Tuesday, March 31, 2015

பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு?

இது என்னுடைய பழைய முகநூல்(facebook)பதிவு. 4Nov2014 அன்று எழுதியது. குமுதம் இதழில் கமல்ஹாசன் அவர்களின் பேட்டியொன்றை அப்போது படிக்க நேர்ந்தது அதன் விளைவாக பதிவிட்டிருந்தேன். பகுத்தறிவா கமல்ஹாசனுக்கு? நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நல்ல (சிறந்த)நடிகர் நல்ல இயக்குநர் சமூகசேவையில் அக்கரையுள்ளவர் அவ்வளவே அதையே காரணங்காட்டி நடிகர் கமல்ஹாசன் பகுத்தறிவாதியென மதிப்பிடுவதென்பது ஆகாதொன்றாக தெரிகிறது. சுய சிந்தனையில் அவர் ஒரு பகுத்தறிவாளரா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது....

நுங்கு வண்டி

மாற்றமில்லை மாற்றமென்றே மனதேற்றமில்லை வற்றிய நீரில் வழிந்தோடும் கழிவுகளைபோலே மனிதனை நுகர்கிறது சாலைகள் வழிவிடுங்களேன் வருகிறதோர் நுங்கு வண்டி இவனொரு கிராமத்துவாசிதான் தொலைந்து போனதே கிராமத்தோடு கிழக்கு வாசலும் கோடையில் எரியும் உடம்புக்கு எதற்கிந்த உடை தேவையில்லை நுங்கு வண்டியோடு நாங்களும் கருத்திருப்பது அழகுதான் வழிவிடுங்களேன் வருகிறதோர் நுங்கு வண்டி சிறைபட்டு பெற்றோரால் அடிபட்டு அவர்களெழுதும் அதிகாரத்தில் அடைபட்டு வளரும் தளிர்களை விட ஆலமர விழுதுகளில்...

Friday, March 27, 2015

டாஸ்மாக்கெனும் சாக்கடையில்

விரலில் மையிட்டு விழுந்து கிடக்கிறான் டாஸ்மாக்கெனும் சாக்கடையில்,,, தூக்கி தோள் கொடுக்க கூச்சமெடுக்கிறது அவன் வாயில் வந்துவிழும் வாந்தியிலும் விழுந்த சாக்கடையின் நாற்றம் தெறிக்கத்தான் செய்கிறது,,, குடித்திருக்கிறானவன் தன்னை மறந்து தன்னுற்றத்தாரை மறந்து தன் சமூகத்தையே மறந்து தவழ்ந்து தவழ்ந்து சாலையையும் சாக்கடையாக்கி விடுகிறானவன் ஒவ்வாத மதுவின் வேலையிதுவென அறிந்தும் அவ்வப்போது அவனும் குடிப்பெருமையும் பேசிவிடுகிறான்,,, இவனும் இவ்வாழ்வை புசிக்க விடாமல்...

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .4 (பொருளாதார நிலை மற்றும் ஊடகப்பொறுப்புநிலை)

குடும்ப உறவுநிலைச் சிதறல்களுக்கு முக்கிய பங்காக மேற்கண்ட இரண்டையும் குறிப்பிடலாம் பொருளாதார நிலை இதில் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று கூடச் சொல்லலாம் என்னதான் கடும் உழைப்பினை செலவிட்டாலும் அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையையே மக்கள் பெற்றுள்ளனர் ஒரு மனிதனுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவன்தன் குடும்பச் சுமையை பிரித்தாளும் சக்தியாக மாற்றியக்கொள்ள இயலாதென்பது இன்றையச் சூழலில் வெட்டவெளிச்சமாக்கப்ப­ட்டுள்ளது ஒரு மனிதன் தன் குடும்பச் சுமையை இலகுவாக்க உழைக்கின்ற போது ஊதியத் தட்டுபாட்டால் தன்குடும்ப உறுப்பினர்களை...

