Monday, November 16, 2015

மழைவெள்ளம் பார்! "படித்ததில் வலித்தது"

ஒரு வலி, பல வேதனைகளை தாங்கி இன்று உறங்கக்கூட இடமில்லாமல் மழை
வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழக மக்கள் பெரும்பாலும் திட்டி தீர்ப்பது
மழையை அள்ளித்தந்த இயற்கையைத்தான். ஏன் அப்படியென்று கேட்காதீர்கள். அது
புரையோடிப்போன நம்மவர்களின் புத்தியுணர்வு. ஆனால் அந்த இணையப் பதிவு
அப்படியில்லை, யார் எழுதினார்கள் என்றும் தெரியவில்லை,ஒருவரின்­ பதிவினை
பலர் அப்படியே நகலெடுத்து எதுவும் மாறாமல் பதிவு செய்வது இணையத்தின்
வாடிக்கையான ஒன்றுதான், அதனால் அந்தப் பதிவுக்கு உண்மைச் சொந்தக்காரர்
யாரென்று புலப்படவில்லை, ஆனாலும் பிடித்த பதிவினை அப்படியே பகிர்வதனால்
ஒருவிதத்தில் அந்த வலிதாங்கிய பதிவு அனைவரையும் கவர்ந்து விடுகிறது.
மனதின் பிரதிபலிப்பாகவும் அது இருக்கிறது. இரண்டு நாட்களாக மழையால்
பாதிக்கப்பட்ட பகுதிகளின் வெவ்வேறு புகைப்படங்களை பேஸ்புக்கிலும்,
ட்விட்டரிலும் , பகிர்ந்து வருகின்றனர் கூடவே அதன் விளக்கப் பதிவும்
சேர்ந்துக் கொள்கிறது. படங்கள் மாறினாலும் அப்பதிவு அப்படியே செதுக்கி
விடுகிறது. எழுதிய அந்த முதல் மனிதனுக்கு நன்றி! அப்படியான ஆழமானப் பதிவு
உண்மையில் அனைவரின் மனங்களையும் ஒரே நேரத்தில் குடைந்து குற்றவுணர்வினை
வெளிக்கொணர்ந்து விடுகிறது. ஆம் இதோ தருகிறேன் உங்களுக்கும் இதில்
உடன்பாடு இருக்கலாம் . இப்படி எழுதியிருக்கிறார் அந்த படைப்பாளி,,,


"தயவு செய்து
மழை வெள்ளத்தை திட்டாதீர்கள், அது
திருடப்பட்ட தன் ஏரி குளங்களைத் தேடி பரிதாபமாய்
அலைகின்றது"


நிச்சயமாக இது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் வலிநிறைந்த "கவிதை"யாகவே
பார்க்கிறேன் , அத்தனை தவறுகளையும் நாம் செய்துவிட்டு அடுத்தவர் மீது
பழியை சுமத்திவிட்டு இலகுவாக தப்பிக்கும் அனைத்து மனித உள்ளங்களையும்
நிச்சயம் இது உலுக்கி இருக்கும் ஆகவேதான் இதை கவிதை என்கிறேன். எழுதிய
படைப்பாளிக்கு மீண்டும் ஒரு நன்றி!
மழையை சபிக்காதீர்கள்!
இயற்கையை விரட்டியடிக்காதீர்கள­்!
அதன் சீற்றத்தால் சீரழிக்கப்பட்ட தமிழக நிலைக்கு நாமே காரணமாக
இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள் , மறைத்தும் விடாதீர்கள்.

2 comments:

  1. எவ்வளவு உள்நோக்கத்துடான உண்மையான வரிகள்.

    ReplyDelete
  2. ஆம் தோழர்!
    எழுதியவரின் மனது அதில் வெளிப்படுகிறது, தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...