
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழக திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட நடிகர் கமலஹாசன் தனது நடிப்பின் மூலம் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனத்தை ஈர்த்தவர். திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பில் தனக்கென்னு தனி முத்திரை பதித்து வருபவர்...