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .3 (கல்வி மற்றும் சுய அறிவின்மை)

ஒரு குடும்பம் எந்தச் சூழலிலும் சிதறாமல் இருப்பதற்கு அவர்களின் சுயபுத்தியும் அறிவுத்திறனும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் அதற்கு முதன்மையாக அவர்கள் கல்வியறிவு பெறுதல் வேண்டும் ஆனால் அக்கல்வி பெறுவதிலும் முரண்பாடுகளை வைத்துள்ள நாம் எப்படி சுயசிந்தனையுடன் நடந்துகொள்ள முடியும் இதுதான் குடும்பம் இப்படித்தான் குடும்பம் இருக்க வேண்டுமென்ற சூழலை கல்வியறிவில்லாமல் அவர்களால் பிரித்தெடுத்து பகுத்தாய்வு படுத்த முடியாது இதற்கு ஆதிகாலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் காரணமாக அமைகின்றது ஒரு சாரருக்கு கல்வி கற்கும் உரிமையும் மறுசாரருக்கு...

Thursday, March 26, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .2 (சமூக கட்டமைப்பின் சாரம்) :

உறவுகள் சிதறிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் அதற்கான காரணங்களைத் தேடி புலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது இதன் மூலக்காரணி அல்லது கரு என்னவென்று பார்த்தோமானால் முதல்தொடக்கமாக "சமூக கட்டமைப்பு" தான் மேலோங்கி நிற்கிறது ஒரு சமூகம் எவ்வாறு உறுவாக்கப்பட்டது அதன் சாரம்ஸம் என்ன அது எந்தநிலையில் உறவுச்சிதறல்களுக்கு உருதுணையாக இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும் அந்த நிலையில் ஒரு சமூகம் எந்த அடிப்படையில் உறுவாகிறது என்று பார்த்தோமானால் பெரும்பாலும் அது நகரமாக...

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல்.1

சிதறும் உறவுகளால் நிகழ்காலத்து காலவோட்டத்தினை நினைக்கையில் எங்கேயோ விழும் இடியானது மனித தலைகளின் மீது விழுவதுபோல் பல்வேறு சம்பவங்களை இச்சமூகம் சந்தித்துக்கொண்டிருக­்கிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கான உறவு , இளைஞர்கள் சமூகத்துக்கான உறவு ,கணவன் மனைவிக்கான உறவு , என்று அனைத்தும் கேள்விக்குறியாகி இறுதியில் சமூகத்திற்கும் மனிதனுக்குமான உறவு, என்ற முடிவில் புவியுலகு நம்மைநோக்கி கேலிப்பார்வை வீசுவதை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது . ஒரு குழந்தையின் அழுகுரலை அடக்கும் தாயைபோல் அல்லாமல் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இருந்த தொடர்பு...

Wednesday, March 25, 2015

ஹைக்கூ "அவளே வரைகிறாள்"

நிழலில் இலைச் சருகுகள் நிர்வாண கோலத்தில் மரம் ____ அஞ்சும் கரும்புனல் எங்கே வடித்தோம் சிற்பத்தை தேடுகிறது மரங்கொத்தி ____ அவளை அவளே வரைகிறாள் வாசலில் கோலமாக ____ சிசுக்கள் சுவாசிக்குமுன் வெடித்து விட்டன வன்முறைகள் ___ பேருந்துக்கு காத்திருக்கவில்லை நடைபாதை எறும்புகள் ___ ஏ கருப்பு ரோஜாவே நிகரானவளும் மனமொடிந்ததால் முதிர்கன்னி ஆனாயோ ___ அதிகாரத்தோடு கேட்கிறான் பிச்சைக்காரன் வரதட்சணையை ___*...

Tuesday, March 24, 2015

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஐடி 66ஏ?

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 எ செல்லாது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரண்பாடாக உள்ளது - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு ... ! இப்படியான நற்செய்தியினை கேட்டு இச்சட்டத்திற்கெதிராக­ முகபுத்தகத்திலும்,ட்­விட்டரிலும் எழுதிவந்தமையால் ஒரு வாழ்த்துப் பதிவினை போடலாமென்று இரண்டு சமுக வலைதளங்களையும் திறந்தேன் . என்னைப்போலே பலரும் கருத்துரிமை வென்றதென உச்சநீதிமன்றத்திற்கு­ நன்றி தெரிவித்திருந்தார்கள­். அந்நன்றியின் விதம் தான் மிகவும் ஆபத்தாக அமைந்திருக்கிறது....

