Sunday, November 29, 2015

இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS

இந்துத்துவ பார்ப்பானிய மதவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஷ்வ இந்து பர்ஷித், சிவசேனா, இன்னும் பல இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றபோது அதன் மையப்புள்ளியான பார்ப்பானியத்தை முன்வைத்தே எதிர்க்கின்ற வேளையில் மதவாத ஆதர்வாளர்கள் பார்ப்பனர்களை ஆதரிக்கும் விதமாக வாதம் புரிவதை முற்போக்காளர்கள் கண்டிருப்பார்கள். அவர்கள் பார்ப்பனர்க்கும் மேற்கண்ட இயக்கம் மற்றும் கட்சிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை, பார்ப்பனர்கள் எங்கேயும் நிர்வாக பொறுப்புநிலைகளில்...

நடிகர்களை "கூத்தாடிகள்" என இழிவுபடுத்துவது சரிதானா?

திரையுலக கலைத்துறையினரை விமர்சிக்கவும்,அவர்களை கீழ்த்தரமாக வசைபாடவும் பெரும்பாலான தமிழ்ச்சமூக மக்களால் பயன்படுத்தப்படும் வார்த்தை "கூத்தாடிகள்" என்பதாக இருக்கிறது. எழுத்துலக விமர்கர்களும் , அறிவுலக முற்போக்காளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல,அவர்களும் திரையுலக விமர்சனத்திற்கு "கூத்தாடிகள்" என்றே பயன்படுத்துகின்றனர். இது பொதுவாக இழிவுபடுத்தவே பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறிவார்கள், கலைத்துறை சார்ந்தோரை "கூத்தாடிகள்" என இழிபடுத்துவது சரியா? என்கிற...

Friday, November 27, 2015

ஊடறுக்கும் ஓர் இரவில்

மெல்ல மெல்ல ஆடைகளை அவிழ்த்து என் மேனிதனை தழுவி காற்றின் மென்மையாக படர்கிறான் அவனொரு கொடிமலர் போல மோகம் துளிர்த்து மனதை தளர்த்தி மெய்சிலிர்த்து எனனுள்ளே அனலாய் ஏறும் காம இச்சைதனை உச்சி முகர்ந்தேன் உச்சந்தலையில் ஓங்கி விழந்தன அதிர்வலைகள் இன்பக்கடலில் உணவு தேடும் உணர்சியின் மறுவேகத்தடையாக ஏதோவொன்று அவ்வப்போது அலைபாயும் சங்கடத்தில் இருந்தும் நான் பாய்விரிப்பில் அப்படியே அரைநிர்வாணமாய் சங்கடச்செய்தி விஷ்வரூபமெடுக்க திணருகிறேன் என்னை உள்ளே தள்ளிவிட்டு...

Wednesday, November 25, 2015

அம்மா உத்தரவின் பேரில் மழை? ஆட்சியர்களும் அடிமைகளாக,,,

தமிழக ஆளும் அதிமுக ஜெயா அரசின் சர்வாதிகார அடிமைத்தன ஆட்சிக்கு அடையாளமாய் விளங்குவது அக்கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளான நாங்களும்தான் என்கிறது அரசு உயர் மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள். அரசு அதிகாரிகள் தாங்கள் என்ன பேசினாலும் ஜெயாவின் புகழுக்கும் அவரின் ஆதிக்க மனோபாவத்திற்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் மிகத் தெளிவாக? கனங்கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறார­்கள். ஏதேனும் புது...

திருவாங்கூர் சமஸ்த்தான இந்துத்துவ தலைவரின் ஆணாதிக்க கருத்து,,,

நாம் பார்க்கும் சராசரி நடவடிக்கைகளில் ஒன்று டாஸ்மாக கடைகளில் எப்போதும் அலைமோதும் கூட்டங்களை பார்த்தும் பார்க்காதவாறே அல்லது அதனை சகித்துக்கொண்டே கடந்து போவோம், ஆனால் கார்த்திகை மாதம் பிறந்து விட்டலே ஒரு ஆத்ம திருப்தி நமக்குள் முளைக்கத் தொடங்கும், அதற்கு காரணம் "அப்பாடா ஓரளவிற்கு யாரும் குடிச்சிட்டு வண்டி ஓட்ட மாட்டங்க" "இப்பதா நிம்மதியா இருக்கு குடிச்சிட்டு அவ்வளவா யாரும் வம்பிழுக்கல" இப்படியான சிந்தனைகளும் அதிலொரு மனநிம்மதியே நமக்கு வரும். இந்த...

