Showing posts with label அவலம். Show all posts
Showing posts with label அவலம். Show all posts
Sunday, September 01, 2019
Saturday, June 29, 2019
மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலை
சாதிதான் சமூகமென்றால்
வீசும் காற்றில் விசம்
பரவட்டும் - தோழர் பழனி பாரதி
கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.
இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் அரிவாளால் கனகராஜையும் அவர் காதலித்த பெண்ணையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறான்.
இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாதி வெறிகள் தமிழக மண்ணில் மிகவும் வேகமாக வளர்வதை இந்த ஆணவப் படுகொலை காட்டுகிறது , சுயசாதி வெறியில் கொலைகளை நிகழ்த்தும் மிருகங்கள் உண்மையில் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்களே ... சாதியம் இருக்க வேண்டும் ஆனால் சாதிவெறி இருக்க கூடாது என்கிற போலியான பிம்பங்களை முதலில் அழித்தொழித்தல் வேண்டும் "சாதியே வெறி தான் " என்பதை தயவுசெய்து அடித்தள மக்களிடம் உணர்த்தப்பட வேண்டும் , சாதி ஒழிப்பு என்பது மிகத்தீவிரமாக எடுத்துச்செல்ல சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் ...
Friday, May 10, 2019
ஒருதலைக் காதல் , மறுத்தால் படுகொலைதான் தீர்வா ?
தலித்திய ஆதரவுகள் , தலித்திய ஒடுக்குமுறைக்கான எதிர்வினைகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற போதெல்லாம் அதே தலித்தியத்தினுள் இருக்கும் காட்டுமிராண்டிகள் முந்தைய எல்லா நியாயமான வழிகளையும் மூடி தலித்துகள் மீதே சேற்றை வீசிவிட்டு போகின்ற தலித் காட்டுமிராண்டிகளை என்னவென்று அழைப்பது? கடலூர் கோரச்சம்பவம் போல நிறைய இங்கு நடந்துகொண்டுதானிருக்கிறது ... அருந்ததியர் குடியிருப்பில் ஒரு பெண் பருவத்திற்கு வந்தால் போதும் அங்கு சிதைத்து சீரழிக்கப்பட்ட பெண்களின் நிலமை சொல்லி மாளாது, போலவே மாற்று சாதியினரை திருமணம் செய்து இல்லரம் நடத்தாமல் அவர்களை கொடுமை படுத்துவதும் நடந்துகொண்டிருக்கிறது .... நான் எப்பொழுதும் சொல்வேன் ... ஏதாவது சமூக அநீதி நிகழ்துவிட்டால் நான் பறைச்சி, பறையன் என துணிச்சலாக பதிவிடும் அந்த துணிச்சலை இன்னமும் பறையர்கள் சக்கிலியர்களுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை , என்னதான் தலித்துகள் நிகழ்த்தும் படுகொலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்த்தப்படுகிறது என்று விவாதம் வைத்தாலும் அதுவும் படுகொலைதானே , என்னை பொறுத்தவரையில் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு நிகரானது இம்மாதிரியான படுகொலைகளும் , ஏனெனில் காதலை ஏற்கவோ , நிராகரிக்கவோ ஒரு பெண்ணிற்கு முழு சுதந்திரம் உண்டு , அது பெண்ணின் உரிமையும் கூட , அதில் தலையிட வற்புறுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை , அது சமூக அநீதியும்கூட , எல்லாரும் இயக்குநர் பாலாவை சிகரத்தில் வைத்து கொண்டாடுகின்றபோது எனது பெயரில் வெளியான முதல் படம் " சேது" வில் அந்த கதாபாத்திர காதல் வற்புறுத்தல் அவ்வளவு வன்மம் சூழ்ந்தது என்று பதிவிட்டது ஏனே நியாபகத்திற்கு இப்போது வந்தது . தனது பெற்றோரின் மீதான பயத்தை அச்சத்தை விட "என்னை காதலி இல்லைனா கொன்னுடுவேன்னு" மிரட்டுகிறவனோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டுமே ... அது எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்தால் சக மனுஷியை சம நீதியில் வைத்து பார்க்க முடியும் , காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது , கொலை செய்வது , தனது உடலை வருத்தி அந்த பெண்ணை பயமுறுத்துவது , அப்பெண் சார்ந்தோரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவது என்று ஏக போகத்திற்கு பெண்கள் மீது கொடுமைகளை அழுத்தமாக திணிப்பது தமிழ்ச் சமூக சீரழிவிற்கு வித்திடுவதாகவே பொருள் . தொட்டால் தீட்டென்றால் தொடாமல் விடாதே என தலித்தியம் கூறும் சமூக நீதி கருத்துகள் வெகுசன மக்களிடத்தில் கடினப்பட்டு கொண்டு சேர்த்தால் , இந்த காட்டுமிராண்டிகள் , என்னை காதலி ... இல்லையேல் கத்தி வெட்டு என சொல்லி அத்துணை சமூகநீதியையும் சுக்குநூறாக உடைத்திடுகிறார்கள் . ஒன்று மட்டுப் தெளிவாக தெரிகிறது , எல்லா சமூக அநீதிகளும் , சமூக படுகொலைகளும் பெண்களை சுற்றியே இங்கு கட்டமைக்கப்படுகிறுது , அதையும் இவர்களை கற்பிதமும் செய்கிறார்கள் என்பது மிக வேதனையான விஷயம் .
Monday, April 01, 2019
பரிதவிப்புகள் ...
பறக்கவோ பரிதவிப்புகளை
விட்டுச் செல்லவோ இயலாத
ஒரு சிறு மரங்கொத்தி பறவை
உடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்து
மெல்ல எட்டிப் பார்க்கும்
அப்பாவி விதைகளின் தலைகளின்
உச்சியில் கூர் ஆணி
செலுத்தப்படுகிறது
இந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றி
குருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயே
சாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...
இனி நீதிகேட்டு அவைகள்
வாய்திறக்கப் போவதில்லை
வாயடைத்திட்டு மென்மேலும்
நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம் ...
எது எதுவாகினும் திரும்ப ஒட்டப்படாத உயிர் பிறிந்த ஜீவனது
துர்வாடை வீசிவதை
அந்த மரப் பொந்தினுள்
கண்டுகொள்ள யாருமில்லை ..
ஆதி பெருமரம்
தன்னை ஊன்றி கொண்ட
தடிப்பு வேர்களை தவிர ...
வார்த்தைகளும் தடித்தே வருகிறது
விதைகள் கசியும்
பரிதவிப்புகளிலிருந்து ...
Thursday, March 14, 2019
பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...
சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு, ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்...
நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்...
ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்...
ஆம் இப்பொழுது மாட்டியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தனது நெருங்கிய நண்பனின் தங்கையை வஞ்சகமாக பேசி வரவழைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்
அதை அப்படியே படமாக பிடித்திருக்கிறான்.
சிறிது காலம் கழித்து எதர்ச்சையாக திருநாவுக்கரசின் போன் ஏதோ ஒரு சூழலில் அவனின் நண்பர் கையில் கிடைக்கிறது, அவர் இதில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது இது நமது நண்பனின் தங்கை ஆயிற்றே என்று அந்த வீடியோவை தனது போன் போனிற்க்கு மாற்றுகிறார்.
அதை தன் நண்பனிடம் அந்த வீடியோவை காட்டி தனது தங்கையிடம் விசாரிக்கிறார்..! அழுது கொண்டே நடந்த சம்பவங்களை சொல்லுகிறார் அந்தப் பெண்,
நன்பனின் தங்கை என்றும் பாராமல் சீரளித்த திருநாவுக்கரசுவை தூக்கிக்கொண்டு வந்து அடித்து துவைத்து எடுக்கிறார்கள்...
(இந்த வீடியோதான் வளை தளங்களில் வருகிறது)
இந்த செய்தி பஞ்சாயத்தாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் செல்கிறது, அவரும் நண்பனின் தங்கையை இப்படி செய்கிறாயே என்று கண்டித்து தற்காலிகமாக சமரசம் செய்கிறார்.
மனம் ஆறாத அந்தப் பெண்ணின் அண்ணன் இவனை விட கூடாது என்று கூறி அந்த முக்கிய பிரமுகரிடம் மீன்டும் செல்கிறார்... அவரும் வேறு வழியில்லாமல் பேசாமல் நீ காவல்துறையில் புகாராக கொடு என்று வழிகாட்டுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் திருநாவுக்கரசு மற்றும் திருநாவுக்கரசு நண்பர்கள் போன்களை காவல்துறையிடம் ஒப்படைத்து புகாராக கொடுக்கிறார்.
அந்த மொபைல் போன்களை ஆராய்ந்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது ஏராளமான வீடியோக்கள், கற்பழிப்பு காட்சிகள், விதவிதமான பெண்கள் என அந்த மாவட்ட காவல் துறையே உறைந்து போய் நின்றது.
அதிர்ந்து போன காவல்துறை இந்த பிரச்சினையை எப்படி தொடங்குவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருமே முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள்...
கிளை நிர்வாகிகளில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் வரை, வார்டு மெம்பரிலிருந்து நகர மன்ற தலைவர்கள் வரை மிகப்பெரிய செல்வவான்களின் கைகள் இதில் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்...
மனசாட்சியுள்ள சில காவல்துறை நபர்கள் இது மிக மோசமான இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளடக்கிய பிரச்சனை இது...
நிச்சயமாக இதை இவர்கள் விசாரித்து உண்மையை கொண்டு வர மாட்டார்கள்..! வேண்டுமானால் இதில் உள்ள படங்களை காட்டி தொடர்புடைய நபர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் பணம் பிடுங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கின்ற காரணத்தினால் இந்த செய்தியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்கின்ற அக்கறையோடு சில காவல்துறையினரே இந்த செய்தியை வெளியே கசிய விட்டார்கள்.
எந்த அரசியல் முக்கிய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை காவல் நிலையத்தில் புகார் கொடு என்று அனுப்பி வைத்தாரோ அவரின் மகனும் இதில் ஒரு முக்கிய குற்றவாளியாக மாறுவார் என்று பாவம் அவருக்கு தெரியாது.
இந்த பாலியல் வண்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவருமே நெறுங்கிய நன்பர்கள் வட்டத்திலும்
குடும்பரீதியாகவும் நெறுக்கமுள்ளவர்கள்தான்..!
இதில் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்ல குடும்பப் பெண்கள் 40 வயதைத் தாண்டிய பெண்கள் என்று பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,
இது இன்று நேற்று அல்ல ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்சனையாகும்.
கல்லூரிகளிலும், முகநூலிலும் நைச்சியமாகப் பேசி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை உடலுறவுக்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணுக்கே அதை காட்டி, மிரட்டி உன் நண்பர்களையும் அறிமுகப்படுத்து, இல்லை என்றால் இதை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் மானத்தை கெடுத்து விடுவேன் என்று மிரட்டி பனிய வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பண்ணைகளும், மிராசுகளும், ஜமீன்களும் அவர்களின் வாரிசுகளான மைனர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஆண்டாண்டு காலமாக பெண்களை தூக்கிக் கொண்டு போய் கேள்வி கேட்பாரில்லாமல் தனது பாலியல் இச்சைக்கு பயண் படுத்திக் கொள்வார்கள், இதை நாம் வரலாறுநெடுகபார்த்ததுதான்
வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வசதியும் பெருகிய இந்த காலத்தில் அன்றைய மைனர் வாழ்க்கை இன்று வேறு ஒரு பரிணாமத்தில் பயணிக்கிறது.