ஹைக்கூ "ஒரே குடையில்"

துரத்துகிறேன் தூங்க மறுக்கிறது காதல் விடியற்காலை கனவுகள் ___ விழித்தெழுந்த கண் வாசலில் கோலம் உணர்ந்த நிமிடங்கள் உறங்காத பெண்ணினம் ____ இரவு நட்சத்திரங்கள் அப்படியே அம்மாவின் மடியில் ____ எழுந்திரு வயல்வெளி அழைக்கிறது அடுத்தநாள் விலைநிலமாக ____ புலம்புதை நிறுத்தவில்லை நிலா அவளை மட்டுமே காதலிப்பதால் ____ கண்கசங்கி பனிதுளிகள் இன்னும் பூமிறங்காமல் கதிரவன் ___ குடை மிளகாய் இனிக்கிறது வாழ்ந்துதான் பாருங்களேன் ___ மகிழ்சியில் மரத்து வேர்கள் ஒரே குடையில்...

Monday, March 23, 2015

அவளின் சொல் வீச்சம்பு

சொல் வீச்சம்புகளை என்மீது வீசிவிடுகிறாள் அவள் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு எங்கேயோ எழுதிவைத்த ஏகாந்த வசனங்களை என்னுள்ளே புதைக்கிறேன் எங்கே கோபமிருக்கிறதோ அங்கேதான் வாழுமாம் அதீத அன்பு மனதை தேற்றுவதில் மயக்கமென்ன வரவாப்போகிறது சொல்லம்பை திசைதிருப்ப தென்றதலைத்தான் துணைக்கழைக்கவா சொல்லடி எனை சூரியனைபோல சுட்டவளே அடுத்த வாசகம் படித்த பொழுதுகளில் விடிவதே நரக வேதனையடி எனக்கு யாதொருவரிடமும் அளவோடு அன்பை செலுத்தி விலகுதலில் விடியலை தேடிடலாமாம் திருத்தம்...

பெற்றோர்களே உயர்வாக தங்களை காட்டிக்கொள்ள பிள்ளைகளை பலியிடாதீர்கள்

எனது குடும்பம் அப்போது நடுத்தர வர்க்க குடும்பம்தான்,அ ரசுடன் இணைந்த தன்னாட்சி கிருஸ்த்துவ பள்ளியில் நான் படித்தேன் . சிறு வயதில் சைக்கிளை ஓட்டும் பயிற்சிக்காக பக்கத்தில் இருக்கும் ஒரு பாய் கடைக்குச்சென்று பள்ளி வேளைநாளில் பெற்றோர் கொடுக்கும் கைச்செலவு காசினை அப்படியே சேமித்துவைத்து எப்போது சனிக்கிழமை வருமென காத்திருந்து விடிந்தவுடனே ஒரு மணிநேரத்திற்கு பத்துரூபாயென பாயிடம் சைக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு படாத அடிகளெல்லாம் பட்டு அந்நாளை கழிப்பது...

திக அறிவித்த தாலியறுப்பு மாட்டிறைச்சி போராட்ட அறிவிப்பு காது கொடுப்பார்களா கருத்துக்களுக்கு

வருகின்ற ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று மாட்டிறைச்சி மற்றும் தாலியறுப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக திக தலைவர் தோழர் பேரா. வீரமணி அவர்கள் அறிவித்திருக்கி றார் . அதன்பொருட்டு திக வின் அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் முற்போக்காளர்கள ுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்ட களத்தில் ஒன்றினைந்து செயல்பட புறப்பட தயாராகிறார்கள். இங்கு தமிழகத்தில் இப்போராட்டத்தின ் அவசியக் காரணங்கள் நாம் அனைவரும் அறிந்ததே,,மகாரா ஷ்ட்ர மாநில மாட்டிறைச்சி தடையினை...