Tuesday, November 24, 2015

விகடன் மீது வழக்கு தமிழக முதல்வர் அதிரடி

தமிழத்தின் முன்னணி பத்திரிக்கையான விகடன் முழுமையாக வலதுசாரிய ஈடுபாடு கொண்டிருந்தாலும் , அதன் சமூக அக்கரை கொண்ட கட்டுரைகளும்,கருத்து­க்களும் பாராட்டுதலுக்குரியதா­கவே இருக்கும். பல்வேறு தரப்பினர்களின் வாசிப்புகளுக்கு தேர்ந்த சுவாரஸ்யமான செய்திகளை வெளியிடுவதை கடமையாக கொண்டிருக்கிறது விகடன் , அந்த வகையில் ஆளும் அதிமுக ஜெயா அரசின், அமைச்சர்கள் மீதான அலசல் அறிக்கையின் சிறப்புக் கட்டுரையாக, முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, ''என்ன செய்தார்...

தலித் பெண் (கர்ப்பிணி) மீது தாக்குதல், பார்ப்பானியத்தின் கோவில் நுழைவுத் தடைகள் உடைபடுமா?

ஒருங்கிணைந்த சமூகத்தின் ஒற்றுமை பிரதிபிம்பம் என்பது கூடிவாழ்தலும், கூட்டு முயற்சிக்கு ஒத்துழைத்தலுமேயாகும்­ . அதுவே சமூகச் சீரமைப்பிற்கான வழியாக இருக்கிறது. ஆனால் இந்தியத்தில் அவ்வாறான கூடிவாழ்தலுக்கும், கூட்டுமுயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பது நடப்பு நிகழ்கால சான்றாக விளங்குகிறது. எத்தனையோ யுகங்கள் கடந்தபின்னரும் தொட்டால் தீட்டு, தொழுதால் தீட்டு, என்று தலித்திய சிறுபான்மை மக்கள் மீது இந்துத்துவ பார்பானியம் தொடுக்கும் அடிமைமுறை சங்கிலித்...

துப்புரவுத் தொழிலாளிகள் என்றால் கேவலமானவர்களா?

வீட்டின் அத்யாவசியத் தேவைகளை வாங்குவதற்காக அன்று கடைத்தெருவுக்கு சென்றிருந்தேன், வழக்கம்போல மழைத் தூறல் விடாமல் போட்டுக்கொண்டே இருந்தது. ஒருவழியாக அனைத்தையும் வாங்கியெடுத்துக் கொண்டு என் இருசக்கர வாகனத்தை பறக்க விட்டேன் (மெதுவாகத்தான் 40 தாண்டாமல் பார்த்துக்கொள்வது வழக்கம்,பழைய வாகனம் என்பதால் விரட்டினாலும் ஓரடி எடுத்து வைக்காது) வழியில் எதையோ வாங்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன், என்ன அதுவென்று பாதிதூரம் கடந்த பின்னர் நினைவுக்கு வர,,, அருகிலேயே...

Monday, November 23, 2015

அம்பேத்கரின் புத்தமத உறுதிமொழி ஏற்புரை,,,

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1956 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 இல் புத்த மார்க்கத்தில் தன்னை இணைந்த பின் 22 உறுதிமொழி ஏற்பு சூளுரைகளை பிரகடனப்படுத்தினார். அவை வருமாறு: 1. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு வழிபடவும் மாட்டேன். 2. ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு வழிபடவும் மாட்டேன். 3. கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங்களிடமும் பெண் தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை;...

பேசும் இதயம் 2

காலத்து இடைவெளியில் கருவேலங்காடு முளைத்திருந்தது பயனற்ற என் கடுங்கோபமும் விறகாகும் என் மனமும்,,, __________ என் மனச் சிறையை குடைந்து கொண்டிருக்கிறேன் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் நானொரு சுதந்திரப் பறவையாக,,, __________ எதுவும் எமக்கானதில்லை என்றபின் எழுந்தாடுகிறது என் மௌனம்,,, __________ இதழில் முத்தம் பதிக்கையில் இதயம் கவிதை எழுதுகிறது காதல் வயப்படும் கண் சொக்கியே நிரந்தரமாய்,,, __________ பசிக்கிறது தட்டில் ஈரம் ஒட்டவேயில்லை வயிற்றில்,,,...

Sunday, November 22, 2015

நடிகைகளின் விபச்சார ஈடுபாடும், முத்தப்போராட்ட முக்கிய குற்றவாளியும்

முற்போக்கு என்றாலும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பதும் பிற்போக்கு என்றும் தளவளையத்திற்குள் வந்துவிடுகிறது. அந்த வகையில் கடந்த (2014) ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்திய ஊடககங்களாலும் , முற்போக்காளர்களாலும்­­ பெரிதும் கவரப்பட்ட ஓர் போராட்டம்தான் "கிஸ் ஆஃப் லவ்" எனும் முத்தப் போராட்டம். சென்னைப்பெருநகரத்து உயர்படிப்பாளர்களான IIT மாணவர்கள் இந்த முத்தப் போராட்டத்தால் தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்தார்கள்­­ போலவே தொடங்கப்பட்ட...

