Monday, December 31, 2018

கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?

இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...முன்னதாக வந்த செய்தி..தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கைசக்தி- கவுசல்யா தொடர்பாக…1)   சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்தகுற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய...

Saturday, December 29, 2018

உலா வரும் தேனீக்கள்

தேனீக்கள் உலாவும் இடத்தில்பூக்களின் நாடித் துடிப்புளை தொட்டு பார்க்கும் மழைச்சாரல்இலைகளின் அசைவுகளில் இனம்புரியாத ஒருபாடல் ...யாரை கேட்டு இசைக்கிறது இந்த காற்று...யாரை கேட்க வேண்டும் நான் இசைக்க மறு பேச்சு....சில்லிட்டு... துள்ளல் கொண்டு... துடித்து... ஆர்ப்பரிக்கும்பருவ மோகனத்தில்இன்னும் இன்னும்தேனை தந்துவிட்டு தாய் மண்ணை முத்தமிடுகிறது அதே  பூஞ்செடியின் வேர்கள்...

Friday, December 28, 2018

மழைக் குருவி

மானுடத்தை கொஞ்சும்ஒரு மழைக்குருவியின்கண்களில் கசியும் மௌனம் காணாதுதிடீரென முளைத்திடும்மின்னலொளி பிசுபிசுப்பில்கீச்சிடும்குரல்களினூடேவெளியேறும் பதற்றத்தை போலொரு காதல்உனக்கும் எனக்கும்....

இந்துமத சாதிகள் அதிர்வுகள்

இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் விஷம் பரவியிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு  ஹிந்து மதம்  மனுசாஸ்த்திர வர்ணாசிரம அடிப்படையில் நால்வர்ணம் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்திய சாதிய அமைப்பு முறைகளில் எந்தவிதமான மாறுதலுமின்றி மூவாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு மேலாக   மக்களை அடிமைபடுத்துவதில் இன்று வரையில் தொடர்ந்துகொண்டே செல்கிறதெனில், அது ஒரேயொரு அழுத்தமான மதக்கொள்கையில் மட்டுமே... அது... "தனக்கு கீழாக ஒரு அடிமை...

Thursday, December 06, 2018

அம்பேத்கர் நினைவு தினம்

யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...அமைதி மதமெனஅஹிம்சை  கொண்டவனைஅப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தைநீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்‌...முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்குமத்தியில்,அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லைமதவாதமோ, சாதியவாதமோ...என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்அதை தீயிலிட தயங்க...

Saturday, November 10, 2018

அதீத கனவுகள்

ராட்சஷி கனவுகள் என்றதைஅழைப்பதுண்டு...எனக்குள் எப்பொழுதும் கனவுகள்எழுந்துகொண்டேயிருக்கும்...அதில் தேடும் வண்ண மயில்நீயென சிறுபொறி தட்டும்நாழிகையில் என் நுனி நாவினைகடித்து சட்டென தோற்றுவிப்பேன்சின்னஞ்சிறு வெட்கத்தை...வெள்ளை நிறத்தால் அதை பூட்டிகறுப்பின் சாயம் கொண்டுஎனக்குள் அமிழ்த்திஇதயச் சத்தங்களாய்மீண்டும் வெளியிடுவேன்...ஆமாம்...கறுப்புதான் வெள்ளையை அடையாளங் கொள்ளும்விழித்திருக்கும் போதெல்லாம்தொலைத்துவிடாமல் தவறாதுநீயாக நின்ற வண்ண மயிலுக்காய்காணுகின்றேன்...

Tuesday, October 16, 2018

பிழை

காட்சிகள் சிந்தும்நின் உடல் மொழியில்பெருங்கனவுகள் ஒளிந்திருக்கஇயல்பாய் இமைக்கும் கண்ணசைவுகளில்யாதொரு மந்திரமும்புலப்படவில்லைஎது பிழையெனநானறியேன்கீழ்வானம் சிவப்பதற்குள்ளாகஎன் சிறைவாசம் விடுவித்தலாகாதோ....

Friday, October 12, 2018

திவாலிந்தியா

இது ஏதோ பழைய திவான்களின் நாடு என புருவங்களை உயர்த்த வேண்டாம்... அதைப் போலவே புதிய திவான்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்... மோடி ஆட்சியில் இந்தியா ஏகபோக வளர்ச்சியடையும் என மோடிக்கே 56 இன்ச் என அளந்துவிட்ட அத்துணை வாய்களும் இன்று கமுக்கமாய் வேறொரு விஷயங்கள் , சம்பவங்கள் என நம்மை மடைமாற்றிக்கொண்டே இருக்கிறது... ஆனால் ஹிந்துத்துவ பார்ப்பனிய பாஜக மோடியின் பின்னடைவுகளை பற்றி நாம் எடுத்துக்கூறினால் உடனே அவர்களுக்கு வால் முளைத்துவிடுகிறது......

