Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர், இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு 'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்...

ஜிஷாவின் தாயருக்கு கன்னய்யா குமார் ஆறுதல்

இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிரு­க்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய...

Thursday, June 16, 2016

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்துவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாகஉத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்குநிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லதுஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளைபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்திட்டமெதேனும்...

Wednesday, June 15, 2016

ஏகாதிபத்தியர்களும்,பிற்போக்காளர்களும் - மாவோ (மா சே துங்)

ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அதுநெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பலகாலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாகஏகாதிபத்தியத்தினால்...

Monday, June 13, 2016

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்

* 1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்குஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்குஅனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியாஎன்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி...

Sunday, June 12, 2016

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர் பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில் இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்" என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில் பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும்...

Friday, June 10, 2016

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர் பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன் 11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி" நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று...

பேசும் இதயம் 7

நாளையும் அதே மரத்தடியில் நம் சந்திப்பு உதிர்ந்த மலர்கள் மீண்டும் கிளைக்கு திரும்பலாம்,,, __________ பசியில் கிளி ஜோசியக்காரனின் ஒரு நெல்லும் விலை போனது,,, __________ என்னில் செங்கதிராய் பாய்கிறாய் சுடர்விட்டு எரிகிறதென் காதல் அணைத்து விடாதே! அவ்வளவு சீக்கிரத்தில் என் மரணம் நிகழ்ந்துவிடாது என்னவளே! __________ உன் பார்வையில்தான் எத்தனை விளக்கங்கள்,,, அகராதியை மூடிவிட்டு உன் முகத்தையே பார்க்கிறேன் அன்பிற்காக ஏங்கி ஏங்கி,,, __________ தூவானம் தொலைவில்...

Thursday, June 09, 2016

அற்புத கனவொன்றில்

அற்புத கனவொன்றில் ஆடித் திரிகின்றேன் நான் மட்டும் தனியே அக்கனாவில் என்னை இழுத்துச் செல்லும் நித்திரைக்கு பூக்கள் தூவி தினம் பூஜிக்கும் வழக்கம் என்னில் உண்டு இரவை வலிய இழுத்து இமைகளுக்கு ஓய்வு கொடுத்து உள்நுழைகிறேன் அதுவொரு ஏகாந்தவெளி இடையூறுகள் ஏதுமின்றி வானத்துச்சியில் வா!வா! என அழைக்கிறாள் இயற்கையன்னை சென்றேன் அங்கே நானும் அந்த பசுமையின் வனப்பில் விளையாடி மகிழ்கின்றேன் அந்த நதியின் முகடுகளில் என் முகம் பதித்து முத்தமிடுகின்றேன் அந்த மலைச்சரிவில்...

Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு...

Tuesday, June 07, 2016

மலடி அல்ல அவள்

மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக்கியத்தில் ஓர் மழலையின் கைநாட்டு எப்படி? பெற்றால்தான் பிள்ளையா? எதிர் கேள்வி தொடுத்தது எதிர்வீட்டு மழலை ஆனாலும் உள்ளம் உருகாமல் மனதிறங்கியும் வராமல் சொட்டுக் கண்ணீரின்றி கல்நெஞ்சத்தோடு அடுத்ததொரு மரணத்திற்கு அடித்தளமிடுகிறது நாவில் குடிகொண்டிருக்குமந்த மலடி எனும் வார்த்தை இறந்துபோன தாயின் கல்லறையில் இப்பொழுதும் குழந்தையொன்று...

Monday, June 06, 2016

"அந்த" கவிதை

என் பேனாவின் கூர்முனை தேய்கின்றவரையில் அனுபவித்து அனுபவித்து கிறுக்கினேன் கவிதை எனும் பேரில் நீயதை வாசித்து அலட்சியமாய் விட்டெறிந்தாய் அதிலொன்று காமம் பேசியது அனுபவமின்றி உடனே விமர்சனம் வருகிறது உன்னிடம் அதற்கு மட்டும் புரிந்தது எனக்கு உனது பெருங்கோபமும் ஆழ்மனதில் தோன்றிய பெயரில்லா உருவத்துனது கற்பனையும் புரிந்தது எனக்கு பதற்றம் வேண்டாம் பரிதவிப்பும் வேண்டாம் பெருங் கோபமும் வேண்டாம் பொறுமையாய் கேள் நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த மற்ற கவிதைகளிடம் காமம்...

