
மது விலக்கு அமல்படுத்தக்கோரி "தற்கொலை செய்து கொண்டார் சசி பெருமாள்" என எழுதத் தோன்றவில்லை காரணம் காணெளி காட்சி அவ்வாறாக அமைந்திருக்கவில்லை ஊடகங்களால் "காந்தியவாதி" ஆக்கப்பட்ட சசி பெருமாள் தொடர்ந்து மதுவிலக்கிற்காக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர். அதன்படியே மார்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்காக்கொண்டிருந்த மதுக்கடையை அகற்றக்கோரி இன்று தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சம்மந்தப்பட்ட மதுக்கடையை அகற்றுமாறு மதுரைக்கிளை...