Sunday, October 07, 2018

கனவுகள் வருவதில்லை

யாதொரு கனவுகளும் எனக்குள்வருவதில்லைபிறைதேடி பகலிரவு முழுவதும்உறக்கத்தை தேடிநித்தம் அலையுமென்ஆத்மார்த்தமான மனதிற்குள்எதையோ அழியாச் சுடராய்கட்டிவைத்துள்ளேன்பேரன்பு எனக்குள் படர்ந்துஆராதிக்கும் பிசாசுகள் ஆனாலும்ஏற்றுக்கொள்வேன்அப்போதாவது சிறு கனவேனும்வருமல்லவா....

Wednesday, September 26, 2018

பேரன்பும் , காதலும் !

எத்தனையோ பகலிரவுகளில்உன் நினைவோடு வாழ்ந்திருக்கிறேன்வாழ்கிறேன் வாழ்வேன்..எந்த விடியலிலும்உன் பார்வை என் மீது பட்டு பிரகாசிக்கும் போதுபுற்களில் மின்னும் பனித்துளிகள் போலாகிறது...உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று !ஏங்கும் என் மனதிற்குள் எப்பொழுதும்...அது கோபமா ! பாசமா !என பிரித்தறிய தோன்றிடவில்லை...என் காதலும் உன் காதலும்நம் காதலாகி...யாதொரு பிழையின்றிதோன்றிய இருதயத்தில்நம் நினைவுகளை ஊற்றிஎன்றும் தனிந்து விடாதுநேசக்கற்று வீசிக்கொண்டேயிருக்கும்....உறங்காத...

Tuesday, September 25, 2018

திலீபனை நினைவு கூறுவோம்

உரிமை மீட்பும் நிலமீட்பும்பெருங்கடலின் பசியும்உறைந்து போகாது ஒருபொழுதும்...உனது இருதயம் நின்றுவிட்டநொடிகளிலிருந்துஇன்னமும் அழுதுக் கொண்டிருக்கிறது தமிழினம்...நீ...சிந்திய செங்குருதிக்குவிடை சொல்லும்தனி ஈழமே விரைவில்...அத்துணை வலிகளும் வழிகாட்டும்ஈழ விடுதலைக்காக ...நீ... உணவை மறுத்தாய்...நாம் பேசிக்கொண்டிருந்தோம்...நீ... உணர்விழந்தாய்நாம் உயிர்துடித்தோம்...என்றேனும் ஒருநாள்மலரும் தனி ஈழம்...அன்றேனும் தீரும்சுதந்திர தாகம்...பார்த்திபன் இன்னமும்பசியோடுதான்இருக்கிறான்...

Monday, September 24, 2018

கருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு ?

கருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சமூக பேச்சுகளை காணலாம்... எதார்த்தத்தில் இந்த புலம்பலும் , ஆதங்கமும் முற்போக்குத் தன்மை உடையதோ, ஹிந்துத்துவ பார்ப்பன எதிர்ப்புத் தன்மையுடையதோ இருக்க முடியாது.. இன்னமும் கைது செய்யப்படாமல் அல்லது நீதிமன்றம் அவரை கைது செய்ய அவசியமில்லை என கருத்து கூறும் அளவுக்கு ஹிந்துத்துவ பார்பானியம் தன் பூணூல் பலத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறதோ...

Sunday, September 23, 2018

ரபேல் ஊழல் முழு அறிக்கை

ரஃபேல்ஊழல் : அருண்ஷோரி,யஷ்வந்த்சின்கா, பிரசாந்த்பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது பாசிச பாஜக மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை "அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை"மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன்...

அதில் ?

பெண் எனும் என்னில்தீட்டும் புனிதமும்குரூரமாக காமத்தை தாக்கிடபசியென்று சொல்லிவெறியோடலையும்வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குருதி காயும் முன்னே...உன் கழுகு பார்வையில் முதலில் என் நிர்வாணம் பூசி... பழி தீர்த்துக்கொள்ளதுளி விஷம்தெளித்திடுவேன்கண்டாலே தூக்கித் திரியும்ச்ச்சைக்...அதில்? ....

Friday, September 21, 2018

பிரியமானவளே

அந்தி வானத்தில்தவழும் பிறை தோள் தொட்டுதேடுவதற்குள்என்னில் உட்புகுந்தாய்அந்நேரத்தில் மலர்ந்தமலரின்ஸ்பரிசத்தை போல...சொல்ல மறந்த கதைகள் எனஏதுமில்லை நமக்குள்...ஆம்...நான் மரணித்த பிறகும்உன் நினைவுகளினூடேஅவை அசைபோடுமல்லவா...யாதொரு ஒளிவு மறைவுமற்றநேசத்தில் செதுக்கியகாதலின் கூடு அது...பிரியமானவளே...

