Friday, December 13, 2024

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழைவருமானமோ !வயிற்றுப்பசியோ !வறுமையோ !வாழ்வாதாரத்தையோ !வீட்டுக் கடனையோ !பிள்ளைகளின் பசி பரிதவிப்போஇவையெல்லாம் கடந்து ...பூச்சந்தையில் வந்திறங்கியும்கேட்பாரற்று பெருமழையில்வாடியும் , கசங்கியும்சகதியில் கிடக்குமேநமக்கு சோறிடும் "பூக்கள்"என்றே சோர்ந்து நொந்து போனாள் பூக்காரி ...பூ கட்டும் நாரொன்றைதன் கையில் ஏந்தியபடியே ...

Sunday, July 28, 2024

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையேவதை செய்யும் பசிபருவத்திற்கும் காதலுக்கும் இடையேகழுத்தறுத்து போடும் சமூகம் பெருக்கல் வகுத்தல் கழித்தல் கணக்குகள் எல்லாம் கண்கட்டி வித்தை காட்டும் வாழ்வாதார சூழ்ச்சமங்கள் எல்லாம் கடந்த பின்னாலே திரும்பி பார்க்கையில் விளங்குகிறது இறப்பு என்பது எல்லாவற்றுக்கும் கூட்டுத்தொகையென...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...