என்னுள் நீயாக,,,

நானாக என்னுள் நீயாக நம்மில் மெய்யாக உயிரின் அர்த்தங்களை உள்ளங்கையில் சேகரித்திருக்கிறோம் செங்காந்தள் மலராக சீமை விளக்காக ஞானப் பொருளாக நமக்குள்ளே காதல் வீதியுலா வருவதற்கு வாழ்க்கை கனவுகளை தீர்மானித்து வைத்திருக்கிறோம் வந்ததும் சென்றதும் வரப்போவதுமாக நிஜங்களை விழுதுகளாக நிழல்களை இரவாக இமைகளின் இம்சைகளாக ஒன்றிக் கலந்து உறவாடும் உன்னத பரிமாற்ற நிகழ்வுகளை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம் வாழலாம் வாவென அழைக்கிறாய் வசந்தமாய் வருகிறேனென இசைகிறேன் மலர்தேடும்...

Saturday, November 21, 2015

பேஸ்புக்கில் என் சுய பாதுக்காப்பு முறைகள்

உலக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த ஒன்றுதான் பேஸ்புக்காக இருக்கிறது. தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதவும் பரிமாறிக்கொள்ளவும் மிக எளிதான ஓர் சமூக வலைதளமாக பேஸ்புக் இருந்திருக்கிறது , இந்த பேஸ்புக்கில் போலி கணக்கர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிரு­க்கின்ற வேளையில் அவர்களிடமிருந்து நம்மையும் நம் நட்பு வட்டங்களையும் சேர்த்தே பாதுகாப்பளிக்கபட வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. ஆகவே நமது பாதுகாப்போடும் அடுத்தவரின் பாதுகாப்புக்களையும்...

நீயாவது விட்டுக்கொடுத்திருக்கலாம்,,,

உனதாடை கிழிந்துள்ளது அப்படியே திரிகிறாயே கழற்றிக் கொடு இப்படி அம்மா அதட்டுகிறாள் அமைதியாக அவிழ்த்துத் தருகிறேன் எனதாடைகளை வெளித்தோற்றத்து கிழிசலை தைக்கும் அம்மாவின் நூலூசிகளால் நிச்சயம் கோர்த்து தைக்க முடியாது என் பிளந்து கிடக்கும் மனதினை மௌனத்தில் ஒருதுளி விசம் கலந்து கொடுத்தால் வலியில்லாமல் சாவேன் என் காதலால் உடைந்த மனதாலெழும் வலிகளை விட அதுவொன்றும் மரணவேதனையன்று எப்படிச் சொல்வேன் இதனை என் அம்மாவிடம் அவள் அழுவாளா ஆறுதல் சொல்வாளா இல்லை கோபக் கொடுஞ்சொல்லாயுதம்...

பருப்பு விலையில் பணம் கண்ட கார்ப்பரேட்டுகள்,,,

பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென விதிமுறைகளை தளர்த்தியது போன்ற விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டினை "அகில இந்திய விவசாயிகள் சங்கம்" எழுப்பியிருக்கிறது. பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதித்ததை தொடர்ந்து, பருப்பு 1 கிலோ வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு...

Friday, November 20, 2015

நடிகர் சங்க அறிவிப்பும் நமக்கான விழிப்பும்

மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரட்சனையை மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும். முதல்வரை சந்தித்த பின் நடிகர் சங்க நிர்வாகிகள் இப்படி அறிவித்திருக்கிறார்கள். மாற்றுக் கோணத்தில் நடிகர்கள் சங்கம் கூடியெடுக்கும் முடிவுகளிலும் சிலச் சாதகமானவைகள் இடம்பெறவேச் செய்கின்றன. ஈழ இனப்படுகொலை குறித்து ரஜினி ஏன் பேசவில்லை, உலகவங்கிகள் ஒப்பந்தம் குறித்து...

யாழ் நூலகம்

காற்றசைவின் சப்தங்களையும் மறந்து போயின மரங்கள் புத்தகங்களை புரட்டும் கைகள் இசைத்துக் கொண்டிருந்தது ஓர் அழகான அனுபவத்தை உள்ளே மேசை நாற்காலியில் வாழ்க்கைப் பாடம் கற்கும் பள்ளிச் சிறுவர்களும் கல்லூரிக் கனவாளர்களும் ஒரு புரத்தில் தான் பெற்ற ஏற்கனவே அனுபவித்த வாழ்க்கையின் மனச்சாரல்களை அசைபோட்டும் இனி வாழப்போகும் காலத்திய கனவுகளை அலசியும் ஆத்மார்த்தமாய் புத்தகம் வாசிக்கும் முதியோர்கள் ஒரு புரத்தில் எழுதியும் எழுதப்படாமலும் எழுத்தின் மூச்சினை எப்போது வேண்டுமாலும்...

