கல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே! ___ பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்! ___ இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட வேண்டும் மரங்கள்,,, ___ ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில் ____ காய்ச்சலோடு விடிந்த காலை மருந்துண்ண பணமில்லை இருபத்து நான்கு மணிநேர சேவை வேண்டும் அடகு கடைகளுக்கு ___ உருட்டும்...