Sunday, March 22, 2015

மாட்டிறைச்சியும் மனித மனங்களும்

இங்கே மகாராஷ்ட்ர மாட்டிறைச்சித் தடை குறித்து எழுதப்போவதில்லை அது குறித்து பல்வேறு பதிவர்கள் மாட்டிறைச்சி தடையினை ஆதரித்தும் எதிர்த்தும் பதிவிட்டிருக்கிறார் . ஒவ்வொரு மனங்களும் ஒரே மாதிரியான சிந்தனையில் இருப்பதில்லை அதனால் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவதில் எதை அதிகப்படியான வருகையாளர்கள் வாசிக்கத்தொடங்குகிறா­ர்களோ அதுவே சமூகமாற்றத்திற்கான வழி . இன்றைய தினத்தின் தகவலின் படி மாட்டிறைச்சி தடைக்கெதிகராக பொதுநல வழக்குகளும் போடப்பட்டுள்ளது என்பதை தெரியபடுத்தியிருக்கி­றார்கள்...

Saturday, March 21, 2015

சங்கராச்சாரியார் வாய் திறக்கிறார் எடு சர்க்கரையை

இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று இதில் ஆணுக்குப் பெண் சமம் ஆணால் முடியுமென அனைத்தும் பெண்ணால் முடியுமென் பெண்ணினம் தற்போது தான் மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியா வல்லரசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்­கிறது . ஆனால் இந்தியா எப்போதும் பிற்போக்குச் சிந்தனையில்தான் பிழைப்பை ஓட்ட வேண்டும் . அதற்கு மாறாக முற்போக்குச் சிந்தனையில் பெண்ணினிம் போகக்கூடாது அவ்வாறு பெண்ணினம் செயல்படுதவதென்பது இந்துத்துவ மதத்திற்கு எதிரானது என்று வாய்கிழிய கத்தும்...

வேர் முளைத்த விழுதுகள்

மரங்கள் தவமிருக்கின்றன மனிதன் வெட்டாமல் இருப்பதற்கு,,, இப்பிரபஞ்சத்தில் பாலூட்ட தாயேதும் கிடைக்கவில்லை என்பதால்தானோ கிழக்கில் உதிக்க சோம்பல்படுகிறான் இளஞ்சூரியன்,,, எத்தனை எத்தனை மலர்கள் தாய்மரம் முன்னே தரையோடு மடிந்து கிடக்கிறது தயவுசாட்சனை பார்ப்பதிலென்ன தன்மானமா போய்விடப்போகிறது மனிதா,,, பிரளய பிம்பங்களை பிய்த்துப் பார்த்துப் பேசாத சிற்பமாய் போலி முகங்கொண்டு பிரகாசிக்கிறாயே மனிதா,,, தேவதைகளான மரங்கள் உனக்கு மட்டும் பேயாக தெரிவது ஏனோ,,, நாடு வளம்பெற...

Friday, March 20, 2015

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்?

தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா திண்ணியம்? தொடர் சாதிய வன்கொடுமைகளுக்கு பலியாவதை விட இம்மண்ணை விட்டு மரணத்தைத்தேடி செல்வதே காலச்சிறந்தது . எத்தனை வலிகள் சுமந்தாலும் இவர்கள் அடிமைகள் இவர்களை அடிமைபடுத்துவதே முறையென்று தங்களின் ஆதிக்க அடக்குமுறையை மென்மேலும் செய்துகொண்டே இருக்கிறார்கள் இவர்கள்தான் இம்மண்ணின் மைந்தர்களென வலம் வரும் தமிழர்கள். தங்களின் இந்துத்துவம் கண்டெடுத்த மனுசாஸ்த்திர வருண சாதியத்தை அழியாமல் காத்துக்கொள்வதில் அப்படியென்ன தேவை இருக்கின்றதோ தெரியவில்லை. சாதியத்தை எதிர்த்து இங்கே எவ்விதமான எழுத்துகளும் இல்லை அவ்வாறு எழுதாதவர்களுக்கு...

