Sunday, November 15, 2015

சுவர்,

இருப்பது தெரியாமல்
இருட்டில்
மோதிக்கொள்கிறேன்
பார்த்து சிரிக்கிறது
சுவர்

மூடநம்பிக்கையில்
மூழ்கி
முடமாகிப்போன
மனச்சிதைவுகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில் நான்
பிறகுதான்
அந்தச் சுவருக்கு

மதியிழந்து
விழி மழுங்கிப் போன
வெற்றுடம்புக்கு
தேவை முதலில்
வெளிச்சம்
நானே
எனக்கான தீப்பந்தமாய்
மாறிட வேண்டும்

நான்கு சுவர்களுக்குள்
எச்சங்களாய்
சிந்தனை சிறகில்லாமல்
அடிமைச் சின்னமாய்
அவதரித்திருக்கிறேன்

ஒரு சுவர் வந்து
முட்டியதால்
வலியில்லை மனதிற்கு
அத்தனை சுவர்களும்
நெற்றியை
பதம்பார்த்தாலும்
நானொரு
கற்சிலையாய்

பாருங்களேன்
சுவர் வந்து
என்னை தாக்கியதாய்
பழிதீர்த்து
பதுங்குகிறேன்

வெளிச்சம் சுவருக்கு
வேண்டாம்
என் அறிவுக்கு
வேண்டும்

பார்வையை
திசைதிருப்பி
படிப்பறிவில்
நானுழைய
தொலைத்து நின்ற
சிந்தனைகளை
தேடிப் பிடிக்கின்றேன்

வெளிச்சத்தில்
நான்கு சுவர்களிலும்
வரைந்த சித்திரங்கள்

நான் முட்டிய
சுவருக்கு ஒரு முத்தம்
வெளிச்சம் பிறந்த
கொண்டாட்ட
குதூகலத்தில்
விளைவுகள்
அதுவாக,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...