சும் பூக்களோ
உதவிக்கெனை
அழைக்கிறது
பரிந்து பேசுகிறேன்
உன்னிடம்

பாவமாக இல்லையா
கனவை எரித்துவிட்டு
காதலுக்குள் நுழை

பூவோடு நாரும்
மணக்குமாம்
கனவோடு காதலும்
மனம் பேசுமாம்

முத்த வரையறையை
மூழ்கடித்துவிடுகிறேன்
எங்கே தொடங்க
வேண்டுமென யாரும்
ஓதவேண்டாம்
என் காதுகளில்

உன் கழுத்தில்
முகம்புதைத்து
பதிக்கிறேன்
முதல் முத்தத்தை
வெள்ளித் தகடாய்
மின்னும்
வியர்வைத்துளி
உப்பும் இனிக்கிறது

உன் உயிர்த்துளி
உணர்வுகளால்
கசிகின்ற முனகல்களை
சேகரிக்கும் பூக்களை
மீண்டும்
கூந்தலிலேற்றிவிடு

எனக்கு
முத்த வித்தைகளை
கற்றுத்தந்ததும்
அவைகள்தான்,,,

ஐயா கக்கன்,எம்ஜிஆர் சிந்தியுங்கள் தேர்தலில் தலைவர்களை தேர்ந்தெடுக்க,,,

2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் தம்மால் யாரை
வெற்றிபெற வைக்கப்போகிறோம் என்கிற சிந்தனையில் வாக்காளர் பெருமக்கள்
இருக்கலாம், அவர்களுக்காக எளிமை கண்ணியம், நம்பிக்கை கொண்ட தலைவர்களை
முறையாக தேர்ந்தெடுக்க கக்கன், எம் ஜி ஆர் போன்றோர்கள் முன்னுதாரனமாக
இருக்கிறார்கள் அவர்கள் இருவரின் மக்கள் சேவை பேசுகிறது இதோ!
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள்.
முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட
வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித்
தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம்
விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது
குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார்அந்தப் பெண்மணி.
வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு
கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி
பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி
நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில்
அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார்.அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு,
பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை
அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு
வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும்
நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த
தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி
என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன்.
சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில்
பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர்
என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக
வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்
வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத
துரதிர்ஷ்டவசமானநிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்
அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம்
கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள்
வந்துவிட்டார்கள். ''வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து
வெளியேறுங்கள்" என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம்
கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று
நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு
சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு
நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக்
கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின்
குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத்
துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே
கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர்.
நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச்
செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட
கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்த மரியாதை.
தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின்
தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்.
மறுநாளே உத்தரவு போட்டார்.
''முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின்
மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க
இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்குமாதம் 500
ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்'' என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட
உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப்
பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த
திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு
மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர்
ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு
புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி
கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார்என்று அவருடன் இருந்தவர்கள்
தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ''இதை ஏன் முதலிலேயே
தெரிவிக்கவில்லை?'' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில்
சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும்
எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில்தனக்கு தெரி விக்காமல்
சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு,
மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்
உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு
உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு
இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .
கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது,உண்மையும்
கூட. அவர் சொன்னார்... ''கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி
செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.''
- தி இந்து .

Saturday, February 27, 2016

நாளைய விடியலில் !

நாள் முழுவதும் எனை
அகழ்ந்தெடுத்தவன்
ஒருவழியாய்
விட்டுச்சென்றான்
வாசலில்

உயிரை குடித்தே
தீருவேன் என்று
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
உடலசதி மட்டுமே
அலுவல் எனக்கு
கொடுத்த பரிசு

ஏதேதோ என்
மூளையிலோட
முழுக்கு போட்ட
அத்துணை வேலைகளும்
முதுகில் சுமையாகி
என் ரத்தநாளங்கள்
சூடேறி சுருண்டு
விழுந்தேன்
படுக்கையறை
எதுவென்று
அறியாமலும்கூட

உணவின்றி அப்படியே
கண்சொக்கி கிடந்தேன்
இல்லாத இரவுக்கு
உடலுக்கெதற்கு
உணவென்று
ஊமைக் கனவுகள்
கிண்டலடிப்பதை
கேட்கவும்
முடியவில்லை
அதன் வாயையும்
மூட முடியவில்லை

ஆனாலும்
வழக்கமானதுதான்
என் உறக்கம்
தொலைத்த அந்த
இரவுகள் தினந்தினம்
தொந்தரவு செய்வது

மன உலைச்சலின்
மூடிய கதவுகளுக்கு
இடையே திறந்தே
வைக்கப்பட்ட என்
சன்னலின் வழியே
காற்றோடு கலந்து
என் செவி துளைக்கும்
நடுநிசி நாய்களின்
பக்கம் யாரோ ஒரு
இரவுப்பிச்சைக்காரன்
சிக்கியிருக்க வேண்டும்

சிந்திக்க வைத்தது
நாய்களின் குரைத்தலும்
ஊளையும்

இரவு மட்டும்
அவிழ்த்துவிடப்படும்
பெரும் பணக்காரர்களின்
நாய்கள் குரைக்கின்றன
பகலெல்லாம்
கட்டப்பட்டிருந்த
சோகங்கள்
கேட்கத்தொடங்கின
அந்த நடுநிசியில்

அப்பாடா! நிம்மதி,,,

நான் இன்னும்
சுதந்திரமாகத்தான்
சுற்றுகிறேன்
இவ்வுலகில்

இமைகளே
உறங்கத் தயாராகுங்கள்
உலகம் விழித்துவிடும்
தானாக
நாளைய விடியலில்,,,

பாமக அன்புமணி அவர்களே! இதுதான் மாற்றம் முன்னேற்றமா?

ஒரு கட்சியின் தலைமை என்பது தன்கட்சி சார்ந்த தொண்டர்களை
நல்வழிபடுத்துதல், நேர்மையை புகுத்துதல், ஒழுக்கத்தை கற்பித்தல்
என்பவற்றில் ஆக்கப்பூர்வமாக தன்னைத்தானே அர்ப்பணித்து கொண்டு அரசியல்
புரிவதுதான் சிறந்த தலைமையாக இருக்க முடியும். ஆனால் பாட்டாளி மக்கள்
கட்சி அதிலிருந்து விலகி மீண்டும் மீண்டும் ஆண்டைகள் பெருமை பேசி
தமிழத்தில் வலம் வருகிறது என்பதற்கான மதிப்பீடுகளுக்கு பெயர்பெற்று
விளங்குகிறது. இன்று (27.02.2016) அந்த கட்சியின் மாநில மாநாடான
"பாட்டாளி மக்கள் கட்சி எழுச்சி மாநாடு" என்பதால் காலையிலிருந்தே பல்வேறு
மாவட்டங்களிலிருந்து பலதரப்பட்ட வாகனங்கள் மூலம் சென்னை வண்டலூருக்கு
பயணபட்டார்கள் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும்,,, அவ்வாறு வாகனங்களில்
வருவோர்கள் கத்துவதும்,கூச்சலிடு­வதும், ஆர்ப்பரிப்பதும் இயல்பான
ஒன்றுதான். அது மகிழ்சியின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதுவே எல்லை மீறுகையில்?,,, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை
வழியாகத்தான் அனேக வாகனங்களும் வண்டலூர் பாமக மாநாட்டிற்கு சென்றது.
அவ்வாறு செல்லும் பாதையில் சுமார் இருபத்தைந்து நபர்களை ஏற்றிக்கொண்டு
வந்த ஒரு வேன் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவிகளை
ஏற்றிக்கொண்டுவந்த தனியார் கல்லூரி வாகனத்தை நிறுத்தி ஒரே இறைச்சலோடு
மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் பிரச்சனை செய்து கொண்டிருந்தது.
தற்செயலாக அவ்வழியே வந்துக்கொண்டிருந்த நான் இதனை கவனிக்கையில் பதட்டமாகி
என்னசெய்வதென்று அறியாமல் அக்கம்பக்கத்து குடியிருப்புக்கு சென்று ஆட்களை
கூட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றேன். விசாரிக்கையில் சுமார் மூன்று
கிலோமீட்டர் துரம் தொடர்ந்து கல்லூரி வாகனத்திற்கு வழிகொடுக்காமலும்
பக்கவாட்டில் சன்னல் வழியாக கல்லூரி மாணவிகளை கிண்டலடித்தும்
வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் முடியாமல் கல்லூரி வாகன ஓட்டுநர்
அவர்கள் முந்திச்செல்லட்டும் என்று வாகனத்தை நிறுத்திவிட்டார். அப்போதும்
நிறுத்தப்பட்ட கல்லூரி வாகனத்தின் பக்கவாட்டில் தன்வாகனத்தை நிறுத்தி
சராமாரியாக கேலிசெய்துள்ளனர். நானும் கூடியிருந்த ஆட்களும் சென்று
நிலமையை புரிந்து கல்லூரி வாகனத்தையும் பாமக மாநாட்டிற்கு செல்லும்
வாகனத்தையும் வழியனுப்பி வைத்தோம். பாமக மாநாட்டிற்காக வந்த வாகத்தின்
முற்பக்க கண்ணாடியில் கடலூர் வடக்கு பாமக என்றழெழுதப்பட்டிருந்­தது.
அனைவருமே மது அருந்தியிருந்தது எனக்கும் கூடியிருந்தோருக்கும்­ பெரும்
அதிர்ச்சியாய் இருந்தது. இந்தளவிற்கு தன்கட்சி தொண்டர்களை வைத்திருக்கும்
பாமகவிற்காக வேதனை மட்டுமே தெரிவிக்க முடிகிறது. மேலும் அக்கம்
பக்கத்தில் நான் அழைத்த ஆட்கள் அனைவருமே வன்னியர் சமூகத்தை
சார்ந்தவர்கள்தான் , அவர்களும் இந்த பேரதிர்ச்சியிலிருந்த­ு
மீளாதவர்களாய் கலைந்து சென்றார்கள். தன்னை தமிழ்நாட்டின் முதல்வர்
வேட்பாளராக அறிவித்திருக்கும் டாக்டர் அம்புமணி அவர்கள் தங்கள் சார்ந்த
கட்சி தொண்டர்களை முறையாக வழிநடத்த வேண்டியது அவருக்கான முதன்மை கடமையாக
இருக்கிறது.

அம்பேத்கர் பார்வையில் இந்திய மார்க்சியம்

புரட்சியாளர் அம்பேத்கர் மார்க்சியம் குறித்த தன் சிந்தனையில் சமூக
நலன்களை எதிர்பார்த்து உரசிவிடத் தயங்கியதில்லை,கம்யூன­ிஸ
சித்தாந்தத்தில் சாதிய பாகுபாடுகளும்,தீண்டா­மைகளும் இல்லையென்றாலும்
சாதியத்தை வேரறுப்பதற்கான சிந்தனைகள் இந்தியத்திலும்,இந்தி­ய
மார்க்சியத்திலும் முற்றுப்பெறாததாக இருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.
தீண்டாமை ஒழிப்பை மிக முக்கியானதாக அம்பேத்கர் திட்டவட்டமாக கருதினார்.
லெனின் இந்துஸ்தானில் பிறந்திருந்தால் முதலில் சாதிய வேறுபாடுகளை ஒடுக்க
பாடுபட்டிருப்பார், தீண்டாமை முற்றிலும் அவரால்
ஒழிக்கப்பட்டிருக்கும­்-(1926) என்கிறார் அம்பேத்கர். இவை இரண்டையும்
செயல் வடிவில் கொண்டுவராத மார்க்சியம் ஓர் மகத்தான புரட்சியை
முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அம்பேத்கர் கருதினார். மேலும்
திலகர் ஒரு தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தால்
"சுதந்திரம் எனது பிறப்புரிமை" என முழக்கமிடாமல் தீண்டாமையை ஒழிப்பதுதான்
முதல் கடமையென திட்டவட்டமாக கூறியிருப்பார். லெனின்-திலகர் இவர்களை பற்றி
கூறும் போது அம்பேத்கர் சாதி ஒழிப்பினைதான் முதன்மையான புரட்சியெனவும்
அதற்கான முக்கியத்துவத்தையும்­ தெளிவுபடுத்துகிறார்.­ புரட்சி,சுதந்திரம்
என்பதை விட சாதி ஒழிப்பும், சமத்துவத்தை விரும்புவதும் மட்டுமே மக்கள்
விடுதலையென முழக்கமிடுகிறார் அம்பேத்கர். புரட்சியும் , சுதந்திரமும்
அரசியலை அடிப்படையாக கொண்ட மார்க்சிய சிந்தனைகளின் இயக்கப் பணிகள். ஆனால்
இந்தியத்தில் அரசியல் புரட்சியை விட சமூகப்பணியும், சமத்துவப் பணியும்
முக்கியமானது அதுவே பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை
பெற்றுத்தரும் என்று அம்பேத்கர் விடாப்பிடியாக இருந்தார். இந்தியாவில்
இந்து சமூக அமைப்பு முறையானது நால்வர்ண சாதிகளாலும் பல்வேறு
உட்சாதிகளாலுப் கடைசியாக தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை பஞ்சமர்கள்
சாதியாலும் (Mr.காந்தி எங்களை ஹரிசன் என இழிபடுத்துகிறார்) பிரித்து
வைக்கப்பட்டிருக்கிறத­ு. இந்தப் பிரிவினைகள் என்றும் வேற்றுமைகளாக
மட்டுமல்லாது அடுக்கு முறையிலான ஏற்றத்தாழ்வுகளை கொண்டது சாதிகள்
ஒவ்வொன்றும் பிற சாதிகளை மிகக் கீழாக நடத்துகின்றன. சந்தேகப்பார்வையை
அவைகள் விதைக்கின்றன. இந்திய சாதிய அமைப்பு முறை ஒழிக்கப்பட்டால் சிலர்
அதிகாரம் இழப்பார்கள்,சிலர் அங்கீகாரம் பெறுவார்கள் . அதனால்தான் இந்து
சமூக அமைப்பில் பாட்டாளி வர்க்கத் தொழிலாளார் ஒற்றுமை உணர்வை
காணமுடிவதில்லை. இந்திய மார்க்சியம் அவ்வாறு பாட்டாளிகளின் ஒற்றுமையை
உண்மையாக விரும்பியிருந்தால் வர்க்க முரண்பாடுகளுக்கு உண்மையில் தீண்டாமை
என பெயரிட்டிருக்கும். சாதிய அமைப்பு முறை என்பது வேலைப்பகிர்வு
,வேலைப்பிரிவு என்பது மட்டுமல்ல அது தொழிலாளர்களையே பிரிக்கிறது
என்கிறார் அம்பேத்கர். சாதி என்பது வேலையை மட்டும் பிரிக்காமல் வேலை
செய்பவர்களையும் பிரிக்கிறது. இந்தப் பிரிவினையானது மதச்சட்ட
அடிப்படையிலும் மனுதர்ம சாதிய அடிப்படையிலும் உயர்வு,தாழ்வு என்கிற
கற்பனை அடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ளது. எனவே சுரண்டப்பட்ட ஒரு ஏழை
சாதி இந்துவின் மீதுள்ள சாதி வெறியரின் சமூக அந்தஸ்து சமமாக இருக்க
முடியாது . பார்ப்பன வேலையாட்களுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் இடையே
உள்ள சமூக ஏற்றத்தாழ்வையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் . இந்த
ஏற்றத்தாழ்வை கொஞ்சமும் கவனிக்காமல் புறக்கணித்த பொதுவுடமை இந்திய
மார்க்சியம் இவற்றுக்கெதிரான சாட்டையை எடுக்காததையும், லெனினியப்
பார்வையில் இருந்து இந்திய பொதுவுடமை விலகியதையும் அம்பேத்கர்
கண்டிக்கிறார். "தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவத்திற்கு­ எதிராக அழகாகப்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் ஆனால் பார்ப்பானிய சாதி இந்துக்களுக்கு
எதிராக எந்த தொழிற்சங்க வாதியும் பேசியதை நான் கேட்டதில்லை (1938) என
அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அவரை பொருத்தவரை முதலாளித்துவம்
எந்தளவிற்கு சுரண்டல் சக்தியாக இருக்கின்றதோ அந்த அளவிற்கும் அதற்கும்
மேலாகவும் பார்ப்பானியமும் ஒரு சுரண்டல் சக்திதான்
என்கிறார்.ஏற்றத்தாழ்­வான இந்து சமூக அமைப்பானது தலித்துகளை அடிமைபடுத்தி
அவர்களை சுரண்டி எடுக்கிறது. பார்ப்பானியத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள
அடுக்குமுறை சூழலை எதிர்த்து பேசாதவரை இந்திய மார்க்சியம் காலத்திற்கு
நிற்காது அது படிப்படியாக தன் கோட்பாடுகளை இழந்து அழிந்துபோகும். இந்திய
மார்க்சியம் அவ்வாறான அழிவை விரும்பாது எனவும் நான் கருதுகிறேன்
என்கிறார் அம்பேத்கர். மேலும் இந்திய மார்க்சிய பொதுவுடமை சித்தாந்த
வாதிகள் மட்டும் மதத்தை பற்றியும்,கடவுளை பற்றியும் வெளியே உண்மையை பேச
ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இன்றைய சூழலில் (அதாவது 1929) ஒரு
தொழிலாளிகூட அவர்கள் பின்னால் செல்லமாட்டார்கள்-அம்­பேத்கர். இங்கே
காலச்சூழலுக்கு ஏற்ப மார்க்சியம் அது தன்நிலையிலிருந்து மாற்றிக்கொண்டு
தற்போதைய முதன்மை எதிர்ப்பு தீண்டாமை என்பதாக முன்னெடுத்துச் செல்லும்
பல்வேறு செயல்வடிவங்களையும், புரட்சி போராட்டங்களையும் முன்னெடுத்துச்
செல்லும் ஒரு முதன்மையான சமூக சிந்தனையை பெற்றிருக்கும் சக்தியாக
உறுவாக்கப்பட்டுவிட்ட­து என்பதையும் இந்தியத்தில் எல்லா பகுதிகளிலும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற அமைப்பை உறுவாக்கிவைத்துள்ளது­
என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

