Friday, December 06, 2019

தூக்கு தண்டனை (அ) மரண தண்டனை குறித்து அம்பேத்கர்

                          நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக...

Monday, November 11, 2019

மழை

மழை வானம் காணாதொன்றைமடியில் தாங்கி கொள்கிறேன்மழலையே ! மறு பிறப்பே !நின் துயில் நடையில் எழுததூவானம் வந்திறங்கியது...துளித்துளியாய் சேர்த்து வைத்தகைபிடி மழைத்துளிகள்நின் ரேகைகளினூடேதவழ்ந்து விளையாடுகிறது ...சேர்ந்து ரசித்திடுகிறோம்வானம் பார்த்து கண்கள் சிமிட்டிஇப்பெரு மழையை நீயும் நானும்...

Tuesday, October 22, 2019

மடியில் சாயும் போது

தாய்ப்பால் அருந்தியபடியேதன்னை மறந்து அப்படியே உறங்கும்குழந்தையின் உதட்டில்ஒட்டியிருக்கும் பால் வாசம்தீர்வதற்குள்  ...உச்சி முகர்ந்துமுத்தங்கள் இடும் தாயின் பேரன்பை போலாகிறாய்நீயும் மழலையாகஎன் மடியில் தலை சாயும்போது ...

நீரிதழ்

ஆகையால்தோய்ந்து ஓய்ந்து போனகூழாங்கற்கள் குவியலில்தேகம் சூடேற கவிழ்ந்துகிடக்கும் ஏதோ ஒருஜீவனின் விழியோரம்கசிந்திருக்கும் நீரிதழில்இவ்வுலகம் சாபத்தைதொழுகிறது ...

Sunday, September 01, 2019

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின்"நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத மரக்கட்டைகள் கண்ணீரை நாவில் தொட்டு பார்த்து வெறும் கடலின் உப்பு நீரென கண்டு கொள்ளாமலும் ஊழியின் சாபங்கள் எனவும் கடந்துபோகும் மனுசப் பயல்கள் நாம்... #டாக்டர்_அனித...

Saturday, July 20, 2019

அட பைத்தியக்காரா !!!

பைத்தியமானதின் உன்னதம் தளர்ந்து போன மனங்களின் தூசி படிந்த இரவுகளை தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு இல்லாது தவிக்கும் பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ... தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ... ஆசைகள் பேராசைகளாகி அதுவே நிராசைகளாக எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு  வீதியுலா கொள்கிறது ... உணர்தல் விளக்கங்களாக உயிர்கள் அனைத்தும் பைத்தியங்களே !!! சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள்...

மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் !

காட்டு மரங்களின் கூந்தல் கிளைகளில் உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ... எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம் காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள் யாருக்கானது அச் சிலுவைகளென ஆழ்ந்த யோசித்தலில் ஆயுளை கடக்கும் பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த பிரபஞ்சத்தில்...

Saturday, June 29, 2019

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலை

          சாதிதான் சமூகமென்றால்           வீசும் காற்றில் விசம்           பரவட்டும் - தோழர் பழனி பாரதி கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்....

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது மோடியே ...

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின்...

Thursday, June 27, 2019

அழுது உடையும் கண்ணீர்

நிதானிப்பதற்குள் நிராகரித்து விடுகிறது காதலும் வாழ்வும் மடிந்து மண்ணில் துளிர்விடும் புதிய சிறகுகளின் வார்த்தைகளில் சிறு சிறு சாரல் தெளிக்கவும் வானம் பார்த்து மீண்டும் தரைக்கு திரும்புகிறது எதனுடனும் ஒட்டாத அவளி(னி)ன் அழுது உடையும் கண்ணீ...

Friday, May 10, 2019

ஒருதலைக் காதல் , மறுத்தால் படுகொலைதான் தீர்வா ?

தலித்திய ஆதரவுகள் , தலித்திய ஒடுக்குமுறைக்கான எதிர்வினைகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற போதெல்லாம் அதே தலித்தியத்தினுள் இருக்கும் காட்டுமிராண்டிகள் முந்தைய எல்லா நியாயமான வழிகளையும் மூடி தலித்துகள் மீதே சேற்றை வீசிவிட்டு போகின்ற தலித் காட்டுமிராண்டிகளை என்னவென்று அழைப்பது? கடலூர் கோரச்சம்பவம் போல நிறைய இங்கு நடந்துகொண்டுதானிருக்கிறது ... அருந்ததியர் குடியிருப்பில் ஒரு பெண் பருவத்திற்கு வந்தால் போதும் அங்கு சிதைத்து சீரழிக்கப்பட்ட பெண்களின்...

