
அவன் என்னை மறந்தும் கடந்தும் எங்கோ சென்று விட்டதனால் என் காதல் தோல்வியை தழுவியதாய் காற்றிடம் புலம்பிய பொழுதுகளில் அழுது விடாத அதன் அரவணைப்பு என் கண்ணீருக்கு ஆருதலானது தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள் சரிவர அமையாமைக்கு நீயே காரணம் புல்லாங்குழல் வாசிக்கப் பிறந்தவை அன்றி வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ துடைத்துவிடு கண்ணீரை அழாதே என்முன்னால் காற்றின் கரங்கள் எனைத்தழுவி அரவணைக்க ஆருதல் வார்த்தைகள் மனதினை வருடிவிட...