Friday, February 26, 2016

தந்தை பெரியாரின் "உண்மை"

தமிழ்ச் சமூகத்திற்கு தற்போதைய மிகப்பெரும் தேவையாக திராவிட பெரியாரை
முன்வைக்கலாம். தந்தை பெரியாரை இப்போது பேசாவிட்டால் மக்களின் அறிவு
மழுங்கடிக்கப்பட்டு ஏதேனுமொரு முதலாளியத்தை நோக்கி பயணிக்க வைத்துவிடும்.
கடைசிவரை அடிமை சமூகமாகவே தமிழ்ச்சமூகம் மாறும் சூழலிங்கே உறுவாக்க
இந்துத்துவ பார்ப்பானியம் முயற்சி செய்து கொண்டிருப்பதால் பெரியார்
நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறார். இன்றைக்கு சுமார் நூற்றாண்டுகளுக்கு
முன்னால் நடந்த பெரியாரின் இளம்பருவத்து நிகழ்வு அது, அப்போது
பெரியாருக்கு வயது இருபத்துநான்கு, தந்தை வெங்கடப்ப நாயக்கரின் மண்டி
வியாபாரத்தில் மகன் ராமசாமி பொறுப்பேற்றிருந்த காலத்தில், திருச்சியில்
ஒரு வழக்கிற்காக வக்காலத்தொன்றில் தந்தையின் கையெழுத்தை மகன் ராமசாமி
போடுகிறார். இதை அறிந்த எதிர்தரப்பு வழக்குரைஞர் அவர் சென்றவுடன் , தந்தை
மகன் ஆகிய இருவர் மீதும் "மோசடி" வழக்கு தொடுக்கிறார், தந்தையும் மகனும்
பயந்துவிடுகின்றனர். சேலம் வியராகவாச்சாரி, நார்ட்டன் துறை, முதலான
அன்றைய புகழ்பெற்ற வழக்குரைஞர்களையெல்லா­ம் சென்று அலோசனை கேட்கின்றனர்.
"கையெழுத்தை நான் போடவில்லை" என ராமசாமி சொல்லிவிடுவதுதான் ஒரேவழி"
எதற்காக வீணாக செலவு செய்கிறீர்கள் இன்று உப்புசப்பில்லா வழக்கென்று
அவர்கள் வழக்காட மறுத்து விடுகின்றனர். ஆனால் தந்தையும் மகனும் இப்படி
பொய்சொல்ல தயாராக இல்லை, சிறைக்கு செல்ல ராமசாமி தயாராகிறார். தான்
அணிந்திருந்த காப்பு, கடுக்கண், முதலியவற்றை கழற்சிவிட்டு தாடி
வளர்க்கிறார், களி உண்ணப் பழகுகிறார், வழக்கு நாளில் தந்தையும் மகனும்
குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர்.­ வழக்கை விசாரித்த உதவி கலெக்டர்
மேக்பர்லேண்ட் "எதிரி யாரையும் மோசம் செய்ய இக்காரியம் செய்யவில்லை" என
வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார். -இந்த சம்பவத்தை
விடுதலையில் (26.7.1952) இல் தந்தை பெரியார் பகிர்ந்து கொள்கிறார். தந்தை
பெரியார் பகிர்ந்து கொள்ள நேர்ந்ததன் பின்னணியும்,காரணமும்­
குறிப்பிடவேண்டியதாயி­ருக்கிறது.
நடக்க இருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு போராட்டம் ஒன்றில் பங்கெடுக்க
இருப்பவர்களின் பெயர் பட்டியலை அவர் விடுதலையில் வெளியிடுகிறார்.
வெளியானது முதலே கடுமேயான விமர்சனத்திற்கும் கண்டணத்திற்கும் ஆளாகிறது.
விமர்சகர்கள் "பெயர்களை கொண்டு போராட்டக்காரர்களை கைது செய்துவிட்டால்
பின் போராட்டம் நடப்பது எப்படி? மறைமுகமாக செய்ய வேண்டியதை நேரடியாகவே
செய்யச் சொல்கிறீர்களே! என்பது அவர்களின் கேள்வி.
அதற்கான பெரியாரின் பதில் என்பது தன் பொதுவாழ்வுக்கு வந்த அனுபவத்தை
பேசுகிறது. பெரியார் பதிலெழுதுகிறார் , எனது முப்பது வருட பொதுவாழ்வில்
ஒரு செயல்கூட, ஒரு போராட்டம் கூட நான் மறைவாய் நடத்தினது இல்லை , நடத்த
அனுமதித்ததும் இல்லை , என்மீது பொதுவாழ்வில் சுமார் இருபது வழக்குகளுக்கு
மேலும், என் சொந்த வாழ்வில் சில வழக்குகளும் நடந்திருக்கும் ,
ஒன்றுக்குக்கூட நான் எதிர் வழக்காடி இருக்க மாட்டேன் ஒப்புக்கொள்ளவும்
தயங்கியிருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.
பொது வாழ்வுக்கு "உண்மை" எந்தளவிற்கு அவசியமென்பதை தந்தை பெரியார் உணர்த்துகிறார்.

Thursday, February 25, 2016

ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகாவின் கேள்விகள்

ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ("பாரதமாதா" என மோடி
உச்சரித்த வார்த்தைகளை புறக்கணித்தவர்) ராதிகாவின் கேள்விகள் :
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமக்குழு உறுப்பினர் தோழர்
பிருந்தா காரத் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.
தமிழில்: "விஜயசங்கர் ராமச்சந்திரன்"

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராளுமன்றத்தில்
ரோஹித் வேமுலாவின் தற்கொலை தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துக்
கொண்டிருந்த நேரத்தில், வேமுலாவிற்கு நீதி வேண்டும் என்று கோரி
மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் டெல்லியிலுள்ள இந்தியா கேட்டில்
நடந்தது.
ரோஹித் வேமுலாவின் தாயார் ராதிகாவும் அங்கிருந்தார். ஸ்மிருதி இரானி
'"ஒரு குழந்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவது எவ்வளவு"
கண்டனத்திற்குரியது என்று ஸ்மிருதி இரானி மக்களவையில் பேசிக்கொண்டிருந்த
அதே நேரத்தில், ராதிகா வேமுலாவைப் பிடித்து தலைநகரின் மையப்பகுதியில்
இருந்த ஒரு காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்றனர் காவலர்கள்.
ஸ்மிருதி இரானியின் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சோகத்தில்
வாடும் தாயான ராதிகாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன:
"நான் ஸ்மிருதி இரானியைச் சந்தித்து 'எந்த அடிப்படையில் என் மகனை
தேசவிரோதி என்று அறிவித்தீர்கள் என்று கேட்கவேண்டும்? என் ரோஹித்தும்
மற்ற தலித் மாணவர்களும் தேசவிரோத தீவிரவாதிகள் என்று உங்கள் அமைச்சகம்
எழுதியிருக்கிறது."
"அவன் தலித் இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள். அவன் பொய் சான்றிதழ்
பெற்றுவிட்டான் என்று குற்றம் சாட்டினீர்கள். நீங்களே பொய்
சான்றிதழ்களைப் பெற்றதனால் மற்றவர்களும் அப்படி இருப்பதாக நீங்கள்
நினைப்பதாகச் நான் சொல்லலாமா? நீங்கள் என் மகனின் உதவித்தொகையை
நிறுத்திவிட்டீர்கள். பல்கலைக்கழகம் அவனை இடைநீக்கம் செய்யப்
பணித்தீர்கள்
"நீங்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்; ஆனால் கல்வியின் மதிப்பு
உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு தலித் பிஎச்டி ஆராய்ச்சி மாணவன் என்ற
கட்டத்தை அடைவது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு ஒருபோதும்
தெரியப்போவதுமில்லை, புரியப்போவதுமில்லை . அந்த நிலையை அடைவதற்குப் பட
வேண்டிய கஷ்டங்களையும், போராட்டத்தையும், கண்ணீரையும், தியாகத்தையும்
உங்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. நான் 26 வருடங்களாகக்
கட்டியதை நீங்கள் மூன்றே மாதத்தில் தகர்த்துவிட்டீர்கள். நான் என்
ரோஹித்தைப் பற்றிப் பேசுகிறேன். அவன் 26 வயதில் இறந்துவிட்டான்.
"ஸ்மிருதி இரானிக்கு நான் இதைச் சொல்லவிரும்புகிறேன். நான் மோடிஜியிடம்
இதைக் கேட்கவிரும்புகிறேன். "ஐந்து நாட்கள் நீங்கள் மவுனமாக
இருந்தீர்கள். பிறகு நீங்கள் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே "பாரதமாதா தன் மகனை
இழந்துவிட்டாள்"என்று சொன்னீர்கள்."
"உங்களுடைய சொற்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருந்தால் அந்த மகனை தேசத்
துரோகி என்று சொன்னவர் மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்கள்
அமைச்சர் சொன்னது சரியா? அப்படியென்றால் ஒரு தேசத்துரோகியை பிரதமர்
இந்தியாவின் மகன் என்று எப்படிச் சொன்னார். யார் இந்தக் கேள்விகளுக்கு
பதில் சொல்வார்கள்?"

ஏற்றுக்கொள்வேன் எதையும்

எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
நானில்லை

இருப்பது இலையுதிர்
காலமாதலால்
இலைகளை புறக்கணித்த
மரக்கிளைகளின் ஒத்த
அசைவுகளை
பெற்றிருக்கிறேன்
நான்

ஒவ்வொரு
விடியற் காலையிலும்
என் வாசலை
மறித்துக்கொண்டு
மடிந்து கிடக்கும்
சருகுகளின் மடியில்
தூங்கி எழுந்திருக்கிறேன்

எனக்கான பூக்கள்
எங்கே?
யாரை?
எப்போது?
சந்தித்தனவோ
தெரியவில்லை

ஆனாலும் மணம்
விசுகிறது
என் மனமுழுக்க
இருக்கும் ஏதோ ஒரு
தயக்கத்தை
வெளியேற்றியபடியே

எனக்குள்
சில மாற்றங்களை அவ்வப்போது
கிளப்பிவிடும் பூக்களே

கொஞ்சம்
சருகிலைகளின்
திசையில் மணத்தை
பரப்புங்கள்
இலையுதிரும்
பொழுதுதான் உங்களின்
மொட்டுகள்
அவிழ்க்கப்பட்டு
இதழ்கள்
விரிக்கப்படுகின்றது

பார்த்து பார்த்து
செதுக்கிய கல்சிற்பக்
கலை வடிவில் உளியும்
சுத்தியும் ஓரத்தில்
ஓரிடம் கேட்கிறது

பூக்களே தந்துவிடுங்கள்
தனக்கான இடத்தை
சருகுகளுக்கு

இப்பொழுது
எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
இருக்கிறேன்
அடுத்ததாக
பூக்களுக்கும்
சருகுகளுக்கும்
எப்படியும் ஓரிடத்தை
ஒதுக்கியாக வேண்டும்
தாய்மரம்

கொளுத்தும்
கோடையானது
துகிலுரித்து
வெட்ட வெளியில்
வெளிச்சமாக காட்டும்
தன் நிர்வாணத்தை
தாய்மரம் எப்படியும்
மறைக்க வேண்டுமே!

Wednesday, February 24, 2016

கொத்தடிமைகளின் அழுகை செவியை மூடிக்கொண்ட இந்தியம்

சுதந்திர இந்தியாவில் தலித்திய பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்
பழங்குடியினர்க்காக (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இல்
இயற்றப்பட்டது. அதே சுதந்திர இந்தியாவில் 1976ல் கொத்தடிமை முறை ஒழிப்பு
சட்டம் இயற்றப்பட்டது . இவ்விரண்டு சட்டங்களையும் இங்கே குறிப்பிட
வேண்டிய அவசியமிருக்கிறது. பெரும்பாலும் இந்திய சமூகத்தில்
பொருளாதாரமற்று, ஏழை உழைப்பாளர் வர்க்கங்களாக தினக்கூலி தொழிலாளர்களாக
தங்கள் உடலுழைப்பை முதலாளியர்களுக்கு கொடுத்துவிட்டு முதலாளியர்களால்
பிரயோகிக்கப்படும் எல்லாவித கொடுமைகளையும் அனுபவிக்கும்
பெரும்பான்மையானோர் தலித் மற்றும் பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள் .
அதாவது பட்டியலின மக்கள். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக
உறுவாக்கப்பட்ட இவ்விறு சட்டங்களும் மத்திய,மாநில மற்றும் நீதித்துறையால்
முறையாக நிறைவேற்றப்படுகிறதா?­ என்றால் முற்றிலுமாக சட்ட புறக்கணிப்புகளே
இங்கே நடைமுறையில் இருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது. இதற்கிடையே
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமையில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் புதிய சட்டம்
ஜனவரி.26 .2016 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. வன்கொடுமையால்
பாதிக்கப்பட்ட தலித்தின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக­்கான வழக்குகளை
விரைவுபடுத்துவதற்காக­ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், பிரத்யேக அரசு
வழக்குரைஞர்களை நியமிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி. / எஸ்.டி. மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்
திருத்த மசோதா (2015) நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு.
அந்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2015
டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அரசிதழில் கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியான
நிலையில் இன்னமும் முழுமையாக நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதே
மிகப்பெரும் அநீதியாக இருக்கின்றது. வன்கொடுமை சட்டம் அலைகழிக்கப்படுவது
போலவே இந்தியத்தில் கொத்தடிமை சட்டமும் மிக மோசமான நிலையில் மந்தமாகவும்
அல்லது செயல்படாமலும் இருக்கிறது என்பதற்கான சாட்சியாக மும்பை சம்பவம்
நமக்கு உணர்த்துகிறது. தலித் அருந்ததியர் சமுகத்தை சேர்ந்த மாரிமுத்து
என்கிற 15 வயது சிறுவனை மும்பை பகுதியில் கடந்த 7 மாதமாக மிட்டாய்
கம்பெனியில் கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்தி அச்சிறுவனை அடிமையாக
வைத்திருந்தது மட்டுமல்லாது , அந்த சிறுவனை மிட்டாய் கம்பெனி உரிமையாளர்
ரஞ்சித் தேவர் என்பவர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்து உடலில்
கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றி உள்ளார்.தற்போது இந்த சிறுவன்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். என்கிற
சம்பவம் உண்மையில் சக மனிதர்களுக்கு வலிக்க வில்லையா? அல்லது வலியானது
பழகிப்போனாதால் அப்படியே கடந்துபோக பழகிக்கொண்டார்களா? எனும் கேள்வி
நம்மிடையே எழுகிறது.
மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி வன்கொடுமை தடுப்புச்
சட்டத்திலும், கொத்தடிமைகள் தடுப்புச் சட்டத்திலும் கைது
செய்யப்படவேண்டியவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும் .
இம்மாதிரியான பல்வேறு சம்பவங்கள் இந்திய நாட்டில் நிகழ்ந்துக்கொண்டுதான­்
இருக்கிறது. இதனால் பாதுகாப்பற்ற நீதித்துறைமீது நம்பிக்கையற்ற
கொத்தடிமைகளின் நிலமை மிகமோசமாக இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு
ஆஸ்திரேலியா அமைப்பான வாக்ப்ரீடீ பவுண்டேஷன் நவீன அடிமை முறை குறித்து
162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 3
கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். எனவும் அவர்களில் 76 சதவீதம் ஆசியாவை
சேர்ந்தவர்கள். 3.78 சதவீதம் அமெரிக்கர்கள் எனவும் மிகமோசமான நவீன அடிமை
முறை பட்டியலில் "இந்தியா" 4வது இடத்தில் உள்ளது எனவும் இந்தியாவில்
மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக
கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும்
இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. இது உலக கொத்தடிமைகளில் 50
சதவீதம் ஆகும். எனவும் அதிர்ச்சி ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தது.
ஒருபுறம் சாதிய ரீதியான அடிமையையும், இன்னொருபுறம் பொருளாதார ரீதியிலான
அடிமையையும் அனுபவிக்கும் சாமானியர்களான கொத்தடிமைகளின் நிலைமை போகப்போக
மிகமோசமான சூழலுக்கு இட்டுச் செல்லும் என அச்சப்பட வைக்கிறது இன்றைய
கொத்தடிமைகளின் வாழ்வு நடவடிக்கைகள்.
ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள்
ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் .
அதாவது முதலாளித்துவத்தின் கருத்துக்களே இங்கே ஏற்கப்படுகிறது அது
சாமானியனுக்கு எதிராக,,, இந்திய அரசு இதற்கான தீர்வழிகளை கொண்டுவந்து
சட்டங்களை கடுமையாக்குவது மட்டுமில்லாது அச்சட்டங்களை உடனடியாக
செயல்படுத்தவும் முனைந்திட வேண்டும்.