Wednesday, May 01, 2019

தொழிலாளர் தினம் இந்தியாவில் ...

                   உலகத் தொழிலாளர்களே                     ஒன்று சேருங்கள் - மாவோ முதலாளித்துவ வர்க்கம் , தொழிலாளர் வர்க்கம் என இரு வர்க்கங்களின் மூலம் சாதிய மனோநிலையில் இங்கு கொட்டிக்கிடக்கிறது , பெரு முதலாளியர்களின் சுரண்டல்கள் பொருளாதார ரீதியிலான ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் ஹிந்துத்துவ சாதியத்தினுள் சுழன்றுக்கொண்டே இருக்கும் . முதலாளித்துவத்திற்குள்...

Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...

நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்) நீ ... சொட்டும் நீரிதழ் ததும்பும் முத்த ஏக்கங்களை குழைத்து என் மேல் பூசும் வாஞ்சையுடன் உதித்துவிடும் " இச் " சப்தங்களின் ஊடே நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ... நீ என்னை நேசிப்பதும் நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக...

Wednesday, April 17, 2019

நிர்வாணம்

அர்த்தமற்ற வார்த்தைகளாகும் வாழ்வின் பெருங் கூச்சலிடையே உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதல் மொழிகளினூடே ஆழ்மனதில் தேக்கி வைக்கிறோம் இப்பெருங் காதலை ... ஊடறுக்கும் இவ்வேளையில் நிர்வாணம் பூசி கண்ணீரில் கலந்திருக்கும் உப்பு நீரால் ஆழியில் மிதந்திருப்போம் ....

Sunday, April 14, 2019

சலனமற்ற கதவுகள் ...

சிதைந்து விழும் சிறு சிறு கனவுகளின் வழியே மணல் திட்டுகளில் அடுக்கி வைத்து காத்திருக்கும் நீள் சாமத்தில் சிதலமடைந்த ஓர் இறப்பின் அழுகையில் கொட்டித்தீர்த்திடும் கண்ணீர் பெருவெளி வழியாகவும் அலசி , ஆராய்ந்து பார்க்கிறேன் ... சிறு சிறு கனவுகளை கோர்த்து சேகரித்து மடியில் கட்டி திரியும் சிலுவைகளிடம் மடிந்து கிடக்கும் இப் பெருங்கனவை தின்றவர்கள் யாரென ... ஞானம் கொண்டேன் தினம் நான் சந்திக்கும் மனிதர்கள் அவர்களென அடித்துச் சொன்னது யாருமற்ற அறையில் சலனமற்ற...

Wednesday, April 10, 2019

பிதற்றல்

அவதியுற்ற வலிகளில்புண் போன்றுஒட்டிக் கிடக்கும்வார்த்தைகளை மட்டுமேகோர்த்து ...கொன்றழித்த பிறகேனும் விடாமல்வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...அவர்களை  போலமாடி வீட்டு பால்கனியில் மிதந்துபசியாற உண்டு விலையுயர்ந்தபளிங்கு...

Monday, April 08, 2019

கருநீலசிவப்பு

ஒரு அறைதலில் வெளிபடும்வீரயத்தில் சிவந்திடும்கன்னங்களில்பதிந்துவிட்ட அச்சுகளில்இன்னும் ஒட்டியிருக்கிறதுதொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து வடுவென மாறிப்போனஅந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...நிறங்களின் கிளைகளில்படிந்துவிட்ட கரைகளைசனநாயக சக்தி கொண்டுமீண்டும் துளிர்விட துடிக்கிறதுஎல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டுகிடக்கும்  அடிமை...

Tuesday, April 02, 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019PDF வடிவில்-Download link ...

Monday, April 01, 2019

பரிதவிப்புகள் ...

பறக்கவோ பரிதவிப்புகளைவிட்டுச் செல்லவோ இயலாதஒரு சிறு மரங்கொத்தி பறவைஉடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்துமெல்ல எட்டிப் பார்க்கும்அப்பாவி விதைகளின்  தலைகளின்உச்சியில் கூர் ஆணிசெலுத்தப்படுகிறதுஇந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றிகுருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயேசாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...இனி நீதிகேட்டு அவைகள்வாய்திறக்கப்  போவதில்லைவாயடைத்திட்டு மென்மேலும்நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம்...