இன்று ஒருபடி மேலே போய் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்று சொல்பவர்கள் கூட தன் பாலியல் இச்சைக்கு பெண்களை வன்புணர்ந்தாலும், அதை படமாக எடுத்து பிற நண்பர்களிடம் காட்டி ரசிப்பதும், தன் குலப் பெருமை பேசி எவ்வளவுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறோமோ அந்த அளவிற்கு என் பராக்கிரமத்தைப் பார் என்கின்ற வக்கிர புத்தியும் மேட்டுக்குடி மைனர்களிடம் பெருகி இருப்பதையே இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
பெரியார் சொல்வது போல் ஒருவன் எவ்வளவு படித்து இருக்கிறானோ அந்த அளவிற்கு அவன் அயோக்கியனாக இருக்கின்றான் என்பார், அதுமட்டுமல்லாமல் படித்தவன், பணக்காரன் பதவிகாரன் இவர்கள் மூவரும் சமூகத்திற்கு கேடானவர்கள் என்பார், இதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உறுதிப்படுத்துகிறது...
Saturday, March 09, 2019
தங்கத் தாரகையின் வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா
மறைந்த A1 குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தங்கத்தாரகை கௌரவத்திலிருந்து தற்போது வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா என பரிமாற்றம் பெற்றிருக்கிறார் என்றே இதனை சொல்லலாம் . ஊழலுக்கு பெயர்போன கட்சியாக எப்பொழும் அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சத்திய சோதனை...
இந்திய வைரச்சந்தையானது பெரும் சரிவை திடீரென சந்தித்துள்ளது , இதுகுறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதாக விஷயம் வெளிவந்தது . வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு என கணக்கு காட்டப்படுகிறது .இந்த விலை சரிவு ஹாக்காங் மற்றும் ஏனைய உலக வைர சந்தையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்க இதன் காரணம் என்னவென வைர சந்தைகள் ஆய்வு மேற்கொண்டன. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது முன்னாள் முதல்வரும் ஊழல் குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரும் தமிழக அதிமுக மறைந்த ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.
இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வைரம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அதேவேளையில் அன்றைய சந்தையில் அப்போது வாங்கப்பட்டது ' +11 ’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான். என்பதும் உறுதிபடுத்துகிறது அச்செய்தி நாளிதழ்.
இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association - SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, ‘’பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதி ஒருவர் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார். அதன் நம்பகத்தன்மையையும் வெளிகாட்டுகிறார் . எனவே
இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மங்கள் இருப்பதாக இந்திய வைர சந்தை நிறுவனங்கள் தெரிவித்திருக்கிறது .
01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?
02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?
04. ஜெயலலிதா படுத்தப் படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?
05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?
06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?
07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?
08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?
09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?
10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?
11 . ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்ட நிலையில் தற்போது அந்த வைரங்களை சந்தைபடுத்தியது யார்?
12. இன்றளவும் ஜெயாவின் சொத்துகளை பராமரிப்பதில் யாரென வெளிப்படையான தன்மை ஏன் அறிவிக்கப்படவில்லை .
13. ஜெயலலிதா ஏற்கனவே ஊழல் குற்றவாளி என்று தண்டனை பெற்ற பிறகும் அவருக்கு ஆட்சியதிகாரம் அளித்த மக்களின் நிலை என்ன?
14 . டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்த வைர சந்தை ஊழலுக்கு தற்போது ஆட்சி செய்யும் அதே ஆளும் அதிமுக அரசு பெறுப்பேற்குமா? இது திரும்பவும் ஊழல் அரசு என்றுதானே நிரூபணம் ஆகியுள்ளது ?
இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு வியாபம் , ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல் , இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இருவரும் தான் தேர்தல் கூட்டணி அமைத்து 40 ம் நமதே என மக்களை குறிவைக்கிறார்கள் .
வேண்டுமானால் ஜெயாவின் இந்த " மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை அவர்களின் அடிமைகள் ..
" வைர ஊழலால் நாங்கள் வைர சந்தை பண முதலாளிகளால் நாங்கள் என்று வேண்டுமானால் மாற்றி பிரச்சாரம் செய்தாலும் செய்வார்கள் ... ஏனெனில் இங்கு வாழ்வது அப்பாவி தமிழ் மக்கள்தானே ...
Sunday, February 17, 2019
விரட்டுகிறார்கள் ...
பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது கார்ப்பரேட் , ஆளும் அரசு
கரங்களிலிருந்து ...
வீழ்ந்து கிடந்த ராத்திரியில்
அழுகி கிடக்கும் மரத்திடம்
தேடி அலையும் தன் வீடு அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்து
நீதி கேட்க எத்தனிக்கும் பொழுது
வெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்று
பழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்
இன்னமும் ...
நகரங்களில் வாழ விடாது துரத்திக்கொண்டே கல்லறையை தோண்டி எடுத்தும் கார்ப்பரேட் கட்டிடங்கள் வந்து முளைக்கிறது
கால் தோய்ந்த பூர்வ நிலங்களை
அரசும் அழிச்சாட்டியம் செய்கிறது
காற்று கூட சுவாசித்தலை குறுக்கிட்டு தலித்துகள் இவர்களென விரட்டும் போல ...
(சென்னை புளியந்தோப்பு , கோவை உக்கடம் தலித்துகள் குடிசைகள் இடிக்கும் அரசை குறித்து )
Monday, February 04, 2019
சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்
சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ... எப்பொழுதும் ஒன்று சொல்வதுண்டு " யானைகள் அத்துமீறி விளைநிலங்களில் நுழைகின்றன என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் ,, மனுசப் பயல்களாகிய நாம்தான்தான் அவைகளின் வனப்பகுதிகளை அழித்து அத்துமீறி வந்தேறிகளாக குடிபுகுகின்றோம் ....
ஒரு நாட்டில் குறைந்தபட்சமாக 33% என்கிற அளவிலாவது காடுகளின் பரப்பு இருக்க வேண்டும். இந்த அளவு என்பது இறுதிகட்ட அபாய அளவு. ஆனால் இன்றைக்கு இந்த அபாய அளவையும் தாண்டி கீழிறக்கி இப்போது சுமாராக 15% அளவிற்கு போனால் போகிறது என்கிற அளவில் மட்டுமே மலைச் சரிவுகளில் காடுகளை இடையிடையே விட்டு வைத்திருக்கிறோம்...
நமது நாட்டை பொறுத்தவரை மலை முகடுகளையும் சமவெளிகளையும் நமக்கே நமக்கானதாக ஆக்கிரமித்துக் கொண்டோம். இடையே விட்டுவைத்திருக்கிற அந்த மலைச்சரிவுகளே ஒட்டுமொத்த வனவிலங்குகளுக்கானது என வரையறுத்து வைத்திருக்கிறோம். இதற்குமேலும் இந்த நில அளவு சரியாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் இப்போது இருக்கின்ற அந்த குறைந்த பட்ச அளவையாவது இதோடு விட்டுவைத்து இதற்கு மேலும் கீழே இறங்கி விடாமலிருக்கும்படி, அதிகார வர்க்கத்தின் மீதும் கார்ப்பரேட் சாமியார்கள் மீதும் நமது எதிர்ப்பு கிளம்ப வேண்டும் ... காடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த மனிதர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ ... ஒரு நாட்டின் வனத்தை அழித்து முற்றிலுமாக அங்கே காவி மயத்தை நிறுவி மக்களை மூடர்களாக வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்ற கஞ்சா சுடுக்கிகளிடம் காட்டாத வீரத்தை இந்த அரசு ஒரு யானையிடம் பிரயோகிக்கிறது என்பது வெட்கக்கேடு இல்லையா ? முதலில் இதுபோன்ற போலிச்சாமியார்களிடமிருந்து காடுகளை மீட்டும் போலவே மற்ற மனுசப் பயல்களிடமிருந்தும் காடுகளை மீட்டு வன மிருகங்கள் வாழ ஏதுவாக காடுகளை பாதுகாத்தால் போது அவைகள் ஊருக்குள் நுழைவதை தன்னாலே நிறுத்திக்கொள்ளும் , இதில் அதிமுக்கியமாக peta பீட்டா அமைப்புகள் இப்போது வரையில் சின்னத் தம்பி யானைக்காக எவ்வித அறிக்கையும் விடவில்லை என்பதை கவனித்தீர்கள் எனில் அவ்வகையான அமைப்புகள் விலங்குகள் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு மேற்குறிப்பிட்ட போலிச் சாமியார்களின் சுகபோக வாழ்வுக்கு மட்டுமே துணைபோகும் என்பதை நன்கு அறியலாம் ... #savechinnathambi சின்னத் தம்பியை பாதுகாப்பதில் தான் மனித நேரம் நிரம்பியிருக்கிறது ...
Monday, January 28, 2019
ஜாக்டோ ஜியோ போராட்டம் நியாயமானதா ?
பிரச்சினை இதுதான் ... வெகுசன மக்கள் போராட்டம் நடத்துகின்றபோது "எனெக்கென்ன வந்துச்சு " என்கிற மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தமையாம் இன்று அவர்களுக்கு எதிராக "அதிக சம்பளம்" என்கிற வரையறைக்குள் அடக்கி ஆசிரியர்களுக்கு எதிராக பொது சனங்கள் திரும்பியிருக்கிறது ...
