Wednesday, February 11, 2015

கவிதை "தலைபிரசவம்"

"தலைபிரசவம்"

அந்தி பொழுதில் அசைந்தாடும் மரங்கள் நாலாபுறமும்
திரைமூடிய நட்சத்திரங்கள் வலிபொறுக்காமல்
வழிந்த கண்ணீருடன்
ஆனந்த பெருமூச்சு விட்டாள்
தாய்வானம்

தன்வயிற்று
கிழிப்பினில்
பரவசமாய்
வெளிவருகிறாள்
குழந்தை நிலா தாய்வானுக்கு
அது தலைபிரசவம்

உலக சுற்றத்தில்
ஓராயிரம் வஞ்சங்கள் ஊருக்கு வழிதேடியதில் வளரும் பிறைநிலா திரைமூடிய வானம்
சுமந்த வயிற்றில் சுறுக்கென முட்டியது பிரசவ அவதி
தாய்லெமுரியா மூத்தகுடி
தமிழை பெற்றெடுக்கிறாள் தாய்லெமுரியாவுக்கு
அது தலைபிரசவம்

புது விடியலுக்கு தயாரானது சேவல்
புது வரவிற்கு பூத்துக்குலுங்கியது மலர்கள்
கிழக்குமுகம் சிவந்தே இருந்தது
திரைமூடிய வானம் கடல்தாய் உலகமதிற அழுகையுடனே சத்தமிடுகிறாள்
பிறந்தது
குழந்தை கதிரவன் கடல்தாய்க்கு
அது தலைபிரசவம்

பாசத்தை பொழுந்தபடி
ஆறுதல் மொழி
விதைத்த பறவைகள்
ஆங்காங்கே அலைமோதும்
அதிசயத்தை
கான துடிக்கும் புல்வெளிகளின்
பூமாரிக் கண்கள்
இப்போது தனியாக
திரைமூடிவில்லை
வானம்
வானத்துடன் கை கோர்த்தார்கள் கடல்தாயும்,
தாய்லெமுரியாவும்
பீறிட்டெழுந்த ஆனந்த
கண்ணீரல்லவே அது
அடக்கி வைத்திருந்த
அனைத்து வலிகளும்
அண்டத்தையே அதிறவைத்திருந்தது
இப்படியோரு வலிதாங்கும் இதயமா!
இத்தாய்க்கு,,
வியப்பில் வாய்பிளந்த
வையகம்
இவள்தான் எங்களின்
முப்பாட்டியோ
திரைமூடிய மூன்று தாய்களும் முழுதாய்
நம்பினார்கள்

பூமியில் புதியதொரு
பூமழை
தாய்மனுஷி பெற்றெடுத்தாள்
சக மனு(ஷி)ஷனை
தாய்மனுஷிக்கு
அது தலைபிரசவம்

எந்தச் சந்தையில்
பொருளீட்டினாலும்
பெற்றிட முடியாத
தாயன்பை தவிக்க விடலாமோ
தமிழே தமிச்சமூகமே
தாய் தமிழச்சி மேல்
ஆதிக்கம் விதைத்திடலாமோ

பெற்றெடுத்தவள்
தாயென்பதால்
தேவையில்லை பெண்ணடிமை
தகப்பன் பூமி
தேம்பி அழுகுது
தேவையில்லை
பெண்ணடிமை,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...