வளர்ந்து விட்டேன்

வளர்ந்து விட்டேன் வானுயரத்தில் விமானம் பறந்தால் இன்னமும் எட்டிபார்த்துவிட ஏங்குகிறது மனது வளர்ந்து விட்டேன் செடிகளின் அடர்த்தியில் மறைந்துள்ள ஓணானை இன்னமும் தூரோகக் கண்ணோடு பார்க்கத் தூண்டுகிறது மனது அணில்தான் கருணையின் பிறப்பிடமாம் வளர்ந்து விட்டேன் திரண்ட கூட்டத்தின் நடுவே திருவிழாவை மறந்துவிட்டு சின்னச் சின்ன திருட்டுகளை இன்னமும் செய்யச் சொல்கிறது மனது வளர்ந்து விட்டேன் வாழ்க்கையே விளையாட்டாகிவிட விளையாடும் தருவாயில் இன்னமும் போங்காட்டம் ஆடச்...

கைபேசி அழைப்பொலியும் தொந்தரவும்

நாம் ஏதேனும் விஷயங்களை செயல்படுத்த யோசிக்கும் பொழுது நமக்கு முன்னரே நமது கைகள் முதலில் தேடுவது கைபேசியைத்தான் என்றாகிவிட்டது மனிதச் செயல்பாடு. எங்கும் எதிலும் மைல்கல்லாக அமைந்து விட்ட கைபேசியானது மனிதனின் அறிவியல் படைப்பில் மகத்தானது . இன்னும் சிறிது காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எதுவென மாணவர்களிடம் மதிப்பெண் வினா? எழுப்பினால் . "ஸ்மார்ட் போன்" என்றெழுதி அதற்கு ஏன் மதிப்பெண் வழங்கப்பட வில்லையென ஆசிரியரை மிரட்டினாலும் மிரட்டுவார்கள் இல்லையெனில்...

பூக்களின் மௌனம்

வண்டுக்குத் தேனாக பூஜைக்கு மலராக மங்கையர்க்கு மாலையாக மறைந்துபோன மனிதச் சொல்லாடல் மறைந்து போய் பிணமென பெயரிட்டதில் மலரஞ்சலியாக பல கோண காட்சிதரும் பூக்களே நீங்கள் மட்டும் மௌனம் சூடிக்கொண்டதேனோ! ஏதேனும் காரணமுண்டோ மௌனம் கலைத்துவிட வழியேனுமுண்டோ சூரியக் கருவறையிலே கல்லறையாகாதோ பூக்களே உங்களின் மௌனம் இதழ்களின் மௌனம் கலைத்து இருண்டுலகில் வெளிச்சம் பரப்பலாம் இன்னும் சாதனைகள் பலபுரிய பாறையான மனதை பக்குவமாய் திறந்தெழுந்து நீங்கள் சூடியுள்ள உங்களுக்கு சூட்டிய...

Thursday, March 19, 2015

விழிகளின் வெளிச்சத்தில்

விழிகளின் வெளிச்சத்தில் பிரியமானவளே உனக்கொரு இனிய எச்சரிக்கை இம்சையெனவும் பாவித்துக்கொள்,,, நடுநிசியில் என் கனவினில் உன்னதக் கதவுகளின் வெளிச்சத்தில் உன் விழிகளை திறந்து காட்டி என்னிமைகளை திறக்கும் முயற்சியில் மூழ்கிப்போகாதே,,, உனது விழிகளின் வெளிச்சத்தில் விடிந்துவிட்டதென என் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து விடப் போகிறார்கள்! உன் இமைகள் எப்போதும் மூடியே இருக்கட்டும் கனவிலும் உனை விட்டு விலகிடமாட்டேன் நா...

Wednesday, March 18, 2015

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம்

குருடான அரசு தொடரும் பார்வையற்றோர் போராட்டம் எப்பொழுதும் மக்களுக்கான அவசியப் பணிகளையும் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்திடவே "அரசு" என்கின்ற அதிகாரத்தை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள­். ஆனால் தொடர் சர்வாதிகார போக்கில் முதலாளித்துவமாக அரசு செயல்படும் போதுதான் போராட்டம் என்கிற ஒன்றை மக்கள் கையிலெடுக்கிறார்கள் . அதன் அவசியத்தை ஆளும் அரசு நினைத்தால் தக்கத்தொரு தீர்வினை மக்களுக்கு அளிக்கலாம் .ஆனால் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத போக்கினை கைவிடுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தை பொருத்தமட்டில் இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கெதிரான போக்கினை கையாள்வதில்...