இதனை எப்படி அணுகுவது என்று மற்ற அரசியல் இயக்கங்களுக்கும் விளங்கவில்லை .... அரசு மிகப்பெரிய அளவில் ஊதிய சுரண்டலில் ஈடுபட்டதை மறைக்க முயற்சிக்குமே தவிர அதனை சரிகட்டும் வேலையில் என்றுமே இறங்காது ... தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வெகு சன மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பி விடுவதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது அரசு ... இன்று தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அவ்வளவு பெரிய போட்டி நிகழ்கிறதெனில் 2011 முதல் 2019 வரையிலான அதிமுக அரசே காரணம் என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள் ... இடையில் பகுதிநேர ஆசிரியர்கள் என்கிற போர்வையில் "அரசு வேலைக்கு கமிஷன்" எனவும் கொள்ளையடித்த ஜெயாவை நோக்கி "இரும்பு மங்கை " என்று புகழ்ந்தும் அனுதாபங்களை மக்கள் தந்துவிட்டார்கள் ... இதன் நீட்சி "துப்புரவு பணியாளர்கள்" நியமனம் வரையில் கமிஷனுக்கு அரசு வேலை என்று இப்பொழுது வரையில் நீடித்துக்கொண்டுதானிருக்கிறது . முழுக்க முழுக்க முதலாளித்துவ ஆட்சியை நோக்கி பாய வேண்டிய முழக்கங்கள் எப்படி போராடும் இயக்கங்கள் , அமைப்புகள் , சங்கங்கள் மீது திருப்பிவிடுகிறதென உணரும் பட்சத்தில் ஒரு மாநிலத்தை ஆளும் ஏகாதிபத்திய கட்சிகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்திற்காக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும் ... அதுமட்டுமின்றி தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் போராட்டங்கள் வரையில் ஆளும் ஏகாதிபத்திய அதிமுக அரசின் அணுகுமுறைகளை மக்கள் சற்று சிந்தித்திட வேண்டும் , அதுபோலவே ஆசியர்களும் , இதுவரையில் மக்கள் போராட்டங்களில் அடையாள ஆதரவு கூட எங்கும் கொடுத்ததில்லை ஜாக்டோ ஜியோ அமைப்பு என்பது அவர்களுக்கே தெரியும் . ஏன் அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று கேள்விகள் முன்வைக்கப்படலாம் ... அதற்கு பதில் இன்று ஆசிரியர்கள் போராட்டத்தை அரசுக்கு எதிராக இல்லாமல் அதே ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் ஆளும் அதிமுக அரசின் அரசியல் யுக்தியை அறிந்திடவே ஜாக்டோ ஜியோ மக்கள் போராட்டங்களில் குரலெழுப்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் . ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவனோடு "அரசியல் " என்பது இயல்பாகவே பயணிக்கத் தொடங்குகிறது என்கிற உண்மை எப்போது உணர்கிறோமோ அப்பொழுது சனநாயகத்திற்கு வித்திடும் நல்லாட்சியை நாம் தேர்தெடுக்க முடியும் . ஆகவேதான் "அரசியல் பழகு " என அழுத்தமாய் சொல்லப்படுகிறது . ஆண்டாண்டுகால "உழைப்புச் சுரண்டல் " இன்றும் தொடர்வதற்கு அரசியல் அறிவின்மையே காரணமாக அமைகிறது . குறைந்தபட்சம் ஆசிரியர்களின் CPS பணம் 50000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கும் அரசை நோக்கி தயவுசெயது கேள்வி கேட்கலாம் ... ஏனெனில் இந்த ஊழல் வாதிகள் அவர்களுக்குள்ளாகவே தங்கள் இஷ்டம் போல சட்டமெழுதி "சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு " என இயற்றியபோது நாம் அமைதியாகவே வேடிக்கை பார்த்தோம் , அதுமட்டுமின்றி மக்களை ஆளும் எந்த அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் (மருத்துவம் , சட்டம், தவிர...) "எங்களை ஆள இன்ன தகுதிதான் பெற்றிருக்க வேண்டுமென்கிற வரையறை இல்லாத போது அப்படியே எதற்கெடுத்தாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு சனநாயக ரீதியாக நாம் உரிமை தந்திருக்கிறோம் அதனடிப்படையில் இவர்களும் TET , NEET , என பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீதும் ஏவுகிறார்கள் . அப்படியே அந்த தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றாலும் மறுபடியும் "கமிஷனுக்கே அரசு வேலை " என்கிற சுழற்சிக்குள் மட்டுமே சுழலும் ஆளும் அதிகார வர்க்கம் . இங்கு இதன்படி எந்தவொரு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திடும் மனப்பான்மையில் அரசு இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள் எனில் மொத்த குரல்களும் நிச்சயமாய் அரசுக்கெதிராகவே திரும்பட்டும் . 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 17000 ஆசிரியர்களை இன்னமும் பணியமர்த்தவில்லை இந்த அரசு என்பது குறிப்பிடத்தக்கது .
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் :
Sunday, January 27, 2019
பத்மஸ்ரீ கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார்
இந்துத்துவம் முற்றிலுமாக பரவி கிடக்கின்ற காவி தேசத்தில் மாட்டு கோமியத்திற்கு கூட விருது வழங்கப்படலாம் , இதில் அதிர்ச்சியாகவோ , ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை , கடவுளர்களை காட்டி மக்களின் மனங்களில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து அதன் மூலம் கொழுத்து அலையும் போலிச் சாமியார்களை கொண்டுதான் இந்த பாசிச பாஜக "ராம ராஜ்ஜியம்" என்று திரும்பவும் மனு சாஸ்திர குப்பைகளை மக்கள் மீது திணிக்கிறது , இதற்கு ஆளுகின்ற மாநில அரசுகளும் அடியாட்களாய் போய் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை , தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளானாலும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என்கிற அயோக்கியனின் பணத்தை நன்கொடையாக பெற்று தேர்தல் அரசியலை சந்துத்துவிடுகிறது என்பது எதார்த்த உண்மை , இது இப்பொழுது மட்டுமல்ல அந்த போலிச் சாமியார் உறுவான காலத்திலிருந்தே இதுதான் நிலைமை . அம்பேத்கர் உரைப்பார் ,,,
பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவித்து , அவர்களுக்கு அரசியல் அறிவை ,அடிப்படை கல்வியின் மூலம் புகுத்தினால் பெண்கள் தாங்களாகவே "பெண்ணடிமை" தளத்தை உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று ...
ஆனால் இப்போதைய காலக்கடத்தில் இது தலைகீழ் விகிதங்களாய் போனது பங்காரு அடிகளார் எனும் அயோக்கியனின் காலை கழுவி மரியாதை செய்வதிலிருந்து தங்களை தாங்களே " சுய மரியாதை" யை இழக்கின்றனர் , நில மோசடி , பல்வேறு கொலைகள் , அதிலும் குறிப்பாக சிறுமிகளை நரபலியிடுதல் , நில ஆக்கிரமிப்பு , தன்னையே தெய்வமாக கட்டமைத்தல் என அனைத்து களவாணி வேலைகளையும் மிகக் கச்சிதமாக "ஹிந்து மதம் " என்கிற கற்பிதங்களுக்குள் செய்பவன்தான் இந்த கங்காரு "ச்ச்சீ பங்காரு அடிகளார்.
யாருக்கு ? பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது நிசர்சன உண்மை ... அதேவேளையில் மத்திய காவிமய ஹிந்துத்துவ பாஜக அரசு " பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பதால் " பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென கூறுகிறது ... இதை ஏன் சபரி மலை ஐய்யப்ப கோவிலில் செய்தால் இதே பாசிக பாஜக எதிர்க்கிறது ? இங்கு பூசாரிகளும் , அர்ச்சகர்களையும் வேறு வேறு திசைகளாகவே அணுகுகிறது ஹிந்துத்துவம் என்பது வெட்டவெளிச்சமாகிறதல்லவா ... என்னதான் இருந்தாலும் அவாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நெருங்கி விடலாம் , ஆனால் இதே கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார் எனும் சூத்திரன் அவாளின் கோவில்களில் உள்ளே தேவஸ்தானத்தில் சென்று பூஜை செய்ய முடியாது .... இதுதான் எதார்த்தம் ... நிலைமை இப்படியிருக்க பார்ப்பனிய இந்துத்துவ மோடி கும்பல் "பத்மஸ்ரீ விருது" என்கிற பெயரில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதே தவிர அவர்களுக்கு இந்த போலிச்சாமியார்களால் பெரும் நிதியுதவி பெற்று கட்சியை இந்துத்துவத்தை வளர்ச்சியடைய கருவியாக பயன்படுத்துவார்களே தவிர , வேறென்ன உள்நோக்கம் இருந்துவிடப்போகிறது . கங்காரு அடிகளார் என்பதே எச் ராஜாவின் ட்விட்தானே ஒழிய இங்கு இந்த இந்துத்துவ போலிச் சாமியார்களை இதைவிட கேவலமாக பேசிவிடலாம் ... மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியாரின் எழுத்திலிருந்து முளைபெற்ற தமிழகம் இப்படி கவிகளின் பின்னால் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . குரங்கு (அனுமான்) கையில் பூமாலை கிடைத்தது போல இவர்கள் கையில் " பத்மஸ்ரீ விருது" படாதபாடாய் படுகிறது .
Friday, January 18, 2019
எது சமத்துவப் பொங்கல் ?
சாதி இந்துக்களோடு வேறு மதம் பின்பற்றுகின்ற தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது "சமத்துவப் பொங்கல் " இல்லவே இல்லை... ஏனெனில் மதங்கள் பல இருந்தாலும் அம்மக்கள் அனைவருமே திராவிட தமிழர்கள் . தமிழை அதன் உயிரை நேசிப்பவர்கள் , தமிழ் நிலத்தில் வசிக்கக்கூடியவர்கள். எனவே தமிழர்கள் என்று வருகின்றபோது ஹிந்துக்கள் அல்லாத வேறு மதத்தினர் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்..
இது தமிழரின் பண்டிகை , தமிழரின் கலாச்சாரம் , தமிழரின் நன்றி மறவாத பண்பாடு என்றேதான் தை திருநாளாம் பொங்கல் திருவிழா அழுத்தமாக பதிவுசெய்கிறது... அந்த விதத்தில் சமத்துவப் பொங்கல் இதிலடங்காது ...
அவ்வாறு இருக்கையில் சமத்துவப் பொங்கலில் ஏன் ஹிந்துக்கள் அல்லாத வேறு மதத்த்தினர் மட்டும் கலந்துகொள்கிறார்கள் ? அதுவே பார்பனியம்தானே.... திராவிடம் வகுத்த "சமத்துவப் பொங்கல் " என்பது வேறு மதத்தினருக்காக அல்ல , அதற்கு மாறாக சாதி இந்துக்கள் தங்களின் இந்து மத அடையாளத்தையும் , அந்த இந்து மதம் கற்பிதம் செய்த மனுதர்ம சாதிய வர்ணாசிரமத்தையும் மொத்தமாய் தூரே கிடாசிவிட்டு சமத்துவத்தோடும் , சகோதரத்துவத்தோடும் சக மனிதனை மதிக்கும் சமூக நீதியோடும் திராவிட தமிழராய் ஒன்றிணைந்து தை திருநாளை கொண்டாடுவதே "சமத்துவப் பொங்கல் " ஆகும்... இசுலாயர்கள் கிருஸ்தவர்கள் , பௌத்தர்கள் , இன்னும் என்னென்ன மதங்கள் இருக்கின்றனவோ அவையாவும் தை திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட வேண்டியவர்கள் .
இந்த தமிழ் மண்ணை , மக்களை சேரி (காலனி) - ஊர் என இரட்டைக்குடில் முறையில் பிரித்து வைத்து , சாதிய உணர்வோடு கட்டமைத்திருக்கும் ஆரியத்திற்கான எதிர்ப்பே " சமத்துவப் பொங்கல் " ஊர்க்கார தெருவில் சேரிக்காரன் பொங்கல் திருவிழாவை கொண்டாட முடியாதெனில் அது எப்படி இந்து பண்டிகையாகும் ? ஊர்க்காரனும் சேரிக்காரனும் இந்துக்கள்தானே? இதில் பிரிவினை சூழ்ச்சியை நிகழ்த்துவது பார்ப்பனியம் என நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் , ஆக தமிழர்களின் தொல்குடி பண்டிகையான பொங்கல் திருவிழாவை தமிழர்கள்... சாதியயற்றவர்களாக , மதமற்றவர்களாக கொண்டாட வேண்டும் என முயல்வதே " சமத்துவப் பொங்கல் ... நீங்கள் எவ்வளவுதான் படித்து , பட்டம்பெற்று உயர் பதவிகளில் அங்கம் வகித்தாலும் பார்ப்பனியத்தை பொருத்தவரையில் நீங்கள் சூத்திரர்கள் அவன் உங்களைவிட உயர்ந்தவன் என அடிமைத் தனத்தை அதிகாரத்தை , ஆண்டை தனத்தை திணிக்கும் செயல்தான் இந்த "சங்கர மடங்களின் சமத்துவப் பொங்கல் " அதேவேளையில் அவ்வளவு படித்து மக்களுக்கான நீதியை வழங்கும் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி வெறும் பூணூல் ஒன்றிற்கு மண்டியிட்டு அமர்ந்து கிடக்கும்இசூழல் இருக்கிறதெனில் இங்கு பார்ப்பனியம் நீதிபதியான சாதி இந்து அவரை அடிமையென மூவாயிரம் ஆண்டுகளாக பழக்கப்படுத்தி வைத்த சாதிய திணிப்பு முறையே காரணம் என்றால் அது மிகையாகாது.