பார்ப்பானிய இந்து தீவிரவாதிகளின் மாட்டரசியலும் , மனிதத் தன்மையற்ற செயல்களும்,

மாட்டின் கோமியத்தை குடித்து குடித்து மதியிழந்தவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பார்ப்பானிய இந்துக்களால் முன்னெடுக்கப்படும் மாட்டிறைச்சி தடை அரசியலில் முக்கியமாக அவர்கள் முன்னிலைபடுத்தும் உள்நோக்க அரசியல் என்பது ஒன்று "தலித்துகளை அடக்கியாளுதல்" இன்னொன்று "இசுலாமியர்களுக்கு எதிராக கவனம் திருப்புதல்" இந்த இரண்டு உள்நோக்கக் காரணங்கள் இன்றி மற்ற நன்மதிப்பிலான காரணங்களை பார்ப்பானிய இந்துக்களிடம் இல்லை, உண்மையில் பசுவை புனிதமாக...

Sunday, June 05, 2016

சொத்து பத்திரங்களில் காணும் சில வழக்கச் சொற்களின் விளக்கம்

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காகஒதுக்­கப்பட்டுள்ள...

Saturday, June 04, 2016

மோடியும் , குல்பர்க் சொசைட்டி படுகொலையும்

குல்பர்க் சொசைட்டியில், 2002-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பலால் 69 இஸ்லாமியர்கள் ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து, உயிரோடு தீ வைத்து எரிக் கப்பட்டனர். இந்த கொடூரமான இனப்படுகொலை தொடர்பாக 14 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், 24 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குல்பர்க் சொசைட்டி சுமார் 5 மணி நேரம் வரை வன்முறை யாளர்களின் பிடியில் இருந்த நிலையில், போலீசார் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதது; வன்முறையைத்...

Friday, June 03, 2016

வழக்கறிஞர்களை முடக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரலெழுப்புதல்

எங்கெல்லாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கரங்கள் உயர்ந்து நிற்கின்றனவோ, அங்கெல்லாம் சமூக நீதிக்கான தமது போராட்ட முன்னெடுப்புகளுக்கு களம் அமைப்பவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பார்கள் . சமூகத்தில் நிலவும் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து தமது வழக்காடுதல் , நீதிமன்ற செயல்பாடுகள் என தாண்டி மக்களோடு மக்களாக நின்று பல்வேறு போராட்டங்களை சேவையாக அல்லாமல் கடமையாக ஆற்றுபவர்கள் வழக்கறிஞர்கள். ஈழ போராட்டமாகட்டும், விலைவாசி உயர்வு, அரசப் பயங்கரவாதத்திற்கெதிர­ான...

Thursday, June 02, 2016

தொடரும் சாதி ஆணவக்கொலைகள் - கொலையாகின்றன காதல் திருமணங்கள்

தமிழ்ச் சமூகத்தில் ஆகப்பெரிய நவ நாகரீக தன்மையில் புத்துயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள் என்றால் அது மிகையாகாது, இளவரசன் கொலை இல்லாநிலையானதும் கோகுல் ராஜை கொன்ற யுவராஜ்களுக்கு ஜாமீன் கிடைப்பதும், விஷ்ணுபிரியாக்களின் மரணங்களில் இந்துத்துவ சாதிவெறி வாழ்வதும், உடுமலை சங்கரை கொலை செய்தோர்கள் பேரும் புகழோடும் ஆண்டை பெருமை பேசுவதும், காதல் திருமணம் நடத்தி வைத்தமைக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட போது கருவில் இருந்த சிசுவிடமே தன்சாதிப்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...