நக்சல்பாரிகள் தீவிரவாதிகளில்லை, தோழர் சிவலிங்கத்தை விடுதலை செய்!

எங்கெல்லாம் அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறைகள்
கையாளப்படுகின்றதோ அங்கெல்லாம்
புரட்சி என்பது தவிர்க்க
முடியாதொன்றாக அமைந்துவிடுகிறது.
அந்த வகையில் அடிமை பட்டிருக்கும்
மக்களின் உரிமைக்காகவும்,
நீதிக்காகவும் போராடும் மிகப்பெரும்
மாண்பை பெற்ற இயக்கம்தான்
"நக்சல்பாரி" இயக்கம். பெரும்பாலும்
அதிகார வர்க்கங்கள் கட்டவிழ்க்கும்
வன்முறைக்கு அதே வன்முறை
தீர்வாகாது என்பது நாம்
கொண்டிருக்கும் கோட்பாடாக இருக்கிறது
என்பதால் அவ்வப்போது ஆயுதம்
ஏந்துதல் குறித்தான நக்சல்பாரிகள்
நடிவடிக்கைகளில் நமக்கு உடன்பாடு
இல்லையென வைத்துக்கொண்டு சில
விமர்சனங்களையும் அவர்கள் முன்
வைக்கிறோம். ஆனால் தீவிரவாதிகள்
எனும் வளையத்திற்குள்
நக்சல்பாரிகளை அடக்குவது
முறையற்ற பார்வையை
கொண்டிருக்கும். தொடர்ந்து
ஒடுக்கப்பட்ட பாட்டாளி தொழிலாளர்
வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடி
வரும் நக்சல்பாரிகளை தீவிரவாதிகள்
எனும் வளையத்திற்குள் யார்
கொண்டுவருகிறார்கள் எனப் பார்த்தால்
தன் முதலாளிய கார்ப்பரேட் பலத்தால்
இந்திய நாட்டின் பாட்டாளி தொழிலாளர்
வர்க்கத்தின் உழைப்பை சுரண்டுதல்,
அரசு அதிகாரத்தை கைப்பற்றுதல்,
கைப்பற்றப்பட்ட அரசு அதிகாரத்தை
பயன்படுத்தி சட்ட ஒழுங்கை
சீர்குலைத்தல், நீதித்துறையை
விலைக்கு வாங்குதல், எங்கும்
தனியார்மயத்தை தராளமாக்குதல்,
கல்வியை வியாபாரமாக்குதல் என
தொடர்ந்து தன் சர்வாதிகாரத்தை
நிலைநிறுத்தும் ஈனச்செயல் புரியும்
முதலாளிய பணமுதலைகள்தான்
நக்சல்பாரிகளை ஒரு தீவிரவாத
இயக்கமாக கட்டவிழ்த்து அதன் முதல்
தனக்கு எதிராக திரும்பும் வர்க்க
புரட்சியை அடக்கி ஒடுக்குகிறது.
இதனடிப்படையில் காலங்காலமாக
மக்களுக்காக போராடும்
நக்சல்பாரிகளின் விவசாய உரிமை
மீட்பு, நில அபகரிப்புக்கு எதிரான
முழக்க முன்னெடுப்பு, போன்ற
அதிதீவிர புரட்சிப் போராட்டங்களை
தீவிரவாதிகள் என
கொச்சைபடுத்துகிறது ஆளும் அதிகார
வர்க்கம்.
இந்நாட்டில் வெள்ளை ஆட்சிக்கு
ஆதரவாக வெள்ளை ஆட்சியாளர்களின்
உயரிய பதவி சுகங்களை அனுபவிக்க
முனைப்பு காட்டியவர்கள் போலியான
தேசபக்தியை கொண்டு இந்தியத்தை
பிளவுபடுத்த பல்வேறு திட்டங்களை
தீட்டி அதையும்
செயல்படுத்துபவர்கள்
தீவிரவாதிகளா? இல்லை மக்களுக்காக
போராடுபவர்கள் தீவிரவாதிகளா? என
நீதிமன்றங்கள் மறுபரிசீலனை
செய்யும் கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளார்கள். அவ்வாறு
தள்ளப்பட்ட நீதித்துறையானது தனது
கடமையிலிருந்து மீறி
மீண்டும் அநீதிகள் பக்கம் நிற்கின்றது
என்பதற்கு தோழர் சிவலிங்கம்
அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்
தண்டனையே சான்றாகவும் அமைந்து
விடுகிறது. 1980ல் வட ஆர்க்காடு
மாவட்டத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்
காலத்தில் நடந்த நக்சல் ஒழிப்பு என்ற
பெயரில் எம்ஜிஆர் மற்றும் தேவாரம்
ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
கந்துவட்டிக்காரர்கள். மக்கள் விரோதிகள்
கோலோச்சிய காலம். ஆதிக்க, அதிகார
வர்க்கத்தை எதிர்த்து. ஏழை
விவசாயிகளை, ஒடுக்கப் பட்ட
மக்களை அணிதிரட்டிப் போராடிய நக்சல்
அமைப்பினரை ஒடுக்க காவல்
துறையினர் தனியாக அனுப்பட்டனர்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை
பகுதியில் நக்சல் அமைப்பின் அரசியல்
செயல்பாடுகள் திவிரமாக இருந்த
காலம். அப்போது சிவலிங்கம்,
தமிழ்வாணன், நொண்டி பழனி,
சாமிநாதன் உள்ளிட்டோர் நக்சல்
இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக
இருந்தனர்.
கூடப்பட்டு பகுதியில் இரட்டை
கொலை மற்றும் பல்வேறு கொள்ளை
சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு
இருந்தாக அதிகார வர்க்கத்தால் வழக்கு
ஜோடிக்கப்பட்டு. தலைமறைவாக
இருந்த இவர்களை போலீசார் தீவிரமாக
தேடிவந்த நிலையில் கடந்த 1980ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி
ஏலகிரி கிராமத்தில் நக்சல் தலைவர்கள்
பதுங்கியிருப்பதாக திருப்பத்தூர்
தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்த
நிலையில்,
அந்த இடத்தை சுற்றிவளைத்து
சிவலிங்கம் உள்ளிட்ட 4 பேரை கைது
செய்தனர். சிவலிங்கத்தை தனியாக
காரில் ஏற்றிக்கொண்டு இன்ஸ்பெக்டர்
பழனிச்சாமி தாலுகா காவல் நிலையம்
நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
திருப்பத்தூர் கலைஞர் நகர் அருகே கார்
வந்தபோது மறைத்து வைத்திருந்த
வெடிகுண்டை காவல்துறை மீது வீசி
விட்டு அவர் தப்பிச் சென்றார். என்றும்
கூறப்பட்ட நிலையில் இந்த
சம்பவத்தை அடுத்து 'ஆபரேஷன்
அஜந்தா' தொடங்கப்பட்டு நக்சல்
இயக்கம் மீது தொடர் தாக்குதல்
நடந்தது.
இதில் பல்வேறு இடங்களில் 17
நக்சல்கள் இயக்கத்தினர்
சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால்
அதிர்ச்சியடைந்த நக்சல் இயக்க
தலைவர்கள் தமிழ்வாணன்,
சிவலிங்கம், சாமிநாதன், நொண்டி பழனி
உள்ளிட்டோர் ஆந்திர மாநிலத்துக்கு
தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் தமிழ்வாணன்,
சிவலிங்கம், சாமிநாதன் உள்ளிட்டோர்
கியூ பிரிவு போலீசாரால் கைது
செய்யப்பட்டனர். கடந்த 30
ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த
நக்சல் தலைவர்கள் கைது
செய்யப்பட்டதால் ஆபரேஷன் அஜந்தா
முடிவுக்கு வந்ததாக அதிகார வர்க்கம்
அறிவித்தது. நக்சல் வேட்டை என்ற
பெயரில் அப்போது காவல்துறை
காட்டாட்சியும்,மனித உரிமை
மீறல்களை எந்த அனுமானத்தாலும்
சொல்லிவிட முடியாது அந்தளவிற்கு
சர்வாதிகாரம் தன்எழுதமுடியாத
வன்முறையினை மக்கள்மீது
பிரயோகித்தது .சட்டம், நீதிமன்றம்
செயல்பாடுகள் அனைத்தும்
காவல்துறையின் கட்டுபாட்டுக்
கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். தோழர்
சிவலிங்கத்தை 2009ல் கைது செய்த
காவல் துறை. சிறையில்
அடைத்தது.சிறையில் இருந்து
பிணையில் வெளிவந்தார் தோழர்
சிவலிங்கம்.
பிணையில் வந்து எழுபது
வயதாகியும் மக்கள் மீதான பற்றுதல்
குறையாத போராளி
சிவலிங்கம்.அண்மையில்கூட
பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு
எதிராக போராடி காவலர்களின்
குண்டாந்தடிகளுக்கு இலக்கானவர்
அப்படிப் பட்ட மக்கள் போராளியை
நீதிமன்றங்கள் முறையாக
வழக்குகளை நடத்துவதும்
இல்லை,வழக்கினையும் சரியாக
விசாரிப்பதும் இல்லை நீதியின்
கைகளும் கண்களும் எப்போதும்
கட்டியே இருக்கின்றன. நீதியின்
பெயரால்,சட்டத்தின் பெயரால் ஏழை
மக்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள் சிறையில்
அடைப்பதும் இயல்பாகிவிட்டது.
அதிகார வர்க்கத்தின்
செயல்பாட்டாளர்களாக மாற்றிக்கொண்ட
நீதிமன்றம் தோழர் சிவலிங்கத்திற்கு
ஐந்து(ஆயுள்) வாழ்நாள்
தண்டனையும் பத்து ஆண்டுச் சிறைத்
தண்டனையும் வழங்கியுள்ளது. இந்த
நீதிக்கு எதிரான தீர்ப்பை மாண்பமை
கொண்ட நீதிமன்றம் மறுபரிசீலனை
செய்து தோழர் சிவலிங்கத்திற்கு
வழங்கப்பட்ட ஐந்து ஆயுள்
தண்டனையை திருப்ப பெற்றுக்கொள்ள
வேண்டுமென்று உரிமை முழக்கம்
இங்கே முன்வைக்கப்படுகிறது.

ஜெயா அடிமைகளுக்கு குத்திய பச்சை வெளுக்குமா?

தமிழகத்தை ஆளும் ஜெயா தலைமையிலான அதிமுக அரசானது வருகின்ற 2016 தேர்தலில்
எப்படியும் தன் இ(ற)ருப்பை தக்கவைத்துக்கொள்ள
படாதபாடுபட்டுக்கொண்ட­ிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதற்கான
பல்வேறு விளம்பர யுக்திகளை அதுவும் செய்துக்கொண்டு வருகிறது, அதில்
முக்கியமானதாக கருதப்படுவது ஜெ உருவப்படம் பொதித்த ஸ்டிக்கர்.
கிட்டத்தட்ட விளம்பர உலகில் கார்ப்பரேட்டுகளையே மிரளவைத்த இந்த ஸ்டிக்கர்
ஒட்டும் விளம்பர யுக்தியில் தமிழக மக்கள் மட்டும் கவர்ந்திழுக்க
மாட்டார்களா என்ன! ஜெயாவின் இந்த ஸ்டிக்கர் விளம்பரம் உச்சத்தை தொட்ட
நிகழ்வுகளும் இதே தமிழ்நாட்டில் நடந்தேறியும் விட்டது. அதாவது இறந்துபோன
மனித பிணத்தின் மேலேயே ஜெயா உருவம் பொதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தான்
விளம்பர சாம்ராஜ்யத்தின் தாதா எனவும் பறைசாற்றிக்கொண்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும் தற்போது அதிமுக மேற்கொண்டிருக்கும் விளம்பர
யுக்திக்கு கடும் வரவேற்பாம்,,, யார் சொன்னது? அக்கட்சி தொண்டர்களே
தொண்டைக்குழியில் நீர்வற்ற புகழாரம் சூட்டுகிறார்கள். அப்படியென்ன புது
யுக்தி என்று ஆச்சர்யப்படலாம், அதற்கு அவசியமில்லை எல்லாம் பழைய பஞ்சாங்க
யுக்திதான், பழையது என்றாலும் இப்போதைக்கு புதுப்பொலிவு பெற்றிருக்கும்
"பச்சை குத்துதல்" ஜெயாவின் அடிமைகளுக்கு ஸ்பெஷல்தான்,,, காரணம் அவர்கள்
அடிமைகள் என்பதை அவர்கள் வலது கையில் குத்தப்பட்ட பச்சையே தெளிவாக
காட்டிடுமாம்.(ஏன் இடது கையில் குத்தக்கூடாதா? என்றெல்லாம்
கேட்கக்கூடாது). ஆனால் ஒன்று ஏதோ இந்த ஆண்டு மட்டும் ஜெயா தலைமையில்
பச்சை குத்தப்படுவதாக பல்வேறு தரப்பினர்கள் விமரினம் வைக்கிறார்கள். அது
முற்றிலும் தவறு ஒவ்வொரு ஆண்டும் ஜெயாவின் பிறந்தநாளன்று அவரின் அதிமுக
கட்சி சார்பாக தமிழக அடிமைகளுக்கு கட்சி சின்னமோ, கட்சிக்கொடியோ பச்சை
குத்தப்படும் . கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து அந்த முறை மாற்றப்பட்டு
ஜெயா உருவம் கொண்டு பச்சை குத்தப்பட வேண்டுமென்று அவரின் தலைமையிலான
சட்டமன்ற உறுப்பினர் அடிமைகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது, அடிமைச்
சட்டமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் ஜெயா
அவர்களின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் ஜெயாவின் பிறந்தநாளை முன்னிட்டு
அந்த சட்டமன்ற அடிமைகளை அதிகார நாற்காலியில் அமரவைத்த வாக்காளர்
அடிமைகளுக்கு ஜெயாவின் உருவம் பொதித்து பச்சை குத்தும் நிகழ்ச்சியை
மிகப்பெருஞ் செலவில் நிகழ்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு
ஆண்டும் பச்சைக் குத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்க
வேண்டுமாம், மேலும் தன் தலைமையிலான அதிமுக கட்சி நீர்வாக அடிமைகளில் யார்
அதிக வாக்காளர் அடிமைகளை தேடிப்பிடித்து பச்சை குத்த வைக்கிறார்களோ
அவர்களுக்கு தன்கட்சி பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்த ஆளும் அதிமுக
ஜெ தலைமையிலான பச்சை குத்துதல் நிகழ்சி நான்கரை ஆண்டுகளில் இல்லாத
பரபரப்பு மற்றும் சர்ச்சைகளை இவ்வாண்டு பெற்றிருக்க காரணம் 2016 சட்டமன்ற
தேர்தல் நெருங்கிவிட்டபடியாலு­ம் மேலும் சென்ற 2015ம் ஆண்டு குறைந்த
வாக்காளர் அடிமைகளுக்கு மட்டுமே பச்சை குத்தப்பட்டது என்பதாலும்,
சட்டமன்ற, பாராளுமன்ற, பொறுப்பு நிர்வாக அடிமைகள் சரிவரி தன் கட்டளையை
நிறைவேற்றத் தவறியதன் காரணமாக நேரடியாகவே ஜெயா தலையிட்டு பச்சை குத்தல்
நிகழ்சியை மேற்பார்வையில் கொண்டுவந்ததன் காரணமாகவே இன்றைய அடிமைச்சமூகம்
அது பற்றி பேசத் தொடங்கியிருக்கிறது. மற்றபடி மேற்கண்ட காரணங்களை
கொண்டிருக்காத நிலையை அதிமுக பெற்றிருந்தால் வழக்கமாக அடிமைகளுக்கு பச்சை
குத்தப்பட்டு "போ நாயே நீயினை ஜெவின் அடிமையென" சர்வசாதாரணமாக
கடந்திருக்கும். இவ்வாண்டு ஜெவின் பிறந்த நாளை முன்னிட்டு 668 பேரின்
வலது கையில் ஜெவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி
நடைபெற்றாகிவிட்டது. ஆகவே அந்த 668 பேரும் இனி வாழ்நாள் முழுக்க ஜெவின்
அடிமைகளாக இருக்கக் கடவது. இதிலொரு முக்கியமான விடயம் தென்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களை அடிமைபடுத்துவதிலும் சர்வாதிகார பார்ப்பானிய
அதிகாரத்தை திணிப்பதிலும் ஜெவிற்கு மிகப்பெரும் மனமகிழ்ச்சி அல்லது ஆனந்த
பூரிப்பு பெற்றுவிடுகிறார் ஜெ , திருத்தம் இல்லாத அடிமை வாழ்வு
திருவிழாவில் தொலைந்த பொம்மை
நம் தமிழக அடிமை மக்கள்.