இனிவரும் காலங்களாவது " எது சமத்துவப் பொங்கல் " என்றறிந்து அதனை இம்மாதிரியான பார்ப்பனிய இந்துத்துவத்திடமிருந்து மீட்டு , அதே இந்துத்துவ பிடியில் சாதியாக பிளவு பட்டிருக்கும் திராவிட தமிழர்களை சாதியற்றவர்களாக முன்வைத்து " சமத்துவப் பொங்கல் " தன் அடுத்த கட்டத்திற்கு நகர்தல் அவசியமாக இருக்கிறது.
சாதியவாத இந்தியா ,,,
இந்தியத்தை முழுவதுமாக சாதியவாதம் ஆக்கிரமித்துக் கொண்டு , சக மனிதனை நசுக்குகிறது என்பதற்கு இது சாட்சியாக அமைகிறது.
சாதியை அதன் ஆதிக்கத்தை துளியும் ஹிந்துத்துவம் விட்டுத்தருவதாயில்லை எனலாம் ...
தனது தாயின் உடலை தனியாக 5.கிமீ சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்
இது சாதிக் கொடுமையின் உச்சம் நிகழ்ந்தது ஒடிசா மாநில சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45).
கணவர் இறந்த பின்
தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார் நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற ஜானகி, தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.
அவருக்கு இறுதி சடங்கு செய்ய சரோஜ் முயன்றார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டார்.
யாரும் உதவ முன்வரவில்லை.
அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது!...
Saturday, January 12, 2019
பிளாஸ்டிக் தடை ஒரு ஏமாற்று வித்தை
இந்திய ஏகாதிபத்தியம் எப்பொழுதே மக்களுக்கு நலலது செய்வது போலவே பாவனை செய்து தன் இன்னொரு முகமான சுரண்டல் வேலையை மிகக் கச்சிதமாக செய்யும் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் உணர முடியாது , ஏனெனில் அந்த இரட்டை வேடத்தை அலங்கரிப்பதே ஏகாதிபத்தியத்தின் முதல் வேலையாகும். அப்படித்தான் இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவும், இதில் இந்திய ஏகாதியத்திற்குள் ஓன்றியமாக செயல்படும் தமிழக முதலாளித்துவ அரசு ஒன்றும் விதிவிலக்கல்ல, ஓரளவிற்கு இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவை தமிழக மக்கள் ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே வரவேற்றிருப்பது நல்லதுதான் , ஆனால் அதுவே தீர்வாகது என்று மக்கள் உணரும் காலம் வரும்பொழுது அரசிடமிருந்து அதற்கான பதில்கள் வராது என்பதே உண்மை. உலக வெப்படைதல் , பூமி மழை நீரை உறுஞ்சுவதில் சிக்கல் , காற்றில் மாசு ஏற்படுத்ததுதல் , புதிய நோய்களை உறுவாக்குதல் , கடல்நீரில் மக்காத குப்பைகள் கலத்தல் , என பல்வேறு இடர்களை ஏற்படுத்தும் "பிளாஸ்டி" பொருட்களை தடை செய்தது நல்லது என்றாலும்கூட இதிலிருக்கும் கார்ப்பரேட் மூளை அரசியலை நாம் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம், இந்த உத்தரவில் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் முளைதான் அரசு என்பதை இயக்குகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதனை விவரிப்பதற்கு முன்னால் கார்ப்பரேட் மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கிவிடுதல் நல்லதாக இருக்கும் . உலக தாரளமயமாதல் , மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என இந்த மண்ணை வெறும் சந்தை பொருளாகவும் , மக்களை அதில் வெறும் நுகர்வு பொருளாகவும் வைத்திருப்பதே கார்ப்பரேட்டுகளின் பணியாக இருக்கிறது , இதற்கான திட்டங்கள் பல தீட்டி அதனை "அரசு " என்கிற இயந்திரம் மூலம் மக்களை அடிமைபடுத்துதல் கார்ப்பரேட் மூளை என கொள்ளலாம் , ஒரு "அரசு இயந்திரம் " மக்களுக்கான நலனை எந்தளவிற்கு செயல்படுத்த துடிக்கின்றதோ அதே அளவிற்கு அந்த அரசானது கார்ப்பரேட் நிறுவனங்களை தங்கள் ஆட்சியதிகாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் , இதனை அறிவதற்கு தற்போதைய மோடி அரசின் பொருளாதார மேல்மட்ட திட்டங்களை சான்றாக கொள்ளலாம் , பணமதிப்பிழப்பு , GST , சேலம் எட்டு வழிச் சாலை என அனைத்து திட்டங்களிலும் பெரும் பணமுதலைகளான கார்ப்பரேட் நிறுவனங்களே பின்னாலிருந்து அரசை இயக்கியது என்றுச் சொல்லலாம் , பணமதிப்பிழப்பு என்கிற பெயரில் இந்தியா முழுமைக்கும் சுமார் 300 க்கும் மேல் (தோராயமாக) மக்களை கொன்றழித்தது மோடி அரசு , அதேவேளையில் கார்ப்பரேட் நிறுவனங்களை பெரும் பணக்காரர்களாகவும் , பொருளாதார சுரண்டல் செய்ய அவர்களுக்கு துணையாகவும் நின்றது நீரவ் மோடிக்களை , விஜய் மல்லையாக்களை நாம் இதன் மூலம் குறிப்பிடலாம் , போலவே GST வரி விதிப்பு என்று மன்னராட்சி கால பெரும் வரிவிதிப்பு போன்றே செயல்படுத்தியது அதாவது குறு வணிக நிறுவனங்களை , நசுக்குவதே GST யின் முதன்மை பணியாக இருந்தது , இந்த GST திட்டத்தால் அழிக்கப்பட்ட குறு வணிக நிறுவனங்களை அடையாளம் காணுவீர்களேயானால் நிச்சயம் இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவு சட்டத்தையும் அடையாளம் காணலாம். இங்க 100% பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அரசு இயந்திரத்திற்கு நன்றாகவே தெரியும் , ஆனால் முழுக்க முழுக்க சிறு வணிக பாமரர்களை நோக்கி " நீங்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதை நிறுத்துங்கள்" என்று முதலாளித்துவ அரசு மிரட்டுகிறது என்றால் இது நன்மை பயக்கும் திட்டம் இல்லையென்றுதானே பொருளாகிறது , போலவே நேற்றுவரை பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது ஒரு நல்ல நடவடிக்கை கேரிபேக்குகளை ஒழிப்பது இயற்கையை பாதுகாக்கும் என்று ஆதரித்தவர்கள இது வெறும் கேரிபெக்கை ஒழிக்கும் நடவடிக்கை இல்லை.. மாறாக கேரிபேக் என்ற பெயரில் வீட்டில் தின்பண்டங்களை தயாரித்து கடைகளில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை ஒழிக்க எடுக்கப்படும் மறைமுக தடையாணை என்பதை ஓரளவிற்கு மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள் என்றாலும் கார்ப்பரேட்டுகளை எதிர்க்க முடியவில்லை காரணம் மக்களை இயக்குவதும் கார்ப்பரேட்டுகள் என நாம் அறிய மறுக்கின்றோம் ... டாஸ்மார்க் என்னும் நஞ்சை ஆறாக ஓடவிடும் ஆளும் அதிமுக ஏகாதிபத்திய அரசு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பல ஆயிரம் அரசு அதிகாரிகளை களத்திற்கு அனுப்புகிறது என்றால் இந்த இடத்தில் அரசின் செயல்பாட்டின் மீது சந்தேகம் எழுவது இயல்புதானே....எது எப்படியோ இந்தியாவில் சிறு வியாபாரிகள் அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம் மேலும் அந்த முதுகெலும்பை ஏற்கெனவே GST என்கிற விஷ வரியை வைத்து சுரண்டியதை போன்றே
இன்றும் இந்த அரசு சிறு குறு வணிகர்களை குறிவைத்து தாக்கிக்கொண்டே இருக்கிறது.... இந்தியாவில் பிளாஸ்டிக்கை அதிகம் தயாரிக்கும் குஜராத்தையும் , மகாராஷ்டிராவையும் விட்டுவிட்டு தமிழக சிறு வியாபாரிகளின் கழுத்தில் கையிற்றை நெருக்கிறது என்றால் இவர்களின் பிளாஸ்டிக் இயற்கைக்கு பேராபத்து என்ற வாதம் உண்மை என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட இவர்களின் உண்மையான நோக்கம் பிளாஸ்டிக்கை தடை செய்து இயற்கையை காப்பாற்றுவது இல்லை .. அப்படி இயற்கையை காப்பாற்றுவது நோக்கம் என்றால் முதலில் இவர்கள் தடை செய்திருக்க வேண்டியது அனைத்து வித பொருட்களையும் மக்களிடத்தில் நுகர்வு பண்டமாக எல்லா உற்பத்தி பொருட்களையும் (Shampoo ஷாம்பு , பிஸ்கட் ) பிளாஸ்டிக் பைகளில் , அடைப்பானில் தந்து கொண்டிருக்கும் கார்பரேட் முதலைகளின் பிளாஸ்டிக் பைகளை முதலில் தடை செய்திருக்க வேண்டும்... ஆனால் கார்பரேட் முதலாளிகளை மட்டும் வாழ வைக்க தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகளின் கழுத்தில் சுருக்கு கையிற்றை மாட்ட திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம் தான் பிளாஸ்டிக் தடை என்கிற உண்மை உணரும் காலம் வெகுதொலைவில்லை.
Wednesday, January 09, 2019
10% பொருளாதார இட ஒதுக்கீடு சதி
ஆளும் பாசிக பாஜகவானது அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு ? அதாவது பொது பிரிவினருக்கு... 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019) வை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு... இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு அதுவும் ஏற்கப்படால் நிச்சயமாக இட ஒதுக்கீடு குறித்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காவி அரசு மூக்கை நுழைத்து திருத்தியாக வேண்டிய அபாயம் இருக்கிறது.