Friday, March 22, 2019

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில் நிலவும் எல்லா மதங்களையும் பகுத்தறிவின்பால் தீவிரமாக எதிர்க்கும் தன்மையை (குறிப்பாக இந்து மத சாதிய அடுக்குமுறைகளை) பெரியார் இங்கு நிறுவியிருக்கிறார் . நானே கூறினாலும் கேட்டறிந்து பகுத்துப்பார்த்து அதன்பின் பின்தொடர்ந்திடு ... என்று இதுவரை யாரும் பெரியாரை போல உரைத்தவரில்லை , பெரும்பான்மையாக நிலவும் சாதிய சமூகத்தில்...

Thursday, March 21, 2019

ராட்சஷியவள்

வார்த்தைகளின் இடையிடையேபெருங் காதலை ஒளித்துவைத்துபார்வைகளில் இயல்பாய்புதிர்கள் பல கண்டுதவழும்  துரிகை சிதறல்களைஉரையாடல் என்பாய் ...உணர்வுகளின் வெளிச்சத்தில்கண்டு திளைப்பேன்கிளையிலாடும் இலைபோலகாற்றில் காதலை சுமந்தவனாய்நான் என ...எப்போது நாமாவோம்விடை சொல்வாய் என்ராட்சஷி ...#கவிதை_தி...

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...

சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு,  ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்... நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்... ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்... ஆம்...

Saturday, March 09, 2019

தங்கத் தாரகையின் வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா

மறைந்த A1 குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தங்கத்தாரகை கௌரவத்திலிருந்து தற்போது வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா என பரிமாற்றம் பெற்றிருக்கிறார் என்றே இதனை சொல்லலாம் . ஊழலுக்கு பெயர்போன கட்சியாக எப்பொழும் அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சத்திய சோதனை...இந்திய வைரச்சந்தையானது பெரும் சரிவை திடீரென சந்தித்துள்ளது , இதுகுறித்த தகவலின் அடிப்படையில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென...

ஆழிசை

ஆகையால் ...கடற்கரை  காற்றில் விட்டுச்சென்றஉன் அன்பை தேடி சுடும் மணலில்என் காயங்களை மறந்துஆற்றும் மருந்தாய்நின் கால்தடம் என்னில் பூசிஅழையா விருந்தில்அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடேபிரம்படி பட்டு நெளியும்புழுபோல  சுருண்டுஎங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...இதோ ... இந்த ... ஆழிசை ...அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறதுநீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

Friday, March 08, 2019

வெயில்

பூரண சரணாகதி அடைகிறேன்என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...பெருந் தழலில் காய்ந்துவியர்வையில் நனைந்துஎனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்முத்தங்களிட்டு உன்னைஎனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்பேரன்போடு உள்நுழைந்துஅழைப்பாய் ...வா .... ஒரு குளியலில்கூடலாமென சினுங்கும்அந்த மொழிக்காகவேதினம் என்னில் வதைக்கும் சூரியனில்வேண்டி தருகிறேன் என்னையே ...வதைத்தாலும் வெயில்அழகெனஎனக்கு மட்டுமே தெரியும் ...வியர்த்திடும்...

Wednesday, March 06, 2019

அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?

இந்தியாவில் எந்தவொரு  அறிவாளியும் ,  பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம்  கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை...

Sunday, February 17, 2019

காஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...

உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி...

விரட்டுகிறார்கள் ...

பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது  கார்ப்பரேட் , ஆளும் அரசுகரங்களிலிருந்து ...வீழ்ந்து கிடந்த ராத்திரியில் அழுகி கிடக்கும் மரத்திடம்தேடி அலையும் தன் வீடு  அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்துநீதி கேட்க எத்தனிக்கும் பொழுதுவெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்றுபழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்இன்னமும்...

Friday, February 08, 2019

பேரன்புக்காரன் அவன்

கூர்வாள் வீசும் அவன்பார்வைகளில் பட்டுத் தெறிக்கும்என் பெண்மையின் விழுதுகளை சுருட்டிஇழுத்துக் கட்டிஊஞ்சலாடுகிறேன்காதலெனும் ஆல மரத்தினில் ...என் கன்னத்தில் பூசிக்கொண்ட சிவப்பை எடுத்து அவனும் பூசிக்கொள்கிறான் ...எவ்வளவு இடைவெளிகள் இருந்த பின்னாலும் பேரன்போடு எனக்காகவே ஏங்கித் தவிக்கும் வதைப்புகளினூடேஉட்புகுந்து அவன் மனதோடு பேசும் வித்தைகள் கற்றுத் தந்தவனும் அவன்தான் ...அதீத ஆர்வம் கொள்கிறேன்அவன் என் கண்களை கவர்ந்திழுக்கும் பொழுதுகளில் எல்லாம்அக்கணமே...