RSS, BJP, இன் அடுத்த திரிபுவாதம் - இயேசு கிறிஸ்து இந்துவாம், அதும் தமிழராம்,

இந்திய நாட்டில் தன் சர்வாதிகார ஆட்சியினை நடத்திக்கொண்டிருக்கு­ம் RSS
இன் வளர்ப்பு பிள்ளையான BJP யின் அரசியலை எப்போதும் திரிபுவாத அரசியல்
என்று விமர்சனம் செய்வதில் தவறேயில்லை , இந்நாட்டின் அமைதியை
சீர்குலைக்கும் அத்தனை வழிகளையும் நன்கு கடைபிடித்து அதற்கான புரட்டு
வரலாறுகளை எழுதுவதிலும், போலியான புனைவுச் சம்பவங்கள் மற்றும்
காணொளி,புகைப்படங்களை­ வெளியிடுவதிலும் BJP யை வெல்ல யாராலும் முடியாது
(தமிழ்நாட்டு ஜெ வைத் தவிர) அந்தளவிற்கு தன்பக்க புலமையில்
கைத்தேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு , எப்போதெல்லாம் ஒரு சமூக எழுச்சியை
இந்திய மண் சந்திக்கின்றதோ அப்போதெல்லாம் "பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்"
என்கிற கோஷத்தையும், கோட்சைவை வைத்து காந்தியை தீர்த்துக்கட்டிய அதே
ரத்தகறை படிந்த கைகளால் போலியாக "தேசபக்தி" கொண்டு காவிக்கொடியை
பிடித்துக்கொண்டும் எங்கும் அடாவடி அட்டூழியும் செய்துக்கொண்டும் திரிவதே
தன் அரசியல் பாதையென ஒரு கணக்கியலை வைத்திருக்கும் இந்துத்துவ
பார்ப்பானிய சாதி ஆதிக்க RSS ம் BJP யும் இந்த நாட்டின் பெரும்
குற்றவாளிகளாகவே பார்க்கப்பட வேண்டும். "இன்றைய மாணவர்கள் நாளைய
புரட்சியாளர்கள்" என்பதை எப்போதும் இடதுசாரியம் தன் லட்சிய கொள்கை
கோட்பாடாகவே வைத்திருக்கின்றது. அதனை நன்கு அறிந்த RSSம் BJP யும்
மாணவர்களின் அதிதீவிர புரட்சி முன்னெடுப்பை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட
துடித்து ரோகித் வெமுலாவை கொலைசெய்து, கன்னையாக குமாரை (JNU)ஆதாரமற்ற தேச
துரோக வழக்கிட்டு, சோனி சோரி எனும் பெண்போராளி மீது ஆசிட் வீசி , உமர்
காலித் எனும் (JNU) இசுலாமியத் தோழன் மீது தேசவிரோதி எனும் குற்றம்
சாட்டி தொடர்ந்து மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை தன் ஆளுமை அதிகார
பலத்தோடு செய்துவருகின்றது. RSS இன் கிளையான ABVP இல் மாணவர்கள்
பெரும்பாலும் மோடி அரசின் இந்துத்துவ பார்ப்பானிய திரிபுவாதத்திற்கான
புதிய வரலாறுகளை எழுதுவதற்காக தங்கள் கல்வியை அடகு வைத்திருக்கிறார்கள்
என்பதே இங்கே தெளிவான விஷயம். அதுமட்டுமில்லாது தோழர் கன்னையாவை
காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போதே RSS ஐ சேர்ந்த மூன்று
வழக்குரைஞர்கள் மிகக்கடுமையாக கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தியதோடு
அல்லாமல் நேரடியாக "கன்னையாவை கொலை செய்வோம்" என மிரட்டுகிறார்கள்
என்றால் இந்திய தேசத்தின் முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி எந்தளவிற்கு
தீவிரமடைந்திருக்கிறத­ு என்பதை மிகத் தெளிவாக உணர முடியும், இவற்றோடு
மட்டுமே நின்றுவிடவில்லை இந்துத்துவ பார்ப்பானிய பாசிச ஆட்சி, தற்போது
புதிதாக ஒரு திரிபுவாத வரலாற்றுப் புனைவினை கையிலெடுத்திருக்கிறா­ர்கள்.
அதுவும் சிறுபான்மையின கிருஸ்த்துவ மக்களின் மீதான மிகப்பெரும் கசப்பினை
தெளிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன­
அதுவும் தமிழ்நாட்டில்,,, வரலாற்றை திரித்து எழுதுவதில் புகழ்பெற்று
விளங்கும் சங்பரிவார் கும்பல், அடுத்த கட்டமாக ஏசுகிறிஸ்துவை இலக்காக
கொண்டு களமிறங்கியிருக்கிறது­. அதன் ஒரு பகுதியாக ஏசு கிறிஸ்து பிறப்பால்
இந்து என்றும் அவரது தாய்மொழி தமிழ் என்று திரித்து புத்தகம்
வெளியிட்டிருக்கின்றன­ர். இது பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
இருக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லாத
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் தாய்
அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது
கணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் கிறிஸ்ட் பாரிசா என்ற புத்தகத்தை வரும்
26ம் தேதி வெளியிட உள்ளார். மெமோரியல் என்ற அமைப்பு வெளியிடும் இந்த
புத்தகத்தில் ஏசு கிறிஸ்துவின் பெயர் கேசவ் கிருஷ்ணா என்று
தெரிவித்துள்ளார். அது தமிழ் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
அவர் விஸ்வகர்மா சாதியைச் சேர்ந்த ஆசாரி குலத்தில் பிறந்தவர் என்பதும்
இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும் தச்சு தொழில்
மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. ஏசுவின் தந்தை பெயர்
சேசப்பன் என்றும் அதுவே காலப்போக்கில் மறுவி சேஷப் என்றும் ஜோசப் என்றும்
அழைக்கப்படுகிறது என்று புதிதாக ஒரு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளத­ு.
இது மட்டும் இல்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு தனது யோகத்திறமையால்
உயிரோடு இருந்தார். மேலும் சகதோழர்களை மீட்டு சித்த வைத்திய முறையில்
சிலுவை காயங்களை குணப்படுத்தினார். பிறகு இறுதி காலகட்டங்களில்
இமயமலைப்பகுதியில் சிவ பெருமானை நோக்கி ஏது தியானம் செய்து வந்ததாக
கூறப்படுகிறது. 3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவிற்கு சிவபெருமான்
காட்சியளித்து தார் என்றும் பின்னர் ஏசுவை ஈஷாநாத் என்று முனிவர்கள்
அழைத்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன்49 வது வயதில் உடலை விட்டு
ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று முக்தியடைந்தார் என அந்த புத்தகத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம்
வெளியிடப்படுவதற்கு தற்போதைய சூழலில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர்
கூறுகையில் 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதல் எந்த
உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும். ஆனால் இது
புதிது கிடையாது ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகத்தையே மாராத்தியில்
வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த
கிறிஸ்தவ அமைப்புகள் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு மறுப்பு
தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில் கிறிஸ்தவர்களின்
மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும் யூகத்தின் அடிப்படையில்
புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது­ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் – இன் சேவகராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர
மோடியும் இதே பாணியில்தான் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள்
40வகையான விமானங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர் என்று
கூச்சநாச்சமின்றி விஞ்ஞானிகள் மாநட்டிலேயே கூறியிந்தது
குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 23, 2016