ஆதிக்க சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு ? இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தலித்துகள் உட்பட இதர இடைநிலை சாதியர்களின் இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் சமூக அநீதி நிகழும் என்பதில் மாற்றுக் கருத்தினை யவராலும் சொல்ல முடியாது... நிலைமை இப்படியிருக்க சாதிய ரீதியலான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு வித்திடும் இட ஒதுக்கீட்டில் "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு "என்பதே ஒரு ஏமாற்று வேலை, இதில் பார்ப்பனியம் வென்றிருக்கிறது என்றே சொல்லலாம். 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான அதாவது பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆக... அம்பேத்கரின் அரசயலைப்புச் சட்டத்தை மொத்தமாக நசுக்கவே இதனை பாஜக வஞ்சகம் புரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது அது பற்றியான பேச்சுக்கே இடமில்லை. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் படிப்படியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு உரிமையை மெல்ல மெல்ல நசுக்கி மொத்தமாக இட ஒதுக்கீடு என்பதை "பொருளாதார அடிப்படையில்" கொண்டு வந்துவிடலாம்... இதன் மூலம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகள் படி , இட ஒதுக்கீடு குறித்தான வழக்குகள் தொடுக்கப்படும்போது... "சாதியற்ற சமூகம்" என்று வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதபடி ஆகிவிடும் . விளங்கும்படி சொல்ல வேண்டுமெனில் இந்தியாவில் சேரி-ஊர் என பிரித்து வைக்கப்பட்டிருக்கும் சாதிய இரட்டைக்குடில் முறையை முற்றிலுமாக ஒழித்தாகிவிட்டது என்கிற நிலைமையை அரசுகள் கொண்டிருக்குமேயானால் அது இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ரத்து செய்யலாம் என்கிறது உச்சநீதிமன்றம், ஆகவே இவ்வழியை பயன்படுத்தி அரசுகள் இட ஒதுக்கீடு முறையில் நுழைய "சாதி முதலில் ஒழிய வேண்டும்" ஆனால் பின்வாசல் வழியான "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு என்றால் மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்து அனைவரையும் "பொதுப் பிரிவு" என்பதற்குள் கொண்டு வந்துவிட்டால் சாதியமும் அப்படியே இருக்கும் , பார்ப்பனியமும் சாதியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கணக்கு போடுகிறது இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக...அதுமட்டுமின்றி... இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்கள், மற்றும் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே உள்ளவர்கள் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் உயர்ஜாதி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்ட மசோதாவாக இருக்கிறது... எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது? அதிலிருந்தும் இந்த அரசு மிகப்பெரிய முட்டாள்களை கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்... வறுமைக்கு வரையறை 8 லட்சமும் 5ஏக்கர் நிலமும் எனில் வரி விதிப்புக்கான 2 லட்ச வரம்பை எங்கே முறையிடுவது? ஆக தங்களை ஒடுக்கப்பட்ட பார்ப்பானாக காட்டிக் கொள்வதில் இந்த பார்ப்பனிய சமூகம் முனைந்திருக்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்.. சரி ... அதை விட்டுவிடலாம் அவர்கள் ஒடுக்கப்பட்ட பார்ப்பானராகவே இருந்துவிட்டு போகலாம் அதே வேளையில் இதே ஒடுக்கப்பட்ட பார்ப்பனர்கள் துப்புரவு பணி செய்ய தயங்களை முனைப்புடன் வந்து பணி செய்ய தயாரா? அதற்கு மட்டும் ஏன் இந்த 10% இட ஒதுக்கீட்டை விலக்கி வைக்கிறது? ஏனென்றால் சாதிய சமூகத்தில் தலித்துகள் மட்டுமே துப்புரவு பணி செய்ய திணிக்கப்படுகிறார்கள் அதுவும் அதே ஹிந்துத்துவ பார்ப்பன வழியில்...உலகிலேயே வறுமை கோட்டினை மேல்நோக்கி கணக்கிட்ட அதி புத்திசாலிகள் நம் ஆர்எஸ்எஸ் மூளைகள்... இவர்களிடம் இந்த நாடு சிக்கிக்கொண்டு பாடாய்படுகிறது... இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலையும் அதனை தீர்க்கும் வழிகளையும் கைவிட்டுவிட்டு எல்லாம் இருந்து மக்களை அடிமைபடுத்தியே கொழுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அஜென்டாக்களுக்குதான்இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 76% சதவிகிதம் ( அதுவும் தோரயமாக ) தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருக்கிறது என்கிறது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வு ஆணையம்... ஆனால் இவர்களோ இருக்கும் 50% இட ஒதுக்கீட்டை மீறி மேலும் 10% பிராமணர்களுக்குவாரி வழங்குகிறது பெரும் மோசடி இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் அது நிச்சயம்சமூகநீதிக்கு எதிராகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லைதானே....இந்து மத சாதிய வர்ணாசிரம அடிப்படையில் வேண்டுமால் இவ்வாறு கணக்கிடப்படலாம் , ஆனால் ஒரு துளியளவும் இதனால் எவ்வித பிரயோசனுய் இல்லை என்பதுதான் உண்மை.பார்ப்பனியம் என்றுமே நேரடியாக எந்த காலத்திலும் மோதாது... அதன் குள்ளநரித்தனம் என்பது இடைநிலை சாதியாதிக்கர்களை தூண்டிவிட்டபடியே தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் என்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான்இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு.... ரிசர்வேஷனை ஒழித்துவிட்டால் சாதி ஒழியும் என்றும் , சாதி சர்டிபிகேட் கிழித்தால் சாதி ஒழியும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் சாதி ஒழியும் என்றும் கிருக்குத்தனமான பேச்சுகளையெல்லாம் இதே இடைநிலை சாதிகளை வைத்து பேச விட்டு இப்போது பொது பட்டியலில் 10% த்தை... மிக லாவகமாக தட்டிச்சென்றிருக்கிறது பார்ப்பனியம் , அவ்வாறே அவர்கள் ஒடுக்கப்பட்ட பிராமனியர்களாக இருக்குமாயின் அவர்களை சேரியில் குடியேறச்சொல்லுங்களேன் பார்க்கலாம்... அத்துணை முகங்களும் கோபத்தில் விழி பிதுக்கும்... ஏனெனில் இங்கு சாதியத்தை வளர்த்தெடுப்பதே அவர்கள்தானே?
இந்த மோடி அரசு மட்டுமல்ல இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த மாயாவதியாகட்டும் , பினராயி விஜயனாகட்டும் , காங்கிரஸ் ஆகட்டும் " ஒடுக்கப்பட்ணவர்களின் வாக்கு வங்கியினை விட ஆதிக்க சாதியத்தின் வாங்கு வங்கியினை கவனத்தில் கொண்டே ஆதரிக்கிறது எனலாம் .. இதன் மூலம் பெறும் ஓட்டரசியல் என்பது மிகப்பெரியதான சமூக அநீதி என்றே சொன்னால் அது மிகையாகாது. பாஜகவை பொறுத்தவரையில் அடுத்த ஆட்சிக்கு யார் வரப்போகிறார்கள் என்கிற தேர்தல் காய்ச்சலிலும் , நிச்சயமாக தலித் வாக்குகள் விழாது , அவர்களின் வாக்கு வங்கி அவசியமற்றது எனவும் , தனக்கே உரிய ஹிந்துத்துவ பார்ப்பனிய சாதிய பாசத்தாலும் , இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு வடிவம் கொடித்திருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது... நிச்சயமாக காங்கிரஸ் அடுத்த ஆட்சிக்கு வந்தாலும் இந்த மசோதாவை நிறைவேற்றியே ஆகும் , ஏனெனில் சாதியத்தை , மதத்தை வைத்து அரசியல் செய்வதில் ஆர் எஸ்எஸ் இன் இன்னொரு வடிவமாகத்தான் காங்கிரஸ் இன்றளவும் இருக்கிறது...
இந்து மதவாத சக்திகளை அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வழியில் ஒழித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே இப்போதைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது.
Sunday, January 06, 2019
குஜராத் மாடல் இதுதானா மோடி அவர்களே ?
குஜராத்தில் தலித் ஒருவரை போலீசார் காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைத்த கொடூரச் சம்பவம் நடைபெற்று உள்ளது.
#குஜராத்
ஜனவரி 03, 2018, 04:56 PM
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அம்ராய்வாடியை சேர்ந்த 40-வயது தலித் ஹர்ஷத் ஜாதவ் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் டிசம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் 15 பேரை காலணியை (ஷூவை) நாவால் சுத்தம் செய்ய ஹர்ஷத் ஜாதவ் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹர்ஷத் ஜாதவ் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் பணியை செய்து வருபவர்.
டிசம்பர் 29-ம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. என்ன காரணம் என தெரிந்துக் கொள்வதற்காக ஹர்ஷத் ஜாதவ் சென்று உள்ளார். அங்கு நடக்கும் விஷயம் என்ன என்று கேள்வியை எழுப்பி உள்ளார், ஆனால் அவர் கேள்வி எழுப்பிய நபர் கான்ஸ்டபிள் என்பது பின்னர்தான் தெரியவந்து உள்ளது.
போலீசார் வினோத்பாய் பாபுபாய் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். கான்ஸ்டபிள் எந்தஒரு காரணமும் இன்றி ஹர்ஷ்த் ஜாவதை திட்டிஉள்ளார், அடித்து உள்ளார். போலீஸ் அடியை தடுக்க முயன்ற ஹர்ஷ்த் ஜாதவின் கை விரல்களில் அடி விழுந்தது. அவருடைய மனைவி மற்றும் தாயார் ஓடி சென்று காப்பாற்ற முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. அங்கு அவருடைய ஜாதியை கேட்ட போலீசார், தங்கள் 15 பேருடைய காலணியையும் நாவால் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
வினோத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் கட்டயப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. காவல் நிலையத்தில் மிகவும் மோசமான நிலையில் அவர் நடத்தப்பட்டு உள்ளார், இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் அவரை போலீஸ் மிரட்டிஉள்ளது. இப்போது இவ்விவகாரம் வெளியே தெரியவந்து சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது.
--
இதைத்தான் குஜராத் மாடலாக இந்தியாவை உறுவாக்குவோம் என்றாரா மோடி....
Saturday, January 05, 2019
கௌசல்யா - சக்தி சச்சரவுகள் குறித்து - RJ மீனா
RJ MEENA வின் பதிவு
தமிழ் சமூகத்திற்கு வணக்கம்! நலம் சூழ்க!
27.12.2018 அன்று நடைபெற்ற சக்தி கௌசல்யா திருமணம் சார்ந்த விசாரணையில் கலந்து கொண்ட ஒரு பெண்ணாக பொது சமூகத்தின் முன்பு அங்கு நடைபெற்ற விடயங்களை சம்பந்தப்பட்ட பெண்களின் சார்பில் வைக்க விரும்புகிறேன்.
நான் நிமிர்வு கலையகத்தின் முன்னால் பறைக் கலைஞர். சக்தி கௌசல்யா மற்றும் வேறு சில பெண்கள் சார்ந்த "சில ரகசிய விடயங்கள் " எனக்குத் தெரிந்ததால் என்னை திட்டமிட்டு கலையகத்திலிருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து நான் கலையத்தில் விளக்கம் கேட்ட போது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மாறாக நான் நடத்தை சரியில்லாத பெண் என என் குறித்து கேட்ட மற்றும் கேட்காத சக தோழர்களிடம் சக்தி நேரடியாக சொல்லியது குறித்து நான் அந்த விசாரணையில் விளக்கம் கேட்டேன். ஆனால் உரிய விளக்கம் ஏதும் தராமல் நான் காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாக சொல்லப்பட்டது. மேலும் நான் சக்தியிடம் காதலிப்பதாய் சொன்னதாகவும் அந்த பிரகஸ்பதி மறுத்து என்னை கலையகத்திலிருந்து வெளியேற்றியதாகவும் சொல்லப்பட்டது. ( இவன பத்தி தெரிஞ்சும் காதலிச்சு நாசமாபோக நான் என்ன கௌசல்யாவா).
ஒரு பெண்ணை உடலியல் ரீதியாக தொந்தரவு செய்வது மட்டும் அல்ல உளவியல் ரீதியாக தொந்தரவு செய்வதும் அவளை பொதுத்தளத்தில் இயங்க முடியாதபடி செய்வதும் மன்னிக்க முடியாத குற்றம்தான். தன் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அந்த பெண்ணின் நடத்தை மீது விமர்சனம் செய்து உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தினால் அவர்கள் அஞ்சி விடுவார்கள் என்பது எங்கள் விடயத்தில் பொய்த்துப் போனது. ( இது எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் சக்தி பயன்படுத்தும் நவீன யுக்தி இதுதான்..)நாங்கள் இனிமேலும் ஒடுங்கி இருக்கமுடியாது.ஆகவே தான் எழுதுகிறேன்.
