Saturday, May 02, 2015

மேதினம் வாழ்த்துக்களில் விருப்பமில்லை

எந்தவொரு எழுச்சியுமின்றி இருபது தமிழர்களை தொலைத்துவிட்டு எப்படி
எங்களால் மேதினத்தினை வாழ்த்தி எழுதிட முடியும் . முற்றிலும்
முதலாளித்துவமாகிப் போனதில் இந்திய தேசமும் இந்தியத்தில் அங்கம்
வகிக்கும் தமிழ்த்தேசமும் முந்திச் சென்று முதலிடம் கேட்கிறது
முதலாளித்துவத்திடம்,­,,
குற்றவாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் முதலானவரின் கோத்ரா இரயில்
எரிப்பினைத்தான் மறக்க முடியுமா? இரண்டாமானவரின் சொத்துக் குவித்ததில்
ஊழல் குற்றவாளியானாலும் பெருமைபட பேசுகிறோமே " மக்களின் முதல்வரென்று"
எட்டு மணிநேர தொழலாள உழைப்பு எங்கும் முழுதாய் நடைமுறையில்லாச் சூழலில்
எப்படி எங்களால் மேதினத்தை வாழ்த்திட முடியும்,, OT என்கிற மிகைபகுதி
நேரத்தை திட்டமிட்டே உறுவாக்கும் முதலாளித்துவத்திடம் சிக்கிய
தொழிலாளர்களுக்கு வேண்டும் விடுதலையை என்றேனும் நாம் தந்திருக்கிறோமா?
ஞாயிறு விடுமுறையிலும் ஓடாய்த் தேயும் எம்மின தொழிலாளிகளின் வியர்வைத்
துளிகளையும் விடாமல் சுரண்டி எடுக்கிறதே இந்த ஏகாதிபத்தியங்கள்.
இதற்கிடையே வெற்றுப் பலகையில் மட்டுமே வசனங்கள் ஜொலிக்கிறது
"பெண்விடுதலை" பற்றி,, எதற்கும் ஓர் எல்லையுண்டென எழுந்து நின்று
குரலெழுப்பக்கூட கூலி கேட்கிறதே இந்தச் சமூகம் , "கூலி" என்கிற சொல்லை
அவமானப்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியினை அளவிட
முடியாது. கையூட்டில் தொடங்கி கல்லறையில் கூட உயிர்த்தெழும் ஊழலுக்கு
விலைபோன உழைப்பைச் சுரண்டும் ஏகாதிபத்தியர்கள் இருக்கத்தானே
செய்கிறார்கள். இங்கே தொழிலாளிகள் படும் அவலகங்களை விவரிக்கையில் வின்னை
முட்டுகிறது . தொடர் விவசாய தற்கொலைகளுக்கு தீர்வு கண்டிராமல் இங்கேயொரு
கூட்டம் விவசாயத்தை கைவிடுங்கள் என்று விவசாயப் பெருமக்களையே
விரட்டியடித்து மிரட்டுகிறது. மீளாத துயரத்தில் நேரங்கள் நகர்கிறதேயன்றி
நமக்கான தீர்வொன்றும் தெளிபடுத்தவில்லை ஆளும் முதலாளித்துவம் .வர்க்கச்
சுரண்டலுக்கெதிராக எழுப்பப்படும் குரல்களை அடக்கி குரல்வளையை கடித்துத்
துப்புவதற்கே தயாரிக்கப்படுகிறார்க­ள் அரசின் நேரடி காவல் துறையினர் .
அவ்வாறிருக்க அடக்கு முறைக்களுக்கு ஆளாகி நிற்கும் அரசிடம் வெறும் மேதின
வாழ்த்து மட்டுமே நம்மால் பெற முடிகிறது. சிந்திக்க மறந்துவிட்ட
மனிதர்களிடம் உடம்புச் சதையினை கேட்கும் அரசின் செயல்களில் இனியும்
எவ்வித மாற்றமும் எதிர்ப்பார்ப்பதென்பத­ு நமது முட்டாள்தனத்தின்
வெளிப்பாடுதானேயன்றி,­ அது விடியலுக்கென்றும் வழிவகைச் செய்திட
இயலாது.நமக்கு நாமே அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய நமது உழைக்கும்
வர்க்கம் முன்வரவேண்டிய தருணத்தில் தான் வளர்த்துவிட்ட கார்ப்பரேட்
முதலாளிகளை விரட்டியடிக்க முடியும்,
மார்க்ஸியமும்,லெனினி­யமும்,பெரியாரியரியும­்,அம்பேத்கரியமும் அதைத்தான்
நமக்கு கற்பிக்கிறது. குழந்தைகளை கல்வி கற்க விடுங்கள். பருவத்திலேயே
பகுத்தறிவோடு வளர்த்தெடுங்கள். இன்றைய குழந்தைகள் நாளைய புரட்சியாளர்களாக
இம்மண்ணில் எழுச்சி பெற்று விரட்டியடிக்கட்டும் ஏகாதிபத்திய
முதலாளித்துவத்தினை, இதிலிருந்தே நமது உழைப்பாளர்தினமாகிய மேதினம் முழுமை
பெற்ற தினமாகவும் நமக்கான விடியல் தினமாகவும் இருக்கும் .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...