Tuesday, March 17, 2015

உதடுகள் காமத்தை பேசட்டும்

"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறதுன் கைகள்,,, ஆடை விலகிய வெட்கத்தில் கண்மூடுகிறது வானம்,,, கூச்சத்தின் உடலசைவை ஊமை விழிகளால் நோட்டமிடுகிறாய் நீ,,, உன் விரல் கோதும் என் கூந்தலில் வானம் உடுத்திய கார்மேக உடைகளின் கூட்டங்கள் விளையாடுகிறது,,, உடைகள் விளையாடுவதை சொக்கிய இன்ப மயக்கத்துடனே ஓரக்கண்ணால் நானும் ரசித்துவிடுகிறேன்,,, உச்சந் தலையில் தொடங்கிய முத்தம்...

Monday, March 16, 2015

காலி வயிறு

வயிற்றுக்கும் வாழ்வுக்கும் இணைப்புப் பாலமான இயற்கையே இருப்பதை உண்டு இல்லறம் பேண எங்களுக்கும் ஆசைதான் என்ன செய்ய உழைத்து வியர்த்த உடம்பில் உயிரை வஞ்சிக்கிறது உருண்டை உலகத்தில் ஓரினம் முதலாளி என்றொரு பெயர் இனத்திற்கு பொருத்தம்தான் துயரம் துடைக்கப் புறப்படும் எம்மின பெண்களின் கற்பினை கேட்கிறது முதலாளியினம் அடங்காத பசிவேறு அலைய வைக்கிறது எம்மின குழந்தைகளை அலைகடலில் நுரை ததும்புதல் போல அரளி விதையால் உயிர் துறக்கிறார்கள் அவர்களும் தற்கொலை என்கிறார்கள்...

தாய்த் தொடுதலின் தேடல்

தாய்த் தொடுதலின் தேடல் மெய்யுடல் மேம்பட்டிருந்தது யார் முதலில் தொடுவதென்பதில் தூரிகை தாமதித்துதான் போனது புத்தம் புதிதாய் பூமிபார்த்தவுடன் அழுவதில் ஆனந்தமே அணைத்து கொள்ள எனதருகே நீயிருக்கையில் நான் எதை முதலில் தொட்டிருப்பேன் தெரியவில்லை இதய துடிப்பு யூகித்துக் கூறிற்று இவன் என் குழந்தையென காட்டிய ஆள்காட்டி விரலைத்தானே முதலில் நான் தொட்டிருப்பேன் மொட்டவிழ்த்து முகமலரும் மலரை போல என் முகமப்போது மலர்ந்தது தானே சொல் அம்மா எப்படி உணர்ந்தேன் உன் முதல்...

Sunday, March 15, 2015

மனதும் மலரிதழும்

மாற்றத்தை மாலையாக கோர்க்கிறது மனது,,, என்ன விந்தையிது! மலர்களில் கூடவா வெட்கம் கசியும்,,, வியப்பில் விழுந்த மனதை மலரிதழ் மடியினில் தாங்கியது,,, மனதோடு மலரிதழ் இனிக்கும் லீலைகளை தொடங்கியது,,, ஊரைசுற்றி ஒரே இறைச்சல் மனதில் மட்டும் மௌன அமைதி,,, மனதை விட்டு விலகிச் செல்கிறது சுற்றியிருந்த விழிகளின் மௌனம் இரண்டும் மனம்விட்டுப் பேசுவதனால்,,, மெல்ல அவிழ்க்க தொடங்கியது அதற்கான மொழியை மலரிதழ் மனதிடம்,,, என் மலரிதழில் வெட்கம் கசிவதை கண்டாயே மனதே,,, வேறொன்றுமில்லை...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...