அங்கு சக்தி கௌசல்யா இருவரும் பல கேள்விகளுக்கு விமர்சனங்களுக்கு வாய் திறக்காமல் மௌனியாக இருந்தது மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் கோரிக்கைக்கு துளி கூட செவிமடுக்காமல் அவர்களாக தன்னிச்சையாய் தீர்ப்பு சொன்னது எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டு அறங்கேற்றிய நாடகம் போல இருந்தது.
1, தனிமனித ஒழுக்கம் இல்லாத சக்தி பறை இசைத்து அதை கொச்சைப் படுத்தக் கூடாது. அது தனி மனித உரிமை என சொல்வீர்களேயானால் சமூகம் சார்ந்த குறிப்பாய் அம்பேத்கரிய, பெரியாரிய மேடைகளில் சக்தி பறை வாசிக்கக் கூடாது. அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் பெயர்களை உச்சரிக்கக் கூடாது. (ஆக மொத்தம் பறையை எடுக்க கூடாது)
2. கௌசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை சங்கர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆணவப்படுகொலைப் போராளி நாடகத்தை இனியும் அரங்கேற்றக்கூடாது. அதைப்பற்றி பேசும் உரிமையையும் தகுதியையயும் இழந்துவிட்டார். இவை இரண்டு மட்டுமே நாங்கள் வைத்த கோரிக்கை ஆனால் முன்னரே முடிவு செய்து வந்தார்போல் எங்கள் கோரிக்கைகளுக்கு துளியும் செவிமடுக்காமல் சில தீர்ப்புகள் சொல்லப்பட்டது.
மூன்று இலட்ச ரூபாய் தருவதாய் சொன்னதை "அந்தப் பெண்" அங்கேயே மறுத்துவிட்டார். அதை பெறவும் இல்லை. பெறப்போவதும் இல்லை.
மொத்தத்தில் இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட திருநங்கை உட்பட எங்களுக்கும் உடன்பாடில்லை என்பதை சமூகத்தின் முன்பு சுய சாட்சியமாக ஏனைய பெண்களின் சார்பில் பதிவு செய்கிறேன்.
இவ்விருவரின் தவறுகள் மற்றும் செயல்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்ட இந்த சூழலில் அவர்கள் மேடை ஏறுவதும் போலிப் போராளிகாய் வேடமிடுவதும் நியாயம்தானா என முடிவு செய்யும் உரிமையை காலத்தின் சாட்சியாக தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கிறோம்.
பின் குறிப்பு :
நாங்கள் வைத்த மேற்படி இரண்டு கோரிக்கைகளும் கூட நாங்கள் வலிந்து திணித்தது அல்ல. திருமணத்திற்கு முன்பே சக்தி வேண்டுமா அல்லது பொதுவாழ்க்கை வேண்டுமா எனக் கேட்டபோது சக்தி தான் வேண்டும் என சொன்ன கௌசல்யாவின் வாக்கை இப்போது காப்பாற்றக் கோருகிறோம்.
திருவாளர் ஒழுக்கசீலர் சக்தியும் இனிமேல் பறையைத் தொட மாட்டேன் என சொன்னார். ஆகவே அதை செய்ய சொல்கிறோம்.
இந்த விசாரணையின் போது அவர்கள் இருவரிடமும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒருவரை ஒருவர் கிள்ளி விளையாடிக் கொண்டிருந்தது இன்னமும் அதிர்ச்சியாக இருக்கிறது. யார் என்ன பேசினாலும் பதில் சொல்லி விடக் கூடாது என திட்டமிட்டே வந்திருக்கிறார்கள்.
அறிக்கையின் முதல் வரியிலேயே திருமணத்திற்குப் பின்பு நடந்த விமர்சனங்கள் என்கிறார்கள் உண்மையில் திருமணத்திற்கு முன்பே பலருக்கும் தெரியும். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி சம்பந்தப் பட்ட பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் நடக்காது என்று வாக்குறுதி அளித்துவிட்டு ரகசியமாய் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இது பற்றிய ஆடியோ விரைவில் வெளியாகும்.
நன்றி.!
RJ MEENA
Monday, December 31, 2018
கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?
இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...
கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...
முன்னதாக வந்த செய்தி..
தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கை
சக்தி- கவுசல்யா தொடர்பாக…
1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த
குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,
எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச்
சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று,
ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத்
தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது
குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா
திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்.
முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப்
பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.
2) அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க்
கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல்
நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள
வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.
3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக
நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம்
கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.
4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து
மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு
திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்.
சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.
5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ
முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத்
தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும் துணைக்கொண்டு இயன்ற வரை எமது
கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும்
எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப்
பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.
முடிவுகள்:
1) அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி, அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கௌசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி
ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்.
2)சக்தி தன் மீதான மற்றப் பொதுவான குற்றச்சாற்றுகளை மறுத்து
விளக்கமளித்தார். எதிர்த்தரப்பினரும் குற்றச்சாற்றுகளை வலியுறுத்தி
விளக்கமளித்தனர். நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித
விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில் எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில்
நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம்: தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க
முடிகிறது.
பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் - பொதுவாழ்வில் இயங்கும்
பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும்
அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத் தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற
வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும்
இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்.
தீர்ப்பு:
1) சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.*
(*இது அப்போதே நடந்து முடிந்தது.)
2)சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும்.
3)இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும்
பறையிசைக்கக் கூடாது.
4)தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று
இலட்சம் உருவாய் செலுத்த வேண்டும்.
5)இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய
விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம்.
தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில்
ஈடுபடுவது --- தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது --– போன்ற செயல்பாடுகள் முடிவை
மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக
அறிவிக்க விரும்புகிறோம்.
தோழமையுடன்,
தியாகு /கொளத்தூர் மணி
சென்னை
29/12/18
Friday, October 12, 2018
திவாலிந்தியா
இது ஏதோ பழைய திவான்களின் நாடு என புருவங்களை உயர்த்த வேண்டாம்... அதைப் போலவே புதிய திவான்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்... மோடி ஆட்சியில் இந்தியா ஏகபோக வளர்ச்சியடையும் என மோடிக்கே 56 இன்ச் என அளந்துவிட்ட அத்துணை வாய்களும் இன்று கமுக்கமாய் வேறொரு விஷயங்கள் , சம்பவங்கள் என நம்மை மடைமாற்றிக்கொண்டே இருக்கிறது... ஆனால் ஹிந்துத்துவ பார்ப்பனிய பாஜக மோடியின் பின்னடைவுகளை பற்றி நாம் எடுத்துக்கூறினால் உடனே அவர்களுக்கு வால் முளைத்துவிடுகிறது... அந்த புதிய திவான்கள் யார்?
அதானிகளும் , அம்பானிகளும் , வால்மார்டுகளும் தான் மோடி ஆட்சியில் முளைத்த புதிய திவான்கள்... ஏதோ வளர்ச்சி , வளர்ச்சி என்று கதைத்துவிட்டு இந்த இந்திய நாட்டை சுரண்ட என்னென்ன வழிகளெல்லாம் இருக்கின்றதோ அந்தந்த வழிகளையெல்லாம் யுக்தியாக பயன்படுத்தி சனநாயக இந்தியாவில் சாதிமத வெறியை குறிப்பாக ஹிந்துத்துவ மதவெறியை கிளறி விட்டு சமத்துவத்தை , சகோதரத்துவத்தை குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை மொத்தமாய் சீர்குலைத்து இன்று "திவாலாகும்" நிலையில் கொண்டு வந்திருப்பதுதான் மோடியும் மோடிக்களை கைப்பாவையாக்கி வைத்திருக்கும் இந்த கார்ப்பரேட்டுகளின் முக்கிய பணிகளாக இருக்கிறது... எங்கும் சுரண்டல் , எதிலும் சுரண்டல் என்பதே மோடியின் ஆட்சியில் பிரதான மந்திரமாய் இருக்கிறது, இவர்களை நாட்டை சுரண்டுவது மட்டுமில்லாமல் நாட்டின் குடிமக்களையும் சேர்த்தே வதைத்தெடுக்கிறார்கள்..
அதென்ன "திவாலிந்தியா" ?
ஆமாம் இந்தியா திவாலாகும் சூழலுக்குத்தான் தற்போது தள்ளப்பட்டுள்ளது, முக்கியமாக இவர்கள் நாட்டை திவாலாக்கும் வேலையை விட ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தை திவாலாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள் , பாஜக மோடி பிரதமராக பதவியேற்றில் பெட்ரொல் விலை ரூ 30 க்கு கிடைக்கும் என அன்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ 100 ஐத் தொடப்போகிறது.. அதேபோல டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை மோடி ஆட்சிக்கு வந்தால் அபரிவிதமாக ஏற்றம் காணும் என்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் என்ன நடக்கிறது? டாலரின் மதிப்புதான் ஏற்றமடைந்து ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் அதள பாதாளத்தை நோக்கி செல்கிறது அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.47 என உயர்ந்து நிக்கிறது, இந்த தலைகீழ் விகிதங்களைத்தான் ஹிந்துத்துவ மோடியின் வளர்ச்சியென்று வரிந்துகட்டப் போகிறார்களா? எதை உயர்த்த வேண்டுமோ அது உயர்த்தப்படவில்லை, எதை குறைக்க வேண்டுமோ அதையும் குறைத்தபாடில்லை , ஆனால் இன்னமும் இவர்கள் இல்லாத அந்த 56 இன்ச்சை? (எதை?) பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். புதிய திவான்களை வளர்த்துவிட்டு பாமரர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த புதிய இந்தியா "திவாலிந்தியா" என இவர்கள்தான் பிரசவித்தார்கள் என பெருமையோடு வேண்டுமானால் மோடி பக்தர்கள் பூரிப்படைந்து கொள்ளலாம்...
இன்னமும் தேடிப் பார்க்கிறேன்...
"நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்றால்? " என ஹிந்துத்துவ பார்ப்பன பாஜகவின் காலை நக்கிக்கொண்டிருந்த ஜோ டி குரூஸ்கள் , ஜெமோக்கள் , சாருக்கள் , இப்போது புதிதாய் முளைத்த அரசியல் புள்ளியல் நிபுணர்? மாரிதாஸ்கள் எந்த எலி பொந்துக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் பேனாக்களை அவர்களே செரித்துக்கொண்டிருக்கிறார்களென்று...
எதுவானாலும் சுரண்டல்களுக்கு எப்பொதுமே பெருச்சாலிகளின் துணைவேண்டுமல்லவா.....
Wednesday, November 25, 2015
அம்மா உத்தரவின் பேரில் மழை? ஆட்சியர்களும் அடிமைகளாக,,,
தமிழக ஆளும் அதிமுக ஜெயா அரசின் சர்வாதிகார அடிமைத்தன ஆட்சிக்கு
அடையாளமாய் விளங்குவது அக்கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற
உறுப்பினர்களும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளான நாங்களும்தான் என்கிறது அரசு
உயர் மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள். அரசு
அதிகாரிகள் தாங்கள் என்ன பேசினாலும் ஜெயாவின் புகழுக்கும் அவரின் ஆதிக்க
மனோபாவத்திற்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் மிகத் தெளிவாக?