அன்பெனும் ஆகாசப் பறவைகள்

அடுத்த நிமிடமே அழத்துடிக்கும் மனங்களுக்காக ஏதோ ஓரிடத்தில் மடைகளைத் திறந்தே வைத்திருக்கிறது அன்பெனும் நேசம் தாவிக்குதித்து பெருங்கோபம் தவிர்த்து அமைதியாய் ஆனந்தமாய் தேன் சுரக்கும் பூக்களின் நறுமணங்களாய் நேசமிங்கே யார் கண்ணிலும் படாமல் ஓர் அழுகையின் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாகிறது யாருக்காக அழுகிறது இந்த மனம் ஆராய்ச்சியின் முடிவில் இலக்கணங்கள் உடைகின்றன இமைகளின் துடிப்புகளை அன்பெனும் ஆழ்கடல் அள்ளி அணைக்கிறது சிந்தப்படும் கண்ணீரில் அடுத்தவர்...

Thursday, November 19, 2015

இணைய உலகிற்கு என் நன்றிகள்!

இவ்வாண்டில் 300 பதிவுகளை எழுதிக் கடந்துவிட்டேன் . எதுவும் சாத்தியமாகிறது என்னுள் பிறந்து வளர்ந்த நம்பிக்கையினால்,,, இணைய வெளியில் அதுவும் வலைப்பூவுலகில் முதலில் என்னை எழுதவைத்தது பேஸ்புக்காக இருக்கிறது. ட்விட்டர் எனக்கு அவ்வளவாக பரிட்சயமில்லை, உண்மையில் பேஸ்புக்கால் எந்த நன்மையுமில்லை, அதுவொரு வெட்டியாக பொழுது போக்குமிடம், அதனால் எவ்வித சிந்தனைகளும் வளர்த்தெடுக்க முடியாதென வாதம் புரிவோர்களைக் கண்டால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எனக்கு இவ்வளவு செய்திருக்கும்...

ஆண்(மை)கள் தினமா இன்று!

இன்று ஆண்கள் தினமாம் யார் ஆண்கள்? எது ஆண்மை என்று இன்றளவும் தீர்மாணிக்கப்படவில்லை " காளை போல் கட்டுடலோடும் ,விந்துக்கள் சீறிப்பாயும் விவேகத் துடிப்போடும்,முறுக்க­ு மீசைகள் கம்பீரத்தோடும் வலம் வருவதுதான் "ஆண்மை அழகு" என்கிறார்கள் பொதுபுத்திக்காரர்கள்­. எது ஆண்மையென காட்ட ஆணின் ஆயுதம் பெண்மைமீது பிரயோகப்படுத்தப்படுகிறது, நாட்டாமை என்கிற திரைப்படத்தில் ஓர் வசனம் "ஒரு ஆம்பள எத்தன பொம்பளகிட்ட போனாலும் அவன் ஆம்பளடி,ஒரு பொட்டச்சி பலபேர்கிட்ட போனா அதுக்கு...

பாரிஸ் தாக்குதல் "அந்த சில நிமிடங்கள்"

கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டு விட்டது .132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 90 பேர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர். தாக்குதல் நடந்த ஆறிடங்களில் ப்ளேஸ் த ரிபப்ளிக் எனுமிடத்தில் மட்டும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது. லெ காரில்லோன் மற்றும் லெ பெத்தி கம்போஜ் ஆகிய இரண்டு உணவகங்களில் தீவிரவாதியொருவன் நடத்திய கடும் துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ...

Wednesday, November 18, 2015

மிதக்கும் சென்னைக்கு யார் காரணம்? கார்ப்பரேட்டுகளே கல்லெறியாதீர்கள்,,,

தொடர் கனமழை வெள்ளத்தால் மூழ்கிப்போன சென்னையின் இந்நிலைக்கு யார் காரணமென்று அவரவர் மனசாட்சிகளுக்கே தெரியும், அதையும் தாண்டி தங்களின் குற்றவுணர்வினை சதூர்த்தியமாக மறைக்க முற்படும் முதலாளித்துவ நிலபிரபுக்களின் வாதங்கள் காக்கையின் எச்சங்களாய் குடிசைகளை நோக்கி விழுகிறது. இது சரியான அனுகுமுறைதானா? என்று பரிசோதிக்கவும் கார்ப்பரேட்டுகளின் மூளை செயல்படாது என்பதும் அறிந்த விஷயமே,,, சென்னை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதற்க­­ு முக்கிய காரணங்களை முன்வைக்கும் இவ்வகையிலான...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...