ஒரு ஊடகவியலாளரின் கடிதம் - கிழிக்கப்பட்ட சர்வாதிகார முகம்

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா
கடிதம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை
மாணவர்களின் கனவுகள், படிப்பு
மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும்
விதமாக செய்திகளை தொடர்ந்து
வெளியிட்ட ஜீ (zee news) செய்தித்
தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து தனது வேலையை
ராஜினாமா செய்திருக்கிறார்
ஊடகவியலாளர் விஷ்வா தீபக்.
அவருடைய ராஜினாமா கடிதம்
தமிழில்,
ஊடகவியலாளர்களாகிய நாம் பிறரை
கேள்வி கேட்கிறோமே அன்றி, நம்மை
நாம் கேள்வி கேட்பதே இல்லை. பிறரின்
கடமைகளை தீர்மானிக்கும் நாம்
நம்முடைய கடமைகளை குறித்து
கவலை கொள்வதில்லை. நாம்
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக
அறியப்படுகிறோம். ஆனால்,
நம்முடைய நிறுவனங்களோ,
சிந்தனையோ, நம் செயல்முறைகளோ
ஜனநாயகப்பூர்வமாக இருக்கிறதா?
இந்த கேள்வி என்னுடையது
மட்டுமில்லை, இது அனைவராலும்
கேட்கப்பட்டுவரும் கேள்விதான்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
மாணவர் சங்க தலைவர் கன்ஹையா
குமார் மீது தேசியவாதத்தை
முன்வைத்து நடத்தப்பட்ட ஊடக
விசாரணைகள், அவரை தேசவிரோதி
என்று தீர்ப்பெழுதியது, இது மிகவும்
ஆபத்தான போக்காகும்.
ஊடகவியலாளர்களாக அதிகாரத்தை
கேள்வி கேட்பதுதான் நம் கடமை,
மாறாக அதிகாரத்தோடு கைகோர்த்து
நடப்பது கிடையாது. இந்த
கேள்விகள்தான் ஊடகவியலில் நிகழ்ந்த
அழகான, நல்ல பல சாதனைகளை
நிகழ்த்தியிருக்கிறது.
கேள்வி கேட்பதும், கேட்காமல்
இருப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட
விருப்பம் சார்ந்தது. ஆனால், என்னைப்
பொறுத்தவரை ஒருவருடைய தனிநபர்
வெளி என்பது அரசியலானதுதான்.
தன்னுடைய பணி சார்ந்த கடமை
அல்லது சமூக-பொருளாதாரக்
கண்ணோட்டம் ஆகிய இரண்டில்
ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய
காலம் என்பது வந்துவிட்டது. நான்
இரண்டாவதைத் தேர்வு
செய்திருக்கிறேன், ஜீ செய்தி
தொலைக்காட்சி நிர்வாகத்தோடு இதனை
முன்னிட்டு எழுந்திருக்கும் முரண்
காரணமாக எனது பணியை ராஜினாமா
செய்கிறேன்
தங்களுடைய கனவுகளுக்காக,
தொடர்ந்து போராடி தியாகம் செய்ய
தயாராக இருக்கிற லட்சக்கணக்கான
கோடிக்கணக்கான கன்ஹையாக்களுக்க
ும், ஜேஎன்யூ மாணவர்களுக்கும்
எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.
அன்பிற்குரிய ஜீ நியூஸ்,
ஒரு வருடம் நான்கு மாதங்கள் இந்த
நிறுவனத்தோடு பின்னிப் பிணைந்து
வேலை பார்த்த பின்பு, இன்று என்னை
இந்த நிறுவனத்திலிருந்து விலக்கிக்
கொள்வது என்ற முடிவுக்கு வர
நேர்ந்திருக்கிறது. இந்த முடிவை நான்
முன்னரே எடுத்திருக்க வேண்டும்
என்பது தெரியும். ஆனால்,
இப்போதேனும் இந்த முடிவை
எடுக்காவிட்டால், என்னை நானே
மன்னிக்க முடியாது
நான் இப்போது சொல்லப்போவது
உணர்ச்சிவசப்பட்டோ, கோபத்திலோ,
எரிச்சலிலோ சொல்வதல்ல; ஆழ்ந்து
சிந்தித்துதான் இதை சொல்கிறேன். நான்
ஒரு ஊடகவியலாளன் மட்டுமல்ல,
இந்த நாட்டின் குடிமகனும் கூட. இந்த
நாட்டின் பெயரால் குருட்டு
'தேசியவாதம்' எனும் நஞ்சு
பரப்பப்படுகிறது
ஒரு குடிமகனாகவும், வேலை சார்ந்த
அறத்தின் அடிப்படையிலும் இந்த
நஞ்சு மேலும் பரவாமல் இருக்கச்
செய்வது எனது கடமையாகும். இது,
சிறு படகில் பேரலைகளை கடக்கும்
முயற்சி என்று நானறிவேன்,
ஆனாலும், இதை நான் தொடங்க
விரும்புகிறேன். குருட்டு
தேசியவாதத்தை பரப்புரை செய்து,
கன்ஹையா சொல்லாததைச் சொன்னது
போல தொடர்ந்து பரப்பி வந்த ஜீ நியூஸ்
தொலைக்காட்சியின் செயல்பாடுகளுக்க
ு எதிர்ப்பு தெரிவிக்கவே எனது
வேலையை ராஜினாமா செய்கிறேன்.
இதில் தனிப்பட்ட நலன் என்பது
கொஞ்சம் கூடக் கிடையாது - பணி
சார்ந்த அறம், சமூக பொறுப்பு மற்றும்
நாட்டின் மீதான பற்றின்
அடிப்படையில்தான் இதை நான்
செய்கிறேன். இந்த மூன்று
அம்சங்களில் ஜீ நியூஸோடு
இணைந்திருந்த காரணத்தினால், பல
தருணங்களில் நான் தோல்வி
அடைந்திருக்கிறேன்.
திரு. நரேந்திர மோடி பிரதமரான
காலத்தில் இருந்து, நாட்டின் ஒவ்வொரு
செய்தி அறையும் மதவாதத்தை
கண்டு உணர்ந்து வருகிறது என்பது
உண்மைதான். ஆனால், இந்த
நிறுவனத்துடன் இந்த போக்கை
ஓப்பிடும்போது, அது கூடுதல்
ஆபத்தானதாக இருக்கிறது. இவ்வளவு
பெரிய சொல்லை பயன்படுத்துவதற்கு
மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால்,
இதைவிட பொருத்தமான சொல் இல்லை.
ஒவ்வொரு செய்திக்கும் 'மோடி கோணம்'
கொடுத்து, மோடி அரசின்
செயல்திட்டத்திற்கு ஊக்கம் சேர்க்க
வேண்டிய தேவை எங்கிருந்து
எழுகிறது?
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
நாம் இன்னும் ஊடகவியலாளர்களாக
இருக்கிறோமா? என்ற சந்தேகம்தான்
எழுகிறது. நாம் அரசின்
ஊதுகுழல்களாக மாறிவிட்டோம்
என்றுதான் நினைக்கத் தூண்டுகிறது.
எனக்கும் சேர்த்து மோடிதான்
இந்நாட்டின் பிரதமர். ஒரு
ஊடகவியலாளனாக இந்த அளவு
மட்டும்தான் மோடி புராணத்தை ரசிக்க
முடியும். என்னுடைய மனசாட்சி
எனக்கு எதிராகவே போர் தொடுக்க
தொடங்கிவிட்டது. என்னை பற்றியே
எனக்கு எரிச்சல் வரத் துவங்கிவிட்டது.
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும்
மோடி அரசை போற்றி புகழும் ஒரு
செயல்திட்டம், மோடி அரசை
விமர்சிப்பவர்களை காலி செய்யும்
யுக்தி. இவையனைத்தும் என்ன?
இவற்றை பற்றி நின்று நிதானித்து
சிந்தித்தால் பைத்தியம் பிடித்ததைப்
போல உணர்கிறேன்
நாம் ஏன் இவ்வளவு
கேவலமானவர்களாக,
அறமில்லாதவர்களாக, பூமியின்
மேலுள்ள அழுக்குகளாக மாறிப்
போனோம்? இந்தியாவின் சிறந்த ஊடகக்
கல்வி நிலையத்தில் படித்துவிட்டு
ஆஜ் தக், பிபிசி மற்றும் ஜெர்மன் அலை
எனப்படும் ட்யூட்ஸ் வெல் போன்ற
உயர்தர நிறுவனங்களில் பணி
புரிந்துவிட்டு, நான் ஈட்டிய
நற்பெயரை எல்லாம்
'ச்சீ' (அழுக்கடைந்த) ஊடகவியலாளன்
என்னும் சொல் சிதைக்கிறது.
நமது நேர்மை கந்தலாகி கிடக்கிறது.
இதற்கு யார் பொறுப்பாவது?
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
டெல்லி முதலமைச்சர் அர்விந்த்
கெஜ்ரிவாலைக் குறித்து தொடர்ந்து
எதிர் பிரச்சாரம் நடந்து வருகிறது ஏன்?
அதிகாரம் மற்றும் தண்ணீர், கல்வி
குறித்து அவர் கொண்டிருக்கும்
நிலைப்பாடுகளை மட்டுமில்லாமல்,
அவர் செயல்படுத்த நினைக்கும்
திட்டங்களையும் தீவிரமாக
விமர்சிப்பது ஏன்? ஒரு
ஊடகவியலாளனாக கெஜ்ரிவாலோடு
முரண்படுவதற்கு அனைத்து
உரிமைகளும் ஒருவருக்கு உண்டு.
ஆனால், கோடாரியால் தாக்குவது
உரிமை அல்ல. இதுவரை
கெஜ்ரிவாலுக்கு எதிராக வந்த
செய்திகளைத் தொகுத்தால், பல
பக்கங்களை தாண்டும்.
பார்வையாளரை பொறுத்தவரையில்
சார்பில்லாமல், நேர்மையோடு
செய்திகளை எடுத்துச் செல்லும்
அடிப்படை அறம் என்பதெல்லாம்
என்னவானது, ஏதாவது
மிஞ்சியிருக்கிறதா?
இதேபோன்ற அணுகுமுறைதான் தலித்
ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா
விஷயத்திலும் நிகழ்ந்தது. முதலில்
நாம் அவரை தலித் ஆய்வு
மாணவர்கள் என்றோம், பின்னர் தலித்
மாணவர் என்றோம். இப்படியெல்லாம்
அழைத்தது கூட, செய்திகள்
நேர்மையாக சென்றிருந்தால்
பிரச்சினையாக இருந்திருக்காது.
ரோஹித் வெமுலாவை தற்கொலைக்குத்
தள்ளியதில் ஏபிவிபி தலைவர்கள்
மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா
போன்றவர்களுக்கு இருக்கும் பங்கைக்
குறித்து விசாரணை நடந்து வருகிறது
(என்ன சிக்கல் என்பது தெள்ளத்
தெளிவாக தெரிந்தது). ஆனால், ஊடக
நிறுவனமாக பிரச்சினையை நீர்த்துப்
போகச் செய்வதில்தான் முனைப்பாக
இருந்தோம். இதன் மூலம், யார் மீது
கேள்வி எழுப்பப்பட்டதோ, அவர்களை
காப்பாற்றும் வேலையை பார்த்தோம்.
"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற
முழக்கமே இல்லாத காணொளியை
மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி பற்ற
வைக்க முனைந்தோம். இருட்டில்
வெளிவந்த குரலை எப்படி கன்ஹையா
மற்றும் அவருடைய நண்பர்களின்
குரல் என்று நம்பினோம்.?
முன்முடிவோடு அணுகியதால் நமது
காதுகளுக்கு 'பாரதீய கோர்ட் ஜிந்தாபாத்'
என்பது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என
கேட்டது
சகிப்புத்தன்மை பற்றிய விவாதம்
மேலெழுந்த போது, மதிப்பிற்குரிய
எழுத்தாளர் உதய் பிரகாஷ் மற்றும்
அனைத்து மொழிகளின் முக்கியமான
எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை
திருப்பி கொடுத்தனர். எப்போதும் போல
நாம் அவர்களை பற்றி கேள்வி
எழுப்பினோம். நமது மொழியின் பெருமை
அவர். உதய் பிரகாஷை எடுத்துக்
கொள்ளுங்கள், பரந்த வாசகர் வட்டம்
கொண்ட அவரது எழுத்தில் நம்
வாழ்க்கை இருக்கும், நம் கனவு
இருக்கும், நம் போராட்டங்கள் இருக்கும்.
ஆனால், விருதை திருப்பித் தரும்
அவரது எதிர்ப்புணர்வு என்பதை
பணம் வாங்கிக் கொண்டு செய்யும்
செயலாகவே பரப்புரை செய்தோம்.
அந்த காலகட்டம் மிகவும் வலி
தருவதாக இருந்தது.
ஆனால், இது எவ்வளவு நாளைக்கு,
ஏன் இது தொடர வேண்டும்?
என்னுடைய உறக்கமே தொலைந்து
போயிற்று, நான் கடுமையான மன
உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்..
என்னுடைய குற்றவுணர்ச்சியின்
விளைவாகத்தான் இப்படி இருக்கிறேன்.
தேசத்துரோக முத்திரை
குத்தப்படுவதைவிட ஒருவருக்கு
வேறெது இழிவாக இருக்க முடியும்?
இது ஒருபுறம் இருக்க, அப்படி ஒருவர்
மீது முத்திரை குத்துவதற்கு நாம்
யார்? நீதிமன்றத்தின் வேலைதான்
என்ன?
கன்ஹையாவையும், ஜேஎன்யூவின்
பிற மாணவர்களையும் தேச விரோதிகள்
என்று முத்திரை குத்துவதில் நாம்
வெற்றியடைந்துவிட்டோம். ஆனால்,
நாளை ஏதாவதொரு மாணவர்
கொல்லப்பட்டால், யார் பொறுப்பு?
சிலரின் கொலைகளுக்கு மட்டுமல்ல,
சில குடும்பங்களின் இருப்புக்கும்
அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறோம்.
கலவரங்களை மட்டுமல்ல
உள்நாட்டுப் போரையே உருவாக்கும்
அளவுக்கு நஞ்சை மனித மனங்களில்
விதைத்து வைத்திருக்கிறோம். இது எந்த
வகையான நாட்டுப்பற்று? எந்த
வகையான ஊடகவியல்?
நாம் என்ன செய்யவேண்டும் என்று
தீர்மானிப்பதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்-
இன் ஊதுகுழல்களா நாம்?
பாகிஸ்தான் வாழ்க என்ற குரல்
இல்லவே இல்லாத காணொளியை
பலமுறை ஒளிபரப்பினோம். இருட்டில்
கன்ஹையாவின் குரல்தான் கேட்டது
என்று உறுதியாக எப்படி நம்ப
முடிந்தது? பாரதீய கோர்ட் ஜிந்தாபாத்
என்னும் முழக்கத்தை பாகிஸ்தான்
ஜிந்தாபாத் என்று திரித்து, அரசின்
செயல்திட்டத்திற்கு அடிபணிந்து, சில
இளைஞர்களின், குடும்பங்களின்
கனவுகளை சிதைக்கும் நிலைக்கு
சென்று இருக்கிறோம். காவல்துறை
தனது விசாரணையை முடித்து,
முடிவை சொல்லும் வரை
காத்திருந்திருக்கலாம்.
உமர் காலித்தின் சகோதரியை
வண்புணர்ச்சி செய்துவிடுவோம், ஆசிட்
வீசி விடுவோம் என தொடர்ச்சியாக
மிரட்டப்பட்டு, துரோகியின் சகோதரி
என்று முத்திரை குத்தப்பட்டதில்
நமக்கு பங்கில்லையா? ஒன்றுக்கு
நூறு முறை தேசத்திற்கு விரோதமாக
எந்த முழக்கத்தையும்
ஆதரிக்கவில்லை என கன்ஹையா
கூறும்போது, நாம் பற்ற வைத்தது
பாஜக அரசின் திட்டத்திற்கு உதவியாக
இருந்ததால், எவருமே
கன்ஹையாவின் குரலை
கேட்கவில்லை. கன்ஹையாவின்
வீட்டை பார்த்தீர்களா? அது வெறும்
வீடல்ல, இந்நாட்டின் விவசாயிகள்
மற்றும் சாதாரண மக்களின் துயர
வெளிப்பாடு. இந்நாட்டில்
புதைக்கப்படும் எண்ணற்ற
கனவுகளின் புதைவிடம் அது.
ஆனால், நாம் இவற்றையெல்லாம்
பார்க்க கண்ணற்றவர்களாகவ
ே இருக்கிறோம்!
இதை சொல்வதற்கு எனக்கு மிகுந்த
வலியாகத்தான் இருக்கிறது, ஆனால்,
சொல்ல வேண்டும், நான் வசிக்கும்
பகுதிகளிலேயே இதுபோன்ற ஏராளமான
குடிசைகள் இருக்கின்றன.
இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கை
என்பது உண்மையாகவே துயர்மிக்கது,
அசிங்கமானது. விளைவுகளை குறித்த
எந்த கவலையுமில்லாமல் எளிய
மக்களின் மனங்களில் விஷத்தைக்
கலந்திருக்கிறோம். முடக்குவாதத்தால்
பாதிக்கப்பட்டுள்ள கன்ஹையாவின்
தந்தைக்கு ஏதேனும் நேர்ந்தால்,
அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது?
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை
அவருடைய குடும்பத்தைப் பற்றி
செய்தி வெளியிட்டிருக்காவிட்டால்,
விளிம்பு மக்களின் நலன்களுக்காக பேச
வேண்டும் என்ற ஊக்கத்தை
கன்ஹையா எங்கிருந்து பெற்றிருப்பார்
என்று எவருக்கும் தெரிந்திருக்காது
ராம நாகா மற்றும் இதரர்களின்
பின்புலமும், வறுமையை
எதிர்கொண்டு போராடுவதுதான்.
ஜேஎன்யூவில் வழங்கப்படும்
உதவித்தொகையின் வழியாகத்தான்
அவர்கள் தங்கள் கல்வியை
தொடர்வதோடு, வாழ்க்கையில்
நெடுந்தூரம் பயணிப்பதற்கான
உறுதியையும் பெறுகிறார்கள்.
ஆனால், டி.ஆர்.பி-க்காக அலையும்
வக்கிரமான நமது மனநிலை
ஏறக்குறைய அவர்களது
வாழ்க்கையையே நாசப்படுத்தியிர
ுக்கிறது
அவர்களது கருத்துக்களோடு நமக்கு
முழுமையான உடன்பாடு இல்லாமல்
இருக்கலாம், ஏன் அவர்களது
கருத்துகள் தீவிரத் தன்மை கொண்டவை
என்று கூட தோன்றலாம்.
இருந்துவிட்டு போகட்டும், இதனால்
எல்லாம் எப்படி அவர்கள்
தேசத்துரோகிகள் ஆவார்கள்? இந்த
விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி
செயல்பட வேண்டும் என்று
தீர்மானிக்க நாம் யார்? டெல்லி
காவல்துறையினர் இந்த விவகாரத்தில்
ஜீ நியூஸை கை காட்டியிருப்பது
தற்செயலானதா? நாம் டெல்லி
காவல்துறையோடு கூட்டு
வைத்திருக்கிறோம் என்று
பேசப்படுகிறது. இதற்கு விளக்கமாக
மக்களிடம் சொல்ல நம்மிடம் ஏதாவது
இருக்கிறதா?
எந்த வகையிலும், ஜேஎன்யூ அல்லது
அதன் மாணவர்களுடன் நாம் ஏன்
வன்மம் கொண்டிருக்கிறோம். நவீன
வாழ்க்கைக்கான கருத்துக்கள்,
ஜனநாயகம், பன்முகத்தன்மை, மாற்று
கருத்துக்கள் என அனைத்தையும்
உள்ளடக்கிய அழகான கலவைதான்
ஜேஎன்யூ என்பது என் கருத்து.
ஆனால், அது கிரிமினல்கள் மற்றும்
தேசவிரோத சக்திகளின் கூடாரமாக
பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஜேஎன்யூ கிரிமினல்களின் கூடாரமா
அல்லது நீதிமன்ற வளாகத்தில்
வைத்தே இடதுசாரித் தொண்டர்களை
தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஓபி சர்மா
கிரிமினலா? எம்.எல்.ஏவும் அவரது
நண்பர்களும் சிபிஐ தொண்டர் அமீக்
ஜமேய்யை கீழே தள்ளி தாக்கும்போது,
காவல்துறையினர் வேடிக்கை
பார்த்தனர். நம்முடைய
தொலைக்காட்சியும் இதே காட்சியை
காண்பித்து ஓபி.சர்மா தாக்கியதாக
குற்றம் சாட்டியது. அது என்ன
குற்றச்சாட்டு என்று நான் கேட்டேன்.
மேலிட உத்தரவு என்ற பதில் வந்தது.
நமது மேலிடம் எப்படி இவ்வளவு
அதள பாதாளத்தில் தள்ளப்பட்டது.
மோடிக்கு ஆதரவாக எழுதுவதை கூட
புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது
ஓபி.சர்மா, ஏபிவிபிக்கும் கூட
பரிந்துரைக்க வேண்டிய நேரம்
வந்துவிட்டது என்பதை எப்படி புரிந்து
கொள்வது?
என்னுடைய கையறு நிலையையும்,
என்னுடைய ஊடக செயல்பாட்டையும்
எண்ணி வெட்கப்படுகிறேன்.
இதற்காகத்தான் அனைத்தையும்
விட்டுவிட்டு ஊடகப்பணிக்கு
வந்தேனா? கண்டிப்பாக இல்லை.
என் முன் இரண்டு தேர்வுகள்
இருக்கின்றன - ஒன்று
ஊடகப்பணியையே துறக்க வேண்டும்
அல்லது தர்மசங்கடமான இந்த
நிலையிலிருந்து விலக வேண்டும்.
நான் இரண்டாவதை தேர்வு
செய்கிறேன். என்னுடைய
வேலைக்கும், அடையாளத்திற்கும்
சம்பந்தமுள்ள விஷயங்களை தாண்டி
தேவையில்லாத எதையும்
கேட்கவில்லை. சிறு
துரும்பென்றாலும், ஏதோவொரு
வகையில் நானும் இதற்கு
பொறுப்புதான். இதை செய்வதின்
வழியாக எனக்கு வேறு இடங்களில்
வேலை கிடைக்காது என்பதை
உணர்ந்து இருக்கிறேன்.
ஆனால், இதே வேலையில் தொடர்ந்து
நீடித்தால் லட்ச ரூபாய் சம்பளத்தை
விரைவில் எட்டிவிட முடியும்
என்பதையும் தெரிந்து
வைத்திருக்கிறேன். ஆனால், இந்த
நல்ல சம்பளம் என்னிடமிருந்து
கடுமையான விலையை கேட்கிறது.
அதை இனிமேலும் என்னால் தர
இயலாது. சாதாரண நடுத்தர வர்க்க
குடும்ப பின்புலத்திலிருந்து
வருகிறவன் என்ற முறையில், ஒரு
மாதம் சம்பளம் இல்லையானாலும்
கடுமையான பிரச்சினைகளை சந்திக்க
நேரிடும் என்பது புரிந்தாலும்,
இனிமேலும் என் மனசாட்சியை நான்
கொல்ல விரும்பவில்லை.
எனக்கு தனிப்பட்ட முறையில் யார்
மீதும் எந்த வருத்தமும் இல்லை
என்பதையும் இங்கே குறிப்பிட
விரும்புகிறேன். என்னுடைய
கேள்விகள் அனைத்துமே ஆசிரியர்
குழு மற்றும் நிர்வாகத்தின்
கொள்கைகளை குறித்துதான். இது
சரியான பொருளில் புரிந்து
கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
தனது வலதுசாரி சாய்வை
வெளிப்படுத்துவதற்கு ஊடகத்திற்கு
உரிமை உண்டென்றால், தனிநபர்
மட்டத்தில் எங்களுக்கும் எங்கள்
அரசியல் சாய்வை வெளிப்படுத்துவத
ற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
ஒரு ஊடகவியலாளனாக தனிநபர்
கருத்து திணிப்பு இருக்கக் கூடாது
என்பது பணி சார்ந்த கடமை. ஆனால்,
தனிப்பட்ட முறையில், விழிப்புற்ற
குடிமகனாக எனது பாதை
இடதுவயப்பட்டது - கட்சி
அலுவலகத்தில் இருப்பதைவிட எங்கள்
சொந்த வாழ்க்கையில் இருப்பதுதான்
இடது மனநிலை. அது என்
அடையாளம்
இறுதியாக, ஒராண்டு காலமாக
தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்த,
ஜீ நியூஸில் நிறைய நண்பர்களை
உருவாக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.
அன்புடனும், மதிப்புடனும்
விஷ்வா தீபக்.