கனங்கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறார்கள். ஏதேனும் புது
வார்த்தைகளா? என்று எதிர்பார்க்கத் தேவையில்லை, எப்பொழுதும் போல
அக்கட்சியின் தொண்டர்கள் வரையில் உபயோகப்படுத்தும் அதே "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என்கிற தங்கத்தாரகையின் தாரக மந்திரம்தான் அது,,,
ஆனால் அத்தாரக மந்திரத்தை உபயோகித்த மாவட்ட ஆட்சியர் தற்போது பெரும்
சிக்கலில் மாட்டி அவதிப்படுகிறார். படித்த படிப்பை மறந்து, பெற்ற அறிவை
துறந்து, வகிக்கும் பதவியை பறக்கவிட்டு, எதற்கெடுத்தாலும் "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என உபயோகித்தால் அவஸ்தைகள் தானாகவே தேடிவருமென்பதற்கு
நல்லதொரு உதாரணமாய் விளங்கிறார் அந்த! மாவட்ட ஆட்சியர். மக்களுக்கு
முழுநேர பணிசெய்யும் உன்னதப் பதவியையும் ஆளும் அதிமுக ஜெ அரசிற்கு அடகு
வைத்துவிட்ட இவ்வகை அரசு அதிகாரிகளின் அடிமை வாழ்க்கையை விட, ஏழைகள் ஒன்று இழிவாக வாழ்ந்துவிட வில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்
மாவட்ட ஆட்சியர் சம்பத். இயற்கையின் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட
வடகிழக்கு பருவநிலையின் காரணமாக பொழிந்த மழையின் தாக்கம் குறித்து சேலம்
மாவட்ட நிலவரங்களை குறிப்பிடுகையில் அம்மாவட்ட ஆட்சியர் சம்பத் IAS,
அவர்கள் சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது,
''முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு
பெய்துள்ளது" என்றார். இதனை ஆராய்ந்தால் இயற்கைக்கு உத்தரவு போடும்?
அளவிற்கு மாநிலத்தை ஆளும் ஜெயாவிற்கு ஏகாதிபத்திய அதிகாரம்
இருந்திருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. மழையே ! உடனே
தமிழகம் இறங்கி வா! என இயற்கைக்கே உத்தரவு போட்ட ஜெயா அவர்கள்
மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானபோது "நான் மூன்று
நாட்களுக்குத்தான் உத்தரவு போட்டேன் இந்த மழை ஒரே நாளில் பெய்துவிட்டது
ஆகவே மழையின் மீது அவதூறு வழக்கு போடப்போகிறேன் என்று இதுவரையில் சட்ட
நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆட்சியர் சம்பத் இக்கேள்வியை
புறக்கணித்தாலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி
என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு
அனுப்பியிருக்கிறார். அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன்.
"முதல்வர் உத்தரவின் படி" மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கான
முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு,
கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்று அவர் படித்த
படிப்பும்,பெற்ற அறிவும், வகிக்கும் பதிவியும் எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறது. முற்றாக அதிமுக ஜெவின் அடிமைகளாகிப் போன
தமிழகத்தையும்,அதன் அமைச்சர்களையும், அதன் அரசு உயர் ஆட்சியாளர்களையும்
இனி காப்பாற்றவோ, கரைசேர்க்கவோ முடியாது என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.
அடையாளமாய் விளங்குவது அக்கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற
உறுப்பினர்களும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளான நாங்களும்தான் என்கிறது அரசு
உயர் மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள். அரசு
அதிகாரிகள் தாங்கள் என்ன பேசினாலும் ஜெயாவின் புகழுக்கும் அவரின் ஆதிக்க
மனோபாவத்திற்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் மிகத் தெளிவாக?
கனங்கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறார்கள். ஏதேனும் புது
வார்த்தைகளா? என்று எதிர்பார்க்கத் தேவையில்லை, எப்பொழுதும் போல
அக்கட்சியின் தொண்டர்கள் வரையில் உபயோகப்படுத்தும் அதே "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என்கிற தங்கத்தாரகையின் தாரக மந்திரம்தான் அது,,,
ஆனால் அத்தாரக மந்திரத்தை உபயோகித்த மாவட்ட ஆட்சியர் தற்போது பெரும்
சிக்கலில் மாட்டி அவதிப்படுகிறார். படித்த படிப்பை மறந்து, பெற்ற அறிவை
துறந்து, வகிக்கும் பதவியை பறக்கவிட்டு, எதற்கெடுத்தாலும் "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என உபயோகித்தால் அவஸ்தைகள் தானாகவே தேடிவருமென்பதற்கு
நல்லதொரு உதாரணமாய் விளங்கிறார் அந்த! மாவட்ட ஆட்சியர். மக்களுக்கு
முழுநேர பணிசெய்யும் உன்னதப் பதவியையும் ஆளும் அதிமுக ஜெ அரசிற்கு அடகு
வைத்துவிட்ட இவ்வகை அரசு அதிகாரிகளின் அடிமை வாழ்க்கையை விட, ஏழைகள் ஒன்று இழிவாக வாழ்ந்துவிட வில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்
மாவட்ட ஆட்சியர் சம்பத். இயற்கையின் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட
வடகிழக்கு பருவநிலையின் காரணமாக பொழிந்த மழையின் தாக்கம் குறித்து சேலம்
மாவட்ட நிலவரங்களை குறிப்பிடுகையில் அம்மாவட்ட ஆட்சியர் சம்பத் IAS,
அவர்கள் சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது,
''முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு
பெய்துள்ளது" என்றார். இதனை ஆராய்ந்தால் இயற்கைக்கு உத்தரவு போடும்?
அளவிற்கு மாநிலத்தை ஆளும் ஜெயாவிற்கு ஏகாதிபத்திய அதிகாரம்
இருந்திருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. மழையே ! உடனே
தமிழகம் இறங்கி வா! என இயற்கைக்கே உத்தரவு போட்ட ஜெயா அவர்கள்
மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானபோது "நான் மூன்று
நாட்களுக்குத்தான் உத்தரவு போட்டேன் இந்த மழை ஒரே நாளில் பெய்துவிட்டது
ஆகவே மழையின் மீது அவதூறு வழக்கு போடப்போகிறேன் என்று இதுவரையில் சட்ட
நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆட்சியர் சம்பத் இக்கேள்வியை
புறக்கணித்தாலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி
என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு
அனுப்பியிருக்கிறார். அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன்.
"முதல்வர் உத்தரவின் படி" மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கான
முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு,
கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்று அவர் படித்த
படிப்பும்,பெற்ற அறிவும், வகிக்கும் பதிவியும் எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறது. முற்றாக அதிமுக ஜெவின் அடிமைகளாகிப் போன
தமிழகத்தையும்,அதன் அமைச்சர்களையும், அதன் அரசு உயர் ஆட்சியாளர்களையும்
இனி காப்பாற்றவோ, கரைசேர்க்கவோ முடியாது என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.
Tuesday, November 24, 2015
தலித் பெண் (கர்ப்பிணி) மீது தாக்குதல், பார்ப்பானியத்தின் கோவில் நுழைவுத் தடைகள் உடைபடுமா?
ஒருங்கிணைந்த சமூகத்தின் ஒற்றுமை பிரதிபிம்பம் என்பது கூடிவாழ்தலும்,
கூட்டு முயற்சிக்கு ஒத்துழைத்தலுமேயாகும் . அதுவே சமூகச் சீரமைப்பிற்கான
வழியாக இருக்கிறது. ஆனால் இந்தியத்தில் அவ்வாறான கூடிவாழ்தலுக்கும்,
கூட்டுமுயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பது நடப்பு நிகழ்கால
சான்றாக விளங்குகிறது.
எத்தனையோ யுகங்கள் கடந்தபின்னரும் தொட்டால் தீட்டு, தொழுதால் தீட்டு,
என்று தலித்திய சிறுபான்மை மக்கள் மீது இந்துத்துவ பார்பானியம்
தொடுக்கும் அடிமைமுறை சங்கிலித் தொடராவாகவே நீண்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருந்து வந்துவிடும் இங்கே சமத்துவம். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு
, ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட தலித்துகளின் வாழ்வியல் துயரங்களை
விளக்கினால் நிச்சயமாக பார்ப்பானியம் நிர்வாணமாய் நடுத்தெருவில்
நிற்கும். அந்த அளவிற்கு தலித்துகள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகள் அளவு
கடந்து ஓர் எல்லையில்லாப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதற்கும்
ஓர் அளவுத் தீர்மானத்தை முன்வைக்கும் பல்வேறு விதமான முற்போக்குகாளர்கள்
தலித்துகள் மீதான தீண்டாமைகளுக்கு எவ்வித அளவு வைக்கப்படவேண்டுமென்றே
தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். எங்கும் தீண்டாமை , எதிலும்
தீண்டாமை என்றால் அவர்களால் என்ன செய்துவிட முடியும். குறைந்தபட்சம்
தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்களின் கருத்துக்களையும்
அவர்கள்தம் எழுத்துக்களையும் வெகுசன மக்களிடையே எடுத்துச் செல்ல கடுமையாக
உழைத்தாலும் காலத்தின் கொடுமைகள் தலித்தின விரோதப்போக்கினை
ஆதிக்கர்களிடமிருந்து மீட்டெடுக்கவே முடியவில்லை, இந்தியத்தில் தலித்தின
மக்கள் மீதான தீண்டாமை 3000 வகைகளைக் கொண்டுள்ளது இவைகள் வெளிப்படையாக
அறிந்த தீண்டாமைகள் மட்டுமே,,
இதில் நவீனத் தீண்டாமைகள் இடம்பெறவில்லை, இத்தீண்டாமை வகைகளில் "கோவில்
நுழைவுத் தடை" பரவலாக்கப்பட்டிருக்கிறது . "கோவில் நுழைவுத் தடை" எனும்
தீண்டாமைக்கு நேரடியாகவே பாதிக்கப்பட்டும் அதை எதிர்த்து புரட்சிப்
பிழம்பாய் வெகுண்டெழுந்து வெற்றி கண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை
இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் , மகாராஷ்டிர மண்ணில் அம்பேத்கரும்
தென்னிந்திய தமிழ்த் திராவிட மண்ணில் வைக்கம் போராட்ட பெரியாரும் கோவில்
நுழைவு போராட்டத்தில் அளப்பறிய தன் கடமைகளை செய்தவர்களாக
இருந்திருக்கிறார்கள், இருந்தும் தலித்துகள் மீதான காழ்ப்புணர்சியின்
காரணமாக ஆதிக்க இந்துத்துவர்கள் கோவில்களில் அனுமதிப்பதில்லை, தொடர்ந்து
பின்பற்றப்படும் இத்தீண்டாமைக்கு எதிரான குரல்கள் தலித்துகளைப் போலவே
நசுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட
வேண்டியதாயிருக்கிறது. "தன்னை விடவும் தன் இனத்தை சேர்ந்த ஒரு தலித்தை
விடவும் ஒரு சாதி இந்துவை உயர்வாக மதிக்க தலித் ஒருவருக்கு
கற்றுத்தரபட்டிருக்கிறது என்கிறார் -அம்பேத்கர் , அதன்படியே தானொரு
ஆதிக்கச்சாதியாளன் ஆகவே தன்னுடைய அடிமைத்தனத்திற்கெல்லாம் நீ அடிபணிய
வேண்டும், அப்படி இல்லையெனில் நீ மண்ணில் மரணத்தைத் தழுவ நேரிடும் என்பதே
ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியத்தின் மிரட்டலாக இருக்கிறது.
