Wednesday, May 13, 2015

இணையத்தில் இப்படியும் பல தொல்லைகள்!

சிறு வயதில் பள்ளிக்கூடத்தை விட்டு சாலையில் வீட்டை நோக்கி நடந்து
கொண்டிருக்கும் போது பல்வேறு முகங்கள் எங்களைச் சூழ்ந்திருக்கும்.
ஒவ்வொருவரும் வேற்றுமத பற்றாளர்களாக இருப்பார்கள்.
இந்து,கிருஸ்த்துவம்,­இஸ்லாமியரென அனைவரும் எங்களை நெருங்கி வந்து
சாதுவாய் பேசி அவர்களின் கையுளுள்ளதை எங்களின் கையில் சாதுர்யமாய்
திணித்துவிட்டுப் போவார்கள் அந்த துண்டறிக்கைகளை,,, அந்த துண்டறிக்கையின்
தலைப்புகளை நோட்டமிட்டால் நமது இலக்கிய ஜாம்பவான்கள் கூட கால்தூசிக்கு
சமமானவர்களாக தெரியும். அந்த பருவத்தில் எங்களுக்கு இலக்கியமும் தெரியாது
ஒன்றும் தெரியாது , பள்ளி விழாவில் வாசிக்கப்படும் கட்டுரை,கவிதை, கதைத்
தலைப்புகளைத் தவிர,, அதேபோல் அவர்கள் திணித்துவிட்டுச் சென்ற
துண்டறிக்கைகளை வேண்டாமென்றும் சொல்லமுடியாது காரணம் சிறுவர்களாகிய
எங்களையும் மதித்து பெரியவர்கள் துண்டறிக்கை கொடுக்கையில் சந்தோஷத்தின்
கூடவே கர்வமும் கலந்து போனதாலோ என்னவோ, அந்த துண்டறிக்கைகளை பக்குவமாய்
பேசி எங்களின் கைகளில் திணித்துவிட்டு கடைசியாக ஒன்றை சொல்லுவார்கள்
பாருங்கள் கேட்டதும் பயத்திலேயே அடிவயிறு கலங்கிவிடும். "சாமி
கண்ணகுத்திடும், ஏவாளை சபித்தமாதிரி ஆண்டவர் உங்களையும் சபித்துவிடுவார்,
அல்லா இரவில் அகோரமா வந்து உங்களை சாப்பிடுவார், என்றெல்லாம்
பயமுறுத்திவிட்டு கடைசியாக மறைந்து விடுவார்கள். பயத்தை போக்க வேண்டுமே
அதே பயத்தினால்,, ஆகவே வீட்டுக்கு வந்தவுடன் அந்த துண்டறிக்கையில் கூறிய
படியே இருபது பேருக்கோ அல்லது அதற்கும் மேலானவர்களுக்கோ சொந்த கைகாசு
போட்டு பிரதியெடுத்து மதத்தை தாங்கிநின்ற அந்த துண்டறிக்கையை பரப்பி
விட்டப்பிறகே நிம்மதி பெருமூச்சு வரும். பிறகு அத்துண்டறிக்கையில்
கூறியபடியே பிரதிபலனை எதிர்ப்பார்ப்பதெல்லா­ம் இரண்டு, மூன்று
நாட்களுக்குத் தொடரும் பிறகு மறந்துபோகும் அதன்பிறகு மீண்டும் அதே
துண்டறிக்கை கண்ணில் பட்டு சுழற்றி தொடங்கும். இப்படியே தொடர்ந்து நின்ற
அந்த மத துண்டறிக்கைகள்தான் இன்று இணையத்தில் புது அவதாரம்
எடுத்திருக்கிறது.ஏதேனும் மதக் கடவுளின் உருவம் பதிந்தோ அல்லது மத
நூல்களின் வாசகத்தை தாங்கியோ புகைப்படமொன்றை உறுவாக்கி அதன் கீழே "இதை
அதிகம் பகிருங்கள் விரைவில் நல்லசேதி வரும் தவறினால் கடவுளால்
தண்டிக்கப்படுவீர்கள்­" என்றெழுதி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும்
பரப்புரை செய்வது வாடிக்கையாக இருக்கிறது.அதைவிடவும் மிகப்பெரிய
அச்சுறுத்தல் என்னவெனில், சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு "செக்" வைப்பது
போல நமக்கும் கால அவகாசம் வைக்கிறார்கள் அதற்குள் அந்த புகைப்படத்தை பகிர
வேண்டுமாம் இல்லையேல் பலனற்று போய்விடுமாம் மேலும் கடவுளின்
கோபத்திற்கும் ஆளாகிவிடுவோமாம். மூட நம்பிக்கைகளின் உச்சத்தில் மக்களை
நிருத்தி கீழே நீன்று கடவுள் குதிக்கச் சொல்கிறார். நாமும் அறிவின்றி
யாரென்றே தெரியாத ஒருவனுக்காக குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறோம்.
என்பதே இவ்வாறான துண்டறிக்கைகளும் இணைய புகைப்படங்களும் நமக்கு
உணர்த்துகிறது. மத பரப்புரை விஷமானது மிக வேகமாக பரவி இங்கே பலபேரின்
உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது என்றேச் சொல்லாம் . இணையத்தில்
இவற்றால் பாதிக்கப்பட்டோர் நிறைய நபர்களை நமது முற்போக்குச்
சிந்தனையாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்க­ிறார்கள். இருந்தும் மிக வேகமாக
இந்தப் பொய் பரப்புரை புகைப்படங்கள் பரவத்தான் செய்கிறது. தனக்குத் தானே
பகுத்தறிவை வளர்த்துக் கொண்டாலன்றி இவ்வாறான மூட நம்பிக்கைகள்
உயிர்பெற்றே இருக்கும். பல சமூக விரோதிகளும் போலிச் சாமியார்களும்
இதைவைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள். மக்களோ பிழைப்பை இழந்து
நிற்கிறார்கள். போதுமானவரை இவ்வாறான புகைப்படங்களை நம்பி மன உலைச்சலுக்கு
ஆளாவதை விட நகர்ந்து சென்றுவிடுதலே நமக்கும் நம்மை
சுற்றியுள்ளவர்களுக்க­ும் நல்லது. வீணாக நம்பி மனவிரக்தியை நீங்களே
உறுவாக்கிக் கொள்ளாதீர்கள்.இ(ளை)ணைய சமூகத்தையாவது விட்டுவிடுங்கள்
மதவாதிகளே! உங்களுடைய புதுப்புது யுக்திகளை அறிவியலுக்கு
பயன்படுத்துங்களேன்,,

1 comment:

  1. கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...