Sunday, February 21, 2016

பேசும் இதயம் 4

முகம் அவளுடையது
என்றாலும்
பிம்பம் நான்
வரைந்தென்று
காதல்
கர்வம் கொண்டது,,,
__________

நம் நினைவுகளை
திரும்ப ஒப்படைக்க
வேண்டுமாம்
ஒற்றைக் காலில்
நிற்கிறது கனவு,,,
தவம் கலைந்து
விழித்துக்கொள்கிறேன்
காதல் வியர்வையில் நனைந்து,,,
__________

பிறகென்ன பிரிவோம்
நாமிருவரும் நட்டாற்றில்
காதலை தவிக்கவிட்டு,,,
எத்தனை காலம்
ஆகுமோ!
வெந்த புண்கள்
ஆருவதற்கு,,,
__________

பிறந்த குழந்தையின்
அழுகை
பற்றிக்கொள்கிறது
முதல் ஸ்பரிஸத்தை,,,
அழுகையை
சேமிக்காதீர்கள்
அதன் வீச்சம்தான்
உலக நியாயம்,,,
__________

சிரித்துக் கொண்டே
மரணித்துவிட
முயற்சிக்கையில்
கழுமரங்கள்
கேலி செய்கின்றன
வேஷம்
கலைந்து போனதென்று,,,
__________

நான் உடுத்தும்
சேலையில்
எப்படியோ
நுழைந்துவிட்ட
உன்னை
வெளியில் தெரியாமல்
மடித்து சொருகினேன்
அடிவயிற்றில்
அப்போதும்
முத்தமிடுகிறாய்
நீ!
__________

வேலி மறித்த
போதெல்லாம்
வாடி நின்ற
பூக்கள்
வதங்கி காற்றோடு
வேலிதாண்டி
சங்கமித்தது
மரணத்தில்,,,
__________

எதை பற்றியும்
கவலையில்லை
எங்கேயும்
கோமாளியாகிறேன்
எனக்கு முன்னால்
குழந்தையொன்று
எப்படியும்
சிரித்துவிட வேண்டும்
__________

பேரிறைச்சலோடு
நிர்வாண­மாய்
ஊர்சுற்றும் காற்று
தனக்குள் புகுந்தே
இசையாகிறதென
அகந்தையில் பேசிய
புல்லாங்குழலை
தட்டிவிடுகிறேன்
என் உதட்டிலிருந்து,,,
__________

எச்சில் ஈரம்தான்
முத்தமென அறியாமல்
கொடுத்து விடுகிறாய்
தொலைபேசியில்
முத்தங்களை,
மிச்சம் வைத்திரு நாம்
சந்திக்கின்ற வரையில்,,,
__________

எந்த வயலுக்கும்
சொந்தமில்லாத
என் பாதங்களை
வரப்பில்
மேயவிடுகிறேன்
கேலி சிரிப்புகள்
மடை திறக்கின்றன,,,
__________

உன்னைவிட
உன் தோழியிடம்
உனக்குள்ளிருக்கும்
என்னை
தெரிந்துகொண்டேன்,
ஆர்வக்கோளாரல்ல
காதல்கோளாரால்
நான் கள்வன்,,,
__________

ஒரு நீர் குமிழிக்குள்
சேகரித்த
புன்னகையெல்லாம்
வெடித்து விட
அடுத்தமுறை
தன் இதயத்தையே
அதனுள்
செலுத்தி விடுகிறாள்
அந்த குழந்தை
சோப்பு நுரைக்குள்,,,

__________***__________

அறிவை தின்ற மது அரக்கன்

அறிவு
பெட்டகத்தினுள்
மதுவை
பூட்டிவைத்தேன்
குடித்துவிட்டு
மீதியை

அறிவை குடித்துவிட்டு
மது ஆட்சி
செய்கிறது என்னை,,,

எங்கே முறையிடுவது?

நீதி கேட்டு
அறிவுசார் புத்தகங்கள்
புழுங்கி தவிக்கின்றன

புழுதியில்
கிடந்த என்னை
புழுக்கள் தின்னத்
தயாராகின,,,

தன் பங்கிற்கு
கரையான்களும்
புத்தகங்களை
நோக்கி
படையெடுப்பில்,,,

என் எலும்பு
மிச்சமிருக்கிறது
புத்தகங்களின்
அட்டைகளும்
மிச்சமிருக்கிறது

அடையாளச் சான்றுகள்
போதும்தானே!

டாஸ்மாக் வாசலில்
நீதியும் மதுபாட்டிலேந்தி
வரிசையில்

அரசின் முகத்தில்
ஏக சந்தோஷங்கள்
எதற்கும் உதவாதாம்
என் சாட்சியும்
புத்தக சாட்சியும்
மன சாட்சியும்,,,

Thursday, February 18, 2016

பேசும் இதயம் 3

எனக்கு பிடித்தவள்
நீ,,,
தள்ளிப்போகச்
சொல்கிறாய்
வலித்தது தமிழுக்கு
ஆங்கிலத்தில்
உச்சரிக்கிறாய்
அதனை,,,
__________

சிலுவை சுமப்பதாலே
நான் தேவனாகிறேன்
அறைந்த நீங்களோ
அண்ணாந்து
பார்க்கிறீர்கள்
எதுவாக வேண்டும்
நான் உங்களுக்கு
இந்த கவிதையாகவா,,,
__________

குளித்தெழும்போது
கூடவே
ஒட்டிக்கொள்கிறாள்
உடம்பில்
பனித்துளிகளை,,,
__________

ஒட்டு நகம்
கூட இல்லை
விரல்
வைத்து கடிக்கும்
பழக்கத்தில் என்னையே
கடித்துக் கொள்கிறாய்
கடிந்து கொள்ளவில்லை
நான்,,,
__________

என்னைப் பற்றி
ஏதோவொரு
தோழியிடம்
விசாரிக்கிறாய்
உன்னைப் பற்றி
என்னை நானே
பெயர்த்தெடுத்தேன்
என்பதறியாமல்,,,
__________

பணம், பேர், புகழ்
எதுவும் வேண்டாம்
ஒற்றை
தாமரை இலையில்
ஒட்டிக்கொண்டு
நீருக்கு பொறாமை
ஏற்படுத்திட வேண்டும்
என மனமேங்குகிறது,,,
__________

பசிக்கு உணவு தேடும்
குழந்தை முத்தத்தால்
நனைகிறது
அதுவொன்றே
கிடைத்துவிடுகிறது
அப்போதைய
அழுகைக்கு,,,
__________

உனது பெயரை
உச்சரிக்கையில்
அழுத்தத்தால்
அடிபடக் கூடாது
என்பதற்காகத்தானோ
நாவிற்கு
எலும்பில்லாமல்
போனதோ,,,
__________

பூக்கள் கூடி
அழைக்கையில்
முகம் மலர்கிறாய்
கருணை காட்டு
நான்தான் சுமக்கிறேன்
நீயழைத்த பூக்களை,,,
__________

அவன்
வெட்கப்படுகிறான்
என் கைகளில் வைத்த மருதாணி
முளைக்கிறது
மீண்டும் செடியாக
எனது வெட்கத்தை
அவன்
பறிக்கத் தயாராகிறான்,,,
__________

ஏதோ ஒரு காரணத்தால்
பேசக்கூடாதென்கிறாய்
காரணத்தை
திட்டுகின்றேன்
ஏதும் அறியாதவளாய்,,,
__________

வாசலை தொட்டாள்
அவையில் வெளிச்சம்
அவள்
ஒருவளுக்காகவே
வாசித்து விடுகிறேன்
எழுதிய கவிதையை புரிந்திருக்கும்
அவளுக்கு,,,
__________

என்னை கருவில்
சுமந்தவள்
ஊட்டி விடுகிறாள்
"தாய்மண்"
உணர்வை,,,
தவிர எனது மண் எது?
எனும்
யுகக்கேள்வியோடு
புதைந்து விடுகிறதென்
வாழ்வு,,,
__________****__________

ஏது நம்மிடம் வாழ்வு - ஹைக்கூ

ஆளுங்கட்சி
திடீர் ஆய்வு
தரமான சாராயம்,,,
__________

ஐந்தாண்டு எம்எல்ஏ
வருகிறார் கைகழுவி
அடுத்த தேர்தலுக்கு,,,
__________

முற்றத்து நிலா
மலையேறுகிறது
காற்றில் கலந்த ஈரம்,,,
__________

சீண்டுகிறது
என்னை உண்மை
மறைத்து வைக்கிறேன்
பொம்மையில் மனதை,,,
__________

பிடித்த தாமரை
சேற்றுக் குளத்தில்
நானும் நாற்றமும்,,,
__________

அவையில்
திட்டங்கள் வாசிப்பு
தட்டிய மேசைகள்
உடைத்தன கைகளை,,,
__________

அதுவரையில்
மௌனம் காத்திருந்த
சருகுகள்
பேசத்தொடங்கின
காற்றனலோடு,,,
__________

பதவி சுகம்
பழகிப்போன கும்மிடு
வழக்கமான வருகை
தேர்தல் நேரம்,,,
__________

மிதக்கிறேன்
காற்றடைத்த பலூன்போல
குடித்துவிட்டு
தரையில்,,,
__________

கூட்டம் கூடி
தலைவனை
துதித்தார்கள்
தொண்டன்
அரைபோதையில்
அரசியல்
முழுபோதையில்,,,
__________

மனக்கோட்டையில்
புதையல்
நட்சத்திரங்கள்
வீதியிறங்கி
ஓட்டு கேட்கும்
வேட்பாளர்,,,
__________

அன்புக்கு
ஏங்கிய
முகங்கள்
தொலைத்த
வாழ்வு
கோரமாய்
சிரிப்பு,,,
__________

எனை தொடும்
தாமரை
எப்போதும் விசம்
கக்குகின்றது
காவி நிறத்தில்,,,

__________****__________

Wednesday, February 17, 2016

தலித் இளைஞனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

மிகத் தீவிரமாக முரண்பட்டு நிற்கும் இந்திய சமூகத்தில் "சமத்துவம்"
என்றுமே கேள்விக்குறியாகவே காலத்தை கடக்கின்றது.
ஓர் அடிப்படை சகோதரத்துவம் கூட இல்லாத சமூகத்தில் வாழ்ந்து சாதியத்தையும்
சாதிய திணிப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு
விலங்கினத்தை விட கேவலமாக அடிமைபடுத்தும் ஆதிக்கச் சாதி மனோபாவத்தில்
வளரும் கேடுகெட்டு மனித சமூகத்திடம் முதலில் விடுபட வேண்டியது
சாதியவாதமும், மதவாதமும் மட்டுமே,
இந்துத்துவ பார்ப்பானிய மனுதர்ம வர்ணாசிரமத்தை தன் முதுகில்
தூக்கிக்கொண்டு எதிர் படுவோரையெல்லாம் சுமையிறக்கச் சொல்வதில்
அர்த்தமில்லை, ஒன்று நீயாகவே சுமையை இறக்கிவிட வேண்டும் , இல்லை வாழ்வது
வீணென்று மரணித்துவிட வேண்டும். இந்த இருவழிகளில் ஏதேனுமொன்றை செய்தால்
வர்ணாசிரமம் செத்துவிடும் என்பதாலே இந்துத்துவம் முக்கியமாக சாதியத்தை
உயர்த்தி பிடிக்கிறது. நால் வர்ண சாதிய ஆதிக்கர்களும் குறிவைத்து
தாக்குமிடும் "தலித்" மக்களாக இருக்கிறது அதாவது வர்ணத்தில் இடம்பெறாத
ஆதிக்கர்கள் மொழியில் இழிசாதி எனும் பஞ்சமர்கள். இந்துத்துவ ஆதிக்க
வெறியர்கள் தங்களின் எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகித்து கூர்முனை
சரியாக இருக்கின்றனவா,,, என பரிசோதனை செய்து பார்க்கும் இந்நாட்டில்
உண்மையில் வாழ்வதற்கு அஞ்சியவர்களாக தலித் சமூக மக்கள் தினந்தினம்
செத்துக்கொண்டிருக்கி­றார்கள். அதுவும் உடனடி மரணமில்லை சிறுகச் சிறுக
சித்ரவைதைகளை அனுபவத்து கொண்டு தன்வாழ்நாளை தலித் மக்கள் சபித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்தியத்தின் மிகப்பெரிய அவமானச்
சின்னமாகிறது. நிகழ்வுகளும் அவமானங்களை தாங்கிக்கொண்டு தன்பங்கிற்கு
காலத்தை கடத்திக்கொண்டு போகிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர்
மாவட்டத்தில் உள்ள தபவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விரேந்தர் குமார்
மிஷ்ரா. அதே கிராமத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். அவரது செங்கல் சூளை
அருகே உள்ள நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று மிஸ்ரா
திட்டமிடுகையில் அதற்கு அடிபணிய மறுத்திருக்கிறார் நில உரிமையாளர். இந்த
காரணத்தால் மிஸ்ரா அந்த நிலத்தின் உரிமையாளரிடம் பிரச்சனை செய்து
வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மிஸ்ரா தனது செங்கல் சூளையில்
வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து பக்கத்து நிலத்தின் உரிமையாளரின்
பதின்வயது மகனை அடித்து நொறுக்கி செருப்பு மாலை அணிவித்துள்ளார்.
செருப்பு மாலையுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த வாலிபரை அவர் ஊர்வலமாக
இழுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரின் தந்தை இது குறித்து
போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் மிஸ்ரா மற்றும் அவரது ஊழியர்கள் 2 பேர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்படியும் காவல்துறை SC/ST வழக்கு பதியாமல் ஆதிக்கச்
சாதியர்களுக்குச் சாதகமாக கட்டப்பஞ்சாயத்தோ அல்லது சாதாரண குற்றப்பிரிவு
வழக்காகவோதான் பதிவு செய்யும் என்பது நன்கு அறியப்பட்டதாகவே இருக்கும்.
இங்கே சாதியம் என்ன சொல்கின்றதோ அதன்படியேதான் சட்டமும் எழுதப்படுகின்றது
என்பதை அறிந்து தலித் சமூக மக்கள் தங்களுக்கான உரிமைக் கோரிக்கையினை
இன்னும் வலுவடையச் செய்திடல் வேண்டும்

Tuesday, February 16, 2016

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்

1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை
குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,
அங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்
பயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்
கொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய
கடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.
இவ்வாறு எழுதுகிறார் கடிதத்தை,,,
அன்பின் இனியவளே!
திரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே
நான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,
கேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது "எனக்கு
முன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை
முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,
அன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்
வெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்
உன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்
போலியானவர்களாக உடைந்து போனவர்களாக பார்க்கிறது.
என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்கு பின்னே திட்டுபவர்கள் எவரேனும்
இரண்டாம்தர நாடக அரங்கில் முதல்தர காதலர் வேடமேற்று நடிப்பதற்காக என்னை
எப்போதேனும் குறைகூறியதுண்டா? ஆனால் அது உண்மையே, இந்த
போக்கிடமற்றவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமானால் அவர்கள் உற்பத்தி
மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒருபுறத்திலும், உன் காலடியில் நான்
விழுந்து கிடப்பதை மறுபுறத்திலும் ஓவியமாக தீட்டியிருப்பார்கள்.­ இந்த
படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்திற்கு கீழே
எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிடத்தவர்கள்
என்றும் முட்டாள்களாகவே இருப்பார்கள்.
நீயென்னை பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கும் காதல் அதன் உண்மையான
வடிவத்தை பெரும்பான்மையாக அடைத்துக் கொண்டிருக்கிறது. அன்பு நிறைந்த
உன்னிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
அன்பின் இனியவளே நீ சிரிக்கலாம்! ஆனால் உன்னுடைய இனிமையான தூய உள்ளத்தை
என்னுள்ளத்துடன் சேர்ந்து அணைத்துக்கொள்கிறேன்.­ நான் மௌனமாக இருப்பேன்
ஒரு வார்த்தை கூட பேசாமல், உதடுகளினால் அல்ல நாவினால் முத்தமிடுவேன்
வார்த்தைகளைத்தான் சிந்துவேன், கவிதைகள் எழுதுவேன் , உலகில் பெண்கள் பலர்
இருக்கிறார்கள் சிலர் அழகானவர்களும் கூட, ஆனால் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சுருக்கத்திலும் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இனிய நினைவுகளைத்
தூண்டுகின்ற அந்த முகத்தை மறுபடியும் காண வேண்டும் உடனே கிளம்பி வா!
உன்னுடைய இனிய முகத்தில் எனது முடிவற்ற துயரங்களை ஈடுசெய்ய முடியாத
இழப்புகளை (எட்கார் இறந்தது) காண்கிறேன். உனது இனிய முகத்தை
முத்தமிடும்போது துயரங்களை முத்தமிட்டு விரட்டுகின்றேன்.
உன் கரங்களில் புதைந்து உன் முத்தங்களில் புத்துயிர் பெற்று மீண்டும்
மீண்டும் வாழ்ந்து விடுகிறேன் மரணம் பற்றிய பயமின்றி,,,
எப்போது வருவாய்
விரைவில் என்னிடம் வந்துவிடு!

கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னி மீது வைத்துள்ள நேசத்தின் ஆழம்
எவ்வளவு என்பதற்கு 1856 -ல் மார்க்ஸ் எழுதிய கடிதமே ஒரு சான்று,, அதுவே
காதலுக்கும் மார்க்சியத்திற்கும் தொடர்பாய் இருந்திருக்கிறது.
ஜென்னி பல வருட காலம் மார்க்சுக்கு தனிச் செயலாளர் போல செயல்பட்டார்,
நூல்களை பிரதி எடுப்பது ,கட்சிப் பணிகளில் உதவுவது, உலகத் தொழிலாளர்
வர்க்க இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கடித தொடர்பு மோற்கொள்வது, புரட்சியை
விரிவுபடுத்துவது ஆகிய இயக்கப் பணிகளோடு தன் இல்லறப் பணிகளிலும் ஜென்னி
ஈடுபட்டிருந்தார் .

Tuesday, February 09, 2016

மலம் அள்ளும் தலித்துகள், வீட்டுக் கழிவறைப் பெண்கள்

தலித்துகள் மலம் அள்ளும் இழிதொழிலை செய்வதும்,
பெண்கள் மட்டுமே தன் குடும்ப வீட்டுக் கழிவறையை
கழுவதும்
ஒப்பிட்டளவில் இரண்டும் வேறுவேறு,
முதல் திணிப்பு
சமூகம் சார்ந்த ஆதிக்கம்.
அதில் ஆண் பெண் பேதமில்லை.
இரண்டவது திணிப்பு ஆணாதிக்க மனோபாவம்
அது வேண்டுமென்றே
ஆதிக்கம் செலுத்துவது.
ஒரு பெண் தன் குடும்ப வீட்டுக் கழிவறை சுத்தம் செய்தல் தனக்கு
பழகிப்போனதென்று, கருதி சக பெண் மலம் அள்ளுதலுக்கு உதவப்போவதுமில்லை,
கரம் நீட்டவும் தயாராக இல்லை, என்பதால்
முதல் எதிர்ப்பு சமூகப்பிரச்சனையாகிறது.
ஒரு ஆண் தன் துணைவியர் கழிவறை சுத்தம் செய்கிறாள் என்றால் உதவி செய்யவோ ,
வேலையை பகிர்ந்து கொள்ளவோ தயாராக இல்லை என்றால் அச்சு அசல் அது
ஆணாதிக்கமே,,,ஒரு வேளை அவ்வாறு வேலை பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் ஆண் பெண்
இருவருமே அதே பாணியான
சக மனிதன் மலம் அள்ளுதலுக்கு உதவப்போவதுமில்லை,
கரம் நீட்டவும் தயாராக இல்லை. என்பதால் இரண்டும் வேறுபடுகிறது.
ஆனால் இரண்டுமே மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்,
இரண்டுமே ஆதிக்கத் திணிப்புதான் என்பதை
உணர வேண்டும்.இரண்டிலும் காணப்படும் " இவர்கள் இந்த வேலைக்குத்தான்"
என்கிற வேறுபாடற்ற பொதுக்கோட்பாட்டையும் உடைக்க வேண்டும்

Saturday, February 06, 2016

கருவில் கத்தி - ஹைக்கூ

கருவில் கத்தி
பணம் கேட்டு
மிரட்டுகிறது
நவீன வழிப்பறி
மருத்துவம்,
மருத்துவ கல்லூரிகள்,,,

__________

அடுக்கி வைத்த
கோப்புகள்
சத்தமில்லாமல்
அழும் அறிக்கைகள்
அனைத்தும்
போலி பிரேத
பரிசோதனைகளாம்,,,

__________

காற்றுக்கு வேலி
கண்களை
திறக்க விடவில்லை
தூசிப் புழுதிகள்,,,

__________

படம் தூக்கி காட்டும்
பாம்பு
பயத்தில்
பக்தி மட்டும்
மனிதனுக்கு,,,

__________

தரைமேல் நட்சத்திரம்
பூக்களை கவரும்
பனித்துளிகள்,,,

__________

பிச்சைக்கு
வரிசையாய்
விளைநிலங்கள்
தொங்கும்
பலகையில்
திருவோடு
வாடகைக்கு,,,

__________

வெந்து கிடக்கிறது
பூமி
சுடுநீர் ஊற்றும்
எரிவாயு
குழாய்கள்
கெயில்
குளிர்காய்கிறது,,,

__________

நாயும்
குழந்தையும்
குப்பைத்தொட்டியில்
-நவீன சமபந்தி,,,

__________

கையில்
மினரல் பாட்டில்
சுற்றிப்பார்க்க செல்கிறார்கள்
மழை வெள்ளத்தை,,,

__________

புதிய கட்சி தொடக்கம்
ஜாக்கிரதை
அரைஞான் கொடி,,,

__________

மக்களை மறந்து
அரசியல் மன்றத்தில்
மட்டும் அரசாட்சி
சாட்டையை
சுழற்றுகிறது
அதிகாரம்,,,

__________

இடுப்புக் கோவணம்
கொடிக் கயிற்றில்
காய்கிறது
வறுமை,,,

__________***__________

Friday, February 05, 2016

ஆணாதிக்க வெறியர்களால் பலியாகிய உயிர்

இந்திய சமூகத்தின் ஆணாதிக்கத் தன்மைக்கு அடையாளமாய் அதன் வேர்களிலிருந்து
முளைத்தெழுகிறது பெண்ணடிமையும், சாதி ஆதிக்கமும், பதிவேற்றப்பட்ட
புகைப்படத்தை கண்டு போலி ஜனநாயகம் என்கிற அடையாளத்தை தன் உடல் முழுதும்
குத்திக் கொண்டிருக்கிற இந்திய சமூகம் முகம் சுழிக்கலாம் அல்லது தங்கள்
பார்வையை வேறுபக்கம் திருப்பலாம். ஆனால் ஒன்று ஆதிக்க போலி ஜனநாயகம் தான்
பதிவு புகைப்படத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும், எங்கும் அவர்களால்
தப்பியோட முடியாது.

உத்திரப் பிரதேசத்தில்­ சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சாதி கலவரத்தில்
அங்குள்ள உயர்சாதி இந்துத்துவ ஆணாதிக்க வெறியர்களால் கங்காவதி என்ற
(தலித்) தாழ்த்தப்பட்ட சகோதரியை கற்பழித்தது மட்டுமல்லாது
கற்பழித்துவிட்டு அந்த சகோதரியின் பிறப்புறுப்பில் கரும்பினை சொறுகி
கொன்றிருக்கிறது.

ஆணாதிக்கம் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பதற்கு காரணம் மதத்தையும்,
மதச்சாதியத்தையும் வணங்கி அந்த மதங்களாலும்,சாதியத்த­ாலும் கொழுத்து
இந்திய நாட்டைச் சுரண்டும் அதிகார வர்க்கத்துக்காக ஒட்டுமொத்த சமூகமும்
காலில் விழுந்து ஜெபித்துக்கொண்டிருக்­கிறது என்பதுதான் முதன்மைக்
காரணமாக அமைகின்றது. எந்த அதிகார வர்க்கமும் பெண்களை கொஞ்சமேனும்
அரவணைத்தது கூட இல்லை, எப்படி அது அரவணைக்கும், பெண்களுக்கான உரிமையை
கொடுக்கும்? ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் முதன்மை அடிமைப் பிரயோகம்
பெண்ணியத்தின் மீதும் பெண்ணையத்தை சுற்றியும் தானே நிகழ்த்தப்படுகிறது,
அப்படியிருக்க ஆணாதிக்க அதிகார வர்க்கத்திடம் அன்பையோ , அரவணைப்போ,
உரிமையோ, நேர்மையோ இவற்றில் ஒன்றையோ எதிர்பார்க்கவே முடியாது என்பது
உணர்ந்தது தானே,,, ஒரு பெண்ணின் மீதான அத்துணை திணிப்புகளுக்கும்
அப்பெண்ணை சுற்றியுள்ள ஆணாதிக்கம் நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும்.இந்திய
சமூகம் காலங்காலமாக மதத்தின் பெயரால் சாதியத்தின் பெயரால் பெண்ணின்
பிறப்புறுப்பை அழித்து வருகின்றது எனும் குற்றவுணர்ச்சி சிறிதேனும்
ஏற்பட்டிருந்தால் இந்த பதிவு புகைப்படம் இங்கே இருந்திருக்காது தானே!
மதமாதிக்கம் மற்றும் சாதியாதிக்கம் கொண்டு ஒரு பெண் இன்னொரு ஆணை
காதலித்தால் வரும் கடுங்கோபமும், தடையும், எதிர்ப்பும் அதே பெண் பாலியல்
வன்புணர்வு செய்யப்படுகின்றபோது மட்டும் பதுங்கிக்கொள்கிறது.
கோழத்தனத்தின் உச்சமென இதைச் சொல்லலாமா? ஏன் பெண் என்பவள் காதலிக்கக்
கூடாது, அதுவும் கீழ்சாதி ஆண் என்று வருகின்றபோது பெற்ற பிள்ளையே ஆனாலும்
கொலை செய்து விட வேண்டுமென்று துடிக்கிற ஒட்டுமொத்த ஆணாதிக்கமும்தான்
மேற்கண்ட புகைப்படத்தில் பிணமாகி கிடக்கின்ற பெண்ணின் பிறப்புறுப்பில்
கரும்பை சொறுகியவர்கள். ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து இச்சை
தீர்ந்தபின் கொலை செய்யும்போது மட்டும் இந்த ஆணாதிக்கச் சமூகம் சாதி
பார்ப்பதில்லை, அப்பெண் தலித் என அடையாளப்பட்டால் இன்னமும் வசதி,
சட்டமும் அமைதிகாக்கும், சமூகமும் ஒத்துழைப்பு கொடுக்கும் , யாரும்
கேட்பாரற்ற நிலை ஏற்படும் அதுவே தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கவும்
செய்யும் . இத்தனை வசதிகள் இருக்கையில் தலித் பெண்ணின் பிறப்புறுப்பில்
கரும்பு சொறுகி தன் ஆதிக்கத்தை எளிதாக நிலைநாட்டலாம். அப்படித்தான்
கட்டமைத்திருக்கிறது இந்த கேடுகெட்ட இந்தியச் சமூகமும், இந்திய
மதவாதமும்,சாதியவாதமு­ம், இதற்கு இந்திய கலாச்சாரம் என்கிற பெயரும்
கொடுத்திருக்கிறார்கள­். உண்மைகள் உறுத்துகிறது எனில் ஆணாதிக்கம் உயிரே
துறந்தாலும் இறந்த பெண்ணின் உயிருக்குச் சமமான நீதிக்கு ஈடாகாது, ஏனெனில்
இங்கே நீதி என்பதும் நிரந்தர ஆணாதிக்கமாக உருபெற்றுவிட்டது என்பதை
எவராலும் மறுக்க முடியாது.
கவிதையொன்று என்னால் எழுதப்பட்டது "(ஆண்)டவனின் குறி!கள்" என தலைப்பிட்டு,,,
அதில் ;

உலகம் இயங்குதல்
வேண்டுமெனில்
யோனிகள்
திறந்தே வைத்திருக்க
வேண்டுமாம்

கட்டளை பிறப்பித்தும்
கட்டுகளை இழுத்தும்
இறுக்கியும்
ஏகபோகமாய்
புணர்ந்தனுபவிக்கும்
ஆணென்ற
அரசப் பெருமகனார்கள்
அப்படித்தான்
கற்பிதம்
உரைக்கிறார்கள்
உலகிற்கு

கற்பெனும்
வலையத்திற்குள்
அரளிவிதையரைத்து
பூசியபடியே,,,

என்றெழுதியிருப்பேன் ஆணாதிக்கம் அதன் இயல்பிலிருந்து சற்றும் மாறவில்லை
அல்லது மாற்றத்தை விரும்பவில்லை என்பதை இதுபோன்ற சம்பவங்கள்
மெய்பித்துக்கொண்டே இருக்கின்றன. இனி பெண்ணிய எழுச்சி இங்கே நடைமுறைக்கு
வராமல் எவ்வித புரட்சியும் இந்தியத்தியத்தில் சாத்தியமில்லை என்பதை
இனியாவது பெண்ணியம் உணர வேண்டும்.

Thursday, February 04, 2016

கலாச்சார "மயிறுகள்"