Thursday, February 07, 2019

வாழத் தகுதியற்றவள் ...

விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ...விளங்க முடியாத கையறு நிலையில்நீட்சிகள் பெறும் சாபக்கேடுகளில்ஒன்றை எடுத்துதன் பாத இடுக்குகளில் நுழைத்துநடக்க ஏதுவாக இன்னொருவரட்சியை  இறுக்கக் கட்டிகாலணி என உடுத்திஎடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியிலும்தான்எத்துணை எத்துணை துரோகங்கள் ...பித்து பிடித்தவளின் பிதற்றல் வார்த்தைகளில் யாதொரு குறியீடுகளுமின்றிஏமாற்றம் ஒன்றே பிரபஞ்சத்தின் வாழ்வியல் விதியென ஏக்கங்களை சுமந்து  மணற் போர்வைக்குள்ளிருந்துசற்றே கடலலை...

Monday, February 04, 2019

சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்

சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ......

Friday, February 01, 2019

நமக்கான கைபேசி உரையாடலில் ...

மௌனங்களை திறந்துநானும் நீயும் கைபேசியில்உரையாடலை தொடங்க ...மூச்சுக்குழல் வழியேபெரும் முனகல்கள் எழுப்பி "ம்ம்ம்" என்கிறஅடையாள மொழியில்இன்னும் பேசு என்கிறாய் ...உனக்கும் எனக்குமானநீள உரையாடலைமுடித்து வைக்க ஏதுவாய் தோன்றிடும் இயல்பின் யாதொரு குறுக்கு நிழல்களுக்கும்வழிவிடாது தொடரும்பெரும் சமிக்ஞை கடத்துகை தானோ இந்த பேரன்பில் கசியும் காதல் ...கொஞ்சி பேசுதல் குறைவே என்றாலும்குழந்தை மொழியாகிறது உன் குரல் எனக்கு ...தொட்டு விடும் தூரம் இல்லையென்றாலும்தொடுதலோடு...

Monday, January 28, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் நியாயமானதா ?

பிரச்சினை இதுதான் ... வெகுசன மக்கள் போராட்டம் நடத்துகின்றபோது "எனெக்கென்ன வந்துச்சு " என்கிற மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தமையாம் இன்று அவர்களுக்கு எதிராக  "அதிக சம்பளம்" என்கிற வரையறைக்குள் அடக்கி ஆசிரியர்களுக்கு எதிராக பொது சனங்கள் திரும்பியிருக்கிறது ...இதனை எப்படி அணுகுவது என்று மற்ற அரசியல் இயக்கங்களுக்கும் விளங்கவில்லை .... அரசு மிகப்பெரிய அளவில் ஊதிய சுரண்டலில் ஈடுபட்டதை மறைக்க முயற்சிக்குமே தவிர அதனை சரிகட்டும் வேலையில் என்றுமே இறங்காது...

Sunday, January 27, 2019

பத்மஸ்ரீ கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார்

இந்துத்துவம் முற்றிலுமாக பரவி கிடக்கின்ற காவி தேசத்தில் மாட்டு கோமியத்திற்கு கூட விருது வழங்கப்படலாம் , இதில் அதிர்ச்சியாகவோ , ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை , கடவுளர்களை காட்டி மக்களின் மனங்களில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து அதன் மூலம் கொழுத்து அலையும் போலிச் சாமியார்களை கொண்டுதான் இந்த பாசிச பாஜக "ராம ராஜ்ஜியம்" என்று திரும்பவும் மனு சாஸ்திர குப்பைகளை மக்கள் மீது திணிக்கிறது , இதற்கு ஆளுகின்ற மாநில அரசுகளும் அடியாட்களாய் போய் நிற்கிறார்கள் என்பதுதான்...

Wednesday, January 23, 2019

வார்த்தைகளில் ஒளிந்து கொள்கிறாய் ...

மிக சொற்ப சொற்களால் குறித்தெழுதும் கனவுகள் எனக்கு மட்டுமே ‌வாய்த்திருக்கிறதென எண்ணுகிறேன் ...உனை காணும் பொழுதெல்லாம் தேனருந்தாமலே பூக்களின் மகரந்த வாசனையில் லயித்து மயக்கம் கொண்டு ...சிரிக்குமந்த  மலர்களிலே வீழ்ந்து கிடக்கும் ஒரு பட்டாம்பூச்சியின்பிதற்றல் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டலையும் காதல் மயக்கம் கொள்கிறேன்...என் நாடித்துடிப்புகளில்இப்படித்தான் உன் மீதான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது போலும் ...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...