அம்மிரட்டலுக்கு பயந்த தலித்தினம் ஒருவிதத்தில் மீண்டெழுந்தாலும் அவர்களை
அடக்கியாளுவதில் கொஞ்சமும் சளைத்துபோகவில்லை ஆதிக்க இந்துத்துவம்.
அதன்படியே தலித்துகள் கோவிலுக்குள் நுழைவதை தடைசெய்வது காலங்காலமாக
இந்தியத்தில் எழுதப்படாத சட்டமாகவே தொடர்ந்து பின்பற்றப்படுகிறது, சென்ற
மாதம் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட ஓர் தலித் முதியவரை அடித்து அதே
இடத்தில் எரித்து கொன்றிருக்கும் ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியம் அதனைத்
தொடர்ந்து,,, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (22-11-2015) உத்தரகாண்ட்
மாநிலம் டேராடூன் மாவட்டம் கபேலா கிராமத்தில் குகர்ஷி மகராஜ் கோவிலில்
நுழைய முற்பட்டதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணையும்
(கர்ப்பிணி) அவரது கணவன், மாமனார் ஆகியோரை அங்கிருக்கும் ஆதிக்கச்
சாதிவெறி இந்துத்துவர்கள் மூவரையும் தடுத்ததுடன் அல்லாமல் சம்மந்தப்பட்ட
பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் கட்டப்
பஞ்சாயத்தின் மூலம் மூன்று பேருக்கும் தலா ரூ.501 அபராதமும்
விதித்திருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தை போல் இந்துக்களின்
எழுதப்படாத தலித் விரோத சட்டத்தின் படி குகர்ஷி மகராஜ் கோவிலுக்குள்
நுழையவோ வெளியில் நின்று வணங்கவோ தலித் பிரிவினருக்கு அனுமதி மறுத்து
அக்கிராமத்து இந்து ஆதிக்கர்கள் தடை விதித்திருக்கிறார்கள். அத்தடையினை
எதிர்த்து வெகுண்டெழுந்த கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவர் மற்றும்
மாமனரையும் தண்டித்திருக்கிறது ஆதிக்கச் சாதியம், தகவலறிந்த காவல்துறை
கண்துடைப்புக்காக மூன்றுபேரை மட்டும் கைது செய்திருக்கிறது. ஆதிக்கம்
அதன் அடிமைபடுத்தும் வெறித்தனத்திலிருந்து இன்றளவும் தம்மை
மாற்றிக்கொள்ளவில்லை என்பதை இங்கே உணர்த்தப்படுகிறது. மேலும் ஒரு
தகவலுக்காக புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு
ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research -
NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய
சர்வேயில் "நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்" எனும்
அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கையில் உண்மையில் ஆதிக்க சாதிவெறியைக்
கண்டு அச்சப்படவே முடிகிறது.
அம்பேத்கர் அன்று சொன்ன "இந்துக்கள் தலித்துகளை மிருகங்களை விடக் கேவலமாக
நடத்துகிறார்கள்" என்பதை இன்றளவும் கண்கூடாக பார்க்கமுடிகிறதெனில் எங்கே
பிறந்து விடும் இங்கே சமத்துவம்? மீண்டும் இங்கே உரக்கச் சொல்லப்படுவது
ஒன்றே "தலித்தின விடுதலை இல்லாமல் இந்தியத்தில் சமத்துவத்திற்கு
வழியில்லை"
கூட்டு முயற்சிக்கு ஒத்துழைத்தலுமேயாகும் . அதுவே சமூகச் சீரமைப்பிற்கான
வழியாக இருக்கிறது. ஆனால் இந்தியத்தில் அவ்வாறான கூடிவாழ்தலுக்கும்,
கூட்டுமுயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பது நடப்பு நிகழ்கால
சான்றாக விளங்குகிறது.
எத்தனையோ யுகங்கள் கடந்தபின்னரும் தொட்டால் தீட்டு, தொழுதால் தீட்டு,
என்று தலித்திய சிறுபான்மை மக்கள் மீது இந்துத்துவ பார்பானியம்
தொடுக்கும் அடிமைமுறை சங்கிலித் தொடராவாகவே நீண்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருந்து வந்துவிடும் இங்கே சமத்துவம். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு
, ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட தலித்துகளின் வாழ்வியல் துயரங்களை
விளக்கினால் நிச்சயமாக பார்ப்பானியம் நிர்வாணமாய் நடுத்தெருவில்
நிற்கும். அந்த அளவிற்கு தலித்துகள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகள் அளவு
கடந்து ஓர் எல்லையில்லாப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதற்கும்
ஓர் அளவுத் தீர்மானத்தை முன்வைக்கும் பல்வேறு விதமான முற்போக்குகாளர்கள்
தலித்துகள் மீதான தீண்டாமைகளுக்கு எவ்வித அளவு வைக்கப்படவேண்டுமென்றே
தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். எங்கும் தீண்டாமை , எதிலும்
தீண்டாமை என்றால் அவர்களால் என்ன செய்துவிட முடியும். குறைந்தபட்சம்
தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்களின் கருத்துக்களையும்
அவர்கள்தம் எழுத்துக்களையும் வெகுசன மக்களிடையே எடுத்துச் செல்ல கடுமையாக
உழைத்தாலும் காலத்தின் கொடுமைகள் தலித்தின விரோதப்போக்கினை
ஆதிக்கர்களிடமிருந்து மீட்டெடுக்கவே முடியவில்லை, இந்தியத்தில் தலித்தின
மக்கள் மீதான தீண்டாமை 3000 வகைகளைக் கொண்டுள்ளது இவைகள் வெளிப்படையாக
அறிந்த தீண்டாமைகள் மட்டுமே,,
இதில் நவீனத் தீண்டாமைகள் இடம்பெறவில்லை, இத்தீண்டாமை வகைகளில் "கோவில்
நுழைவுத் தடை" பரவலாக்கப்பட்டிருக்கிறது . "கோவில் நுழைவுத் தடை" எனும்
தீண்டாமைக்கு நேரடியாகவே பாதிக்கப்பட்டும் அதை எதிர்த்து புரட்சிப்
பிழம்பாய் வெகுண்டெழுந்து வெற்றி கண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை
இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் , மகாராஷ்டிர மண்ணில் அம்பேத்கரும்
தென்னிந்திய தமிழ்த் திராவிட மண்ணில் வைக்கம் போராட்ட பெரியாரும் கோவில்
நுழைவு போராட்டத்தில் அளப்பறிய தன் கடமைகளை செய்தவர்களாக
இருந்திருக்கிறார்கள், இருந்தும் தலித்துகள் மீதான காழ்ப்புணர்சியின்
காரணமாக ஆதிக்க இந்துத்துவர்கள் கோவில்களில் அனுமதிப்பதில்லை, தொடர்ந்து
பின்பற்றப்படும் இத்தீண்டாமைக்கு எதிரான குரல்கள் தலித்துகளைப் போலவே
நசுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட
வேண்டியதாயிருக்கிறது. "தன்னை விடவும் தன் இனத்தை சேர்ந்த ஒரு தலித்தை
விடவும் ஒரு சாதி இந்துவை உயர்வாக மதிக்க தலித் ஒருவருக்கு
கற்றுத்தரபட்டிருக்கிறது என்கிறார் -அம்பேத்கர் , அதன்படியே தானொரு
ஆதிக்கச்சாதியாளன் ஆகவே தன்னுடைய அடிமைத்தனத்திற்கெல்லாம் நீ அடிபணிய
வேண்டும், அப்படி இல்லையெனில் நீ மண்ணில் மரணத்தைத் தழுவ நேரிடும் என்பதே
ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியத்தின் மிரட்டலாக இருக்கிறது.
அம்மிரட்டலுக்கு பயந்த தலித்தினம் ஒருவிதத்தில் மீண்டெழுந்தாலும் அவர்களை
அடக்கியாளுவதில் கொஞ்சமும் சளைத்துபோகவில்லை ஆதிக்க இந்துத்துவம்.
அதன்படியே தலித்துகள் கோவிலுக்குள் நுழைவதை தடைசெய்வது காலங்காலமாக
இந்தியத்தில் எழுதப்படாத சட்டமாகவே தொடர்ந்து பின்பற்றப்படுகிறது, சென்ற
மாதம் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட ஓர் தலித் முதியவரை அடித்து அதே
இடத்தில் எரித்து கொன்றிருக்கும் ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியம் அதனைத்
தொடர்ந்து,,, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (22-11-2015) உத்தரகாண்ட்
மாநிலம் டேராடூன் மாவட்டம் கபேலா கிராமத்தில் குகர்ஷி மகராஜ் கோவிலில்
நுழைய முற்பட்டதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணையும்
(கர்ப்பிணி) அவரது கணவன், மாமனார் ஆகியோரை அங்கிருக்கும் ஆதிக்கச்
சாதிவெறி இந்துத்துவர்கள் மூவரையும் தடுத்ததுடன் அல்லாமல் சம்மந்தப்பட்ட
பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் கட்டப்
பஞ்சாயத்தின் மூலம் மூன்று பேருக்கும் தலா ரூ.501 அபராதமும்
விதித்திருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தை போல் இந்துக்களின்
எழுதப்படாத தலித் விரோத சட்டத்தின் படி குகர்ஷி மகராஜ் கோவிலுக்குள்
நுழையவோ வெளியில் நின்று வணங்கவோ தலித் பிரிவினருக்கு அனுமதி மறுத்து
அக்கிராமத்து இந்து ஆதிக்கர்கள் தடை விதித்திருக்கிறார்கள். அத்தடையினை
எதிர்த்து வெகுண்டெழுந்த கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவர் மற்றும்
மாமனரையும் தண்டித்திருக்கிறது ஆதிக்கச் சாதியம், தகவலறிந்த காவல்துறை
கண்துடைப்புக்காக மூன்றுபேரை மட்டும் கைது செய்திருக்கிறது. ஆதிக்கம்
அதன் அடிமைபடுத்தும் வெறித்தனத்திலிருந்து இன்றளவும் தம்மை
மாற்றிக்கொள்ளவில்லை என்பதை இங்கே உணர்த்தப்படுகிறது. மேலும் ஒரு
தகவலுக்காக புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு
ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research -
NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய
சர்வேயில் "நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்" எனும்
அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கையில் உண்மையில் ஆதிக்க சாதிவெறியைக்
கண்டு அச்சப்படவே முடிகிறது.
அம்பேத்கர் அன்று சொன்ன "இந்துக்கள் தலித்துகளை மிருகங்களை விடக் கேவலமாக
நடத்துகிறார்கள்" என்பதை இன்றளவும் கண்கூடாக பார்க்கமுடிகிறதெனில் எங்கே
பிறந்து விடும் இங்கே சமத்துவம்? மீண்டும் இங்கே உரக்கச் சொல்லப்படுவது
ஒன்றே "தலித்தின விடுதலை இல்லாமல் இந்தியத்தில் சமத்துவத்திற்கு
வழியில்லை"
Subscribe to:
Posts (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...