காலனிய ஆதிக்கம் வேரூன்றி
தளைத்திருக்கும் சமுதாய
கட்டமைப்பிற்குள் காலாச்சாரம்
என்பது மானுடத்தை இழுத்து
கட்டிவைக்கப்பட்ட அடிமைக்
கயிறாகவே எங்கும் எல்லையை
சூழ்ந்திருக்கிறது. மயிறுகள் என்றதும்
ஊசி முனையில் அமர்ந்தது போல்
இருக்குமாயின். அந்த வெஞ்சினம்
சமூக அவலங்கள் நிகழ்கின்றபோதும்,
அதன்பொருட்டு விழும் பிணங்கள்
குவிகின்ற போதும் எழாமல்
இருக்குமாயின் மயிறுகள் மிகவும்
பிடித்திருக்கிறது கலாச்சாரத்தை
சாடுகையில்,,, அப்படியே
வெஞ்சினத்தால் மயிறுகள் சிலிர்த்து
வான்நோக்கி நின்றாலும் வெறும்
மயிறுதானே என்று ஒட்டு
வைத்துவிடலாம் அல்லது மீண்டும்
வளர்த்து விடலாம்.
கேவலப்படுத்துகிறார்கள்
கலாச்சாரத்தை என்றெண்ணம்
எழுமானால் மயிறிழையில்
வெற்றியை தவறவிட்டான்,
மயிறிழையில் உயிர் தப்பினான்
என்பதற்கெல்லாம் நா கூசி வெஞ்சினம்
எழவேண்டுமே ஏன் எழவில்லை
அப்போது மட்டும் அதற்கு மயிறுகள்
ஏற்ப்புடையதாக இருக்கிறதேயானால்
இந்த இந்திய கலாச்சாரத்திற்கும்
மயிறுகள் ஏற்புடையதாக இருப்பதில்
ஏதும் தவறில்லைதானே,,,
உத்தர பிரதேசத்தில், கிறித்துவ போதகர்
ஒருவரை மிகக் கடுமையான
முறையில் . பாதி மழித்த மீசை, பாதி
மழித்த தலைமுடி, புருவ
முடியும்கூட பாதி
மழிக்கப்பட்டநிலையில், செருப்பு
மாலைகள் அணிவிக்கப்பட்டு
கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக
இழுத்து வரப்படுகிறார் . இப்படி
ஊர்வலமாக பஜ்ரங் தள் எனும்
இந்துத்துவ பார்ப்பானிய அமைப்பை
சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள்
இதனை நிகழ்த்துகின்றனர்.
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கம்
போதகர் மேல் சுமத்திய குற்றச்சாட்டு,
மூன்று இந்துக்களை ஏமாற்றி
கிறித்துவர்களாக மதம் மாற்றி
அவர்களை மாட்டிறைச்சி உண்ண
வைத்தார் என்பதாகும். குற்றச்சாட்டை
முன்வைத்த அதே இந்துத்துவ
கலாச்சார மயிறுகள் தாய்மதம்
திரும்புதல் என கொடிபிடித்து பல்வேறு
கிருஸ்த்துவ மற்றும் இசுலாமிய
சிறுபான்மை மக்கள் சமூகத்தினரை
எண்ணிக்கையில்லாமல் மிரட்டியும்,
அடிபணியவைத்தும், தாக்குதல்
நடத்தியும், குடும்பத்திற்கு 5 லட்சம்
ரூபாய் என கொடுத்தும்
வலுக்கட்டாயமாக இந்துமத திணிப்பு
செய்தார்களே அவர்களுக்கான
தண்டனைகள் தரப்படாத வரையில்
கலாச்சாரம் வெறும் மயிறாகவே
கண்ணுக்கு புலனாகிறது.
திருப்பூர் பள்ளியொன்றில் ஒன்றாம்
வகுப்பு மாணவனை ஆறாம் வகுப்பு
மாணவன் அதீத கோபம் கொண்டு
கழிவறையிலேயே கொலை
செய்துவிட்ட பழியுணர்சிக்கு
பதிலேதுமில்லாமல் கல்வி முறை
மற்றும் பிள்ளை வளர்ப்பில்
முறையற்று போன சமூகச் சூழலை
கொண்டிருக்கிற கலாச்சாரம் வெறும்
மயிறாகவே கண்ணுக்கு புலனாகிறது.
முதிர்ச்சி மற்றும் முறையற்ற காதல்,
விழிகளில் எப்போதுமே தெறிக்கும்
பழியுணர்ச்சியை தூண்டும் கதாநாயக
வேடம் கொண்டும், மதுவுக்கு
அடிமையாதலை நியாயப்படுத்திக்
கொண்டும் ஏதொ பெருந்தொண்டு
செய்வதாக கூறித் திரியும்
நற்சிந்தனைகளற்ற திரையுலக
தொண்டின் எதிர்வினை இதுவென
குற்றவாளிக் கூண்டில்
திரைத்துறையினை ஏற்றாத
கலாச்சாரம் வெறும் மயிறாகவே
காட்சியாகிறது.
இந்த இந்திய நாட்டிற்குத் தேவையான
அரசியலமைப்பினை தந்த
புரட்சியாளர் அம்பேத்கரை இச்சமூகம்
பெரும் காழ்ப்புணர்ச்சி கொண்டு அந்த
மாமேதையை ஓர் இனத்திற்கு
மட்டுமே சொந்தக்காரன் என்பதுபோல்
கட்டமைத்திருப்பதை தன்னால் ஆன
சிறு முயற்சிகளின் மூலம்
உடைத்தெரியத் தயாராகி கல்விதான்
ஆகச்சிறந்த ஆயுதமெனும்
அண்ணலின் வாக்கினை ஏற்று
உயர்படிப்பினையில் நிலவும்
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கத்தை
தன் பலத்தால் மோதுகையில் அவனது
பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
எங்கே அம்பேத்கரியமும், தலித்தியமும்
வளர்ந்து அடிமைச் சமூகம் எழுச்சி
பெற்று விடுமோ என்கிற அச்சத்தில்
அண்ணலை பரப்புரை செய்த
இளஞ்சிறுத்தை ரோகித் வெமுலாவை
கொலை செய்து தூக்கிலேற்றி
அக்கொலையை தற்கொலையென தன்
சூழ்ச்சிகளின் மூலம் இந்துத்துவ
பார்ப்பானிய ஆதிக்கச்
சாதிவெறியாளர்கள் செய்த
குற்றத்திற்கு ஏதும் தண்டனைகள்
இல்லையெனில் கலாச்சாரம் வெறும்
மயிறாகவே முளைத்துக் கொள்கிறது.
இதில் நிகழ்த்தப்பட்ட மத்திய, மாநில
மற்றும் கல்விநிறுவனத்தின்
முகத்திரையை கிழிக்க வக்கற்ற
மேதாவிகளெனும் சமூக
ஆர்வலர்கள்??? நரிவேடமிட்டு ரோகித்
வெமுலாவின் சாதியினை
ஆராய்கிறது. அதற்கும் ஆதாரம்
உண்டு "அவன் தலித் என்று" பொது
விவாவதம் வைக்கையில்
மேற்கொள்கிறார்கள் அந்த போலி சமூக
ஆர்வலர்கள் "படிக்கிற வயதில் ஏன்
அரசியல்" என்று,,, அட! மேதாவிகளே
அண்ணலையும்,ஜோதிராவ்
பூலேவையும், அயோத்திதாச
பண்டிதரையும், தாத்தா ரெட்டைமலை
சீனிவாசனையும், கக்கனையும்
படிக்காமல் அவர்களை பற்றி
எதுவுமறியாமல் நீங்கள் சமூக
ஆர்வலர்கள் எனில் அவன் படிக்கிற
வயதில் அண்ணலை படித்து
அரசியலை கற்கிறான் என்றால்
அவனுக்கும் கீழாக அல்லது அவனது
காலணிக்குக் கூட ஈடாகமாட்டீர்கள்
நீங்கள், என்பதனை உணராத வரையில்
உங்களையும் சமூக ஆர்வலர்களாக
ஏற்றுக்கொண்டிருக்கும் கலாச்சாரம்
வெறும் மயிறுதான், என்பதை
ஆழமாக பதிவு செய்திட
அவசியப்படுகிறது. ரோகித் வெமுலா
வெறுமனே கொலை
செய்யப்படவில்லை, அவனது
வாக்குமூல கடிதமே அதற்குச்
சான்றாக அமைகிறது. தன் இறுதி
மூச்சில் அவன் தோற்றுவிடவில்லை,
மாறாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்
அல்லது அழிக்கப்பட்டிருக்கிறான்,
அவனை அழித்தது இந்த கலாச்சாரம்
மட்டுமே அதனாலே அது மயிறாக
தெரிகிறது. மயிறை வேண்டுமானால்
மழித்துவிட்டு பிறகு வாருங்கள்
உங்களின் கலாச்சார மயிறுகளை
தூக்கிக்கொண்டு,,, எப்படியும்
ஏதேனுமொரு இந்துத்துவ பார்ப்பானிய
கோவில்களுக்குதான் மழித்த மயிறை
காணிக்கையாக்குவீர்கள் அதனாலே
அப்போதும் கலாச்சாரம் வெறும் மயிறு
மட்டுந்தான், நியாயங்கள் இங்கே
கவனிக்கப்படாத போது ஏன்?
கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க
வேண்டும். அதற்கான தேவையும்
இங்கே எழவில்லை, காரணம் இந்திய
கலாச்சார மயிறுகள் தான் ரோகித்
வெமுலாவை கொலை செய்தது.
திருவாரூர் பிரியங்கா, சென்னை
எர்ணாவூர் மோனிஷா , காஞ்சிபுரம்
மாவட்டம் செய்யாறு சரண்யா, இந்த
மாணவிகளின் பெயர்களை இன்று
தமிழகமே உச்சரிக்கின்றது வெற்று
அனுதாப அலைகளோடு,,, மூன்று
இளம் மாணவச்செல்வங்களும்
வாழ்ந்து காட்டி இம்மண்ணில்
மருத்துவச் சேவை செய்யப்போவதாக
சபதம் ஏற்றிருக்கலாம் அல்லது
அச்சிந்தனையோடே கல்வியில்
புகுந்திருக்கலாம், ஆனால் அவர்கள்
மூவரும் இப்போது உயிரோடில்லை,
கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
அதனை தற்கொலை என்று மூடி
மறைக்கிறது நீங்கள் உயர்த்திப்
பிடிக்கும் கலாச்சாரம் எனும்
மயிறுகள். மூவருமே ஏழை எளிய
குடும்பத்தை சார்ந்த ஒடுக்கப்பட்ட
சமூகத்தை அடையாளமாய்
கொண்டிருக்கிறார்கள். அவர்களை
கொலை செய்தவர்கள் கலாச்சார
சீமான்கள், சீமாட்டிகள். தொடர்ந்து
அவர்கள் திணிக்கும் முறையற்ற கல்வி,
கல்வி வியாபாரம், கல்வி
தனியார்மயமாதல், கையூட்டு அரசு
அதிகாரிகள், களவாடப்படும் கல்வி
உரிமைகள், ஊழல் அரசு ,
போன்றவற்றின் மூலமாக ஒரு சித்த
மற்றும் யோகா மருத்துவக்
கல்லூரியின் கேடுகெட்ட முதன்மை
சீர்கேட்டினால் கொலைசெய்யப்பட்டிருக்­­
கிறார்கள். இக்கேடுகெட்ட முதன்மை
சீர்கேடுகளை அனைத்தும்
கட்டவிழ்த்து வீதியெங்கும் ,
நாடெங்கும் உலவ விட்டிருப்பது
நீங்கள் உயர்வாகவும்
மேன்மையாகவும் உயிராகவும்
கருதும் அதே "கலாச்சாரம்" எனில்
கொலைசெய்யப்பட்டு பிணமாக
கிணற்றில் இருந்து தூக்கப்பட்ட அந்த
மூன்று மாணவிகளின் தலை
மயிறுக்குக் கூட ஈடாகாது
"கலாச்சாரம்" என்பதால் வெறும்
மயிறுகளாகவே
மனதிலேற்றப்படுகிறது. பணம்
பிடுங்கியதுமில்லாமல்
மாணவச்செல்வங்களை
கொத்தடிமைகளாக நடத்திய விழுப்புரம்
SVS கல்லூரி நிர்வாகம், மாணவர்கள்
பல்வேறு போராட்டங்களை
முணைப்போடு செயல்படுகையில்
அதனை முடக்கிய அரசு நிர்வாகம்,
எந்தவொரு கவலையுமின்ற யார்
செத்தால் என்னவென்ற அலட்சிய
கண்ணோட்டத்தில் " தற்கொலை
பண்ணிக்கனும்னா உங்க வீட்ல
பண்ணிக்கோங்க" என்கிற ஆணவப்
பேச்சில் அதிகார வர்க்கத்தோடு தொடர்பு
வைத்துக்கொண்டு தானுமோர்
அதிகாரத்திமிரோடு மாவட்ட ஆட்சியர்
எனும் அதிகாரியாய் அரசியல்
வாதிகளுக்கு துணைபோய், அதன்
மூலம் பணம்பார்த்து கொழுத்த
மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் ???
மதுவை ஏற்று நடத்திக்கொண்டு
மக்களின் உயிருக்கு உயிரான
கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து
கல்வியை வியாபரமாக்கிவிட்டு அந்த
வியாபாரத்திலேயே இடைத்தரகர்களாக
செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த
மானங்கெட்ட அரசுகளின்
கலாச்சாரங்களை குற்றாவாளிக்
கூண்டிலேற்றி நீதியின்
நியாயத்தன்மைகளை "கலாச்சாரம்"
கட்டிக்காக்குமானால் கலாச்சாரம்
வெறும் மயிறுகள் இல்லையென
ஓரளவிற்கு தளர்த்தலாம், அதுவும்
குறிப்பாக ஒரளவிற்கு மட்டுமே,,,
ஏனெனில் இங்கே கலாச்சார மயிறுகள்
வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டே
இருப்பதனால், கொலையை
தற்கொலையாக மாற்றும் தந்திரத்தை
மிகக் கச்சிதமாக செயலாற்றுகிறது
இந்த கலாச்சார மயிறுகள்.
"அய்யாறு" இந்தப் பெயர் யாருக்குமே
அறியாமலிருக்கிறது . ஒருவேளை
"கலாச்சாரம்" நன்கறிந்திருக்கலாம்
காரணம் அது வெறும்
மயிறென்பதால்,,, அய்யாறு தலித்
என்பதனால் கழிவறையை சுத்தம்
செய்யச் சொல்லியும், வீட்டு
வேலைகளை செய்யச் சொல்லியும்
ஆதிக்க இந்துத்துவ பார்பான சாதி
இந்துக்களான பஞ்சாயத்துத் தலைவர்
சாந்தியும், அவரது கணவர்
செல்வராஜூம் தொடர்ச்சியாக
வதைசெய்து வன்கொடுமையின்
உச்சத்திற்கு தன்னிலை கலாச்சாரங்கள்
சென்றதால், தான் தற்கொலை செய்து
கொள்வதாக அய்யாறு கடிதம் எழுதி
வைத்துவிட்டு தூக்கில் தொங்குகிறார்.
தலித் என்பவர்கள் மனித மலம்
அள்ளுபவர்கள், சாக்கடை சுத்தம்
செய்பவர்கள் , இன்ன பிற
இழிதொழில்களெல்லாம் அவர்கள்
மட்டுமே செய்ய வேண்டியவை என
கற்பிதம் கொண்டிருக்கும் "கலாச்சாரம்"
வெறும் மயிறுகள் அன்றி
வேறென்னவாக இருக்க முடியும்.
மனிதனின் மலத்தை மனிதனே
அள்ளும் அவல நிலை கொண்டிருக்கிற
இந்நாட்டிலும், இதனால்
வாழ்வாதாரம் இழந்து தெருவொரத்து
வாசிகளாய், சாக்கடைகளை சுத்தம்
செய்வதற்கு வலுக்கட்டாயமாக
தொட்டிக்குள் இறக்கிவிட்டு மரணித்து
போகும் போது பிணங்களை வெறும்
வேடிக்கை பொருளாய் மாற்றியிருக்கும்
இந்த "கலாச்சாரம்" வெறும்
மயிறுகளாய் குத்தி நிற்கிறது
உழைப்பாளர் வர்க்கத்தின் உடலை
தின்று அதுமட்டும் வளர்ந்துகொண்டு,,,
எதற்கும் எவ்வித மாற்றத் தீர்வுக்கும்
முன்வராத கலாச்சாரம் வெறும்
மயிறுகள் மட்டுமே.
கல்வி தனியார் மயத்திடம்
ஒப்படைத்திருப்பதனாலும், கல்வி
முறையில் கணக்கற்ற குளறுபடிகள்
இருப்பதனாலும், பெற்றோர்கள் தங்கள்
ஆழச் சிந்தனைகள் மூலம் பிள்ளை
மாணவர்களிடம் மன தைரியத்தை
ஊட்ட மறந்ததாலும், மாணவச்
செல்வங்களின் மன அழுத்தத்தை
போக்கும் வகையில் கலாச்சார
கட்டமைப்புகள் முடுக்கி விடப்படாத
நிலையாலும் தஞ்சை தனியார்
கல்லூரி ஒன்றில் சுலோச்சனா எனும்
மாணவி தன் கல்லூரியல் படிக்கும்
அதே மூத்த மாணவிகளால்
மிகக்கடுமையான வார்த்தைகளின்
மூலமும், ரேகிங் எனப்படும் கலாச்சார
மயிறினால் தற்கொலை செய்து
கொண்டிருக்கிறார். என்றால்
புகுத்தப்பட்ட போலியான கலாச்சாரம்
வெறும் மயிறுகளாக திரிக்கப்பட்டு
மாணவியின் கழுத்தை இறுக்கி கொலை
செய்திருக்கிறது என்பது தானே
உண்மையாக இருக்கிறது. இவ்வாறான
கலாச்சாரங்களை இச்சமூகத்தில்
புகுத்தியதன் விளைவாக தினமொரு
கொலை நிகழ்த்திவிடுகிறது தற்கொலை
என்கிற பெயரில்,,, கலாச்சாரம்
புகுத்திய சமூகமோ எவ்வித
எதிர்வினையும் ஏற்படுத்தாமல்
தன்னுடைய கலாச்சாரமே பெரிது
என்றும் உயர்வானது என்றும்
சொல்லிக்கொண்டு பார்ப்பானியத்தை
தூக்கிச் சுமந்து கொண்டும், சாதியத்தை
ஆரத்தழுவிக்கொண்டும்,
தனியாரிடத்தில் தன்மானத்தை
விற்றும், கல்வியை கலவியாக
மாற்றிக்கொண்டும், முதலாளியத்தை
புகழ்ந்து பேசிக்கொண்டும்
திரிகிறதென்றால் எப்போதும், யாருக்கும்
பயப்படாமல் உரக்கச் சொல்ல
கடமைபட்டிருக்கிறது " கலாச்சாரம்
வெறும் மயிறுகள் மட்டுமே"
கலாச்சாரம் வெறும் மயிறுகள்
மட்டுமே"

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...