Sunday, November 08, 2015

பீகாரில் பாஜக வெடி அமோக விற்பனை,தமிழகத்தில் ?


பீகாரில் பாஜக தோற்றுப்போனால் பாகிஸ்தானியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள், என்று தேர்தல் பிரச்சார வேளையில் பாகிஸ்தானை உள்ளிழுத்து ஆதாயம் தேட இருந்தார் அமைச்சர் அமீத்ஷா.
ஆனால் இன்றைய நாள் நிலவரப்படி நிதிஷ்,லாலு கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகிறது.
பாஜக வின் இப்படுதோல்வியை ஒட்டுமொத்த இந்தியாவும் இன்றுதான் தீபாவளி என்பதுபோல் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.
பாகிஸ்தான் அவசியமற்றது பாசிசம் விழ்ந்தால் எங்கு வேண்டுமானாலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடலாம் . கேரள உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவு, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவு என்று தொடர்ந்து பல அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து வரும் பாஜக இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியின் அதிருப்தி தனத்தை மக்கள் வெளிபடுத்துகிறார்கள் என்பது வெகுவாக உணர்ந்திருக்கும்.
யாருக்கு இல்லை "சகிப்புத்தன்மை" எங்களுக்கா ஒன்றரை ஆண்டுகாலம் தொடர்ந்த மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக இறையாண்மையை உடைத்து சர்வாதிகாரத்தை பிரயோகப்படுத்தினீர்களே அதையெல்லாம் தாங்கிக்கொள்கிறோம் தேர்தல் களத்தில் காட்ட,,, என்கிற மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது.தலித் மற்றும் பழங்குடியின சிறுபான்மை மக்கள் விரோதம்,மாட்டிறைச்சி எதிர்ப்பரசியல்,எழுத்தாளர்கள் படுகொலை, என அடுக்கிக்கொண்டே போன பாஜக வின் பிற்போக்குத்தனமான சமூகநீதியை அழிக்கும் நடவடிக்கைகளில் இந்து மக்கள் நாடாக இந்தியாவை மாற்றுவதில் தீவிரம் இருந்தாலும் , வியாபம் ஊழலை மறைத்தல் , பீகார் தேர்தலில் வெற்றியடைதல் என இரண்டு காரணங்களை முன்னிருத்தியே இச்சமூக சீர்கேடுகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதை "RSS,BJP,தொடர் அட்டூழியங்கள்" என்கிற தலைப்பில் எழுதியிருந்தேன். அதிமுக்கியமான பீகார் தேர்தலில் வெற்றி இழந்து நிற்கிறது பாஜக, இதன் மூலம் ஓரளவிற்கு சனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நிச்சயமாக ஓரளவிற்கு மட்டுமே,,, காரணம் ஒரு மாநில தோல்வி அவ்வளவாக மற்ற மாநிலங்களை பாதிப்படையச் செய்யும் அளவிற்கு பீகார் தேர்தல் முடிவுகள் இருந்துவிடவில்லை . போலவே ஒவ்வோர் மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது.
தமிழத்தையே எடுத்துக்கொண்டாலும் பாஜக வின் நிலையிலிருந்து அல்லாமல் பழைய முறைப்படியே எப்போதுமிருக்கும் இரு பெரிய திராவிட கட்சிகளை வைத்து இது இல்லையென்றால் அது என்கிற பழைய பாணி மட்டுமே "மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்" என்பதாகிறது. இதில் இதுவரைப் பேசப்படாத பாஜக ஒரு நான்கு,ஐந்து தொகுதிகளில் வெற்றியடைந்தாலும் அடையலாம். பீகார் தேர்தல் தமிழகத்தை பாதிக்காது. இன்றுவரையில் அதிமுக ஆண்டுவிட்டது அடுத்தது திமுக என்கிற பேச்சுக்கள் மட்டுமே இங்கே , இதனை மாற்றம் எனக்குறிப்பிட முடியாது , இரு திராவிட கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆராயமல் விடுவது தமிழகத்தில் பாஜக அங்கம் வகிப்பதற்கான கூடுதல் வழி அவ்வளவே, இதைத் தவிர்த்து பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சார பிற்போக்கு மற்றும் உரிமைமீறல்கள் தமிழகத்தில் என்றுமே ஏற்றுக்கொள்ளவும் படமாட்டாது.
இந்துத்துவ பார்ப்பானிய பிரிவினை வாதம் இதற்கு அப்பால் எவ்வித அரசியலையும் முன்னெடுக்க முடியாத நிலையில் இன்று பாஜக இருக்கிறது. மற்ற மூன்றரை ஆண்டுகளை இப்படியே நகர்த்துமா? இல்லை தன்நிலையை மாற்றிக்கொள்ளுமா என்றும் தெரியவில்லை. ஆனால் பீகார் தேர்தல் ஒன்றினால் தன்நிலையை மாற்றிக்கொள்ளாது பாஜக என்பதற்கு இன்று தோல்வியால் "நிதிஷ்,லாலு வுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கிறது" என்று தெரிவித்திருப்பதிலிருந்தே தெரிகிறது. அப்படியான சூழலில் மீண்டும் படுகொலைகள்,சாதமத பிற்போக்குத் தனங்கள் , இனவாத மோதல்கள்,மாட்டிறைச்சி அரசியல் போன்றவைகளை தொடர்ந்து நிகழ்த்துமா பாஜக ? ஆம் தொடர்ந்து நிகழ்த்தும் "வியாபம்" ஊழலை மறைக்க,,

இதற்கிடையே பாஜக வென்ற இடங்களில் கணிசமான வாக்குகளை தலித் மற்றும் சிறுபான்மையினர் செலுத்தியிருக்கிறார்கள்.
இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டுமென்கிற குழப்பமும் ஏற்படுகிறது . ஒருவேளை ஜித்தன் ராம்ஜிக்காக இருக்கலாம் என்கிற பார்வைக்கு கொண்டுபோனால் தலித் மற்றும் சிறுபான்மையினர் பிற்போக்கிற்கு துணைபோவதாகவே புலப்படுகிறது . ஓர் நிலைப்பாடற்ற ஓர் கட்சியின் மனிதருக்காக வாக்களித்தல் என்பதை மறுத்தே ஆகவேண்டும் . இது நம் தமிழகத்தில் எம் ஜி ஆருக்காக அதிமுக வுக்கு வாக்களித்தல் என்கிற மனநிலை போல ,,, எதையும் ஏற்ற மறுக்கும் சூழலாக இருக்கிறது.

ஆக ஒட்டுமொத்த இந்தியர்களும் பீகார் தேர்தலை எதிர்பாத்திருக்கிறார்கள். அதுவும் பாஜக வின் தோல்வியை அதனுடன் சேர்த்தே,,,இதன் வெளிப்பாடு இன்றுதான் "தீபாவளி" என்பதாக இருக்கிறது. இந்துத்துவ பார்ப்பானியம் பாஜக ஆர்எஸ்எஸ் மெல்ல வீழ்ச்சியடைகிறது என்பதற்கான நல்லுதாரணம் பீகார் தேர்தல். வாழ்த்துக்கள் நிதிஷ்,லாலு கூட்டணிக்கு, அடுத்த ஆண்டு நம் தமிழகத் தேர்தல் எதிர்பார்ப்புடன்,,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...