Sunday, February 25, 2018

ஒரு நடை பிணம்




எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்
எண்ணக் கதவுகளுக்கு
கண்ணீரின் தேவைகள் 
அவசியமாகிறது...

அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...

எந்த சவுக்கடிகளும்
சீக்கிரத்தில்
தீர்ந்து போவதை
விரும்பாத கண்கள்
வேடிக்கை பார்த்து
எக்காளமிடுகிறது....

ஆமாம் ஏன்?
எங்கோ நடப்பதற்கு
ஏன் நான் அழ வேண்டும்?

எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...

இப்படியான இசங்களினால்
ஆழ்மனதின்
அமிழ்ந்துவிட்ட
கூர்முனை கத்திகளின்
கீறல்கள் தந்த
தழும்புகளே ஏராளம்...

நான் ஆதிப் பழங்குடி
நான் நரிக்குறவன்
நான் தலித்
நான் பெண்
நான் சிறுபான்மையன்
நான் காதலன்
நான் காதலி
இத்யாதி இத்யாதி....

கொலை செய்தோ
குடிசைகளை கொளுத்தியோ
ஆணவப்படுகொலை செய்தோ
வண்புணர்வு செய்தோ
மசூதி இடித்தோ
எதுவோ....

துடிக்கத் துடிக்க சித்ரவதை
செய்யுங்கள் சனநாயகத்தை...

செவிடர்களை கண்டே
பழகிப்போய்
வெறுத்துவிட்ட
மனங்கள்தான்
என்னுடையது...

அதனாலே
அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...
வலியுடன்....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...