Friday, September 14, 2018

ராட்சஷி

எனக்குள் ஒலித்திடும்ஜீவ நதிகளின் இசையினூடேஉன்னை தேடுகிறேன்அனுதினமும் இம்சிக்கும்உன் பேச்சொலிகளின் மயக்கத்தில்நித்தம் அலைகிறேன் ஒருபித்தனாக...பசி மறந்து... தூக்கம் மறந்து...என் துக்கத்திலும் நீ.. கலந்து...ஒவ்வொரு நொடிகளிலும்உன் பெயரையே உச்சரித்துவாழ்தல் பிடிக்கிறது‌‌.‌‌..ஆமாம்...‌‌காதல் எப்போது வந்தது எனக்குள்என்று மட்டும் புலப்படவேயில்லைஇன்று வரையில்...உனக்கும் அப்படித்தான்என்றுணர்ந்து உச்சிமுகர்ந்துமிச்சங்களை வாரி இறைக்கிறேன்முத்தங்கள் என்றுணர்வாய்...

Thursday, August 02, 2018

பென்சில் மீன்

சிறு பொறி தட்டும்சூடேறிய மனதிற்குள்சூழ்ச்சமங்களை அவிழ்த்துவிட்டுவீசும் காற்றில் சில்லென்ற...நதியின் சாரலில் கடந்துசிலிர்த்தெழும்  அலைகளினூடேஉட்புகுந்து பாதி இரவினைபல வர்ணங்களால் தீட்டிமீதி இரவினை உடற்சூட்டால்தகர்த்துஆதி பிறப்பிடம் தேடிஅலையும்யாரோ ஒருவன் வரைந்துவிட்டுப் போனபென்சில் மீன் நான்...சுவாசித்தலுக்கு அவன்செவுல்களை தீட்டமறந்தான்...மறுத்தான்...சிலுவையில் அறைந்துவிட்டதொருஉணர்வு...மீண்டு(ம்) வந்துகிராபைட் கறுப்பில் கோடிட்டேனும்சிலுவையில்...

Sunday, February 25, 2018

ஒரு நடை பிணம்

எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்எண்ணக் கதவுகளுக்குகண்ணீரின் தேவைகள் அவசியமாகிறது...அலறுவதற்கோஅழுவதற்கோஇடமில்லாதஇசங்களை கண்டுஉணர்வுகளை அழுத்திவெற்றுச் சதைகளாகஒரு நடை பிணம்...எந்த சவுக்கடிகளும்சீக்கிரத்தில்தீர்ந்து போவதைவிரும்பாத கண்கள்வேடிக்கை பார்த்துஎக்காளமிடுகிறது....ஆமாம் ஏன்?எங்கோ நடப்பதற்குஏன் நான் அழ வேண்டும்?எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...இப்படியான இசங்களினால்ஆழ்மனதின்அமிழ்ந்துவிட்டகூர்முனை கத்திகளின்கீறல்கள் தந்ததழும்புகளே...

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன்...

Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை

Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக...

தஷ்வந்த் தூக்கில் தீர்வு கிடைத்திடுமா ?

அப்படி பார்த்தால் இச் சமூகத்தில் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாய் இருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை... அந்தளவுக்கான வன்மம், முறையற்ற பராமரிப்பு, ஒழுக்கம் தவறிய செல்லம்தான் இங்கு குழந்தை வளர்பாகிறது... அது போக பாலியல் குறித்தான விழிப்புணர்வு இங்கில்லை அந்தளவுக்கு மதங்கள் தங்கள் புனிதங்களை புகட்டி விட்டிருக்கிறது... ஆண்டாளை எப்படி தாசியென சொல்லலாம் என பொங்கியவர்கள் தங்கள் மதங்களுக்குள்ளேயான பாலியல் வஞ்சகங்களை மறைத்திடுகிறார்கள், போலவே...

Tuesday, February 20, 2018

பெயரற்றவ(ளி) னின் பேரன்பு

பெயரற்றவ(ளி)னின் பேரன்புஅவ(ள்)ன் அசைவுகளற்றவனில்இருந்துஒரு தும்பியின்விரல் பிடித்து சில மணித் துளிகளைகடந்து விடும் ஆசையில்முற்றத்து பூஞ்செடிகளின்மீது பற்று கொள்கிறான்...துறப்பு என்பதன் பொருளில்தன்னை அர்ப்பணித்துதேடுகையில்அவனை சூழ்ந்து வெறும்தும்பிகள் மட்டுமேதன் மெல்லிய சிறகுகளினால்சிறை வைத்துவிடுகிறதுதும்பிகள்  அனைத்தும் சேர்ந்து அவனை என்ன சொல்லி அழைக்கும்....ஆழ்ந்த உறக்கத்தில் அத்துணை பெயர்கள் கனவுகளில் அவனுக்குமட்டும்....

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...