Wednesday, April 08, 2015

தமிழனை கொன்றழித்த ஆந்திரம்

அடிமனதில்
அடிமையை விட்டொழித்து அனுதினமும்
அதிர்சியினை
எழுதச் சொல்கிறதே
இந்த மனம்

மரங்களை வெட்டாதீரென
எழுதிய எழுதுகோலின்
மூக்குடைந்துள்ளதை

முக்கியச் செய்தியாக்குறேன்

என்னச் செய்துவிட
முடியென்று
மனிதனை மனிதனே
வெட்டிய கோடரியின்
பிடியில் எனது
உயிரை உயர்த்திப்பிடிக்க
ஓடிவிடவும் வழியில்லை

எவனோ கொழுத்திருக்க
மண்ணில் வீழ்கிறது
செம்மரங்கள்
கூடவே கூலித்தொழிலாளியும்

மிருகம் வருகிறதென
முன்னரே உணர்ந்தாலும்
பயமில்லை
அவர்களுக்கு
வருவது மனிதனென
அறிந்த பின்னாலே
தொற்றுண்ட
பயத்தினில் தோகை
விரிக்கிறது
முதலாளித்துவம்

தமிழனெ என்தமிழனே
உப்புண்டவனை நீரை
பருகியாக வேண்டுமென
பழமொழி பேசி
நீயும் ஒதுங்கிவிடாதே

உன் சகத்தொழிலாளி
செத்துக்கிடக்கிறான்
செம்மரத்தையவன்
வெட்டியவன்தான்
குற்றமிருக்கிறது
அவனிடத்தில்

அதற்கான தண்டனை
சட்டம் தரவில்லை
தமிழனே
சர்வாதிகாரம்
சவக்குவியலால்
கோபுரம் கட்டுகிறது
புரட்சி
என்கவுண்டரென
போலிப்பெயரையும்
பொதித்திருப்பதை
பார்த்தாயா

அண்டை மாநிலம்
நமக்கு அந்நிய
தேசமாகிப் போகிறது
தமிழனெ
இன்னும் தன்மானம்
உனக்குண்டு

தொழிலாள வர்க்கம்
தோள்கொடுத்தால்
தூரதெசமெங்கும்
துடைநடுங்கும்

ஆந்திர ஆதிக்கத்தை
வேறருப்போம்
தமிழனே இன்னொரு
தமிழனுக்கு
கரம்கொடு
கூலித்
தொழிலாளிகள்
குவியலாய்
மரணத்துக் கிடக்கிறார்கள்
தமிழனே வாராயோ
நம் புரட்சியால்
நடுங்கட்டும்
இங்கே முதலாளி
வர்க்கம்

4 comments:

  1. Anonymous8/4/15

    cccc

    ReplyDelete
  2. Anonymous8/4/15

    அவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக!
    ///////////////AnonymousFriday, April 03, 2015
    THIS GUY VARUN VOMITING EVERYWHERE/////////

    அமாம்! இன்னும் ஏன் வாந்தி பேதி வருண் இங்கு வந்து வாந்தி எடுக்கவில்லை?
    ஒரு வேளை உடம்பு சரியில்லையா என்னவோ!

    ReplyDelete
  3. தமிழன் திரவிடம்னு சொல்லி தெலுங்கன் தோள் மேலே கை போட்டா சுடமா என்ன செய்வான் ?

    ReplyDelete
  4. வாந்தி பேதி வருண்? யார் அது?

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...